KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/வழிபடும் முறைSign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

வழிபடும் முறை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Illustration of Lord Krishna playing flute

17.1 அர்ஜுனன் சொன்னது: ஓ கிருஷ்ணா, ஆன்மீக பயிற்சிகளை ச்ரத்தையோடு, ஆனால் வேத நெறிகளுக்கடபடாமல் செய்பவர்களின் பக்தி எந்த வகையைச் சார்ந்தது? அது ஸத்வ வகையைச் சார்ந்ததா? ரஜஸ் வகையைச் சார்ந்ததா? அல்லது தமஸ் வகையைச் சார்ந்ததா?

அர்ஜுனன் கேட்கிறார்: கிருஷ்ணா, வேத நூல்களின் நெறிமுறைகளை எல்லாம் விட்டுவிட்டு யாகங்கள் செய்பவர்களின் நிலை என்ன?

பண்டைய புராணங்கள் அல்லது வேத நூல்களின் நெறிகளைப் பின்பற்றாமல், தங்களின் சொந்த நம்பிக்கைகளின்படி வழிபாடு செய்பவர்களின் நிலை என்ன? அவர்கள் அமைதியான நிலையில் (ஸத்வ) இருக்கிறார்களா, அமைதியற்ற நிலையில் (ரஜஸ்) இருக்கிறார்களா அல்லது அறியாமை நிலையில் (தமஸ்) இருக்கிறார்களா?’

அர்ஜுனன் ஓர் அழகான கேள்வியைக் கேட்டிருக்கிறார். வழிபாடு பல நிலைகளில் நடக்கலாம். அர்ஜுனனின் கேள்வி, மூன்று மனோபாவங்கள் அல்லது மூன்று குணங்களைப் பற்றியதாக இருக்கிறது.

வழிபாடு என்பது நமது சக்தி நிலைகளையும் சார்ந்திருக்கிறது. பெரும்பாலானவர்கள், கோயில்களுக்குப் போவது, புனித நதிகளில் நீராடுவது, பூஜைகள் போன்ற உடல் நிலையிலான நுட்பங்கள் மூலமாக வழிபாடு செய்வதையே சௌகரியமாக உணர்வார்கள். சக்தியளவில் பார்க்கும்போது, இவை எல்லாம் நிலசக்தியோடும் நீர்ச்சக்தியோடும் தொடர்பு கொண்டவை.

பஞ்சபூத சக்திகளுள் மிகவும் ஸூக்ஷ்மமான ஆகாச சக்தியை, நாம் தியானத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும், ஆனால் இதற்குப் புரிதலும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

மற்றொரு சாரார், யாகம் அல்லது ஹோமம் போன்ற நெருப்பு வழிபாடுகளைச் செய்வார்கள். இவை நெருப்பு சக்தியோடு தொடர்பு கொண்டவை. இதன் தாத்பர்யம் என்னவென்றால், நெருப்பு சக்தியானது, மந்திர உச்சாடனங்களின்மூலம், அந்த ஹோம குண்டங்களைச் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் குடத்து நீருக்குள் ஏற்றப்படுகிறது. பிறகு, சக்தியூட்டப்பட்ட இந்நீர், விக்ரஹங்கள் மீதும், அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் மீதும், நிலத்தின் மீதும் தெளிக்கப்படும். அதன்மூலம் அவையனைத்துமே சக்தியூட்டப்படும்.

அடுத்த பஞ்சபூத சக்தியான காற்று சக்தி, பிராணாயாமம் போன்ற சுவாச நுட்பங்கள் மூலமாகப் பெறப்படுகிறது. சிவ சூத்திரத்தின் முதல் ஒன்பது சூத்திரங்களில், சிவபெருமான் அவர் பக்தையான தேவிக்கு இந்த நுட்பங்களைத்தான் விளக்குகிறார்.

பஞ்சபூத சக்திகளுள் மிகவும் ஸூக்ஷ்மமான ஆகாச சக்தியை, நாம் தியானத்தின் மூலமாக மட்டுமே பெற முடியும், ஆனால் இதற்குப் புரிதலும் விழிப்புணர்வும் தேவைப்படுகிறது.

வழிபாட்டின் அல்லது யாகத்தின் ஒவ்வொரு வடிவமுமே, ஒவ்வொருவரின் இயல்பையும் ஆர்வத்தையும் பொருத்து மாறுபடுகிறது. இவை ஒவ்வொன்றும் வேத நூல்களில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன, வழிபாட்டை எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும், எங்கிருந்து செய்ய வேண்டும் என்பது போன்ற பல நெறிமுறைகள் வேதங்களில் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவது எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் அவரின் சொந்த வழிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்தால் என்ன நடக்கும் என்று அர்ஜுனன் கேட்கிறார்.

