ஒரு தியானிக்கு எது தேவை?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ வெறும் உடலால் மாத்திரம் தியானம்
செய்வது...ஒரு நல்ல உடற்பயிற்சி. அவ்வளவே.
உடலோடு சேர்ந்து மனதையும் தியானத்தில்
ஈடுபடுத்துவது ஒரு நல்ல சடங்கு.
அதற்கு மேல் ஆகாது.
❖ உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும்
முழுமையாக தியான முறையில்
ஈடுபடுத்தினால்தான் அது தியானம்.
❖ ஒரு தியானிக்கு - 'சிரத்தை' ஒரு
பொக்கிஷம். அது ஒரு அடிப்படைத்
தகுதியும்கூட.
❖ சிரத்தையில்லாதவனால் தியானத்தின் சிறந்த பலன்களைப் பெறவே முடியாது.
❖ ஆழ்ந்த சிரத்தையைச்
செய்யும் செயலிலெல்லாம்
கொண்டு வரக் கற்றுக் கொண்டுவிட்டால்,
செய்யும் செயலெல்லாம்
தியானமாகும்.


அறிவு, அதிகாரம், திருப்தி
❖ சாதனைக்குப் பிறகு
சொர்க்க சுகம் அடையலாம்
என்ற கனவு பொய்த்து
நரக வேதனையை
அடைய நேரிடும்போதுதான்
வாழ்வே மாயமாகத் தெரிகிறது.
எல்லாவற்றின் மேலும்
வெறுப்பு வருகிறது.
❖ அறிவு,
அதிகாரம்,
திருப்தி
- இந்த மூன்று துறைகளில் எதுவேண்டும் என்று தேர்வு செய்யுங்கள். சாதிக்க ஆரம்பியுங்கள்.
- நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் பரவாயில்லை - ஆனந்தத்தை அடைய முடியும். திருப்தி பெற முடியும்.
- அறிவின் சிகரத்தை அடைய அதிகாரத்தின் உச்சியைத்தொட் - அதற்கே உரிய உழைப்பைக் கொடுத்தாக வேண்டும்.
- ஆனந்த அனுபவமான திருப்தியில் - அதற்கே உரிய உழைப்பான தியானத்தையும், புரிந்து கொள்ளுதலையும் செய்தே ஆகவேண்டும்.

❖ தியானமும்,
ஞானமும்
கைகூடினால்
நீங்கள் எங்கு இருந்தாலும்,
எந்த சாதனைச் செய்தாலும்
சந்தோஷமாக இருப்பீர்கள்.
ஆனந்தம் பற்றிய சில உண்மைகள்
❖ ஆனந்தம் என்பது பலருக்குத் தெரியாத
ஒன்று. தெரிந்த சிலருக்கு
அது புரியாத ஒன்று.
அனுபவித்து உணர்ந்த வெகு சிலருக்கு
அது விளக்க முடியாத ஒன்று.
❖ ஆனந்தத்தை அனுபவிக்கலாம். அதையும் தாண்டி...
❖ ‘ஆனந்தம் இங்கேதான் இருக்கிறது;
ஆனந்தத்தை இப்படிக் கூட அடையலாம்,
இதுதான் ஆனந்தம்’
என்று சுட்டிக் காட்ட முடியும்.
ஆனால் ஆனந்தத்தை விளக்க முடியாது.
❖ எல்லா ஞானிகளின்...
ஞான உபதேசங்களும்,
தியான முறைகளும்
அந்த ஆனந்தக் கடலை
காட்டத்தான்.
❖ தனி மனிதன் தன் தனி வாழ்வில்
தனக்குள்ளேயே ஆழ்ந்து கண்டுபிடிக்க
வேண்டிய ஒன்றுதான் இந்த ஆனந்தம்.
அங்கீகாரத்தை வெளியே தேடாதீர்கள்
❖ அங்கீகார உணர்வு உற்சாக மனதின் அங்கஹீனம்
❖ உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்
உற்சாகமான மனிதனுக்கு வெளி
அங்கீகாரம் தேவையில்லை.
அங்கீகாரத்தை வெளியில் எதிர்பார்த்துக்
கொண்டிருப்பவனால் உற்சாகமாக
இருக்க முடியாது.
❖ நீங்கள் நல்லவர்? நீங்கள் அருமையானவர்?
சில குறைகள் இருந்தாலும் சீக்கிரம்
மாற்றிக்கொள்ளும் பக்குவம் பெற்றவர்
நீங்கள் என்பது போன்ற அங்கீகாரங்களை
மற்றவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.

