அது ஆயிரம் கலைகள்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

என்றென்றும் நிலைத்திருக்கின்ற இருப்பு சக்தியான ப்ரம்மத்தினுடைய பெயர், ஓம் தத் ஸத் என்று மூன்று வார்த்தைகளைக் கொண்டதாக மொழியப்பட்டுள்ளது. அந்த ப்ரம்மத்தினால் படைப்பின் ஆரம்பத்தில் ப்ராம்மணர்களும், வேதங்களும், வேள்விகளும் படைக்கப்பட்டன.
அதனால், வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கும் யாகம், தானம், தபஸ் போன்ற செயல்கள், உச்சபட்ச சக்தியை அறிந்தவர்களால் ஓம் என்று உச்சரிக்கப்பட்டே தொடங்கப்படுகின்றன.
மோக்ஷமாகிய நலன் நாடும் நல்லோரால் பல்வேறு வகையான யாகங்களும், தபஸ்களும், தானங்களும் எந்தவிதமான பலனையும் எதிர்பார்க்காமல், தத் (எல்லாம் அவனே) என்று உச்சரித்துக் கொண்டே செய்யப்படுகின்றன.
ஸத் என்ற வார்த்தை ஸத்யம், நன்மை என்ற அர்த்தத்தில்
பயன்படுத்தப்படுகிறது. 'ஓ அர்ஜூனா, ஸத் என்ற வார்த்தை மங்களகரமான செயலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
ச்ரத்தையுடன் செய்யப்படும் யாகம், தானம் மற்றும் தபஸ்கள் ஸத் என்று அழைக்கப்படும். கடவுளுக்காகச் செய்யப்படும் சுயநலமற்ற சேவை உண்மையில் ஸத் என்று சொல்லப்படுகிறது.
ச்ரத்தையோடு செய்யப்படாத யாகமோ, தானமோ, தபஸோ அல்லது வேறெந்தச் செயலாக இருந்தாலும் அது அஸத்ய என்று அழைக்கப்படுகிறது. ஓ அர்ஜூனா, அதற்கு எப்போதும், எப்போதும் மதிப்பு கிடையாது.
ஞானியால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்
முடிவில், கிருஷ்ணர், மொத்தமாக வேறொரு தளத்திற்குச் செல்கிறார்.
இதுவரை அவர், மனிதர்களின் மூன்று இயல்பிற்கு ஏற்ப, அவர்கள் மேற்கொள்ளும் வெவ்வேறு வகையான யாகம், தானம், தபஸ் ஆகியவற்றையும், நம்மால் என்னென்ன செய்யப்பட வேண்டும் மற்றும் அவை எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பவற்றையும் விளக்கினார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், எல்லாவிதமான யாகமும் தானமும் தவமும் கிருஷ்ணர் சொன்ன ஸாத்விக, ரஜோ, தமோ ஆகிய மூன்று
> ஸத்வ மன அமைப்பில் அல்லது நல்லெண்ணத்தில் செய்யப்படும் செயல்கள் மட்டுமே முழுமையான மற்றும் முடிவான பலனைக் கொடுக்கின்றன.
அடிப்படைப் பிரிவுகளுக்குள் வந்துவிடும். இதை நற்குணம், அதீத உணர்ச்சிவசம், அறியாமை என்றும் மொழிமாற்றம் செய்யலாம். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், பொருள்சார்ந்த நோக்கில் செய்யப்படும் வரை, அவை பந்தப்படுத்துபவையாகவே இருக்கின்றன.
அவை கடவுளுக்கும் பிரபஞ்ச சக்திக்கும் நன்றி செலுத்தும்வகையில் செய்யப்பட்டால் மட்டுமே, ஆன்மீக மேம்பாடோ அல்லது ஆன்மீக உயர்வோ நீங்கள் காண்பீர்கள். ரஜோ, தமோ இயல்புகளிலிருந்து செய்யப்படும் எதுவும் முழுமையான பலனைக் கொடுக்காது என்று நமது வேத நூல்கள் விளக்குகின்றன. ஸத்வ மன அமைப்பில் அல்லது நல்லெண்ணத்தில் செய்யப்படும் செயல்கள் மட்டுமே முழுமையான மற்றும் முடிவான பலனைக் கொடுக்கின்றன. இந்த விழிப்புணர்வு இல்லாமல் செய்பவர்களுக்குத் தற்காலிகமான பலன்கள் வேண்டுமானால் கிடைக்குமே evira, நிரந்தரமான பலன் கிட்டாது.
