KAILASA Library/பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)/ஆனந்தமாக இருப்பதிலிருந்து துவங்குங்கள்!Sign in
பகவத் கீதை விளக்கம் - அத்தியாயம் 17 (Bhagavad Gita Explanation - Chapter 17)

ஆனந்தமாக இருப்பதிலிருந்து துவங்குங்கள்!

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: அன்பே கடவுள்’ என்று நீங்கள் சொல்கிறீர்கள். சில கலாச்சாரங்கள் கடவுளைக் கோபமானவராகவும், ஆக்ரோஷமானவராகவும் எடுத்துக் காட்டுகின்றன. அங்குத் துறவிகள் கடுகடுப்புத் தன்மையுடனும் நகைச்சுவை உணர்வின்றியும் இருக்கிறார்கள். கோபம் மற்றும் ஆக்ரோஷத்திலிருந்தும்கூட ஆனந்தம் வருமா

இல்லை. நமது உணர்ச்சிகளைக் கடவுளிடம் பிரதிபலிக்கிறோம்.

நமது புராணக்கதைகள், அவரைக் கோபமானவராகவும் ஆக்ரோஷமானவராகவும் பொறாமை கொண்டவராகவும் காட்டுகிறது. ஒருவகையில், கடவுள் இயற்கையைப்போலவே நடுநிலையானவரே. நீங்கள் பாவியா அல்லது துறவியா என்பதைப் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை இல்லை. நீதி நெறிகள், ஆன்மீகத்தில் எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை.

காமம் என்பது
அன்பு சக்தியின்
பக்குவமற்ற வடிவம்.
கடவுள் என்பது
அன்பு சக்தியின்
உயர்ந்த வடிவம்.

மற்றொரு வகையில், கடவுள் என்றால் கருணை. நீங்கள் கடவுள்தன்மையை அணுகும்போது, மற்றவர்களை உங்களுக்குள்ளும், உங்களை மற்றவர்களுக்குள்ளும் பார்ப்பீர்கள். மனித நிலையில், இதை நாம் அன்பு என்கிறோம். உண்மையில், அது நாம் சொல்லிக் கொண்டிருக்கின்ற 'அன்பு' என்பதற்கு அப்பாற்பட்டது.

அன்பு, நம்மால் ஆனந்தமாக உணர்வுமாற்றம் செய்ய முடிந்த ஒரு சக்தியாகும். மேலும், நம்மிடம் இருக்கும் ஒரே சக்தி அன்பு மட்டுமே. நம்மிடம் வேறெந்த சக்தியும் கிடையாது. இதே சக்திதான் வெவ்வேறு தளங்களில் இருக்கிறது.

காமம் என்பது அன்பு சக்தியின் பக்குவமற்ற வடிவம். கடவுள் என்பது அன்பு சக்தியின் உயர்ந்த வடிவம். இருந்தாலும், பண்படாததாகவும், தூலமாகவும், நுட்பமாகவும், கடினமாகவும், உலகியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இருக்கின்ற எல்லாமே அதே அன்பு சக்தியின் வெவ்வேற வடிவங்களே. அதே சக்திதான் எல்லாத் தளங்களிலும் இயங்குகிறது. அதுவொரு ஏணியைப்போன்றது: அதன் ஒருமுனை பாதாளத்தையும், மறுமுனை உச்சத்தையும் தொடுகிறது.

அன்பு இல்லையேல், வாழ்க்கையே சாத்தியமற்றதாகிவிடும். அன்பு இல்லையேல், பிரபஞ்சமே சாத்தியமற்றதாகிவிடும். பொருட்கள் தனித்தனியாகச் சிதறிவிடும். அன்பே எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கட்டி வைத்துள்ளது.

இதுவரை வாழ்ந்த அனைத்து ஜ்ஞானகுருமார்களின் அடிப்படை அகக்காட்சியாக இருப்பது, பொருட்கள் எல்லாம் அன்பினால் ஒன்றிணைக்கப்பட்டு, சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன என்பதே.

கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி அணுக்களையும் மூலக்கூறுகளையும் ஒன்றிணைத்து வைத்திருக்கிறது. அவை தனித்தனியாகப் பிரிவதில்லை. விஞ்ஞானம் இன்னும் அந்த எல்லாம் வல்ல சக்தியைக் கண்டுபிடிக்கவில்லை. ஈர்ப்பு விசை அல்லது மின்சாரம் போன்ற அதன் சில வெளிப்படுத்துதல்களையே விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறது, ஆனாலும் இவை தூலமான வெளிப்படுத்துதல்களே.

இருந்தாலும், எல்லாச் சக்திகளுக்கும் அடிப்படை ஆதாரம் அன்புதான் என்பதை விஞ்ஞானம் கண்டுபிடிப்பதற்கான நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த நாள், மனிதகுலத்தின் பொன்னாளாக இருக்கும். அந்த நாளில்தான் ஆன்மீகமும், விஞ்ஞானமும் ஒருங்கிணையும். ஏனென்றால், அவற்றின் மொழி ஒன்றே. அது, அன்பு.

மகிழ்ந்து கொண்டாடுங்கள், ஏனென்றால், அன்பு சாத்தியம்தான். சந்தோஷமாக இருங்கள், ஏனென்றால், அன்புதான் உங்களின் உள்ளார்ந்த ஆற்றலாக இருக்கிறது. உச்ச உயரங்களுக்கு நீங்கள் உயர முடியும்; அன்பிற்கு அசாத்தியம் என்று ஒன்றுமேயில்லை. காரணம், அன்பு, தன்னைக் கடவுளாக மாற்றிக்கொள்ளும்.

அன்பு தெய்வகமானது. காமம் மிருகத்தனமானது. பலர், காமத்தையும் அன்பையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள். மிகப்பெரிய சீரழிவுகளில் அதுவும் ஒன்று.

காமத்தை அன்பு என்று நினைப்பவர்கள், காம உலகிலேயே கட்டுண்டு விடுகிறார்கள். அதற்குமேல் அவர்கள் ஒருபோதும் உயர்வதில்லை. அதற்கு மேலான ஒரு தளம் இருக்கிறது என்ற கருத்துக்கூட அவர்களுக்கு இருப்பதில்லை. அவர், தம்முடைய வீட்டின் அடித்தளத்திலேயே வாழ்கிறார்.

அன்பிற்கு அசாத்தியம்
என்று ஒன்றுமேயில்லை.
காரணம்,
அன்பு, தன்னைக்
கடவுளாக
மாற்றிக்கொள்ளும்.

பாலுணர்வே அந்த அடித்தளம்.
அது வாழ்வதற்கேற்ற இடம் அல்ல.
நீங்கள் அதை வேறு தேவைகளுக்காகப்
பயன்படுத்தலாம். ஆனால் அதை உங்கள்
வீடாகப் பயன்படுத்த முடியாது; உங்கள்
வீடு அதற்கு மேலே இருக்கிறது.

மனிதர்கள், இருப்புத் தன்மையில் மூன்று
தளங்களைக் கொண்டிருக்கின்றனர்.
காமம் என்பது மிருகத்தின் இயல்பு. அது
அன்பின் பக்குவமற்ற வடிவமே என்பதை
நினைவில் கொள்ளுங்கள். அங்கு,

அன்பே இல்லை என்று பொருள் அல்ல. ஆனால் அது, பொறாமை, பற்று, கோபம் ஆகியவற்றால் மாசுபடுத்தப்பட்டு, கலங்கலாகவும் சேறாகவும் இருக்கிறது. அது எந்தளவிற்குச் சுத்தப்படுத்தப்படுகிறதோ, அந்தளவிற்கு அது மனித அன்பாக மாறுகிறது.

