KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/செயல்கள், வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

செயல்கள், வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna playing flute

தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, ஞானிகளை
வழிபடுவதும், மெய்யறிவான தூய்மை, ஶ்ரத்தை, நிஜத்தில்
வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவை உடலால்
செய்யக் கூடிய தபஸ் என்று சொல்லப்படுகின்றன.

குற்றமற்ற, எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான,
இனிமையான, நலன் கொடுக்கக்கூடிய பேச்சும், வேத நூல்களைத்
தொடர்ந்து படிப்பதும் வாக்கினால் செய்யக் கூடிய தபஸ் என்று
சொல்லப்படுகின்றன.

மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு,
எண்ணத் தூய்மை ஆகியவை மனத்தால் ஆற்றக்கூடிய தபஸ்
எனப்படுகின்றன.

பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன்
செய்யப்படுகின்ற மனம், மொழி, மெய் இவற்றால்

ஆற்றப்படுகின்ற அந்த மூன்று விதமான தபஸ், ஸாத்விகமானது என்று சொல்லப்படுகிறது.

மதிப்பு, மரியாதை, கௌரவத்தைப் பெறுவதற்காகவும், பகட்டுக்காகவும் செய்யப்படும் தபஸ், ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற விளைவையே கொடுக்கும். அந்தத் தபஸ் இங்கு ராஜஸிகம் எனச் சொல்லப்படுகிறது.

முட்டாள்தனமான பிடிவாதத்துடனோ அல்லது சுய சித்ரவதையுடனோ அல்லது பிறரைத் துன்புறுத்தியோ செய்யப்படும் தபஸ், தாமஸம் எனப்படுகிறது.

கிருஷ்ணர், இங்கே எண்ணம், சொல், செயல்களில் உள்ள தபஸ் பற்றி விளக்குகிறார்.

தபஸ் அல்லது தவம் என்பது எளிமையான வாழ்க்கை முறையைக் குறிக்கிறது. எளிமையான வாழ்க்கை முறையை ஸம்ஸ்க்ருத்தத்தில் அபரிகீறஹ என்கிறோம். அது, ஒருவருக்கு என்ன தேவை என்பதை அடிப்படையாகக் கொண்டதே தவிர, ஒருவர் எதற்காக ஏங்குகிறார் என்பதை அல்ல. இதை வெற்றிகரமாகப் பயிற்சி செய்பவரே தபஸ்வி.

ஒருவர் தம்மையோ அல்லது பிறரையோ துன்புறுத்துவது தபஸ் அல்ல, ஒருவர் தன்மீதோ அல்லது மற்றவர்களின்மீதோ வேதனைகளைத் திணிப்பது தபஸ் அல்ல என்று கிருஷ்ணர் ஏற்கனவே வலியுறுத்தியதையே, இங்கு மீண்டும் வலியுறுத்துகிறார்.

> தபஸ் அல்லது தவம் என்பது எளிமையான வாழ்க்கை முறையைக் குறிக்கிறது.

இங்குக் குறிப்பிடப்பட்டிருக்கும் துன்பம், வேதனை என்பதெல்லாம், உடலுக்குத் தரப்படும் துன்பத்தை மட்டும் குறிக்கவில்லை. சொற்களால் மற்றும் எண்ணங்களால் ஏற்படுத்துகின்ற துன்பமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

உடல், கடவுள் வாழும் ஆலயம் என்பதை மறந்து, ஒருவர் தம்மையும் அவமதித்துக் கொள்வதையே இப்படிப்பட்ட தவம் குறிக்கிறது.

ஸாத்விகமாக இருங்கள்

அறியாமையையும் சுய-சித்ரவதையையும் அடிப்படையாகக்கொண்ட தவங்கள், மற்றவர்களுக்கு அழிவையோ அல்லது பாதகங்களையோ ஏற்படுத்தும். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இதுபோன்ற செயல்கள் அறியாமையின் காரணமாகவே செய்யப்படுகின்றன. இதையே நான், இதற்கு முன் பில்லி சூன்யங்களைப் பற்றி பேசும்போது குறிப்பிட்டேன்.

எந்தப் பில்லி சூன்யங்களும் உங்களை எதுவும் செய்ய முடியாது. எந்த கெட்ட ஆவியையும் உங்கள் மீது யாரும் ஏவிவிட முடியாது. ஞான குருமார்களால் மட்டுமே சாபம் கொடுக்க முடியும், ஆனால் ஒரு ஞானி சாபம் கொடுக்க மாட்டார். அவர் ஆசீர்வதிக்க மட்டுமே செய்வார்.

இதுபோன்ற எதிர்மறை எண்ணங்களை
விட்டுவிடுங்கள். இவற்றைப் பற்றி
ஆர்வம் காட்டாதீர்கள். இவையெல்லாம்
தமஸிலிருந்து வெளிப்படுபவை. அவை
ஒருபோதும் வேலை செய்யாது. அவை
அதைத் தூண்டிவிடும் நபர்களைத்தான்
தொல்லைப்படுத்தும். அவர்களால்
ஒருபோதும் மற்றவர்களுக்கு இடையூறு
செய்ய முடியாது.

> எந்தப் பலனையும்
> எதிர்பார்க்காமல்
> முழுமையான சரணாகதி
> இயல்பிலிருந்து
> செய்யப்படும் தவமே
> ஸத்வ நிலையில் இருக்கிறது

ரஜஸ் குணத்தில் இருப்பவர்கள், மதிப்பிற்காகவும், மரியாதைக்காகவும், பிறர் வணங்குவதற்காகவுமே தாநங்களையும் தவங்களையும் மேற்கொள்கிறார்கள் என்று கிருஷ்ணர் சொல்கிறார். இந்த முறையில் மேற்கொள்ளப்படும் தவம் அல்லது தாநங்கள் நிலையாக நீடிப்பதில்லை. மக்கள், அவர்கள் காலில் விழுந்து வணங்கும் வரையில்தான், அவர்கள் அதைச் செய்வார்கள். அவர்களை மதிக்கவில்லையென்றால், அவர்கள் தங்களின் தபஸை நிறுத்திவிடுவார்கள்.

பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் தவம்... ஞானம் அடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு செய்யப்படும் தவமும்கூட... ரஜோ மனநிலையிலிருந்து, ஆளுமை அல்லது பேராசையோடு செய்யப்படுவதுதான். எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் முழுமையான சரணாகதி இயல்பிலிருந்து செய்யப்படும் தவமே ஸத்வ நிலையில் இருக்கிறது, ஆன்மீக மதிப்பு உடையதாகிறது.

என்னுடைய தபஸ் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் பரிவ்ராஜக வாழ்வை மேற்கொண்டு, இந்தியா முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தபோது, பல கடினமான விஷயங்களைச் செய்தேன். அவற்றில் பலவற்றை நான் ஒதுக்கியிருக்கலாம் என்று இப்போது நினைக்கிறேன்.

ஞானமடைதலுக்கான கதவைத் திறக்கும் உண்மையான சாவியைக் கண்டுபிடிப்பதற்கு முன்னால், நான் பத்தாயிரம் சாவிகளைப் பரிசோதித்துப் பார்த்தேன். நீங்கள் அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை என்று என்னுடைய பக்தர்களுக்குச் சொல்வதுண்டு. அதற்கு எளிமையான, சுலபமான, விரைவான வழி இருக்கிறது!