> தபஸ்கள், உங்களுடைய சொந்த இருப்பை நோக்கிச் செய்யப்படுகின்றன.
மகாபாரத காலகட்டத்தில், பலி கொடுக்கும் யாக சடங்குகள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தன. ஆனால் இன்று அதன் உண்மையான தாத்பர்யத்தை அறிந்தவர்கள் இல்லாததால், அந்த நிலை வழக்கத்தில் இல்லை.
வேதங்களில், ரிஷிகளால் வெளிப்படுத்தப்பட்ட அதிசூட்சுமமான ஸத்யங்களை, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பின்பற்றப்படும் ஸ்தூல சடங்குகளுடன் இணைக்கின்ற உயர் அறிவை ப்ராஹ்மணர்களே பாதுகாத்து வருகிறார்கள்.
அவர்கள்தான் அந்த ஜ்வாலையை, நெருப்பை பாதுகாத்தவர்கள், ‘நெருப்பு’ என்று நான் சொல்லும்போது, உண்மையிலேயே ‘நெருப்பையே’ குறிக்கிறேன். இன்றும்கூட பெரும்பாலான வேத வழிபாட்டுச் சடங்குகள் அக்னியை ஆவாஹனம் செய்வதாகவும், அக்னியை முன்னிலைப்படுத்தி செய்யப்படுபவையாகவுமே இருக்கின்றன.

யாகங்கள், ஆரம்ப நிலை சக்திகளை
நோக்கியும், தேவர்களை நோக்கியும்
செய்யப்படுகின்றன. தபஸ்கள்,
உங்களுடைய சொந்த இருப்பை
நோக்கிச் செய்யப்படுகின்றன. தாநங்கள்,
உங்களைச் சுற்றி இருப்பவர்களின்
நலன்கருதி, அவர்களுக்காகச்
செய்யப்படுகின்றன.
ப்ராஹ்மணர்கள், தங்களின் தொழிலின்
சாரத்தைப் பேணிக்காக்கின்ற வகையில்,
தானமேற்று வாழும் ஓர் எளிமையான
வாழ்க்கையைத்தான் வாழ வேண்டும்
என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில், இந்த
அடிப்படைக்கருத்துகளை விளக்குகிறார்.
அப்படியென்றால் மட்டுமே,
ஒவ்வொருவரும் ஜீவன்முக்திக்கான
பாதையில் முன்னோக்கிச் செல்ல முடியும்.
இது ப்ராஹ்மணர்களுக்கானது மட்டும் அல்ல, க்ஷத்ரியர்களுக்கும், வைச்யர்களுக்கும், சூத்ரர்களுக்கும் இது பொருந்தும். எந்த ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒருவர் இந்த அடிப்படைக் கருத்துகளைப் பின்பற்றினால், அவர் ஜீவன்முக்திக்குத் தகுதியானவரே. ஜாதி, ஒருவரின் ஜீவன்முக்திக்கு ஒரு தடையாக இருப்பதில்லை.
முதன்மையானத் தேவை, ச்ரத்தையே. யாகம், தவம் மற்றும் தானம் என்பவை ஒருவரின் நன்மைக்காகவோ, பொருள் சார்ந்த இலக்கின் அடிப்படையிலோ இருக்கக்கூடாது என்பதைப் புரிந்துகொள்வதையும் ச்ரத்தை குறிக்கிறது. அவை மேலான விழிப்பு நிலைத்தன்மையை நோக்கி இருக்க வேண்டும்.
கடைசி மூன்று ஸ்லோகங்களில், கிருஷ்ணர், நம் கவனத்தைச் 'சுயநல'த்திலிருந்து 'சுய'த்திற்கு (ஆத்மாவிற்கு) மாற்றும் நுட்பங்களை அளிக்கிறார்.
ஒருவர் தமது செயல்பாடுகளின் விளைவை, தமது செயல்களின் பலன்களை கடவுளிடமே சமர்ப்பிக்கின்ற வழிமுறையை நமக்குக் கிருஷ்ணர் கிடைக்கச் செய்திருக்கிறார். அவர் ஓம் தத் ஸத் என்கிற வழிபாட்டுக் கருவியைத் தந்திருக்கிறார்.
