பூர்ணத்வம் - வாழ்வின் திறவுகோல்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பூர்ணத்வமே நீங்கள் சேர்க்க வேண்டிய உண்மையான செல்வம்! பூர்ணத்வம் - எங்கேயோ வெளியில் தேடியலைந்து அடைய வேண்டிய ஒரு பொருள் அல்ல. உங்களுக்குள்ளேயே புதைந்து இருக்கின்ற ஒரு பொக்கிஷம். அதனால் உடலில் இருக்கும்பொழுதே உணர்வில் பூர்ணத்வத்தைக் கண்டுவிடுங்கள்!
பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவருக்கு, அவர் அடையவேண்டிய இடத்தை அவர் சென்றடையும்பொழுதுதான், அவரது பயணம் நிறைவுபெறும். அதுபோல - இந்த ‘வாழ்க்கை’ என்னும் சாலையில் ‘உடல்’ என்னும் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒவ்வொரு ‘ஆன்மா’வுக்கும் அது அடையவேண்டிய இறுதி நிலையான ‘பூர்ணத்வத்தை’ அடையும்பொழுதுதான், அதனுடைய பயணம் நிறைவுபெறும். இல்லையெனில் எத்துணைமுறையானாலும் அது இன்னொரு உடலெடுத்து தன் பயணத்தை தொடர்ந்தே ஆக வேண்டும்.
பூர்ணத்வம் - மனித வாழ்க்கைக்கு மிக முக்கியமான திறவுகோலாக செயல்படுகின்றது. அதைக்கொண்டு... உங்கள் வேதனைகள், பிரச்சினைகள் போன்ற எந்தப் பூட்டையும் திறந்துவிடலாம். இந்தப் பூர்ணத்வம்தான் எங்கும், எல்லா இடங்களிலும் உங்களைப் பாதுகாக்கும் உங்களின் உண்மையான சொத்து.
பூர்ணத்வம் - உங்களுக்காக, உங்கள் வாழ்க்கையின் எல்லாவிதச் சிறப்பம்சங்களையும் திறந்துவிடக்கூடிய ஒரு திறவுகோலாக செயல்படுகின்றது. பூர்ணத்வம் உங்களுடைய கடந்தகால குறைவுணர்வுகளை மட்டும் நிறைவுசெய்வதற்காகப் பயன்படவில்லை. மற்றவர்களிடமிருந்து நீங்கள் ஈர்த்துக்கொள்ளும் எல்லாத் துன்பங்களையும் முழுமைப்படுத்தி, அதிலிருந்து விடுபடுவதற்கும் வழிவகுக்கும்.
பூர்ணத்வம் மட்டுமே நம் வாழ்வில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் எல்லாத் துன்பங்களுக்குமான ஒரே தீர்வு!
தனக்குள்ளும் மற்றவர்களுக்குள்ளும் பூர்ணத்துவத்தை உணர்வதற்காக அறிவைப் பயன்படுத்துவதே -உண்மையான பகுத்தறிவு.
ஒவ்வொருவரும்- ‘நான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறேன்? நான் ஏன் இவ்வாறு செய்கிறேன்?’ என்று தன்னைப்பற்றி, தன்னுடைய செயல்களைப்பற்றி, நடவடிக்கைகளைப்பற்றி பகுத்தாராய வேண்டும். தன்னுள் குறைவுணர்வை ஏற்படுத்தும் காரணங்களைக் கண்டுபிடித்து, அதை நிறைவுசெய்ய வேண்டும்.
உங்களுடைய வாழ்வில் உங்கள் கனவுகளை நிஜமாக்குவதற்குத் தடையாக இருக்கும் ஒவ்வொன்றிற்கும் காரணம் இந்தக் குறைவுணர்வுகளே! இந்தக் குறைவுணர்வுகளே உங்களையும் உங்களைச் சுற்றியிருப்பவர்களையும் துக்கத்தில் ஆழ்த்துகின்றன.
நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்குள் இருக்கும் குறைவுணர்விற்கான உண்மையான காரணத்தை அவசியம் புரிந்துகொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நிறைவுசெய்து, உங்களின் இயல்பான இறையுணர்வை, பூர்ணத்வ உணர்வை உங்களால் உணரமுடியும்.
உங்களின் ஆன்ம சக்தியை உயிர்ப்பிக்கும் பூர்ணத்வம்!
நீங்கள் எவ்வளவுதான் மன அழுத்தத்திலிருந்தாலும், ஒன்றுக்கும் உதவாதவர் என்று உங்களை நீங்களே உணர்ந்தாலும், உங்கள் மீதும், உலகத்தின் மீதும் கோபமும், குற்ற உணர்ச்சியும் கொண்டிருந்தாலும், அதிர்ஷ்டவசமாக உங்கள் எல்லோருக்குள்ளும் தூய்மையான விழிப்புணர்வு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தத் தூய்மையான விழிப்புணர்வை நம் தினசரி நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியும்.
பணமாக இருந்தாலும்.. பொருளாக இருந்தாலும் உங்களிடம் இருப்பவற்றை நீங்கள் அன்றாட வாழ்க்கையில்பயன்படுத்தாவிடில் அது பயனற்றதே! நீங்கள் ஸ்விட்சர்லாந்து வங்கியில் பில்லியன் டாலர்கள் வைத்திருந்தாலும், அதை உங்களால் அன்றாட வாழ்க்கையில் எடுத்துப் பயன்படுத்த முடியவில்லையென்றால், அது பயனற்றதே!
நீங்கள் பெட்ரோல் கடையிலோ அல்லது உணவு விடுதியிலோ சென்று ‘எனக்கு ஸ்விஸ் வங்கியில் வங்கிக்கணக்கு இருக்கிறது. பில்லியன் கணக்கில் டாலர் இருக்கிறது. இதுதான் என் வங்கி கணக்கு எண். எனக் குச் சிறிது உணவு வேண்டும், என் வண்டிக்கு 1 லிட்டர் பெட்ரோல் வேண்டும்’ என்று கேட்டால், அவர்கள் தரமாட்டார்கள்.
உங்களிடம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலும்கூட, நீங்கள் பணத்தைத் திருப்பித் தருவதாக வியாபார ஒப்பந்தம் செய்தபின்பே உங்களுக்குப் பணம் தருவார்கள். உங்களுக்கு வங்கியில் பணம் இருக்கிறது என்பதற்காகத் தரமாட்டார்கள்.
உங்களிடம் இருக்கும் உங்களுடைய எல்லா ஆன்மீக சக்தியும், உங்களது விழிப்புணர்வான ஆத்மாவும் ஸ்விட்சர்லாந்து வங்கியில் இருக்கும் பணம் போன்றவைதான்! உங்களிடம் இருக்கின்ற ஆன்ம சக்தியை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த முடியவில்லையென்றால், அதை நீங்கள் வைத்துக்கொண்டிருந்தாலும், அதனால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
பூர்ணத்வம் - உங்களுக்குள் உறைந்திருக்கும் தூய விழிப்புணர்வான ஆன்ம சக்தியை விழிப்படையச் செய்கின்றது.
உங்களுக்குள் இருக்கும் ஆன்ம சக்தியை உங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக் கற்றுக்கொண்டீர்களானால்.. நீங்கள் உங்களைப் பூர்ணமானவராக உணர்வீர்கள். உங்கள் வாழ்வு பூர்ணத்வ நிலையில் இயங்குவதைப் பார்ப்பீர்கள். உங்கள் வாழ்வு முழுமையாக மாற்றம் அடைவதைக் காண்பீர்கள். ஒரு பூர்ணமான சக்தி உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களையும் உங்கள் வாழ்வையும் வழிநடத்துவதையும் உணர்வீர்கள்.