❖ நம்மை நாம் அங்கீகரித்துக் கொள்ள
முடியாமைதான் - மற்றவர்களின்
அங்கீகாரத்திற்காக நம்மை ஏங்க வைக்கும்.
❖ நாம் யார், எப்படிப்பட்டவர்கள் என்று நாம் நினைப்பதைவிட மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதற்குத்தான் அதிக மரியாதை கொடுக்கிறோம். இது உங்களை நீங்களே அவமரியாதை செய்வதற்குச் சமம்.
❖ உங்களை நீங்களே அங்கீகரிக்க ஆரம்பியுங்கள். பிரச்சினை தீர்ந்தது.
கனவு! கற்பனை! நிஜம்!
❖ வாழ்க்கையை பற்றிய நமது கற்பனைக்கும்,
நிஜ வாழ்க்கைக்கும் இடைப்பட்ட
பொருத்தமின்மையே வாழ்க்கையை
வருத்தமாக்குகிறது.
❖ கற்பனை என்ற மனத்திரைப்படத்தை வாழ்க்கையில் நிஜமாக்க முயற்சி செய்யாமல், வெறும் மனத்திரைப் படத்தையே விதம், விதமாகப் பார்த்து சிறு சிறு கிளர்ச்சி அடைபவர்கள்தான் - உயிர்ச் சக்தியை வீணடிக்கும் 'மகா பாவிகள்'.
❖ எதிர்காலத்தில் ஒருவன் எப்படி வாழ
வேண்டும்? எப்படிப்பட்ட மனைவி வாழ்க்கை,
குடும்பம் அமைய வேண்டும்? என்னென்ன
சொத்து, சுகம், சௌகரியம் வேண்டும்?
என்று எதிர்கால தேவைக்குத் தகுந்தபடி
தன்னை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக,
இறைவனால் மனிதனுக்குப் பரிசாகத் தரப்பட்ட
‘மனதின் ஒரு செயல்பாடு’தான் கற்பனை.
❖ கற்பனைகளை...
நிஜமாக்க முயல்பவனுக்கு,
கற்பனை ஒரு உந்து சக்தி.
கற்பனைகளை...
நிஜமாக்காமல்,
கற்பனை மேல் கற்பனை செய்து
வாழ்வை வீணடிப்பவனுக்குக் கற்பனை
ஒரு மந்த சக்தி.
❖ எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் கற்பனை ஓர் அற்புதம்!
நிகழ் காலத்தை வீணடிக்கத் துணைபோகும் கற்பனை அற்பம்!
❖ கற்பனை அற்புதமா? அற்பமா?
- என்பது கற்பனைகளை நீங்கள் நிஜமாக்குவதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.
❖ கற்பனைச் சக்தி - நீங்கள் உங்களின்
காரியங்களை திட்டமிட்டு சரியாக
முடிப்பதற்காகக் கடவுளால் வழங்கப்
பட்ட ஓர் அற்புதம்.
❖ கற்பனைகள் நிஜமாக்குவதற்காக என்றால்
கற்பனை செய்யுங்கள்.
நிச்சயமாக கற்பனை சரியே!


அறிவு அனுபவம் அனுபூதி
❖ அறிவு :
ஒவ்வொரு நெருப்பைத் தொட்ட பிறகு,
அது சுடும்! என்று அறிந்து கொள்வது அறிவு.
❖ அனுபவம் : ஒரே ஒரு முறை தீயைத் தொட்டு, அது சுடுகிறது என்று தெரிந்தவுடன், எல்லாத் தீயும் சுடும் என்று தெரிந்து கொள்வது அனுபவம்.
❖ அனுபூதி :
ஒருவர் தீயை தீண்டியதும் வேதனைப்
படுவதிலிருந்தே 'தீ சுடும்' என்ற உண்மையை
கிரகித்துக் கொள்வது அனுபூதி.
❖ வாழ்வின் ஒவ்வொரு துன்பதுக்கத்திலும்
விழுந்து விழுந்து எழுந்து வாழ்க்கைப்
பாடம் கற்றுக் கொள்வது அறிவு.
- அறிவாளி செய்வது!
❖ நம் வாழ்வின் ஓரிரு துன்பதுக்கங்களை
முழுமையாக எதிர்கொள்வதின் மூலமாக
வாழ்க்கையைப் புரிந்துகொள்வது அனுபவம்.
- புத்திசாலி செய்வது!
❖ உலகில் நம் கண்ணெதிரே மனிதர்கள் படும்
துன்பங்களைப் புத்திசாலித்தனமாக
கவனித்துப் பார்ப்பதினாலேயே
வாழ்க்கையை முழுமையாகப்
புரிந்துகொள்வது அனுபூதி.
