KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/ஞானப் பயணம்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

ஞானப் பயணம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ புத்து (BHUDDHU) புத்தா (BHUDDHA)
என்ற இருவருக்குமே
துக்கமில்லை.

❖ புத்து என்றால் முட்டாள். புத்தா என்றால் ஞானி.

❖ இப்போது நீங்கள் அனுபவிக்கும்
எல்லா துக்கங்களுமே
நீங்கள் முட்டாள் அல்ல
என்பதற்கான அறிகுறிகள்.
ஞானம் நோக்கி நகருகிறீர்கள்
என்பதற்கான ஆதாரங்கள்.
உற்சாகத்தோடு முன்னேறுங்கள்!

Illustration

பிடிவாதத்தை விட்டு வெளியே வாருங்கள்...

❖ பிடிவாதம் பக்கவாதத்தைவிட மோசமானது.

❖ பக்கவாதம் உடலை மாத்திரம்தான்
முடமாக்கும்.
பிடிவாதம் உடல், மனம் என்ற
இரண்டையும் முடமாக்கும்.

❖ மனிதனுக்குள் ஒளிந்துகொண்டு,
அவ்வப்போது வெளியில் வந்து
மற்றவர்களையும், அந்த மனிதனையும்
நாசம் செய்யும் அரக்கன்தான் 'பிடிவாதம்'.

❖ பிடிவாதம் - உங்கள் மனதைப் பிடித்துக் கொண்ட வாதம்.

வாழ்வின் மாயங்கள்

❖ 'நான் யார்?
நான் எவ்வளவு பெரிய ஆள்?
என் கௌரவம், என் கொள்கை' என்று
வறட்டுப் பிடிவாதம் பிடித்துக் கொண்டு
வாழ்க்கை நடத்தினால், உங்கள் பிடிவாதம்
மட்டுமே உங்களுக்கு மிச்சம்!
இந்தப் பிடிவாதத்தால் பல இழப்புகளை
நிச்சயம் சந்திக்க நேரிடும்!

❖ பிடிவாதம் என்பது உங்கள் மனதைப்
பிடித்துக் கொண்ட வாதம்.
பைசாவுக்கும் பிரயோசனம் இல்லாத
பிடிவாதத்தை விட்டுவிட்டு
ஆயிரக்கணக்கான இழப்புகளிலிருந்து
தப்பித்துக் கொள்ளுங்கள்!

❖ 'யார் நீ?' என்ற கேள்விக்கு

  • பெரும்பான்மையான மக்கள் கூறும் பதில்கள், படிப்பறிவில்லாதவன் 'உடல்தான் நான்' என்று நினைக்கிறான். படித்தவன் 'மனம்தான் நான்' என்று நினைக்கிறான். பண்டிதன் 'ஆத்மாதான் நான்' என்று நினைக்கிறான். இந்த மூன்று நினைவுகளும் மனிதனின் மாயங்களே! வெறும் கருத்துக்களே! உண்மையான நீங்கள் யார்? என்ற சுய அனுபவம் கிடைக்காத வரை 'நீங்கள் யார்' என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது.

❖ வாழ்வே மாயம்;
'வாழ்வே மாயம்' என்று பிரச்சினைகளால்
தத்தளிக்கும் சராசரி மனிதன் கூறினால்
அது பொய்.

வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாததற்குக் கூறும் சப்பைக்கட்டு.

❖ 'வாழ்வே மாயம்' பிரச்சினைகளை
எதிர்கொள்ளும் தைரியசாலி கூறினால்
அது உண்மை. வாழ்க்கையின் வலிகளை
அனுபவித்து வாழ்வைப் புரிந்து
கொள்வதால் பிறந்த தெளிவான கருத்து.

❖ 'வாழ்வே மாயம்' பிரச்சினைகளால்
பாதிக்கப்படாத நிலையை அடைந்த ஞானி
கூறினால், அது சத்தியம்.
வாழ்க்கையின் இன்ப, துன்பத்தை முழுமையாக
அனுபவித்து அனுபூதி அடைந்ததின்
வெளிப்பாடு.

❖ 'வாழ்வே மாயம்' என்று ஒரு ஞானி
கூறியதை ஒரு சராசரி மனிதன் 100%
தவறாகப் புரிந்துகொள்வான்.

  • அவரது தத்தளிக்கும் வாழ்க்கையை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு கருத்தாகப் பயன்படுத்திக்கொள்வான்.
  • அவ்வளவே, இது சத்தியத்தை மாற்றிப் புரிந்துகொண்டு சத்தியத்தைப் பொய்யாக்குவது.
  • இதுதான் மாயைகளிலேயே மிகப் பெரிய மாயை.