உங்களை அருமையானவராக்கும் ஞானவரிகள் (பகுதி – 2) / The Supreme Pontiff of Hinduism Bhagawan Sri Nithyananda Paramashivam
நீ செத்தாலும்... வாழும் மனம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
❖ ஞானமடையும்போது அகங்காரம் சாகிறது. உடல் தொடர்கிறது. மனிதன் இறக்கும்போது உடல் சாகிறது. அகங்காரம் (மனம்) தொடர்கிறது.
❖ இதுவரை எதுவெல்லாம் 'நான்' என்று
நினைத்துக் கொண்டிருந்தானோ அதற்கு மொத்த
மூலக்காரணமான அகங்காரம் அழிவதும், இந்த
உலகில் ஒரு மனிதன் இறப்பதும் சமம்.
இது இரண்டும் ஒன்றே.
❖ உடலில் உயிர் இருக்கும்போதே அகங்காரம் மடிந்து விட்டால் நிஜமான ‘தான்’ யார் என்பது ஆத்ம அனுபூதியாக ஒருவருக்குள் மலரும். பிரபஞ்சம் தோன்றியதிலிருந்து எல்லாவற்றிற்கும் காரணமான அந்த ஆத்மாவின் வெளிப்பாடாக மனிதன் மாறிவிடுவான். அப்போதுதான் மனிதன் ஞானியாக மாறும் ஆனந்த நிகழ்வு நிகழ்கிறது.

20