இதுவொரு அருமையான கேள்வி. தமிழ்நாட்டில் ஒரு ஞானி, தமது கண்களைத் தோண்டி எடுத்து, சிவலிங்கத்திற்கு வைக்கும் அளவிற்கு மிகத் தீவிரமாகச் சிவனை வழிபட்டு வந்தார். இன்னும் சில ஞானிகள், மாமிசத்தைக்கூட கடவுளுக்குப் படைத்திருக்கிறார்கள்.

பல ஞானிகள், தங்கள் இஷ்ட தெய்வங்களை தங்கள் விருப்பத்திற்கேற்ப வழிபட்டிருக்கிறார்கள், அவர்கள் வழிபாட்டு முறைகளில் வேத நூல்கள் குறுக்கே நிற்கவில்லை. ஆனால், இந்த ஞானிகள் தாங்கள் செய்யும் வழிபாட்டு முறையை ஒருமுகப்பட்டு செய்தார்கள். அவர்களிடம் ச்ரத்தை இருந்தது. அதுதான் முக்கியம்.

பல ஞானிகள், தங்கள்
இஷ்ட தெய்வங்களை
அவரவர்கள்
விருப்பத்திற்கேற்ப
வழிபட்டிருக்கிறார்கள்.
ஆனால், இந்த ஞானிகள்
தாங்கள் செய்யும் வழிபாட்டு
முறையை ஒருமுகப்பட்டு
செய்தார்கள்.

அர்ஜுனனின் கேள்வி இதனோடு தொடர்புடையதே

உண்மையான ஆன்மீக வாழ்க்கைக்குத் தேவைப்படுவதெல்லாம், ஸத்யத்துடனான பரிசோதனையைச் செய்துபார்ப்பதற்கான துணிவும், ச்ரத்தையுமாம்.

நாம் எல்லாவற்றையும் கேட்கிறோம். எங்கெல்லாம் சொற்பொழிவுகள், ஆன்மீக விளக்கங்கள் நடைபெறுகின்றதோ அங்கெல்லாம் சென்று, யார் பேசினாலும் கேட்கிறோம்.

நாம் எல்லாப் புத்தகங்களையும் படிக்கிறோம். அந்த அறிவைப் பரிசோதிப்பதற்கான சூழலை நேர்கொள்ளும்போது, அதைச் செயலில் காட்டுவதில்லை. அப்போது நீங்கள், “நடைமுறை தேவைகளுக்காக, நாங்கள் உடைமைகளை வைத்திருக்க வேண்டியதாக இருக்கிறது, ஸ்வாமிஜி. அவை இல்லையென்றால், எங்களால் இந்த உலகில் எப்படி வாழ முடியும்...?'' என்று கேட்பீர்கள். நீங்கள் தந்திரமாகச் சமாதானம் பேசுகிறீர்கள்.

நழுவுதல் - ஒரு கோழைத்தனம்

விட்டுக்கொடுத்தல் என்பது கோழைத்தனம். தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், எதிலும் நழுவும் வழக்கத்தையே கொண்ட ஒருவர், வாழ்க்கையில் எதையும் அனுபவிப்பதில்லை; ஆன்மீக வாழ்க்கையில் மட்டுமல்ல, வெளியுலக வாழ்க்கையிலும்கூட!

ஒரேயொரு ஸத்யத்தை உணர்வதற்கான ச்ரத்தையேகூட போதுமானது. வேறெதுவும் தேவையில்லை. பெரிதாக ஒன்றும் நாம் செய்ய வேண்டியதில்லை. ஆழமாக ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள். ஏதோவொன்றைப் பெரிதாகச் செய்துவிட்டதாலேயே ஒருவரை, 'ஒரு பெரிய மனிதர்' என்று சொல்லிவிட முடியாது. அவர் என்ன செய்கிறார் என்பது முக்கியமல்ல; அவர் எப்படி அதைச் செய்கிறார் என்பதுதான் முக்கியம்.

உதாரணமாக, நம் தமிழ்நாட்டில் வாழ்ந்த சிறந்த ஞானியான நம்மாழ்வார், தம் வாழ்க்கை முழுவதும், விஷ்ணு பகவானுக்காகப் பூமாலை தொடுக்கும் தொண்டு ஒன்றையே செய்துவந்தார். அவர் வேறெதையும் செய்யவில்லை. நாள்தோறும் தோட்டத்திலிருந்து மலர்களைக் கொய்து, மாலையாகத் தொடுத்து, அதைக் கடவுளுக்குச் சாற்றுவது என்ற ஒரு தொண்டினை மட்டுமே செய்துவந்தார்.

நீங்கள் எதை
நம்புகிறீர்களோ,
அதை வெளிப்படுத்தும்
துணிவைக்
கொண்டிருங்கள்.

அவர் ஞானம் அடைந்தார்.

