என்னைச் சித்ரவதை செய்யாதீர்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
17.2 ஜகத்குரு கிருஷ்ணர் சொல்கிறார்: உடலெடுத்துள்ள மனிதர்களின் ஶ்ரத்தை மூன்று வகையானவை: நல்லது, தீவிரம் மற்றும் அறியாமை. இப்போது இவற்றைப் பற்றி என்னிடமிருந்து கேள்.
17.3 ஓ அர்ஜூனா, ஒவ்வொருவரின் ஶ்ரத்தையும், அவரவரின் சொந்த தீர்மானத்தைப் பொறுத்திருக்கிறது. ஒருவரின் ஶ்ரத்தையே அவரை நிர்ணயிக்கிறது. ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.
17.4 ஸத்வ இயல்பில் இருக்கும் மனிதர்கள், கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; ரஜோ இயல்பைக் கொண்டவர்கள் ராக்ஷஸர்களை வழிபடுகிறார்கள்; தமஸில் இருப்பவர்கள் பேய்களையும் ஆவிகளையும் வழிபடுகிறார்கள்.
17.5, 6 இருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேத நூல்களின் முறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு கடுமையான தவங்களைப் பயிற்சிசெய்வார்கள். போலித்தனத்திலும், அகங்காரத்திலும் மூழ்கி இருக்கும் இவர்கள், ஆசையினாலும் பற்றினாலும் இழுத்துச் செல்லப்படுபவர்களாகவும், தங்களின் உடல் பாகங்களை அறிவற்ற முறையில் கடுமையாக சித்ரவதை செய்வதுடன், உடலுள் உறையும் என்னையும் சித்ரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆன்மாதான், கணக்குப்பிள்ளை
நாம் வழிபாடு செய்யும் முறை, நமது இயல்பான குணங்களை, அதாவது பிறக்கும்போதே நம்மோடு கொண்டுவந்திருக்கும் மனோபாவங்களைச் சார்ந்திருக்கிறது என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.
நாம் பிறக்கும்போதே, நமக்குள் வாசனைகளைக் கொண்டுவருகிறோம், அதாவது நமது கடந்த கால வாழ்க்கையின் மன அமைப்பின் சாரத்தைக் கொண்டுவருகிறோம். இது ப்ராரப்த கர்மத்துடனும், ஸம்ஸ்காரங்களுடனும் சேர்ந்து வருகிறது. இவைதான் நம்முடைய மனப்பாங்குகள் மற்றும் செயல்பாடுகள் மூலமாக, நமது நிகழ்காலம் முழுவதையும் நடத்திச் செல்கின்றன.
இதன் அடிப்படையில், நாம் மறுபிறப்பெடுக்கும்போது நம்முடன் பயணிக்க வேண்டிய குணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.
நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்த அனைத்துக் காரியங்களின் பட்டியலையும் வைத்துக்கொண்டு, சொர்க்கத்தின் வாசலில் அல்லது நரகத்தின் வாசலில் நமக்காக ஒரு தேவதை அல்லது தேவன் அமர்ந்திருப்பதாகப் பலர் நம்புகிறார்கள். நம்முடைய கணக்குகளைப் பட்டியலிட்டுக் காட்ட ‘செயின்ட் பீட்டரோ’ அல்லது ‘சித்ரகுப்தரோ’ இருப்பதுபோல நம்புகிறார்கள். அவர்களுக்கு வேறு வேலையே இல்லையா என்ன? பேராசையையும் பயத்தையும் காட்டி நம்மைக் கட்டுப்படுத்த விரும்பிய மதத் தலைவர்கள் உருவாக்கிய கதைகளே இவை.
நாம் உடலை விட்டுப்பிரியும்போது, நமக்கு இருக்கும் கடைசி மன அமைப்பு அல்லது கடைசி எண்ணத்தைத்தான் நமது அடுத்த பிறப்புக்கு எடுத்துச் செல்கிறோம்
குழந்தைகளைப் பயமுறுத்த நாம்,
மனிதர்களைக் கொன்று தின்னும், குறிப்பாக,
குழந்தைகளைக் கொன்று தின்னும் பேய்க்
கதைகளைச் சொல்வதுபோல, இந்தப்
பூசாரிகளும், படித்தவர்களும் இந்தக்
கதைகளை நம்மிடம் சொல்கிறார்கள்.
பிசாசுகள், இரத்தக் காட்டேரிகள் பற்றிய
சில பேய்க் கதைகள் உண்மையிலேயே
மிகவும் கொடூரமானவை.
குழந்தைகளைப் பயப்படுத்தி, அவர்களின் சீர்கெடுப்பதில் எதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால், அவர்களுக்கு இந்தக் கதைகள் மிகச் சிறு வயதில், அதுமட்டுமல்ல, பொருத்தமற்ற நேரமான இரவு நேரத்தில், உறங்கச்செல்லும்போது சொல்லப்படுகின்றன.
சொர்க்கம், நரகம் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள். நமது மனமே சொர்க்கம், நரகம் எல்லாம்.
இந்தப் பிறவியிலேயே நாம் நரகத்தைத்தான் அனுபவிக்கிறோம், அடுத்த பிறவியில் இல்லை. என்ன நடக்குமோ என்ற பயமும், மதம் நம்மீது திணிக்கும் குற்ற உணர்ச்சிகளும்தான் நம்மை நரகத்திற்குள் தள்ளுகின்றன. இந்தக் குற்ற உணர்ச்சிகளை விட்டு வெளியே வந்துவிட்டோமென்றால், நாம் சொர்க்கத்திற்கு வந்துவிடுவோம்.
