எது பக்தி?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ பக்தி!
சக்தி!
முக்தி!
- இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று சூட்சுமமான தொடர்புடையவை.
❖ பக்தியின் பூரணம் சக்தியின்
வெளிப்பாடு. சக்தியின் பூரணம்
முக்தியின் வெளிப்பாடு.
❖ உங்களின் 'பக்தி' உணர்வின் அளவைப் பொறுத்தே, நீங்கள் 'சக்தி' யைக் கிரகிக்கும் அளவு நிர்ணயிக்கப்படும்.
❖ பக்தி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கும், உண்மையான பக்திக்கும் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதே இல்லை.
❖ ‘எனக்கு அது/இது வேண்டும்...
என்னைக் காப்பாற்று!
எனக்கு அதைக் கொடுத்தால்...’
- என்ற ரீதியில் பிரார்த்தனையும், பக்தியும் இருந்தால், அது ‘பக்தி’ என்று நினைத்துக் கொண்டு இறைவனிடம் நாம் நடத்தும் ‘பேரம் பேசுதல் அல்லது வியாபாரம்’.
❖ ‘நன்றி! நன்றி! நன்றி!
இதை கொடுத்தாயே நன்றி!
இந்த நிமிடம் உயிரோடிருக்கிறேனே!
நன்றி!
நீ செய்ததற்கும், செய்யப் போவதற்கும்
நன்றி!...’
- என்று ‘பக்தியுணர்வு’ நன்றி உணர்வாக பொங்க! பொங்க! இந்த நொடி நான் நன்றாக சுவாசிக்கக் காரணமான இறை


சக்தியை, உள்ளத்தின் ஆழத்திலிருந்து
போற்றினால்,
துதித்தால்,
தொழுதால் - அதுதான் பக்தி.
❖ பக்தி
சக்தியின்
திறவுகோல்!
❖ சக்தி
முக்தியின்
நுழைவாயில்!
போலி நம்பிக்கை என்றால் என்ன?
❖ இந்த நூற்றாண்டில் அதிகமாகியிருக்கும் பிரச்சினை ‘போலி நம்பிக்கை’ (Pseudo Belief
- self cheating in mature). இது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும்.
❖ போலி நம்பிக்கை உங்கள் மனதிற்குள் நுழைந்து விட்ட HIV வைரஸ் (HIV - Happiness Insufficiency Virus). போலி நம்பிக்கை நிம்மதியைக் கெடுத்து, சந்தோஷத்தைக் குறைக்கும்.
❖ தான் முட்டாள் என்ற உண்மையைக்
கடைசிவரை முட்டாளுக்குத் தெரிய விடாமல்
மறைத்து விடும் - மனதின் மாயத் திரைதான்
போலி நம்பிக்கை.
❖ நம்மில் பலரும், இளம் வயதில் இயலாமை, சூழ்நிலை காரணமாகச் சிறுசிறு தோல்விகளை, ஏன் பெரிய தோல்வியைக்கூட சந்தித்திருக்கலாம். அந்தத் தோல்விகள் முடிவுகள் அல்ல.
❖ அந்த அசம்பாவிதமான தோல்விகள்
உங்களையும் அறியாமல் உங்கள் மனதில்
ஆழப் பதிந்துவிடும்.
❖ முதல் முறையாகப் பங்கு கொண்ட மேடைப் பேச்சில் ஒருவர் சரியாகப் பேசவில்லை என்றவுடன், தனக்குப் பேச்சுத் திறமையே இல்லை என்று நம்ப ஆரம்பித்துவிடுவார்.
❖ அந்த நம்பிக்கை பிற்காலத்தில் மேடைப்
பேச்சு பேசவே முடியாது என்ற இயலாமையாக
மாறிவிடும்.
- ஆனால், ஒவ்வொருவருக்குள்ளும் நன்றாக மேடையில் பேசுவதற்கான எல்லாவித திறமையும் இருக்கும். இது உண்மை.