பல ஞானிகள், பெரிதாக ஒன்றும்
செய்துவிடவில்லை. அவர்கள், சின்ன
சின்ன விஷயங்களையேகூட 'சிறந்த
முறை'யில் செய்தனர். அவர்கள், அவற்றில்
ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இன்னொரு ஞானி, கடவுளுக்கு ஒரு
மாலைகூடக் கட்டித் தரவில்லை. அதற்குப்
பதிலாக, நாள்தோறும் அவர் சிவலிங்கத்தின்
மீது ஒரு கல்லை விட்டெறிவார். அவர்
பெயர் ஸாக்ய நாயனார் (ஸாக்ய என்றால்
புத்த மரபைக் குறிக்கிறது, நாயனார்
என்றால் சிவ பக்தர்களைக் குறிக்கிறது).

எப்படியோ அவர், ஒரு புத்த துறவியாக
ஆகிவிட்டார். அவர் புத்த துறவி என்பதால்,
அவரால் மற்றவர்கள் முன்னிலையில்,
சிவலிங்கத்தை வழிபட முடியவில்லை.
இருந்தாலும், அவருக்கு சிவன் மீது தீராத
மரியாதையும், பக்தியும் இருந்து வந்தது.

புத்த மதத்தில், குடும்பத்திற்கு ஒரு நபரை, சிறுவயதிலேயே புத்த மடத்திற்குக் கொடுத்துவிட வேண்டும். அவர்கள், அக்குழந்தையை ஒரு புத்த துறவியாக வளர்த்து ஆளாக்குவார்கள். அப்படித்தான், ஸாக்ய நாயனாரும் அவரது குடும்பத்தினரால் ஒரு மடத்திற்குக் கொடுக்கப்பட்டிருந்தார். இருந்தாலும், அவருக்கு சிவன் மீது ஆழ்ந்த பக்தி இருந்தது. நாள்தோறும் அவர், சிவன் கோயிலுக்கு அருகில் செல்வார். அதுவொரு கோயில்கூட கிடையாது, ஒரு மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருக்கும், அவ்வளவுதான்.

ஒரு கல்லை எடுத்து, அதை ஒரு மலராகப் பாவித்து, தூரத்திலிருந்தே அதை சிவலிங்கத்தின் மீது எறிந்துவிட்டுச் செல்வார். இதைப் பார்த்து யாராவது, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டால், "நான் சிவலிங்கத்தின் மீது கல்லை எறிகிறேன்," என்று சொல்வார்.

அப்படி ஒருநாள் கல்லை எறியும்போது, திடீரென்று அங்கு வந்த ஒரு வயதானவர், "என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். இவரும் வழக்கம்போல், "நான் சிவலிங்கத்தின்மீது கல்லெறிகிறேன்," என்று சொன்னார்.

"நீ கல்லெறியலாம். ஆனால் நீ கல்லெறியும் விதத்தைப் பார்த்தால், அதில் உன்னுடைய பக்திதான் தெரிகிறது. நீ யார்?" என்று கேட்டார்.

சாக்கிய நாயனாரும், "எப்படியோ, நான் புத்த குடும்பத்தில் பிறந்துவிட்டேன், இருந்தாலும் எனக்கு சிவன் மீது ஆழமான பக்தி இருக்கிறது. நாள்தோறும் நான் கல்லை எறிவதுபோல, என்னுடைய ‘இருப்பை’யே அவருக்கு அளித்து வருகிறேன்,” என்றார்.

உடனே வயதான உருவில் வந்த சிவன் அவருக்குக் காட்சி தந்து, ஞானமருளினார்.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், நாம் என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் வீட்டைப் பெருக்கிக் கொண்டிருந்தாலும், வீட்டைத் துடைத்துச் சுத்தம்செய்து கொண்டிருந்தாலும்கூட, அந்தக் கணத்தில் அதை முழுமையாகவும் ஆழ்ந்த ச்ரத்தையோடும் செய்தால், அதுவே போதுமானது. அந்தக் கணத்தில் வாழுங்கள்.

பரிசோதித்துப் பார்க்காமல், தீர்மானிக்காதீர்கள்

ஆன்மீக பயிற்சியென்றால், நீங்கள் அடர்ந்த காட்டிற்குள் அமர்ந்து, மூக்கைப் பிடித்துக்கொண்டு, இடகலை வழியாகப் பத்து முறை மூச்சு விட வேண்டும், பிங்கலை வழியாகப் பத்து முறை மூச்சுவிட வேண்டும் என்றெல்லாம் அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் ஆழமாகவும், ச்ரத்தையோடும் செய்யுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதை வெளிப்படுத்தும் துணிவைக் கொண்டிருங்கள். உங்கள் நம்பிக்கை என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றைப் பரிசோதிக்கவும், அதைச் செயல்படுத்தவும் துணிவு கொண்டிருங்கள்.

நீங்கள் நம்புகின்ற ஸத்யம், உச்சமான
ஸத்யம்தானா என்பதைப் பற்றிக்
கவலைப்படாதீர்கள். அதைப் பரிசோதித்துப்
பார்க்கும் துணிவு உங்களிடம் இருந்தால்
ஒழிய, அது உச்சமான ஸத்யம்தானா என்பதை
உங்களால் அறிய முடியாது.

