ஸ்லோகங்கள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அத ஸப்ததசோ'த்யாய:
பதினேழாவது அத்தியாயம்
ச்'ரத்தாத்ரயவிபாகயோக:
சிரத்தாத்ரயவிபாகயோகம்
அர்ஜுந உவாச
யே சா'ஸ்த்ரவிதிமுத்ஸ்ரு'ஜ்ய யஜந்தே ச்'ரத்தயாந்விதா: /
தேஷாம் நிஷ்டா து கா க்ரு'ஷ்ண
ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: // 17.1
அர்ஜுந உவாச - அர்ஜுனன் சொன்னார்; யே - எவர்கள்; சா'ஸ்த்ரவிதிம் - சாஸ்த்ர விதிமுறைகளை; உத்ஸ்ரு'ஜ்ய - மீறி; யஜந்தே - தெய்வங்களை வழிபடுகிறார்களோ; ச்'ரத்தயா - சிரத்தையால்; அன்விதா: - உந்தப்பட்டு; தேஷாம் - அவர்களுடைய; நிஷ்டா து - நிலைதான்; கா - என்ன; க்ரு'ஷ்ண - கிருஷ்ணா; ஸத்தவம் - ஸத்வகுணமுடையதா? ஆஹோ - அல்லது; ரஜ: - ரஜோ குணமுடையதா?; தம: - தமோகுணமுடையதா?
அர்ஜுனன் சொன்னது:
17.1 ஓ கிருஷ்ணா, ஆன்மீக பயிற்சிகளைச் சிரத்தையோடு, ஆனால் வேதநெறிகளுக்குட்படாமல் செய்பவர்களின் பக்தி எந்த வகையைச் சார்ந்தது? அது ஸத்வ வகையைச் சார்ந்ததா, ரஜஸ் வகையைச் சார்ந்ததா அல்லது தமஸ் வகையைச் சார்ந்ததா?
ஸ்ரீபகவாந் உவாச
த்ரிவிதா பவதி ச்'ரத்தா தேஹிநாம் ஸா ஸ்வபாவஜா /
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ச்'ருணு // 17.2
ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; த்ரிவிதா ஏவ - மூன்று விதமாகவே; பவதி - இருக்கிறது; ச்'ரத்தா - சிரத்தை; தேஹிநாம் - மனிதர்களுக்கு; ஸா - அந்த; ஸ்வபா_வஜா - இயல்பாக உண்டான; ஸாத்த்விகீ - ஸாத்விகமானது; ராஜஸீ - ராஜஸமானது; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; தாமஸீ - தாமஸமானது; ச - மேலும்; இதி - என இவ்வாறு; தாம் - அதனை; ச்'ரு'ணு - கேள்.
ஸ்ரீபகவான் சொன்னது
17.2 உடலெடுத்துள்ள மனிதர்களின் சிரத்தை மூன்று வகையானவை: நல்லது, தீவிரம் மற்றும் அறியாமை. இப்போது இவற்றைப் பற்றி என்னிடமிருந்து கேள்.
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ச்'ரத்_தா_ ப_வதி பா_ரத /
ச்'ரத்_தா_மயோsயம் புருஷோ யோ யச்ச்ரத்_த_: ஸ ஏவ ஸ: // 17.3
ஸத்த்வாநுரூபா - அவர்களுடைய மனப்பாங்குக்கு ஏற்றவாறு; ஸர்வஸ்ய - எல்லா மனிதர்களுக்கும்; ச்'ரத்_தா_ - சிரத்தை; ப_வதி - அமைகிறது; பா_ரத - பாரத; ச்'ரத்_தமயா: - சிரத்தையே உருவானவன்; அயம் புருஷ: - இந்த மனிதன்; ய: - எந்த மனிதன்; யச்ச்ரத்_தா_ - எந்தச் சிரத்தையோடு கூடியவனோ; ஸ: ஏவ - அந்தச் சிரத்தையின் தன்மையுடையவனே; ஸ: - அவன்
17.3 ஓ அர்ஜுனா, ஒவ்வொருவரின் சிரத்தையும், அவரவரின் சொந்த தீர்மானத்தைப் பொறுத்திருக்கிறது. ஒருவரின் சிரத்தையே அவரை நிர்ணயிக்கிறது. ஒருவர் என்னவாக விரும்புகிறாரோ, அவ்வாறே ஆகலாம்.
