உங்களை உங்களுக்கு அடையாளங்காட்டியது யார்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் உடல் காற்றைச் சுவாசிக்கிறது. காற்றில் வாழ்கிறீர்கள். அதேபோல், நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உங்கள் ஆத்மா கடவுள் சக்தியைக் கிரகிக்கிறது. நீங்கள் கடவுள் சக்தியில் வாழ்கிறீர்கள்.
❖ ஒரு நாய்க்கு அது நாய்
என்ற விஷயம் தெரியாது.
ஒரு மாட்டுக்கு அது மாடு
என்ற விஷயம் தெரியாது.
நாய், மாடு என்பது நாம்
உருவாக்கிய பெயர்கள்.
நாயையும், மாட்டையும் பொறுத்தவரையில்
அது அதுவாக உணரும்.
அவ்வளவுதான்.
மனிதனுக்கு மாத்திரம்தான் அவன்
மனிதன் என்ற விஷயம் தெரியும்.
புரியும். காரணம் மனம்.
❖ மனிதனுக்குத் தெரிந்த மனம் தாண்டிய ஒரு
நிலை இருக்கிறது அதற்கு பெயர்தான் ‘மனம்
கடந்த நிலை.’
❖ மனம் கடந்த ஆத்ம உணர்வு
ஒருவருக்குள்ளிருந்து வெளிப்பட்டால்,
கடவுளையே தன்னுள் ஒருவனாகக் காணமுடியும்.
❖ கடவுள் தன்மையை ஒரே ஒருமுறை
உணர்ந்துவிட்டால், கடவுள் என்ற வார்த்தை
அனுபவப் பூர்வமாக விளங்கிவிடும்.
தானே எல்லாமாகவும், எல்லாம் தானாகவும்
மாறிவிடும்.