எது பூஜை? எது தியானம்?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ கடமைக்காகச் செய்யும் பூஜைகளால்
எந்த ஒரு பலனும் கிடைக்கப்
போவதில்லை.
பக்தியில்லாத பூஜை
உணவில்லாத இலைக்குச் சமம்.
❖ பக்தியோடும்,
சிரத்தையோடும்,
செய்யும் பூஜை,
வெறும் பூஜையோ சடங்கோ அல்ல.
அது இறைசக்தியோடு நேரடித் தொடர்புக்கு
உதவும் தியானத்திற்குச் சமம்.
❖ சிரத்தையோ, முழு ஈடுபாடோ
இல்லாமல் செய்யும் தியானம்கூட
வெறும் சடங்கே.
சிரத்தையோடும்,
முழு ஈடுபாட்டோடும்
செய்யும் சடங்குகூட தியானம்தான்.
❖ ஏகப்பட்ட ஞானிகளையும்,
கோயில்களையும் கொண்ட
புண்ணிய பூமி இந்தியா.
இந்தப் புண்ணிய பூமியில் பிறப்பதற்கே
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
இந்தப் புண்ணிய பூமியில் இருக்கும்
கோயில்களுக்குச் செல்வதும்,
வெகுநேரம் நின்று தரிசிப்பதும்,
பூஜிப்பதும் ஒருவகையான தியான முறைதான்...
உங்களிடம் சிரத்தை மிகுந்தால்!
தியானம் புதிரானதா?
❖ தியானம் செய்வது எப்படி? -மேலுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள இன்று பலர் ஆர்வமாக இருக்கிறார்கள்.
❖ காரணம், இவர்கள் தியானத்தில் அமர்ந்தால்
சாதாரண நேரங்களில்
வரும் எண்ணங்களைவிட
அதிகமான எண்ணங்கள்
வருவதுபோலவே தோன்றுவதுதான்.
அப்படித் தோன்றக் காரணம்,
அப்போதுதான் தங்கள் வாழ்வில்
முதல்முறையாக தங்களினுள்
தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்
மனக் குதிரையை நேருக்குநேர்
சந்திக்கிறார்கள்.
❖ 'இயல்பாகவே இருக்கிறேன்'
என்றெண்ணிக் கொண்டிருந்தவர்களின்
உள்ளே இருக்கும்
'இயல்பற்ற தன்மைதான்'
தியானத்தில் அமரும்போதுதான்
ஒருவருக்குத் தெரியவரும்.