ஓம் தத் ஸத் என்கிற மூன்று வார்த்தைகளும் தெய்வகத்தின் வார்த்தைகள். ஓம் இதி ஏதத் ப்ராமணோ நேதிஸ்தம் நமஹ என்பது முதல் இலக்கை, ஆரம்பத்தைக் குறிக்கிறது. தத் த்வம் அஸி என்பது இரண்டாவது இலக்கை, தொடர்ச்சியைக் குறிக்கிறது. ஸத் ஏவ ஸௌம்யா என்பது மூன்றாவது இலக்கை அல்லது முடிவான விளைவைக் குறிக்கிறது. இந்த மூன்றும் ஒருங்கிணைந்து ஓம் தத் ஸத் என்ற வார்த்தைகளைக் கொடுத்திருக்கின்றன.
அதனால்தான் இந்த வார்த்தைகள் தனிச் சிறப்பை அல்லது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. ஓம் தத் ஸத் - நோக்கி உயரும் மனப்பான்மையோடு செய்யப்படும் தானம், அந்நபரைப் பிரபஞ்ச சக்தியோடு இணைந்திருக்கச் செய்யும்.
இந்த மூன்று வார்த்தைகளும் உணர்த்துவது இதுவே: 'நான் எல்லாவற்றையும் அந்த ஸத்யத்திற்குச் சமர்ப்பிக்கிறேன். நான் கடவுளிடம் எல்லாவற்றையும் சமர்ப்பிக்கிறேன். அதுவே ஸத்யமாக இருக்கட்டும்'.
இதுதான் மகாவாக்கியம், மாபெரும் ஸத்யம். யாகம், தவம், தானம் ஆகிய அனைத்துச் செயல்களிலும் ச்ரத்தையை உறுதிசெய்யும் ஒரு நுட்பமாக இதை அர்ஜுனனுக்கு ஞான குரு ஒப்படைக்கிறார்.
யாகமாகட்டும் தவமாகட்டும், தானமாகட்டும் அல்லது எந்தச் செயலாக இருந்தாலும், அது முழுமையை, கடவுளை அடைவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லையென்றால் அதில் எந்த அர்த்தமுமில்லை.
கிருஷ்ண அனுபவத்தைப் பெறுவது அல்லது உச்சபட்ச விழிப்புநிலைத் தன்மையை அடைவதே எல்லா வேதங்களிலும் இறுதி குறிக்கோளாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றாமல் எந்த வெற்றியோ, நிறைவோ அல்லது மகிழ்ச்சியோ சாத்தியப்படாது.
உங்களின் வாழ்க்கையை
வெற்றிகரமானதாக்கவும், பூரணமாக்கவும்
உங்களுக்கு உதவவும், அப்பாதையில்
முன்னேறுவதற்கான வழிகாட்டுதல்களை
அளிக்கவும்கூடியவர் குரு ஒருவரே.
பிறந்தது முதலே மனிதர்கள், எல்லா
வகையான விக்ரஹங்களையும்,
சிறு தெய்வங்களையும் வழிபட
பழக்கப்படுத்தப்படுகிறார்கள். இதற்குக்
காரணம் என்னவென்றால், அவர்களின்
இயல்பு மூன்று குணங்களில் ஏதோ ஒன்றாக
> உச்சபட்ச விழிப்பு நிலைத்
> தன்மையை அடைவதே
> எல்லா வேதங்களிலும்
> இறுதி குறிக்கோளாகச்
> சொல்லப்பட்டிருக்கிறது.
இருப்பதுதான். மூன்று குணங்ளுள், ஸத்வ குணம், மற்ற குணங்களான ரஜோ மற்றும் தமோ குணங்களைவிட உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால் உச்சபட்ச விழிப்பு நிலைத்தன்மையை அடைவதற்கான பாதை - கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதற்கான பாதை இம்முக் குணங்களுக்கும் அப்பாற்பட்டது.
இங்கேதான் ஒரு குருவின் பங்கு முக்கியமானதாகிறது. அவர் உயர்ந்தபட்ச விழிப்புணர்வின் அனுபவத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளக்கூடிய பாதையில் உங்களை வழிகாட்டி அழைத்துச் செல்கிறார். அதுபோன்றதொரு புரிதல், அதுபோன்றதொரு உணர்ந்தறியும் ஆற்றல் உங்களை நம்பிக்கைக்கு எடுத்துச் செல்வதால், இறுதியில் அது கடவுளின் மீது அன்பாக மலர்கிறது. இதுவே வாழ்வின் நோக்கம், வாழ்வின் உச்ச இலக்கும்கூட.