KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

முன்கூட்டியே தீர்மானிப்பவர்களுக்கும், ஒப்புக்கொள்பவர்களுக்கும், ச்ரத்தையோடு இருப்பவர்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை மிக அழகாக விளக்குகிறார் கிருஷ்ணர். மேலும் அவர், அவர்களின் வாழ்க்கை முறை, குணங்கள் மற்றும் ஒருவர் எப்படி ஸத்வ குண ச்ரத்தையை அடைவது, கீதையில் சொல்லப்பட்டிருக்கும் ஸத்யங்களை உள்வாங்குவது எப்படி என்பவற்றை விவரிக்கிறார்.

முன்கூட்டியே தீர்மானிப்பவர்கள் மட்டத்திலிருந்து ஒப்புக் கொள்பவர்கள் மட்டத்திற்கும், ஒப்புக்கொள்பவர்கள் மட்டத்திலிருந்து ச்ரத்தை மட்டத்திற்கும் எப்படி நம்மை உயர்த்தவது என்பதைப் பற்றிய அழகான விளக்கங்களையும் போதனைகளையும் படிப்படியாக அளிக்கிறார். இங்கிருக்கும் நீங்கள் எல்லோருமே ஏற்கெனவே நம்புபவர்கள் மட்டத்தில் இருக்கிறீர்கள்.

நீங்கள் முன்கூட்டியே தீர்மானிப்பவர்கள் என்றால், நாள்தோறும் உங்களால் இங்கே வந்து உட்கார முடியாது. அங்கு ஓரமாக நின்று, இரண்டு மூன்று வார்த்தைகளைக் கேட்டுவிட்டு, இவ்விடத்தைவிட்டு அகன்றிருப்பீர்கள்.

இங்கு என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காகவே பலர் வருகிறார்கள். அவர்கள் இங்கே வந்து அமர மாட்டார்கள்; நின்றபடியே இருந்துவிட்டு, இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்த உடனேயே, கடிகாரத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். அந்தச் சில நிமிடங்கள்கூட, அவர்களுடைய பாதங்கள் ஓரிடத்தில் நிலைத்திருக்காது; பத்து முறையாவது இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று கால்மாற்றி நின்றிருப்பார்கள்! அதன் பிறகு, "சரி, போதும். இளவயத்தினராக இருக்கும் இந்த ஸ்வாமி, எனக்கு ஏற்கெனவே தெரியாத வேறெதைச் சொல்லிவிடப் போகிறார்?" என்று சொல்லிவிட்டு இங்கிருந்து நகர்ந்து விடுவார்கள்.

‘நமக்குத் தெரியாது’ என்பதல்ல நம்முடைய பிரச்சினை. ‘நமக்கு நிறைய தெரியும்’ என்பதே நம்முடைய பிரச்சினையாக இருக்கிறது, ஏனென்றால், நம்மால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியவில்லை.

நாள்ேதாறும் இங்குவந்து நீங்கள் இந்தச் சொற்பொழிவுகளைக் கேட்பது, குறைந்தபட்சம் நீங்கள் ஒப்புக்கொள்பவர்கள் மட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதையே காட்டுகிறது. ஒப்புக்கொள்பவர்கள் மட்டத்தில் இருந்தால்தான், உங்களால் இங்கே உட்கார முடியும்.

இப்ேபாது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ச்ரத்தையாளர் மட்டத்திற்குச் ‘சட்டென’ உயருவதுதான். ச்ரத்தையாளர் மட்டத்திற்கு உயர்ந்த அக்கணமே, உங்களால் ஸத்யத்தை உணர முடியும். நீங்கள் கிருஷ்ணராக மாறிவிடுவீர்கள். உங்களால் கிருஷ்ண உணர்வை அனுபவப்பூர்வமாக உணர முடியும்.