நமது இருப்பு, நமது அழிவில்லா ஆன்மா, நம்முடைய ஒவ்வொரு எண்ணத்தையும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கணக்கில் வைத்திருக்கும். இந்தக் கணக்குப்பிள்ளையிடம் இருந்து யாருமே தப்பிக்க முடியாது. பாதையின் முடிவை நாம் எட்டும்போது, நமது உடல் சாகும்போது, வாழ்க்கைப் பயணம் முழுவதும் நடந்த எல்லா நிகழ்வுகளையும் ஆன்மா நமக்கு எடுத்துக்காட்டி, அதே சுக துக்கங்களை அப்போது மீண்டும் அனுபவிக்கச் செய்யும்.
கிருஷ்ணர் சொல்கிறார், நாம் உடலை விட்டுப்பிரியும்போது, நமக்கு இருக்கும் கடைசி மன அமைப்பு அல்லது கடைசி எண்ணத்தைத்தான் நமது அடுத்த பிறப்புக்கு எடுத்துச்செல்கிறோம், நமது ஆன்மா

நுழையும் அடுத்த உடலுக்கு அந்தக் கடைசி எண்ணம்தான் எடுத்துச் செல்லப்படுகிறது.
நம்முடைய வாழ்க்கை முழுவதும் நாம்
விரும்பியதெல்லாம் செய்துவிட்டு,
மரணிக்கும் தருணத்தில் நல்ல அருமையான
எண்ணங்களை நினைக்கலாம் என்று
எண்ணிவிடாதீர்கள். அது முடியாது!
வாழ்க்கை முழுவதும் நாம் பணத்தின்பின்னே ஓடியிருந்தால், எவ்வளவுதான் நாம் முயன்றாலும், இறுதி மூச்சை இழுக்கும்போது, 'கிருஷ்ணா, கிருஷ்ணா' என்று உச்சரித்துவிட முடியாது, நாம் இறக்கும்பொழுதும், கோடிகள் என்றும், லட்சங்கள் என்றும்தான் முணுமுணுத்துக் கொண்டிருப்போம்.
நமது வாழ்க்கை முழுவதும் நாம் எப்படி இருந்தோமோ, அதுவே உடலை விடும்போது நம்முன் தோன்றும். பணம் சேர்ப்பதுதான் நம்முடைய மன அமைப்பாக இருந்ததென்றால், அடுத்த உடல் பிறப்பெடுக்கும்பொழுதும், நாம் அதே மன அமைப்புடன்தான் பிறப்போம்.
நம்முடைய ஆன்மா எந்த மன அமைப்பில் முந்தைய உடலை விட்டதோ, அதே மன அமைப்பை வளர்த்துக்கொள்வதற்கான வசதிவாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய சூழ்நிலைகொண்ட ஒரு பிறப்பைத்தான் எடுக்கும்.

பணம் சேர்க்க வேண்டும் என்ற மன
அமைப்பில் இருந்தால், அந்த ஆன்மா
செல்வச்செழிப்புடன் இருக்கும்
ஒரு குடும்பத்தை, ஒரு இடத்தை,
கலாசாரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும்.
Mக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற மன அமைப்பு இருந்திருந்தால், அதை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற, அதற்கேற்ற பொருத்தமான குடும்பத்தை, இடத்தை, கலாசாரத்தைத்தான் அந்த ஆன்மா தேர்ந்தெடுக்கூம்.
அதனால் நாம் எல்லோரும் நம்முடைய முந்தைய வாழ்க்கையின் அடிப்படையில் அமைந்த ஓர் இயல்பான உந்துதலோடுதான் பிறந்திருக்கிறோம். அதனால் மன அமைப்பைப் பொறுத்து, நம்முடைய இயல்பான உந்துசக்தியாக நமக்கு ஸத்வ குணமோ, ரஜோ குணமோ அல்லது தமோ குணமோ அமைகிறது.
ஞானிக்கு எந்தக் கட்டுறுக்களும் இருப்பதில்லை
எல்லாச் சமுதாயங்களும் மதங்களும் நம்பிக்கைகளும் ஜாதிகளும் சமயக் கோட்பாடுகளும் இந்த அடிப்படை மன அமைப்புகளின் எளிமையான மொழிபெயர்ப்புகளே! இதைத் தவிர வேறெதுவும் கிடையாது.
பூமியில் பிறந்த பிறகு, நமது கடந்த கால மன அமைப்பின்படி நாம் எங்குப் பிறந்திருக்கிறோமோ அதன் இயல்பையே பெறுகிறோம். நமது இந்தப் புதிய பிறப்பில், அந்த இயல்பான குணங்கள் முன்னிறுத்தும் மத நம்பிக்கைகளில் நிலைகொள்கிறோம்.
இருப்பினும், நாம் அந்த முழுமையின் ஒரு பாகமே என்றும், பிரபஞ்சத்தின், உயர் விழிப்புணர்வின் ஒரு துணுக்கு என்றும் நம்மை உணர்வதே இல்லை. நமது உண்மையான இயல்பானது, அனைத்து பொருள்சார் அமைப்புகளையும் வரையறைகளையும் கடந்து இருப்பதை நாம் உணர்வதில்லை.
