KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/சாந்த குணம்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

சாந்த குணம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ கிளர்ந்தெழுதல் ஒரு பேய் மாதிரி
மனிதனுக்குள் இருந்து கொண்டு மனிதனை
உலுக்கிக் கொண்டே இருக்கும்.
உத்திரவிட்டுக் கொண்டே இருக்கும்.
மனிதனும்தான் உயிரோட்டம்
உடையவனாய் செயல்படுவதாய்
நம்புவான்.

❖ கிளர்ந்தெழுதல், மனிதனை
இளைப்பாற அனுமதிக்காது.
போதும் என்ற திருப்தி மனிதனை
நெருங்க விடாது பார்த்துக் கொள்ளும்.

❖ மந்தத் தன்மைக்கும் கிளர்ந்தெழுவதற்கும் இடைப்பட்ட சுபாவம்தான்,

Illustration

339

illustration

நிதானம்!
சாந்தம்!
நிம்மதி!
திருப்தி!
ஆனந்தம்!
இந்த உண்மை மனிதனால்
உணரப்படாதவரை கிளர்ந்தெழுதல்,
வாழ்க்கையை காட்டாறுபோல அதன்
இஷ்டத்துக்கு அலைக்கழிக்கும்.

❖ உண்மை தெரியாத மனிதனோ! ‘நான்
சரியாகத் தானே வாழ்ந்தேன்,
கஷ்டப்பட்டுதானே உழைத்தேன்! ஏன்
எனக்கு மட்டும் இவ்வளவு
கஷ்டங்கள்?’ என்று வாழ்வின்
பிற்பகுதியில் நொந்து கொள்வான்.

❖ சாந்த குணத்தை
வளர்த்துக் கொண்டால்
இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும்
முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
கிளர்ந்தெழும் சுபாவத்தைத் தணியச்
செய்வது சாந்த குணத்தைப் பெறும்
ஓர் எளிய வழி.

❖ தியான சக்திக்கு, இந்தப் பேய்ச் சுபாவத்தை எரித்து விடும் சக்தியுண்டு. கிளர்ச்சி முதிர்ச்சியல்ல. கிளர்ச்சி வளர்ச்சியின் ஒரு பகுதி மட்டுமே. கிளர்ச்சியைக் கடந்து சாந்தமடையுங்கள். வாழ்வு சந்தோஷமாகும்.

Illustration with a person seated and floral decorations

தீண்டுபவரே தீண்டப்படுவார்

❖ 1. யாரை எப்படி ஏமாற்றலாம்?

  1. நடிப்பால் மற்றவரை நம்ப வைத்து நம் காரியத்தை மட்டும் சாதிப்பது எப்படி?
  1. சாதித்தபின் மற்றவர் படப்போகும் கஷ்டத்தைக் கணக்கில்கூட எடுத்துக் கொள்ளாமல் விடுவது எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்கு பதில் தரும் குண அமைப்பிற்கு பெயர்தான் கள்ளம், கபடம்.

❖ கள்ளம் உள்ளத்தில் குடியிருக்கும்வரை
இல்லத்திலோ, உள்ளத்திலோ
நிம்மதி இருக்காது.
இருக்கவும் முடியாது.

❖ கள்ளங்களை உள்ளங்களிலிருந்து
களையும் கலை நுணுக்கமானது.
மில்லிமீட்டர் மில்லிமீட்டராய்
உள்ளத்தை ஆராயுங்கள்
உள்ளதெல்லாம் வெளிச்சத்துக்கு வரும்.

❖ ஏமாற்றப்பட்டவர்களுக்கு...
அது பாடம். பண்படுவார்கள்.
ஏமாற்றுபவர்களுக்கு...
அது படமெடுக்கும் பாம்பு.
ஆபத்து!
கள்ளம் கொண்ட உள்ளம்,
அது மற்றவர்களைத் தீண்டுவதுபோல்
குறைந்தது இரண்டு மடங்கு
தீண்டப்படும். துன்பப்படும்.

Illustration

எது பக்தி?

❖ எது பக்தி? என்பதை யார்
வேண்டுமானாலும் எளிதாய்
உணர்ந்து கொள்ளலாம்.
கீழே குறிப்பிடப்பட்டிருப்பது
பக்தியுணர்வின் ஒரு சில
வெளிப்பாடுகள்...

❖ நாம் பிறப்பதற்குக்
காரணமாக இருந்த பெற்றோர்கள்;
நாம் வளர்வதற்கு
உதவியாக இருந்தச் சமுதாயம்;
நாம் வாழ்வதற்கு
ஆதாரமாக இருந்த இறைசக்தி;
ஆகியவற்றின் மீது நமக்கிருக்கும்

மரியாதையும், நன்றியுணர்வும், நம்பிக்கையும் சேர்ந்ததே பக்தி.

❖ இந்தப் பக்தியை எல்லோரிடமும் எல்லா
இடத்திலும் வெளிப்படுத்தும் பக்குவம்
பெறும்போது பக்தியின் முழு வெளிப்பாடு
நிகழும்.

❖ நாம் காணும் ஒவ்வொரு விஷயத்திலும்
இயற்கை சக்தியை அல்லது இறைசக்தியை
உணர்வதுதான் பக்தி.
இந்தப் பக்திதான் ஞானம்.

Ebook ISBN 979-8-88572-338-1

Illustration