இப்ேபாது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், *ச்ரத்தையாளர்* மட்டத்திற்குச் ‘சட்டென’ உயருவதுதான்

இப்ேபாது நாம் ச்ரத்தையை
அனுபவப்பூர்வமாக உணரும்
நுட்பத்திற்குள் - அதாவது, கிருஷ்ண
உணர்வு நுட்பத்திற்குள் - நுழையத்
தொடங்குகிறோம்.

கவனியுங்கள், இங்கே நீங்கள் ஒரு
முக்கிய முடிவை எடுக்க வேண்டும்.
ஒன்று, நீங்கள் முழுமையான ச்ரத்தையோடு
இருந்து, நான் ஸத்யம் என்று சொல்வதை
ஸத்யம் என்று நம்புங்கள். அல்லது நான்
சொல்வதெல்லாம் வெறும் பொய்கள்
என்பதில் மிகத்தெளிவாக இருங்கள்.

நான் சொல்வதை உங்களால் செயல்படுத்த முடிந்தால், அதை உங்களால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தால், நான் ஸத்யத்தைப் பேசுகிறேன். அப்படி உங்களால் செயல்படுத்த முடியவில்லையென்றால், இந்த ஸத்யத்தினால் ஆகப்போகும் பயன்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

இந்தப் பதினெட்டு நாட்களுக்கு, உங்களின் ேநரத்தில் மூன்று மணி ேநரமும், என்னுடைய ேநரத்தில் மூன்று மணி ேநரமும் வீணாகும், அவ்வளவுதான்.

இதை உங்களால் உள்வாங்க முடியவில்லையென்றால், இது உங்கள் வாழ்க்கையில் உணர்வுமாற்றத்தை ஏற்படுத்தவில்லையென்றால், இது ேநரத்தை வீணாக்கும் ஒரு செயலே. இங்கு நிகழ்ந்தவையெல்லாம் ஸத்யம் அல்ல. என்னுடைய வார்த்தைகள் உங்களுடைய விழிப்புணர்வில் ஏற்படுத்தும் உணர்வுமாற்றமே, விளைவுகளே என்னுடைய வார்த்தைகள் ஸத்யமா, பொய்யா என்பதை முடிவுசெய்யும்.

நான் சொல்வது ஸத்யமா, இல்லையா? என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும். உங்களால் மட்டுமே அதை முடிவுசெய்ய முடியும். வேறு யாரும் உங்களுக்காக அதை முடிவுசெய்ய முடியாது. உங்களுக்காக நான் முடிவுசெய்ய முடியாது.

சோதித்துப் பார்க்கப்படாதவரை ஸத்யத்தால் உதவ முடியாது

நீங்கள் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், இதை நீங்கள் முழுமையாகவும், மிகத் துல்லியமாகவும் செய்யவேண்டிய அவசியங்கூட இல்லை. இதைப் பரிசோதிப்பதற்கான போதியளவு துணிவு பெற்றிருந்தாலே போதும்.

இத்தனை நாட்களாக என்னுடைய சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள், சரி, இந்த நுட்பங்களை நான் ஏன் ஒரு இரண்டு மூன்று நாட்களுக்குப் பயிற்சிசெய்யக்கூடாது?' என்று முடிவுசெய்வீர்களானால், அந்த அளவு துணிவு நீங்கள் கொண்டால், அதுவே போதும்.

அந்தத் துணிவு நிகழவில்லையென்றால், நான் பேசிக் கொண்டிருப்பதெல்லாம் ஒரு இந்திய அரசியல் கூட்டப் பேச்சாளர் பேச்சைப் போன்றதுதான்!

callout

நீங்கள் தென் இந்தியாவில் இருந்தீர்கள்
என்றால், ஒவ்வொரு ஆண்டும், ஏன்
ஒவ்வொரு மாதமும்கூட நீங்கள்
விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்
சில அரசியல் பேச்சாளர்களின்
பேச்சுக்களைநீங்கள் கேட்டே ஆகவேண்டும்.
அரசியல்வாதிகளின் பேச்சுக்களை
ஒலிபெருக்கி மூலம் நகரம் முழுவதும்
ஒலிக்க விடுவார்கள். அதைக் கேட்காமல்

ஒருவரும் தப்பித்துவிட முடியாது.