பிரபஞ்ச இருப்புடனான இந்தத் தொடர்பை நாம் மறந்துவிடும்போது, பொருள்சார்ந்த வாழ்க்கைக்காகவே நாம் நமது சக்தியைச் செலவிடுகிறோம். சில மதங்களின் குருட்டுத்தனமான விதிமுறைகளின் மீது பற்று வைத்து, அவற்றை வளர்த்துக் கொள்கிறோம். அதுபோன்ற ஒரு பற்று, முற்றிலுமாகப் பொருள்சார்ந்தே இருக்கும். அதனுடனான தொடர்பே செயற்கையாகத்தான் இருக்கும். இதிலிருந்து வெளிவர வேண்டுமானால், முதலில் நமது பொருள்சார்ந்த பற்றுகளை உடைத்து, 'சுய'த்தை அறியும் பாதைக்குள் (Self-Realization) சிரத்தையுடன் நுழைய வேண்டும்.
ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், இயல்பிலேயே தூய்மையான ஸத்வ குணத்தோடு இருக்கும் ஒருவரால் மட்டுமே, 'சுய'த்தை அறியும் பாதைக்குள் நுழைய முடியும்.
ஒரு ஞானி, ஸத்வ, ரஜோ, தமஸ் ஆகிய இந்த மூன்று குணங்களையும் கடந்தவராக இருக்கிறார். ஏனெனில் குணங்களின் உருவாக்கத்திற்குக் காரணமான வாஸனைகளையும் ஸம்ஸ்காரங்களையும் கர்மாக்களையும் அவர் எரித்துவிடுகிறார். ஒரு ஞானிக்கு எந்தப் பந்தங்களும் இல்லை. ஆசைகள், பேராசை, பயம் மற்றும் பந்தங்களால் அவர் கட்டுப்படுத்தப் படுவதில்லை. அவர் இந்தப் பொருள்சார் உலகின் மாயைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அவர் இந்த உடலை விட்டுவிட விரும்பும்போது, அவர் பிரபஞ்ச சக்தியோடு கலந்துவிடுகிறார், அவர் உடல் அழிந்து போகிறது.
எந்த உயிராக இருந்தாலும், இயல்பிலேயே சில குணத்தைக் கொண்டிருக்கும் என்பதால், ஒரு ஞானியின் சக்தி மீண்டும் இந்தப் பூமியில் மனித உருவில் பிறப்பெடுக்கும்போது, அதில் சில ஸத்வ குணங்கள் படிந்திருக்கும்.
அதுபோன்றதொரு 'இருப்பு' ஓர் அவதாரமே!. சில சமயங்களில், அந்த அவதாரம், பிரபஞ்சம் தன்னை எதற்காக இந்த உலகிற்கு அனுப்பியதோ, அந்த வேலையைப் பூர்த்திசெய்வதற்காக தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்கிறது.
சில சமயங்களில், அந்த அவதாரம், தன் உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட பிறகு, அதன் உண்மையான பிரபஞ்ச நிலைக்கே திரும்பி விடுகிறது. இந்த இரண்டு நிலைகளுக்கும் சரியான உதாரணம் இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும். இந்த இரண்டு ஜகத்குருமார்களுமே பராசக்தியின் விருப்பப்படி அவளுடைய நோக்கத்தைப் பூர்த்திசெய்வதற்காக இந்தப் பூமியில் மீண்டும் பிறப்பெடுத்தார்கள்.
இராமகிருஷ்ணர், ஞானம் அடைந்த பிறகும், தம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட பிறகும், தொடர்ந்து தம்முடைய கடமையைச் செய்து வந்தார். ஆனால் விவேகானந்தர், தம்முடைய குருநாதர் இராமகிருஷ்ணர் கணித்ததுபோலவே, தம்முடைய உண்மையான இயல்பை உணர்ந்துகொண்ட உடனேயே தம்முடைய பூத உடலை விட்டுவிட்டார்.
யாரைப்போல் மாறமுயற்சிக்கிறீர்கள்
தமஸ் குணம் உடைய ஒருவர் ஞானமடைந்தால், அவர் ரஜோ மற்றும் ஸத்வ நிலைகளைக் கடந்த பிறகே, தம்முடைய உண்மையான இயல்பை உணர்கிறார். இந்த மாற்றம் உடனடியாகக்கூட ஒருவருக்கு நிகழலாம், ஆனால் நிச்சயம் நிகழ்ந்தே ஆக வேண்டும்.
ஒரு வழிப்பறி கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, மக்களைப் பயமுறுத்திக் கொள்ளையடித்ததோடு மட்டுமல்லாமல், பல கொலைகளையும் செய்தவர். அவருடைய இயல்பு, சிறிது ரஜோ நிலையைக் கொண்ட ஆழ்ந்த தமோ குணமாக இருந்தது. ஒருமுறை அவர் நாரதரை வழிமறித்து, பணம் தரும்படி மிரட்டியபோது, நாரதர் 'நாராயணா' என்ற சொல்லை தீக்ஷையாகக் கொடுத்தார். அந்த நாமத்தை உச்சரித்த உடனேயே வால்மீகி உணர்வுமாற்றமடைந்து, ஸத்வ நிலைக்கு உயர்ந்தார், ஞானநிலையை அடைந்தார், இராமாயணத்தை இயற்றினார்.
நமது இயல்பைச்
சார்ந்தே நாம் வழிபடும்முறை இருக்கும்
என்கிறார் கிருஷ்ணர்.
