KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/கடமை உங்களை உறிஞ்சுகிறதா?Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

கடமை உங்களை உறிஞ்சுகிறதா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ கடமைகள்
‘கடமையே!’
எனச் செய்யப்படக்கூடாது.
கடமை
வாழ்வின் ஒரு கட்டாயமாக மாறி
மனிதனைக் கட்டுப்படுத்தவும் கூடாது.

❖ கடமையானது,
துள்ளலோடும், ஆனந்தத்தோடும்
செய்யப்பட வேண்டும்.

❖ நம் வாழ்வில் நாம் சுதந்திரமாக
முடிவெடுத்து செய்யும் உற்சாகமான
காரியமாகக் கடமை இருக்க வேண்டும்.

Sri Aurobindo / Mother

❖ கடமையும்,
கருணையும்
ஒன்றோடொன்று மிக நெருங்கிய
தொடர்புடையவை.
கருணையின் வெளிப்பாடாக
கடமை இருந்தால்
அது கடமையாற்றுபவனை
இன்பத்தில் ஆழ்த்தும்.
கட்டாயத்தின் வெளிப்பாடாக
கடமை அமைந்து விட்டால்
அது கடமையாற்றுபவனை
துன்பத்தில் வீழ்த்தி விடும்.

❖ கடமைகள் மனிதனுக்குப்
பிரச்சினைகளை உண்டு பண்ணுவது
கடமையின் காரண சக்தியைப் பொறுத்தது.

❖ காரண சக்தியானது
'கட்டாயம்' என்னும் உறிஞ்சும் சக்தியா?
'கருணை' என்னும் உற்சாக சக்தியா?
என்பதைப் பொறுத்து கடமை துன்பமா
அல்லது இன்பமா என்பது முடிவு
செய்யப்படும்.

Illustration

தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்

❖ கையில்லாதவன்
கழுத்தில்லாதவனுக்கு
மாலை அணிவிக்க முயன்றால்...
அது எப்படியிருக்கும்?
ஒருவர் இன்னொருவரைப் பற்றிச்
சொல்லும் கருத்துக்களும் தீர்ப்புகளும்
அப்படிப்பட்டதே.

❖ நம்மை நாமே புரிந்து கொள்வது கடினம்.
பல வேளைகளில் நம்மைப் பற்றிய ஒரு
தெளிவான முடிவுக்கு வருவது நமக்கே
கடினமாக இருக்கும்.
இதை கவனித்திருக்கிறீர்களா?

❖ நம்மைப் பற்றியே நமக்குத் தெளிவாகப் புரியாத பட்சத்தில்

  • உலகத்தையும், உறவுகளையும் மதிப்பிட ஆரம்பித்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும்... 'மஞ்சள் நிற'க் கண்ணாடி போட்டுக்கொண்டு 'ஊதா' நிறத்தை ஆராய்ச்சி செய்து நான் கண்டுபிடித்தது 'பச்சை' எனத் தீர்ப்பு எழுதுவதைப் போன்று இருக்கும்.

❖ இந்த ஒரு உதாரணத்தை முழுமையாகப்
புரிந்துகொண்டால் மொத்தத்
தொல்லைகளுக்கும் முற்றுப்புள்ளி
வைத்து விடலாம்.

❖ யாரையும் எதையும் எப்போதும்

  • 'தீர்ப்பிட முடியாது' என்பது உண்மை.
Illustration with a person seated within an oval frame
இடப்பக்க உருவப்படம்
  • 'தீர்ப்பிடக் கூடாது' என்பது அறிவுரை.
  • 'தீர்ப்பிடாமல் இரு' என்பது தியானம்.

❖ நம் மனக்கண்ணைக்
குருடாக வைத்துக் கொண்டு
மற்றவர்களின் குணத்தைப் பற்றியும்,
நடத்தையைப் பற்றியும்
விமர்சிக்க ஆரம்பிக்கும்போதுதான்
வினையே ஆரம்பிக்கிறது.

