KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/சிரத்தை, ஞானத்தை நோக்கி ஈர்க்கும்!Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

சிரத்தை, ஞானத்தை நோக்கி ஈர்க்கும்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பதஞ்சலி இவற்றை எட்டுப் படிகளாகக் குறிப்பிடவில்லை. இவை ஸமாதி நிலையை அடைவதற்கான எட்டுப் பகுதிகளை அல்லது எட்டு இணை பாதைகளையே குறிக்கின்றன.

ஏதாவதுஒரு பகுதியை அல்லது ஒரு பகுதியின் ஒரு பகுதியையாவது ச்ரத்தையோடு பயிற்சிசெய்தாலேபோதும், அதுவே ஞானத்திற்கு அழைத்துச் செல்லும். உண்மையில், நாம் ஞானமடையாமல், நம்மால் ஸத்யத்தை அறிந்துகொள்ளமுடியாது. ஞானமடைந்த பிறகே, இறுதி ஸத்யத்தைப் பற்றி அறிந்துகொள்வோம், அதற்குமுன் அல்ல!

வாய்மை,
உண்மை,
மெய்மை ஆகிய மூன்றும்
இணைந்ததே ஸத்யம்.

நாம் எந்தளவுக்கு ச்ரத்தையோடு பயிற்சி
செய்கிறோமோ, அந்தளவுக்கு அது நம்மை
ஞானத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது.

நான் அடிக்கடி சொல்லும் வாசகம் இதுவே:
"நாம் ஞானமடைய, ஒரு 'ஞானகுருவே'
நமது குருவாக இருக்க வேண்டுமென்ற
அவசியமில்லை!"

நாம் ச்ரத்தையோடு 'எந்த குருவைப்' பின்பற்றினாலும், நம்மால் ஞானம் அடையமுடியும். நம்மை விடுதலை அடையச் செய்யும் என்று ஒரு கற்சிலையை உண்மையாக நம்பினாலும்கூட, அது அவ்வாறே நம்மை விடுவிக்கும்.

நமது அணுகுமுறை, நமது நம்பிக்கை, நமது துணிவு, நமது உறுதி - இவையே நம்மை உயர்ந்த நிலைக்கு அழைத்துச்செல்லும்.

நாம் எதைச் செய்கிறோமோ, அதில் நாம் வைக்கும் முழுமையான நம்பிக்கையே ச்ரத்தை. நாம் செல்லும் பாதையைப் பற்றியும், நாம் எதற்காக அந்தப் பாதையில் செல்கிறோம் என்பதைப் பற்றியும் நமது மனத்தில் எந்தவிதச் சந்தேகமும் இருக்கக்கூடாது.

பொருள்சார்ந்த தேவைகள் உட்பட, நமக்குத் தேவையான எல்லாவற்றையும் ச்ரத்தை நமக்கு வழங்கும். கிருஷ்ணர் இங்கே ஆன்மீக வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறார். அதே நுட்பத்தை நாம், நமக்கு என்ன தேவையோ, அதைப்பெறுவதற்குப் பயன்படுத்தலாம். பொருள்சார்ந்த தேவைகளுக்கும்கூட, ச்ரத்தை அதே அளவிற்கு வேலைசெய்கிறது. அதனால்தான் நான் இதை அதீத ஆன்மீகம் (Quantum Spirituality) என்று சொல்கிறேன்.

ஆன்மீகம் என்பது பொருளியல் உலகிலிருந்து வேறுபட்டது அல்ல. ஆன்மீக நலன், பொருளியல் நலனிடமிருந்து விவாகரத்து பெற்றுவிடவில்லை. பொருள்சார் நலன் என்பது ஆன்மீக நலனின் ஒருபகுதிதான். குவாண்டம் ஸ்ப்ரிச்சுவாலிட்டி என்பது அதுவே.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள்,
எல்லாவற்றையும் துறந்துவிட்டு,
காடுகளிலும் மலைகளிலும் போய்
அமர்ந்துகொள்வது ஆன்மீகம் கிடையாது.
நமது மனத்தைச் சுத்தப்படுத்தாமல்
நாம் இதைச் செய்தால், அந்தக்
காடுகளிலும், மலைகளிலும்கூட நமது
கற்பனைகளோடுதான் நாம் வாழ்ந்து
கொண்டிருப்போம்.

> பொருள்சார்ந்த
> தேவைகள் உட்பட,
> நமக்குத் தேவையான
> எல்லாவற்றையும் ச்ரத்தை
> நமக்கு வழங்கும்.

ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கு நாம் வேறெங்கும் போக வேண்டியதில்லை, நாம் எங்கே இருக்கிறோமோ அங்கேயே இருந்து, எந்தவிதக் குற்ற உணர்ச்சியும் வருத்தமும் இல்லாமல், நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதை அனுபவித்துக்கொண்டே ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நாம் செய்ய வேண்டியதெல்லாம், நம்மிடம் இல்லாததைப் பற்றிய கற்பனைகளைத் துறந்துவிடுவதே.

இம்மனப்பாங்கை அடைய வேண்டுமானால், நம்மிடம் இருப்பதில் நாம் கவனத்தைச் செலுத்த வேண்டுமானால், பேராசைகளையும் எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட்டு, நம்மிடம் இருப்பதை வைத்து நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்குத் துணிவும், மன உறுதியும், ஒருமுகப்பட்ட கவனமும், ஒழுக்கமும் வேண்டும். அதற்கு ச்ரத்தை மிக மிக அவசியம். ஞானம் அடைவதற்கான நேரடி வழி - நமது நம்பிக்கைகளைக் குறித்த ச்ரத்தையும், நேர்மையுமே.

அன்பு மட்டுமே உண்மையான மதம்

கேள்வி: மனித இன வரலாற்றை எடுத்துக்கொண்டால், ஒருவர் வேதங்களை எவ்வாறு புரிந்துகொள்கிறார் என்ற அடிப்படையிலும், புரிந்துகொள்வதில் இருக்கும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும்தான் சச்சரவுகள் இருந்து வருகின்றன. எல்லா மதங்களும் ஒரே அடிப்படையைத்தான் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியிருந்தால், மதத் தொடர்பான சச்சரவுகளும் வன்முறையும் எப்போதும் இருந்து வருகின்றனவே, ஏன்?

எல்லா மதங்களும், அவற்றைத் தோற்றுவித்த ஞானிகளின் போதனைகளை உள்ளது உள்ளபடியே கடைப்பிடித்தபோது, அவை ஒரே அடிப்படையைத்தான் கொண்டிருந்தன.ன்றும் அவை, அந்த ஞானிகளின் வார்த்தைகளில் இருந்த சக்தியை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் (Vibrate) சில சீடர்களால் அதே அடிப்படையைத்தான் கொண்டிருக்கின்றன.

ஞானிகள், தங்களின் அன்புமயமானிருப்பிலிருந்து பேசினார்கள், ஆனால் அவற்றைப் பின்பற்றியவர்கள், அவரவர்களின் தர்க்க அறிவின்படி நடந்து கொண்டார்கள்.

பயத்தையும் பேராசையையும் தங்களுடைய ஆயுதங்களாகக்கொண்டு, தங்களின் அரைகுறைத் தர்க்க அறிவை மற்றவர்கள்மீது திணிக்கும் அன்பில்லாத பக்தர்களால் கட்டப்பட்ட இறுக்கமான கட்டுமானங்களே மதங்கள்.

callout text

ஞானிகளின் ஞானத்தை முழுமையாகப் புரிந்துகொள்வது மிக மிக அவசியம். ஒன்று, அதை முழுமையாகப் புரிந்துணர்ந்துகொள்ள வேண்டும் அல்லது முற்றிலும்மாகப் புரிந்துணர்ந்து கொள்ளாமலேயே விட்டுவிட வேண்டும். அதில், அதற்கு இடைப்பட்ட நிலை என்பது கிடையாது.

இந்தச் சீர்மிகு ஞானிகளின் அனைத்து போதனைகளுக்கும் அன்பே அடிப்படையாக இருக்கிறது. கருணையே அவர்களின் அடையாளம்.

துரதிர்ஷ்டவசமாக, மதங்கள் தங்களுடைய
அன்பை இழந்துவிட்டன. ஆனால் தாங்கள்
அன்பாக இருப்பதாக அவை சொல்லிக்
கொள்கின்றன. தங்களின் மதங்களை
யாரெல்லாம் ஏற்றுக் கொள்கிறார்களோ
அவர்கள் மீது மட்டுமே அவை அன்பு
செலுத்துகின்றன. இது அன்பு கிடையாது.
இது மதவெறி.

மேலும் மேலும்
அன்புமயமாக மாறுங்கள்.
நீங்கள்
கண்ணுக்குத் தெரியாத
கோயிலுக்குள்
பிரவேசிப்பீர்கள்.