- ஆன்மீகவாதி செய்வது!
❖ நீங்கள்...
அறிவாளியா?
புத்திசாலியா?
ஆன்மீகவாதியா?
எங்கே இருக்கிறார் கடவுள்?
❖ இறைவன் எங்கும் நிறைந்திருக்கின்றான்
என்றால், அவன் இல்லாத இடம் என்று
ஒரு இடம், ஏன் ஒரு அணுகூட இருக்க
முடியாது.
❖ இறைவன் சக்தி வடிவமானவன், இறைவன்
உருவமற்றவன் என்பது ஆன்மீகத்தின்
அடிப்படை உண்மை.
இறைவன் ஒரு தனி ஆளாக இருக்க முடியாது.
இறை சக்திக்கு உருவம் கொடுப்பது மதங்கள்
தான் - இது ஒரு நல்ல துவக்கம். முடிவு
அல்ல.
❖ இறைவன், சக்தி வடிவில் இருக்கிறான் என்பதற்கு என்ன ஆதாரம்?
இதற்குப் குவாண்டம் பிசிக்ஸ் (Quantum Physics) அருமையான விளக்கம் சொல்கிறது. ஒவ்வொரு அணுவிற்குள்ளும் 99.99 சதவிகிதம் வெற்றிடம்தான் இருக்கிறது. அந்த வெற்றிடத்தில் தொடர்ந்து அதிர்வுகள் இருந்துகொண்டே இருக்கின்றன. அந்த அதிர்வுகள்தான் சக்தியாக வெளிப்படுகின்றன.
❖ ஒவ்வொரு அணுவும் ஒரு சக்தி மயம்.
ஒவ்வொரு பொருளும் சக்தி மயம்.
இன்றைய விஞ்ஞானம் 'அனைத்தும் சக்தியால்
நிறைந்திருக்கிறது' என்று கூறுகிறது.
❖ இதைத்தான் இறைவன் சக்தி வடிவானவன்
என்றும், 'அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்த' என்றும் சொன்னார்கள் நம்முடைய
ஞானிகள்.
- இது மெய்ஞானம்.
❖ சக்தி அழிவில்லாதது; ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறும்.
❖ பேட்டரியில் சேமிக்கப்பட்ட மின்சாரம், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மறைந்துவிடும். அதன் பிறகு இரும்புப் பட்டை, கார்பன் துண்டுகளில் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரித்து வேறு ஒரு பொருளாகவோ, அல்லது பேட்டரியாகவோ மாறிவிடும்.
❖ அது போலத்தான் மனித உயிர், கருவான பின் ஒரு குறிப்பிட்ட காலம்வரை மனிதனாக இருந்துவிட்டு, பின்பு காற்றில் கலந்துவிடுகிறது.
❖ காற்றில் கலந்த உயிர் மீண்டும் மனிதனாக
உயிர் பெறுகிறது. இப்படி சக்தி மாறி,
மாறித் தோன்றிக்கொண்டே இருக்கிறது.
❖ பிரபஞ்ச இயக்கத்தில், பிரபஞ்ச கால
அட்டவணையில் மனிதத் தோற்றம் ஒரு
கணநேர நீர்க்குமிழி போன்றது.
❖ 'இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்' என்று ஞானிகள் சொன்னது இதைத்தான்.
❖ மனிதனிலும், தூணிலும், துரும்பிலும் அடிப்படையாக இருப்பது சக்தியே.
❖ சக்தியே எங்கும் நிறைந்திருக்கிறது. அந்தச் சக்திதான் இறைவன்.
❖ ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறி
உருவெடுத்தாலும் சக்தி எப்போதும்
நிலைத்திருக்கிறது.
❖ நமது உடல்கூட நமது உயிர்ச் சக்தியின்
ஒரு போர்வை மட்டுமே.
கடவுள்
ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறான்.
ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறான்.
ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை?
❖ மிருகங்களுக்குப் பொறுத்துக் கொள்வது
எப்படி? என்பது தெரியாது.
பொறுத்துக் கொள்வது என்பது மனிதாகப்
பிறந்த ஒவ்வொருவரும் பெற்றிருக்க
வேண்டிய பண்பு.
❖ மனிதனின் மனவளர்ச்சியின் ஆரம்பப்
படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்த
பொறுத்துக் கொள்ளும் தன்மை (Tolerance).
❖ பொறுத்துக் கொள்ள முடியாமல் போவது மனிதனின் பண்பு அல்ல. (மனம் என்ற ஒன்றை ஆறாவது அறிவாகப் பெற்றதால்தான் மனிதன் ஐந்தறிவு கொண்ட மிருகத்திலிருந்து மாறி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்).