நேற்றுவரை நான் பூர்ணத்வம் செய்யவில்லையே, இப்போது ஏன்?
பூர்ணத்வம், ஏன் செய்யப்பட வேண்டும்? இக்கேள்வி உங்கள் மனதில் எழுவது இயல்பே. அதற்கான பதில் - ஏனெனில், பூர்ணத்வம், உங்கள் விழிப்புணர்வைத் திரும்பப் பெற்றுத்தருகிறது. உங்கள் விழிப்புணர்வு விடுவிக்கப்படும்பொழுது, அது உயர்-விழிப்புணர்வாகிறது.
தண்ணீரைச் சுடாக்கினால், அது நீராவியாகிறது. அதுவே, குளிர்விக்கப்பட்டால் பனிக்கட்டி ஆகிவிடுகிறது. அதைப்போலவே, உங்கள் விழிப்புணர்வை சுருள அனுமதிக்கும்பொழுது, அது சுருண்டு, சுருண்டு, சுருண்டு விழிப்பற்ற நிலையாக ஆகிவிடுகிறது. அதை விரிக்கும் பொழுது, அதுவே 'உயர்விழிப்புணர்வாக' மாறுகின்றது.
பூர்ணத்வம் என்பது - உங்கள் உணர்வுக்குள் சிதறிக்கிடக்கும் உங்களின் பல பாகங்களை ஒருங்கிணைப்பது. பூர்ணத்வம் செய்வதால், நீங்கள் ஒரு ஒருங்கிணைந்த நபராக மாறிவிடுகிறீர்கள். உங்கள் உள்ளுணர்வு, உடல், மனம்- எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. உங்களுடையதாக மாறிவிடுகின்றன. உங்கள் பாகமாக மாறி விடுகின்றன.
இன்னொன்றையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் எதிர்காலம் மட்டும் பூர்ணமாய் அமையும் என்று நினைக்காதீர்கள். உங்கள் கடந்தகாலமும்கூட மாற்றப்பட்டுவிடும்! உங்கள் கடந்தகாலமும் முழுமை அடைந்துவிடும்.
பூர்ணத்வம் மட்டுமே உங்கள் கடந்தகாலத்தைக்கூட மாற்றக்கூடிய ஒரு சக்திவாய்ந்த நுட்பம்! 'கடந்தகாலத்தை மாற்ற முடியாது'- என்றே மனிதர்கள் நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், கடந்தகாலத்தை மாற்ற முடியாது என்றால், எதிர்காலத்தையும் மாற்ற முடியாது!
காலத்தின் ஒரே டி.என்.ஏ விதைக்குள்தான் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இந்த மூன்றுமே இருக்கின்றன! காலம், ஒரு விதை என்றால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் டி.என்.ஏ வடிவமாக அந்த விதையில் உள்ளன.
கடந்தகாலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், எதிர்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும், நிகழ்காலத்தைப் பற்றிய உங்கள் மனப்போக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.
நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு బలஹீனராக உணர்ந்தால், கடந்தகாலத்திலும் நீங்கள் ஒரு బలஹீனமானவராகத்தான் இருந்திருப்பீர்கள்! நிகழ்காலத்தில் உங்களை நீங்கள் ஒரு பலஹீனராக உணர்வதால், எதிர்காலத்திலும் பலஹீனமானவராகத்தான் இருப்பீர்கள். நீங்கள் காலையில் எழுந்தவுடன் காலைக்கடன்களை முடித்து, உங்களையே குளிப்பாட்டிச் சுத்தப்படுத்திக் கொள்வதைப்போலவே, ஒவ்வொரு நாள் இரவிலும் நீங்கள் பூர்ணத்வம் செய்து உங்கள் அகத்தைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு இரவும் பூர்ணத்துவம் செய்வது என்பது உங்கள் உயிரின் பாகமாக மாறவேண்டும். அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பாகமாகவே மாறிவிட வேண்டும்.
