KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/படிப்பு ஒரு திறன்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

படிப்பு ஒரு திறன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ படிப்பு ஒரு கலை.

❖ வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாதவரை படிப்பில் துடிப்பும், ஆர்வமும் ஏற்படாது.

❖ படிப்பைச் சுற்றி சமுதாம் உருவாக்கும் கட்டாயப்படுத்தல்களும், கஷ்டங்களும்தான் படிப்பின் மீது வெறுப்பை உண்டு பண்ணுகிறது.

❖ மனதில் வெறுப்போடு ஒரு ஓவியக் கலையையோ, சிற்பக்கலையையோ கற்றுக்கொள்ள கடினம்.

❖ வெறுப்போடு கற்றுக்கொள்ள முயற்சித்தால்
கலைகூட கவலையைத்தான் உண்டுபண்ணும்.
அது சுமையாகத்தான் தெரியும்.

❖ படிப்பு சுமையாகத் தெரிவதின் சூட்சமம் இதுதான்.

❖ உண்மையான படிப்பு என்பது நீங்கள்
உங்களைப் புரிந்து கொள்வதற்காக
உதவும் ஒரு வழிமுறை.

❖ நன்றாகப் படிக்க முடியாமல் போனதற்கு
நீ பொறுப்பல்ல.
ஆனால் நன்றாகப் படிக்கப் போவதற்கு
நீதான் பொறுப்பு!

side illustration with photograph