சிரத்தை இதுவே ஜீவன்முக்திக்கான நேர்வழி
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பதினேழாவது அத்தியாயமான, ச்ரத்தாதீ்ரய விபாகயோகா-வில்கிருஷ்ணர், அவர் என்னவெல்லாம் உபதேசிக்கிறாரோ அதை அப்படியே உள்வாங்கிக் கொள்வதற்கான நுட்பங்களையும் முறைகளையும் நேரடியாகத் தருகிறார்.
முந்தைய அத்தியாயங்களிலேயே கிருஷ்ணர் எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டார். புதிதாக ஒன்றும் இங்குச் சொல்லவில்லை. கிருஷ்ணர் இதுவரை பேசிய, கற்பித்த எல்லா விஷயங்களும், இப்போது அவர் இங்கே பேசப்போவதற்கான ஒரு முன்னோட்டமே. இங்கே, கிருஷ்ணர் ச்ரத்தையைப் பற்றிப் பேசுகிறார்.
முதலில் நான், ச்ரத்தை என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்குகிறேன். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ச்ரத்தை என்பது நம்பிக்கையைக் குறிக்காது; ச்ரத்தை என்ற வார்த்தை 'நம்பிக்கை' என்றே எப்போதும் மொழிபெயர்க்கப்படுகிறது. ஆனால் அது சரியானது அல்ல.