தொடர்ந்து பூர்ணத்துவம் செய்யுங்கள். ஏனெனில் பூர்ணத்துவம், உங்களை ஒருமைத்துவத்துடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்துவம், உங்களை சிரத்தையுடன் இருக்கச் செய்கிறது. பூர்ணத்துவம், உங்களை பொறுப்பெடுக்கச் செய்கிறது. பூர்ணத்துவம், உங்களையும் வளப்படுத்தி, மற்றவர்களையும் வளப்படுத்தச் செய்கிறது.
உங்களிடமிருந்தே தப்பித்து ஓடாதீர்கள்!
முழுமையாக இருப்பதே உங்கள் உயர்ந்த இயல்பாக இருப்பதால், உங்களுடைய குறைவுணர்வுகளுடன் உங்களால் சளகரியமாக இருக்கவே முடியாது. உங்கள் குறைவுணர்வுகள் உங்களை ஒரு குறையுடையவராகக் காட்டுகின்றன என்பதற்காகவே அவற்றை நீங்கள் எதிர்கொள்வதில்லை. அதனால்தான் அவற்றை நீங்கள் எதிர்கொள்ள எப்பொழுதும் விரும்புவதில்லை.
உங்கள் வாழ்நாள் முழுவதும், உங்களுடைய குறைவுணர்வுகள் என்னும் பேய்களிடமிருந்து தப்பிக் ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள். உங்களிடமிருந்து நீங்கள் தப்பித்து ஓட ஓட, உங்கள் குறைவுணர்வுகள், உங்களை வாழ்க்கையின் மூலமாகவும், உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மூலமாகவும் மேலும் மேலும் துரத்தி வேட்டையாடுகிறது.
குறைவுணர்வுகளை நேரிடையாக எதிர்கொள்வதுதான், அவற்றிடமிருந்து விடுதலையடைய ஒரே வழி.
நீங்கள் ஐந்து வயது குழந்தையாய் இருந்தபொழுது உங்களுக்கு ஒரு பொம்மைக் காரே போதும். ஆனால் உங்களுக்கு 25 வயதாகும்போது, உண்மையான கார் தேவை. ஆனால் இந்த இருபத்தியைந்து வயதிற்கு பிறகும் அதே பொம்மைக் காரை வைத்துக் கொண்டு, "ஆ! நான் காரில் போகிறேன்," என்று சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதைப்போலவேதான் நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கிறீர்கள்! இப்போது நீங்கள் நிஜமான காரில் செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்கள் பொம்மைக் கார்களை விட்டுவிடுங்கள்.
சிறுவயது காதல், சிறுவயது கார்கள், சிறுவயது புரிதல்கள், உங்களது பார்பி பொம்மைகள் எல்லாவற்றையும் கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். எல்லாமும் கண்டிப்பாகத் தூக்கியெறியப்பட வேண்டியவையே. துரதிருஷ்டவசமாக, சமுதாயம் உங்களுக்கு, பொம்மைகளை மட்டுமே விட்டுவிடக் கற்றுத் தந்திருக்கிறது. ஆனால் அந்தச் சிறுவயதில் உருவாக்கிய விளையாட்டு உணர்வுகளையும், தேவையற்ற புரிதல்களையும், குறைவுணர்வுகளையும் விட்டுவிடக் கற்றுத்தரவில்லை. அவை அனைத்தையும் தூக்கியெறிந்துவிடுங்கள். உங்களுக்குள் பூர்ணத்வம் நிகழ அனுமதியுங்கள்.
பூர்ணத்வம், உங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளையும்... போராட்டங்களையும்... வெளியில் இருந்து வருகின்ற பிரச்சினைகளையும் தவிர்த்துவிடுகிறது. உங்களை ஒருங்கிணைக்கிறது.
பூர்ணத்வம் செய்வதைத் தள்ளிப்போடாதீர்கள்!