- இந்த உண்மை தெரியாமலேயே போய் விடும். தற்செயலாகத் தெரிந்தால்கூட இப்படிப்பட்டவர்களால் நம்ப முடியாது. காரணம் அவர்களின் போலி நம்பிக்கை!
- ‘என்னால் இவ்வளவுதான் படிக்க முடியும். இதற்கு மேல் முடியாது’. ‘என்னால் இவ்வளவுதான் உழைக்க முடியும். இதற்கு மேல் முடியாது’. என்று தங்கள் குணம், திறமை, வாழ்க்கை முறை, மற்றவருடன் பழகும்முறை என்று எல்லாவற்றிலும் ஒரு வேலி, ஒரு கோடு போட ஆரம்பித்துவிட்டார்கள்.
❖ வயது அதிகமான பின்பு சாதிப்பதற்கான சக்தியும், சாத்தியக் கூறுகளும் இருந்தாலும் அவர்களுடைய போலி நம்பிக்கை அவர்களைத் தடுத்து விடுகிறது. மனித மனம் தோல்விகளையும், அவமானங்களையும் பதிய வைத்துக் கொள்ளும் அளவுக்கு வெற்றிகளையும், சந்தோஷங்களையும் பதிய வைத்துக் கொள்வதில்லை.
❖ இன்றைய உலகில் கஷ்டப்படுபவர்கள்
எல்லோருமே இந்தப் போலி நம்பிக்கையால்
பாதிக்கப்பட்டவர்கள்தான்.
❖ கடந்த காலத்தில் தற்செயலாக நடந்து விட்ட
சில அசம்பாவிதங்கள் மூலம் உங்களையோ
உங்களின் திறமையையே குறைத்து மதிப்பிட
முடியாது.
- சில அசம்பாவிதமான நிகழ்ச்சிகளைக் கொண்டு பல திறமைகள் பொதிந்து உங்களைத் தோற்றவன், இயலாதவன், கெட்டவன் என்று நம்ப வைப்பது போலி நம்பிக்கை என்னும் மாய குணம்தான்.
- வாழ்க்கையில் சாதித்தவர்களெல்லாம்... போலி நம்பிக்கைகளைத் தாண்டித் தங்களுடைய உண்மையான சக்தியையும், சாதிப்பதற்கான சாத்தியக் கூறுகளையும் உணர்ந்த, உண்மையாக நம்பிச் செயல்பட்டு ஜெயித்தவர்கள்.

மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் இறைவன்
❖ இறைவனைத் துதிக்கிறேன்!
நமஸ்கரிக்கிறேன்!
புகழ்கிறேன்!
என்று ஆரம்பித்த மனிதன்,
‘இறைவன் ஒரு தனி நபர்’
என்று நம்ப ஆரம்பித்ததை,
வெம்பும் மனது பிடித்துக் கொண்டது,
அதோடு நில்லாமல் இறைவனின் அன்பு,
கருணை, கோபம் ஆகியவற்றைத்தான்...
❖ ‘அன்பு’ என்று நினைக்கும் பாசம்;
‘கருணை’ என்று நினைக்கும் பட்சாதாபம்;
‘கோபம்’ என்று நினைக்கும் எரிச்சல்
ஆகியவற்றோடு சேர்த்து குழப்பிக் கொண்டான்.
❖ இந்தக் குழப்பம்தான் மனிதன் இறைவனை
முழுமையாகப் புரிந்து கொள்ளத் தடையாக
இருக்கிறது.
❖ இறைவன் என்றழைக்கப்படும்
இறைசக்தியின்...
அன்பு, கருணை,
கோபத்திற்கும்
மனிதனின்...
அன்பு,
கருணை,
கோபத்திற்கும்
சம்பந்தமே இல்லை.
❖ மனிதன் தன் மனக் கண்ணோட்டத்தின்படி
இறைவனைப் புரிந்துகொள்ள ஆரம்பித்த
அன்றிலிருந்து இன்றுவரை இறைவனை
தவறாகவே புரிந்து கொண்டிருக்கின்றான்.