சாதிக்கும் முன் யோசிக்க வேண்டியது

❖ யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
எப்பொழுது வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
சாதிக்க எதுவுமே தடையில்லை.
சாதனை பெரிய விஷயமா என்ன?

❖ எச்சரிக்கை!
சாதிக்கலாம் என்ற கனவையும்,
சாதித்தபின் நிம்மதியாயிருக்கலாம்
எனும் நம்பிக்கையையும்,
சாதனை துடைத்தெறிந்துவிடும்.

❖ சாதனை என்பது நாம் நினைக்குமளவுக்கு
பெரிய விஷயமல்ல என்ற உண்மை
சாதிக்கும்வரை மனிதனுக்குத்
தெரியாது, புரியாது.

Maharishi Mahesh Yogi with flowers

❖
உள்ளுலகில் சாதித்தவன்
வெளியுலகில் சாதித்தாலும்
சாதிக்காவிட்டாலும்
ஆனந்தமாயிருப்பான். நிம்மதியாயிருப்பான்.
உள்ளுலகில் சாதிக்காதவனுக்கு
வெளியுலகில் சாதித்தாலும்
சாதிக்காவிட்டாலும்
ஆனந்தம், நிம்மதி சொந்தமில்லை!

❖
சாதித்தாலும்,
சாதிக்காவிட்டாலும்
வேதனை தொடர்கிறது.
முதலில் தாண்டப்பட வேண்டியது
வேதனை. இதையடுத்துதான் சாதனை
பற்றியே யோசிக்க வேண்டும்.

❖ நேசத்தை முதலில் நாம் கற்றுக்கொள்ள
வேண்டும்.
அதன் பிறகுதான்
மற்றவரை நேசிப்பதைப் பற்றி
நாம் யோசிக்கவே முடியும்.

❖ நேசம் என்ற உண்மையான அன்பு நம்முள்
மலராதவரை...
'நேசம்' என்ற பாச வலையால்
ஒருவரை ஒருவர்
மனதளவில் கட்டிப் போட்டு,
மற்றவரை நம் கைக்குள் வைத்திருக்க
உதவும் ஒரு தந்திர வலையாகத்தான்
'நேசத்தை' நாம் பயன்படுத்த முடியும்.

side decoration
illustration

❖ உங்கள் உறவுகளுக்கு
முழுச் சுதந்திரம்
நீங்கள் கொடுக்கவில்லை என்றால்,
தெரிந்துகொள்ளுங்கள்...
இவ்வளவு காலமாக நேசம் என்ற
வேஷமிட்டு பாச நாடகம்தான்
நிகழ்ந்திருக்கிறது.
உண்மையான நேசம் இன்னும்
நிகழவில்லை.

❖ பாசம் என்ற உரிமையைப் பயன்படுத்தி
நம் நெருங்கிய உறவுகளுக்குச்
சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறோமா?
அல்லது நம் கட்டுக்குள் அவர்களை
வைத்திருக்க முயற்சித்திருக்கிறோமா?
ஆராயுங்கள்.
உண்மை புரியும்.
பாச வலையின் இறுக்கம் தெரியும்.

வேதம் விவாதத்திற்கல்ல

❖ ஒரே கடவுளின் வார்த்தைகளால்
தொகுக்கப்பட்ட வெவ்வேறு
மதப்புத்தகங்கள்,
மூதாதையரின் சடங்காச்சாரியங்கள்
மற்றும் மதவிதிகளைப் பிடித்துக்
கொண்டுதான் மனித மனம் வாழ்கிறது.
விகல்பத்தைத் தூண்டுகிறது.
கலகத்தை வரவேற்கிறது.

❖ வார்த்தைக் கலகங்களைத் தாண்டி,
மதம் என்னும் ஏரிக்குள் குதியுங்கள்.
உண்மை விளங்கும்.

❖ வேதம் விவாதத்திற்கல்ல! அது தெய்வ அனுபவத்திற்கு!

portrait illustration

323

illustration