KAILASA Library/உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam/போலிச் சுகம்Sign in
உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam

போலிச் சுகம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

❖ வாழ்க்கை இயல்போடு
கலந்து இயல்பாக செயல்படுங்கள்.
இறுக்கம் கரைய ஆரம்பித்துவிடும்.

❖ தன்னை உயர்த்திக் கொள்ளும்போது மனதிற்கு ஒருவகை போலிச் சுகம் கிடைக்கும். சில மனிதர்கள் இந்தப் போலிச் சுகத்திற்காகத்தான் கர்வத்தோடு நடந்து கொள்கிறார்கள்.

❖ மனிதன் தன்னைத் தாழ்த்திக் கொள்ளும்போது பலரால் உயர்த்தப்படுகிறான்.

❖ கர்வத்தை விட, தாழ்வு மனப்பாங்கோடு
நடிப்பவருக்குப் பல மடங்கு போலிச் சுகம்
கிடைக்கும்.

❖ அதன் விளைவுதான் - தன்னை
மற்றவர்களிடம் தாழ்த்திக் கொள்வது.
தன்னைத்தானே தரம் குறைத்துப்
பேசிக்கொள்வது... என்ற எல்லாமே.

❖ தாழ்த்திக் கொள்வது வேறு, எளிமையாக வாழ்வது வேறு.

❖ இயல்பாக, இயற்கையாக
இருப்பவர்கள் தங்களை உயர்த்தியும்
சொல்ல மாட்டார்கள்.
தாழ்த்தியும் சொல்ல மாட்டார்கள்.
இவர்களிடம் எளிமை
நிறைந்திருப்பதைப் பார்க்க முடியும்.
தங்களின் எளிய நிலையை
எளிமையாகவே எப்போதும்
வெளிப்படுத்துவார்கள்.

❖ 'எளிமை' என்பது ஒருவரிடம் இயல்பாக வெளிப்படுவது.

அன்னை படம் மற்றும் அலங்காரம்

❖ புகழ்ச்சிக்காக மதிப்புக்காகத்
தன்னையும், அறியாமல், தன்னைத்
தாழ்த்திக் கொண்டால்கூட அது பாதகமே.
அது அகங்காரத்தை வளர்க்கும்

❖ யாருக்காகவும்,
எதற்காகவும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
யாரிடமும்,
எந்தச் சூழலிலும் உங்களை உயர்த்திக்
கொள்ளாதீர்கள்.
நீங்கள் நீங்களாகவே இருங்கள்.
உள்ளதை உள்ளபடியே பேசுங்கள்.

❖ உங்களையும் அறியாமல்
உங்களைக் கவ்விக் கொண்டிருக்கும் தாழ்வு
மனப்பான்மையும்,
உயர்வு மனப்பான்மையும்
கழண்டு விழ ஆரம்பிக்கும்.

கீழ்த்தரமான செயல்

❖ நமக்குத் தெரிந்த சிலவற்றைக் கொண்டு
அவர் அப்படி,
இவர் இப்படி,
என்று தீர்ப்பு கூறுவது போன்ற
ஒரு கீழ்த்தரமான செயல்
வேறெதுவும் இருக்க முடியாது.

❖ யாரையும், எதையும்
'தோராயமாகத்தான் கூறுகிறோம்'
என்ற உண்மை தெரியாததாலும்
'உண்மையைத்தான் நாம் கூறுகிறோம்'
என்று ஊர்ஜிதமாக நம்புவதாலும்
நடக்கும் இருபெரிய தவறுகள்-
ஒன்று,
உங்களைப் பற்றி நீங்களே
நல்லவர் அல்லது கெட்டவர்,

The Mother

மனிதன் அல்லது மிருகம் என்ற முடிவுக்கு வருவீர்கள்.

இரண்டாவது,
மற்றவர்களைப் பற்றி
அவர் நல்லவர் அல்லது கெட்டவர்,
மனிதன் அல்லது மிருகம்
என்ற முடிவுக்கு வருவீர்கள்.
ஆனால் நிஜத்தில்...
இரண்டுமே கற்பனை,
இரண்டுமே பொய்.

முதிர்ச்சியின் அளவுகோல்

❖ 'மனிதர்களின், குணம் மாறும் போது, நிறம் மாறும். தரமும் மாறும்' என்ற உண்மையை ஒருவர் தன்னுடைய குணமுதிர்ச்சியினால் புரிந்து கொள்ள முடியும்.

