KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/செயலும் எண்ணமும் தெளிவாக...Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

செயலும் எண்ணமும் தெளிவாக...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ இன்றைய நிகழ்காலம் என்பது
நேற்றைய எதிர்காலம்.
நாளைய எதிர்காலம்
அது சந்திக்கப்படும்போது
நிகழ்காலமாகியிருக்கும்.
எனவே நிகழ்காலத்தைச் சந்திக்கத்
தெரிந்தால்போதும்.
எதிர்காலத்தை பற்றிக் கவலைப்பட
வேண்டியதில்லை.

❖ கவலைப்பட்டாலும்,
கவலைப்படாவிட்டாலும்
சந்தித்தே ஆகவேண்டிய
எதிர்காலத்தை எதிர்கொள்ளத்
தயாராவதே புத்திசாலித்தனம்.

❖ எதிர்கொள்ள ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தை!
வாழ ஆரம்பியுங்கள் நிகழ்காலத்தில்...
கவலைகளாலும், தேவையற்ற சிந்தனைகளாலும்
வீணாகும் நேரமும், சக்தியும் மிச்சமாகும்.
செயலும் எண்ணமும் தெளிவாக
ஆரம்பிக்கும்.

நிகழ்காலத்தில் நினைவொன்றி வாழ வாழ நிச்சயம் வாழ்வு வளமாகும்.

❖ மக்களைக் கற்பனையிலேயே
வாழச் செய்யும், சில பொழுதை போக்கும்
அம்சங்களால் மனித மனம் மிகவும்
பாதிக்கப்பட்டிருக்கிறது.
இது வருத்தத்திற்குரிய உண்மை.

❖ கற்பனை உலகில்தான் நாம் வாழ்கிறோம் என்பதை அறியாமல்... கற்பனைகளை நிஜம் என்றும், நிஜத்தைக் கற்பனை என்றும், பார்த்துப் பார்த்து மனம் பாதிக்கப்பட்டதால் தெளிவற்றுப்போன மனதிலிருந்து முடிவுகள் எடுப்பதால்தான் வாழ்க்கையில் பல குழப்பங்கள்.

❖ கற்பனை நிஜமாக முடியாது.
நிஜத்தைக் கற்பனை செய்ய முடியாது.
இது நடைமுறை உண்மை.

❖ மனிதன் செய்யும் 100 கற்பனைகளில்
ஒன்றிரண்டு நிஜமானால்
அதுவே பெரிய விஷயம்.
இதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை.
உங்களின் மன ஏட்டில் 'சொந்த அனுபவங்கள்'
எனும் பகுதியைப் புரட்டிப் பாருங்கள்.
புரியும்.

❖ உங்களின்...
பயம்
பரிதவிப்பு
ஏக்கம்
எதிர்பார்ப்பு
ஆகிய அனைத்தும் கற்பனைகளே.

❖ நிஜமாகாத கற்பனைகளுக்காக நிஜ வாழ்வை கரைக்காதீர்கள்.

❖ கற்பனைகளைக் கரையுங்கள், கஷ்டங்களெல்லாம் கரைந்துவிடும்.

பீனியல் சுரப்பியைச் சுறுசுறுப்பாக்குங்கள்

❖ கிடைத்தவகைகளுக்கு மனிதன்
மதிப்பளிப்பதில்லை.
அதோடு நில்லாமல்,
கொடுக்கப்பட்டதில் குறை சொல்லிக்
கொடுத்தவரையே கொட்டுவதும்,
'இன்னும் கொடு' எனச் சொல்லி
பெற்றுக்கொண்டதை அவமதிப்பதும்
நன்றியுணர்வற்றவர்களின் குணாதிசயங்கள்.

❖ பீனியல் சுரப்பி, சுரப்பிகளின் ராணி
என்றழைக்கப்படுகிறது. நமக்குள் ரம்யமான
உணர்வையும் (Senser of well being),
இளைப்பாறுதலில் கிடைக்கும்
அமைதியையும் (Peace) உருவாக்குவது
இந்த பீனியல் சுரப்பி.

side decoration panel

❖ 'நன்றியுணர்வோடிருத்தல்'
என்னும் உணர்வு நிலை
சஹஸ்ராரச் சக்கரத்தை மலரச் செய்யும்,
பீனியல் சுரப்பியை சுறுசுறுப்பாக்கும்.

❖ நன்றியின்மை
மரியாதையின்மை எனும்
குணக்கேடுகளின்
வெளிப்பாடுகளான...
அவமதித்தல்,
எகத்தாளம் ஆகிய எல்லாம் ஒன்றாய்
சேர்ந்துதான், ஒருவருள் வெறுமையை
உருவாக்குகின்றன.
அவரின் அருமையை மறைக்கின்றன.
மற்றவரின் அருமையையும்
அவருக்கு மறைத்து விடுகின்றன.