ஸத்வ குணத்தில் இருக்கும் ஒருவர், சாந்தமான இயல்புகொண்ட தெய்வங்களை
> ஒரு ஞானி,
> ஸத்வ, ரஜோ, தமஸ்
> ஆகிய இந்த மூன்று
> குணங்களையும்
> கடந்தவராக இருக்கிறார்.
வழிபடுகிறார். ரஜோ குணத்தில் இருக்கும் ஒருவர், யக்ஷர்களையும் ராக்ஷஸர்களையும் வழிபடுகிறார். தமோ குணத்தில் இருக்கும் ஒருவர், ஆவிகளையும் பூதங்களையும் வழிபடுகிறார்.
உங்கள் லட்சியம் என்னவாக இருந்தாலும், எதை நீங்கள் உயர்வாக நினைத்தாலும், நீங்கள் யாரைப் பின்பற்றினாலும், நீங்கள் எதை வழிபட்டாலும், அதுவே உங்களின் இயல்பாக இருக்கிறது. அதுவே உங்கள் குணத்தைத் தீர்மானிக்கிறது.
இளைஞர்களின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்கள் தங்கியிருக்கும் அறையைப் போய்ப் பார்த்தால்போதும். சுவாமி விவேகானந்தரின் புகைப்படம் அங்கு ஒட்டப்பட்டிருக்கிறதா இல்லை ஒரு நடிகரின் புகைப்படம் ஒட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்தே, அவர்களின் ஹீரோ யார் என்பதை நம்மால் தீர்மானித்துவிட முடியும்.
சுவாமி விவேகானந்தரின் படத்தை ஒட்டிருந்தோமானால், அவர்தான் நம்முடைய ஹீரோவாக இருப்பார். நாம் தொடர்ந்து அவரைப் பற்றியே நினைப்போம். அவரைப்போல ஆக விரும்புவோம். அவரைப்போல வாழ விரும்புவோம். நாம் ஸத்வ குணத்தில் நிலைபெற்றிருப்போம்.
ஒரு நடிகரின் படத்தை நாம் மாட்டி வைத்திருப்போம் என்றால், அவரைப்போலவே முடியை வெட்டிக் கொள்வோம். அவரைப்போல உடை அணிய நினைப்போம், அவரைப்போலத் தெரிய வேண்டும் என்பதற்காக நாம் என்னென்னமோ செய்துகொண்டிருப்போம்.
நமது அறையில்,
சுவாமி விவேகானந்தரின்
படத்தை
ஒட்டிருந்தோமானால்,
அவர்தான் நம்முடைய
ஹீரோவாக இருப்பார்.
நாம் தொடர்ந்து அவரைப்
பற்றியே நினைப்போம்.
அவரைப்போல ஆக
விரும்புவோம்.
அதற்காக நாம் எதையும் செய்யத் தயாராக
இருப்போம். நாம் ரஜோ மற்றும் தமோ
குணத்தில் நிலைபெற்றிருப்போம்.
தமோ குணம் என்பது, ஒரு வன்முறை
சண்டைக்காட்சியைப் பார்ப்பதுபோல.
நாள்தோறும் அந்தக் காட்சி தொடர்ந்து
நடந்துகொண்டிருக்கும்: மக்கள் ஒருவரோடு
ஒருவர் சண்டை போட்டுக்கொண்டும்,
அடித்துக்கொண்டாடும், குரங்குகளைப்போல
ஒருவரை ஒருவர் உதைத்துக்கொண்டாடும்
இருப்பார்கள். இது எனக்கு ஒருபோதும்
புரிவதில்லை. சண்டையிடுதல் என்பது ஒரு
நெறிபிறழ்வு. ஆயிரக்கணக்கான மக்கள்
அமர்ந்து இந்தச் சண்டை நிகழ்வுகளைப்
பார்க்கிறார்கள்; இதை என்னால்
கற்பனையும் செய்து பார்க்க முடிவதில்லை.
நாம் எந்தளவுக்கு நெறிபிறழ்ந்திருக்கிறோம்
பாருங்கள்!
நாம் சரியான உருவத்தை
வழிபட்டோமென்றால்,
நாம் ஸத்வ குணத்தில்
நிலைபெற்றிருப்போம்.
நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சியில்,
சண்டைக்காட்சிகளைப் பார்த்துக்
கொண்டிருந்தீர்களென்றால், நீங்கள் தமோ
குணத்தில்தான் நிலைகொள்வீர்கள்.
நமது லக்ஷியங்களின் அடிப்படையில், நமது குணங்களை (பண்புகளை) வரையறுத்துச் சொல்லிவிடலாம் என்கிறார் கிருஷ்ணர்.
தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள்
கடைசி ஸ்லோகத்தில் அவர் சொல்கிறார், “தயவுசெய்து உங்கள் உடலைத் தண்டிக்காதீர்கள். அப்படிச் செய்வதன் மூலம், நீங்கள் உங்களை மட்டும் தண்டிக்கவில்லை, என்னையும் சேர்த்து தண்டிக்கிறீர்கள், ஏனென்றால், உங்களுக்குள் நான் இருக்கிறேன்!’
வேத நூல்கள் கடுமையான பயிற்சிகளையும் தவங்களையும் பரிந்துரைக்கவில்லை. தீ மிதிப்பது போன்ற செயல்களெல்லாம் அவசியமற்றவை.
ஒருசில சமயங்களில்... உங்களை இவற்றையெல்லாம் நான் செய்ய வைக்கிறேன். ஏனென்றால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தொடர்ந்து கடைபிடித்துவரும் மன அமைப்பை உடைக்க வேண்டுமென்பதற்காக!
