வாழ்க்கை அர்த்தமுள்ளதாகட்டும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ இந்த வாழ்க்கையை அனுபவி என்று
இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த
ஆனந்த சக்தியைப் பயன்படுத்தாமல்
இருப்பது - சுயபாதகச் செயல்.
❖ பணம், பதவி, பேருக்காக நீங்கள்
செலவழிப்பது எதை? - உடல், உயிர், மனதை!
எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத்
தயாராக இருக்கும் பணம், பதவி,
பேருக்காக இந்த நிமிடம்
உங்களோடிருக்கும்
உடல், உயிர், மனதைப்
பாழாக்குவது எந்த வகையில் நியாயம்.
கொஞ்சம் யோசியுங்கள்!
❖ வாழ்க்கையை வீணடிப்பது...
ஒரு மகாபாவம்!
ஒரு கொடுஞ்செயல்!
ஒரு பெருங்குற்றம்!
❖ 'இந்த நிமிடத்தில் என்னிடம் உள்ளதே இந்த நிமிடத்தை அனுபவிக்கப் போதும்'
- என்று தன்னையும் தன் சூழ்நிலையையும் அனுபவித்து வாழ்பவனுக்கு மட்டுமே ஆனந்தமும், திருப்தியும் சொந்தம்.
❖ இந்தப் புத்தகத்தைப் படிக்கும் அளவுக்கு
நேரமும், பணமும் பெற்ற நீங்கள்...
நிச்சயம் பிச்சைக்காரராக இருக்க முடியாது.
❖ வாழ்க்கையை அனுபவித்து வாழத்
தெரிந்திருந்தால் பிச்சைக்காரனால்கூட
சொர்க்கத்தை உணர்வது சாத்தியம்
என்றால், ஏன் உங்களால் முடியாது?
❖ உங்களையும், உங்கள் சூழ்நிலைகளையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
❖ சொர்க்கம் உங்களுக்குள்ளே... என்று கண்டுகொள்வீர்கள்.
❖ வாழ்க்கையே ஒரு பெரிய தொடர் திருவிழா!
❖ வாழ்க்கையை அனுபவித்து வாழுங்கள்!
சந்நியாசம்
❖ நாட்டில் உள்ள எல்லாருமே துறவிகளாகி
விடுவது சாத்தியமில்லை.
ஆகவே என்னைப்போல சிலர்
துறவிகளாகி, நாங்கள் ஆனந்தமயமாவது
மாத்திரம் அல்லாமல் பிறருக்கும்
ஆனந்தமயமாவதற்கான வழிகளைக்
காட்டுகிறோம்.
இது ஒரு சமுதாயத் தேவை.
இறைச்சித்தம்.
❖ உண்மையான சந்நியாசிகள் உருவாக்கப் படுவதில்லை - பிறக்கிறார்கள். (Real sanyasis are not made, They are bourn).
❖ சந்நியாசி ஆவதற்கு வீரர்களுக்கெல்லாம் இல்லாத வீரம் வேண்டும்.

❖ வீரன், அடுத்தவர்களை வெற்றி கொள்கிறான்.
சந்நியாசி தன்னைத்தானே வெற்றி கொள்கிறான்.
ஆகவே, எல்லோரும் சந்நியாசிகளாகிவிட
முடியாது.
❖ 100% சுதந்திரமான... 100% ஆனந்தமயமான...
- வாழ்வு முறைக்குப் பெயர் சந்நியாசம். இப்படிப்பட்ட சுதந்திரமயமான வாழ்க்கை வாழ்பவனுக்குப் பெயர் சந்நியாசி.
இது உச்சக்கட்ட போதை
❖ பெருமை நல்லது - அது
ஒருவனைச் சிறுமையில் சிக்கவிடாமல்
காக்கும்.
அது தற்பெருமையாகவோ
வெட்டிப் பந்தாவாகவோ,
அகந்தையாகவோ மாறும்போது,
அதுவே அவனை அழித்துவிடும்.
❖ பெருமை தரும் உற்சாகம் போதை மருந்து தரும் உற்சாகத்திற்குச் சமம்.
❖ போதை மருந்து உடலை அடிமைப்படுத்தும். பெருமையுணர்வு மனதை அடிமைப்படுத்தும்
❖ போதை மருந்தால் உடல் மட்டும் வீணாகும்.
பெருமை என்ற மாய உணர்வு மனதை
வீணாக்குவதின் மூலமாக உடலையும் சேர்த்து
வீணாக்கும்.