யஜந்தே ஸாத்த்விகா தே_வாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: /
ப்ரேதாந்பூ_தகணாம்ச்'சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: // 17.4
யஜந்தே - வழிபடுகிறார்கள்; ஸாத்த்விகா: - ஸத்வகுணம் நிறைந்த மனிதர்கள்; தே_வாந் - தேவர்களை; யக்ஷரக்ஷாம்ஸி - யக்ஷர்களையும் அரக்கர்களையும்; ராஜஸா: - ரஜோ குணமுடையவர்கள்; ப்ரேதாந் பூ_தகணாந் ச - ப்ரேத பூதங்களையும்; அந்லே - மற்ற; யஜந்தே - வழிபடுகிறார்கள்; தாமஸா: - தாமஸகுணமுடையவர்கள்; ஜநா: - மக்கள்
17.4 ஸத்வ இயல்பில் இருக்கும் மனிதர்கள், கடவுள் உருவங்களை வழிபடுகிறார்கள்; இரஜோ இயல்பைக் கொண்டவர்கள் ராக்ஷஸர்களை வழிபடுகிறார்கள்; தமஸில் இருப்பவர்கள் பேய்களையும் ஆவிகளையும் வழிபடுகிறார்கள்.
அசா'ஸ்த்ரவிஹிதம் கோரம் தப்யந்தே யே தபோ ஜநா: /
தம்பாஹங்காரஸம்யுக்தா: காமராகபலாந்விதா: // 17.5
கர்ச'யந்த: ச'ரீரஸ்தம் பூதக்ராமமசேதஸ: /
மாம் சைவாந்த:ச'ரீரஸ்தம் தாந்வித்யாஸுரநிச்'சயாந் //17.6
அசா'ஸ்த்ரவிஹிதம் - சாஸ்திர விதிமுறைகளை விடுத்து; கோரம் - கொடிய; தப்யந்தே- செய்கிறார்களோ; யே - எந்த; தப: - தவம் ; ஜநா: - மனிதர்கள்; தம்ப அஹங்கார ஸம்யுக்தா: - டாம்பீகம் , அஹங்காரம் இவற்றோடு; காம ராக பல அந்விதா: - பேராசை, விருப்பம் மற்றும் உடல் வலிமை இவற்றின் மீது கர்வம் கொண்டுள்ளார்களோ; கர்ச'யந்த: - துன்புறுத்துகிறார்களோ; ச'ரீரஸ்தம் - உடல் உருவில் உள்ள; பூதக்ராமம் ச - பூத ஸமுதாயத்தையும்; அசேதஸ: - அறிவிலிகளை; மாம் ஏவ - பரமாத்மாவான என்னையும்; அந்த: ச'ரீரஸ்தம் - உள்ளத்தில் உறையும்; தாந் - அந்த; வித்தி - அறிந்துகொள்; ஆஸுரநிச்'சயாந் - அசுரப் பண்புடையவர்கள் என
17.5, 6 இருள் நிறைந்த அறியாமை இயல்பில் இருப்பவர்கள், வேதநூல்களின் நெறிமுறைகளைப் பின்பற்றாமல் பல்வேறு கடுமையான தவங்களைப் பயிற்சி செய்வார்கள். போலித்தனத்திலும், அகங்காரத்திலும் மூழ்கி இருக்கும் இவர்கள், காமத்தினாலும் பற்றினாலும் இழுத்துச் செல்லப்படுபவர்களாகவும், தங்களின் உடல் பாகங்களை அறிவற்ற முறையில் கடுமையாக சித்ரவதை செய்வதுடன், உடலுள் உறையும் என்னையும் சித்ரவதை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ பவதி ப்ரிய: /
யஜ்ஞஸ்தபஸ்ததா தாநம் தேஷாம் பேதமிமம் ச்'ருணு // 17.7
ஆஹார: து அபி - உணவும்; ஸர்வஸ்ய - எல்லோருக்கும்; த்ரிவித:
- மூன்று வகையில்; பவதி - உள்ளது; ப்ரிய: - பிடித்ததாக; யஜ்ஞ:
- யாகமும்; தப: - தவமும்; ததா - அவ்வாறே; தானம் - தானமும்; தேஷாம் - அவற்றின்; இமம் பேதம் - தனித்தன்மைகொண்ட இந்த வேறுபாட்டை; ச்'ரு'ணு - கேட்டுக்கொள்
17.7 முவ்விதமான பொருள்சார்ந்த இயல்புகளுக்கு ஏற்றபடி, உணவு முவ்வகைப்படும். அவ்வாறே யாகம், தவம், தானம் இவையும் முவ்வகைப்படும். இம்மூன்றுக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கேள்.
