KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/நாம் எதை உண்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

நாம் எதை உண்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

17.7 முவ்விதமான பொருள்சார்ந்த இயல்புகளுக்கு ஏற்றபடி, உணவு முவ்வகைப்படும். அவ்வாறே யாகம், தபஸ், தானம் ഇവையும் முவ்வகைப்படும். இம்மூன்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கேள்.

17.8 நீண்ட ஆயுளையும், ஆற்றலையும், வலிமையையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கின்ற உணவுகள், மென்மையானதாகவும் எளிதாக ஜீரணமாகக் கூடியதாகவும், சாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஸத்வ குணமுடையவர்கள் இதுபோன்ற உணவுகளை விரும்புவார்கள்.

17.9 ரஜோ குணமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, உறைப்பான, உலர்ந்த, எரியச் செய்கின்ற உணவுகளை விரும்புவார்கள். இவை வலியையும் வேதனையையும் நோயையும் உண்டாக்குகின்றன.

17.10 தமோ குணமுடையவர்கள், யாமங்கழிந்த, சுவையற்ற, அழுகிய,
பழைய, ஒதுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும்
உணவுகளை விரும்புவார்கள்.

ஸத்வ, ரஜோ மற்றும் தமோ குண இயல்புகொண்ட நபர்கள் உண்கிற உணவின் தன்மையைப் பற்றி கிருஷ்ணர் பேசுகிறார்.

இந்த மனிதர்கள், எந்த மாதிரியான உணவை விரும்புகிறார்கள், எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறார்கள், எந்த மாதிரியான புரிதலை தங்கள் வாழ்க்கையில் உணர்கிறார்கள் என்பதைப் பற்றி அவர் விவரிக்கிறார். இதில் மிகவும் முக்கியமான விஷயம் எந்த மாதிரியான புரிதலை அவர்கள் பெறுகிறார்கள் என்பதே.

சாரத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஒரே வார்த்தையை பல்வேறு விதமாகப் புரிந்துகொள்ளலாம். தாம் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற தமது மனைவியையும், குழந்தையையுமே தியாகம் செய்த ஹரிச்சந்திர மஹாராஜாவின் கதையைச் சொன்ன ஓர் அறிஞரின் கதையை ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன். கதையைச் சொல்லி முடித்த அந்த அறிஞர் இரண்டு பேரிடம், "இந்தக் கதையிலிருந்து நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று கேட்டார்?'

ஒரு நபர், "நாம் சாக நேர்ந்தாலும்கூட, ஸத்யத்தையே பேச வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்," என்று சொன்னார்.

இப்போது நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம்,
ஒப்புக்கொள்ளுபவர்கள்
மட்டத்திலிருந்து
ச்ரத்தையாளர் மட்டத்திற்குச்
'சட்டென' உயருவதுதான்.

மற்றொருவர், "ஒரு அவசரத் தேவை
ஏற்பட்டால், மனைவியை விற்​கலாம்,
அதில் தவறு ஒன்றும் இல்லை என்பதைப்
புரிந்துகொண்டேன்!'' என்றார்.

ஒரே கதையிலிருந்து, இரண்டு
வேறுபட்ட புரிதல்கள் ஏற்படுகின்றன.
பேரரசர் ஹரிச்சந்திரர் கதையில், அவர்
தமது வாக்குறுதியை நிறைவேற்றவும்,
எந்நிலையிலும் ஸத்யத்தையே உரைக்க

வேண்டுமென்ற தமது நிலைபாட்டை நிலைநாட்டவும், தமது ராஜ்ஜியத்தை விட்டுக்கொடுத்தார்; தன்னுடைய மனைவியையும் மகனையும் விற்றார்; இறுதியில், தம்மையும் விற்றார்; தம் மனைவியைக் கொல்லவும் தயாரானார். நாம் வார்த்தைகளை, அவற்றின் கருத்தின் சாரத்தோடும் உணர்வோடும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு சின்ன கதை: கடவுளின் போதனைகளைப் பரப்ப ஒரு பாதிரியார் அலாஸ்காவிற்கு அனுப்பப்படுகிறார். புறப்படுவதற்கு முன்னால், தலைமைப் பாதிரியார் அந்தத் பாதிரியாரை ஆசீர்வதித்து, "உன்னுடைய ஜெபமாலையும் வைனும் உன்னை நலமுடன் காக்கும், கவலைப்படாதே," என்றார்.