ஆனால், இவற்றை “ஒவ்வொரு நாளும், காலையில் நான் எழுந்தவுடன் பத்தடி நெருப்பில் நடப்பேன்...,” என்கின்ற அளவுக்கு உங்கள் தினசரி சடங்காக்கிக் கொள்ளாதீர்கள். இதுபோன்ற விஷயங்களையெல்லாம் செய்யத் தேவையில்லை என்றுதான் கிருஷ்ணர் சொல்கிறார். ‘நான் இதை எல்லாம் செய்தேன்’ என்று பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகவும், தங்களுடைய அகங்காரத்தைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவும் மக்கள் இதைச் செய்கிறார்கள். பேராசை மற்றும் பற்றினால் உந்தப்பட்டு அவர்கள் இப்படிச் செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு, ஆணிப்படுக்கையில் ஆண்டுக்கணக்காகப் படுத்துக் கிடக்கும் தவத்தை சிலர் மேற்கொள்கிறார்கள். சிலர் ஒரு கையை உயரே உயர்த்தியபடியே இருக்கும் தவத்தை மேற்கொள்கிறார்கள். இது போன்ற கடுமையான பயிற்சிகள் அனைத்துமே முட்டாள்தனமானவையே. இவர்கள் தங்கள் உடலை சித்ரவதை செய்வதுடன், அதற்குள் உறைந்திருக்கும் பரமாத்மாவையும் சித்ரவதை செய்கிறார்கள்.
கிருஷ்ணர் மிக அழகாகச் சொல்கிறார், “உங்கள் உடலுள் உறைந்திருக்கும் ஆன்மாவைச் சித்ரவதை செய்யாதீர்கள். உங்கள் உடலை அவதூறு செய்யாதீர்கள். உடல்தான் கடவுள் வாழும் ஆலயம்.’
கடவுளின் ஆலயத்தைச் சித்ரவதை செய்வதால், உங்களுக்குள் இருக்கும் பரமாத்மாவைச் சித்ரவதைக்குள்ளாக்குகிறீர்கள் உடலுக்குள் இருக்கும் பரமாத்மாவைச் சித்ரவதைக்குள்ளாக்குபவர்கள் ராக்ஷஸர்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இராவணன் தவம் செய்தான். அவன் தன்னுடைய தலைகளை வெட்டி, அவற்றைத் தீயிலிட்டான். இது, தனது உடலையும் அந்த உடலுக்குள் உறையும் பரமாத்மாவையும் சித்ரவதை செய்யும் ‘ராக்ஷஸ தவம்’. சுய சித்ரவதை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
உங்களை நீங்கள் ளே சித்ரவதை செய்துகொள்ள
வேண்டும் என்று கடவுள் ஒருபோதும்
உங்களைக் கேட்டுக்கொள்வதில்லை.
யாரையாவது அழிக்க திட்டம்தீட்டிக் கொண்டிருப்பதுதான். ராக்ஷஸர்களின் இயல்பு. அதனால்தான் அவர்கள் இதுபோன்ற கொடூரமான விஷயங்களை தங்களுக்குத் தாங்களே செய்து கொள்கிறார்கள். இந்தத் தவங்களையும் - இந்தச் சுய சித்ரவதைகளையும் - அகங்காரத்தை வளர்ப்பதற்கும், ஆற்றல் மற்றும் அதிகாரத்தை வேண்டியுமே செய்கிறார்கள்.
மற்றவர்களை எப்படிப் கொல்வது, மற்றவர்களை எப்படிச் சித்ரவதை செய்வது, மற்றவர்களுக்கு எப்படிச் சூனியம் வைப்பது என்று எந்த வேத நூலும் நமக்குக் கற்றுத் தருவதும் இல்லை, அவற்றை அவை விரும்புவதும் இல்லை.
யாராலும் உங்களைச் சபிக்க முடியாது
ஒரு சொற்பொழிவில் நான், யந்திரங்கள் எப்படிப் பிரச்சினைகளை நிவர்த்தி செய்கின்றன என்பதைப் பற்றிப் பேசினேன். யந்திரம் என்பது சக்திவாய்ந்த மந்திரத்தைக் குறிக்கும் வரைபடம் பதிக்கப்பட்ட, மேலும் சடங்குகளால் சக்தியூட்டப்பட்ட ஓர் உலோகத் தகடு.
அந்தச் சொற்பொழிவு முடிந்த பிறகு ஒரு
அன்பர் என்னிடம் வந்து, "நான் ஒரு
யந்திரம் வாங்கி வந்தேன். ஆனால் நான்
யாரிடம் வாங்கினேனோ அவரிடமே
அதைத் திருப்பிக் கொடுக்க நினைத்தபோது,
அவர், என்னைச் சபித்து விடுவதாகப்
பயமுறுத்துகிறார்," என்றார்.

ஒன்றை ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரு ஞானியால் மட்டுமே சாபம் தர முடியும். அவருக்கு மட்டுமே அந்த சக்தி இருக்கிறது. ஆனால் ஞானி ஒருபோதும் சாபம் தரமாட்டார்.
ஒரு ஞானியால் மட்டுமே தம்முடைய சாபத்தை உபயோகமான வழியில் பயன்படுத்த முடியும், மற்றவர்களால் முடியாது.
