KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/ஞாபகச் சக்திக் கிடங்கின் மந்திரசாவிSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

ஞாபகச் சக்திக் கிடங்கின் மந்திரசாவி

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ 'விருப்பம்' என்னும் மந்திரச் சாவி
இருந்தால், ஞாபகம் என்னும் கிடங்கை
திறப்பது வெகுசுலபம்.

❖ படிப்பு ஒரு சுமை - படிப்பின் மீது
விருப்பம் உள்ளத்தில் மலராதவரை
இது உண்மை.

❖ படிப்பு ஒரு சுவை - படிப்பின் மீது
விருப்பம் உள்ளத்தில் மலர்ந்தபின்
உணரப்படும் உண்மை.

❖ படிப்பு ஒரு சுமை என்பதும், படிப்பு
ஒரு சுவை என்பதும் அவரவர்
விருப்பத்தின் அளவைப் பொறுத்தது.
உண்மையில் உங்களுடைய ஞாபக
சக்தியில் எந்த குறையும் இல்லை.

  • உங்கள் விருப்பத்தில்தான் குறை இருக்கிறது. குறை ஞாபகச்சக்தியில் அல்ல. விருப்பத்தின் அளவில் இருக்கிறது.
  • படிப்பு ஒரு சுமை போல, இந்த காலத்தில் ஆகிவிட்டதாலும், மனதைச் சிதறடிப்பதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் உருவாகிவிட்ட காரணத்தாலும் - நம் மனம் நம்மிடம் இல்லை.
  • பெரும்பாலும் நமது விருப்பம் சூழ்நிலைக்குச் சூழ்நிலை மாறிக் கொண்டேயிருக்கும் விருப்பங்கள்தான். இப்போது உங்களிடம் இருக்கும் விருப்பங்களும், ஆசைகளும் உங்களுடைய சொந்த விருப்பமாக இருப்பதற்கு 99% வாய்ப்பு இல்லை.
Illustration
  • எனக்குப் படிப்பின் மீது விருப்பமில்லை என்பதும், வெளி விஷயங்களில்தான் அதிக நாட்டமும் அதிக விருப்பமும் இருக்கிறது என்பதும் காலத்தின் கோலங்களே!
  • விருப்பம் திசைமாறியது விபத்துதான். இருந்தாலும் விருப்பத்தைத் திசை மாற்ற விரும்பினால் விருப்பத்தை நம் நோக்கத்திற்கே திருப்பி விடலாம். இது சாத்தியமே.
  • விருப்பத்தையும், நாட்டத்தையும் அதிகப்படுத்துங்கள் (படிப்பில்) ஞாபக சக்தி தானாய் அதிகமாகிக் கொள்ளும்! - இது இயற்கையின் விதி.

❖ மனித மனம்,
அது முதலில் கிரகிக்கும் கருத்துக்கள்
மற்றும் சம்பவங்களைக் கொண்டு
தன்னை உருவாக்கிக் கொள்கிறது.
அவற்றிற்குள் உறைந்து இறுகிப்போகிறது.
அது நல்லதானாலும், கெட்டதானாலும்!
வாழ்க்கையில் ஒரே மாதிரியான
சுக துக்கங்களையே மனிதன் தொடர்ந்து
அனுபவிக்க காரணமானது இந்த மனதின்
எலும்புகள்தான்.

❖ மனித உடலுக்கு எலும்புகள் போல்,
மனதிற்கு எண்ணங்கள்!
எண்ணங்களே இல்லையென்றால்
மனமே இல்லை.

Mother Mirra Alfassa sitting, within floral surfboard-shaped frame

305

illustration

❖ எண்ணங்களின் தொகுப்பே மனம்.
இதில் வேடிக்கை என்னவென்றால்,
எலும்புகள் வளைந்தோ,
நெளிந்தோ போய் விட்டால் மனிதன்
குட்டையாகவோ, கூனாகவோ
மாற வேண்டியதுதான்.
எண்ணும் விதம் களங்கப்பட்டதாகவோ
ஆனந்தத்திற்கு மாறானதாகவோ
இருந்தால்...
நம் மனமும் கூனாகவோ,
குருடாகவோ மாறிவிடும்.