callout

'ஜெபமாலை' என்பது பிரார்த்தனை
செய்யும்போது பயன்படுத்தும்
மணிமாலை; பிரார்த்தனையின்போது,
பிரசாதமாகக் கொடுக்கப்படுவதே 'வைன்'.
இது, ஏசுவின் இரத்தம் மற்றும் தியாகத்தின்
அடையாளமாகக் கருதப்படுகிறது.
இதையே தலைமை பாதிரியார்,
'ஜெபமாலையும், வைனும் உன்னை
நலமுடன் காக்கும்' என்றார்.

ஒரு வருடத்திற்குப் பிறகு, அப்பாதிரியாரிடம் ஒப்படைக்கப்பட்ட இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து ஆராய, தலைமைப் பாதிரியார் அங்குச் சென்றார். அந்தப் பாதிரியாரும் அவரை தகுந்த மரியாதையோடு வரவேற்றார்.

தலைமைப் பாதிரியார், "இயக்கத்தின் வேலைகள் எப்படி நடைபெற்று வருகின்றன?" என்று வினவினார்.

அந்தப் பாதிரியார் சொன்னார், "ஃபாதர், நீங்கள் சொன்னதுபோலவே, ஜெபமாலையும் வைனும்தான் என்னைக் காத்தனர். அவை மட்டும் இல்லையென்றால், நான் இந்தக் குளிரில் இறந்திருப்பேன்."

பேசிக் கொண்டிருக்கும்போதே, "ஃபாதர், உங்களுக்கு ஒரு கோப்பை வைன் கொண்டுவரச் சொல்லட்டுமா?" என்று பாதிரியார் கேட்டார். தலைமைப் பாதிரியாரும், "சரி, கொண்டுவரச் சொல்லுங்கள்," என்றார். உடனே பாதிரியார் சமையலறைப் பக்கம் திரும்பி, "ஜெபமாலை, ஒரு கோப்பை வைன்கொண்டு வா!!!" என்றார். வார்த்தைகள் மிகச் சுலபமாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம்!

தயவுசெய்து வார்த்தைகளின் சாரத்தைத் தவறவிட்டு விடாதீர்கள். வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் கருத்தை, உண்மையான அர்த்தத்தை, ஸத்யத்தைத் தவறவிடுவது என்பது மிகவும் சுலபம்.

சிரத்தை ஆன்மீகத்தின் அடிப்படைத் தகுதி

ஸத்யங்களைத் துணிவுடன் பரிசோதித்துப் பாருங்கள். அது உங்களால் முடியவில்லையென்றால், அந்த ஸத்யம் உங்களுக்கானது இல்லை என்று உணர்ந்தால், அதை மறந்துவிடுங்கள். குறைந்தபட்சம், வேறு எங்காவது போய்த் தேடவாவது முடியும்.

‘இது ஸத்யமே’ என்று நினைக்கிறீர்கள், ஆனாலும் அதை உங்கள் வாழ்க்கையில் அதைச் செயல்படுத்தவில்லையென்றால், அதைப் பரிசோதிக்கவில்லையென்றால், அதைக் கைவிடுங்கள்! இல்லையென்றால், ஸத்யங்களைக் கேட்பதும், அதைப் பயிற்சிசெய்யாமல் விட்டுவிடுவதும் உங்களுக்கு ஒரு பழக்கமாகிவிடுகிறது. அதுவொரு மன அமைப்பாகவே ஆகிவிடுகிறது. அது மிகவும் ஆபத்தான மன அமைப்பு.

text box

மக்கள் என்னிடம் கேட்பதுண்டு,
"ஸ்வாமிஜி, ஞானமடைவதற்காக நான்
எல்லாவற்றையும்துறைந்துவிடவேண்டுமா?"

"இல்லை. அதற்கு அவசியம் இல்லை.
ஆனால் ஒன்றை மட்டும் செய்யுங்கள்.
ஸத்யங்களை உள்வாங்கியபிறகும்,
அதைப் பயிற்சிசெய்யாமல் விட்டுவிடும்
மன அமைப்பை வைத்திருக்காதீர்கள்.
அவ்வளவுதான்."