பரிசோதித்துப் பார்க்காமல், உங்களால் தீர்மானிக்க முடியாது. பரிசோதித்துப் பார்க்காமல் நீங்கள் தீர்மானித்தீர்களென்றால், அது தீமையில்தான் முடியும்.

உங்களுக்கு வேண்டுவதெல்லாம் ஒன்றே, நீங்கள் நம்பும் ஸத்யத்தைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான துணிவுதான்.

ஸத்யம் என்ற சொல்லுக்கு, தமிழில் மூன்று வார்த்தைகள் இருக்கின்றன.

வாய்மை - வாய்மூலமாக ஸத்யம் பேசுவது. அடுத்தது, உண்மை - மனம்மூலமாக அல்லது இதயம்மூலமாக ஸத்யத்தைச் சிந்திப்பது.

மூன்றாவது, ஓர் அருமையான வார்த்தை,
மெய்மை - உடல் மூலமாக ஸத்யத்தை
வாழ்வது. தமிழில், ‘மெய்’ என்றால் உடல்
என்று அர்த்தம்.

வாயால் ஸத்யம் பேசுவது மற்றும்
மனத்தால் ஸத்யத்தைச் சிந்திப்பதென்றால்
நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால்,
‘உடலால் ஸத்யத்தை வாழ்வது என்றால்
என்ன?’ நாம் இதற்கு முன்னால் இதைக்
கேட்டிருக்க மாட்டோம்.

ஒரு சின்ன கதை:

திருவாரூர் அருகில், தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் என்ற ஒரு பெரிய ஞானி வாழ்ந்தார். அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்:

ஒருமுறை தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளைச் சந்தித்த அரசவைப் புலவரொருவர், சுவாமிகளின் ஸாந்நித்யத்தால் ஈர்க்கப்பட்டு, அவர்மீது பரணி பாடினார். பரணி என்பது செய்யுள் வகைகளுள் ஒன்று, இதில் ஆயிரம் செய்யுள்கள் இருக்கும். போரில் தமது பலத்தையும், துணிவையும் காட்டி, ஆயிரம் யானைகளைக் கொன்ற ஒருவர் மீதுதான் பொதுவாக ‘பரணி’ பாடப்படும்.

இங்கு, ஞானியின் ஸாந்நித்யத்தால் ஈர்க்கப்பட்ட அந்தப் புலவர், அந்த இடத்திலேயே ஆயிரம் பாடல்களை எழுதி முடித்தார். ஆனால், அந்த நாட்டின் அரசரோ, பரணி பாடப்படுவதற்குரிய தகுதி தமக்கு மட்டுமே இருப்பதாகக் கருதிக்கொண்டிருந்தார். ஒருநாள் அரச வையில், அந்த அரசர் அகங்காரத்தோடும் பெருமிதத்தோடும், “இந்தத் தேசத்திலேயே என் மீது மட்டுமே பரணி பாடப்பட்டுள்ளது!” என்று சொன்னார்.

அங்கிருந்த புலவர்களில் ஒருவர் எழுந்து, “இல்லை அரசே! நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள். தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் மீதும் பரணி பாடப்பட்டுள்ளது. அதையும், நமது அரசவை புலவர்களில் ஒருவரே பாடியுள்ளார்,” என்றார்.

இதைக் கேட்டவுடன் அரசருடைய அகங்காரம் புண்பட்டது. அவர் கோபத்துடன், “என்ன? பரணி பாடல்பெற்ற அந்நபர் யார்? அவரை இங்கே அழைத்து வாருங்கள்,” என்றார். உடனே அந்தப் புலவர், “இல்லை அரசே! அவர் ஒரு பிச்சைக்காரர். அவர் இங்கே வரமாட்டார்,” என்றார்.

பிச்சைக்காரர்களை ஒருபோதும் கட்டாயப்படுத்த முடியாது. ஒன்றுமே இல்லாதவர்களை நம்மால் கட்டாயப்படுத்த முடியாது.

நாம் விரும்புவதைச் செய்யுமாறு சொல்லி யாரை வேண்டுமானாலும் கட்டாயப்படுத்திவிட முடியும், ஆனால் ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது, ஏனென்றால், அவர்கள் பெயரைப் பற்றியோ, வீட்டைப் பற்றியோ, புகழைப் பற்றியோ அல்லது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு ஆசைகள் இருக்காது.

போரில் தமது பலத்தையும்,
துணிவையும் காட்டி,
ஆயிரம் யானைகளைக்
கொன்ற ஒருவர் மீது
பாடப்படுவதே
‘பரணி’.

ஆசைகள்கொண்ட ஒருவர் மட்டுமே,
இந்த சமூக அமைப்புமுறைக்குக்
கட்டுப்படுகிறார். அதனால், நம்மால்
ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டுக்குள்
கொண்டுவர முடியாது.