அன்புதான் உண்மையான மதம். மற்ற மதங்கள் அனைத்தும் பெரும்பாலும் இலைகளைப் போன்றவை அல்லது மிஞ்சிப்போனால், சிறு கிளைகளைப் போன்றவையே. அன்பே எல்லா ஆன்மீகத்திற்கும் ஆணிவேராக இருக்கிறது. மற்ற எல்லா மதங்களும், பக்க விளைவுகளே. அதை நிறுவும் ஞானிகளின் கருணையே தூய்மையான அன்பாக இருக்கிறது.

கிறிஸ்தவம், இந்துத்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம் போன்ற பெரிய மதங்கள்கூட பெரிய கிளைகள் மட்டுமே. மதங்கள், நம் கண்களுக்குத் தெரியும், ஆனால் அன்பு, நம் கண்களுக்குத் தெரியாது.

வழிபாட்டுத்தலங்களை நாம் நேரடியாகப் பார்க்கலாம், வேத நூல்களை நாம் படிக்கலாம். ஆனால் அன்புக்குக் கோயிலிலும் கிடையாது, எந்த வேத நூலும் கிடையாது. அது, பூமிக்கடியில் மறைந்திருக்கும் வேர்கள் போன்றது; அதுவே மரத்தின் வளர்ச்சிக்கு மூலகாரணம்; அது வளர்க்கப்படவில்லையென்றால், மொத்த மரமும் இறந்துவிடும்.

ரோஜா பூக்கள் நிறைந்த மரம்

அன்பு, மேலும் மேலும் இலைகளை
உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.
மேலும் மேலும் இலைகளையும்,
கொத்துக் கொத்தாகப் பூக்களையும்,
நிறைய பழங்களையும்
உருவாக்கிக்கொண்டே இருக்கிறது.

நாம் மதங்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கும்போது, வெறும் கிளைகளைத்தான் பிடித்துக் கொள்கிறோம். கிளைகள் கவர்ச்சிகரமாக இருக்கலாம்.ஆனால் அவை 'மூலம்' கிடையாது.

ஒரு புத்தர் அல்லது ஒரு கிருஷ்ணரே வேர்களுக்குச் செல்கிறார்; அங்கு அவர், தம்முடைய சொந்த கடவுள்தன்மையை அனுபவமாக உணர்கிறார்.

கடவுளை உணர வேண்டுமானால், ஒருவர் வாழ்க்கையின் வேர்களுக்கு, பிரபஞ்சத்தின் வேர்களுக்குச் செல்ல வேண்டும்.

கடவுள், நம் அண்மைக்கு வந்துவிடுவார்...

வேர்களைக் கண்டறியுங்கள். மேலும் மேலும் அன்புமயமாக மாறுங்கள். நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கோயிலுக்குள் பிரவேசிப்பீர்கள். ஒரு வேர், இந்த உலகத்தில் இருக்கும் எல்லா மரங்களையும் தன்னுள் கொண்டிருக்கிறது, ஒரு பனித்துளி, மொத்த கடலையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது. ஏனென்றால், ஒரு பனித்துளி, அனைத்துத் தண்ணீர்களின் இரகசியங்களையும் தன்னகத்தே தேக்கி வைத்திருக்கிறது.

நாம் பனித்துளியைப் புரிந்துகொண்டாலே போதும், பூமியிலோ அல்லது வேறு கோள்களிலோ இருக்கும் கடல்களைப் பற்றி நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.மொத்த தண்ணீரையே நம்மால் புரிந்துகொள்ள முடியும். தண்ணீர் வேறொன்றாக இருக்க முடியாது; அது எங்கே இருந்தாலும், அதன் இரசாயனக் கலவை ஒரேமாதிரியாகத்தான் இருக்கும். அதே கலவைதான் ஒவ்வொரு துளியிலும் பொதிந்துள்ளது.

கடவுளை உணர
வேண்டுமானால்,
ஒருவர் வாழ்க்கையின்,
பிரபஞ்சத்தின்
வேர்களுக்குச் செல்ல
வேண்டும்.

அன்பின் ஓர் அணுதான் மனிதன். அவன்
தன்னுள் கடவுளைக் கொண்டிருக்கிறான்,
அவன் தன்னுள் அன்பெனும் கலவையைக்
கொண்டிருக்கிறான்.

மனிதன் இரத்தம், எலும்பு, மாமிசம் போன்ற ஸ்தூல பொருட்களால் ஆன கலவை அல்ல; அவன் இரசாயன ரீதியான கலவையோ அல்லது உளவியல் ரீதியான கலவையோகூட அல்ல; அப்படி இருந்திருந்தால், இந்நேரம் நாம் அதை எளிதாகப் புரிந்துகொண்டிருப்போம்.