எந்த ஜீவனுக்கும் நிகழக்கூடிய

ஆபத்துகளிலேயே மிகவும் ஆபத்தான
ஆபத்து அதுதான். ஆழமாகப்
புரிந்துகொள்ளுங்கள், பயிற்சிசெய்து
பரிசோதித்துப் பார்க்கும் துணிவு
இல்லாமல் ஸத்யத்தைக் கேட்பதும், அதை
அறிவுபூர்வமாகப் புரிந்துகொள்வதுமே,
மோசமான மன அமைப்புகளிலேயே
மிகவும் மோசமான மன அமைப்பு. அதுவே
உங்களைப் பீடிக்கும் மிகவும் மோசமான
அரக்கத்தனம்.

ஞானி - உங்கள் ஜீவனின் சார்பாக உங்களிடம் பேசுபவர்

இதுவரை நீங்கள் நிறைய விஷயங்களைக் கேட்டிருப்பீர்கள். இந்த அத்தியாயத்தில் கிருஷ்ணர் புதிதாக எதையும் சொல்லவில்லை. அவர் ஒன்றை மட்டுமே சொல்கிறார், "ச்ரத்தையோடு இருங்கள். ச்ரத்தை ஒன்றே நேர் வழி.

நான் மக்களிடம் சொல்வது இதுவே: "நேர்மையே அடிப்படை ஆன்மீக நற்குணம். ச்ரத்தையே அடிப்படை ஆன்மீக பண்பு."

முதலில் நல்ல பண்பாளராக இருங்கள். அப்படியென்றால் மட்டுமே நீங்கள் ஒரு ஆன்மிகவாதியாக இருக்க முடியும். நல்ல பண்பாளர் என்பதன் பொருள், நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதற்கு ச்ரத்தையுடன் இருப்பது, உண்மையத்திற்கு உண்மையுடன் இருப்பது!

ஸத்யத்தைப் பற்றிய தெளிவில்லாமல், ஒருபோதும் எதையும் செய்யாதீர்கள். அதேபோல, 'இதுவே ஸத்யம்' என்று ஒன்றை நீங்கள் அறிந்துவிட்டால், கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் அதனை ஒருபோதும் கைவிடாதீர்கள்.

ஒரு விஞ்ஞானி, ஸத்யத்தின் வழிசெல்வதற்குப் போதிய துணிவு கொண்டுள்ளார். அவர் மேற்கொள்ளும் ஓர் ஆராய்ச்சி அவரை எங்கு வழிநடத்திச் சென்றாலும், அதைப் பரிசோதிக்க அவர் தயாராகவே இருக்கிறார்.

அதேபோல், நீங்கள் ஒரு உள்ளுலக விஞ்ஞானியாக - ஓர் ஆன்மீக விஞ்ஞானியாக மாற வேண்டும். வார்த்தைகளுக்குள் இருக்கும்

அனுபவத்தைப் பின்பற்றிச் செல்கின்ற துணிவு உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் அதனோடு விளையாடக் கூடியவராக இருக்க வேண்டும்.

உங்கள் ஜீவன் சக்தியால் நிரம்பி வழியட்டும்

ஒரு சின்ன கதை:

ஒருமுறை, ஒரு ஜென் ஞானியும், அவருடைய சீடரும் நதியில் நீராட இறங்கியபொழுது, திடீரென்று சீடர் நதியில் சறுக்கிக் கீழே விழுந்துவிட்டார். உடனே அவர், "குருவே, என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்," என்று கத்தினார்.

text box

ஜென் ஞானி: நீ ஆத்மன், நீ கடவுள், உன்னை நீயே காப்பாற்றிக் கொள்!

சீடர் இறைஞ்சினார்: "குருவே, தயவுசெய்து முதலில் என்னைக் காப்பாற்றுங்கள், அதற்குப் பிறகு நீங்கள் எனக்குத் தத்துவ உபதேசம் செய்யுங்கள், தியானம் கற்றுக் கொடுங்கள்."

ஞானி சொன்னார், "எழுந்து நில், உன்னை நீயே காப்பாற்றிக் கொள்."