ஆயு: ஸத்த்வ பலாரோக்யஸுகப்ரீதிவிவர்தனா: /
ரஸ்யா: ஸ்நிக்தா: ஸ்திரா ஹ்ரு'த்யா ஆஹாரா:
ஸாத்த்விகப்ரியா: // 17.8
ஆயு: ஸத்த்வ பல ஆரோக்ய ஸுக ப்ரீதி விவர்தனா: - ஆயுள், அறிவு, வலிமை, உடல், நலம் , இன்பம், அன்பு இவற்றை வளர்க்கின்றவையாகவும்; ரஸ்யா: - ரஸம் உள்ளவையாகவும்; ஸ்நிக்தா: - பசையுடையவையாகவும்; ஸ்திரா: - உடலில் நீண்ட நேரம் தங்குபவையாகவும்; ஹ்ரு'த்யா: - இயல்பாகவே மனத்திற்குப் பிடித்தவையாகவும்; ஆஹாரா: - உணவு வகைகள்; ஸாத்த்விகப்ரியா - ஸத்த்வகுணமுடையவர்களுக்கு விருப்பமானவை.
17.8 நீண்ட ஆயுளையும், ஆற்றலையும், வலிமையையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கின்ற உணவுகள், மென்மையானதாகவும் எளிதாக ஜீரணமாகக் கூடியதாகவும், சாறு நிரம்பியதாகவும், திட உணவாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கின்றன. ஸத்வ குணமுடையவர்கள் இதுபோன்ற உணவுகளை விரும்புவார்கள்.
கட்வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதாஹின: /
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து:கசோ'காமயப்ரதா: // 17.9
கடு அம்ல லவண அத்யுஷ்ண தீக்ஷ்ண ரூக்ஷ விதாஹின: -கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, மிக்க சூடு, காரம் இவற்றுடன் கூடிய வறண்ட எரிச்சல் உண்டு பண்ணக் கூடிய மற்றும்; ஆஹாரா: - உணவு வகைகள்; ராஜஸஸ்ய - ரஜோ குணமுடையவனுக்கு; இஷ்டா: - விருப்பமானவை; து:க சோ'க ஆமயப்ரதா.- துன்பம் கவலை, நோய் இவற்றை உண்டாக்கக் கூடிய.
17.9 இரஜோ குணமுடையவர்கள், மிகவும் கசப்பான, புளிப்பான, உப்பு நிறைந்த, சூடான, உறைப்பான, உலர்ந்த, எரியச் செய்கின்ற உணவுகளை விரும்புவார்கள். இவை வலியையும் வேதனையையும் நோயையும் உண்டாக்குகின்றன.
...................................................................................................................
யாதயாமம் கதரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் /
உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமஸப்ரியம் // 17.10
யதயாமம் - ஓர் இரவு கடந்து பழையதோ; கதரஸம் - ரஸமற்றதோ; பூதி - துர்நாற்றமுடையதோ; பர்யுஷிதம் - ஊசிப்போனதோ; ச - மேலும்; யத் - எந்த; உச்சிஷ்டம் ச - உண்டு மிகுந்ததோ; அமேத்யம் அபி - தூய்மையும் அற்றதோ; போஜனம் - உணவு; தாமஸப்ரியம் - தாமஸ குணமுடையவர்களுக்கு விருப்பமானது.
17.10 தமோ குணமுடையவர்கள், யாமம்கழிந்த, சுவையற்ற, அழுகிய, பழைய, ஒதுக்கப்பட்ட, தூய்மையற்ற சக்தியைக் கொண்டிருக்கும் உணவுகளை விரும்புவார்கள்.
...................................................................................................................
