KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/எதிர்பார்ப்புகள் இல்லாத தர்மம்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

எதிர்பார்ப்புகள் இல்லாத தர்மம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna

பலனை எதிர்பார்க்காலும், வேத நெறிகளுக்குட்பட்டும், இதுவொரு கடமை என்ற நம்பிக்கையோடும் தீர்மானத்தோடும் எந்த யாகம் செய்யப்படுகின்றதோ, அது ஸாத்விகமானது.

ஓ பரதக்குல சிரேஷ்டனே, பலனை எதிர்பார்த்தோ அல்லது பெருமையைக் காட்டவோ செய்யப்படுகின்ற யாகங்கள், ரஜோ நிலையில் செய்யப்படுபவன என அறிந்துகொள்.

வேத நெறிகளைப் பின்பற்றாத, அன்னதானம் அளிக்கப்படாத, மந்திரக் குறைபாடுடைய, ச்ரத்தை இல்லாத, தக்ஷிணை அளிக்கப்படாத யாகங்கள், தாமஸிகமானது என்று சொல்லப்படுகிறது.

கிருஷ்ணர், தானங்கள் எப்படி அளிக்கப்பட வேண்டும், வேள்விகள் எப்படிச் செய்யப்பட வேண்டும், மற்றவர்களுக்கான சேவைகள் எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகிறார்.

தானம், அது உங்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும்

வேதப் பாரம்பரியத்தில், யாகம், ஹோமம் போன்ற அக்னிச் சடங்குகள், தெய்வங்களை வழிபடுவதற்கான சடங்குகளாக மட்டுமே செய்யப்படவில்லை. அவை, எல்லா உயிர்களுக்கும், ஏழைகளுக்கும் பயனளிக்கக்கூடிய வகையில் இருக்க வேண்டுமென்ற மிக ஆழமான கருத்தில்தான் செய்யப்பட்டன.

obv ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயமுமே, தகுதிவாய்ந்த ஏழைகளுக்குத் தானம் அளிக்க வேண்டுமென்ற ஒரு முக்கிய அம்சத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இதுபோன்ற ஒரு நிகழ்ச்சிக்கு வந்தவர் எவருமே வெறுங்கையோடு திரும்புவதில்லை.

ரிஷிகளும் ஞானிகளும், தாங்கள் வேத நூல்களிலிருந்து புரிந்துகொண்ட, அனுபவித்த ஸத்யங்களின் அடிப்படையில் யாகங்களைச் செய்தார்கள். அவர்கள், தங்களுக்கென்று தனி விருப்பம் எதுவும் கொண்டிருக்கவில்லை. அன்றாட வாழ்க்கையில், ஒரு தினசரி வழக்கமாகவே இவற்றைச் செய்தார்கள். தெய்வங்களும் இயற்கையும் மகிழ்ச்சியடைவதால் பொழியப்படும் அருள்மழையில், மனிதகுலம் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்தச் சடங்குகளை நடத்தினார்கள். இவை, ஸத்வ குணத்தின் சுயநலமில்லாச் சமர்ப்பணங்கள்.

ரிஷிகளும் ஞானிகளும், தங்களுக்கென்று தனி விருப்பம் எதுவும் கொள்ளாமல், யாகங்களைச் செய்தார்கள்.

யுதிஷ்டிரர் போன்ற பேரரசர்கள்கூட அஷ்வமேத யாகம், ராஜஸூய யாகம் போன்ற யாகங்களைச் செய்தார்கள். ஆனால் அவர்கள், தங்களின் வீரத்தைப் பறைசாற்றவும், மற்ற அரசர்களைத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவுமே இவற்றைச் செய்தார்கள். இவை ரஜஸ் தன்மையின் அகங்கார வெளிப்பாடுகள்.

எனினும், அவர்களின் செல்வங்களைத் தாராளமாக வழங்குவதற்கான ஒரு தருணமாகவும் அவை இருந்தன. மற்றொருபுறம் அசுரர்களால், கொடூரத் தன்மையான பலத்தை வேண்டுவதைத் தவிர வேறெந்த நல்ல நோக்கத்தையும் அடிப்படையாகக் கொள்ளாத யாகங்களும் செய்யப்பட்டன. அவற்றில் அறமோ அல்லது தாராள மனப்பான்மையோ கிஞ்சித்தும் இருக்கவில்லை, மேலும், வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் எந்த நெறிமுறையும் பின்பற்றப்படவில்லை. இவை, சுயநலக் காரணங்களுக்காக மட்டுமே செய்யப்பட்டன.