ஞானத்திற்கான என்னுடைய ஆன்மீகப் பயிற்சியில் நான் போராடிக் கொண்டிருந்தவரை, அது என்னை விட்டு விலகியே இருந்தது. நான் பல ஆண்டுகளாக என்னோடு வைத்திருந்த, எனது ருத்ராட்ச மாலையையும், ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சரின் புகைப்படத்தையும் தூக்கி எறிந்து விட்டு, ‘என்ன நடக்கின்றதோ, நடக்கட்டும்’ என்ற உணர்வோடு தியானத்தில் அமர்ந்தபோதுதான், என்னால் என்னை உணர முடிந்தது.

இங்கே கிருஷ்ணர், ஸௌம்யத்வம் என்ற வார்த்தையை அழகாகப் பயன்படுத்துகிறார். ஸௌம்யத்வம் என்பது திருப்தியையும் மிக சௌகரியமான உணர்வையும் குறிக்கிறது.

யாருடைய ஸாந்நித்யம், உங்களை முழுமையான அமைதியை உணர வைக்கின்றதோ, உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தச் செய்து, மனத்தை நிலைநிறுத்துகின்றதோ அதுவே ஸௌம்யத்வம் எனப்படுகின்றது. ஸௌம்யத்வமும் இனிமையான வார்த்தைகளைப் பேசுவதுமே ஒரு

ஆன்மீகவாதி பயிற்சிசெய்ய வேண்டிய முக்கியமான அடிப்படை விஷயங்கள்.

சிலர் ஞானமடைந்திருப்பார்கள். இருந்தாலும் அவர்களால் யாருக்கும் உதவ முடியாது. உதாரணமாக, இமாலயத்தில் ஒரு நாக ஸாது ஞானியைப் பார்த்திருக்கிறேன். நாக என்பது உடை உடுத்தாத ஓர் ஸந்நியாசியைக் குறிக்கும். அந்தக் குளிர் பகுதியிலும், அவர்கள் ஆடையில்லாமல்தான் வாழ்கிறார்கள். பரமஹம்ஸர்கள் என்றழைக்கப்படும் அவர்கள், கடவுள் நெறியைப் பரப்புவதற்காக நகரங்களுக்குள் வரும்போது மட்டுமே ஆடை உடுத்துவார்கள், மற்ற சமயங்களில் அவர்கள் ஆடைகள் அணியக்கூடாது என்று கருதப்படுகிறது. அவர்கள் குழந்தைகளைப்போல வாழ்கிறார்கள்.

பரமஹம்ஸரான அவர் கஞ்சா புகைக்கும் குழாயின் உள்ளே கஞ்சாவை நிறைத்துவிட்டு, அதனோடு ஒரு தாமிர நாணயத்தையும் போடுவார். நாள் முழுவதும் கஞ்சா புகைத்துவிட்டு, அவர் அந்தப் புகை உறிஞ்சும் குழாயைக் கவிழ்த்தினால்..., சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், அதிலிருந்து ஒரு தங்கக் காசு கீழே விழும்! அந்த நாணயத்தை விற்று, மீண்டும் கஞ்சா வாங்குவார். இப்படிப் பலமுறை நடந்திருப்பதை நான் பார்த்திருக்கின்றேன். எனக்கு அவர் மேல் நல்ல மதிப்பு இருக்கிறது, ஏனென்றால், அவர் ஒரு தபஸ்வி.

நான் அவரிடம், "பாபா, நீங்கள் ஒரு பெரிய தபஸ்வி. ஓர் ஆத்மஜ்ஞானி (தம்மை உணர்ந்தவர்). ஒரு ப்ரம்மஜ்ஞானி (பிரம்மத்தை உணர்ந்தவர்), பிறகு ஏன் நீங்கள் கஞ்சா புகைகக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

அவர் சொன்னார், "ஒரு பெரிய யானையை, ஒரு சிறு குடிசையில் அடைத்துவிட முடியாது. அதைக் கொஞ்சம் மந்தப்படுத்தி, அமைதிப்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் அந்த யானையைச் சிறு குடிசையில்

யானை

இருக்க வைக்க முடியும். அதைப்போலவே, ஞானம் அடைந்த பிறகு, ஆன்மாவை இந்தச் சிறிய உடலுக்குள் தங்கவைக்க முடியாது. நான் அதைக் கீழேகொண்டு வந்து மந்தப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இதைச் செய்கிறேன்,” என்றார்.

அவர்கள் புகைபிடிப்பதற்கான காரணம் என்பது சாதாரண மனிதர்கள் புகைபிடிக்கும் காரணத்திலிருந்து வேறானது.

“ஸ்வாமிஜி, இராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கும் ஸ்வாமி விவேகானந்தருக்கும்கூட புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது, நான் ஏன் புகைபிடிக்கக்கூடாது?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.

“ஸ்வாமி விவேகானந்தர் புகைபிடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே ஞானம் அடைந்துவிட்டார். ஞானமடைந்த பிறகு நீங்களும் புகைபிடிக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள் என்ன சாதித்தார்களோ அதைச் சாதிக்காமல், அவர்கள் செய்ததை நீங்களும் செய்வது தவறு,” என்று அவருக்கு விளக்கினேன்.

பகிர்ந்துகொள்வதே, ஞானத்தின் நோக்கம்

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஞான குருமார்கள்என்ன செய்கிறார்களோ, அது நீங்கள் செய்ய வேண்டியதிலிருந்து முற்றிலும் வேறானது. உண்மையில், நீங்கள் செய்ய வேண்டியவற்றுக்கு முற்றிலும் எதிரான வகையில்தான் அவர்கள் செய்ய வேண்டியது உள்ளது.

நீங்கள் உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான செயல்களைச் செய்ய வேண்டும். அவர்கள் தங்களைக் கீழேகொண்டுவருவதற்கான விஷயங்களைச் செய்ய வேண்டும்.
ஸௌம்யத்வம் என்பது திருப்தியையும் மிக சௌகரியமான உணர்வையும் குறிக்கிறது.

உத்தரகாசியில் இருந்த இந்த நாக ஸாதூ ஞானம் அடைந்தவர்தான் என்றாலும், அவரால் எல்லோருக்கும் உதவ முடியாது, எவருக்கும் அவர் சொல்லிக் கொடுக்க மாட்டார். எவரையும் அவர் ஞானம் அடையச் செய்ய மாட்டார். அவர் மக்களோடு சேர்ந்து வேலை செய்வதில்லை. அவர் அந்த வகையானவர்.

மற்றொருபுறம், ஸத்யத்தை உணர்ந்த சிலர்,
அதை உலகத்தோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர், பரமஹம்ஸ
யோகானந்தர் போன்றவர்கள்
மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களின்
அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட
சிறந்த ஆன்மாக்கள். அதுவே அவர்களின்
நோக்கமாக இருந்தது.

கிருஷ்ணரைப்போல, ஸத்யங்களைப்
பகிர்ந்துகொள்பவர்களை, அவதாரங்கள் என
பாகவதம் அடையாளப்படுத்துகிறது.

சௌந்தர்யத்வம் என்றால்
ஒருவரைப் பார்த்த
உடனேயே,
நாம் அவர் முன் அமர்ந்து,
அவர் சொல்வதைக் கேட்க
வேண்டுமென நம்முள்
உணர்வது.