ஆனால் மனிதன் ஆன்மீகக் கலவையாக இருக்கிறான். அது என்னவென்று, யாராலும் நமக்குச் சொல்ல முடியாது. நாம் ஒவ்வொருவரும் நாமேதான் அதை உணர வேண்டும்.

இயற்பியல், வேதியியல், விஞ்ஞானவியல், உளவியல் என்று மற்ற எல்லா அறிவையும் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கலாம். அப்படிப்பட்ட எல்லா அறிவையும் மிகச் சுலபமாக மற்றவர்களுக்கு மாற்றிக் கொடுக்கலாம்; ஆனால் ஆன்மீக அறிவை மட்டும் அப்படி மாற்றித்தர முடியாது.

ஞானி ஒரு சில குறிப்புகளை மட்டுமே தர
முடியும்; அவையுங்கூட தெளிவற்றவையே.
நாமேதான் நம்முடைய பாதையை மிகக்
கவனத்தோடும் எச்சரிக்கையோடும்
கண்டுபிடித்தாக வேண்டும்.

மனிதன் ஆன்மீகக்
கலவையாக இருக்கிறான்.
அது என்னவென்று,
யாராலும் நமக்குச்
சொல்ல முடியாது. நாம்
ஒவ்வொருவரும் நாமே
அதை உணர வேண்டும்.

அன்பு என்பது வெறும் ஒரு குறிப்புதான், ஆனால் நாம் அன்பை மெது மெதுவாகப் பின்தொடர்ந்தால், நமக்கு மிகப் பெரிய ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது, ஆம், கடவுள் நம் அண்மைக்கு வந்துவிடுவார். அப்போது அவர் ஒரு சிந்தனையாகவோ, ஒரு கருத்தாகவோ இருக்க மாட்டார். மாறாக நாம் தொடக்கூடிய ஏதோ ஒன்றாகிவிடுவார். நாம் அன்பிற்குள் ஆழமாகச் செல்ல செல்ல, கடவுளின் அருகாமைக்குச் செல்கிறோம்.

நாம் அன்பினுள் கரைந்துவிடும் நாளே, நாம் நம் வீட்டை அடைந்துவிடுகிறோம். இதையே நாம் முக்தி, வீடுபேறு, மரணமில்லாப் பெருவாழ்வு என்றெல்லாம் அழைக்கிறோம்.

அன்புதான் எல்லா மதங்களின் இரகசியம். ஆனால் இதற்குமாறாக, மக்கள் தர்க்கத்திலும் சாஸ்திரங்களிலும் தங்களை இழக்கிறார்கள். கடவுளைப் பற்றிய தர்க்கம் இருக்க முடியுமா?

கடவுளைப் பற்றித் தர்க்கம் இருக்க முடியாது. அன்பு மட்டுமே இருக்க முடியும். கவிதையில், இசையில், நடனத்தில் கடவுளைப் பார்க்க முடியும். ஆனால் தர்க்கத்தில் கடவுளைப் பார்க்க முடியாது.

கடவுள் ஒரு கருத்து கிடையாது. கடவுளைத் தர்க்கச் செயல்முறைகளால் விளக்கிக் காட்ட முடியாது; அடையவும் முடியாது. அவர் ஓர் ஆழமான உள்-அனுபவம். நாம் மட்டுமே தனியாகப் போக வேண்டிய அளவுக்கு மிகவும் ஆழமானது அவ்விடம்.

‘ஆம்’ என்பது விழிப்படைந்த மனிதனின் பாதை

அன்பு செலுத்துவது எப்படி, நம்பிக்கை வைப்பது எப்படி என்பது தெரிந்தவர்களுக்குதான் ஆனந்தம் சாத்தியப்படும்.

அன்பு செலுத்துவது எப்படி என்பதும்,
நம்பிக்கை வைப்பது எப்படி என்பதும்
தெரிந்தவர்களுக்குதான் ஆனந்தம்
சாத்தியப்படும்.

எப்படிச் சரணடைவது, எப்படிப் பக்தியோடு
இருப்பது, எப்படிப் பணிவோடு இருப்பது
என்று தெரிந்தவர்களுக்கும்தான் இக்கதவு
திறந்திருக்கும்.