இந்த விஷயத்தில், தக்ஷிணாமூர்த்தி
சுவாமிகள் ஒரு பிச்சைக்காரர் - ஒரு துறவி.
அதனால் காவலர்களால் அவரை அரசர்
முன் கொண்டுவந்து நிறுத்த இயலவில்லை.

அரசர் இப்போது, தாம் இன்னும் ஆழமாகத் தாக்குண்டதாக உணர்ந்தார். உடனே அவருடைய கோபம் பரணி பாடிய புலவர் மீது திரும்பியது. "ஒரு பிச்சைக்காரன் மீது பரணி பாடிய அந்த முட்டாளை உடனே இங்கே அழைத்து வாருங்கள்," என்றார் அரசர்.

அந்தப் புலவர் நீதிமன்றத்திற்குக்
கொண்டுவரப்பட்டார். அரசர், "முட்டாளே,
உனக்கு என்ன துணிவு இருந்தால் ஒரு
பிச்சைக்காரன் மீது பரணி பாடுவாய்,"
என்று கேட்டார்.

> ஒன்றுமே இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்த முடியாது, ஏனென்றால், அவர்கள் புகழைப் பற்றியோ அல்லது பாதுகாப்பைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு ஆசைகள் இருக்காது.

ஞானியை அவதூறாகப் பேசுவதற்கு முன், அவரை ஒருமுறை நேரில் பார்த்துவிடுங்கள்

அந்தப் புலவர், "அரசே, தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் அந்த ஞானியை அவதூறாகப் பேசுவதற்கு முன்னர், ஒருமுறை அவரை நேரில் சென்று பார்த்து வாருங்கள்," என்றார்.

அரசர் சொன்னார், "எனக்கே அறிவுரை வழங்குகிறாயா? நாளையே உனது தலை துண்டிக்கப்படும்," என்றார்.

நேரடி வன்முறைதான் அரசர்களின் பொதுவான பாணி. முட்டாள்கள் மட்டுமே உடனடியாக வன்முறையை வெளிப்படுத்துவார்கள். தங்களால் புத்திசாலித்தனமாகச் செயல்பட முடியாதபோது, அவர்களுக்கு ஸத்யம் என்னவென்று புரியாதபோது, ஸத்யத்தை எடுத்துச் சொல்லி, அதை மற்றவர்களுக்குப் புரியவைக்க அவர்களிடம் போதிய சக்தி இல்லாதபோது, உடனே அவர்கள் தங்கள் போர்வாளைத்தான் தூக்குவார்கள்.

இந்துமத வரலாற்றை, உதாரணத்திற்கு எடுத்துப் பாருங்கள். அவர்கள் ஒருபோதும் யாரையும் வாள்முனையில் மதம் மாற்றியதில்லை. ஏனென்றால், அவர்களிடம் புத்திசாலித்தனம் இருந்தது.

அவர்கள் தர்க்கத்தின் மூலமாக,
ஆராய்ச்சியின் மூலமாக ஸத்யத்தைப்
புரியவைத்ததன் மூலமாகவே மற்றவர்களை
மாற்றினார்கள்.

உதாரணமாக, பெரிய ஞானிகளான ஆதிசங்கராச்சாரியார், மண்டன மிஸ்ரர் ஆகியோருக்கு இடையே ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து வெவ்வேறு பார்வைகள் இருந்தன. இருந்தும் அவர்கள், தங்களுக்குள் சண்டை போடவில்லை. “நீங்கள் வேதாந்தத்திற்கு மாறவில்லையென்றால், நான் உங்களைக் கொன்றுவிடுவேன்,” என்று சங்கரர் சொல்லவில்லை. அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து, தங்களுக்குத் தெரிந்ததை ஆராய்ந்து பார்த்தார்கள்.

அதுவொரு அற்புதமான கலந்துரையாடலாக இருந்தது. அதுவொரு அழகான காட்சியாக இருந்தது. சங்கரரும், மண்டன மிஸ்ரரும் எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல், ஆழ்ந்த மரியாதையோடு ஒருவருக்கொருவர் விவாதித்து, தங்களுக்குள் இருந்த கருத்துவேறுபாடுகளை நீக்கிக்கொண்டார்கள்.

இந்த விவாதத்தில், மண்டன மிஸ்ரரின் மனைவிதான் நடுவராக இருந்தார். என்னவொரு அழகான, அருமையான சூழ்நிலையாக அது இருந்திருக்கும்!

பாருங்கள்! போட்டியாளர்களுள் ஒருவருடைய மனைவியே நீதிபதியாக இருந்ததை உங்களால் நம்ப முடிகிறதா? ஒருபோதும் முடியாதுதான். ஆனால் இங்கு, மண்டன மிஸ்ரரின் மனைவியையே சங்கரர் நீதிபதியாக நிறுத்துகிறார்.

