நீங்கள் அசுரனாக இருந்தால்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
16.4 ஓ ப்ரிதாவின் மகனே, பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், இரக்கமற்ற தன்மை மற்றும் அறியாமை - இவை அசுரத் தன்மையோடு பிறந்திருப்பவர்களின் குணங்களாக இருக்கின்றன.
16.5 தெய்விக இயல்புகளே ஜீவன்முக்திக்கு சாதகமாக அமையும்; அசுர இயல்புகள் பந்தத்திற்குத்தான் வழிவகுக்கும். பாண்டவா, கவலைப்படாதே, நீ தெய்விக ஸம்பத்துகளுடன்தான் பிறந்திருக்கிறாய்.
16.6 இவ்வுலகில் இரு வகையான ஜீவன்கள் படைக்கப்பட்டுள்ளனர். ஒன்று, தேவர்கள். மற்றொன்று, அசுரர்கள். முன்பே உன்னிடம் தெய்விக குணங்களைப் பற்றி மிக விரிவாக விளக்கியிருக்கிறேன். இப்போது அசுர குணங்களைப் பற்றியும் சொல்லி விட்டேன். அதனால் இவற்றை நீ ஆழ்ந்து புரிந்துகொண்டு, பார்த்தா, உன் வாழ்க்கையை ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வாயாக.
16.7 அசுர குணத்தோடு வாழ்பவர்களுக்கு அடிமைத்தனத்திற்கும், சுதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாது. மேலும் அவர்களுக்கு தூய்மையைப் பற்றியும் தெரியாது; நல்லொழுக்கமும் உண்மையும் அவர்களிடம் இருக்காது.
'நான்', 'எனது' - இரண்டுமே மாயையே
அசுர குணம் என்றால் என்ன? கர்வம், பெருமை, இறுமாப்பு, வன்முறை, புகழாசை, அதிகார மோகம்
- இவற்றின் காரணமாகச் செய்யப்படும் அனைத்து செயல்களும் அசுர இயல்புடையன என்று கிருஷ்ணர் சொல்கிறார்.
இராவணனைப் போன்றவர்களின் விஷயத்தில், அவர்கள், தங்களுக்குப் பயனளிக்கக்கூடிய செயல்களையும் செய்துகொண்டதில்லை; மற்றவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய செயல்களையும் செய்ததில்லை. அவர்களுடைய செயல்கள் அனைத்தும், அவர்களுடைய அறியாமையினின்று விளைந்தவை. இறுதியில் அவை, அவர்களுடைய வீழ்ச்சிக்கே வழிவகுத்தன.
இராவணனைப்போல் தவம் செய்யும் மக்களை நான் பார்த்திருக்கிறேன். இராவணன் தவத்தினால் பல சக்திகளையும் வரங்களையும் பெற்றான். ஆனால், அவற்றால் அவனோ, அவனைச் சுற்றியுள்ள மற்றவர்களோ பயனடையவில்லை. அவன், தனக்கும் மற்றவர்களுக்கும் ஒரு அசுரனாகவே மாறிப்போனான்.
வாழ்ந்தாக வேண்டும் என்ற
உள்ளுணர்ச்சியே
'நான்' என்று
அழைக்கப்படுகிறது.
அவன் மற்றவர்களை அழித்து, இறுதியில்
தன்னையும் அழித்துக்கொண்டான்.
அவனுடைய தவங்கள் அனைத்தும், ‘நான்’
என்ற மனப்பாங்கிலிருந்தும், தவத்தி
னால் தனக்கு என்ன கிடைக்கும் என்ற
மனப்பாங்கிலிருந்துமே செய்யப்பட்டன.
மொத்தக் கதையும், அவனுடைய
'நான்', 'எனது' என்ற மனப்பாங்கை
வலுப்படுத்துவதற்காகவே நடந்தது.
தயவுசெய்து ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் என்ன செய்தாலும் - வேத நூல்களைப் படித்தாலும், தாரும் செய்தாலும்,
பொதுச்சேவைகள் செய்தாலும், பூஜைகள் செய்தாலும், வேள்விகள் யாகங்கள் செய்தாலும் அல்லது தியானம் செய்தாலும், அது, ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற மனப்பாங்கை வலுப்படுத்துவதற்காகச் செய்யப்பட்டால், அது உங்களைத் துக்கங்களை நோக்கித்தான் அழைத்துச்செல்லும்.