சில நேரங்களில் உங்களுடைய குறைவுணர்வுகள் திரும்பச் சரிசெய்யப்பட முடியாத சேதங்களை உங்களுக்கு ஏற்படுத்திவிடும். 'அவற்றை நான் ஒரு வருடத்திற்குப் பிறகு அல்லது இரு வருடங்களுக்குப் பிறகு நிறைவுசெய்து கொள்வேன் ' என்றெல்லாம் நினைக்காதீர்கள். அதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில், தீவிரவாதிகள் எவ்வாறு சும்மாயிருக்க மாட்டார்களோ, அவ்வாறே உங்களுடைய குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது.
'இரண்டு வருடங்களுக்குப் பிறகு அந்தத் தீவிரவாதிகளோடு நான் போரிடுவேன்', என்று நீங்கள் சொல்ல முடியாது. அதுவரையில் அவர்கள், உங்களை உயிரோடு விட்டுவைக்க மாட்டார்கள். உங்களைத் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்.
அதேபோல் குறைவுணர்வுகளும் சும்மாயிருக்காது. அவை உங்களது வாழ்க்கை லட்சியங்களுக்கு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் தொடர்ந்து அழித்துக்கொண்டேயிருக்கும். நீங்கள் எதற்காகப் பிறப்பெடுத்தீர்கள், நீங்கள் எதை நிறைவேற்ற இந்த உடலில் இருக்கிறீர்கள், உங்கள் வாழ்வின் இலட்சியம், மற்றும் அதை நிறைவேற்ற உங்களுக்கு தேவையாக இருக்கும் எல்லாவற்றையும் இந்தக் குறைவுணர்வுகள் அழித்து விடும்.
குறைவுணர்வுகள், உங்கள் இருப்பின் நோக்கத்தையே அழித்துவிடும்! உண்மையிலேயே குறைவுணர்வுகள், விரோதிகளைப்போல உங்களுக்குள்ளேயே தங்கி உங்களையே அழிக்கும் வேலையைச் செய்யவல்லது. அவை உங்களை மிகவும் கொடுமைசெய்து இன்பமடையும்.
உங்களது தேவை மிகச் சிறியதாக இருந்தாலும்கூட, ஒரு சிறு மலரினால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்களென்றால், அந்தச் சிறு மலர்கூட உங்களுக்குக் கிடைக்க அவை அனுமதிக்காது. அவை சரியாக அந்தக் குறிப்பிட்ட மலரையே வாடிப்போகச் செய்யும்! அதற்குத் தேவையானதெல்லாம் ஒன்றே, நீங்கள் அந்த மலரைப் பெற்றுவிடக்கூடாது, அவ்வளவுதான்!
பல நேரங்களில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கவனித்திருக்கலாம், மிகச் சாதாரணமான பொருளைக்கூட... எந்தவொரு சாதாரண மனிதனாலும் எளிமையாகப் பெறக்கூடிய ஒரு பொருளைக்கூட, நீங்கள் அடைய மிகவும் கஷ்டப்படுவீர்கள். அது உங்களுக்குத் தேவைப்படும்பொழுது, அதை அடைய நீங்கள் போராடினாலும் அதன் சிறு பகுதிகூட உங்களுக்குக் கிடைக்காது. அதை அடைவதற்கு உங்களுக்குத் தடையாக இருப்பவை உங்களுடைய குறைவுணர்வுகள்தான்! ஏனெனில், நீங்கள் விரும்புவது எவ்வளவு சிறியவையாக இருந்தாலும்சூட, உங்களுடைய குறைவுணர்வுகள் அவை உங்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளும்.!