யார் வேண்டுமானாலும் சபிக்கலாம், அது நிஜமாகிவிடும் என்பதெல்லாம் நடவாத செயல். அப்படி ஒருவர் சபிக்கிறார் என்றால், அவர் ஞானி அல்ல. அவருடைய சாபத்தைப் பற்றி ஒருபோதும் கவலைப்படாதீர்கள். உங்களுடைய சாபம் பலிக்க வேண்டுமென்றால், நீங்கள் ஸத்ய-ஸங்கல்ப்ராக, அதாவது ஸத்யத்தைக் கடைப்பிடிக்கும் நிலையில் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால் அது ஒருபோதும் பலிக்காது.
இறுதி பேராற்றலை எட்டியவர்களின் வார்த்தைகள் மட்டுமே நிஜமாகும். மீண்டும் சொல்கிறேன், ஞானிகளால் மட்டுமே சபிக்க முடியும். ஆனால் ஞானிகள் ஒருபோதும் சபிக்க மாட்டார்கள். ஏனென்றால், ஞானிகள் பிரபஞ்ச உணர்வில் இருப்பதால், மற்றொருவரைச் சபிப்பதென்பது அவர்கள் தங்களைத்தாங்களே சபிப்பதற்கு ஒப்பாகும். அதனால், சாபங்களுக்காகப் பயப்படாதீர்கள்! யாராலும் உங்களைச் சபிக்க முடியாது.
> உங்களைப் பயமுறுத்தி,
> உங்கள்மீது திணிக்கப்படும்
> எந்தவொன்றையும்
> துணிவோடு
> விட்டெறியுங்கள்.
ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்,
சாபம் கொடுக்கும் நபர், மற்றவர்களைக்
காயப்படுத்துவதைவிட, அவர்
தம்மைத்தாமே அதிகம் காயப்படுத்திக்
கொள்கிறார். அதனால் சாபங்களுக்காக
ஒருபோதும் பயப்படாதீர்கள்.
ஆன்மீக பந்தம், ஒருபோதும் பயம் அல்லது பேராசையின் அடிப்படையில் ஏற்படுவதில்லை. பயத்தின் காரணமாக ஒருபோதும் யாருக்கும் அடிபணியாதீர்கள். உங்களைப் பயமுறுத்தி, உங்கள்மீது திணிக்கப்படும் எந்தவொன்றையும் துணிவோடு விட்டெறியுங்கள்.
கிருஷ்ணர் சொல்கிறார், இந்த மாதிரியான தவங்களுக்கு இங்கு அவசியமே கிடையாது. பெருமைக்காகவும், அகங்காரத்தைப் பூர்த்திசெய்வதற்காகவும் செய்யப்படும் இந்த மாதிரியான தவங்களால் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள். ஆனால் நிஜத்தில் இவற்றினால் உங்களுக்கு எதுவும் கிடைக்காது.
இப்படிப்பட்ட தவங்களைச் செய்பவன் ராக்ஷஸன். அவன் ஆழ்ந்த தமோ நிலையில், அறியாமையில் இருக்கிறான். அவன் தன்னைப் பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ கவலைப்படாமல், தமது அகங்காரத்தைப் பூர்த்திசெய்வதில் மட்டுமே கவனம் கொண்டிருப்பான். இவன் ஆன்மீகத்தைப் பற்றி ஒன்றும் அறியாதவனாகவே இருக்கிறான்.
உங்கள் ஜீவனுக்குப் பிடிக்காத ஒன்றை யாரும் செய்ய முடியாது
கேள்வி: ஸ்வாமிஜி, வாசனைகளே ஆன்மாவை ஒரு புதிய உடலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன என்று சொன்னீர்கள். அப்படியென்றால், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் குணங்களிலேயே ஏன் வித்தியாசம் இருக்கிறது? ஒருவர் பணம் சார்ந்திருக்கிறார், மற்றொருவர் சேவை சார்ந்திருக்கிறார், மூன்றாம் நபர் அதிகார போதையில் இருக்கிறார். இப்படி மூன்று குழந்தைகளும் தங்களின் பெற்றோர்களிடமிருந்து மூன்று விதமாக வேறுபட்டு இருக்கிறார்களே, ஏன்?
அருமையான கேள்வி!
ஒரு முறை நான் அமெரிக்கா சென்றிருந்தபோது, மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு தியான சிகிச்சை (Spiritual Healing) கொடுத்த கதையை உங்களுக்கு ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். இந்தக் கேள்விக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதால், நான் அதை மீண்டும் இங்குச் சொல்கிறேன்.
அந்தப் பெற்றோர்கள் இந்தியாவிலிருந்து வந்திருந்தார்கள். ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் கிடையாது, அவர்களில் யாருக்கும் தமிழ் தெரியாது.
நான் அந்தப் பையனைத் தொட்ட உடனேயே, அவன் கடுமையான குரலில், என்னுடைய கைகளை அவன் மீதிருந்து எடுத்துவிடும் படி கத்தினான். அதுவும் தமிழில் மொழியிலேயே! அவன் குணமடைய விரும்பவில்லை!
அவன் உக்கிரமாக பேசிய விதம், மேலும் அவனுக்குப் பரிச்சயம் இல்லாத ஒரு மொழியில் அவன் பேசியதையும் பார்த்தவுடன், நான் தியான சிகிச்சை அளிப்பதை நிறுத்திவிட்டு, கைகளை எடுத்துவிட்டேன். பிறகு அவனிடம், “ஏன் தியான சிகிச்சைக்கு மறுப்பு தெரிவிக்கிறாய்?” என்று கேட்டேன். தான் விரும்பியே உடல் - மன வளர்ச்சி குன்றிய ஒரு பிறப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், ஏனென்றால், தான் வாழ்க்கை பொறுப்புகளை ஏற்க விரும்பவில்லை என்றும் அந்தச் சிறுவன் சொன்னான். அவன், தன்னுடைய கடந்தகால ஆசைகளை, ப்ராரப்த கர்மாக்களை எந்தவொரு சிரமும்படாமலேயே தீர்த்துக்கொள்ள விரும்பினான்.