‘நான்’ என்பதில் கவனம் செலுத்துவது என்பது உள்ளுணர்ச்சியின் உந்துதலே. அது, நாம் வாழ்ந்தாக வேண்டும் என்னும் தேவையிலிருந்து (Survival Instinct) எழும் ஓர் அழைப்பு. நமது கட்டுறு மனப்பாங்குகள் மற்றும் நமது பாதுகாப்பற்ற உணர்வை அடிப்படையாகக்கொண்டு எழும் உயிர்வாழ்வதற்கான ஓர் அழைப்பு.
வாழ்ந்தாக வேண்டும் என்ற
உள்ளுணர்ச்சியே ‘நான்’ என்று
அழைக்கப்படுகிறது. உடைமையாக்கிக்
கொள்ள வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியே
‘எனது’ என்று குறிப்பிடப்படுகிறது.
இவையிரண்டும் மாயை என்பதைப்
புரிந்துகொள்பவர், விழிப்புணர்வுள்ள ஒரு
மனிதராகிறார்.
அப்படிப்பட்ட மனிதர், உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி எந்தவிதத்திலும் உதவாது என்பதையும், ஒருவர் எதை அடைந்திருந்தாலும் அது ஒரு பொருட்டே அல்ல என்பதையும், பூமியில் ‘நிலைத்த வாழ்வு’ என்பது சாத்தியமில்லை என்பதையும் உணர்ந்தே இருப்பார்.
வாழ்வதற்கான உள்ளுணர்ச்சி (Survival Instinct) என்பது முழுக்க முழுக்க மாயையே. ஒருவர் அதிகபட்சமாக எழுபதிலிருந்து எண்பது வயதுவரை வேண்டுமானால் வாழ முடியும். சில சமயங்களில், ஒரு மனிதர் 100 வயதுவரை வேண்டுமானால் அதே அடையாளத்துடன் வாழலாம்.
ஆனால், எவ்வளவு காலங்கள் வாழ்ந்தாலும், ‘உயிர்வாழ வேண்டுமென்ற உள்ளுணர்ச்சி’, மேலும் தன்னை நீட்டித்துக் கொள்ளவே முயற்சிசெய்யும், வாழ்வை நிலையானதாக்கவே, நித்தியமாக்கவே விரும்பும். ஒருவருமே இறக்க விரும்புவதில்லை. அதனால் இயற்கையாகவே, நாம் துக்கத்தை நோக்கித்தான் செல்கிறோம். உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியை வைத்திருக்கும்வரை, நம்மை நாமே மீண்டும் மீண்டும் துக்கப்படுத்திக் கொள்கிறோம்.
பூக்கள் காயப்படுவதில்லை
இன்று காலை ஆச்ரமவாஸி ஒருவர் என்னிடம், மற்றவர்கள் சொல்லும் சிறிய விமர்சனங்கள்கூட, தம்மைக் காயப்படுத்துவதாகவும், தாம் மிகவும் மென்மையானவர் என்றும் சொன்னார்.

உடனே நான், "முதலில், 'நீங்கள் மென்மையானவர்' என்று உங்களுக்குள் உங்களைப் பற்றி நீங்கள் வைத்திருக்கும் கருத்தைக் கைவிடுங்கள். நீங்கள் மென்மையானவர் கிடையாது. மென்மையான மனிதர்கள் சல்லடை போன்றிருப்பர். அவர்கள் வார்த்தைகளை, தங்களைத் தாண்டிச்செல்ல அனுமதித்துவிடுவர்.
கடின மனம் கொண்டவர்களே காயப்படுவர். நீங்கள் காயப்பட்டால், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் கல்லைப் போன்று கடினமானவராக ஊடுருவ முடியாதபடி இருக்கிறீர்கள். அதனால்தான்
ஒரு மென்மையான
மனிதர், வார்த்தைகள்
தன்னை ஊடுருவிச் செல்ல
அனுமதித்துவிடுவார்.
அவர் ஒருபோதும்
துக்கப்படுவதில்லை.
வார்த்தைகள் உங்கள்மேல் பலமாக
மோதுகின்றன. அதனால், நீங்கள்
மென்மையான உணர்வுடையவர் என்று
சொல்லாதீர்கள்," என்று சொன்னேன்.
ஒரு மென்மையான மனிதர்,
வார்த்தைகள் தம்மை ஊடுருவிச் செல்ல
அனுமதித்துவிடுவார். அவர் ஒருபோதும்
துக்கப்படுவதில்லை.