சங்கரருக்கும், மண்டன மிஸ்ரருக்கும் இடையில் நடந்த விவாதங்களை பாரதி கூர்ந்து கேட்கிறார். இறுதியில், சங்கரருக்குச் சாதகமான தீர்ப்பைச் சொல்கிறார். அந்த விவாதத்தில் சங்கரர் ஜெயித்ததாக அறிவிக்கிறார். இது அத்தனையும் அன்பின் அடிப்படையில் நடந்தது. அங்கு வன்முறை கிடையாது. குத்து, வெட்டு, கொலை எதுவுமே கிடையாது. அதுவொரு சாதாரண விவாதமாகவே இருந்தது.

கிழக்கத்திய மதங்களின் வரலாறு முழுவதிலும், குத்து வெட்டுக்களோ அல்லது கொலைகளோ கிடையாது. கொலை செய்வதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதால், அவர்கள் ஒருபோதும் வாள்முனையில் யாரையும் மதமாற்றம் செய்யவில்லை.

தங்களின் கருத்துக்களைத் தெளிவாக எடுத்து விளக்குமளவுக்கு அவர்களிடம் போதிய புத்திசாலித்தனம் இருந்தது. அதோடு இன்னொரு விஷயமும் இருந்தது, தோல்வி அடைந்தவர் தாமாகவே முன்வந்து, ஸத்யத்தை மிகத் தெளிவாக விளக்கிய குழுவில் தம்மை இணைத்துக்கொள்வார்!

மண்டன மிஸ்ரருக்கு சங்கரர் தெளிவுபடுத்தியபோது, மிஸ்ரர் அனைத்தையும் விட்டுவிட்டு, சங்கரரிடம் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார்! ஸுரேஷ்வராச்சாரியா என்ற பெயரில் அவர் சங்கரரின் சீடரானார். அவர் சங்கரரின் போதனைகளைப் பின்பற்றினார்.

போர்வாளைப் பயன்படுத்துபவர்கள், 'தாங்கள் முட்டாள்கள்' என்பதைத்தான் நிரூபிக்கிறார்கள். அவர்களுக்குப் புத்திசாலித்தனம் இருப்பதில்லை என்பதால், அவர்கள் தாக்குதலில் இறங்குகிறார்கள்.

மக்களை வாள்முனையில் மாற்றுபவர்கள், ஸத்யத்தைக் காணும் தெளிவும் துணிவும் அவர்களுக்குப் போதியளவு இல்லை என்பதையே நிரூபிக்கிறார்கள். வாள்முனைகொண்டு நம்மால் ஒன்றையுமே சாதிக்க முடியாது. போர்வாளைக் கொண்டு அழிக்க மட்டுமே முடியும், எதையும் ஆக்க முடியாது.

அந்த அரசர் ஒரு முட்டாளாக இருந்ததால்,
எதையும் விசாரிக்காமல், "நாளை காலை
இந்தப் புலவர் கொல்லப்பட வேண்டும்,"
என்று சொன்னார்.

புலவர் சொன்னார், "இதில் எனக்கு
எந்தப் பிரச்சினையும் இல்லை அரசே.
அந்த ஞானியின் மூலமாக நான் ஸத்யத்தை

மண்டன மிஸ்ரருக்கு சங்கரர் ஸத்யத்தை தெளிவுபடுத்தியபோது, மிஸ்ரர் அனைத்தையும் விட்டுவிட்டு, சங்கரரிடம் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தார்!

உணர்ந்துவிட்டேன். நான் சாவதற்குத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் தாங்கள் உண்மையிலேயே புத்திசாலி என்றால், குறைந்தபட்சம் ஒருமுறையாவது அந்த ஞானியைச் சென்று பாருங்கள். நீங்கள் அவரைப் பார்த்து வரும்வரை என்னைத் தண்டிக்காதீர்கள். அதற்கு பிறகு, நான் சாவதற்குத் தயாராகவே இருக்கிறேன்," என்றார்.

அரசரும் ஒத்துக்கொண்டார், "சரி, நான் சென்று அவரைப் பார்க்கிறேன். அவர் நிஜமாகவே பரணி பாடுவதற்குத் தகுதியானவர் இல்லையென்றால், நாங்கள் அவரையும் கொன்றுவிடுவோம்," என்றார். அரசர், தமது இரத கஜ துரக பாதாதி பரிவாரங்களோடு அந்த ஞானியைப் பார்க்கப் புறப்பட்டார்.

அரசர்கள் எப்போதுமே அவர்களுடைய பரிவாரங்களோடுதான் போவார்கள். ஏனென்றால், பரிவாரங்கள் இல்லையென்றால், அவர்களின் அடையாளம் தொலைந்துபோகும். அதோடு ஒப்பிடும்போது, தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளோ ஒரு பரமஹம்ஸராக இருந்தார். ஞானிகள் எப்போதுமே தம்முள் வாழ்பவர்கள்.

அவர்களுக்கு எந்தப் பரிவாரங்களும் தேவையில்லை. இந்த ஞானி ஓர் அவதூதர், அவர் ஒருபோதும் ஆடைகளே அணிவதில்லை.