"நல்லது, அப்படியே இருக்கட்டும், ஆனால் நல்லவர்களான உன்னுடைய பெற்றோரைத் தொந்தரவு செய்து வருகிறாயே. அவர்களை ஏன் துக்கப்படுத்துகிறாய்?" என்று கேட்டேன்.
அந்தச் சிறுவன் உடனடியாகப் பதிலளித்தான், "என்னை நன்றாகக் கவனித்துக்கொள்ளாத ஒரு குடும்பத்தில் போய் நான் பிறப்பெடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் நல்லவர்கள் என்பதற்காகதான் நான் அவர்களைத் தேர்ந்தெடுத்தேன், அவர்கள் என்னைக் கவனித்துக் கொள்வார்கள் என்பதும் எனக்குத் தெரியும்!" என்றான்.
அதன்பிறகு, அவனுடைய இருப்பின் விருப்பங்களுக்கு எதிராக, அந்தப் பையனுக்குத் தியான சிகிச்சை கொடுக்கும் முயற்சியில் நான் இறங்கவில்லை.
எந்தக் காரணங்களுக்காக ஓர் ஆன்மா ஓர் குறிப்பிட்ட உடலைத் தேர்ந்தெடுக்கிறது என்பது நமக்கு வெளிப்படையாகத் தெரியாது.
எந்தக் காரணங்களுக்காக
ஓர் ஆன்மா
ஓர் குறிப்பிட்ட உடலைத்
தேர்ந்தெடுக்கிறது என்பது
நமக்கு வெளிப்படையாகத்
தெரியாது.
புது உடலை எடுத்த உடனேயே, நாம்
அனைவருமே, நாம் ஏன் இந்த உடலை
எடுத்தோம் என்பதையும், நமது ப்ராரப்த
கர்மாளையும் மறந்துவிடுகிறோம்.
நம்மை எது இங்கே கொண்டு வந்தது என்று தெரிந்தால், நமக்கு மிகவும் சௌகரியமாக இருக்கும். அது தெரிந்தாலாவது, அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்யவாவது நாம் முயற்சிசெய்து கொண்டிருக்கலாம்! அவை நிறைவேறிவிட்டால் போதும், நமது கர்மாக்கள் கரைந்துவிடும், நமது ஆன்மாவும் ஜீவன்முக்தி அடைந்துவிடும். கர்மா, நன்மை, தீமை பற்றிய முழுச் சித்தாந்தமும் முட்டாள்தனமானவையே. இது, உங்களை இறுக்கமாகக் கட்டி வைப்பதற்கான ஒரு மூக்கணாங்கயிறாக இருக்கிறது, அவ்வளவுதான்.
ஏழைகளுக்குப் பணத்தை வாரி வழங்குவதாலும், வழிபாட்டுத் தலங்களுக்கு நிதியுதவிகளை வழங்குவதாலும் சொர்க்கத்தில் நுழைவதற்கான புண்ணியங்களைத் தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தால், நீங்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆசிரமத்திற்கு நன்கொடை தர விரும்புபவர்களிடம் நான் சொல்வதெல்லாம், "நீங்கள் இறக்கும்போது உங்களுக்குச் சொர்க்கத்தில் இடம் வாங்கித்தர, உங்களுக்காக நித்யானந்தர் சொர்க்கத்தின் வாசற்படியில் நின்று கொண்டிருப்பார் என்று நினைக்காதீர்கள்," என்பதுதான். அதுபோல எதுவும் நடக்காது.
இப்போது நீங்கள் என்ன
கொடுக்கிறீர்களோ, அதற்கு மாற்றாக
நீங்கள் இறந்த பிறகு ஏதாவது பெற,
இங்கு எந்தப் பரிவர்த்தனை சலுகையும்
கிடையாது. எந்த நிபந்தனையும் இல்லாமல்
உதவி செய்யும் மன அமைப்புடன் நீங்கள்
நன்கொடை அளித்தால், அந்த நல்ல மன
அமைப்பு மட்டுமே உங்களைப் பின்தொடரும்.
> நம்மை எது இங்கே
> கொண்டு வந்தது என்று
> தெரிந்தாலாவது,
> அந்த ஆசைகளைப்
> பூர்த்தி செய்யவாவது
> நாம் முயற்சிசெய்து
> கொண்டிருக்கலாம்!
> அவை நிறைவேறிவிட்டால்
> போதும், நமது கர்மங்கள்
> கரைந்துவிடும்
இறக்கும்போது நமது ஜீவன், வலிமிகுந்த மற்றும் இருள் நிறைந்த காரண சரீரத்தின் வழியாகச் செல்லும்போது ஏற்படும் ஆழமான வலியின் காரணமாக, நாம் ஏன் இங்கு வந்தோம் என்பது நமக்கு மறந்துவிடுகிறது.
காரண சரீரத்தின் இருளும், வலியின் காரணமாக ஏற்படும் கோமா நிலையும் தாயின் கருப்பையிலிருந்து நம் உடல் வெளியேறும் வலி நிறைந்த, இருண்ட பாதையை ஒத்திருக்கும். இந்தச் சமயத்தில்தான் ஆன்மா இறக்கும் உடலிலிருந்து வெளியேறி, ஒரு புது உடலுக்குள் நுழைகிறது.
