KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/பழகப் பழகிக்கொள்ளுங்கள்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

பழகப் பழகிக்கொள்ளுங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ உலகையே நேசிக்கிறவன் என்று
பெருமை பேசுவது வெகு சுலபம்,
உண்மையில் ஒரே ஒருவரை
முழுமையாக நேசிப்பது -
'இமாலய சாதனைக்குச்' சமம்.

❖ மனிதர்களிடம் நீங்கள் பழகும் விதம்
உங்களோடு நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்
என்பதைப் படம் பிடித்துக்காட்டும்.

❖ தன் உடல், மனம், உயிரை முழுமையாக
மதிப்பவனால்தான் பிறரை முழுமையாக
மதிக்க முடியும்.

❖ தன் உடல், மனம், உயிரை அரை குறையாக
மதிப்பவன் பிறரையும் அரை குறையாகத்தான்
மதிப்பான்.

❖ சாதாரணமாகப் பழகுவது என்பது
அசாதாரணமான ஒரு விஷயமாக மாறி
விட்டது, கொடுமையிலும் கொடுமை.

❖ நான்! நான்! எனது! எனது! என்று குறுகிய
வட்டத்தில் வாழும்வரை குதூகலம்
என்பதைக் கற்பனை செய்வதுகூடக்
கடினம்தான்.

❖ இனிமையாகப் பழகப் பழகிக்
கொள்ளுங்கள் உங்களை நீங்களே!
சுமுகமான உறவுகள் சுலபமாகக்
கிட்டிவிடும்.
தான் உண்டு, தன்வேலை உண்டு என்று
இருப்பதற்கு மனிதனாகப் பிறக்க வேண்டிய
அவசியமில்லை. மிருகங்கள் ஏற்கனவே
அப்படித்தானிருக்கின்றன.

Illustration
அன்னை

❖ சுமுகமான மனித உறவுகளை வளர்த்துக் கொள்வது சுக-வாழ்விற்கான சுலபமான வழி.

❖ இயல்பாக இருப்பதுதான் மனித இயல்பு.

❖ சந்தோஷமாகப் பழகுவது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டால் சத்தம் போடும் மனிதர்களைக் கூட சாந்தப்படுத்திவிட முடியும்.

❖ தர்மம் - தனக்கும் மற்றவர்களுக்கும்
ஆனந்தத்தை கொடுக்கக் கூடிய எல்லாச்
செயல்களும் தர்மம்.

❖ அதர்மம் - தனக்கும் மற்றவர்களுக்கும்
கஷ்டத்தைக் கொடுக்கக் கூடிய எல்லா
செயல்களும் அதர்மம்.

நம்பிக்கையை வளப்படுத்துங்கள்

❖ எடுத்த காரியத்தில் நம்பிக்கைவை, உன் நம்பிக்கைக்கு வாழ்க்கைக் கை கொடுக்கும்.

❖ 'என் பெயர் XY/XX
நான் ஒரு மனிதன், மனுஷி
எனக்கென்று ஒரு குடும்பம், தொழில்.
என் வாழ்வின் நோக்கம் இதுதான்.
நான் உடல், மனஅளவில் நன்றாக
இருக்கின்றேன்'.

❖ - சில நம்பிக்கைகளை அச்சாணியாக
வைத்துத்தான் மனிதன் தெளிந்த மன
நிலையில் வாழ்கிறான்.

❖ - சில நம்பிக்கைகளில் ஏற்படும் குளறுபடிகள்தான் மனிதனின் மனதைத்

decoration

குளறுபடியாக்கி பைத்தியம் ஆக்குகின்றன.

❖ - சில நம்பிக்கைகள் முழுவதுமாக மனதை
விட்டு வெளியேறுவதும், உடலை விட்டு
உயிர் பிரிவதும் ஒன்றாய் நிகழும்போது
மனிதன் இறந்து விடுகிறான்.

❖ உன் வாழ்க்கையின் தரம் உன் நம்பிக்கையின் தரத்தைப் பொறுத்தது.

❖ நம்புங்கள்... உங்களை நம்புங்கள்!
எதை நீங்கள் நம்புகிறீர்களோ அதுவாகவே
நீங்கள் மாறுவீர்கள்.

❖ நம்பிக்கைதான் வாழ்க்கை!
நம்பிக்கைதான் பிரச்சினை!
நம்பிக்கைதான் தீர்வு!

