முடியும் தாண்டி விடலாம்... வா
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ திருப்தியின்மையால்தான் மீண்டும்,
மீண்டும் விட்டில் பூச்சி போலவே
மனிதன் சிற்றின்பங்களின் வலையில்
சிக்கிக் கொள்கிறான்.
❖ 'சிற்றின்பங்களைத் தாண்டுவது எளிது.
தாண்டிவிடலாம் - முயற்சி செய்'
என்று ஞானியர் சொல்லக் காரணம்,
அவை இன்பம் போன்ற ஏதோ ஒன்றை
சிறிதாகக் கொடுத்துவிட்டு, கூடவே
பெருந்துன்பத்தையும் தந்து விடுவதுதான்.
❖ இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த
வாழ்க்கையின் பிரம்மாண்டமான, உள்ளே
இருக்கும் ஆனந்தப் பெருங்கடலுக்கு முன் -
'சிற்றின்பங்கள்' சாதாரணக் கூழாங்கற்களை
விடச் சிறியவை.
❖ பேரின்பம் இறைவன் கொடுத்த
இரத்தினம்.
சிற்றின்பம் இறைவன் கொடுத்த
கூழாங்கல்.
❖ நாம் இரத்தினத்தை விட்டு விட்டு
கூழாங்கல்லை வைத்து, ராசிக்கல்
வியாபாரம் செய்யும்
சமுதாயத்தை உருவாக்கியிருக்கிறோம்.
அதில் அல்லவா வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.
உலக வாழ்வு கூழாங்கற்களைத் தரும்.
தியான வாழ்வு இரத்தினங்களைத்
தேடித் தரும்.
கூழாங்கல்லா? இரத்தினமா? எது தேவை.
இரண்டுக்குமே சாத்தியமுண்டு.
முடிவு செய்யுங்கள்.

❖ சிற்பியின் கைகள்!
ஓவியனின் விரல்கள்!
பாடfetchகனின் குரல்!
கவிஞனின் சிந்தனை!
சமைப்பவனின் பக்குவம்!
அறிவாளியின் அறிவு!...
- என்று புத்திசாலித்தனத்தின் அபூர்வ
வெளிப்பாடுகளை அடுக்கிக்கொண்டே
போவார்கள்.
❖ அவரவர் படைப்புத் திறன், விருப்பம்
பொறுத்து புத்திசாலித்தனம் வெவ்வேறு
துறைகளில் வெளிப்படும்.
❖ மனோதத்துவ நிபுணர்கள் புத்திசாலித்தனத்தை Seven types of Intelligence என்று வகைப்படுத்தியுள்ளார்கள்.
❖ சுருங்கச் சொன்னால், வாழ்க்கையை
ஒரு திருவிழாப் போல
கொண்டாடுவது எப்படி என்பதை
நடைமுறையில் சாத்தியமாக்கும்
உள் உலக உணர்வு அம்சம்தான்
புத்திசாலித்தனம்.
❖ எந்தத்துறையில்
எவ்வளவு பெரிய புத்திசாலியாக
ஒருவர் இருந்தாலும் சரி,
வாழ்க்கையைக் கொண்டாடும்
புத்திசாலித்தனத்தைப் பெறாவிட்டால்
வாழ்க்கையே அர்த்தமற்றதாகி விடும்.

❖ எப்போதும்
எதனாலும்
அசைக்க முடியாத கருணை உணர்வோடு
இருப்பதே குணமுதிர்ச்சியின்
பூரண வெளிப்பாடு.
இந்த நிலையைத்தான்
நீங்கள் ஒவ்வொருவரும் அடைந்து,
வாழ்வின் ஆனந்தத்தை ருசிக்க வேண்டும்
என விரும்புகிறேன்.
❖ முதிர்ச்சி பெறுவதற்கு ஜென் ஞானி
முரெ - சென்னின் அழகாகனக் கூற்று ஒன்று...
காற்றில் சருகாகிவிடு!
ஆற்றில் தக்கையாகி விடு!
- என்ன ஒரு அற்புதமான பொன்மொழி!
❖ சருகு
காற்றோடு காற்றாகச் செல்லும்,
தக்கை
நீரோடு நீராகச் செல்லும்,
ஆனால் சருகு சருகாக இருக்கும்.
தக்கை தக்கையாக இருக்கும்.
❖ இரண்டுக்குமே கஷ்டம் இருக்காது.
இந்த நிலையைத்தான் முதிர்ச்சி என்று
அழைக்கிறேன்.
❖ வாழ்க்கை எனும் ஆற்றில் நாம் தக்கையாக மாறிவிடுவதுதான் குணமுதிர்ச்சி.
❖ அப்படி மாறிவிட்டால்...
மற்றவர்களும் நம்மைப் போன்றே,
உணர்ச்சிக் கொந்தளிப்பில்
தவிப்பவர்கள்தான்.
அவர்களும் நம்மைப் போன்றே,
சுயக்கட்டுப்பாட்டைச் சில நேரங்களில்
இழந்து, செய்வதறியாது
மற்றவர்கள் மீது கோபத்தைக் கொட்டித்
தீர்ப்பவர்கள்தான் என்ற உண்மை புரிய
வரும்.
❖ கோபத்திற்குப் பதில் கருணை பிறக்கும்.
❖ வெறுப்பிற்குப் பதில் அன்பு பிறக்கும்.
❖ சலிப்பு களிப்பாக மாறும்.
எப்போது?
குணம் முதிர அனுமதித்தால்!
உன்னுள் ஒளிந்திருக்கும் மாயச்சிலை
பாறைக்குள் ஒளிந்திருக்கும்
அழகிய சிலை போல்
மனிதனுக்குள் ஒளிந்திருக்கும்
மாயச்சிலைதான் மனம்.
அழகிய சிற்பம் உருவாவது
சிற்பியின் கைவண்ணத்தைப்
பொறுத்தது.
ஆரோக்கிய மனம் உருவாவது
தனிமனிதனின் மனமுதிர்ச்சியைப்
பொறுத்தது.
ஒரு கல்லில் இருந்து அழகுச் சிலையை
செதுக்க உதவும் உளி போன்றது -
மனதை செதுக்க உதவும் உணர்வு!