பிரபஞ்ச செல்
❖ அனைத்து மதங்களின், அனைத்து ஆன்மீகப் பாதைகளின்
- எல்லா வழிபாட்டு முறைகளும், எல்லா தியான முறைகளும் உங்களுக்குள்ளிருக்கும் இறைசக்தியின் விஸ்வ ரூபத்தை உணரத்தான் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
❖ இரண்டே இரண்டு வகை மனிதர்கள்தான்
சாத்தியம்.
கடவுளான மனிதன்.
மனிதனாக இருக்கும் கடவுள்.
❖ எங்கும், எதிலும் நிறைந்திருப்பவன்
இறைவன் (GOD) - மெய்ஞான கூற்று.
எங்கும் எதிலும் நிறைந்திருப்பது சக்தி
(Energy) - விஞ்ஞானக் கூற்று.
படித்த எந்த ஒரு மனிதனாலும் இரண்டையும் பொருத்திப் பார்த்து முடிவுக்கு வருவது எளிது.
❖ அதாவது, மெய்ஞ்ஞானம் ‘சக்தியை’த் தான்
இறைவன் என்று குறிப்பிடுகிறது.
விஞ்ஞானம் ‘இறைவனை’த் தான் சக்தி என்று
குறிப்பிடுகிறது.
❖ கடவுள் என்ற அந்த ஒன்றுதான் பிரபஞ்சம்
உருவாகக் காரணம்!
நீ உருவாகக் காரணம்!
ஏன்! நீயும் பிரபஞ்சமும் இயங்குவதற்கே
அதுதான் காரணம்.
❖ விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார் - ஒரு செல்லுக்குள் பிரபஞ்சமே தெரியும்!
❖ மெய்ஞானக் கண்ணோட்டத்தில் பார் -
முழு பிரபஞ்சமே சாதாரண ஒரு
செல்லாகத் தெரியும்!
மனிதன் மகானாக எது மாறவேண்டும்?
❖ நாகரீகம் என்ற பெயரால் வெளிவேஷம் வேண்டுமானால் மாறலாம். மனிதன் மாறுவதற்கும் நாகரீகப் பூச்சுக்கும் சம்பந்தமில்லை.
❖ உடை, நடை, பாவனையில் சிறு மாற்றம்
செய்வது எளிது.
இந்த மாற்றத்தால் அதிகப்பட்சம் நமது
வெளிவேஷம் மாறும்.
❖ வெளிவேஷம் மாறுவது சாதாரண
மனமாற்றத்தைத்தான் ஏற்படுத்தும்.
குண மாற்றத்தை ஏற்படுத்தாது.
❖ மனமாற்றத்தால் சில சூழ்நிலைகளை எளிதாகச் சிந்திக்க வழி கற்றுக்

கொள்ளலாம். இதில் வேடிக்கை
என்னவென்றால் வாழ்க்கை
சூழ்நிலைகளைத்தான் பரிசாகத் தரும்.
அதனால்தான் பலர் நாகரீகம்,
சௌகரியம்,
சொத்து இவற்றின் உச்சிக்குப் போன
பின்கூட, நிம்மதியின் வாசல் கதவைக் கூடத்
திறக்க முடியாமல் தவிக்கிறார்கள்.
❖ கணம் பூரணமாக மாறினால் மனிதனே
மலர்ந்து விடுவான்.
மலர்ந்தவனுக்கு எந்தச் சூழ்நிலையையும்
எளிதாக அணுகும் பக்குவம்
கிடைத்துவிடும்.
❖ என்சைக்ளோபீடியாவில் Phobia (பீதி)
என்று இருக்கும் பக்கங்களைப் புரட்டிப்
பார்த்தால் மலைத்துப் போவீர்கள்.
எத்தனை வகையான பீதிகள்...
Acrophobia (உயரத்திலிருந்து பார்த்தால்
பீதி) முதல் Zoophobia (விலங்குகளைப்
பார்த்தால் பீதி) வரை மனிதர்களை
விதம் விதமாக வாட்டும் இந்தப் பீதி
பற்றி ஒரு சுவராஸ்யமான ஆராய்ச்சி.