அபலாகாங்க்ஷிபிர்யஜ்ஞோ விதித்ரு'ஷ்டோ ய இஜ்யதே /
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதாய ஸ ஸாத்விக: // 17.11
அபலாகாங்க்ஷிபி: - பயனில் பற்றற்றவர்களால்; யஜ்ஞ: - யாகமோ; விதித்ரு'ஷ்ட: - சாஸ்திரங்களுக்கு உட்பட்ட; ய: - எது; இஜ்யதே - செய்யப்படுகின்றதோ; யஷ்டவ்யம் ஏவ - செய்யப்படவேண்டிய கடமைதான்; இதி - என்று; மந: - மனதை; ஸமாதாய - ஒரு நிலைப்படுத்தி; ஸ: - அது; ஸாத்விக: - ஸாத்விகமான யாகம்.
17.11 பலனை எதிர்பார்க்காலும், வேத நெறிகளுக்குட்பட்டும், இதுவொரு கடமை என்ற நம்பிக்கையோடும் தீர்மானத்தோடும் எந்த யாகம் செய்யப்படுகின்றதோ, அது ஸாத்விகமானது.
...................................................................................................................
அபிஸந்தாய து பலம் தம்பார்தமபி சைவ யத் /
இஜ்யதே பரதச்'ரேஷ்ட தம் யஜ்ஞம் வித்தி ராஜஸம் // 17.12
அபிஸந்தாய - கருத்தில் கொண்டோ; து- ஆனால்; பலம் - பயன்; தம்பார்தம் அபி ஏவ - பகட்டுக்காகவோ; ச - அல்லது; யத் - எந்த யாகம்; இஜ்யதே - செய்யப்படுகின்றதோ; பரதச்'ரேஷ்ட - பரதகுல சிரேஷ்டனே; தம் - அந்த; யஜ்ஞம் - யாகத்தை; வித்தி - தெரிந்து கொள்; ராஜஸம் - ராஜஸம் என்று
17.12 ஓ பரதகுல சிரேஷ்டனே, பலனை எதிர்பார்த்தோ அல்லது பெருமையைக் காட்டவோ செய்யப்படுகின்ற யாகங்கள், இரஜோ நிலையில் செய்யப்படுவன என அறிந்துகொள்.
.........................................................................................................................
விதிஹீநமஸ்ரு'ஷ்டாந்நம் மந்த்ரஹீநமதக்ஷிணம் /
ச்'ரத்தாவிரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே // 17.13
விதிஹீநம் - சாஸ்திர முறை வழுவி; அஸ்'ருஷ்டாந்நம் - அன்னதானமளிக்கப்படாமலும்; மந்த்ரஹீநம் - மந்திரம் இல்லாமலும்; அதக்ஷிணம் - தக்ஷிணைக் கொடுக்கப்படாமலும்; ச்'ரத்தா விரஹிதம்
- சிரத்தை இல்லாமலும் செய்யப்படுகின்ற; யஜ்ஞம் - யாகத்தை; தாமஸம் - தாமஸம் என்று; பரிசக்ஷதே - சொல்கிறார்கள்.
17.13 வேதநெறிகளைப் பின்பற்றாத, அன்னதானம் அளிக்கப்படாத, மந்திரக் குறைபாடுடைய, சிரத்தை இல்லாத, தக்ஷிணை அளிக்கப்படாத யாகங்கள், தாமஸிகமானது என்று சொல்லப்படுகிறது.
.........................................................................................................................
தேவத்விஜகுருப்ராஜ்ஞபூஜநம் செ'ளசமார்ஜவம் /
ப்ாஹ்மசர்யமஹிம்ஸா ச சாரிீரம் தப உச்சயதே // 17.14
தேவத்விஜ குரு ப்ராஜ்ஞ பூஜநம் - தெய்வங்கள், அந்தணர்கள், பெரியோர்கள், ஞானிகள் இவர்களைப் பூஜித்தலும்; செ'ளசம் - தூய்மையும்; ஆர்ஜவம் - நேர்மையும், ப்ாஹ்மசர்யம் - ப்ாஹ்மசர்யமும்; அஹிம்ஸா ச - அஹிம்ஸையும்; சாரிீரம் - உடலால் செய்யக் கூடிய; தப: - தவம் என்று; உச்சயதே - சொல்லப்படுகிறது.