வேதங்களைத் தொகுத்தவரும், பாகவதம் மற்றும் மகாபாரதத்தை எழுதியவருமான வியாஸ பகவானின் மகனான ஸூ த ப்்ரஹ்மத்திடம் ஒருமுறை, "ஞானிகளுக்கும், அவதாரங்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?" என்று வினா கேட்கப்பட்டது.

ஸூ த ப்்ரஹ்மர் மிக அழகாகச் சொல்கிறார்: சௌந்தர்யத்வம், தேஜஸ்த்வம், ஸாரஸ்வத்யம், லக்ஷ்மித்வம்.

சௌந்தர்யத்வம் என்றால் ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே, நாம் அவர் முன்னால் அமர்ந்து, அவர் சொல்வதைக் கேட்க வேண்டுமென நம்முள் உணர்வது. அவருடைய கருணையைப் பருகுவதற்காக, நாம் அவரை நோக்கித் தானாகவே மீண்டும் திரும்புவோம். எது சுலபமாக நமது மனத்தை ஈர்க்கின்றதோ, அது சௌந்தர்யத்வம்.

அடுத்தது தேஜஸ் – கூர்மையான சுடர்விடும் தெளிவும், சக்தியும்.

மூன்றாவது, ஸாரஸ்வத்யம் – கடினமான, சிக்கலான கருத்தையும் எளிய வகையில் விளக்கிவிடும் பாண்டித்தியம் என்று பொருள். தேவி சரஸ்வதி குடியிருக்கும் அவர்கள் நாவிலிருந்து இது அழகாக வெளிப்படும்.

எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது லக்ஷ்மித்வம். அவர்களின் ஒரு எண்ணமே போதும், செல்வமும் வேலைகளும் தானாகவே நிகழ்ந்துவிடும். நிகழ்வுகள் எப்படி நிகழ வேண்டுமென விரும்புகிறார்களோ, அவ்வண்ணமே நிகழும். இந்த நான்கு பண்புகளையும் வெளிப்படுத்துபவரே அவதாரம்.

இங்கே கிருஷ்ணர், ஸௌம்யத்வம் என்கிறார். அவதாரங்களுக்குக்கூட ஸௌந்தர்யமும் ஸௌம்யத்வம் அவசியமான பண்புகள் எனும்போது, இப்போது நாம், நமது வாழ்க்கையிலும் இந்தப் பண்புகளைக் கட்டாயமாக உள்வாங்கியாக வேண்டும்.

ஆன்மீகப் பயிற்சியின் முதல் படி

| சரஸ்வதீயம் - கடினமான, சிக்கலான கருத்தையும் எளிய வகையில் விளக்கிவிடும் பாண்டித்தியம் என்று பொருள். | ப்ரியஹிதம் ச யத் - ஸத்யத்தைப் பேசுவதும் இனிமையாகப் பேசுவதுமே வார்த்தையால் செய்ய வேண்டிய தவம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், வார்த்தைகள் மூலம் குணப்படுத்துதல் விளைவை ஏற்படுத்துவது மிகவும் முக்கியமானது. இது, ஒரு ஆன்மீக சாதகருக்கு இருக்க வேண்டிய ஒரு அடிப்படையான பண்பு. மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளை நாம் பேசக்கூடாது. நம்முடைய இருப்பே மற்றவர்களுக்கு ஒரு குணமளிப்பாக இருக்க வேண்டும். |

எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள். கடுமையான அல்லது எரிச்சல்தரும் வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.

இன்னொரு விஷயம், சில நேரங்களில் நமது வார்த்தைகள் மற்றவர்களுக்கு எப்படி உணர்ச்சி ரீதியான தொந்தரவுகளைக் கொடுக்கின்றன, மற்ற ஜீவன்களை எப்படி அவமானப்படுத்துகின்றன என்பதை நாம் புரிந்துகொள்வதில்லை. நம்முடைய பேச்சில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாம் யாருடனாவது அமர்ந்திருக்கும்போது, நம்முடன் அமர்ந்திருக்கும் அந்நபர், 'இன்னும் சிறிதுநேரம் இவரோடு இருக்க முடியுமா? இவரோடு நான் அதிக நேரம் செலவிட முடியுமா? நாளை இவரை மீண்டும் பார்க்க முடியுமா?' என்று நினைக்க வேண்டும்.

மற்றவர்களுக்குள் குணப்படுத்தும் உணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். நம்மிடமிருந்து விலகி ஓடுவதற்குப் பதிலாக, மக்கள் நமக்காகக் காத்திருக்க வேண்டும். பொதுவாக நாம், எதிர்மறை விளைவைத்தான் ஏற்படுத்துகிறோம். நாம் ஒரு அசௌகரியமான உணர்வைத்தான் ஏற்படுத்துகிறோம். மக்கள் நம்மை விட்டு விலகி ஓடுகிறார்கள்.

முறையில்லாமல் பயன்படுத்தப்படும் சாதாரணமான ஒரு வார்த்தை போதும், இனிமையான உறவுமுறையை முழுமையாகக் கெடுத்துவிடும். ஒரு ஆன்மீகவாதி இனிமையான வார்த்தைகளைத்தான் பேச வேண்டும், மற்றவர்களைத் துன்புறச் செய்யக்கூடாது என்று கிருஷ்ணர் சொல்கிறார். நாம் மற்றவர்களை துன்புறச் செய்யாதபோது, நாம் இறுமாப்புடையவர்களாக இருப்பதில்லை. இது ஒரு சமூக நன்னெறிகூட இல்லை. இது ஒரு ஆன்மீகப் பயிற்சி.

லக்ஷ்மித்வம் - ஒரு எண்ணமே போதும், செல்வமும் வேலைகளும் தானாகவே நிகழ்ந்துவிடும் நிலை.

நான் முன்பே சொன்னதுபோல, மற்றவர்களைக் காயப்படுத்த நாம் உபயோகிக்கின்ற வார்த்தைகள் நம்மையும் காயப்படுத்தும். அதே வார்த்தைகளைத்தான் நாம் நம்மை நோக்கியும் பயன்படுத்துவோம்.

இந்த ஸத்யம், சக்தி மற்றும் அதிர்வலைகள் விஞ்ஞானத்திற்கும் பொருந்தும். அதனால் நாம் பயன்படுத்தும் வார்த்தைகளில் நாம் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கிருஷ்ணர், ஆன்மீகத் தத்துவங்களைத் தொடர்ந்து படிக்கச் சொல்கிறார். ஆன்மீகத் தத்துவங்களைத் தொடர்ந்து படிப்பதால், அந்த ஸத்யங்கள் மீண்டும் மீண்டும் நமது மூளைக்குள் செல்கின்றன.

அதன் விளைவாக, நமக்கு ஸத்யத்தைச் சோதிக்கும் துணிவு கிடைக்கிறது. இந்த ஸத்யங்களோடு செயல்படுவதற்கான துணிவு நமக்குள் உண்டாகிறது. ஏதாவது ஒரு ஸத்யத்தை எடுத்துக்கொண்டு, குறைந்தபட்சம் சில முறைகளாவது அதைப் பயிற்சிசெய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். உதாரணமாக, 'எனக்கு, எனக்கு, எனக்கு' என்ற கருத்தின் அடிப்படையில் தொடர்ந்து செயல்படாதீர்கள். மாறாக, 'உங்களுக்காக, உங்களுக்காக, உங்களுக்காக' என்ற கருத்தை முயற்சி செய்து பாருங்கள் என்று நேற்று சொன்னேன்.