மனித அன்பு குறைவான பற்றையும், பொறாமையையும் கொண்டிருக்கிறது. அது, ஒவ்வொருவரும் தன்னுடைய ஒரு பாகமே என்று சிந்திக்கும் அளவிற்குச் சிறந்த புரிதல் தன்மையைக் கொண்டிருக்கிறது. மேலும் அது, தன் சுயநலத்திற்காக மற்றவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளாமலேயே செயல்பரியும் திறன் கொண்டதாகவும் இருக்கிறது.

அன்பு தெய்வீகமாக இருக்கும்போது, அது பிரார்த்தனை என்னும் உயர்ந்த வடிவத்தில் இருக்கும். அப்போது அங்கு உடைமைத் தன்மை இருக்காது. எதையும் பெற வேண்டுமென்ற முனைப்பு இருக்காது. அது முற்றிலுமாக, கண்ணுக்குத் தெரியாத ஓர் ஆற்றலாக ஆகிறது.

அன்பு பிரார்த்தனையாக மாறும்போது,
முதல்முறையாக, நாம் மனநிறைவை
உணர்கிறோம். மாறாக, காமம்
நம்மைத் தொடர்ந்து உணர்ச்சிக்
கிளர்ச்சிகளுக்காகவும்,சாகசங்களுக்காகவும்
ஆசைப்படவும் ஏங்கவைக்கவும் செய்கிறது.

> அன்பு பிரார்த்தனையாக
> மாறும்போது,
> முதல்முறையாக,
> நாம் மனநிறைவை
> உணர்கிறோம்.

மனித அன்பு ஏதோ சிறிதளவு திருப்தியை அளிக்கிறது. ஆனால் பிரார்த்தனையாகின்ற அன்பே ஆனந்தம். அது, அப்பாற்பட்டதிலிருந்து வீசுகின்ற ஓர் இனிமையான தென்றல். அப்படி வீசும்போது, அது நம்மை உலகியலிலிருந்து புனிதத்திற்கு எடுத்துச் செல்கிறது. நாம் நமது சிறகுகளை விரித்து, அந்தத் தென்றலோடு மிதக்கலாம், அது நம்மை வாழ்வின் உச்சமான லட்சியத்திற்கு எடுத்துச் செல்கிறது.

ஆனந்தம் கடவுளை அடைவதற்கான பாதை. ஆனந்தம் என்பது கடவுளை நோக்கிச் செல்வதற்கான சாதனமான பாதையாகவும், அந்தப் பாதை சென்றடையும் இலக்காகவும் இருக்கிறது. அதுமே பாதை, அதுவே இலக்கு. ஆனந்தமாக இருங்கள். அப்படியானால்தான், நீங்கள் மேலும் அதிக ஆனந்தமாக இருக்க முடியும். ஆனந்தமாக இருப்பதிலிருந்து துவங்குங்கள். அதன் மூலம் முழுவதும் ஆனந்தமாக இருக்கும் நிலையில் முடிக்க முடியும். முதல்படியே, கடைசிப்படி என்பதை நினைவில் வைத்திருங்கள்.

இந்திய மக்கள், மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தைப் புண்ணிய ஸ்தலமாகக் கருதுகிறார்கள். அதுவொரு உருவகமே. உடல், மனம் மற்றும் ஆன்ம சக்தி ஆகிய மூன்று சக்திகளும் கூடும் இடமாக மனிதன் இருக்கிறான் என்பதன் உருவகமே அது. இந்த மூன்று சக்திகளும் உண்மையாகவே ஒன்று சேரும்போது, அங்கு உற்சாகமும் ஆனந்தமும் நிறைந்திருக்கும்.

உடல், மனம் மற்றும் ஆன்மா - இம்மூன்றையும் ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டுவருவதுதான் தியானத்தின் முதல்படி

பொதுவாக, நாம் தனித்தனி பகுதிகளில்தான் வாழ்கிறோம். நமது உடல் ஒரு பகுதியிலும், நமது மனம் மற்றொரு பகுதியிலும் மேலும் நமது ஆன்மா மற்றொரு பகுதியிலும் வாழ்கிறது.