17.14 தெய்வங்களை, சமயத் தலைவர்களை, குருமார்களை, ஞானிகளை வழிபடுவதும், மெய்யறிவான தூய்மை, நேர்மை, நிஜத்தில் வாழ்வது, வன்முறையற்ற வாழ்க்கை ஆகியவை உடலால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.
அனுத்வேககரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் /
ஸ்வாத்யாயாப்யஸனம் சைவ் வாங்மயம் தப உச்யதே // 17.15
அனுத்வேககரம் - பிறர் மனதைப் புண்படுத்தாமல்; வாக்யம் - பேச்சு; ஸத்யம் - உண்மை; ப்ரியஹிதம் ச - இனிமையும், நலனும் அளிக்கக் கூடியதாகவும்; யத் - எது; ஸ்வாத்யாய அப்யஸனம் ச ஏவ - வேத சாஸ்திரங்களை ஓதுதலும்; வாங்மயம் - வாக்கினால் செய்யக் கூடிய; தப: - தவம் என்று; உச்யதே - சொல்லப்படுகிறது.
17.15 குற்றமற்ற, எதிர்ப்பை உருவாக்காத, உண்மையான, இனிமையான, நலன் கொடுக்கக்கூடிய பேச்சும், வேதநூல்களைத் தொடர்ந்து படிப்பதும் வாக்கினால் செய்யக் கூடிய தவம் என்று சொல்லப்படுகின்றன.
மந:ப்ரஸாத: ஸெளம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ: /
பாவஸம்சுக்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே // 17.16
மந:ப்ரஸாத: - மனமகிழ்ச்சி; ஸெளம்யத்வம் - அமைதியான இயல்பு; மௌநம் - பகவானை இடைவிடாது சிந்தித்திருக்கின்ற இயல்பு; ஆத்மவிநிக்ரஹ: - மனவடக்கம்; பாவஸம்சுக்தி: - உள்ளத்தூய்மை; இதி ஏதத் - இவையெல்லாம்; மாநஸம் - மனத்தால் ஆற்றக்கூடிய; தப: - தவம்; உச்யதே - எனப்படுகின்றன.
17.16 மன அமைதி, கனிவு, சமநிலை, சுயக்கட்டுப்பாடு, எண்ணத் தூய்மை ஆகியவை மனத்தால் ஆற்றக்கூடிய தவம் எனப்படுகின்றன.
ச்ரத்தயா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவிதம் நரை: /
அபலாகாங்ஷிபிர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே // 17.17
ச்'ரத்தயா - மிகுந்த நம்பிக்கையுடன்; பரயா - மிகுந்த; தப்தம்
- செய்யப்படுகின்ற; தப: - தவம்; தத் - அந்த; த்ரிவிதம் - மூன்று விதமான; நரை: - மனிதர்களால்; அபலாகாங்க்ஷிபி: - பயனில் கருத்தில்லாத; யுக்தை: - யோகிகளான; ஸாத்த்விகம் - ஸாத்விகமானது என்று; பரிசக்ஷதே - சொல்லப்படுகிறது.
17.17 பயனில் கருத்தில்லாத யோகிகளால் மிகுந்த சிரத்தையுடன் செய்யப்படுகின்ற மனம், மொழி, மெய் இவற்றால் ஆற்றப்படுகின்ற அந்த மூன்று விதமான தவம் ஸாத்விகமானது என்று சொல்லப்படுகிறது.
ஸத்காரமானபூஜார்தம் தபோ தம்பேந சைவ யத் /
க்ரியதே ததிஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்ருவம் // 17.18
ஸத்கார மாந பூஜார்தம் - பாராட்டுதலையும், பெருமையையும், போற்றுதலையும் குறிக்கோளாகக்கொண்டோ; தப: - தவம்; தம்பேந - பகட்டிற்காகவோ; ச ஏவ - மற்றும் தன்னலம் கருதும் இயல்பினாலே; யத் - எந்த; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; தத் - அந்தத் தவம்; இஹ - இங்கு; ப்ரோக்தம் - எனச் சொல்லப்படுகிறது; ராஜஸம் - ராஜஸம்; சலம் - அழியக் கூடிய; அத்ருவம் - பயன் தருமா, தராதா என்ற நிச்சயமில்லா
17.18 மதிப்பு, மரியாதை, கெளரவத்தைப் பெறுவதற்காகவும், பகட்டுக்காகவும் செய்யப்படும் தபஸ், ஒரு தற்காலிகமான மற்றும் நிச்சயமற்ற விளைவையே கொடுக்கும். அந்தத் தபஸ் இங்கு ராஜஸம் எனச் சொல்லப்படுகிறது.