இதைக் குறைந்தபட்சம் பத்து முறையாவது முயற்சிசெய்து உங்கள் வாழ்க்கையில் அது ஏற்படுத்தும் பலன் என்ன என்று பாருங்கள். அது முடியவில்லையென்றால், அதைத் தூக்கி எறிந்து விடுங்கள். அது உங்களைப் பொறுத்தது, ஆனால் குறைந்தபட்சம் பத்து முறையாவது பயிற்சிசெய்யுங்கள். கிருஷ்ணர் வெளிப்படுத்திய ஸத்யத்தை உங்களால் ஒரு துளியாவது அனுபவிக்க முடியும்.

ஸத்யம், ஒருபோதும் காயப்படுத்தாது

பட்டறிவுவாதிகளுக்கு இரண்டு ஆயுதங்கள் உண்டு: வார்த்தைகள் மற்றும் தர்க்கம். அவை முறையாகப் பயன்படுத்தப்பட்டால், உங்களுக்கு அவை ஒரு பயனுள்ள பயிற்றுவிக்கும் கருவிகளாக இருக்கும். அப்படியில்லையென்றால் அவை அச்சுறுத்தும் ஆயுதங்களாக மாறிவிடும். எப்படி அவற்றைப் பயன்படுத்துவது - அதாவது அறியாமை நிலையிலிருந்தா, ஆளுமை நிலையிலிருந்தா அல்லது நல்லெண்ண நிலையிலிருந்தா - என்று தேர்ந்தெடுப்பது நம்மைப் பொறுத்தது..

Illustration

'தி ஹிட்டன் மெசேஜஸ் இன் வாட்டர்'
என்ற புத்தகத்தில், நாம் பேசும்
வார்த்தைகளுக்கு இருக்கும் அளவற்ற
சக்தியை எடுத்துக்காட்டிய ஜப்பானிய
விஞ்ஞானியான டாக்டர். மசாரு
எமோட்டோவைப் பற்றி ஏற்கனவே
சொல்லியிருக்கிறேன்.

அவர், கண்ணாடிப் பாட்டில்களில்
அடைக்கப்பட்ட வெவ்வேறு தண்ணீர்
மாதிரிகளிடம், வெவ்வேறு உணர்ச்சிகளை
வெளிப்படுத்திப் பேசுகிறார். பிறகு

அந்த தண்ணீர் மாதிரிகளை உறையச்
செய்து, அந்தப் பனிக்கட்டிகளை
ஆய்வு செய்கிறார். அவர் அன்போடு
பேசிய மாதிரிகளின் பனிக்கட்டிகள்
வைரத்தைப்போல மின்னின. அவர்
வெறுப்பை வெளிப்படுத்திப் பேசிய
தண்ணீர் மாதிரிகளின் பனிக்கட்டிகள்
விகாரமாக இருந்தன.

ஸத்யம் என்பது
கருணையின் ஒரு
பிரதிபலிப்பு,
கருணையின் ஒரு
வெளிப்பாடு.
ஸத்ய்மும் கருணையும்
எப்போதும் சேர்ந்தே
இருக்கிறது.

அந்தப் படங்கள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளன. நீங்கள் அவற்றைப் பார்க்கலாம். வார்த்தைகள், நீரிலேயே இப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்துகின்றன என்றால், மனிதர்களுக்குள் அது என்ன மாதிரியான விளைவுகளை எல்லாம் ஏற்படுத்தும் என்று நினைத்துப்பாருங்கள். நம் உடலின் பெரும்பகுதி நீரின் மூலக்கூரால் ஆனது. அதனால்தான் வார்த்தைகள் நம்மை மிகவும் பாதிக்கின்றன; அல்லது மிகவும் குணமளிப்பவையாக இருக்கின்றன. வார்த்தைகள் மூலமாக நம்மால் அதிசயங்களை நிகழ்த்த முடியும்.

கிருஷ்ணர் செயலில் இருக்கும் தவம் பற்றியும் பேசுகிறார். அவர், ஸத்யம் - எண்ணம், சொல், செயலில் உண்மையே கடைப்பிடித்தல்; அஹிம்ஸா - வன்முறையற்ற தன்மை; அஸ்தேய - பிறர் பொருளைக் கவரும் எண்ணமில்லாமை; அபரிகிரஹ - எளிமை; மற்றும் ப்ரிஹ்மசர்ய - பரமாத்வையே உயர்கதியாகக்கொண்டு தவ வாழ்க்கையை உண்மையுடன் வாழ்வது என்னும் ஐந்து கட்டுப்பாடுகள் பற்றிப் பேசுகிறார். இவை, பதஞ்சலியின் அஷ்டாங்க யோகத்தின் முதல் அங்கமான யமவில் சொல்லப்பட்டுள்ள ஐந்து ஒழுக்கமுறைகளாகும்.

வருத்தப்பட வைப்பதாக இருந்தால்கூட, ஸத்யம் சொல்லப்பட்டே ஆக வேண்டும் என்று பல பேர் நினைக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அது யாரையாவது காயப்படுத்துமேயானால், அது ஸத்யமாக இருக்க முடியாது. அது, ஸத்யத்தைப் பற்றிய நம்முடைய கருத்து, அவ்வளவுதான். அது, நமது மனத்தால் ஸத்யம் என்று காட்டப்பட்ட நமது அகங்காரத்தின் பிரதிபலிப்பே.

நாம் நம் புலன்கள் மூலம் சில கருத்துக்களைக் கிரகித்து, அந்தக் கருத்துகளை அடிப்படையாகக்கொண்டு, நமது எல்லைக்குட்பட்ட அறிவின் துணையுடன் சில முடிவுகளைத் தீர்மானிக்கும்பொழுதும், பிறகு அவற்றை நமது ஸத்யங்களாகச் சொல்லி, யாரையாவது காயப்படுத்தும்பொழுதும், நாம் ஸத்யத்தில் നിലகொள்வதில்லை. இப்படி நாம் செய்தால், நாம் உணர்ச்சிவேகத்திலும், அறியாமையிலும்தான் இருக்கிறோம். நாம் ஸத்யத்தில் இல்லை. நாம் ஸத்வ குணத்தில் இல்லை.

ஸத்யம் என்பது கருணையின் பிரதிபலிப்பு, கருணையின் வெளிப்பாடு. ஸத்யமும் கருணையும் எப்போதும் இணைந்தே இருக்கிறது. அந்தக் காரணத்தினால் ஸத்யம் ஒருபோதும் காயப்படுத்தாது.

ஒவ்வொரு சுவாசமும் ஓர் அன்பளிப்பு

கேள்வி: ஸ்வாமிஜி, ஆனந்தத்திற்கான பாதை தனிமையான பாதை அல்ல, அது தனித்த பாதை என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதை விளக்க முடியுமா?

எல்லாத் தேசங்களின் பழங்காலக் கதைகளும், கடவுள் தனிமையில் இருந்தார். தம் தனிமையை வெறுத்த அவர் இந்த உலகைப் படைத்தார் என்று சொல்கின்றன. நான் அந்தக் கதைகளை எழுதியிருந்தால், அபரிமிதமான வளங்களோடு கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததால், அதைப் பகிர்ந்துகொள்ள அவருக்கு யாராவது தேவைப்பட்டனர். அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவே இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் படைத்தார் என்று சொல்லியிருப்பேன்.