மேலும், குறைவுணர்வுகள் இருக்கும்பொழுது நீங்கள் சாதாரண விஷயத்தையும் தவறான முறையிலேயே அணுகுவீர்கள். உதாரணத்திற்கு, நீங்கள் யாரையாவது விரும்புகிறீர்கள், நீங்கள் அந்த நபருடன் நெருங்கிப் பழக விரும்புகிறீர்கள், ஆனால் அந்த நபர் உங்களின் உணர்வைப் புரிந்துகொள்ள மறுக்கிறார். அதனால் நீங்கள் உங்களைப் புரிந்துகொள்ளச் சொல்லி அவருடன் சண்டையிடத் துவங்குவீர்கள். உங்களின் இந்தச் சண்டை அவரை உங்களோடு நெருங்க விடுமா? இல்லை! குறைவுணர்வுகள் உங்களுக்குச் சண்டையிடக் கற்றுக் கொடுக்கும்.
குறைவுணர்வுகளின் அறிவுரைகளை நீங்கள் கேட்காதீர்கள். குறைவுணர்வுகள் சொல்வதின் அடிப்படையில் நீங்கள் எந்தத் திட்டத்தையும் - பொருளாதாரத் திட்டங்களையோ, உறவுகள் சம்பந்தப்பட்ட திட்டங்களையோ - தீட்டாதீர்கள். அதேபோல் என்ன முடிவுகளாக இருந்தாலும் - வாழ்க்கை பற்றிய முடிவுகளையோ, உடல் சார்ந்த முடிவுகளையோ, மனோரீதியான முடிவுகளையோ, ஞானமடைவது பற்றிய முடிவுகளையோ - குறைவுணர்வின் அறிவுரைப்படி எடுக்காதீர்கள்.
உங்களுடைய குறைவுணர்வுகளைப் பூர்த்திசெய்வதைத் தள்ளிப் போடாதீர்கள். உங்களது குறைவுணர்வுகள் நீங்கள் நினைப்பதுபோல அவ்வளவு அப்பாவி அல்ல. அதனால் இப்போதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால் உங்களது உடலும், மனமும் அழிந்துவிடும். உங்களுடைய சிந்தனைத் திறனையே முழுவதுமாக விழுங்கிவிடும்.
உங்களைத் தாக்க, உங்களின் சக்தியையே பயன்படுத்தும். இது எப்படிப்பட்டதென்றால் உங்களுடைய பாதுகாப்புப் படையையே உங்களது நாட்டைத் தாக்க உபயோகிப்பது போன்றது. இதைத்தான் குறைவுணர்வுகள் செய்கின்றன. அது மிகவும் ஆபத்தானது. திரும்பவும் சரிசெய்யப்பட முடியாதது. இப்பொழுதே பூர்ணத்வம் செய்யுங்கள்! இல்லையென்றால்... குறைவுணர்வுகளின் சக்தி அதிகமாக இருப்பதால், உங்களது உடலும், மனமும் அழிக்கப்பட்டுவிடும்.
நீங்கள் ஒவ்வொருவருமே பூர்ணத்தின் வெளிப்பாடே!
நம் உபநிடதத்தில் சொல்லப்படும் மிக அழகான ஒரு ஸ்லோகம்
பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே /
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஸிஷ்யதே //
இதன் பொருள்:
தோற்றத்துக்கு அப்பால் இருப்பதும் முழுமை, தோன்றியுள்ளதும் முழுமை. முழுமையிலிருந்து முழுமை எடுக்கப்பட்டாலும்கூட, முழுமை முழுமையாகவே இருக்கிறது.
பூர்ணத்வத்தில் இருந்து நீங்கள்தான் பூர்ணம் என்பதை உணர்வதுதான் ஞானம்.
'நீங்கள் தான் பூர்ணம்' என்பதை நீங்கள் உணரும்பொழுது, இந்தப் பிரபஞ்சத்தின் பூர்ணத்துவத்தை அனுபவமாக உணர்கின்றீர்கள், நீங்கள் இந்தப் பூர்ணத்தன்மையை அனுபவமாக உணர்ந்தீர்களானால்... நீங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்துவீர்கள்.