❖ மற்றவர்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பால்
தடுமாறிக் கோபப்படும்போது,
பதிலுக்கு நாமும் கோபத்தையோ வெறுப்பையோ
காட்டினால், அது நாம் இன்னும்
குணமுதிர்ச்சியைப் பெறவில்லை
என்பதற்கான அறிகுறி.

❖ பிடித்த விஷயங்கள் எந்த அளவுக்கு
சந்தோஷத்தைத் தருகிறதோ அதேபோல்
தான் நமக்குப் பிடிக்காத விஷயங்கள் நம்மை
துக்கத்தில் ஆழ்த்தும்.

Mother Mirra Alfassa portrait

173

இதை விளக்கும்... ஒரு அருமையான ஹஸிட் கூற்று.

❖ கிளர்ச்சியின் ஆழம்தான் துக்கத்தின் உயரம்!

❖ குணமுதிர்ச்சி பெற்ற ஒருவனை 'புகழ்ச்சி'

  • கிளர்ச்சிக்குள்ளாக்காது. 'இகழ்ச்சி'
  • தளர்ச்சிக்குள்ளாக்காது.

❖ புகழ்ச்சியும்,
இகழ்ச்சியும்
உங்களை என்ன செய்கின்ற? உங்களை
எவ்வளவு ஆட்டிப் படைக்கின்றன?
பதில் காணுங்கள்... குணமுதிர்ச்சியின்
விகிதாச்சாரம் தெரியவரும்.

❖ பக்தி உணர்வு இல்லாமல் பெற்றவர்களும்
மற்றவர்களும் சொன்னார்களே!
என்பதற்காகக் கோயிலுக்குக் கடமைக்காக
சென்று வந்தால்...
அவன் தன்னை ஆத்தீக வாதி என்று
கூறிக் கொண்டாலும் அவன் ஒரு
நாத்தீகவாதிதான்.
இப்படிப்பட்ட மனிதர்கள்...
பெயரளவில் ஆத்தீகவாதியாகவும்,
உணர்வளவில் நாத்தீகவாதியாகவும்
இருப்பார்கள்.

❖ கோயிலுக்குச் சென்று பக்தியுணர்வோடு
தெய்வ சந்நிதியில் சிறிது நேரம்
அமர்ந்திருக்கும் போது - அங்கே இருக்கும்

சக்தி களத்தால் சக்தியூட்டப்படுவதால்தான் நம் உடலில் புத்துணர்வும், மனதிற்கு அமைதியும் ஏற்படுகிறது. அப்படியென்றால், ஒரு விஷயத்தை நாம் அனைவரும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

❖ அது நம் உடல் புத்துணர்வு இல்லாமல்
சோர்வாகவும், மந்தமாகவும் இருப்பதற்குக்
காரணம் சக்தியின்மையே. 'சக்தி குறைவே'.

❖ நம்முள் மனமானது அமைதி இல்லாமல்,
சஞ்சலத்தோடு, தவிப்போடு, எரிச்சலோடு
இருந்தால் அதற்கும் சக்தி குறைவே காரணம்.

❖ எனவே, ஏதாவது ஒரு வகையில் நம்
உடலுக்கும் மனதுக்கும் சக்தியைக்
கொடுப்பதற்குக் கற்றுக்கொண்டால்போதும்.

❖ எல்லாப் பிரச்சினைகளுக்கும்
காரணகர்த்தாவான சக்தி குறைப்பாட்டை
சரிசெய்து நிம்மதியாக, ஆனந்தமாக
இருக்கலாம்.

❖ பக்தியோடு நீங்கள் செய்யும்
எந்த ஒரு செயலும் தியானமே.
தியானம் உங்களுக்குள் இருக்கும் சக்தியை
நீங்களே பயன்படுத்திக் கொள்ள உதவும்
ஒரு வழிமுறை.

அவமானம் என்னும் நாடகம்

❖ 'அவமானம்' என்பது நம் அந்தஸ்து,
வயது, குலம், கோத்திரம் பொறுத்து நம்
மனதால் கண்டுபிடிக்கப்படும் ஒரு புதிய
கண்டுபிடிப்பு.