❖ மனிதன் காற்றைச் சுவாசிப்பதால் மட்டும்
வாழ்வதில்லை;
நம்பிக்கையையும் சுவாசிப்பால்தான்
வாழ்கிறான்.

❖ சுவாசிக்கும் காற்று மாசடைந்திருந்தால் நம் ஆரோக்கியம் நாசமடைவது உறுதி.

❖ அதேபோல் நம்பிக்கை மாசடைந்திருந்தால் நம் வாழ்க்கை நாசம் அடைவது உறுதி.

❖ 'நான் மோசமானவன்' என்று கூறித் தாழ்வு
மனப்பான்மையில் நோகவைப்பது அவனின்
தவறான நம்பிக்கைதான்.

❖ 'நான் பெரியவன்' என்று நினைக்க வைத்து
உயர்வு மனப்பான்மையால் நோக வைப்பதும்
அவனைப் பற்றிய தவறான நம்பிக்கைதான்.

Portrait of a person seated amidst flowers

❖ ஒருவனின் நம்பிக்கைதான் அவனின் மன,
குண செயல்பாட்டின் அச்சாணி, நம்பிக்கை
என்னும் அச்சாணியில் நெளிவு ஏற்படும்
போதும் வாழ்க்கைச் சுக்கரத்தின் இயக்கம்
பாதிக்கப்படும். மனிதன் தடுமாறுவான்.

❖ நம்பிக்கைச் திடமானால் வாழ்க்கைத்
திடமாகும். நம்பிக்கைச் சரியானதால்
வாழ்வு சரியாகும்.

❖ உங்கள் நம்பிக்கையின் தன்மையைப்
பொறுத்துத்தான் அது வாழ்வா? இல்லை
பிரச்சனையா? இல்லை தீர்வா? என்று முடிவு
செய்யப்படும்.
நம்பிக்கையை வளப்படுத்துங்கள் வாழ்வு
வளமாகும்!

❖ பிறக்கும் முன் எப்படி இருந்தீர்கள்? இறந்த பின் எப்படி இருப்பீர்கள்?

❖ தாயின் கருப்பையில் பலகோடி
செல்களால் ஆன ஒரு கட்டி போன்று
உருவான கரு எப்போது தனி மனித
உயிராக மாறுகிறது? எப்போது அந்த
கருவில் தனி உயிர் நுழைந்தது?

❖ உயிர் என்பது என்ன? அது எப்படி
இருக்கும்? அதை சேகரிக்க முடியுமா?
ஏதேனும் ஒரு நவீன விஞ்ஞான முறையால்
கண்டுபிடிக்க முடியுமா?

❖ இந்த கேள்விக்கு அனுபவப்பூர்வமான பதில் கூற முடிந்தவனால் மாத்திரமே

Illustration

'கர்மா' போன்ற சூட்சுமமான விஷயங்களுக்கு அனுபவ விளக்கம் தர முடியும்.

❖ திருப்தி அடையாத ஆசைகளும்,
முழுமையாக அனுபவிக்கப்படாத
அனுபவங்களும் சேர்ந்ததுதான் கர்மா
அல்லது கர்மவினை
என்றழைக்கப்படுகிறது.

❖ ஆசை - நிராசையால் உந்தப்பட்டு,
நிராசையிலேயே முடிவாதல்தான் மீண்டும்
மீண்டும் ஆசை உருவாகிறது.

❖ ஒவ்வொருவரும் அவர்கள் இறக்கும்போது
அவர்கள் கொண்டிருக்கும் ஆசை,
எண்ணங்கள், கோபங்கள், அனுபவங்களைப்
பொறுத்து அவர்களது அடுத்த பிறவி
நிர்ணயமாகிறது.

❖ மனிதர்கள் தொடர்ந்து விதம், விதவிதமாகப்
பிறவி எடுத்தாலும் முழு திருப்தியை
அடையாவிட்டாலும் அரசனும், ஆண்டியும்
ஒன்றே. இரண்டு வாழ்க்கைக்கும் பெரிய
வித்தியாசம் இல்லை.

❖ உங்கள் ஒவ்வொருவருக்கும் கர்மச் சக்கரத்தை (ஆசை - நிராசை) நிறுத்தி ஆனந்த நிலை அடையும் கலையை மெல்லச் சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் அவதாரங்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள்.

❖ கர்மவினைகள்...
வாழ்க்கையின் போக்கை
தீர்மானிக்கும்,
வாழ்க்கையையே தீர்மானிக்காது.