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், கிருஷ்ணரின் வார்த்தைகளை நம்மீது செயல்பட நாம் அனுமதிக்க மறுத்தால், இந்த வார்த்தைகளை நாம் செயல்படுத்திப் பார்க்கவில்லை என்றால், இந்தக் கூட்டமும் மற்றொரு அரசியல் கூட்டமாக, ஆனால் அமைதியான அரசியல் கூட்டமாக

  • மாறிவிடும். தயவுசெய்து, நீங்கள் இதை ஓர் அரசியல் கூட்டமாக மாற்றிவிடாதீர்கள்.

‘இவர், தாம் எங்கேயோ படித்த விஷயங்களை இங்கே வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்’ என்றுகூட உங்களுள் சிலர் நினைக்கலாம். இவர் பேசுவது ஸத்யம் இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், நீங்கள் இங்கே இல்லை என்று அர்த்தம்.

உங்களின் மொத்த
ஜீவனும், ஒரே
சிந்தனையால் அதிரட்டும்.

இவர் பேசுவது ஸத்யமே என்று நீங்கள்
நம்புகிறீர்கள் என்றால், நீங்கள் இங்கே
இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள்
நம்பாதிருந்தால், நாள்தோறும் நீங்கள்
இங்கே வந்து மூன்று மணி நேரம்
அமர்ந்திருக்க மாட்டீர்கள்.

உங்களுக்குச் செய்வதற்கு வேறெந்த வேலையும் இல்லையென்றாலும்கூட, உங்கள் வீட்டுத் தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்து உங்கள் பொழுதை போக்கியிருக்கலாம். நீங்கள் போவதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கின்றன. இருந்தாலும் நீங்கள் இங்கிருப்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்; சொற்பொழிவைக் கேட்க விரும்புகிறீர்கள். அதனால், இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் ஏதோ ஸத்யம் இருக்கிறது என்று நீங்கள் நினைப்பதையே காட்டுகிறது. அப்படி நினைத்தால், அதைச் சோதித்துப் பார்க்க ஒருபோதும் தாமதிக்காதீர்கள்.

நீங்கள் முழு கீதையையும் சோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரேயொரு கருத்தை எடுத்துக்கொண்டு, அதை உங்கள் மையம்வரை உள்வாங்குங்கள். உங்களின் மொத்த ஜீவனும், அந்த ஒரே சிந்தனையால் அதிரட்டும்.

சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்: "ஒரு சிந்தனையை நீங்கள் ஏற்கும்போது, அந்த ஒரே சிந்தனையால் உங்கள் இரத்தம் கொதிக்க வேண்டும். உங்கள் முடிகூட அந்தத் திசையில் நிற்க வேண்டும். உங்களின் எலும்புகள், உங்களின் எண்ணங்கள், உங்களின் உடல், உங்களின் மனம் அனைத்தும் அதற்காகத் துணிந்து நிற்க வேண்டும். உங்களின் மொத்த ஜீவனும் அந்தக் கருத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே வெற்றி நிச்சயமாகும்!"

ஆழமாகப் புரிந்துகொள்ளுங்கள், ஒரேயொரு கருத்தை எடுத்துக் கொண்டு, அதனைக் கடைபிடியுங்கள். ஒருவேளை அதில் தோல்வி அடைய நேர்ந்தாலும், அது ஸத்யம் கிடையாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், தெளிவடைவீர்கள். உங்கள் தேடலை வேறு பக்கம் தொடர்வீர்கள். அதனால் அதைக் கடைபிடிக்கும் துணிவைக் கொண்டுவாருங்கள்.

நீங்கள் வெற்றி அடைந்தால், அது ஸத்யம் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், நீங்கள் ஜீவன்முக்தனாவீர்கள். நீங்கள் ஆனந்தத்தை உணர்வீர்கள்.

Illustration of hands holding a flute