மூடக்ராஹேணாத்மநோ யத்பீடயா க்ரியதே தப: /
பரஸ்யோத்ஸாதநார்தம் வா தத்தாமஸமுதாஹ்ரு'தம் // 17.19
மூடக்ராஹேண - முரட்டுப் பிடிவாதத்தினால்; ஆத்மந: - மனம் , மொழி, மெய்களுக்கு; யத் - எந்த; பீடயா - துன்பம் இழைப்பதற்காகே வா; க்ரியதே - செய்யப்படுகின்றதோ; தப: - தவம்; பரஸ்ய - பிறருக்கு; உத்ஸாதநார்தம் - தீங்கு இழைப்பதற்காகவே; வா - அல்லது; தத் - அந்தத் தவம்; தாமஸம் - தாமஸம்; உதாஹ்ரு'தம் - எனப்படும்.
17.19 மூட்டாள்தனமான பிடிவாதத்துடனோ அல்லது சுய சித்ரவதையுடனோ அல்லது பிறரைத் துன்புறுத்தியோ செய்யப்படும் தபஸ் தாமஸம் எனப்படுகிறது.
தாதவ்யமிதி யத்தாதநம் தீயதேऽநுபகாரிணே /
தேசே' காலே ச பாத்ரே ச தத்தாதநம் ஸாத்த்விகம் ஸ்ம்ரு'தம் // 17.20
தாதவ்யம் - தானம் செய்வது தம் கடமை; இதி - எனக்கருதி; யத்தாதநம் - எந்தத் தானம்; தீயதே - கொடுக்கப்படுகின்றதோ; அநுபகாரிணே - தனக்கு ப்ரதி உபாகரம் செய்யாதவர் ஆயினும் அவருக்கு; தேசே' காலே ச - உரியஇடத்திலும், உரிய காலத்திலும்; பாத்ரே ச - தகுதியானவருக்கும்; தத் - அத்தகைய; தாதநம் - தானம்; ஸாத்த்விகம் - ஸாத்விகம் என்று; ஸ்ம்ரு'தம் - கருதப்படுகிறது.
17.20 சரியான இடத்தில், சரியான நேரத்தில் ஒரு கடமையாகக் கருதி, பிரதியுபகாரம் செய்ய முடியாதெனினும், தகுதியுடையராயிருக்கும் ஒருவருக்குக் கொடுக்கப்படும் தானம் ஸாத்விகம் என்று கருதப்படுகிறது.
யத்து ப்ரத்யுபகாரார்தம் பலமுத்திச்'ய வா புந: /
தீயதே ச பரிக்லிஷ்டம் தத்தாதநம் ராஜஸம் ஸ்ம்ரு'தம் // 17.21
யத் - எந்த; து - ஆனால்; ப்ரத்யுபகாரார்தம் வா - கைம்மாறு கருதியோ; பலம் உத்திச்'ய புந: - பயனைக் கருத்தில்கொண்டோ; தீயதே - கொடுக்கப்படுகின்றதோ; பரிக்லிஷ்டம் ச - மன வருத்தத்தோடும்; தத் - அந்த; தாதநம் - தானம்; ராஜஸம் - ராஜஸம்; ஸ்ம்ரு'தம் - எனப்படும்.
17.21 விருப்பமில்லாமலோ அல்லது கைமாறு எதிர்பார்த்தோ அல்லது ஏதோவொரு பலனை எதிர்பார்த்தோ கொடுக்கப்படும் தானம் ராஜஸம் எனப்படும்.
அதேச'காலே யத்தாதநமபாத்ரேப்யச்'ச தீயதே /
அஸத்க்ரு'தமவஜ்ஞாதம் தத்தாமஸமுதாஹ்ரு'தம் // 17.22
அதே'காலே ச - தகாத இடத்திலும், தகாத காலத்திலும்; யத் - எந்த; தாநம் - தானம்; அபாத்ரேப்ய: - தகுதியற்றவர்களுக்கு; தீயதே
- கொடுக்கப்படுகின்றதோ; அஸத்க்ரு'தம் - மரியாதையின்றி; அவஜ்ஞாதம் - இகழ்ச்சியோடும்; தத் - அது; தாமஸம் - தாமஸம் உதாஹ்ரு'தம் - எனப்படுகிறது.