சீடர் அலறினார்: "குருவே, முதலில் என்னைக் காப்பாற்றுங்கள். பிறகு எனக்குக் கற்றுக் கொடுங்கள்."

ஞானி உறுதியான தீர்க்கமான குரலில், "முட்டாளே, நான் உன்னை எழுந்து நிற்கச் சொல்கிறேன். எழுந்து நில்," என்றார்.

சீடர் பயந்து விட்டார். பயத்தினால் சட்டென்று எழுந்து நின்ற அவர், தம் முழங்கால் மட்டுமே தண்ணீர் இருப்பதை உணர்ந்தார்.

நீங்கள் எழுந்து நிற்கும்போது, ஸம்ஸார ஸாகரத்தை - வாழ்க்கைப் பெருங்கடலை முழுமையாகப் புரிந்துகொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கவலைகளாக எதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ, அவையெல்லாம் உங்கள் முழங்கால் அளவிற்குக்கூட இல்லை. அவை உங்களின் கணுக்கால் அளவிற்குதான் இருக்கிறது. நீங்கள், கீழே படுத்துக் கொண்டிருப்பதாலும், எழுந்து நிற்காததாலுமே, நீங்கள் மூழ்கிக் கொண்டிருப்பதாகவும் இறக்கப்போவதாகவும் நினைக்கிறீர்கள்.

என்னுடைய அனுபவத்திலிருந்து சொல்கின்றேன், நீங்கள் எழுந்து நின்றால், தண்ணீரின் மட்டம் உங்கள் முழங்கால் அளவிற்கே உள்ளது என்பதை உணர்ந்துகொள்வீர்கள்.

நீங்கள், ஸம்ஸார ஸாகர - வாழ்க்கைப்
பெருங்கடலாக எதைக் கருதினாலும், அது
உங்கள் முழங்கால்வரை மூழ்கும் ஆழமே.
அது ஒரு பொருட்டே அல்ல. அது
உங்களை எந்த வகையிலும் பாதிக்காது.
ஆனால் உங்களுக்கு எழுந்து நிற்பதற்கான
துணிவு வேண்டும்.

உதாரணமாக, அந்தச் சீடர், 'நான் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன், இதிலிருந்து என்னை மீட்டு எனக்கு உதவுவதற்குப் பதிலாக, என்னுடைய குரு நடைமுறைக்குச் சாத்தியமற்ற விஷயங்களை எனக்குப் போதித்துக் கொண்டிருக்கிறார், என்ன மாதிரியான குரு இவர்?' என்று தீர்மானித்திருந்தால், குருவின்மீது குற்றஞ்சாட்டியிருந்தால், அவர் நதியின் நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார்.

அவர் துணிவு கொண்டிருந்தார், குருவின் வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும் துணிவு அவருக்கு கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற்பட்டது; அவர் காப்பாற்றப்பட்டார்.

உங்களுக்கு வேண்டியது, நீங்களாகவே எழுந்து நின்று, ஸத்யத்தைப் பார்க்கும் துணிவு மட்டுமே. சோதித்துப் பார்ப்பதற்கான துணிச்சலைக் கொண்டிருப்பது என்பதன் பொருள் அதுவே. எதையுமே நாம் இழக்கப் போவதில்லை. அவ்வாறு ஏதாவது இழக்கப்படுவதாக இருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை இழந்துவிடுவது நல்லது.

water drop

அந்த முறையிலாவது நீங்கள் அந்த விஷயத்திலிருந்து, அந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். ஸத்யத்தைப் பயிற்சி செய்யும்போது எதையாவது இழக்க வேண்டியதிருந்தால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அதை இழந்துவிடுவது நல்லது. எவ்வளவு சீக்கிரமாக அதை இழக்கிறீர்களோ, அந்த அளவிற்கு நீங்கள் நன்மையையே அடைவீர்கள்.

உங்கள் ‘இருப்பை’ ஸத்யத்தால் நிரம்பி வழியச் செய்யுங்கள். எதெல்லாம் நிலைத்து நிற்க முடியாதோ, எதெல்லாம் அடித்துச் செல்லப்படுகிறதோ, அதெல்லாம் அடித்துச் செல்லப்படட்டும். அது உங்களின் ‘இருப்பில்’ இருந்து, எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரமாக வெளியேறட்டும்.