நாம் ஒவ்வொருவருமே இந்தப் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்கள்தான். பூர்ணம் எனும் ஜோதியில் இருந்து வெளிவந்த சுடர்கள்தான். ஆனால் அஞ்ஞானம் எனும் இருளால் அதை மறந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் உண்மையான வாழ்வை இழந்துகொண்டிருக்கிறோம். பூர்ணத்வம் செய்வது நம்முடைய வாழ்க்கையை நமக்குத் திருப்பி வழங்குகிறது!
நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, வேதப் பாரம்பரியத்தில் நீங்கள் படித்த அனைத்தும் நிஜமாகிவிடுகிறது. உங்கள் வாழ்க்கையில் வேதப் பாரம்பரியத்தை அடைவதற்கு, அதீதமான சக்திகளைப் பெறுவதற்கு, பூர்ணத்வம் ஒரு பாலமாக இருக்கிறது.
எல்லா நிலைகளிலும் பூர்ணத்வமே வாழ்க்கை.
உங்களுக்கும், இராமானுஜர், ஆதிசங்கரர், ஞானசம்பந்தர் போன்றவர்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், அது பூர்ணத்வத்தின் நிலைப்பாடுதான்.
பூர்ணத்வமே ஆன்மீகத்தின் வளர்ச்சி! பூர்ணத்வத்தினால், உங்கள் முழு வாழ்க்கையும் மாறிவிடுகிறது.
பூர்ணத்வத்தால், நீங்கள் கடவுளுடன் நேரிடையாக வாழ்த்துங்குகிறீர்கள்!
உங்களுக்குள் அமைதி, நிம்மதி நிலைகொள்ள வேண்டுமென்றால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
உங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
உங்கள் துறையில் நீங்கள் திறன்மிக்கவராக வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள். அழகான உறவுகள் வேண்டுமானால் பூர்ணத்வம் செய்யுங்கள்.
நீங்கள் பூர்ணத்வம் செய்யும்போது, உங்கள் வேலையில், உறவுகளில் என எல்லாவற்றிலும் மேன்மையடைவீர்கள். இந்த வெளிவிளைவை மட்டுமல்ல, உங்களுக்குள் உங்களுடைய உணர்வு திரும்பக் கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் விழிப்புணர்வு, உங்களுக்குத் திரும்ப வந்துவிடும்.
எவ்வளவுக்கெவ்வளவு உங்கள் உள் உணர்வு உங்களிடம் திரும்ப வருகின்றதோ... அந்த அளவிற்கு உங்கள் வாழ்வில் பல அதிசயங்கள் நடப்பதைக் காண்பீர்கள். உங்கள் உணர்வைத் திரும்பப் பெறும்பொழுது, நீங்களும் பூர்ணத்தில் இருந்து வெளிப்பட்டவர்தான் என்ற சத்தியத்தை உணர்ந்துகொள்வீர்கள்.
பூர்ணத்வம் - உங்களின் உண்மையான அடையாளம்!
உங்களின் உண்மையான அடையாளம் எது என்பதை நீங்கள் மறந்திருப்பதே உங்களின் எல்லாக் குறைவுணர்வுகளுக்கும் காரணம்.
உதாரணத்திற்கு... உண்மையில் நீங்கள் ஸ்விஸ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் போட்டு வைத்திருக்கும் ஒரு செல்வந்தர்தான், ஆனால் தீடீரென ஏதோ சில காரணத்தால், நீங்கள் பிரக்ஞையற்ற நிலையில் விழுந்துவிட்டீர்கள். அதன்பின்பு நீங்கள் விழிக்கும்போது, இயற்கையாகவே, உங்கள் ஸ்விஸ் வங்கி கணக்கு எண், அதற்கான கடவுச்சொல், எவ்வளவு வைப்புத்தொகை ஆகிய எல்லாவற்றையுமே மறந்துவிடுவீர்கள். அதனால் உங்களை ஒரு பிச்சைக்காரராகவே நம்புவீர்கள். ஆனாலும் உலகத்திற்கு உங்களை ஒரு பணக்காரராக காட்டிக் கொள்ளவே விரும்புவீர்கள். அதற்காக நீங்கள் கடுமையாக முயற்சிப்பீர்கள். ஆனால், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நீங்கள் உணர்வீர்கள்.