❖ பொதுவாக அந்தஸ்து, வயது, பதவி நம்மை
விட அதிகமாக இருப்பவர்கள் சற்று
மரியாதைக் குறைவாகப் பேசினாலோ,
நடந்து கொண்டாலோ அதற்கு நாம்
கொடுக்கும் பெயர் - 'உரிமை' (ஆஹா!
எவ்வளவு உரிமை எடுத்துக்கிறார்கள்!
எல்லாம் பாசம்!)

❖ மாறாக! அந்தஸ்து, வயது, பதவி நம்மைவிட குறைவாக இருப்பவர்கள் சற்றே மரியாதை குறைவாகப் பேசினாலோ, நடந்து கொண்டாலோ அதற்கு நாம் கொடுக்கும் பெயர் - ‘அவமானம்’ (கொஞ்சம் இடம் கொடுத்தால் என்மேல் எவ்வளவு உரிமை எடுத்துக்கறாங்க பார்! எல்லாம் ரொம்ப மோசம்)

❖ அவமானம் நிஜமா?
கற்பனையா?
பதில் - உங்களின் மனநிலையைப் பொறுத்தது.

❖ நிஜத்தில் அவமானம் - மனதின் ஒரு மாயத் தோற்றம்தான்.

❖ பொதுவாக அவமானத்தை மனிதர்கள் மூன்று விதமாக அணுகுவார்கள்:

❖ முதல் வகை : மனிதர்களால், உறவுகளால் எவ்வளவுதான் அவமதிக்கப்பட்டாலும்

Side banner with an oval framed photo of a person seated

திரும்பத் திரும்ப அதே மனிதர்களிடம்
சென்று மூக்கு உடைபடுவார்கள் முதல் வகை.
அதிலிருந்து வெளியே வருவதைப் பற்றி
யோசிக்ககூட மாட்டார்கள். மந்த மனம்
படைத்தவர்கள்.

❖ இரண்டாவது வகை : இவர்கள் தொட்டதற்கெல்லாம் கோபித்துக்கொள்வார்கள். புதிது, புதிதாகக் கண்டுபிடித்து, 'நீ என்னை இங்கே, இப்படி அவமானப்படுத்தினாய்', 'என் மதிப்பென்ன...' என்று சதா மதிப்பு தேடி அலைபவர்கள்.

❖ அவமானம் பற்றிய அதீத கற்பனையில் வாழ்பவர்கள்!

❖ மூன்றாவது வகை: அற்புதப் பிறவிகள். பண்பட்டவர்கள். அவமானம் என்ற ஒன்றே இல்லை என்பதை உணர்ந்தவர்கள்.

❖ நம் Ego-விற்கு விழும் அடியைத்தான்
நாம் அவமானம் என்று கருதிக்
கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை
உணர்ந்து தாண்டியவர்கள். Ego-வை
தொலைத்தவர்கள். அப்படியே மனிதர்கள்
அவமதித்தாலும் அது இவர்களைப் பாதிக்காது.

❖ தான் வேறு, தன் உடல் வேறு என்ற அனுபூதி
பெற்றவரை யாராலும் அவமதிக்க முடியாது.
அப்படியே அவமதித்தாலும் அது அவர்கள்
உடல் மாத்திரமே சம்பந்தப்பட்டது.

❖ எதனாலும் பாதிக்கப்படாமலிருக்கும் உணர்வுப் பக்குவத்தை பெற்ற இவர்களுக்கு ‘அவமானம்’ என்ற ஒன்று ஏற்படாது. ஆனந்த மனிதர்கள்.

  • அவமானத்தை மூன்று விதமாக அணுகலாம்: 1. அவமானத்தை அலட்சியப்படுத்துவது 2. அவமானத்தை எதிர்கொள்வது 3. அவமானம் என்னும் மாயையைத் தாண்டிச் செல்வது. மூன்றில் எதைச் செய்தாலும் நீங்கள் புத்திசாலிதான். தொடர்ந்து வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே இருங்கள்.
  • அவமானத்தால் பாதிக்கப்படுபவர்கள் அதை அலட்சியப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்! அவமானத்தை அலட்சியப்படுத்துபவர்கள் அதைத் தாங்கக் கற்றுக்கொள்ளுங்கள்! அவமானத்தைத் தாங்கத் தெரிந்தவர்கள் அதைத் தாண்டக் கற்றுக்கொள்ளுங்கள்!

கோப சக்தி விரையம்

❖ நீங்கள் கோபப்படும் போது மிக மிக ஜாக்கிரதையாக இருங்கள்.

