KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/மனமென்னும் வேலைக்காரன்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

மனமென்னும் வேலைக்காரன்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ மனிதன் மனிதனாகவே வாழ்வதற்காக
இறைவனால் பரிசாக அளிக்கப்பட்ட ஒரு
கட்டுப்பாட்டு அமைப்பே மனம்.

❖ மனிதன் என்ற எஜமானன் ஆனந்தமாக
வாழ, அவன் தேவைகளையும்,
விருப்பங்களையும்
பூர்த்தி செய்துகொள்ள உதவும் ஒரு
வேலையாள்தான் மனம்.

❖ மனிதனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்து
மனம் மனிதனைக் கட்டுப்படுத்தும்
அமைப்பாக மாறிவிட்டதுதான் எல்லாப்
பிரச்சினைகளுக்கும் காரணம்.

❖ எஜமானன் அசந்த நேரத்தில், வேலைக்காரன்
எஜமானன் போலச் செயல்பட்டால் அந்தச்
சூழ்நிலை எப்படியிருக்கும்?

❖ பக்குவப்படாத வேலைக்காரன் எஜமானாக மாறுவது குரங்கைப் பிடித்துச் சிம்மாசனத்தில் உட்கார வைத்தது போல் இருக்கும். அதனால்தான் ஞானிகள் எல்லோரும் மனதை குரங்கோடு ஒப்பிட்டுக் 'குரங்கு மனம்' என்று அழைக்கிறார்கள். சிம்மாசனத்திலிருந்து குரங்கு அகற்றப்படாதவரை பிரச்சினைகள், கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும்.

❖ மனம் பல பிரச்சினைகளைப் பல போலிகளை
உருவாக்கிக் காண்பிக்கும் தன்மை கொண்டது.
அவற்றில் ஒன்றுதான் மாயை!

❖ மாயை என்பது இல்லாத ஒன்றை இருப்பது
போலக் காண்பிப்பது. இல்லாத ஒன்றை
இருப்பதுபோல நினைத்து அதனால் அதிகம்
பயப்படுவது அல்லது அதற்காக அதிகம்
ஆசைப்படுவது இரண்டுமே மாயையின்
வெளிப்பாடுகள்.

❖ மனமே மாயை! மனதின் மாயை பேயைவிட விசித்திரமானது!

❖ நிஜத்தில் இந்தப் பதவி, பணம், பொருள் எல்லாம் நீர்க்குமிழி போல சில காலம் மட்டுமே உங்களிடம் இருக்கக் கூடியவை.

❖ இந்த உண்மையைப் புரிந்துகொண்டு
செயல்பட்டால்...
மனதை நீங்கள் கட்டுப்படுத்துவீர்கள்
மனம் உங்களை கட்டுப்படுத்தாது!