ஒரு பெரிய ஆலமரத்தடியில், எந்தவிதப் பரிவாரங்களும் இல்லாமல், அவர் தனியாக ஆலமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அரசர் அவருடைய மொத்தப் பரிவாரங்களோடு அவரைப் பார்க்க வந்து சேர்ந்தார்.

போர்வாளைக் கொண்டு
அழிக்க மட்டுமே முடியும்,
எதையும் ஆக்க முடியாது.

இதுதான் அந்தக் காட்சி: இந்தச் சாதாரண
பிச்சைக்காரர் எவ்வித ஆடையும் இல்லாமல்,
ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார். அவர்
ஆனந்தத்திலும், அமைதியிலும், பிரபஞ்ச
இருப்பிலும் மூழ்கி, ஆழமான மௌனத்தில்
தம்மை முழுவதுமாக மறந்திருந்தார்.
அந்த மௌனம் அவருடைய ஸாந்நித்யத்தில்
இருக்கும் எவருக்குள்ளும் ஊடுருவிவிடும்.

ப்ரஹ்ம ஞானத்தில் (பேரறிவில்) மூழ்கி,
ஆழமான மௌனத்தில் அமர்ந்திருக்கும்
ஒரு யோகியை எதிர்த்து, அரசர் தம்

படைவீரர்களோடும், மொத்தப் படையோடும் வந்து சேர்ந்தார்.

இரத்திலிருந்து குதித்த அரசர், ஞானியை
நோக்கி வருகிறார். ஞானி அசையவே
இல்லை. அரசரையும், அவருடைய
படைகளையும், எல்லா ஆரவாரங்களையும்
பார்த்த பிறகும்கூட, அவரிடம் எந்தவித
அசைவும் இல்லை. அவர் தம் கண்களைத்
திறந்து, நேரடியாக அரசரின் கண்களுக்குள்
பார்க்கிறார். நேரடியாக அரசரின்
கண்களுக்குள் ஒருவர் பார்ப்பது என்பது
இதுவே முதல்முறையாக இருந்தது.

> ஒரு படையை
> அமைதியாக
> அமர வைப்பது என்பது
> ஒரு சாத்தியமற்ற செயல்.

அரசர்தான் மற்றவர்களை நேருக்குநேர் பார்ப்பார், அவர்கள் உடனே தலைகுனிந்து நிற்பார்கள். முதல்முறையாக, நேரடியாக அரசரின் கண்களுக்குள் ஒருவர் பார்க்கிறார். சில நொடிகளில், அரசர் தலைகுனிந்து கொள்கிறார். தம் உணர்வுக்குள் ஏதோ நடப்பதை அரசரால் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

அந்த ஞானியின் ஸாந்நித்யத்தில், தம்மை ஒரு பிச்சைக்காரராக அரசர் உணர்ந்தார். அடுத்து என்ன செய்வதென்றே அவருக்குப் புரியவில்லை. அதுவொரு வித்தியாசமான நிலைமையாக இருந்தது. அவர் தோற்றுவிட்டார். இனி என்ன செய்ய வேண்டுமென்பதை அவரால் முடிவுசெய்ய முடியவில்லை. அவர் அடிபணிந்து நிற்பதாக உணர்ந்தார்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், அரசரை அமரும்படி சைகை காட்டினார். அவரிடம் இருந்து எந்த வார்த்தையும் வரவில்லை. அரசரை அமருமாறு அவர் சைகை மட்டுமே காட்டினார்.

எல்லா மந்திரிகளும், படைவீரர்களும் தங்களின் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, மௌனமாக அமர்ந்தார்கள். பத்து நிமிடங்களில், மொத்தப் படைவீரர்களும் அமர்ந்துவிட்டார்கள். ஒரு படையை அமைதியாக அமர வைப்பது என்பது ஒரு சாத்தியமற்ற செயல்.

அதனால்தான், பேய்களுக்குத் தொடர்ந்து ஏதாவது ஒரு வேலை

கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்
என்று சொல்வார்கள். பேய்களுக்கு வேலை
எதையும் நாம் கொடுக்கவில்லையென்றால்,
அவை நம்மைத் தின்றுவிடும்! அதேபோல,
படைகளை அமைதியாக இருக்க வைக்க
முடியாது. ஆனால், இங்கு மொத்தப்
படையும் அமைதியாக அமர்ந்தது.

ஒருமணி நேரம் கழிந்தது, இரண்டு மணி
நேரம் கழிந்தது; மூன்று மணி நேரம்
கழிந்தது; சாயங்காலமும் கழிந்தது; ஒரு
நாள் முழுவதும் கழிந்தது.

ஆயிரம் யானைகளைக்
கொல்வதற்குப் பெரிதாக
துணிவு ஒன்றும்
தேவையில்லை. ஆனால்
உங்களின் மனத்தைக்
கொல்வதற்குத் துணிவு
தேவை.