மன வளர்ச்சி சரியான முறையில் இல்லை
என்பதற்கான அடையாளம்தான்
பொறுத்துக்கொள்ள முடியாமை.
❖ மனிதன் தன் பொறுத்துக்கொள்ளும்
தன்மையை இழக்கும் ஒவ்வொரு
நிமிடமும் மிருகமாகிறான்.
❖ பொறுத்துக்கொள்ளும் தன்மை என்பது ஒரு
தனிப்பட்ட மனிதனின் புரிந்துக்கொள்ளும்
தன்மையைப் பொறுத்தது.
❖ நான் பொறுத்துக் கொள்ளும் தன்மை என்று குறிப்பிடுவது...யார் எது செய்தாலும் அதற்கு எந்தவித பதில் உணர்வும் காட்டாமல் தன் உணர்வுகளை அடக்கிக் கொள்வது - என்று தயவு செய்து மாற்றிப்புரிந்து கொண்டு விடாதீர்கள்.
❖ பொறுத்துக் கொள்ளும் தன்மை என்பது
உணர்ச்சிகளை அடக்குவது அல்ல.
அது உணர்ச்சிப் பக்குவ நிலை.
❖ ஒவ்வொரு முறையும் வெளியில் நடக்கும் காரியங்களைப் பார்த்து பொறுத்துக்கொள்ள முடியாமல் உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழும்போது ஏன் இப்படி தத்தளிக்கிறேன்? ஏன்? ஏன்? ஏன்? இப்படி என்று உள்முகமாக திரும்பிப் பார்க்க ஆரம்பியுங்கள்.
❖ ஏன்?... ஏன்?... ஏன்?... என்று கேட்பதோடு நின்று விடாமல் - ஏன் இப்படி நீங்கள் பொறுமையை இழக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள ஆரம்பித்ததால், வெளியில் நடக்கும் எரிச்சலூட்டும் காரியங்களின் காரண விளக்கம் புரிய ஆரம்பிக்கும்.


❖ உங்களின் உள்ளுக்குள் நடக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைய ஆரம்பிக்கும்.
❖ பொறுத்துக் கொள்ளும் தன்மையின் மகிமை புரியப்புரிய Tolerance அதிகமாக ஆரம்பிக்கும். புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்!
தெளிவற்றத் தெளிவு
❖ நலிவடைந்த மனதைப் பெற்றவன் வாழ்வின்
எதிர்பாராத திடீர், திடீர் திருப்பங்களில்
புகுந்து வெளிவருவது கடினம்.
நலிவடைந்த மனதுதான் தெளிவற்றத் தெளிவு.
❖ வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளில் புகுந்து வெளிவர ஒவ்வொருவருக்கும் தெளிவு என்பது மிக அத்தியாவசியமான தேவைகளில் ஒன்று.
❖ தெளிவு மலிவானதல்ல - ஒரு சில
புத்தகங்களைப் படித்தவுடன்
கிடைப்பதற்கு!
பல தனி மனித அனுபவங்களின்
தொகுப்புதான் தெளிவை உண்டு
பண்ணும்.

❖ கஷ்டத்திற்கு தீர்வு
- கஷ்டப்படுவதல்ல. துக்கத்திற்கு தீர்வு
- துக்கப்படுவதல்ல.
❖ தெளிவாக இருப்பதாக நாம் எல்லோரும்
நம்பினாலும், நிஜத்தில் தெளிவு என்பது
சிறுவயதிலிருந்து பல ஏமாற்றங்களால்
கலப்படமாகி விட்ட ‘தெளிவற்ற தெளிவாகத்
தான்’ இருக்கிறது.
❖ தெளிவற்ற நிலையிலிருந்து -
தெளிவது சுலபம்!
தெளிவற்ற தெளிவிலிருந்து -
தெளிவது கடினம்!
❖ புத்திசாலித்தனம் எறும்பளவு, கடுகளவு இருப்பதால்தான் வாழ்க்கையில் நாம்
தொடர்ந்து கஷ்டங்களையும்,
துக்கங்களையும், ஏமாற்றங்களையும்
சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
❖ எறும்பளவு இருக்கும் புத்திசாலித்தனம்
பெரிதாகப் பெரிதாக பல உண்மைகள்
தெளிவாகப் புரிய ஆரம்பிக்கும்.
❖ கஷ்டங்களும், ஏமாற்றங்களும் வாழ்க்கைப்
பாதையில் இருக்கும் சாதாரணக் கற்கள்
என்பது புரியும். இதழ் இதழாகத் தெளிவு
உங்களுக்குள் மலர ஆரம்பிக்கும்.