291
❖ மேதையைக்கூட பேதையாக்கும் போதை இந்தப் பெருமை!
❖ மனிதன் தான் இடிப்பட்டதாய் உணரும்
எல்லாச் சூழ்நிலைகளிலும்...
அவன் அடிபடுவது
இந்தப் பெருமையுணர்வில்தான்!
பெருமைப்பட ஆயிரம் காரணமும்,
சிறுமைப்பட ஆயிரம் காரணமும்
சொல்வது எளிது.
ஆனால், எளிமையாய் வாழ ஒரு காரணம்
சொல்வதுகூட மனதுக்கு மிகக் கடினமானது.
❖ பெருமையை விட்டு வெளியே வாருங்கள்.
அப்போதுதான் உங்களின் அருமை
உங்களுக்கே புரியவரும்.
❖ கோயில்களுக்குச் சக்தி கிடைத்தது எப்படி?
❖ ஒரு ஞானி பிராணப் பிரதிஷ்டை செய்து வைக்கும் ஒரு 'ஸ்தலத்தில்' அவர் அனுபவப் பூர்வமாக உணர்ந்து அனுபவித்த தெய்வ சக்தி தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.
❖ இதற்குப் பல உதாரணங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
❖ பழனியில் திருக்கோயிலை உருவாக்கி
பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தவர்
போகர் என்ற ஞானி.
❖ தஞ்சாவூரில் கரூரார், திருவண்ணாமலையின்
அக்னி ஸ்தலத்தை பிரதிஷ்டை செய்தவர்
இடைக்காட்டுச் சித்தர் என்னும் ஒரு ஞானி.


❖ சிதம்பரத்தில் திருக்கோயிலைப் பிரதிஷ்டை செய்து வைத்தவர் பதஞ்சலி என்ற ஒரு ஞானி.
❖ திருப்பதியில் திருத்தலத்தை உருவாக்கிப்
பிராண பிரதிஷ்டை செய்து வைத்தவர்
கொங்கணவர் என்ற ஒரு ஞானி. ஒவ்வொரு
ஞானியும் ஒரு குறிப்பிட்ட சக்தியை ஒரு
கோயிலில் விட்டுச் செல்கிறார்கள்.
அதனால் தான் ஒவ்வொரு பிரசித்தி பெற்ற
கோயில்களும் வெவ்வேறு விஷயங்களுக்குப்
பிரசித்தி பெற்றிருக்கின்றன.
❖ மெக்காவில் தொடர்ந்து மக்கள் அலை
மோதுவதற்கு காரணம் அங்கே இருக்கும்
ஞானி (இறைதூதர்) முகமது நபியால்
வெளிப்படுத்தப்பட்ட தெய்வ சக்திதான்
காரணம்.
அங்கு தொடர்ந்து வரும் சக்தியால் தான் மக்கள் பயன்பெற்று, திருப்தி அடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.
❖ வேளாங்கண்ணியில் மக்கள் கூட்டம் அலை
மோதுவதற்கும் அங்கே இருக்கும் ஒரு
தெய்வ சக்திதான் காரணம்.
❖ தெய்வஸ்தலங்களில் நம் வேண்டுதல்கள்
நிறைவேற்றப்படுவதற்கு இரண்டு முக்கிய
காரணங்கள்.
- உங்களின் திறந்த மனதும், பக்தியும்.
- அந்த இடத்தில் இருக்கும் தெய்வ சக்தி. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு இடத்தில் ஆன்மீக உணர்வு, பக்தி உணர்வு ஏற்படும்.
❖ நீங்கள் எந்த இடத்திற்கு எந்தக் கோயிலுக்குச் செல்கிறீர்கள் என்பது முக்கியமில்லை.