நமது இதயம் ‘ஆம்’ என்று சொல்லும்போது, நமது இருப்பிலிருந்து ‘இல்லை’ என்பது முழுமையாக மறைந்துவிடும்போது ஆனந்தம் சாத்தியப்படும். ஏனென்றால், ‘இல்லை’ என்பது இருட்டு; ‘ஆம்’ என்பது வெளிச்சம். ‘இல்லை’ என்பது அகங்காரம்; ‘ஆம்’ என்பது அகங்காரமின்மை. ‘இல்லை’ என்பது விழிப்புணர்வற்ற மனிதனின் பாதை; ‘ஆம்’ என்பது விழிப்படைந்த மனிதனின் பாதை.

‘இல்லை’ என்னும் வார்த்தையை மறந்து, எல்லாவற்றிற்கும் ‘ஆம்’ என்று சொல்வதுதான் துறவின் ஒரு நெறிமுறை. அப்போதுதான் இணக்கம் அதிகரிக்கிறது. எல்லாவித முரண்பாடுகளும் மறைந்து போகின்றன. நாம் ‘இல்லை’ என்று சொல்வதால் எல்லாவிதமான முரண்பாடுகளும் தோன்றுகின்றன. ‘இல்லை’ என்பது சண்டை - போர். ‘ஆம்’ என்பது அன்பு. ‘ஆம்’ என்பது முழுமையுடன் ஏற்படும் ஆழ்ந்த இணக்கம். ஆனந்தம் என்பது அந்த இணக்கத்தின், அந்த இசைவின் மற்றொரு பெயர். ஆனந்தத்தைப் பெற ஒருவருக்கு தகுதியிருக்குமேயானால், அவர் அதை அடைந்தே தீருவார். தகுதியடைவதற்கான ஒரே வழி, கரைந்துவிடுவதுதான் - ‘இருப்பது’ அல்ல.

‘இருப்பது’ என்பது ஒரு தடை. அகங்காரம்தான் எல்லாத் துக்கங்களுக்கும் ஆணிவேராக இருக்கிறது. அகங்காரம் இல்லாதபோது, அகங்காரம் மறைவதற்காகவே காத்துக்கொண்டிருந்ததைப்போல, ஆனந்தம், பிரபஞ்ச இருப்பின் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலிருந்தும் பாய்ந்தோடி வந்து நம்மை அடைகிறது.

அகங்காரம் என்பது விழிப்புணர்வு
மூடிய நிலை: அப்போது எல்லாக்
கதவுகளும் ஜன்னல்களும்
மூடப்பட்டேயிருக்கும். அதன் காரணமாக
நாம் மிகவும் தனிமையான, இறுக்கமான
வாழ்க்கையையே வாழ்கிறோம். அகங்காரம்
ஒரு மாத்திரை குப்பியைப்போல
(Capsule) நம்மை மூடிவிடுகிறது.

ஆனந்தத்தை அடைவதற்கான ஒரே தகுதி, கரைந்துவிடுவதுதான் - ‘இருப்பது’ இல்லை.

அகங்காரம் முட்டையைப் போன்றது; அதில் எதையுமே உள்ளே அனுமதிக்கும் அளவிற்கு, ஒரு சிறிய ஓட்டைகூட இருக்காது. அகங்காரம், தன்னுள் பயத்தைக் கொண்டிருக்கும் காரணத்தினாலேயே, அது தன்னைத்தானே மூடிக்கொண்டு விடும், தனக்குள்ளாகவே குறுகிவிடும். இப்படித்தான் நாம் துக்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.

ஆனந்தம் என்பது பிரபஞ்சத்துடன் இசைந்து செல்வது, முழுமையாக அதனோடு ஒன்று கலந்திருப்பது. அகங்காரம் என்பது உறைந்த பனிக்கட்டி போன்றது, அகங்காரமின்மை என்பது பாய்ந்தோடும் நீரைப் போன்றது.

நாம் திரவமாக இருந்தால்தான், கடலின் ஒரு பாகமாக இருக்க முடியும். அந்த நிலையில் நமக்கு தனிப்பட்ட இலட்சியமோ அல்லது இலக்கோ கொண்டிருக்க மாட்டோம். ஒவ்வொரு கணமுமே ஆனந்தம்தான், நம்பவியலாத அளவிற்கு பேரானந்தம்தான்.

மனத்தால் இதைப் புரிந்துகொள்ளவோ
அல்லது உள்வாங்கிக்கொள்ளவோ
முடியாது. மனம் என்பது அகங்காரத்தின்
ஒரு பகுதியே. எப்படி மூடுவது என்பதுதான்
அதற்குத் தெரியும்; எப்படித் திறந்திருக்க
வேண்டும் என்பது அதற்குத் தெரியாது.