❖ விதவிதமான எண்ணங்கள் மனிதனுக்குள்
சமுதாயத்திலும் உறவினர்களாலும்
திணிக்கப்படுகிறது.
எண்ணங்கள் சேரச் சேர
மனம் என்னும் குழந்தை
வளர ஆரம்பிக்கிறது.

உயிர்ச்சக்தி விரயத்தை தடுக்கும் வழி

❖ அவமானம் நேரும்போது...
பிரச்சினைகள் வரும்போது...
தவறு செய்யும்போது...
என்று படபடப்பு நமக்குள் ஏற்படும்
ஒவ்வொரு நிமிடமும் நாம் பீதியில்தான்
வாழ்கிறோம்.

❖ நமக்குள்ளே படபடப்பை உணர்வது,
பேச்சுத் தடுமாறுவது,
விரல்கள் நடுங்குவது...
இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் சரி -
அந்த நேரங்களில் நாம் நம் கட்டுப்பாட்டை
இழக்கிறோம் என்று அர்த்தம்.
அதன் விளைவாக ஏற்படும் உயிர்ச் சக்தி
விரையம்தான் நடுக்கத்தையும்,
படபடப்பையும் உண்டு பண்ணுகிறது.

The Mother seated

307 இதுதான் பீதி.

❖ இந்த பீதியிலிருந்து எப்படி
வெளிவருவது? எளிது,
பயத்தை கண்டு பயந்துவிடாமல்
பயமே பயப்படுமளவுக்கு
பயத்தை விழிப்புணர்வோடு
அணுக ஆரம்பியுங்கள்.

❖ பயத்தில் பயந்து படபடத்து,
பீதியடைவதற்கும்,
பயத்தை விழிப்புணர்வோடு பார்த்து
பீதியின் வெளிப்பாடான
படபடப்பையே தாண்டுவதற்கும்
நிறைய வித்தியாசங்கள் உண்டு.
சுருக்கமாகச் சொன்னால்...
பயத்தை தைரியத்தோடு எதிர்கொள்ளுங்கள்.
பிரச்சினை தீர்ந்தது.

யார் சிஷ்யன்?

❖ ஒரு சீடனால்,
குருவின் வார்த்தையை
அப்படியே நம்ப முடியும்.
குருவின் நேரத்தையோ, தன் நேரத்தையோ
சந்தேகங்களில் வீணடிக்க மாட்டான்.

❖ ஒரு பக்தனால்,
குருவின் வார்த்தைகளை
காது கொடுத்து கேட்க முடியும்.
ஆனால், நம்பி ஏற்றுக்கொள்ள நேரமாகும்.

❖ ஒரு பார்வையாளன்,
'இந்த குரு உண்மையிலேயே குருதானா!'
என்று சோதிப்பதிலேயே நேரத்தை வீணடித்து
விடுவான்.

Illustration
Maharishi Mahesh Yogi and flowers illustration

❖ சீடன்,

பக்தன்,

பார்வையாளன் என்பது

குருவை

நீங்கள் அணுகும்விதத்தைப்

பொறுத்தது.

கடமை! மடமை!

❖ கடமை! கடமை!
என ஓடியதில்
பலரின் வாழ்வே
கடமைக்கென்று மாறிவிட்டது.
கடமைக்காக வாழ ஆரம்பித்துவிட்டார்கள்.
இது கொடுமை.

❖ கருணை ஒரு உற்சாகச் சக்தி.
கருணையின் வெளிப்பாடாகக் கடமை
அமைந்தால்தான்
வாழ்க்கை உற்சாகமாக இருக்கும்.
உற்சாகமாக வாழ முடியும்.

❖ கருணையால் உற்சாகப்பட்டு நம் உறவுகளுக்குச் சேவை செய்யாமல்,

Illustration

கட்டாயத்தின் பேரில் உந்தப்பட்டு
நம் உறவுகளுக்குச் சேவை செய்ய
இறங்கினால்
சேவை பூர்த்தியாகும்.
ஆனால் உங்களின் தனித்தேவை
பூர்த்தியாகாது.
ஆனந்தமே உங்களின் உண்மையான
தனித்தேவை.

❖ கருணையால் சேவை செய்தால்தான்
அது கடமை.
கட்டாயத்தால் சேவை செய்தால்
அது கடமை அல்ல அது மடமை.
உங்களின் சேவை கடமையா?
மடமையா?