Maharishi

ஒரே செயல் இரண்டு மிகப் பெரிய நிகழ்வுகள்

❖ மற்றவர்களைத் தொடர்ந்து பாராட்டுவது,

  • சரியான விஷயங்களுக்கு! மற்றவர்களுக்குத் தொடர்ந்து விட்டுக் கொடுத்து வாழ்வது,
  • தேவையான விஷயங்களுக்கு! தொடர்ந்து சந்தோஷமாக இருப்பது, இருக்க முயற்சி செய்வது... தொடர்ந்து மற்றவர்களைச் சந்தோஷமாக இருக்க வைக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்வது...
  • இவை எல்லாமே அகங்காரத்தை அழிக்க ஆரம்பிக்கும்.

மேற்கூறிய விஷயங்களை எப்போதாவது
செய்வது அகங்காரத்தை வளர்க்க
ஆரம்பிக்கும்.

❖ எப்போதாவது மேற்கூறியவற்றைச் செய்வது 99% அந்த தனிப்பட்ட நபரின் சுய லாபத்திற்காக மாத்திரமே இருக்கும். இதனால் நான், எனது, எனக்காக என்ற அக்கறை உணர்வுகள் இன்னும் வேர்விட்டு வளரும்.

❖ காரணமில்லாமல் பலனில்லாமல் எந்த ஒரு
காரியத்திலும், நீங்கள் ஈடுபட அகங்காரம்
உங்களை அனுமதிக்காது.
-மேற்கூறியவற்றைத் தொடர்ந்து செய்ய
ஆரம்பிக்கும்போது... தடுமாற்றமோ,
‘எனக்குத் தேவையில்லை’ என்ற உணர்வோ,
‘என்னால் முடியாது’ என்ற எண்ணமோ தோன்றும்.

A portrait of a person in white seated amongst flowers, inside an oval frame

இது அகங்காரம் இருப்பதற்கான அடையாளம்!

❖ மற்றவர்களின் சுகத்தன்மையை
(சந்தோஷத்தை) அதிகரிக்க நாம் செய்யும்
செயல்கள், நம்முள்ளிருக்கும் அகங்காரத்தை
அழித்து ஆனந்தத்திற்கு நம்மை அழைத்துச்
செல்லும்.

❖ எல்லோரையும் சந்தோஷப்படுத்தி,
நீங்களும் சந்தோஷமான இருந்து,
ஆனந்தத்திற்குள் குதியுங்கள்!

கற்றுக்கொள்ள... கற்றுக்கொள்ளுங்கள்

❖ வாழ்க்கையின் ஒவ்வொரு திடீர் திருப்பங்களும் நீங்கள் கற்றுக்கொண்டே ஆகவேண்டிய பாடங்களை வைத்துக் காத்துக்கொண்டு இருக்கிறது.

❖ வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும்

  • வேதம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொரு உயிரும்
  • குரு வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும்
  • தியானம்

❖ கற்றுக்கொள்ள வேண்டியதைக்
கற்றுக்கொள்ள வேண்டிய நேரத்தில்
கற்றுக்கொள்ளத் தவறியதே நம்
கஷ்டங்களுக்கான காரணகர்த்தா.

❖ வாழ்வின் ஒவ்வொரு சம்பவமும் மிகப்பெரிய
ரகசியங்கள் பொதிந்தது. மனிதர்களுக்கும்,
வாழ்க்கைக்கும் முழுமையாக மதிப்பளிக்க
ஆரம்பிக்கும்போது மாத்திரமே இந்த
உண்மை நமக்குத் தெரியவரும்.

❖ மனிதர்களுக்கும், வாழ்க்கைக்கும்
மதிப்பளிக்கக் கற்றுக்கொள்வதுதான்
கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ளுதல்.

❖ முழுமையாக மதிக்கக் கற்றுக்கொண்ட
பிறகு,
குரு,
வேதம்,
தியானம்,

  • ஆகிய அனைத்தும் உங்களைச் சுற்றியே இருப்பதை உணர்வீர்கள்.

❖ வாழ்வின் ரகசியங்களைக்
கற்றுக்கொள்ளுங்கள்.
உலகையும், உறவுகளையும்
மதிக்க ஆரம்பியுங்கள்.
உண்மைகள் தொடர்ந்து புலப்பட ஆரம்பிக்கும்.

Illustration
இடப்பக்க வடிவமைப்பு