உணவும், உடல் - மன அமைப்பு முறையும்

கிருஷ்ணர் இங்கே பல்வேறு விதமான உணவுப் பொருட்களின் சக்தியைப் பற்றி விளக்குகிறார். பொதுவாக, தாவரங்களிலிருந்து பெறப்படாத, அதாவது விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவுகள் எதிர்மறை சக்தியையே கொண்டிருக்கும். சூடான, காரமான மசாலா உணவு வகைகள் ஆசைகளை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்யும்.

காரமற்ற, புத்தம்புதிய சைவ உணவு வகை களே ஆன்மீகப் பயிற்சிகளுக்கு உகந்தவை.

நமது நித்ய தியான சிகிச்சை முறையில்,

quote illustration

உங்கள் ‘இருப்பை’ ஸத்யத்தால் நிரம்பி வழியச் செய்யுங்கள். எதெல்லாம் நிலைத்து நிற்க முடியாதோ, எதெல்லாம் அடித்துச் செல்லப்படுகிறதோ, அதெல்லாம் அடித்துச் செல்லப்படட்டும்.

தியான சிகிச்சையாளர்கள் சைவ உணவைச்
சாப்பிடுபவர்களாகவும், மது, புகையிலை,
போதைப் பொருட்கள் போன்ற
பொருட்களைத் துறந்தவர்களாகவும் மாற
வேண்டியது அவசியமாகிறது.

தியான சக்தி
மிகுந்த ஆற்றலுடன்
இருக்க வேண்டுமானால்,
எதிர்மறை சக்தி
கொண்ட பொருட்களை
உபயோகிக்கக்கூடாது.

மது மற்றும் மாமிசம் போன்றவற்றைக் குறித்து எனக்கு எந்தவிதக் கோட்பாடுகளும் கிடையாது. ஆனால், ‘மாமிசம் சாப்பிடுவது மிருகங்களுக்குச் செய்யும் கொடுமை’ என்று ஒருவர் விவாதிப்பாரேயென்றால், காய்கறிகளைச் சாப்பிடுவதும் தாவரங்களுக்குச் செய்யும் கொடுமைதான். ஏனெனில் தாவரங்களுக்கும் உயிர் உண்டு. ஆனால் தாவரங்களின் அலைவரிசை வேறு, அவ்வளவே.

நித்ய தியான சிகிச்சை முறை ஆழ்ந்த தியான நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தியான சக்தி மிகுந்த ஆற்றலுடன் இருக்க வேண்டுமானால், எதிர்மறை சக்திகொண்ட பொருட்களை உபயோகிக்கக்கூடாது.

இந்தத் தியானங்கள் மாமிசம், புகையிலை, மது போன்ற விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை. தியான சிகிச்சையாளர்கள் மாமிசம் உண்டாலோ, புகைபிடித்தாலோ அல்லது மது அருந்தினாலோ, அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நான் கண்டிருக்கிறேன்.

இந்த விதி, தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்தக்கூடிய முறையில் மிகக் கடுமையாக இருப்பதாகப் பல பக்தர்கள் புகார் சொல்வார்கள். நான் என்ன செய்ய முடியும்? அதனால் நான் இந்த முறையை, குறிப்பாக, தியான சிகிச்சையாளர்களாக மாற விரும்பும் பக்தர்களைத் திருப்திப்படுத்துவதற்காக, மாமிசம் உண்ணவும், மது அருந்தவும், புகைபிடிக்கவும் அனுமதிக்கின்ற தங்களை மட்டும் குணப்படுத்திக் கொள்ளும் (Self Healing) முறையாக மாற்றி அமைத்திருக்கிறேன்.

ஆனால் இதில் சுவாரஸ்யமான முன்னேற்றம் என்னவென்றால், இந்த தியான சிகிச்சையாளர்கள், தாங்களாகவே மாமிசம், சிகரெட், மது

போன்றவற்றை விட்டு விடுகிறார்கள்!
சிறிது காலத்திற்குப் பிறகு, உடல்-மன
அமைப்புமுறை தானாகவே, கீழான
சக்திகொண்ட உணவுகளை நிராகரித்து
விடுகிறது.