17.22 தவறான இடத்தில், தவறான நேரத்தில், தகுதியற்றவர்களுக்கு மரியாதையின்றி அல்லது இகழ்ச்சியுடன் கொடுக்கப்படும் தானம் தாமஸம் எனப்படுகிறது.
ஓம் தத்ஸதிதி நிர்தேஸோ' ப்ரஹ்மணஸ்திரிவித: ஸ்ம்ரு'த :/
ப்ராஹ்மணாஸ்தேந வேதாஸ்ச யஜ்ஞாஸ்ச விஹிதா: புரா //
17.23
ஓம் - ஓம்; தத் - தத்; ஸத் - ஸத்; இதி - என்று; நிர்தேஸ' - பெயர்; ப்ரஹ்மண: - பிரஹ்மத்தினுடைய; த்ரிவித: - மூன்றுவிதமாக; ஸ்ம்ரு'த:
- மொழியப்பட்டுள்ளது; ப்ராஹ்மணா: - பிராஹ்மணர்களும்; தேந - அந்த பிரஹ்மத்தினால்; வேதா: ச - வேதங்களும்; யஜ்ஞா: ச
- வேள்விகளும்; விஹிதா: - படைக்கப்பட்டன; புரா - படைப்பின் ஆரம்பத்தில்
17.23 என்றென்றும் நிலைத்திருக்கின்ற இருப்பு சக்தியான ப்ரஹ்மத்தினுடைய பெயர், ஓம் தத் ஸத் என்று மூன்று வார்த்தைகளைக் கொண்டதாக மொழியப்பட்டுள்ளது. அந்த ப்ரஹ்மத்தினால் படைப்பின் ஆரம்பத்தில் ப்ராம்மணர்களும், வேதங்களும், வேள்விகளும் படைக்கப்பட்டன.
தஸ்மாதோமித்யுதாஹ்ரு'த்ய யஜ்ஞதாநதப:க்ரியா: /
ப்ரவர்தந்தே விதாநோக்தா: ஸததம் ப்ரஹ்மவாதிநாம் // 17.24
தஸ்மாத் - ஆகையினால்; ஓம் இதி - ஓம் என்கிற பரமாத்மாவின் திருப்பெயரை; உதாஹ்ரு'த்ய - உச்சரித்துக்கொண்டே; யஜ்ஞ தாந தப: க்ரியா: - வேள்வி, தானம், தவம் முதலிய கர்மங்கள்; ப்ரவர்தந்தே - தொடங்கப்படுகின்றன; விதாநோக்தா:- சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ள; ஸததம் - எப்பொழுதும்; ப்ரஹ்மவாதிநாம் - வேதம் ஓதும் பெரியோர்களுடைய 17.24 அதனால், வேதநூல்களில் சொல்லப்பட்டிருக்கும் யாகம், தானம், தவம் போன்ற செயல்கள், உச்சபட்ச சக்தியை அறிந்தவர்களால் ‘ஓம்’ என்று உச்சரிக்கப்பட்டே தொடங்கப்படுகின்றன.
ததித்யநபிஸந்தாய பலம் யஜ்ஞதப:க்ரியா: /
தாநக்ரியாச்’ச விவிதா: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி: //17.25
தத் - தத் என்று அழைக்கப்படுகின்ற பரமாத்மாவுக்கே எல்லாம் உரியன; இதி - என்ற உணர்வுடன்; அநபிஸந்தாய- விரும்பாமல்; பலம் - பயனை; யஜ்ஞதப:க்ரியா: -வேள்வி, தவம் ஆகிய செயல்களும்; தாநக்ரியா: ச - தானமாகிய கர்மங்களும்; விவிதா: - பலவிதமான; க்ரியந்தே - செய்யப்படுகின்றன; மோக்ஷகாங்க்ஷிபி: - மோக்ஷமாகிய நலன்நாடும் நல்லோரால்
17.25 மோக்ஷமாகிய நலன் நாடும் நல்லோரால் பல்வேறு வகையான யாகங்களும், தவங்களும், தானங்களும் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல் ‘தத்’ (எல்லாம் அவனே) என்று உச்சரித்துக் கொண்டே செய்யப்படுகின்றன.