அன்பு செலுத்துவது என்பது சரணடைந்து விடுவதே! அதாவது, பிரபஞ்சத்திற்கு, மலர்களுக்கு, மரங்களுக்கு, நட்சத்திரங்களுக்கென எல்லாவற்றிற்குமாகத் திறந்திருக்கும் வகையில் நமது மொத்த முயற்சியும் இருக்க வேண்டும்.

மொத்த பிரபஞ்சத்திலும் நிறைந்திருக்கும் இந்த அழகான இசைக்காக மனத்தைத் திறப்பது எப்படி? எப்போதும் நடந்து கொண்டிருக்கும் கொண்டாட்டத்திற்காக நம் மனதைத் திறந்து வைத்திருப்பது எப்படி?

மலர்கள் காற்றில் நடனமிடுகின்றன; மரங்கள் காற்றையும் நட்சத்திரங்களையும் ஆனந்தமாக அனுபவிக்கின்றன. அவை எப்போதும் ஆனந்தநிலையில் இருக்கின்றன. மனிதனைத் தவிர, மற்ற எல்லாமே இசைவாக இருக்கின்றன. மனிதன் மட்டுமே இசைவில்லாமல் இருக்கிறான், ஏனென்றால், அவனிடம் விழிப்புணர்வு இருக்கிறது.

விழிப்புணர்வால் இரண்டு விஷயங்களைச் செய்ய முடியும்: அதனால் அகங்காரத்தை உருவாக்க முடியும். அகங்காரமின்மையையும் உருவாக்க முடியும்.

அது அகங்காரத்தை உருவாக்கினால், நாம் நரகத்தில்தான் வாழ்வோம். அது அகங்காரமின்மையை உருவாக்கினால், நாம் சொர்க்கத்தில் வாழ்வோம்.

மொத்த உலகமும் சொர்க்கத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதை மற்ற ஜீவராசிகள் உணர்வதில்லை. ஆனால் மனிதன் மட்டுமே சொர்க்கத்திற்குள் நுழையும்போது, அதை முழுமையாகத் தெரிந்துகொண்டு நுழைகிறான். அதுவே மனிதனின் சிறப்பு, அதுவே மனிதனின் அழகு. ஆனால் அதுவே மனிதனுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது.

ஏனென்றால், ஆயிரக்கணக்கான மக்களில், எப்போதாவது ஒருமுறைதான் யாராவது ஒருவர்தான் இதற்குள் நுழைகிறார். மற்றவர்கள் அனைவரும் சுலபமாக அகங்காரத்தின் வலையினுள் மாட்டிக் கொள்கிறார்கள்.

அகங்காரமற்று இருங்கள், கடவுளின் கருணை முழுவதும் உங்களுக்கே! ஆனந்தம் என்பது கடவுளின் கருணையால் கிடைப்பது.

‘நாம் யார்’ என்பதையே நாம் மறந்துவிட்டிருக்கிறோம். நாம் பேரரசர்கள், ஆனால் நம்மைப் பிச்சைக்காரர்களாகவே கனவு காண்கிறோம். நமது இருப்பிற்குள் மொத்த கடவுளின் சாம்ராஜ்ஜியமும் இருக்கிறது. இருந்தும், சாரமற்ற விஷயங்களையே நாம் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

நமது ஜீவனுக்குள் எல்லையில்லா வற்றா வளங்களும் பொக்கிஷங்களும் குவிந்திருப்பதை அறியாமல், நாம் சில்லறை விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்.

நாம் கடலைப் போன்றவர்கள். இருந்தும், நமது ‘சுய’த்திலிருந்து நம்மைநாமே துண்டித்துக்கொண்டதால், நாம் தாகத்தோடு தவித்துக் கொண்டிருக்கிறோம்.

நமது அடையாளத்தின் காரணமாக,
நம்மிடம் இருந்தே நம்மைத்
துண்டித்துக்கொண்டோம். நாம்
அடையாளங்களாக மாறிவிட்டோம்.
ஆனால் உண்மையிலேயே நாம்
யாராக இருக்கிறோமோ, அதுவே நமது
தனித்தன்மை. நாம் அடையாளத்திலிருந்து
நமது தனித்தன்மைக்கு நகர வேண்டும்.