ஆழமான தியான நுட்பங்களைப் பயிற்சிசெய்யும் ஒருவர், சக்தி களத்திற்குள் (Energy field) இருக்க வேண்டியது அவசிய மாகிறது.

கிருஷ்ணர் பயன்படுத்தும் ஆஹார் என்ற
வார்த்தை, வெறும் நாக்கிற்கான ஆஹாரத்தை
மட்டுமல்ல, எல்லாப் புலன்களுக்குமான
ஆஹாரத்தையும் குறிக்கிறது.

எல்லாப் புலன்வழி ஆஹாரங்களுமே, ஒருவரை ஆன்மீகப் பாதையில் முன்னேற்றுவதற்கு உதவுகின்ற விஷயங்களான நீண்ட ஆயுள், நற்பண்பு, வலிமை, ஆரோக்கியம், மகிழ்ச்சி, சந்தோஷம் போன்றவற்றை ஸாத்விக வழியில் மேம்படுத்துபவையாக இருக்க வேண்டுமென கிருஷ்ணர் விவரிக்கிறார்.

பிரபஞ்ச சக்தியே, மனிதர்களின் சக்தி

கேள்வி: ஸ்வாமிஜி, ஆயுர்வேத மருத்துவம், ஒவ்வொருவரின் உடல்-மன அமைப்புக்கு ஏற்ற உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறது. அவையும், கிருஷ்ணர் சொல்வதும் ஒன்று தானா?

ஆயுர்வேதம் என்பதற்கான சரியான அர்த்தம் ‘வாழ்வைப் பற்றிய அறிவு அல்லது விஞ்ஞானம்’ என்பதே. இது ஆரோக்கியத்திற்கான பண்டைய இந்திய முறை. ஆயுர்வேதம், மற்ற பெரும்பாலான மருத்துவ முறைகளைப் போன்று நோய்களைக் குணமாக்குவதில் கவனம் செலுத்துவதைப் பற்றியது அல்ல. அது தனி மனித வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தையும் முக்கிய அடிப்படையாகக் கொண்டது.

ஆயுர்வேதக் கோட்பாடு, பிரபஞ்சத்துடன் நமக்கிருக்கும் உறவுமுறை யின் அடிப்படையில் அமைந்ததே. பிரபஞ்சத்தின் அதே சக்திதான் நம்முள்ளும் உள்ளது என்கிற மூலக் கருத்திலிருந்துதான் ஆயுர்வேதம் உருவானது.

தைத்ரிய உபநிடதம், பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஐம்பூதங்களின் சக்தியைப் பற்றியும், அவை எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கின்றன என்பது பற்றியும் விவரிக்கிறது. பிரபஞ்ச சக்தியிலிருந்து, முதலாவதாக, ஆகாசம் எழுகிறது. ஆகாசத்திலிருந்து வாயு உருவாகிறது. வாயுவிலிருந்து அக்னி தோன்றுகிறது. அக்னியானது ஆப - தண்ணீரைத் தோற்றுவிக்கிறது. நீரிலிருந்து ப்ருத்வி - மண் உருவாகிறது. மண்ணிலிருந்து, பிரபஞ்சத்தின் அதே சக்தியாக இருக்கின்ற ஜீவராசிகளின் வாழ்வாதரமான தாவரங்களும் மூலிகைகளும் வளர்ந்தன.

தாவர மூலிகை உணவுகளில் நிறைந்திருக்கும் பிரபஞ்ச சக்தியின் இந்த ஐந்து மூலக்கூறுகளே, எல்லா ஜீவராசிகளின் வாழ்வாதரமாக இருக்கின்றன. ஆயுர்வேதம் சக்தி ஆதாரங்களையும் (Source of Energies), சக்திகளையும் (Energies), சக்தி தாங்கிகளையும் (Energy carriers), சக்தி நுகர்வோர்களையும் (Energy consumers) ஆன்மிக முறையில் இணைக்கிறது. அதனால் உணவு என்பது ஆரோக்கியத்திற்கான முறையின் ஓர் உள்ளார்ந்த பாகமாக இருக்கிறது.