உடலுக்கு மனத்தைப் பற்றித் தெரிவதில்லை. மனம் ஆன்மாவைப் பற்றி அறிந்திருப்பதில்லை. கண்ணுக்குத் தெரிகின்ற ஆன்மாவே உடல். இவை அனைத்தும் ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் இவை ஒன்றுக்கொன்று அறிமுகம் இல்லாமல் இருக்கின்றன.

அவற்றை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டுவருவதுதான் தியானத்தின் முதல்படி. அவற்றை ஒன்றுக்கொன்று அறிமுகப்படுத்திவைத்து, ஆழ்ந்த நட்பில் அவற்றை இணைப்பதன் மூலம், அவற்றை ஒன்றிணைப்பது சாத்தியமாகிறது. இந்த மூன்று பரிமாணங்களும் ஒரு புள்ளியில் குவியும்போது, நான்காவது பரிமாணம் பிறக்கிறது. அந்த நான்காவது பரிமாணம்தான் கடவுள்.

இந்தியாவில் நாங்கள் அவரை, துரியம் என்கிறோம் அதன் பொருள் ‘நான்காவது’ என்பதாகும். நாங்கள் அவருக்கு எந்தப் பெயரும் தருவதில்லை. மற்ற மூன்றிற்கும் பெயர்கள் உண்டு, ஆனால் நான்காவதற்கு பெயர் இல்லை. இந்த நான்காவது எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டது.

உங்கள் உடல் மனத்திற்குள் கரைகின்றது; மனம் ஆன்மாவிற்குள் கரைகின்றது; ஆன்மா மனத்திற்குள் கரைகின்றது; ஆன்மா உடலுக்குள் கரைகின்றது; இப்படிப்பட்டதொரு இரசவாதத்தை உருவாக்குவதே ஆன்மீகத்தின் மொத்த வேலையும்.

கொஞ்சம் கொஞ்சமாக, மெது மெதுவாக அவை ஒரே ஒருங்கிணைந்த அதிசய நிகழ்வாக மாறிவிடுகிறது. அதனால் நமது வேலை மூன்று பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது: பல நுட்பங்கள் மூலமாக, நாம் உடல் மீது வேலை செய்கிறோம்; பல தெரபிகள் மூலமாக, நாம் மனத்தின் மூலம் வேலை செய்கிறோம்; பல தியான நுட்பங்கள் மூலமாக, நாம் ஆன்மாவின் மீது வேலை செய்கிறோம்.

உயர் விழிப்புநிலையை நோக்கி, நித்யானந்தத்தை நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் கீதையின் இந்த அத்தியாயத்தின் அனுபவத்தை நமக்கு அருளும்படி, பரப்ரஹ்ம கிருஷ்ணரை முழு ச்ரத்தையோடு வேண்டுவோமாக!

நாம் அனைவரும் ச்ரத்தையையும், பரப்ரஹ்ம க்ருஷ்ணரின் ஸத்யங்களையும் உள்வாங்கி அவற்றை நம் அனுபவமாகப் பெறுவோமாக! கீதையில் அவர் உபதேசிக்கும் ச்ரத்தையையும், ஸத்யத்தின் அனுபவங்களையும் நமக்கு அருளுமாறு அவரைப் பிரார்த்திப்போமாக! நித்யானந்தத்தில் நம்மை நிலைநிறுத்தி நித்யானந்தத்தை அவர் நமக்குள் உருவாக்கட்டும்!

ஓம் தத்ஸத் இதி ஶ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸூ
ப்்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஶ்ரீக்ரு'ஷ்ணார்ஜுந
ஸம்வாதே ஶ்ரத்தாத்ரய விபாகயோகோ நாம
ஸப்ததசோ'த்യായ:

ஓம் தத் ஸத், ஶ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைந்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'சிரத்தாத்ரய விபாக யோகம்' எனப்பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம். .