ஸத்பாவே ஸாது பாவே ச ஸதித்யேதத்ப்ரயுஜ்யதே /
ப்ரச’ஸ்தே கர்மணி ததா ஸச்சப்த: பார்த யுஜ்யதே // 17.26
யஜ்ஞே தபஸி தாநே ஸ்திதி: ஸதிதி சோச்யதே /
கர்ம சைவா ததர்தீயம் ஸதித்யேவாபிதீயதே // 17.27
ஸத்பாவே - உண்மை என்ற கருத்திலும்; ஸாதுபாவே ச - நல்லெண்ணம் என்ற கருத்தில்; ஸத் - ஸத்; இதி - என்று; ஏதத் - பகவானுடைய பெயர்; ப்ரயுஜ்யதே - உபயோகப்படுத்தப்படுகிறது; ப்ரச’ஸ்தே - உயர்ந்த மங்களமான; கர்மணி - கர்மத்திலும்; ததா
- அங்ஙனமே; ஸத் ச’ப்த - ஸத் என்ற சொல்; பார்த - அர்ஜூனா; யுஜ்யதே - உபயோகிக்கப்படுகிறது; யஜ்ஞே - வேள்வியிலும்; தபஸி ச- தவத்திலும்; தாநே - தானம்; ஸ்திதி: - உறுதி நிலை இருக்கின்றதோ; ஸத் இதி - ஸத் என்றே; ச - மேலும்; உச்யதே -சொல்லப்படுகிறது; கர்ம - செயல்; ச - மேலும்; ஏவ - நிச்சயமாக; ததர்தீயம் - அந்த பரமாத்மாவின் பொருட்டுச் செய்யப்படுகின்ற; ஸத் இதி - ஸத் என்றே; ஏவ -கூட; அபீதீயதே - அழைக்கப்படுகிறது.
17.26,27 ஸத் என்ற வார்த்தை ஸத்யம், நன்மை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. ‘ஓ அர்ஜுனா, ஸத் என்ற வார்த்தை மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிரத்தையுடன் செய்யப்படும் யாகம், தானம் மற்றும் தவம் ஸத் என்று அழைக்கப்படும். கடவுளுக்காகச் செய்யப்படும் சுயநலமற்ற சேவை உண்மையில் ஸத் என்று சொல்லப்படுகிறது.
...........................................................................................................................
அச்'ரத்தயா ஹுதம் தத்தம் தபஸ்தப்தம் க்ரு'தம் ச யத் /
அஸதித்யுச்யதே பார்த ந ச தத்ப்ரேத்ய நோ இஹ // 17.28
அச்'ரத்தயா - சிரத்தையின்றிச் செய்யப்படுகின்ற; ஹுதம் - ஹோமமும்; தத்தம் - அளிக்கப்படுகின்ற தானமும்; தப: ச - தவமும்; தப்தம்செய்யப்படும்; க்ரு'தம் ச- செய்யப்பட்ட மங்கள காரியங்களும்; யத்
- அஸத் இதி - ‘அஸத்’ என்று; உச்யதே - சொல்லப்படுகின்ற; பார்த - அர்ஜுனா; ந - இல்லை; தத் - அவை; ப்ரேத்ய ச - இறந்த பிறகும்; ந
- கிடையாது; இஹ - இந்த உலகிலும்
17.28 சிரத்தையோடு செய்யப்படாத யாகமோ, தானமோ, தவமோ அல்லது வேறெந்தச் செயலாக இருந்தாலும் அது அஸத்ய என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜுனா, அதற்கு இப்போதும், எப்போதும் மதிப்பு கிடையாது.
...........................................................................................................................
ஓம் தத்ஸத் இதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூ உபநிஷத்ஸூ
ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ரு'ஷ்ணார்ஜுந
ஸம்வாதே ச்'ரத்தாத்ரய விபாகயோகோ நாம
ஸப்ததசோ'த்யாய:
ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய ‘சிரத்தாத்ரய விபாக யோகம்’ எனப்பெயர் படைத்த பதினேழாவது அத்தியாயம்.