❖ கோபப்படுவதை அடக்க முயற்சிப்பதை
விட்டுவிட்டு, கோபத்துக்கான காரணத்தை
ஆராயுங்கள்.

❖ தவறு நம் மீது இருக்கும்போது, நாம் ஏன்
அடுத்தவர் மீது கோபப்பட வேண்டும் என்கிற
ரீதியில் யோசித்துப் பாருங்கள்.

❖ நீங்கள் கள்ளம் கபடமில்லாதவர், தவறே செய்யாதவர் என்றால் யாராவது உங்களைப் பார்த்துச் சுண்டுவிரல் நீட்டிப் பேசமுடியுமா?

  • நாம் கோபப்படுகிறபோது ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். நம்மை விட வலிமை குறைந்தவர்களிடத்தில் நாம் காட்டுகிற கோபம் எப்போதும் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது.
  • உங்களுக்குக் கீழே இருக்கும் வேலைக்காரர் ஒருவர், ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறுவதற்கு மட்டுமே தகுதியானவர் என்றால் அவருக்கு ஆயிரம் ரூபாய் மட்டுமே நாம் கொடுக்கிறோம்.
  • மூவாயிரமோ, ஐயாயிரமோ அள்ளிக் கொடுத்துவிடுவதில்லை.
  • ஒரு மடங்கு வேலைக்குப் பல மடங்கு கூலி நாம் தருவதில்லை.
  • ஆனால், அதே ஊழியர் ஒரு சிறு தவறு

செய்து விட்டால் ஆயிரம் ரூபாய்க்குப்
பதிலாக ஐந்தாயிரம் ரூபாய் அளவுக்குக்
கோபப்படுகிறோம்.

❖ ஒரு மடங்கு தவறுக்குப் பல மடங்கு சக்தியைக் கோபமாகக் கொட்டுகிறோம்.

❖ யாருக்கு இழப்பு அதிகம்?

❖ யோசியுங்கள்.

❖ அளவுக்கு அதிகமாக நாம் கோபத்தை
வெளிக்காட்டும்போது நம் கிரியா சக்தி
அநியாயமாக வீணாகிறது.

❖ எந்தக் காரியத்தையும் சிறப்பாகச் செய்வதற்கு அடிப்படையாக இருப்பது இந்தக் கிரியா சக்திதான்.

Illustration

❖ அளவுக்குதிகமாகக் கோபப்படுகிறவர்கள்
எளிதில் உற்சாகமிழந்து, மந்தமாவதற்குக்
கோபத்தால் விரையமாகும் கிரியா சக்தியே
காரணம்.

❖ கோப சக்தி வங்கியில் இருக்கும் பணத்திற்குச் சமம்.

❖ இடம் பார்த்து!
பதம் பார்த்து!
தேவை பார்த்து!
தேவையானவர்களுக்கு மட்டுமே
தேவையான அளவு மட்டுமே செலவு
செய்ய வேண்டும்.

❖ சக்தி விரையம் செய்யாதீர்! சக்தியின்மையில் தவிக்காதீர்!

❖ சக்திச் சிக்கனம் தேவை இக்கணம்.

மன்னித்து... மறந்துவிடுங்கள்!

❖ உங்கள் கோபத்தால் பாதிக்கப்படுவது!
உங்கள் மன்னிப்பால் பலன்பெறுவது!
-இரண்டுமே எதிராளி அல்ல. நீங்கள்தான்.

❖ தொடர்ந்து உங்கள் உடலும், மனதும்
கொதித்துக் கொண்டிருந்தால் மாத்திரமே.
கோபக்கனல் மூலம் மற்றவர்களைச் சிறு
தவறுக்காக கோபித்துக் கொண்டு சக்திவிரையம்
செய்ய முடியும்.
வெறுப்பு கொள்ள முடியும்.

❖ - இதில் யாருக்குப் பாதிப்பு அதிகம்?
கோபப்படுபவனுக்கா? இல்லை பொங்கும்
கோபத்தின் வெளிப்பாடான உங்கள்
சீற்றத்தை மேம்போக்காக எடுத்துக்

spiritual figure in an oval frame surrounded by flowers

கொள்ளும் எதிராளிக்கா?
மன்னித்து விட்டால், மன்னித்த அடுத்த
நிமிடமே கோப எரிமலை குளிர்ந்து விடும்!
உடலும், மனமும் இலகுவாகிவிடும்!