மனிதர்கள் வாதம், பித்தம், கபம் எனப்படும் மூன்று விதமான தோஷங்களை உடையவர்களாக இருக்கிறார்கள் என ஆயுர்வேதம் வகைப்படுத்துகிறது. இம்மூன்று விதமான தோஷங்கள், நம்முடைய செயல்களுக்குக் காரணமாக விளங்கும் முக்குணங்களைப் போன்றவை அல்ல; நம்முள் உச்சமாக இருக்கின்ற சக்திகளின் கலவையே அவை. உதாரணமாக, நமக்குள் இருக்கும் ஆகாசம் மற்றும் வாயுவின் கலவையே வாதம் என்பது.

ஆயுர்வேத முறையில், பகுத்தாய்வுசெய்து
நமது உடல் - மனத்தின் இயல்புகள் எந்தப்
பிரிவைச் சார்ந்திருக்கின்றன என்பதைக்
கணித்துவிட முடியும்.

ஆயுர்வேதம், ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்ற

> ஆயுர்வேதம், நோய்களைக்
> குணமாக்குவதில்
> கவனம் செலுத்துவதைப்
> பற்றியது அல்ல.
> அது, தனி மனித
> வாழ்க்கை முறை மற்றும்
> ஆரோக்கியத்தையும்
> முக்கிய அடிப்படையாகக்
> கொண்டது.

வெவ்வேறு வகையான உணவு வகைகளை, இனிப்பு, உறைப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவைகளின் அடிப்படையில் பரிந்துரைக்கிறது. எந்தப் பிரிவினருக்கு எந்தச் சுவை ஆரோக்கியமானது என்பதையும், அதன் அடிப்படையில் எந்த மாதிரியான காய்கறிகள், பழங்களை அவர்கள் சாப்பிட வேண்டும் என்பதையும் பிரத்யேகமாகப் பரிந்துரைக்கிறது.

உணவு, முழுமையான ஆயுர்வேத முறையில் அமைவதற்கு உதவும் சமையல் முறைகளையும் அது குறிப்பிடுகிறது.

அன்போடு சாப்பிடுங்கள்

உணவின் தூய்மை மற்றும் உணவின்
இயல்பின் அடிப்படையில் அமைந்த ஒரு
பொதுவான உணவுமுறையைக் கிருஷ்ணர்
குறிப்பிடுகிறார்.

பழைய மற்றும்
கெட்டுப்போன
தாமஸிக உணவுகளை
உண்பதற்கு
வேதப்பாரம்பரியம்
தடை விதிக்கிறது

பழைய மற்றும் கெட்டுப்போன
தாமஸிக உணவுகளை உண்பதற்கு வேதப்
பாரம்பரியம் தடை விதிக்கிறது என
கிருஷ்ணர் விளக்குகிறார். சமைத்த சில
மணி நேரங்களுக்குள் உணவை உண்டுவிட
வேண்டும் என்பது கட்டாய விதிமுறை.
நேரங்கழிந்த உணவை உண்ணக்கூடாது.

தற்போது நாம் உணவை மாதக் கணக்கில் குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தி வைக்கிறோம்! எப்படி நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்?

மக்கள் அரிதாகவே புத்தம் புதிதான உணவைச் உண்கின்றனர். ஒவ்வொன்றையுமே தனித்தனியாக முன்கூட்டியே தயார்செய்து வைத்துக்கொண்டு, பிறகு அவற்றைக் கலந்து மின்னடுப்பில் வைத்து சூடுபடுத்தி உண்கின்றனர். இதுபோன்ற உணவுகளையே உண்ணும் மக்களுக்கு என்ன மாதிரியான மரபணு மாற்றம் நிகழும் என்பதை கடவுள் மட்டுமே அறிவார்.

சமைத்த சில மணி நேரங்களுக்குள் உண்ணுங்கள். 'சமைக்காத உணவையே சாப்பிட வேண்டும்' என்று சிலர் சொல்கிறார்கள். அப்படி, உணவைச் சமைக்காமல் சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நெருப்பும், வெப்பமும் நல்ல சக்திகள்தான். ஆனால் எந்த வகையான பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கப் படும் உணவுகள் நோய்களையே தரும், சக்தியைத் தராது.

உணவை எப்படிச் சமைக்க வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதையே நாம் மறந்து விட்டோம். பல்பொருள் அங்காடிகள்தான் (Super market) உணவு வகைகள் விளையுமிடம் என குழந்தைகள் நினைக்கும் காலம் வெகு தூரம் இல்லை.