அபரிமிதமான
வளங்களோடு கடவுள்
மிகவும் மகிழ்ச்சியாக
இருந்ததால்,
அந்த மகிழ்ச்சியைப்
பகிர்ந்துகொள்ளவே
இந்த மொத்தப்
பிரபஞ்சத்தையும்
படைத்தார்.

கடவுள், தனிமையிலும் மகிழ்ச்சியற்றும்
வேலையற்றும் இருந்தார் என்பதற்காக
இந்த உலகைப் படைக்க முடிவுசெய்தார்
என்பது அல்ல. இந்த முடிவில், துக்கத்தின்
சாயல் இருக்கிறது. இது எப்படியிருக்கிற
தென்றால், அவர் தம்மை ஏதாவதொரு
வேலையில் ஈடுபடுத்திக்கொள்வதற்கும்,
உற்சாகமாக இருப்பதற்கும் அவருக்கு
வேறொரு நபர் தேவைப்பட்டார் என்பது
போல் இருக்கிறது.

தனிமையால் பாதிக்கப்பட்ட சாதாரண

Silhouette of adult and child at sunset

மனிதர்களே இதுபோன்ற கதைகளை
உருவாக்கி இருப்பார்கள்! புத்தர் இந்தக்
கதைகளை எழுதவில்லை. அது மட்டும்
நிச்சயம். பெரும்பாலும் எல்லோருமே
ஏதோவொரு தருணத்தில் தனிமையால்
பாதிக்கப்படுகிறார்கள். அப்படிப்பட்ட
தனிமையில் இருக்கும்போது, அவர்கள்
பிறரைத் தேடுகிறார்கள். அவர்கள்
தங்களின் தனிமையைக் கடவுள் மீது
ஏற்றியிருக்கிறார்கள்.

அவர்கள் தனிமையில் இருக்கும்போது, நிச்சயம் மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியாது. அதனால் அவர்கள், 'கடவுள் மட் டும் தனிமையில் இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும்?' என்று ஆச்சரியப்பட்டிருப்பார்கள். அவர்கள் தங்களை எப்படி நினைக்கிறார்களோ, அதேபோன்றே கடவுளையும் நினைக்கிறார்கள்.

நான் அந்தக் கதைகளை
எழுதியிருந்தால்,
அபரிமிதமான
வளங்களோடு கடவுள்
மிகவும் மகிழ்ச்சியாக
இருந்ததால், அந்த மகிழ்ச்சி
யைப் பகிர்ந்துகொள்ளவே
இந்த மொத்தப் பிரபஞ்ச
த்தையும் படைத்தார் என்று
சொல்லியிருப்பேன்.

அவர்களுக்கு மற்றொருவர் தேவைப்படுகிறார். ஆணுக்கு ஒரு பெண் தேவை. பெண்ணுக்கு ஓர் ஆண் தேவை. நமக்குக் கண்டிப்பாக இன்னொரு நபர் தேவை. இல்லையென்றால் நாம் தனிமையில் மூழ்கிவிடுவோம்.

‘எது கடவுளாக இருக்க வேண்டும், எது தெரிந்துகொள்ளப்பட வேண்டும், எது விழிப்பிக்கப்பட வேண்டும்’ என்பதைப் பற்றி அறியாதவர்களே இதுபோன்ற கதைகளை எழுதியிருப்பார்கள். புத்தர் இந்தக் கதைகளை எழுதியிருந்தால், அது முற்றிலுமொரு வித்தியாசமான மணத்துடன் இருந்திருக்கும்.

இவற்றை ஒரு சூஃபி ஞானி எழுதியிருந்தால், ‘கடவுள் மிகவும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக, ஆனந்தமாக, நகைச்சுவை உணர்வோடு இருந்தார். அதை பகிர்ந்துகொள்ள யாராவது வேண்டுமென விரும்பினார். அவர் நிரம்பி வழிந்தார், அதனால் பகிர்ந்து கொண்டாரே

தவிர, அவருக்கு மற்றவர்களின் துணை
தேவைப்பட்டது என்பதால் அல்ல. அவரே
அவருக்குப் போதுமானவர். ஆனால்
அது, தாங்கவொணா அளவிற்கான
எல்லையில்லா ஆனந்தம். அதனால் அதைப்
பகிர்ந்துகொள்ள அவர் இந்த உலகத்தை
உருவாக்கினார்' என்று எழுதியிருப்பார்!

தனித்த பாதை என்பது தனிமையான பாதை
என்பதிலிருந்து வேறுபட்டது. தனித்த
பாதை, முழுமைக்கு அழைத்துச் செல்கிறது.
தனிமை, சிதறிப்போகச் செய்கிறது.

கடவுள் அவரின் தனித்துவத்திலிருந்து இந்த உலகைப் படைத்தார், தனிமையிலிருந்து அல்ல. தாம் கருணையால் நிறைந்திருப்பதாக உணர்ந்ததனால், அதை அவர் எல்லா ஜீவன்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அவர் வைத்திருந்ததையெல்லாம் எல்லா ஜீவன்களுக்கும் அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

ஒவ்வொன்றுமே அவருடைய அபரிமிதமான வளத்திலிருந்து வந்த அன்பளிப்புதான். அதை உணர்வதே, நன்றியுணர்வோடு இருத்தலாகும். அதை உணர்வதே பிரார்த்தனையாக இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுவே: மேலும் மேலும் அதிக நன்றியுணர்வோடு இருங்கள். நன்றியுணர்வுதான் பிரார்த்தனையின் சாரம். எல்லாவற்றையும் ஒரு அன்பளிப்பாகப் பார்த்தால் மட்டுமே, அந்த நன்றியுணர்வு சாத்தியம்!

ஒவ்வொரு சுவாசமும் ஓர் அன்பளிப்பே! என்னவொரு பரிசு! விலை கொடுத்து வாங்க முடியாத அளவிற்கு அது மிகவும் மதிப்புமிக்கது. அதற்கு விலையே கிடையாது. நீங்கள் வாழ்க்கையை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் அன்பை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் புலன் உணர்வுகளை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் படைப்புத்திறனை விலை கொடுத்து வாங்க முடியாது. நீங்கள் புத்திசாலித்தனத்தை விலை கொடுத்து வாங்க முடியாது. அவை உங்களுக்கு அளிக்கப்பட்டவை.

நீங்கள் அவற்றைக் கேட்பதற்கு முன்பாகவே, அவை உங்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டன. உங்களுக்குள் கொஞ்சம் தேடினால் போதும், பொக்கிஷங்களுக்கு மேல் பொக்கிஷங்களாகக் காண்பீர்கள். கடவுளின் சாம்ராஜ்ஜியம் உங்களுக்குள்ளேயே இருக்கிறது.

அகங்காரம் இறந்தால் ஒழிய, கடவுள் உங்களுக்கு முடிசூட்ட மாட்டார்.

