KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ ஆராயாமல் வெறுமனே மற்றவர்கள்
சொல்கிறார்கள் என்பதற்காக, எந்த ஒரு
சூழ்நிலையிலும் உணர்ச்சி வேகத்தால்
உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாததை
உங்களுக்குள் அனுமதித்து விடாதீர்கள்.

❖ நமக்குப் பிடித்தவர்களால், நம் மனதை பிடித்துக்கொண்ட தவறுகள்தான் அதிகம்.

❖ அதேபோல் நமக்குப் பிடிக்காதவர்களால்
நம் மனதில் பிடிபடாமல் நழுவிச் சென்ற
சரியான விஷயங்களும் அதிகம்.

❖ நமக்குப் பிடித்தவர்கள் என்பது, அவர்கள்
நமக்கு அறவே பிடிக்காத செயலைச்
செய்யும்வரை மட்டுமே!

❖ நமக்குப் பிடிக்காதவர்கள் என்பதும் -
அவர்கள் நம் மனதுக்கு மிகப் பிடித்த ஒரு
செயலைச் செய்யும்வரை மட்டுமே!

❖ பிடித்தவர்கள்
பிடிக்காதவர்கள்
என்ற இரண்டுமே நிலையில்லாதவை.
நம் கருத்துக் கண்ணாடிகளால் மனிதர்களை
முத்திரையிட்டு, பிரித்துப் பார்த்து -
உண்மையைச் சரிய விட்டுவிட்டு, ‘சரி’
என்ற பெயரில் தவறு செய்வதை நிறுத்த
ஆரம்பித்தால்போதும்...

❖ புத்தனின் நடுநிலை மார்க்கத்தை நெருங்க
ஆரம்பித்து விட்டீர்கள்...
நிம்மதிக் காற்று வீச ஆரம்பித்து விட்டது.

Illustration
illustration