❖ பய உணர்வு அதிகமாகி சுயகட்டுப்பாட்டை
இழந்து செயல்பட ஆரம்பித்தால் அதற்கு
பெயர்தான் பீதி.
❖ பய உணர்வு சரியாகப் பயன்படுத்தப்படாமல்,
மந்தமாக ஒருவர் செயல்பட்டால் அதற்குப்
பெயர்தான் அசட்டுத் தைரியம்.
❖ 'பீதி, அசட்டுத் தைரியம் என்பதெல்லாம் ஏதோ சில மனிதரிடம் இருக்கக் கூடியது. எனக்கல்ல!' - என்று நீங்கள் நினைத்தால் இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குத்தான்...
❖ 'மரண அனுபவத்தை வாழும் போதே
தாண்டிய ஞானிகளைத் தவிர்த்து மற்ற
எல்லா மனிதர்களையும் ஏதோ ஒருவகை
பீதி அல்லது அசட்டுத் தைரியம்
பிடித்திருக்கும்' - இது வேத உண்மை.
❖ 'கிட்டத்தட்ட எல்லா மனிதர்களும் ஏதோ
ஒரு வகை பீதியால் (Phobia) பீடிக்கப்
பட்டிருக்கிறார்கள்'.
-இது மனோ ஆரோச்சியாளர்களின்
முடிவானக் கருத்து.
உங்களின் பீதி எதுவாக இருந்தாலும் அதற்கு
தீர்வு அடுத்த பக்கத்தில் உள்ளது.

❖ இது நல்லது, இது கெட்டது / இது தவறு, இது சரி.
- என்பது ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் வேறுபடும்.
❖ இளைஞர்களுக்கு இது சரி,
இது சந்தோஷம் என்று தோன்றும்
பல விஷயங்கள்,
முதியவர்கள் பலருக்கு தவறாகவும்,
தேவையில்லாத விஷயமாகவும் தோன்றும்.
❖ ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில்
பார்க்கும் போது நல்லவர்கள்தான்.
மற்றவர்களின் நல்ல குணங்கள் பளிச்
என்று தெரியாமல்,
மற்றவரின் கெட்ட குணங்கள் முதலில்
ஒருவருக்குத் தெரிகிறது என்றால்,
பார்க்கும் பார்வையில்தான் தவறு
இருக்கும்.
❖ நீங்கள் நல்லவர்,
அருமையானவர்
என்ற உணர்வு உங்களுக்குத்
தெளிவாக இருந்தால்
மற்றவர்களின் நல்ல குணங்கள்தான்
எடுத்த எடுப்பில் பளிச் என்று தெரியும்.
❖ மற்றவர்களிடம் கண்டுபிடிக்கும்
தவறுகளில் 90%-க்கும் மேல் நம்மிடம்
இருக்கும் தவறுகள்தான் இருக்கும்.
❖ ஒரு சிறு காகிதத்தை எடுத்து மற்றவர்களிடம் நீங்கள் கண்டுபிடிக்கும்
தவறுகளை எழுதுங்கள்.
தயாராகும் பட்டியலை
நன்கு கவனித்துப் பாருங்கள்
மேலே சொன்ன உண்மை புரியும்!
❖ நம்முடைய பல குறைகள் மனத்திற்குள்
மிக ஆழமாகச் சென்று விட்டன.
அதனால், சிலருக்கு இதை ஏற்றுக்
கொள்ளக் கடினமாக இருக்கலாம்.
ஏற்றுக் கொண்டாலும்,
ஏற்றுக் கொள்ளாவிட்டாலும்
'உங்கள் குறைகளைத்தான்
மற்றவர்களிடம் காண்கிறீர்கள்'
என்பது உண்மை.
❖ பட்டியலிலிருந்து கண்டுபிடித்த தவறுகளைத் திருத்திக்கொண்டால் போதும்! உங்கள் பர்ஸனாலிட்டி மிகவும் தெளிவாகி விடும்!