❖ உங்களுக்குள் பக்தி உணர்வு
ஏற்படுகிறதா இல்லையா என்பதுதான்
மிக முக்கியமான ஒரு விஷயம்.
❖ கோயில்களுக்குச் சென்று 'பக்தி
உணர்வோடு தெய்வ சந்நிதியில் இருத்தல்'
என்பது வெளியிலிருந்து சக்தியை உங்கள்
உடலுக்கும், மனத்திற்கும் எடுத்துக்
கொடுக்கும் ஒரு எளிய முறை.
(வேண்டுதல்கள் நிறைவேறுவதின்
சூட்சுமம் இதுதான்).
❖ எதைச் செய்தாலும் முழுமையாகச்
செய்யுங்கள். கோயிலுக்குச் சென்றால்
½ மணி நேரமாவது அமைதியாக
உட்கார்ந்திருந்து தியானம் செய்யாமல்
திரும்பாதீர்கள்.
படிப்பு சுமையா? சுவையா?
❖ நன்றாகப் படிக்காதவர்கள், நன்றாகப் படிக்க இயலாதவர்கள்
- என்பது தவறு. படிக்கிற காலத்தில் நன்றாகப் படிக்காமல் விட்டுவிட்டவர்கள் - என்பதுதான் சரி.
❖ உண்மையில் எல்லோரும் நன்றாகப் படிக்கும் திறன் கொண்டவர்கள்தான்.
❖ படிப்பு என்பது இன்றைய வாழ்க்கைக்கும்
இன்றைய உலகத்திற்கும் அவசியமாகிப்போன
ஒரு சுமை.
❖ கல்வியைச் சுமை என்று நான் சொல்வதைக்
கேட்டு, உங்களில் பலருக்கும் ஆச்சரியம்
ஏற்படலாம்.

இந்தச் சுமை சுகமாக மாறத் தவறிய சுமை என்று புரிந்து கொள்ளுங்கள்.
❖ பிறந்தது முதல் பதினான்கு வயது வரையிலான
பகுதி வாழ்வில் சுதந்திரப் பறவையாக
ஆனந்தமாகத் திரியும் காலம்.
❖ இந்த சுதந்திரம் சிறுவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் 'மறுக்கப்படுவதால்' அல்லது 'மறுக்கப்படுவதாக நினைத்துக் கொள்வதால்'
- இழந்து விட்டதாக நினைக்கும் சந்தோஷத்தைப் பிள்ளைகள் 14-21 வயதிற்குள் பூர்த்தி செய்து கொள்ள மனரீதியாக தயாராகிறார்கள். (இந்த தூண்டலுக்குக் காரணம் 14-21 வயதிற்குள் கிடைக்கும் சுதந்திரமும், வாலிபத் துடிப்பும்தான்).
- தங்களின் கவனம் சிதறுவதற்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்து கொண்டால்போதும். படிப்பு தாண்டிய விஷயங்களில் இருக்கும் ஈர்க்கும் மாயை, போலி என்று புரிந்துவிடும்.
- இதைப் புரிந்துகொண்டால் படிப்பின்மீது இருக்கும் வெறுப்பும், மற்ற விஷயங்கள் மேல் இருக்கும் ஈர்ப்பும் குறைய ஆரம்பிக்கும்.
- படிப்பின்மீது ஆர்வம் இயல்பாகவே அதிகரிக்க ஆரம்பிக்கும். படிப்பில் துடிப்பும், துள்ளலும் ஏற்படும். படிப்பு, சுமையாகத் தெரியாது.