நியாயமில்லாத கொள்கை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ பற்றுதல் கண்ணை மறைக்கும்.
நல்லவர்களைக் கெட்டவர்களாகக் காட்டும்.
ஏன்!
கேடு செய்பவர்களைக்கூட நல்லவர்களாகக்
காட்டும்.
❖ நியாயம் அநியாயம் பற்றிய
நியாயமற்ற மனஅமைப்பு பெற்றிருந்தால்...
நியாயமான உலக வாழ்வில் அனுபவிக்க
வேண்டிய சந்தோஷங்களை அநியாயமாக
இழந்து விடுவீர்கள்.
யோசித்து கொள்ளுங்கள்.
தனக்கொரு சட்டம்,
ஊருக்கொரு சட்டம் என்று வாழ்ந்தால்...
கன்றாவியை கண்ணில் ஒற்றிக் கொள்ள
வேண்டி இருக்கும்.
221

கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டியதை கன்ராவி என்று ஒதுக்கி, இழக்க நேரிடும்.
❖ பற்று இருக்கும் அளவைப் பொறுத்து
உலகமும், மனிதர்களும் பிளவுபட்டுத்
தெரிவார்கள். வாழ்க்கையை முழுமையாக
அதன் எல்லா பரிமாணங்களிலும் வாழ
முடியாத தவிப்பு ஏற்படும்.
❖ நியாயம், அநியாயம் பற்றிய
உங்கள் அபிப்ராயங்களை
ஆராய்ந்து பாருங்கள்.
அநியாயமாக 'நியாயம், அநியாயம்' பற்றி
வைத்திருக்கும் நியாயமில்லாத
கொள்கைகளைத் தூக்கி எறியுங்கள்.
உங்கள் கண்களை மறைத்துக்
கொண்டிருந்தது அகன்று விடும்.
கவலையின் விதை ஆசை
❖ உங்கள் கவலையின் அளவு உங்கள் ஆசையின் அளவே.
❖ எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு
கவலைகள்? என்று தெரிந்து கொள்ள
விரும்புபவர்கள் மட்டும் தெரிந்து
கொள்ளுங்கள்...
❖ உங்கள் கவலைகளுக்குக் காரணம் உங்கள் ஆசைகளே!
❖ ஆசைகள் குறைந்தால், கவலைகளும் குறைந்து விடும்.
❖ உங்கள் கவலைகளை...
உங்கள் ஆசைகள் மூலம் நீங்கள்தான்
தேர்வு செய்கிறீர்கள்.