நாம் வார்த்தைகளால்தான் துன்பப்படுகிறோம். நாம் அவற்றை எதிர்த்து தடுத்து நிறுத்தும்போது, அவற்றுக்கு
நம்முடைய சொந்த அர்த்தத்தைக்
கொடுக்கின்றபொழுது துக்கப்படுகிறோம்.
நாம் வார்த்தைகளிலிருந்து பல்வேறு
அர்த்தங்களை எடுத்துக்கொள்ளாதவரை,
நாம் துன்பப்படுவதில்லை. இது, ஒரு
வார்த்தை விளையாட்டு போன்றதே.
நம் அஹங்காரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்த அழகான, இனிமையான பல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவோம். 'நான் கடினமானவன் அதனால் காயப்படுகிறேன்' என்று நாம் சொல்வதில்லை. 'நான் மென்மையானவன், அதனால் காயப்பட்டுவிட்டேன்' என்று நாம், மெருகூட்டப்பட்ட வார்த்தைகளையே உபயோகப்படுத்துவோம்.
தயவுசெய்து, வார்த்தைகளைக்கொண்டு, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். நேரடியான, நேர்மையான வார்த்தைகளையே உபயோகியுங்கள். நான், உலகம் முழுவதிலிருந்து, பலதரப்பட்ட மெருகூட்டப்பட்ட வார்த்தைகளைக் கேட்கிறேன். மக்கள் இதுபோன்ற வார்த்தைகளால், தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கிறார்கள்.
மெருகூட்டப்பட்ட வார்த்தைகளால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். விஷயங்கள் நேரடியாகவும், தெளிவாகவும் இருக்கட்டும். மற்றவர்களை ஏமாற்ற இதுபோன்ற மெருகூட்டப்பட்ட வார்த்தைகளை உபயோகித்தாலும், தயவுசெய்து உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதற்கு இவற்றை உபயோகிக்க வேண்டாம்.
நான் ஒரு சிறிய கதை சொல்கிறேன்.
வணிக ஒப்பந்தக்காரர் ஒருவர், உயர் அதிகாரி ஒருவருக்குப் பந்தயக் கார் ஒன்றை அன்பளிப்பாகக் கொடுக்க நினைத்தார்.
அந்த அதிகாரியோ, "நான் நேர்மையானவன், என்னால் அன்பளிப்புகள் வாங்குவதைப் பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாது," என்று கூறி அந்தக் காரை வாங்க மறுத்தார்.
ஒப்பந்தக்காரரும் அவரை எளிதில் விடுவதாக இல்லை. "நான்
உங்களுக்கு அந்தக் காரை பத்து டாலருக்கு விற்பதாக வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்?” என்று அந்த ஒப்பந்தக்காரர் கேட்டார், உடனே அந்த அதிகாரி, “அந்த விலைக்குக் கிடைத்தால், நான் இரண்டு கார்கூட வாங்குவேன்,” என்றார்.
அதனால் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், வார்த்தைகளை வைத்து விளையாட வேண்டாம். நம்மை நாமே வார்த்தைகளால் ஏமாற்றிக் கொள்ளக்கூடாது. நாம் என்ன சொல்கிறோம் என்பதில், நாம் தெளிவாக இருக்க வேண்டும். உண்மையில் நாம் யார், உண்மையில் நாம் என்ன நினைக்கிறோம் என்பதை நேர்மையான வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டும்.

இராமகிருஷ்ணர் சொல்கிறார்: உங்கள்
வார்த்தைகளும், மனதும் ஒரே
நேர்க்கோட்டில் இருக்கட்டும்.
எதுவாக இருந்தாலும் நேரடியான
வார்த்தைகளால் வெளிப்படுத்த
வேண்டும். அப்போதுதான் 'நம்மிடம்
பிரச்சினை இருக்கிறது' என்பதையாவது
நாம் தெரிந்துகொள்வோம்.
நாம் வண்ணமயமான, மெருகூட்டப்பட்ட வார்த்தைகளையே பேசிக்கொண்டு இருந்தால், நாளடைவில், நமக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதையே நாம் மெல்ல மெல்ல மறந்துவிடுவோம்.