இளம் நசிகேதனின் தந்தை, தாம் செய்த வேள்வியின் இறுதியில், வயதான பால் சுரக்காத பயனற்ற பசுக்களைத் தானமாக வழங்கியபோது, அச்சிறுவன் தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதத்தில், “தந்தையே, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மதிப்புமிக்க பொருட்களையே தானமாகக் வழங்க வேண்டிய தருணத்தில், உபயோகமற்ற பொருட்களை ஏன் தானமாகக் வழங்குகிறீர்கள், வேறெதையும் நீங்கள் வழங்க விரும்பவில்லையென்றால் என்னைத் தானமாகக் கொடுத்துவிடுங்கள்,” என்றான்.

அறியாமையிலும், அதன் விளைவாக
எழுந்த ஆழமான கோபத்திலும் சிக்குண்ட
அவன் தந்தை அவனையே யமனுக்கு
கொடுத்துவிட்டார்.

கொடுப்பதனால்,
நாம் எதையாவது
இழக்க நேர்ந்தாலும்,
அதைப் பொருட்படுத்தாமல்,
கொடுக்கப்படும் ஒரு தானம்
நேரடியாக நம்மை
ஜீவன்முக்‌திக்கு
எடுத்துச்செல்லும்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்து தானத்தின் மதிப்பு அளவிடப்படுவதில்லை. கொடுப்பதனால், நாம் எதையாவது இழக்க நேர்ந்தாலும், அந்த இழப்பு நம்மை வருத்துவதாக இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதையும், மேலும் எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் கொடுக்கிறோமா என்பதையும் பொறுத்தே அளவிடப்படுகிறது. இதுபோன்றதொரு தானம் நேரடியாக ஜீவன்முக்தியை நல்கும்.

பல மக்கள், அருமையான நோக்கத்தோடுதான் தானம் கொடுக்கிறார்கள். ஆனால் அவர்கள், தங்கள் வாழ்க்கைமுறையை எவ்வகையிலும் பாதிக்காத வகையில், தங்கள் செல்வத்திலிருந்து ஏதோ ஒரு சிறுபகுதியைக் கொடுக்கிறார்கள். அது தானமாகாது. அது தியாகமே கிடையாது.

பலபேர் என்னிடம் சொல்வதுண்டு,
"ஸ்வாமிஜி, என் சொத்துக்கள் அனைத்தும்
உங்கள் ஆசிரமத்திற்கே சொந்தமாக
வேண்டுமென, நான் சட்டப்படி உயில்
எழுதி வைக்கின்றேன்," என்பார்கள்.

மரணத்திற்குப் பிறகு எல்லாவற்றையும்
கொடுப்பதில், என்ன முக்கியத்துவம்
இருக்கிறது, அதுவொரு அரிய செயலா?
எப்படியாயினும், நீங்கள் அவற்றை
உங்களோடு எடுத்துச்செல்ல முடியாது.

மரணத்திற்குப் பிறகு
எல்லாவற்றையும்
கொடுப்பதில், என்ன
முக்கியத்துவம் இருக்கிறது?
எப்படியிருந்தாலும்,
உங்களால் அவற்றை
உங்களோடு எடுத்துச்
செல்ல முடியாது.

உண்மையான தானம் என்பது உங்களைப் பாதிக்க வேண்டும். அது உங்களுக்கு ஒரு அசௌகரியத்தை ஏற்படுத்த வேண்டும். இருந்தாலும் நீங்கள், அதை முழு மனத்துடனும் சந்தோஷத்துடனும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமலும் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான சரணடைதலின் சாரம். அதுவே பலனை எதிர்பார்க்காமல் செயல்களைச் செய்வதற்கான ஊக்கம்.