கேள்வி: ச்ரத்தையும், துணிவும், நம்பிக்கையும் ஆனந்தத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நீங்களும், கிருஷ்ணரும் சொல்கிறீர்கள். ஆனால் ஆனந்தத்திற்கான பாதை எளிமையானதாகத் தெரியவில்லையே. அதில் நிறைய படுகுழிகள் இருக்கின்றதே. நாங்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும்போதுகூட, எங்களால் அதை உணர முடியாமல் போகிறதே. நாங்கள் இதிலிருந்து மீள்வது எப்படி?

ஆனந்தம் சாதாரணமாகக் கிடைத்துவிடாது. நீங்கள் அதற்காகப் போராட வேண்டும். அது எப்போதும் அப்படித்தான் இருந்துவருகிறது, இனியும் அப்படித்தான் இருக்கும். இங்குதான் ச்ரத்தை உள்ளே நுழைகிறது.

'நீங்கள்' அங்கு இல்லாதபோது மட்டுமே, நீங்கள் முடிசூட்டப்படுகிறீர்கள்.

அந்த முரண்பாட்டைத் தியானியுங்கள். 'நீங்கள்' இருக்கும் வரை, கடவுளை விட்டு வெகு தூரத்தில்தான் நீங்கள் இருப்பீர்கள்; 'நீங்கள்' மறையும்போது, நீங்கள் கடவுளாக இருப்பீர்கள். நீங்கள், தலையின் உச்சியில் இருக்கும் சக்தி மையமான ஸஹஸ்ராரத்தை எட்டுவீர்கள்.

நீங்கள் முற்றிலும் வெறுமையாக இருக்கும்போது, நாலாபுறங்களிலிருந்தும், எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லாப் பரிமாணத்திலிருந்தும் கடவுள் உங்களை நிரப்புவார். நீங்கள் மூழ்கடிக்கப்படுவீர்கள். அதுதான் முடிசூட்டுவிழா.

கடவுள் மனிதனுக்கு முடிசூட்டாத வரை, அவன் வாழும் வாழ்க்கை வீணே. அவன்

நீங்கள் முற்றிலும்
வெறுமையாக
இருக்கும்போது, எல்லாத்
திசைகளிலிருந்தும், எல்லாப்
பரிமாணத்திலிருந்தும்
கடவுள் உங்களை
நிரப்புவார். நீங்கள்
மூழ்கடிக்கப்படுவீர்கள்.
அதுவே முடிசூட்டுவிழா.

வாழவில்லை, வெறுமனே இருக்கிறான். நரகத்தில் வாழ்வதற்காக வெறுமனே அவன் இருக்கிறான்.

‘வாழ்வது’ என்றால் ஜீவனுடைய உச்ச நிலையில் இருப்பதே. அது ஜீவனின் விழிப்பு நிலையாகும். ஒரு பாறை இருக்கிறது. சராசரி மனிதனும் தான் வாழ்வதாக நம்புகிறான்; ஆனால், அவன் பாறையைப்போலத்தான் இருக்கிறான். ஒரு புத்தரோ அல்லது கிருஷ்ணரோதான் உண்மையில் வாழ்கிறார்கள்.

நாம் எப்படி வாழ வேண்டும்? நாம் எப்படி இந்த இறுதி நிலையை எட்டுவது?

‘நீங்கள்’ இருக்கும் வரை, கடவுளை விட்டு வெகு தூரத்தில்தான் நீங்கள் இருப்பீர்கள்; ‘நீங்கள்’ மறையும்போது, நீங்கள் கடவுளாக இருப்பீர்கள்.

‘மறைந்துவிடுவதன்’ மூலமாகத்தான் நம்மால் அந்த நிலைக்கு வரமுடியும். அதனால் கரைந்துவிடத் தயாராக இருங்கள். குருவிடம் சரணடைதலே கரைதலாகும். நீங்கள் அங்கு இல்லையென்றால், எல்லாம் துல்லியமாகப் பொருந்திவிடும்; ஓர் ஆழ்ந்த அமைதி தோன்றும். நீங்கள் இல்லாதபோது, அங்கே முரண்பாடான கருத்துக்கள் இருப்பதில்லை. அது ஓர் இசையைப்போல, ஓர் கவிதையைப்போல எல்லாமே கொண்டாட்டமாக இருக்கும்.

நாம் எப்போதுமே வெளியில் இருப்பதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்; இதனால்தான், உள்ளிருந்து எழும் குரலை நாம் தொடர்ந்து தவறவிடுகிறோம். கடவுள், நமது உள் மையத்திலிருந்து பேசுகிறார். குருவின் மொழியில் நமது ஜீவனின் எதிரொலியைக் கேட்கிறோம்.

குரு, ஒரு கண்ணாடியைப்போலச் செயல்படுகிறார். அவர் நம்முடைய நிஜமான முகத்தைப் பிரதிபலிக்கிறார். கடவுள் நம்மிடம் எதைச் சொல்ல விரும்புகிறாரோ, அதை குரு நம்மிடம் சொல்கிறார். ஏனென்றால், நமது உள்ளாரந்த ஜீவனின் குரலை நாம் கேட்பதில்லை.

குருவின் பேச்சை நாம் கேட்கத் தொடங்கியதும், நாம் மெதுமெதுவாக குருவின் வார்த்தைகளுக்கும், நமது உள்ளார்ந்த குரலுக்கும் இடையே இருக்கும் ஒத்திசைவைக் கவனிக்கத் தொடங்குகிறோம்.

குரு, நமது ஆன்மாவின் சார்பாகப் பேசுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதனால்தான் குருவிடம் சரணடைவது என்பது வேறு யாரிடமோ சரணடைவது அல்ல; அது நம்முடைய சொந்த மையத்திடமே சரணடைவது.

நாம் மேலோட்டமாகவே, வெளிவட்டத்திலேயே வாழ்கிறோம். நாம் மனத்தில் வாழ்கிறோம். நமக்குள் இருக்கும் அமைதியை, மெல்லிய குரலைக் கேட்க அனுமதிக்காத அளவுக்கு, மனம் எப்போதும் மிகவும் இரைச்சலாக இருக்கும்.

நாம் வெளிப்புறச் சத்தங்களை மட்டுமே
கேட்டுக்கொண்டிருப்பதால், குரு, ஒரு
கருவியைப்போலத் தேவைப்படுகிறார்.
கடவுள் நமக்குள் இருந்து என்ன
சொல்ல முயற்சிக்கிறாரோ, அதையே குரு
வெளியிலிருந்து சொல்கிறார்.

வெளியில் இருக்கும் குருவின் வார்த்தைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டீர்களானால், உள்ளுக்குள் இருக்கும் குருவின் குரலையும் கேட்கத் தொடங்கிவிடுவீர்கள். நீங்கள் மெது மெதுவாக விழிப்புணர்வாக மாறுவீர்கள், நிகழ்ந்துகொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைவீர்கள்.

குரு சொல்லும் விஷயங்களை நீங்கள், ஏதோவொரு வகையில், உங்களுக்குச் சொந்தமானதாக-உங்களின் சொந்த மனத்தைக் காட்டிலும், உங்களின் சொந்த உடலைக் காட்டிலும் நெருக்கமானதாக, சொந்தமானதாக உணர்வீர்கள். ஆகவேதான், கிழக்கத்திய நாடுகளில் குருவை, 'கடவுள்' என்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், அவர்கள் குருவை, 'கடவுள்' என்று ஏன் அழைக்கிறார்கள் என்று!

