KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/காமம், காதல், நட்பு, அன்புSign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

காமம், காதல், நட்பு, அன்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • ஒரு பூவைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்புதான்!
  • ஒரு கலையைப் பார்த்து ரசிப்பதும் ஈர்ப்புதான்!
  • ஒரு மனித உடலைப் பார்த்து ஏற்படுவதும் ஈர்ப்புதான்!
  • ஒருவர் குணத்தைப் பார்த்த உடன் ஏற்படுவதும் ஈர்ப்பு தான்!
  • ஈர்ப்பு + இச்சை = காமம் ஈர்ப்பு + பாசம் = காதல் ஈர்ப்பு + மதிப்பு = நட்பு
  • மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, இச்சை உணர்வு கலக்கும்போது அது காம உணர்வாக மாறுகிறது.

❖ மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, பாச உணர்வு
கலக்கும்போது அது காதல் உணர்வாக
மாறுகிறது.

❖ மனதில் ஏற்படும் ஈர்ப்போடு, மதிப்பும்,
மரியாதையும் கலக்கும் போது அது நட்பு
உணர்வாக மாறுகிறது.

❖ காதலும், அன்பும் பிரார்த்தனையின் இன்னொரு அற்புதமான வடிவங்கள்.

❖ காமம், காதல், நட்பு என்ற மூன்றையும் தாண்டியது அன்பு!

❖ உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போராடிக் காக்க மாட்டார்கள். விட்டுக் கொடுப்பதன் மூலம் தங்கள் தனித்துவத்தைக் காத்து நிற்பார்கள்.

Illustration
படம்

❖ காதல் உணர்வில் நம்மை மறந்து மற்றவர்களைப் போற்றுகிறோம்!

❖ காமத்தில் மற்றவர்களை மறந்து நம்மை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறோம்.

❖ நட்பு மலரும்போது உறவு பூரண
நிலையை அடைகிறது.
அன்பு மலரும்போது மனிதனே பூரண
நிலையை அடைகிறான்.

❖ ஹார்மோன்களின் திடீர், திடீர் மாற்றம்
நிறைந்த வாலிப வயதால் எதைக் காமம்?
எதைக் காதல்? என்று பிரித்தறிவது கடினம்.
காதல் வயப்பட்டது தானாக இருக்கும்
பட்சத்தில் ஈகோ காரணமாக அது புனிதமான
காதல்தான் என்று மனம் அடித்து கூறும்.
வாலிப வயதும் அப்படித்தான் கூறும்.

  • மிக அதிக விழிப்புணர்வும், புத்திசாலித் தனமும் பெற்றிருந்தால் மாத்திரம்தான் காமம் வேறு, காதல் வேறு என்பதைச் சரியாகப் பிரித்துப் பார்க்க முடியும்.
  • சிறந்த காதலன் - நல்ல நண்பன் சிறந்த காதலி - நல்ல தோழி சிறந்த பெற்றோர் - நல்ல நண்பர்கள் சிறந்த சகோதரன் - நல்ல நண்பன் சிறந்த சகோதரி - நல்ல தோழி
  • இப்படி நம்முடைய சிறந்த உறவுகளைக் குறிப்பிடும்போது, அவர்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள் என்று குறிப்பிட நாம் தவறுவதில்லை.
Illustration

❖ எல்லா உறவுகளிலும் நட்பு மலரும்போதுதான் அது ஒரு முழுமைத் தன்மை பெறுகிறது.

❖ காதலிலிருந்து நட்பின் வழியாக அன்பை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பியுங்கள்!

வெட்டிப் பேச்சா? வெட்டும் பேச்சா?

❖ ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்?
என்ன பேச நினைத்திருந்தோம்?
எப்படிப் பேசிக் கொண்டிருக்கிறோம்?

  • என்ற கேள்வியைப் பேசிக் கொண்டிருப்பவர்களிடம் கேட்டால் பலரால் பதில் கூற முடியாது. இப்படி முடியாமல் இருப்பவர்களால்தான் சாதாரணப் பேச்சு வெட்டிப் பேச்சாக மாறுகிறது.

❖ வெட்டிப் பேச்சின் இயல்பே ஒரு
சூழ்நிலையில் அது உறவை வெட்டும்
பேச்சாக மாறும் தன்மை பெற்று
இருப்பதே! - இது கவலைகளுக்கான
காரணங்களில் ஒன்று.

side illustration with person seated and number 283

❖ உரையாடலில் வெட்டிப் பேச்சை அனுமதிப்பது...

❖ 'பிரேக்' இல்லா காரை நகருக்குள் ஓட்ட முயற்சிப்பது போன்றது!

❖ வெட்டிப் பேச்சில் என்ன பேசுகிறோம் என்ற சுயதெளிவு இருக்காது. பேச்சின் போக்கு கட்டுப்பாடற்று மனதின் இஷ்டப்படி தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கும்.

❖ இது பேசுபவர், கேட்பவர் என்ற இருவரையுமே பாதிக்கும்.

❖ 'வெட்டிப் பேச்சில்' அழியும் நேரம்
ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டால்
இந்தியா தானாகவே வல்லரசாக மாறிவிடும்.

❖ அகத்தின் (உணர்வின்)
அழகு முகத்தில் தெரியும்;
மனதின் (எண்ணத்தின்)
அழகு பேச்சில் தெரியும்.

❖ பொழுதுபோக்கு அம்சங்கள்
பொழுதேயே போக்கும்
அம்சங்களாக மாறக்கூடாது.
இது விதியையும் மீறிய சதி.

Illustration
Side banner illustration