செல்வம், உங்களைத் தேடிவரும்

தங்கள் புகைப்படங்கள் ஊடகங்களில் வரவேண்டுமென்பதற்காக அல்லாமல், பல செல்வந்தர்கள் செய்யும் அருமையான நன்கொடைகளை நான் குறைத்துச் சொல்லவில்லை. இயலாதவர்களுக்கு உதவ வேண்டும், தங்களிடம் இருப்பதைத் தேவைப்படுகின்றவர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் கொடுக்கிறார்கள். இந்த மனப்பான்மை அவர்களுக்குப் பலன் அளிக்கும். இந்தத் தாராள மனப்பான்மையின் வாஸனை அவர்களுடைய ஆன்மாவில் நிலைத்திருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

இருந்தாலும், நன்கொடை என்பது ரஜோ மன அமைப்பிலிருந்தே செய்யப்படுகிறது. ஸத்வ குணத்திலிருந்து செய்யப்படுவதில்லை. ரஜோ நிலையிலான தானத்திலிருந்து ஸத்வ நிலையிலான தானத்திற்கு மனிதர்கள் உயரும்போது, செல்வம் அவர்களைத் தேடி வரும். செல்வத்திற்கு அதிபதியான தேவி லக்ஷ்மியை அவர்கள் அழைக்க வேண்டியதில்லை; அவரே அவர்களைத் தேடி வருவார்! ஏனெனில், இந்த மக்களே மனித குலத்திற்குப் பயனளிக்கும் பாதையாக இருப்பார்கள் என்பதை அவர் அறிவார்.

செல்வத்தையும் அதிகாரத்தையும் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை. அவை மாபெரும் சக்திகள். நமக்குள் கர்வத்தை ஏற்படுத்தாமல், நம்முடைய ஜீவன்முக்திக்கு வழிவகுக்கும் வகையில், அவற்றை எப்படிப் கையாள்வது என்பதுதான் பிரச்சினை.

உதாரணமாக, இராவணனுக்கும் ஜனகருக்கும் இடையிலான வித்தியாசத்தைப் பாருங்கள். ஜனகர் ஒரு இராஜ ரிஷி. அதாவது ஓர் அரசர். ஆனால் ஒரு துறவியாகவும் இருந்தவர். அவர் நாட்டை ஆண்டார். ஆனால் அந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் தம்முடைய உடைமைகளாக்கருதவில்லை. அவை பிரபஞ்சத்திற்குச் சொந்தமானவை என்பதை உணர்ந்து, ஸாக்ஷியாகஇருந்து, அவற்றைக் கையாண்டார்.

மற்றொருபுறம், இராவணன் ஒரு சிறந்த தபஸ்வியாக இருந்து, அசாதாரணமான வரங்களைப் பெற்றிருந்தாலும், அவர் அகங்காரத்திற்கும் புலனின்பங்களுக்கும் ஆட்பட்டிருந்தார். அதுவே அவரின் அழிவிற்குக் காரணம்.

பிரபஞ்சம், ‘அபரிமிதமான வளமை’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயல்படுகிறது. இங்கு எதற்கும் பற்றாக்குறை இல்லை.

நமக்கு என்ன தேவையோ, அதை நாம்
பெறுகிறோம். பிரச்சினை என்னவென்றால்,
நமக்கு என்ன தேவை என்பதில் நாம்
தெளிவில்லாமல் இருக்கிறோம். நம்முடைய
ஆசைகள் அளவிட முடியாதவை.

இந்தப் பூமியில் வாழும் எல்லோருடைய
‘தேவைகளையும்’ பிரபஞ்சத்தால் பூர்த்தி
செய்ய முடியும், ஆனால் ஒரே ஒருவரின்
‘ஆசையைக்கூட’ பூர்த்தி செய்ய முடியாது
என்று ஞானிகள் சொல்கிறார்கள். நமது
பேராசைக்கு எல்லையே இல்லை.

> பிரபஞ்சம்,
> அபரிமிதமான வளமை
> என்ற கோட்பாட்டின்
> அடிப்படையில்
> செயல்படுகிறது.
> பிரபஞ்சத்தில் எதற்கும்
> பற்றாக்குறை இல்லை.

'கொடுக்க வேண்டும்' என்ற உங்கள் விருப்பம் எல்லையற்றதாக இருக்கட்டும். 'பெற வேண்டும்' என்ற உங்கள் விருப்பம் பூஜ்யமாக ஆகட்டும். அதன்பிறகு, செல்வம் உங்களைத் தேடிவருவதைக் கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

Flute with hands