ஆனால் நிஜத்தில் நீங்கள் ஒரு பெரும் பணக்காரர்! ஒரு பணக்காரரான நீங்கள், உங்களுக்குள் உங்களை ஒரு ஏழையாகவே நம்புகிறீர்கள். ஏழையாகவே வாழ்கிறீர்கள். உங்கள் கணக்கில் எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் என்பதைக்கூட அறியாமலே இருக்கிறீர்கள்.
நீங்கள் ஸ்விஸ் வங்கியில் பணம் போட்டுவைத்துவிட்டு, உங்கள் கணக்கு எண்ணை மறந்துவிட்டதைப் போலத்தான், பூர்ணத்துவம்தான் உங்கள் உண்மைநிலை என்பதை மறந்து, உங்களுக்குள் உங்களை ஒரு குறைவுணர்வுள்ளவராகவே நம்புகிறீர்கள். ஆனால் வெளி-உலகிற்கு உங்களை ஒரு நிறைவுபெற்ற மனிதராகவே காட்டிக்கொள்ள விரும்புகிறீர்கள். அப்படியே காட்டிக்கொள்ளவும் செய்கிறீர்கள்.
பூர்ணத்துவம், எல்லாத் தடைகளையும், குறைவுணர்வுகளையும் உருக்கிக் கரைத்துவிடும். உங்களுடைய உணர்வு மலர்வதற்குத் தடையாக இருக்கும் தடைகளெல்லாம் பெரிய மலைகளாக, பெரிய மலைத்தொடர்களாக இருக்கின்றன. எனினும், பூர்ணத்துவத்தால்மலையளவுள்ள குறைவுணர்வுகளைக்கூட கரைத்துவிட முடியும். ஆகவே, நிறைவுசெய்யுங்கள்! ஞானம் அடைவதையே நினைவில் வைத்து, சரியான புரிதலைக்கொண்டு எல்லாவற்றுடனும் நிறைவுசெய்து கொள்ளுங்கள்.
பூர்ணத்துவமே கடவுள். பூர்ணத்துவமே வாழ்க்கை. பூர்ணத்துவம், உங்களைப் பிரபஞ்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே, பூர்ணத்துவம் உங்களுக்கு எல்லாவற்றையும் அளிக்கிறது. எல்லாக் கர்மங்களிலிருந்தும், எல்லா தோஷங்களில் இருந்தும் - அது நாகதோஷமோ, சனிதோஷமோ, ஜாதக தோஷமோ, வாஸ்து தோஷமோ - அவற்றிலிருந்து பூர்ணத்துவம் உங்களை விடுவிக்கிறது. ஆகவே பூர்ணத்வக் கிரியாவை செய்ய ஆரம்பியுங்கள். அனைத்து மதங்களின் சாரமும் பூர்ணத்துவமே!!!
ஸ்ரீமத்பகவத் கீதை
அசிரத்தையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு
அத்தியாயம் - 17
வாழ்க்கை, ஸத்யத்தைப் பரிசோதிப்பதற்காகவே இருக்கிறது. ஸத்யத்துடனான பரிசோதனையை மேற்கொள்வதற்கான துணிவு வாழ்க்கையில் இருக்க வேண்டும். வெறுமனே படிப்பதாலோ அல்லது கவனிப்பதாலோ அல்லது சிந்திப்பதாலோ மட்டுமே புரிந்துகொள்வதென்பது அர்த்தமற்றது. புரிந்து கொண்டதைத் துணிவுடன் செயல்படுத்த வேண்டும்.