குரு, உங்களின் உண்மையைப் பிரதிபலிப்பதால், குரு, உங்களின் உண்மையான ஜீவனைப் பிரதிபலிப்பதால், அவர் கடவுளைப் பிரதிபலிக்குறார்.

குருவோடு இருப்பதென்பது, உள்முகமாகத்
திரும்பத் தயாராகுதலாகும். அப்போது
மட்டுமே நீங்கள், உங்கள் கண்களை மூடி,
உள்முகமாகப் பார்க்க முடியும்; உங்கள்
உள்ளுணர்வு, உங்களிடம் தொடர்ந்து
என்ன சொல்லிக் கொண்டிருக்கிறது
என்பதை உங்களால் கேட்க முடியும்.

உள்ளுணர்வுகொண்ட
மனிதன் ஒருபோதும்
வருத்தப்படுவதில்லை;
ஏனென்றால், அவன்
ஒருபோதும் எதையும்
தவறாகச் செய்வதில்லை.
அவன், தனக்குள் கேட்கும்
கடவுளின் குரலைப்
பின்பற்றிச் செல்கிறான்.

மேலும், உள்ளுணர்வு சொல்வது எப்போதும் சரியானதாகவே இருக்கும். பட்டறிவு சொல்வது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். அது, 'இதுவா' அல்லது 'அதுவா' என்ற சந்தேகத்தையே எப்போதும் கொண்டிருக்கும். அது, சந்தேகமில்லாமல் ஒருபோதும் இருக்காது.

ஆனால் உள்ளுணர்வில், சந்தேகம் என்பதே இருக்காது; அது, அறியும். உள்ளுணர்வுகொண்ட மனிதன் ஒருபோதும் வருத்தப்படுவதில்லை; ஏனென்றால், அவன் ஒருபோதும் எதையும் தவறாகச் செய்வதில்லை. அவன், தனக்குள் கேட்கும் கடவுளின் குரலைப் பின்பற்றிச் செல்கிறான்.

ஆனந்தம் - கடவுள் தன்மையின் கதவுகளைத் திறக்கும் திறவுகோல்

ஞானம் இல்லாவிட்டாலும்கூட ஆனந்தமாக இருக்க முடியும். ஆனால் அது நிஜமான ஆனந்தமாக இருக்காது.

அதைத்தான் மக்கள் சந்தோஷம் என்கிறார்கள். அது வரும், போகும். அது தற்காலிகமானது. நாம் ஆழமான தடுமாற்றத்திலும் ஏமாற்றத்திலும் இருக்கும்போது, அது நம்மை விட்டுச் சென்றுவிடும். அதற்கான விலை மிக அதிகம். ஆனால் அந்த விலைக்கேற்ற மதிப்பு அதற்குக்கு கிடையாது.

அதேபோல, ஆனந்தமாக இல்லாமலும்கூட ஞானத்துடன் இருக்க முடியும். அதுமாதிரியான ஞானம் போலியானது, தவறானது. அதை, 'அறிவு' என்றுதான் சொல்ல வேண்டும். அது கடன் வாங்கப்பட்டது. அதனால் அது சுமையாகத்தான் இருக்கும். நமது அனுபவத்திலிருந்து உதிக்காத எந்தவொன்றும், நம்மைப் பிணிக்கும் பந்தமாகத்தான் இருக்கும். அது, நமது அகங்காரத்தையே வளர்க்கும். ஆனால், நமது சுயத்தை அதனால் வெளிப்படுத்த முடியாது. உண்மையாகத் தேடுபவர்களால் மட்டுமே ஆனந்தத்தையும், ஞானத்தையும் ஒன்றாகப் பெற முடியும்.

தியானியுங்கள். ஒருபுறம், நீங்கள் ஆனந்தமுடையவர்களாக ஆவீர்கள். மறுபுறம், நீங்கள் ஞானி ஆவீர்கள்.

ஒரு வகையான ஆழ்ந்த ஒத்திசைவுடன் இரண்டும் ஒரே சமயத்தில் வளரும். இறுதி நிலையில், ஆனந்தமே ஞானமாகவும், ஞானமே ஆனந்தமாகவும் ஆகும்.

ஆனந்தமாக இருப்பதென்பது, பிரார்த்தனை உணர்வில் இருப்பதே. மற்ற அனைத்து வழிபாடுகளும் சம்பிரதாயமாகச் செய்யப்படுபவையே.

நீங்கள் அழகான வார்த்தைகளை உச்சரிக்கலாம், ஆனால் அவை உங்களின் உதட்டளவில் மட்டுமே இருக்கும். வார்த்தைகள் மனத்திற்குச் சொந்தமானவை. ஆனால் இருதயத்திற்கு, வார்த்தைகள் தெரியாது. அது, வார்த்தையற்றது. அது, மௌனமானது. அது, அன்பினால் நிறைந்திருக்கும். இருந்தாலும்கூட, அது, வார்த்தைகளற்றது. அது, உற்சாகமானது. அது, பாடும், ஆனால் மௌன ராகத்தில்! அது, ஆடும், ஆனால், கண்ணுக்குத் தெரியாத வகையில்!

தலை, தூல இருப்பு கொண்டது, ஆகையால் தலையில் இருக்கும் உறுப்புகள் ஒவ்வொன்றுமே கட்புலனாகும் வண்ணமே உள்ளது. அது, ஒரு ஸ்தூல பொருளாக இருக்கிறது. அதுவொரு இயந்திரம். ஆனால் கட்புலனாகாதவற்றின் மையமாக இருப்பது இருதயம். அது, ஒரு ஸ்தூல பொருள் அல்ல. அது, விழிப்புணர்வு.

ஆனந்தமாக இருப்பது எப்படி, நேயத்துடன்
இருப்பது எப்படி என்பது இருதயத்திற்குத்
தெரியும். ஆனந்தமாக இருப்பது, கடவுள்
தன்மைக்கான கதவுகளைத் திறக்கும்.

> உண்மையாகத்
> தேடுபவர்களால் மட்டுமே
> ஆனந்தத்தையும்,
> ஞானத்தையும்
> ஒன்றாகப் பெற முடியும்.

பொதுவாக மக்கள், தங்கள் வாழ்வில் ஏமாற்றம் வரும்போது மட்டுமே, கடவுளிடம் செல்வார்கள். அது தவறான தருணம், ஏனென்றால்,நாம் ஏமாற்றத்தில் இருக்கும்போது, நாம், நம்மை இறுக மூடிக்கொள்கிறோம். கடவுள், ‘கிடைக்கக்கூடியவராகவே’ இருக்கிறார், ஆனால், நாம் கடவுளுக்கு ‘கிடைக்கக்கூடியவராக’ இல்லாதவரை, கடவுளுடைய ‘கிடைக்கக்கூடிய’ தன்மையினால் எந்தவொரு பயனும் நமக்கு இல்லை.

துக்கத்தில் இருக்கும்போது, மக்கள் கடவுளை நினைப்பார்கள். ஆனால் அவரை நினைப்பதற்கான சரியான தருணம் அல்ல அது. அத்தருணங்களில் வரும் பிரார்த்தனைகள், பெரும்பாலும் துக்கங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளாகவும், நிலைமை மேம்பட

தியானியுங்கள். ஒருபுறம், நீங்கள் ஆனந்தமுடையவர்களாக ஆவீர்கள். மறுபுறம், நீங்கள் ஞானி ஆவீர்கள்.

