KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/வினாக்களின் வாசலில்...Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

வினாக்களின் வாசலில்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

✍ ஸ்வாமிஜி, மனிதயின வரலாறு முழுவதையும் படித்தோமானால், ஆன்மிக நூல்களைப் பற்றிய புரிதல்களின் அடிப்படையிலும், அப்புரிதல்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையிலும் தொடர்ந்து சச்சரவுகள் நிலவி வருவது நிரூபணமாகிறது. எல்லா மதங்களும் ஒரே அடிப்படை விதிகளைத்தான் கொண்டிருக்கின்றன என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், எதற்காகத் தொடர்ந்து சச்சரவுகளும் வன்முறையும் நிலவி வருகின்றன?

✍ ஸ்வாமிஜி, வாசனைகளே ஆன்மாவை ஒரு புதிய உடலைத் தேர்ந்தெடுக்கத் தூண்டுகின்றன என்று சொன்னீர்கள். அப்படியென்றால், ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளின் குணங்களிலேயே ஏன் வித்தியாசம் இருக்கிறது? ஒருவர் பணம் சார்ந்திருக்கிறார், மற்றொருவர் சேவை சார்ந்திருக்கிறார், மூன்றாம் நபர் அதிகார போதையில் இருக்கிறார். இப்படி மூன்று குழந்தைகளும் தங்களின் பெற்றோர்களிடமிருந்து மூன்று விதமாக வேறுபட்டு இருக்கிறார்களே, ஏன்?

✍ ஸ்வாமிஜி, வேத மருத்துவ விஞ்ஞானமான ஆயுர்வேதம், ஒருவரின் உடல் - மன அமைப்புமுறைக்கு ஏற்ற உணவு வகைகளைப் பரிந்துரைக்கிறது. அவையும், கிருஷ்ணர் சொல்வதும் ஒன்றுதானா?

✍ ஸ்வாமிஜி, ஆனந்தத்திற்கான பாதை ‘தனியானது’, ஆனால் அது ‘தனிமையானது’ கிடையாது என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தயவுசெய்து அதை விபரமாக விளக்க முடியுமா?

✍ ஸ்வாமிஜி, சிரத்தையும், துணிவும், நம்பிக்கையும் ஆனந்தத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று நீங்களும், கிருஷ்ணரும் சொல்கிறீர்கள். ஆனால் ஆனந்தத்திற்கான பாதை எளிமையானதாகத் தெரியவில்லை. அதில் நிறைய பள்ளங்கள் இருக்கின்றன. நாங்கள் ஆனந்தத்தை அனுபவிக்கும்போதும்கூட, அதை எங்களால் உணர்ந்தனுபவிக்க முடியவில்லை. நாங்கள் எப்படி இதைச் சமாளிப்பது?

question_icon

ஸ்வாமிஜி, நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, உண்மையென ஒப்புக்கொள்ளுதல் - இந்த வார்த்தைகளை விளக்குங்கள். கடவுளையோ அல்லது ஞானியையோ நாம் எப்படி அணுக வேண்டும் என்பதை விளக்குகின்றபோது இந்த வார்த்தைகள் மாறி மாறிப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வார்த்தைகள் ஒரே அர்த்தத்தைக் குறிப்பதில்லை. நான் நினைப்பது சரியா?

question_icon

‘அன்பே கடவுள்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். சில கலாச்சாரங்கள் கடவுளைக் கோபமானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் எடுத்துக் காட்டுகின்றன. அங்குத் துறவிகள் கடுகடுப்புத் தன்மையுடனும் நகைச்சுவை உணர்வின்றியும் இருக்கிறார்கள். கோபம் மற்றும் ஆக்ரோஷத்திலிருந்தும்கூட ஆனந்தம் வருமா?