நாம் ஏன் இங்கே வந்திருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்திப் பார்ப்பதும், அதாவது நமது ப்ராரப்த கர்மாக்களைத் தெரிந்து கொள்வதும், ஓர் உணர்வுபூர்வமான பிறப்பை எடுப்பதும் சாத்தியமே. இது ஞானிகளுக்குச் சாத்தியம்.
இது மற்றவர்களுக்கும்கூட சாத்தியமே. அதற்கான செயல்முறையை நான் ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்னரே, அந்தத் தாய் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
தீக்ஷை அளிக்கப்பட்ட எங்களது ஆசிரியர்களால் நடத்தப்படும் நித்யானந்த ஸ்பூரண தியான முகாம்களில், ஆன்மா பயணிக்கும் ஒவ்வொரு சக்தி அடுக்குகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தியானங்களின் மூலம், ஆன்மா உடலை விட்டுப் பிரியும்போது பயணிக்கும் பாதையில் நாங்கள் உங்களை அழைத்துப் போகிறோம்.
இந்தப் பாதையில் பயணிக்கும்போது, உங்கள் மன அமைப்பினால் வளர்க்கப்பட்ட உங்களின் கடந்த கால ஸம்ஸ்காரங்கள் அனைத்தும், எரிக்கப்பட்டுவிடும். நீங்கள் ஜீவன்முக்தி அடைவீர்கள். அத்வைதானுபவத்தின் ஒரு துளியை அனுபவமாகப் பெறுவீர்கள்.
அந்தத் தியானங்களுள் ஒரு தியானத்தின்போது, ஏன் இங்கு வந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்வீர்கள். உங்களின் ப்ராரப்த கர்மா உங்களுக்குத் தெரிய வரும். அதன்பிறகு, எதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்களோ, அதன்மீது உங்கள் கவனத்தைச் செலுத்த முடியும்; நீங்கள் முக்திக்கான சாதனைகளில் ஈடுபடலாம்.
எந்த நிபந்தனையும்
இல்லாமல் உதவி செய்யும்
மன அமைப்புடன் நீங்கள்
நன்கொடை அளித்தால்,
அந்த நல்ல மன அமைப்பு
மட்டுமே உங்களைப்
பின்தொடரும்.
ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், பெற்றோர்களின் குணம், குழந்தைகளின் வாஸனைகள் மற்றும் ப்ராரப்த கர்மாக்களோடு ஓரளவே சம்பந்தப்பட்டதாக இருக்கும். சில வேளைகளில், அது முழுக்க முழுக்க எதிர்மறையான வழியில்கூட போகலாம்.
உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் வருகிறார்கள். அவர்கள், அவர்களின் முந்தைய பிறப்புக்களில் ஒருமுறையாவது இந்தியாவில் பிறந்திருக்கவில்லையென்றால், அவர்களுக்கு வேத கலாசாரங்களைப் பற்றித் தெரிந்திருக்கவில்லையென்றால், அவர்களால் இங்கு வந்திருக்க முடியாது என்று நான் சொல்வதுண்டு! அவர்கள் தங்களின் 'மூல வே வருக்கே திரும்பி வந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.
'இந்த உடலை எதற்காக எடுத்திருக்கிறோம்' என்று, அதற்கான காரணத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க ஆன்மா முயற்சிக்கிறது. ஆனால் அப்படி நினைவுபடுத்திப் பார்ப்பதில் எப்போதும் அது வெற்றி அடைவதில்லை. இறுதியில் அது உடலைவிட்டுப் பிரியும் நேரத்தில்தான், அதனுடைய ஆசை நினைவுக்கு வருகிறது! இப்படிப் பல முறை நடக்கிறது.
இப்படித் தோல்வியடைந்த பல பயணங்களுக்குப் பின்னரே, அந்த ஆன்மா, 'போதும். இனி நான் முக்தியைத்தான் தேட வேண்டும்; என்னைக் கடைத்தேற்றவல்ல என்னுடைய குருவை நான் கண்டுபிடித்தாக வேண்டும்' என்று முடிவெடுக்கிறது.
அதனால் அது, சில சமயங்களில், குருவை நோக்கி அழைத்துச் செல்லும் தீர்க்க முடியாத நோயை ஏற்கிறது. பல மக்கள் தியான சிகிச்சை பெறுவதற்காக மட்டுமே என்னைத் தேடி வருவதுண்டு. அவர்களுக்கு அது ஒன்றே வழி. அவர்களுடைய உடல்நோயே அவர்களை என்னிடம்கொண்டு வருகிறது. நீங்கள் விடுதலை அடைய வேண்டும் என்று உங்கள் இருப்பு உங்களை வற்புறுத்துகிறது. நீங்கள் குருவைச் சென்றடையும்வரை, உடல்நிலையைப் பாதிக்கச் செய்கிறது.
மீண்டும் உங்கள் கேள்விக்கு வருவோம், ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் குணங்களில் வேறுபட்டவர்களாகத் தெரியலாம். ஆனால் அந்த வேறுபாடுகளுக்குள்ளும் அடிநாதமாக ஏதோ ஒரு நூலிழை அவர்களை ஒன்றிணைக்கிறது. அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அந்த ஆன்மா அங்கு ஒரு காரணத்திற்காகவே வந்திருக்கிறது.