வேண்டும் என்ற கோரிக்கைகளையும் ஆசைகளையும் கொண்டதாகவே இருக்கும். அவை நிஜமான வழிபாடு கிடையாது.

உண்மையான வழிபாடு, ஒரேயொரு நறுமணத்தை மட்டுமே கொண்டிருக்கும், அது, நன்றியுணர்வு. உண்மையான வழிபாடு, ஒரேயொரு சுகந்தத்தை மட்டுமே கொண்டிருக்கும், அது, மனநிறைவு. அது, கோரிக்கைகளையோ அல்லது ஆசைகளையோ அறியாது.

கடவுள், அபரிதமாக அளித்திருப்பதாலும், மிகுந்த கருணையோடு இருப்பதாலும், இருதயம் மௌனமாக, அந்த இறைவனின் தாள் பணிகிறது. அதுவே உண்மையான வழிபாடு, அதுவே வழிபாட்டின் மொத்த சாரம்! ஆனந்தமாக இருங்கள், அதுவே உங்களின் வழிபாடாக மாறட்டும்.

உங்களுக்கு ஒரே ஒரு நிபந்தனை - ஆனந்தமாக இருங்கள்

கடவுள் வெகு தொலைவில் இல்லை. அவர் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. அவர், நம் அருகிலேயே இருக்கிறார். இருதயம் தயாரான உடனேயே, அவர் உடனடியாக தோன்றுகிறார். அவர் கதவைத் தட்டிக் கொண்டிருப்பதில்லை, ஏனென்றால், அது, உங்களின் சுதந்திரத்திற்குத் தடையாக இருக்குமென்பதால்! அவர், உங்கள் அனுமதி இல்லாமல் நுழைவதில்லை, ஏனென்றால், அவர் மனிதர்களுக்கு மதிப்பளிக்கிறார்.

நீங்கள் அவரை அழைக்கும்வரை, அவர் காத்திருப்பார்.

வழிபாடு என்பது கடவுளை அழைப்பதற்கான ஒரு வழி. மேலும், கடவுளை அழைப்பதற்கான சிறந்தவழி என்பது - நீங்கள் நடனமாடிக் கொண்டிருக்கும்பொழுது, உங்களின் முழு இருப்பும் பாடிக் கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் மகிழ்ச்சியில் இருக்கும்பொழுது, ஒவ்வொரு நாடித்துடிப்பும் கொண்டாட்டத்தில் இருக்கும்பொழுது - என்பதாகவே இருக்க வேண்டும். அப்போது அவர் உடனே வருவதற்குத் தயாராக இருப்பார். அங்கு ஒரு சிறிய இடைவெளியும்கூட இருக்காது, அது உடனே நிகழும்.

இருதயம் முழுவதும் அன்பு நிறைந்திருக்கும்போது, உங்களின் மொத்த வாழ்க்கையும் உரைநடையிலிருந்து கவிதையாக உருமாறிவிடும்.

ஒரேயொரு நிபந்தனையை மட்டும் பூர்த்திசெய்யுங்கள்: 'ஆனந்தமாக இருங்கள்'. ஆனந்தம், அன்பிலிருந்தே மடல் விரிக்கும். அன்பு மட்டுமே நிஜமான கவிதை.

இருதயம் முழுவதும் அன்பு
நிறைந்திருக்கும்போது, உங்களின் மொத்த
வாழ்க்கையும் உரைநடையிலிருந்து
கவிதையாக, சத்தத்திலிருந்து இசையாக,
முரண்பாட்டிலிருந்து ஒத்திசைவுக்கு
உருமாறிவிடும்.

அன்பில்லாத இதயம் பாலைவனம் போன்றது. அன்பில்லாத இதயம் உள்ளவர், அழகற்றவராக இருக்கிறார். வாழ்க்கையை நோக்கிய அவரது அணுகுமுறை உணர்ச்சியற்றதாக இருக்கும். அவருக்குள் உயிர்ப்பு இருக்காது; இருப்பின் அழகைப் பாராட்ட வேண்டுமென்ற உணர்வு இருக்காது; கடவுள் கொடுத்திருக்கும் அனைத்திற்கும், பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்திற்கும் நன்றியுணர்வுடன் இருக்கவேண்டுமென்ற விழிப்புணர்வு இருக்காது.

எப்படிப் பாராட்டுவது, எப்படி நன்றியுணர்வுடன் இருப்பது, நடனமாடுவது, எப்படிப் பாடுவது, வாழ்க்கையையும், அதிலடங்கியிருக்கும் எண்ணிலடங்கா ஆனந்தத்தையும் எப்படிச் கொண்டாடுவது என்பது கவிஞர்களுக்குத்தான் தெரியும். அதுவொரு அற்புதமான உற்சாகம். அப்படி இருந்தாலேபோதும். அதுவே தேவைக்கு அதிகமானதாக இருக்கும், ஆனாலும் அதை உணர்வதற்கு, நாம் உணர்வாளர்களாக இருக்க வேண்டும். நாம் உணர்வாளர்களாக வளர வேண்டும்.

உணர்வாளர்களாக வளரக் கற்றுக்கொள்ளுங்கள், அப்படியென்றால் மட்டுமே, வாழ்க்கை ஒரு கருத்தாக இல்லாமல், ஓர் உணர்வாக மாறிவிடும். நாம் சிந்திப்பதிலிருந்து உணரும் நிலைக்கு மாறிய பின், அதற்கடுத்ததாக ஒரேயொரு படிதான் இருக்கிறது, அது உணர்வு நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு மாறுவது; அது மிகவும் சுலபம்.

முதல் படி மிகவும் கடினமாக இருக்கும்: சிந்திப்பதிலிருந்து உணரும் நிலைக்கு மாறுவதற்கு, நாம் நிறைய வேலைகள் செய்தாக வேண்டும். இரண்டாம் படியான, உணர்வு நிலையிலிருந்து இருப்பு நிலைக்கு மாறுவதற்கிடையில் தூரம் அதிகம் இல்லை. பெரும்பாலும் தானாகவே வந்துவிடும்; அதற்காக நாம் ஒன்றும் செய்ய வேண்டியதிருக்காது. ஒரு கவிஞர், எந்த நிமிடமும் ஞானியாக முடியும். நிஜமான பிரச்சி னை என்னவென்றால், எப்படி நமது சிந்தனையிலிருந்து வெளியே வருவது என்பதும், மேலும் மேலும் உணர்வு நிலையைப் பெறுவது என்பதும்தான்.

மேலும் மேலும் அதிக அன்பு காட்டுங்கள். மேலும் மேலும் அதிகம் உணருங்கள். மேலும் மேலும் அதிக மகிழ்ச்சியாக இருங்கள். அதன் மூலம் மட்டுமே, உங்கள் இதயத்தை வளர்க்க முடியும்.

சூரியோதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும், மேகங்களையும், வானவில்லையும், பறவைகளையும், மலர்களையும், மிருகங்களையும், பாறைகளையும், மக்களையும் பாருங்கள் - அவற்றின் கண்களைப் பாருங்கள். இது ஓர் அற்புதமான பன்முக பரிமாண இருப்பு ஆகும். ஒரு கவிஞரைப்போல எல்லாப் பரிமாணங்களையும் பாருங்கள்பாராட்டுவதற்கும், உணர்வதற்கும்! பேரானந்தத்தில் மூழ்குங்கள்!

illustration