❖ அதன் பின்தான் மற்றவர்கள் எவ்வளவு
நல்லவர்கள் என்ற உண்மையும் தெரிய
வரும்.
❖ அதன் பின்னே கொஞ்சம், கொஞ்சமாக
மற்றவர்கள் எவ்வளவு நல்லவர்கள், நாம்
எவ்வளவு தவறாக அவர்களைப்
புரிந்து கொண்டிருக்கிறோம் என்று
புரிய ஆரம்பிக்கும்.
உங்கள் உலகம்
❖ உங்கள் மனதைப் பொறுத்து எண்ணங்கள் அமையும்!
❖ உங்கள் எண்ணங்களைப் பொறுத்து வாழ்க்கை அமையும்!
❖ உங்கள் வாழ்க்கையைப் பொறுத்து வெற்றி அமையும்!
❖ உங்கள் வெற்றியைப் பொறுத்து ஆரோக்கியம் அமையும்!
❖ உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்து மனம் அமையும்!
- புரிகிறதா... இரு ஒரு சக்கரம். மக்கள் எப்போதும் நம்மை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவே செயல்படுகிறார்கள்.
❖ நாம் மரியாதை கொடுத்தால்,
மரியாதை கிடைக்கும்.
சீண்டினால் சீண்டப்படுவோம்.
அன்பு செலுத்தினால்,
அன்பு கிடைக்கும்.
எப்போதும் எரிச்சலும் கோபமுமாக
இருந்தால் உலகமே தவறு செய்வதாகவும்,
ஒவ்வொருவரும் திட்டம் போட்டு
எரிச்சல்படுவதாகவும் தோன்றும்.
❖ ஒருவருடைய உலகத்திற்கும்
மற்றவருடைய உலகத்திற்கும்
சம்பந்தமே இல்லை.
அவரவர் கருத்து கண்ணோட்டம்.


மனம் பொறுத்து உலகம் விதவிதமாக மாறி மாறித் தெரியும்.
❖ உண்மையில் எல்லோரும்
இயல்பானவர்கள்,
அருமையானவர்கள்,
நீங்கள் உலகத்தை அணுகும் விதத்தைப்
பொறுத்து உலகம் அணுகும் விதத்தைப்
பொறுத்து உலகம் மாறுபடும்.
❖ உலகம் அருமையானது... உணர ஆரம்பியுங்கள். உண்மை புரியும்!
அத்தனைக்கும் ஆசைப்படலாமா?
❖ கவலையை எதிர்கொள்ளும் துணிவு
இல்லாதவன் - எல்லாவற்றிற்கும்
ஆசைப்பட்டால் அவன் கதி!
அதோ கதிதான்!
(காரணம் நிறைவேறாத ஆசை,
கவலையாக மாறும்!)
❖ எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது மனித
இயல்புதான். மனமும் அதைத்தான் தூண்டும்.
ஆனால், ஆசைப்படும் முன் யோசியுங்கள்,
முடியா விட்டால் பின்னாவது யோசியுங்கள்.
- இது சாத்தியமா? இல்லையா?
❖ ஆசைப்படுவது எளிது. ஆனால் அது
சாத்தியம் இல்லை என்று தெரிந்து உதறித்
தள்ளுவது கடினம்.
எனவே ஆசைப்படும் முன் யோசிப்பது புத்திசாலித்தனம். எளிதும் கூட.
❖ எனக்கு ஆசைப்படவும் தெரியும்!
சாத்தியமில்லை, தேவையில்லை
என்று தெரிந்தால் அதை உதறவும் தெரியும்!
கவலையைப் பற்றி எனக்கு
கவலையில்லை.
❖ இந்த அளவுக்கு வாழ்க்கையை அணுகும்
பக்குவம் பெற்றிருந்தால் நீங்கள் எதன்
மீதும் ஆசைப்படலாம் தவறில்லை.
அத்தனைக்கும் ஆசைப்படுங்கள்.
அது சரியே.