(மனதின் உளி, உணர்வு)
பாறையைச்
சிலையாக்குபவன்
சிற்பி.
மனதைக்
குதூகலமாக்குபவன்
தியானி.
நாம் நம் தேவைக்கேற்றபடி
மனதை விழிப்புணர்வால் செதுக்கி
வடிவமைக்க முடியும்.
ருசித்தல்
❖ 'விழிப்புணர்வோடு ரசித்து ஈடுபடும்போது
ருசித்தல் ஒரு தியானம்'.
ஆனால், நூற்றுக்கு தொண்ணூற்றி ஒன்பது
மனிதர்கள் விழிப்புணர்வின்மையிலேயே
வாழ்வதால்,
அதே ருசிக்கு அடிமைகளாகி விடுகிறார்கள்.
உடலுக்கு உற்சாகமளிக்க வேண்டிய
உணவே உபத்திரவங்களை உருவாக்க
ஆரம்பித்து விடுகிறது.
❖ ருசிக்கு அடிமையானவன் -
பசிக்குப் புசிக்காமல்,
ருசிக்குப் புசிக்க ஆரம்பிக்கிறான்.
ருசிக்குப் புசிப்பதால்...
உடலின் உண்மைத் தேவையை
மீறி உடலுக்குள் விதவிதமாய் உணவு
கொட்டப்படுகிறது.
உடல், ருசியின் குப்பைத் தொட்டியாக
மாறிவிடுகிறது.
❖ மனிதனுக்கும் மிருகத்திற்கும்
இடையிலிருக்கும் ஒரு மிகப்பெரிய
வித்தியாசத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்...
மனிதன் ருசிக்குச் சாப்பிடுகிறான்.
மிருகங்கள் பசிக்குச் சாப்பிடுகின்றன!!!
நீங்கள் கிளர்ச்சியாளனா?
❖ ஒரு கிளர்ச்சியாளன் நிச்சயமாக மூர்க்கன், மூடன் ஆகிய இருவரையும்விட உயர்ந்தவனே. ஆனால் அது இறுதியல்ல. பொங்கியெழுவது முதிர்ச்சியாகாது.
❖ மனதுக்குப் பிடிக்காத எந்த ஒரு
விஷயத்தைப் பார்த்தும் அல்லது கேட்டதும்
கோபமோ எரிச்சலோ வந்தால் நீங்களும்
ஒர் கிளர்ச்சியாளனே. (ஏதோ பெரிய பெரிய
புரட்சியில் ஈடுபடுபவர்கள் மாத்திரமே
கிளர்ச்சியாளர்கள் அல்ல)
❖ கிளர்ந்தெழுவது என்பது, மனம் அதன்
மந்தத் தன்மையில் இருந்து வெளிவந்து
கொண்டிருக்கிறது என்பதற்கான
அடையாளம் மட்டுமே.

337

❖ ஓய்வேயில்லாமல் யோசிப்பதும்,
பரபரப்பாக எப்போதும் ஏதாவது
செய்து கொண்டிருப்பதும்,
தனக்குப் பிடிக்காத விஷயங்கள்
தன்னைச் சுற்றி நிகழும்போது,
கிளர்ந்தெழுவதும் பொங்கியெழுவதும்
நம் வளர்ச்சியின் நல்ல
அடையாளங்களே.
பொங்கியெழுவதும்,
கிளர்ந்தெழுவதும்
தாண்டப்பட வேண்டிய நிலைகள்.
கொண்டாடப்பட வேண்டிய
நிலைகள் அல்ல.
பெருமைப்பட வேண்டிய
குணாதிசயங்கள் அல்ல.