பொய்மையிலிருந்து நிஜத்திற்கு,

விழிப்புணர்வால் இரண்டு
விஷயங்களைச் செய்ய
முடியும்:
ஒன்று, அகங்காரத்தை
உருவாக்க முடியும்.
அல்லது
அகங்காரமின்மையையும்
உருவாக்க முடியும்.

போலித்தனத்திலிருந்து சிரத்தைக்கு மாற வேண்டும். சிரத்தையான தேடல் என்பது, சரணடைதலைப் பற்றியதே, அதாவது ஸத்யத்தைத் தேடுவதே சரணாகதி. அதையும் நம்மால் மிகச் சுலபமாகச் செய்ய முடியும், ஏனென்றால், நாம் எப்படித் தொடர்பற்றுப் போனோம் என்பதோ, எந்தளவிற்கு நாம் அதை மறந்திருக்கிறோம் என்பதோ, எத்தனை காலமாக நாம் மறந்திருக்கிறோம் என்பதோ ஒரு பொருட்டு அல்ல.

ஒரே நொடியில் அதை நாம் நினைவுக்குக் கொண்டுவர முடியும். உடனே அதனோடு இணைய முடியும். நம்பிக்கைதான் இணைப்பைக் கொடுக்கிறது.

நம்பிக்கைதான் சுதந்திரம் அடையச் செய்யும்

மதம் என்பது ஒரு 'ஒப்புக்கொள்ளுதல்'தான் (Belief), நம்பிக்கை (faith) கிடையாது.

சாதாரணமாக, 'ஒப்புக்கொள்ளுதல்' என்பதையும், நம்பிக்கை என்பதையும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை ஒன்றுக்கொன்று இணையான சொற்கள் கிடையாது. அவை எதிர்ச்சொற்கள். அவை எதிர்ப்பதங்கள்.

'ஒப்புக்கொள்ளுபவரை', நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. 'ஒப்புக்கொள்ளுபவருக்கு' நம்பிக்கை பற்றி எதுவுமே தெரியாது.

‘ஒப்புக்கொள்ளுதல்’, தர்க்கத்திற்கு நெருக்கமாக இருக்கும். நம்பிக்கை, இதயத்தில் இருந்து வருவது; அது, இதயத்தின் உடையது.

'ஒப்புக்கொள்ளுதல்' என்பது மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியது; நம்பிக்கை என்பது நம்முடைய சொந்த அனுபவம். 'ஒப்புக்கொள்ளுதல்', தலையில் இருந்து அதாவது தர்க்கத்தில் இருந்து வருவது; அது, தர்க்கத்திற்கு நெருக்கமாக இருக்கும். நம்பிக்கை, இதயத்தில் இருந்து வருவது; அது, இதயத்தின் உடையது.

'ஒப்புக்கொள்ளுதல்' என்பதன் பொருள், நம்முடைய சந்தேகத்தைத் தற்காலிகமாக மறைத்திருக்கிறோம் என்பதாகும். சந்தேகம் என்ற ஒரு இருண்ட ஒட்டையை ஓர் அழகான 'ஒப்புதல்' மூலம் அடைப்பது. ஆனாலும் சந்தேகம் அங்கே இருந்துகொண்டுதான் இருக்கும்.

சந்தேகத்தை அகற்றுவதற்கு இது சரியான வழி அல்ல. சந்தேகத்தைப் பற்றிய புரிதலே அதை அகற்றுவதற்கான சரியான வழி! உண்மையில், அதை மூடி மறைப்பது மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், மூடி மறைக்கும்போது, அதைப் பற்றி நமக்கு எதுவுமே தெரிவதில்லை; அதனால் அது, உள்ளே மறைந்திருக்கும் புற்றுநோயைப்போல நமக்குள்ளேயே பரவுகிறது.

‘ஒப்புக்கொள்ளுதல்’ என்பது மற்றவர்களிடம் இருந்து இரவல் வாங்கியது; நம்பிக்கை என்பது நம்முடைய சொந்த அனுபவம்.

சந்தேகத்தைப் பற்றி அறிந்துகொள்வதே
நல்லது. அப்படியென்றால் மட்டுமே,
நம்மால் அதை அகற்றுவதற்கு ஏதாவது
செய்ய முடியும். அதை மறந்துவிடுவதும்
மூடி மறைத்துவிடுவதும் மிகவும் ஆபத்தைத்
தரும். அது நமது இருப்பு முழுவதும் பரவி
விடும்.