அந்த ஞானியும், அந்த அரசரும், ஒட்டு மொத்தப் படையும் மௌனமாகவே அமர்ந்திருந்தார்கள். யாரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஒருவருக்கொருவர் வரவேற்றுக்கொள்ளவோ, வணக்கம் செலுத்திக்கொள்ளவோ இல்லை. அவர்கள் சும்மாவே அமர்ந்திருந்தனர். இரண்டு நாட்கள் கழிந்தன, மூன்று நாட்களும் கழிந்தன.

இப்போது ஞானி நினைத்தார்: இந்த அரசர் அவர் தேசத்தைக் கவனிக்க வேண்டும். ஆனால் அவர் இங்கே மூன்று நாட்களாக அமர்ந்திருக்கிறார். இந்த ஏழை மனிதரும், அவரின் மொத்தப் படையும் மூன்று நாட்களாக உணவும் உண்ணாமல், எதற்குமே அசையாமல் அமர்ந்திருக்கிறார்கள்! இதுவேபோதும். இவர்கள் தங்களுடைய தேசத்திற்குத் திரும்ப வேண்டும்.

அந்த ஞானி கண்களைத் திறந்து சொன்னார், "நீங்கள் இப்போது போகலாம்," என்றார். உடனே அரசர், ஞானியின் பாதங்களில் வீழ்ந்து வணங்கிவிட்டு, காட்டை விட்டு வெளியே வந்தார்.

பிறகு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்தப் புலவரை அழைத்து, "ஆயிரம் யானைகளை... இல்லை, இல்லை... பத்தாயிரம் யானைகளைக் கொன்ற அந்த ஞானியின் புகழையே இனிப் பாடுங்கள்!" என்று சொன்னார்.

அப்போது அந்தப் புலவர், ஓர் அழகான வாசகத்தைச் சொன்னார்,

"பத்தாயிரம் யானைகளைக் கொல்வதுகூட மிகவும் சுலபம். அதுவொரு பெரிய விஷயமே அல்ல. உங்களிடம் ஆயுதம் இருந்தால்போதும். நீங்கள் அவற்றைக் கொன்றுவிடலாம்; ஆனால், ஒருவரின் மனத்தைக் கொல்வதுதான் மிகப் பெரிய சாதனை!" என்றார்.

அந்த ஞானி, அரசரின் மனத்தைக் கொன்றுவிட்டார். தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள், அவரின் சொந்த மனத்தை மட்டும் கொன்றுவிடவில்லை. அவருடைய ஸாந்நித்யத்தில் வந்து நிற்கும் யாருடைய மனத்தையும் கொன்றுவிடக் கூடியவர். ஆயிரம் யானைகளைக் கொல்வதற்குப் பெரிதாகத் துணிவு ஒன்றும் தேவையில்லை. ஆனால் உங்களின் மனத்தைக் கொல்வதற்குத் துணிவு தேவை.

மிகப் பெரிய ஞானிகள் எல்லோருமே, அவர்கள் என்ன செய்தார்களோ அதில் ஒருமுகப்படுத்தப்பட்ட கவனம் கொண்டிருந்தார்கள். அவர்கள், தங்கள் உயிருக்கே அச்சுறுத்தல் உட்பட எப்படிப்பட்ட சவால்களை, எப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டபோதும், தாங்கள் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. இதுவே 'உடலால் ஸத்யத்தை வாழ்வது' என்பதாகும்.

ஆனால் நாம், எதையெல்லாம் ஸத்யம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் பேசுகிறோம், எப்போதும் ஸத்யத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம், இரவுபகலாக ஸத்யத்தைக் கூர்ந்து ஆராய்கிறோம். இருந்தாலும், நாம் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகிறோம்: வாழ்க்கையில் ஸத்யத்தைச் செயற்படுத்தவும், பின்பற்றி வாழவும் மறந்துவிடுகிறோம். இங்குதான் நாம் ஸத்யத்தைத் தவறவிட்டு விடுகிறோம். வாழ்க்கையில் ஸத்யத்தை வாழ்வதுதான் சாரம்.

பதஞ்சலி முனிவர், அவரின் அஷ்டாங்க யோகத் தின்முதல் அங்கமான யமத்தில் அடங்கும் ஐந்து ஒழுக்கநெறிகளில், முதல் ஒழுக்கநெறியாக ஸத்யத்தைத்தான் தருகிறார். ஸத்யம் என்பது எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது; வாய்மை, உண்மை, மெய்மை ஆகிய மூன்றும் இணைந்ததே ஸத்யம்.

தக்ஷிணாமூர்த்தி
சுவாமிகள், அவரின்
சொந்த மனத்தை மட்டும்
கொன்றுவிடவில்லை.
அவருடைய ஸாந்நித்யத்தில்
வந்து நிற்கும்
யாருடைய மனத்தையும்
கொன்றுவிடக்கூடியவர்.