❖ கோபத்தால் சக்தி விரையமாவது மிச்சமாகும். பழி தீர்க்க யோசனை செய்யும் நேரம் மிச்சமாகும்.

❖ சக்தியும், நேரமும் மிஞ்சினால் பலன் பெறப் போவது,

  • மன்னிப்பவரா? இல்லை,
  • மன்னிக்கப்படுவரா? யோசியுங்கள்!

❖ சுயக்கட்டுப்பாட்டுத் திறனைப் பொறுத்து கோபம் ஒரு சக்தி அல்லது கத்தி!

மன்னித்தல் ஒரு அருமருந்து!

❖ அகங்காரத்திலேயே மிகவும் மோசமானது
'நான் நல்லவன்' என்கிற நினைப்பினால்
வரும் அகங்காரம் தான்.

❖ நான் நல்லவன் என்ற கற்பனைதான் பல
விஷயங்களை 'கெட்டது! மோசம்!' என்று
சுட்டிக்காட்டிக் கோபத்தை வளர்க்கும்.

❖ உங்களின் 'கெட்ட குணங்களையும்',
மற்றவரின் 'நல்ல குணங்களையும்'
மட்டுமே ஆராயுங்கள்.
கோபம் தணியும்.
சுயக்கட்டுப்பாடு மலரும்.

❖ மற்றவர்களை மன்னித்து விடுங்கள். அத்தோடு அதை மறந்து விடுங்கள்.

Illustration
இடப்பக்க உருவப்படம்

மறக்க முடியவில்லை என்றால் 'மன்னித்து
விட்டேன்' என்ற பெயரில் வேஷம்
போடுகிறீர்கள் என்று அர்த்தம்.

❖ முழுமையாக மன்னித்து விட்டால், மன்னித்தல் நிகழும்போது மறத்தலும் நிகழ்ந்து விடும்!

❖ ஆனந்தம் நோக்கிப் பயணம் செய்யும்
மூன்று தரப்பட்ட மனிதர்கள்:
'என்னுடைய வீட்டில் இருப்பவர்களை
திருப்திப்படுத்தினால் போதும்.
இவர்கள் சந்தோஷமாக இருந்தால் போதும்.
அதுதான்என் வாழ்க்கையின் நோக்கம்'

  • முதல் வகையினர்.

❖ 'வீட்டில் இருப்பவர்கள் எல்லோரையும்
திருப்திப்படுத்துவது சாத்தியமில்லாதது.
முதலில் நான் சந்தோஷத்தை அனுபவிக்க
வேண்டும். நான் திருப்தி அடைய வேண்டும்'.

  • இரண்டாவது வகையினர்.
side decoration panel
  • ‘வெளி உலகில் அடையும் சந்தோஷமும், திருப்தியும் நிரந்தரமாக இருப்பதில்லையே. இந்த நிரந்தரத் தன்மைத்தான் நாம் முதலிலிருந்தே தேடுகிறோமோ? ஒருவேளை அதுதான் ஆனந்தமா? அதுதான் நிம்மதியா?’ - மூன்றாவது வகையினர்.
  • வாழ்க்கையின் எல்லையை எட்டிப் பார்க்காதவரை, வாழ்க்கையின் நோக்கத்திற்கான விடை தெரியாது. நோக்கம் புரியாது. ஆனால் ஏக்கம் இருப்பது மட்டும் புரியும்.
  • மனிதப் பிறப்பின் நோக்கமே நிலையான, நித்தியமான ஆனந்தத்தைப் பெறுவதுதான். ஆனந்தம் பெறும்வரை ஏதோ ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

❖ - இப்படி வாழ்க்கையின் பல புரியப்பட வேண்டிய புதிர்களை விடுவிப்பது ஆன்மீகம்.

❖ நீங்கள்...
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்,
ஏற்றுக் கொண்டாலும்
ஏற்றுக் கொள்ளவிட்டாலும்,
நாம் அனைவரும் ஆனந்தம் நோக்கித்தான்
பயணம் செய்துக் கொண்டிருக்கிறோம்.
என்ற உண்மையைப் புரிந்து கொண்டு
உற்சாகமாகுங்கள். 'ஆனந்தப் பயணம்'
ஆனந்தமாக அமையட்டும்.

137