மதவாதிகள், ஒப்புக்கொள்ளுபவர்கள்
மட்டுமே. அடி ஆழத்தில் அவர்களிடம்
சந்தேகம் மறைந்திருக்கும். அவர்களின்
ஒப்புதல் அவர்களை ஆன்மீகவாதிகளாக
ஆக்காது.

இதுநாள்வரையில் சரித்திரமே அப்படித்தான் இருக்கிறது.

மற்ற எல்லாவற்றையும்விட, மக்களின் 'ஒப்புக்கொள்ளுதல்கள்'தான் பூமியில் அதிக இரத்தத்தைச் சிந்த வைத்திருக்கின்றன. கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களை அழிக்கிறார்கள், முஸ்லிம்கள் இந்துக்களைக் கொல்கிறார்கள். இன்னும் இதுபோல எவ்வளவோ நடக்கிறது. ஒவ்வொரு மதவாதியுமே யாரோ ஒருவருடைய கழுத்தைப் பிடித்துக் கொல்வதற்குத் தயாராக இருப்பதுபோல் தெரிகிறது.

பெரும்பாலும், ஆன்மீகத்தைப் பற்றிய புரிதலோ செயல்பாடோ இம்மியளவும் இல்லாதவர்கள்தான், தங்களை 'மதத் தலைவர்கள்' என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் கடவுளின் பெயரால் மற்றவர்களைக் கொல்கிறார்கள்.

'ஒப்புக்கொள்ளுதல்'கள் ஒருபோதும் ஒருவரை ஆன்மீக வாதியாக ஆக்குவதில்லை. அவை, அவரை ஒரு மதவாதியாகவே மாற்றும்.

'ஒப்புக்கொள்ளுதல்'ாதாரணமாக நம்முடைய முகத்தை மட்டுமே மூடும். ஆனால் நமது அடி ஆழத்தில், நாம் அசிங்கமாகத்தான் இருந்து கொண்டிருப்போம். இருந்த போதிலும், நம்மைப்போன்றே 'ஒப்புக் கொள்ளுதல்'தன்மையுடைவர்களும், நம்முடன் பயணிப்பவர்களும் மட்டுமே நம்மை மதிக்கிறார்கள். அவர்களும், நம்மோடு அதே படகில் பயணிப்பதன் காரணமாக நம்மை வழிபடுகிறார்கள்.

சந்தேகத்தைப் பற்றிய புரிதலே அதை அகற்றுவதற்கான சரியான வழி!

யாரோ ஒருவர் ஒருமுறை ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம் கேட்டார், "கோடிக்கணக்கானவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் கிறிஸ்தவம் எப்படித் தவறாக இருக்க முடியும்?"

அவர் கேள்வி கேட்டவரிடம், "மொத்த ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே கிறிஸ்தவர்கள் இருக்கிறார்களென்றால், அவர்கள் எப்படிச் சரியாக இருக்க முடியும்?" என்று திருப்பி ஒரு கேள்வி கேட்டார்.

ஸத்யம், கூட்டத்தின் எண்ணிக்கையைச் சார்ந்திருப்பதில்லை. ஒருகூட்டத்திலிருந்து, அக்கூட்டத்திற்கு எதிராக, எப்போதாவதுதான் ஒரு மனிதர் எழுகிறார், ஸத்யத்தின் உ்ச்சங்களை அடைகிறார்.

பள்ளத்தாக்குகளில்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக வாழ்வார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் சார்ந்திருப்பார்கள். ஒரே 'ஒப்புதல்' தன்மை கொண்டவர்களோடு சேர்ந்து வாழ இது உதவுகிறது. இது நமக்குப்பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறது. ஆனால் நம்பிக்கை என்பது வேறுவிதமானது. 'ஒப்புக்கொள்ளுதலுக்கு' இங்கு அவசியமே கிடையாது. எந்தப் பேச்சுக்களையும் எழுத்துக்களையும், என்னுடைய எழுத்துகளையும் பேச்சுக்களையும்கூட ஒப்புக்கொள்ளாதீர்கள். அதனை வாழுங்கள். அதைப் பரிசோதித்துப் பாருங்கள், அதைப் பகுத்தாராய்வு செய்யுங்கள், அதை உங்கள் அனுபவமாக்குங்கள்.

அது, உங்கள் அனுபவமாகும்போது, அது, வெறும் 'ஒப்புக்கொள்ளுதலாக' மட்டும் இருக்காது; நம்பிக்கையாக மாறும். இந்த நம்பிக்கை மட்டுமே உங்களை ஜீவன்முக்தி அடையச் செய்யும்.

Illustration of hands playing a flute
Krishna with flute