புத்திசாலித்தனம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ வெற்றி - தோல்வி!
சாதனை - சோதனை!
கொண்டாட்டம் - திண்டாட்டம்
- ஆகியவை ஒருவருடைய புத்திசாலித்தனத்தின் அளவைப் பொறுத்து அவருடைய வாழ்வை ஆட்டிப்படைக்கும் அம்சங்கள்.
❖ புத்திசாலித்தனம் அதிகம் பெற்றிருப்பவரிடம் பணம், பதவி, புகழ், இன்பம் ஆகியவை கட்டுப்பட்டுக் கிடக்கும்.
❖ தன்னைப் புத்திசாலி என நினைத்துக் கொண்டிருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள். புத்திசாலி தொடர்ந்து வாழ்விலிருந்து கற்றுக்கொண்டேயிருப்பான்.
❖ வாழ்வின் எந்தெந்த அம்சங்களில் நம்முடைய புத்திசாலித்தனம் பெருகவில்லையோ, அந்தந்த அம்சங்களுக்குதான் நாம் அடிமையாக இருப்போம். புத்திசாலிதனம் பெருகப் பெருக அனைத்தையும் நம் விருப்பப்படி கட்டுப்படுத்தும் அதிபதியாகி விடுவோம்.
❖ மகாராஜா போல்...
மகாராணி போல்...
வாழ வேண்டுமா?
புத்திசாலித்தனம் உங்களினுள் பெருக வழி
செய்யுங்கள்.

எல்லாவற்றிற்குமான ஓர் தீர்வு
❖ புரிந்து கொள்ளுதலே ஞானம்.
❖ வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றி மனதில்
உருவாக்கி வைத்திருக்கும் தவறான புரிந்து
கொள்ளுதல்களில்தான் மனிதன் சிக்கித்
தவிக்கிறான்.
❖ தவறான புரிந்துகொள்ளுதல்கள் மனதில் உருவாகும் புதைகுழிகள்.
❖ தவிர்க்க முடியாதது - உடலின் மரணம். ஜெயிக்க வேண்டியது - மனதின் மரணம். சரி செய்யப்பட வேண்டியது - உயிரின் மரணம். உடல், மனம், உயிர் என்ற மூன்றையும் ஆட்டிப் படைக்கும் அகங்காரம் மட்டும் மரணித்துப் போனால் எல்லாம் சரியாகிவிடும்.
- அகங்காரத்தை அழிக்கும் மருந்து ‘புரிந்துகொள்ளுதல்’
- மனிதனின் எல்லாக் கேள்விகளுக்கும், எல்லாச் சந்தேகங்களுக்கும் ஒரே ஒரு வார்த்தையில் தீர்வளிக்க வேண்டுமானால் அது ‘புரிந்துகொள்’ என்பதே!

