எது ஞானம்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ பொதுவாக மனிதர்கள் ஞானத்தை பற்றி வைத்திருக்கும் கருத்துக்கள் இரண்டு:
- விஷய ஞானம் அதாவது அறிவு.
- அனுபவ ஞானம் அதாவது அனுபவம். உண்மையான ஞானம் - விஷய ஞானத்தையும், அனுபவ ஞானத்தையும் தாண்டியது. அறிவையும், அனுபவத்தையும் தாண்டியது அனுபூதி. இந்த அனுபூதி ஆனந்தத்தின் உச்சம். அனுபூதிதான் உண்மையான ஞானம்.
❖ வெறும் செய்திகளும்
அறிவும் மூளையை நிரப்பும்.
அறிவைத் தாண்டிய அனுபவமே
விடுதலையைத் தரும்.
❖ அறிவை அனுபவமாக மாற்ற முயற்சி
செய்தால் ஓர் உண்மை தெரியவரும்.
அதாவது, பெரும்பாலான உலக அறிவுக்கும்
வாழ்க்கை அனுபவத்திற்கும் சம்பந்தமே
இல்லை என்று!
❖ வாழ்க்கைப் பாடங்களை
முழுமையாகப் புரிந்துக் கொள்வதே
பூரண ஞானம்.
அறிவை அனுபவமாக்கி அனுபூதி நோக்கி
நகருங்கள்!

❖ தகுதியான குருவைத் தேடும் நாம், தகுதியான சிஷ்யனாக இருப்பதில்லை.
❖ குருவைத் தரம் பார்க்கச் செய்யும் முயற்சிகளை விட்டுவிட்டு உங்களுடைய புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி உண்மையான நிறம் பார்க்க முயலுங்கள். பிரயோஜனம் உண்டு.
❖ நாம் உண்மையிலேயே தகுதியான சீடனாக
மாறும்போது கடவுள், தகுதியான குருவை
நம்மிடம் அனுப்பியே தீர வேண்டும்.
அனுப்பியே தீருவார்.
❖ இராமகிருஷ்ணர் உடலில் வாழ்ந்தபோது
ஆயிரக் கணக்கானோர் அவரைப்
பார்த்திருக்கிறார்கள்.
ஆனால் சில நூறு பேர்தான் அவரின்
மகிமையையும், அவர் இறைவனின் அவதாரம்
என்பதையும் உணர்ந்தனர்.
❖ பக்குவமான சீடர்களால் மட்டும்தான்
குருவை உணர முடியும் எனவே நம் கவனம்
முழுவதும் நம்மைச் செம்மைப்படுத்திக்
கொள்வதிலேயே இருந்தாலேபோதும்.
குரு தானாகவே வந்து வாய்ப்பார்.
❖ நல்ல சீடனாக இருந்தால்... கல்லும்
கடவுளாகி வாழ்வில் ஒளி காட்டும்.
இல்லை என்றால் கடவுளே நேரில்
வந்தாலும் 'எங்கிருந்து வருகிறாய்?'
உன் அடையாள அட்டையைக் காட்டு.
நீ கடவுள் என்று நான் நம்புவதற்கு என்ன
ஆதாரம் வைத்திருக்கிறாய்? என்போம்.

❖ நீங்கள் ஆனந்தமாக வாழ முடிவு எடுக்காத
வரை குருவே நேரில் வந்தாலும் உங்களுக்கு
எந்த உதவியும் செய்ய முடியாது.
❖ 'ஆனந்தமாக வாழ முழு மனதாக முடிவு
எடுத்து விட்ட பட்சத்தில்' நீங்கள்
தேடாவிட்டால்கூட குரு உங்களைத் தேடி
வருவார்.
❖ இதில் விந்தை என்னவென்றால் அப்படி முழு
மனதாக முடிவு எடுத்துவிட்ட பட்சத்தில்
உங்களால் ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்து
நேரத்தை வீணடிக்க முடியாது.
❖ உங்களின் முடிவு வாழ்க்கையின்
முடிவையே மாற்றி விடும்.
முடிவை நீங்கள் எடுங்கள்!
விடிவை இறைவன் பார்த்துக் கொள்வான்!
உன் அவசர காலம்
❖ 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்'
என்பதைவிட 'அகநடுக்கத்தின் அளவு
முகத்தில் தெரியும்' என்றால் எல்லோரும்
எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
❖ அழகுக்கும் அக நடுக்கத்திற்கும் நேரடிச் சம்பந்தம் இருக்கிறது.
❖ அக நடுக்கம் நில நடுக்கத்திற்குச் சமம்.
அகம், நடுங்கும்போது நரம்பு மண்டலமே
நடுங்கும்.
இது மிகைப்படுத்தல் அல்ல.
அறிவியல் பூர்வமானது!
❖ அக நடுக்கம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் உடலின் உயிர்ச் சக்தி சேதமாகும்.

- வாழ்வின் சாதாரண விஷயங்களை அசாதரணமாகப் பார்க்கப் பழகியதால் உள்ளே உருவாகும் 'அவசர கால நிலை' தான் அகநடுக்கம்.
- படபடப்பும், தேவையற்ற பரபரப்பும், சுறுசுறுப்பு அல்ல. சுறுசுறுப்பு என்ற பெயரில் பதட்டத்தைதான் மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
- பதட்டத்தால் நடுங்கும் விரல்கள், சிக்கலான நூல் கண்டை விடுவிப்பதற்கு பதில் இன்னும் கொஞ்சம் சிக்கலை அதிகப்படுத்தும்.
- அவ்வளவே, அகநடுக்கம்தான் உங்களின் சாதா பிரச்சினைகளை உடல், மன வேதனைகளாக மாற்றுகின்றன.