❖ என் கவலைக்கு நான்தான் பொறுப்பு என்று
உணர்ந்தால், ஆசை சரி. ஆசைப்படுங்கள்
தவறில்லை.
இந்த உண்மையை முழுமையாகப் புரிந்து
கொண்டாலே போதும், நிம்மதியான
வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்து
விடலாம்.
எங்கே நிம்மதி? (கேள்வியல்ல - வேள்வி)
❖ பாதுகாப்பின்மையை (Insecurity)
எதிர்த்தே வாழப் பழகியதின் பக்க
விளைவாக மனிதனைத் தொற்றிக்
கொண்ட குணம்தான் 'பற்றுதல்'.
❖ நிஜப்பற்று நிம்மதியையும்,
சந்தோஷத்தையும் தரும்.
மனப்பற்று நிம்மதியையும்,
சந்தோஷத்தையும் திருடும்.
❖ மனிதர்களை உறவு என்ற பெயரில் உடைமையாக்க முயற்சிப்பது
- மனப் பற்று.
❖ மனிதர்களை உறவு என்ற வாய்ப்பால் உயர்த்தித் தன்னுயிர் போலப் பாவிப்பது
- நிஜப்பற்று மனப்பற்று, நிஜப்பற்று என்ற இரண்டையும் தாண்டியது பற்றற்ற நிலை. பற்றற்ற நிலையில்தான் தன்னுள்ளும். தன்னைச் சுற்றி இருப்பவர்களின் உள்ளும், தெய்வம் இருப்பதைப் பார்க்க முடியும். உண்மையான நிம்தி அடைய முடியும்
❖ நிஜப்பற்று:
உண்மையான ஈடுபாட்டோடு,
உங்களுடைய பொருள்களை முழுமையாக
அனுபவிப்பது,
சொந்தங்கள் மற்றும் நண்பர்களை
முழுமையாகப் புரிந்து கொண்டு
அவர்களோடு இனிமையான அன்பும்,
உறவும் கொண்டிருப்பது,
- என தன் வாழ்வை முழுமையாக வாழ்வதுதான் நிஜப்பற்று.
❖ மனப்பற்று;
உண்மையான ஈடுபாடில்லாமல்,
பெருமைக்காக, புகழுக்காக ஆடம்பரமாக
உங்களுடைய பொருள்களை
விரையம் செய்வது,
பொறுமையின்மையால், வெறுப்பால்,
சலிப்பால், கர்வத்தால் உங்களுடைய
சொந்தங்களையும், நண்பர்களையும்
முழுமையாகப் புரிந்து கொள்ளாமல்
கடமைக்காக வாழ்வதுதான் மனப் பற்று.
இது மனநிம்மதியைக் குலைத்து விடும்.
உங்கள் நிம்மதியைக் குலைப்பது உங்கள்
பற்றுதல்தான்.
மன அறுவைச் சிகிச்சை
❖ பெரும்பாலானோர் அவர்களிடம்
மிகப் பெரும் குறைகளையும்,
தவறுகளையும், உணர்ச்சிக்
கட்டுபாடின்மையையும்,
பொய்மையையும் வைத்துக் கொண்டு,
அடுத்தவர்களைக் கைகாட்டியே
வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.
❖ எனக்கு மட்டும் நல்ல தாய் தந்தை
அமைந்திருந்தால்...
இல்லை,
நல்ல மனைவி அமைந்திருந்தால்...
நல்ல பிள்ளைகள் பிறந்திருந்தால்...
நல்ல நண்பர்கள் கிடைத்திருந்தால்...
நல்ல வேலை, முதலாளி கிடைத்திருந்தால்,
- என்று அடுத்தவர்கள் மீது பழியைப் போட்டு நமது குறைகளை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறோம்.
❖ உங்கள் குறைகள்
உங்கள் மனதில் இருக்கும் கட்டிகள்.
உங்கள் குறையை ஒத்துக் கொள்வது
மனதில் இருக்கும் கட்டியை
அறுவை சிகிச்சை செய்வதற்குச் சமம்.
❖ குறைகளை ஒத்துக் கொள்வது
கொஞ்சம் கடினம்தான்.
அறுவை சிகிச்சை வலிக்கத்தான் செய்யும்.
ஆனால் வேறு வழி இல்லை.

❖ உங்களின் பதவி, அந்தஸ்து, பெயர்,
புகழ், அதிகாரம் போன்றவற்றால்
தங்கக் கவசங்களைச் செய்து (கட்டி
வெளியே தெரியாமல்) உங்கள்
குறைகள் வெளியே தெரியாமல்
பார்த்துக் கொள்ளலாம்.
இதனால் என்ன பயன்?
கட்டி இன்னும் கொஞ்சம்
சீழ் பிடிக்கும்.
உங்கள் குறைகள் இன்னும்
கொஞ்சம் மோசமாகும்.
❖ உங்களின் மனநிலையைப்
பொறுத்துதான்
உங்கள் உடல் ஆரோக்கியம் அமையும்.
- மனதின் குறைகள் நாளுக்கு நாள் சீழ் கோர்த்துக் கொண்டே சென்றால், உடலும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டேதான் இருக்கும்.
- மனதில் அறுவை சிகிச்சை நிகழ்ந்தால் எல்லாம் சரியாகிவிடும்.
- அறுவை சிகிச்சை நிகழ... 1. மனக் கட்டிகள் கண்டறியப்பட வேண்டும். 2. அவற்றை வெட்டி எறிய தைரியம் வேண்டும். 3. அவை வேரோடு வெட்டி எறியப்படவேண்டும்.
- நீங்கள் தயாரா?