அவர்களுக்கு விவசாயம் பற்றிய, பயிர்களைப் பற்றிய அறிவு இருக்கப் போவதில்லை. ஏனெனில், தற்போது நாம் பயன்படுத்தும் பூக்கள்கூட செயற்கையானவையாக இருக்கின்றன. நாம் அவற்றைத் தொடும்போது, அந்தப் பிளாஸ்டிக் நம் விரல்களைக் காயப்படுத்துகிறது.

இது போன்ற உணவுகளைப் பதப்படுத்துவதற்கு, நமக்கு இரசாயனங்கள் தேவைப்படுகின்றன. நாம் நமக்குள் சக்திக்குப் பதிலாக இரசாயனங்களைப் புகுத்தினால், நம்மால் எப்படி ஆரோக்கியமாக வாழ முடியும்?

நாம் ஓடிக்கொண்டே சாப்பிடுகிறோம். சாலையில் நடந்துகொண்டே, ஒரு கையால், அலைபேசியைக் காதருகில் வைத்து பேசிக் கொண்டும், மற்றொரு கையால் பர்கரை வாயில் திணித்துக்கொண்டும் செல்லும் பலரை நான் அமெரிக்காவில் பார்க்கிறேன். இதை அவர்கள் பன்முகத் திறன் என்கின்றனர். மனச் சோர்விற்கும், மன அழுத்தத்திற்கும், நோய்களுக்குமான சுலபமான வழி இதுவே!

நம்மால் இவ்வகையில் அவமதிக்கப்பட்ட
உணவு, இயற்கையாகவே நம்மை அவ
மதிக்கவே செய்யும். இது நம்முள் சில
இடங்களில் தங்கிவிடுகிறது. விளைவு...
ஆரோக்கியக்கேடு நம்மைப் பீடிக்கிறது.
நல்ல உணவான ஆப்பிளை இந்த
முறையில் சாப்பிடுவதே மோசமானதென்
றால், மோசமான உணவான பர்கரை

நம்மால் அவமதிக்கப்பட்ட உணவு, இயற்கையாகவே நம்மை அவமதிக்கவே செய்யும். இது நம்முள் சில இடங்களில் தங்கிவிடுகிறது. விளைவு... ஆரோக்கியக்கேடு நம்மைப் பீடிக்கிறது.

இந்த முறையில் சாப்பிடுவதைப் பற்றிக் கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள்!

புதிய, சுத்தமான உணவை அமைதியாகவும், அதில் உங்கள் கவனத்தைப் பதித்தும் உண்ணுங்கள்.

ஒவ்வொரு கவள உணவையும் கவனத்தோடும் நன்றியுணர்வுடனும் அன்புணர்வுடனும் உண்ணுங்கள். உண்பது, சமுதாய நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் ஒரு தருணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது அப்படி இருக்கவும்கூடாது. உங்களுடைய பொது அளவளாவல்களை உண்பதற்கு முன்போ அல்லது உண்ட பின்போ வைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் உண்ணும்பொழுது, நிகழ்காலத்தில் இருங்கள்.

கிருஷ்ணரின் வார்த்தைகள், உடல் - மன ஆரோக்கியத்திற்கான முழுமையான அர்த்தத்தைக் கொடுக்கின்றன. இயற்கை உணவுகள், அவற்றுக்கே உரிய தனித்துவமான மணத்தையும் நன்மைகளையும் கொண்டிருக்கின்றன. அவற்றோடு மசாலாக்களையோ அல்லது வாசனைப் பொருட்களையோ சேர்க்க வேண்டியதில்லை. அவை அவற்றின் மணத்தையும் நன்மைகளையும் அழித்துவிடுகின்றன.

பூமியிலிருந்து விளையும் பொருட்களை, அதே பசுமையோடு அக்னி சக்தியில் வைத்துப் பக்குவப்படுத்தி உண்ணுங்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். அப்படி சமைத்த உணவை சில மணி நேரங்களுக்குள்ளேயே உண்டு முடியுங்கள், நீங்கள் ஸத்வத்தில் நிலைகொள்வீர்கள். நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்கள்.

Krishna's hands playing flute