நாம் வார்த்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தால், நமக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதையே நாம் மறந்துவிடுவோம். இது மிகவும் அபாயகரமானது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், 'நமக்குத் தெரியவில்லை' என்கிற உண்மையை அறிந்துகொள்ளும்பொழுது, குறைந்தபட்சம், 'நமக்குத் தெரியவில்லை' என்பதையாவது அறிந்துகொள்வோம்.
'நமக்குத் தெரியவில்லை' என்ற உண்மையையே நாம் அறியவில்லை என்றால், பிறகு, 'நமக்குத் தெரியவில்லை' என்பதைக்கூட அறியாமல் இருப்போம். அந்நிலை நமக்குப் பிரச்சினையைத்தான் உருவாக்கும்.
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், குறைந்தபட்சம், நமக்குப் பிரச்சினை இருக்கிறது என்பதையாவது தெரிந்துகொள்ளலாம். நேரடியான வார்த்தைகளையே உபயோகப்படுத்துவோம்.

இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள குறைந்த இடைவெளி என்பது, அவையிரண்டுக்கும் இடையே உள்ள நேர்க்கோடுதான். இரண்டு புள்ளிகளுக்கு இடையே, வளைந்து, வளைந்து செல்லும் ஒரு கோட்டையும், நேர்க்கோடு ஒன்றையும் போட்டுப் பாருங்கள். வளைந்து வளைந்து செல்லும் கோட்டின் நீளம் அதிகமாகவே இருக்கும். எதை அடைய வேண்டுமென்றாலும், ஒளிவு மறைவு அற்ற நேர்மையான வழி ஒன்றே, அதற்கான தூரம் குறைந்த வழி! வேறெந்த வழியும் உதவாது.
மரணத்திடம் சரணடையுங்கள், பயத்தை வெல்லுங்கள்
கிருஷ்ணர் இங்கு, ஒன்றன்பின் ஒன்றாக, எல்லாத் தெய்விகப் பண்புகளையும் சொல்கிறார். எல்லாப் பண்புகளைப் பற்றியும் விளக்க வேண்டியதில்லை. அதில் ஒரு சிலவற்றை மட்டும் எடுத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு, பயமின்மையை எடுத்துக்கொள்வோம்.
நாம், ‘நாம் வாழ வேண்டும்’, ‘நம் வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்ற தூண்டுதல் உணர்ச்சியைச் சுமந்துகொண்டிருக்கும்வரை, நமக்குப் பயமும் இருக்கும்.
உயிர்வாழவேண்டும் என்ற விருப்பம்
நமக்குள் இருக்கும்வரை, நம்
உணர்விலிருந்து பயத்தை எடுக்க
முடியாது. பிரபஞ்ச இருப்புத் தன்மையிடம்
சரணடைவது, மரணத்திடம் சரணடைவது
ஒன்றே, பயமின்மையை அடைவதற்கான
ஒரே வழி.
கடோபநிஷத், இது ஒரு அழகான உபநிஷத்.
இதை அனைவரும் கண்டிப்பாகப் படிக்க
வேண்டும். வேதத்தின் சாரமான வேதாந்தம்
> இரண்டு புள்ளிகளுக்கு
இடையே உள்ள குறைந்த
இடைவெளி என்பது,
அவையிரண்டுக்கும்
இடையே உள்ள
நேர்க்கோடுதான்.
என்னும் அருமையான அமைப்பிலிருந்து,
வேத கால ரிஷிகளால் கண்டுபிடிக்கப்பட்ட
ஒரு மரண அறிவியல். அவர்கள்,
இறப்பைப் பற்றிய அறிவியலை
அறிந்துகொள்ளவே மிக ஆழமான
ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.
மேலைநாடுகள், தங்கள் மொத்த
சக்தியையும், வாழ்க்கையைப் பற்றி
அறிந்துகொள்வதற்காக அர்ப்பணித்து
இருக்கின்றன.
கீழைநாடுகள், தங்கள்
மொத்த சக்தியையும்,
மரணத்தைப் பற்றி
அறிந்துகொள்வதற்காகவே
அர்ப்பணித்து இருக்கின்றன!
ஆனால், கீழைநாடுகள், தங்கள் மொத்த சக்தியையும், மரணத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காகவே அர்ப்பணித்து இருக்கின்றன! அதனால்தான் ரிஷிகள், தங்கள் மரணத்திற்குப் பிறகும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆம், அவர்கள் மரணத்திற்குப் பிறகும் கூட வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!
அவர்கள் எப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், இறப்பிற்குப் பிறகும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு கலையை, அவர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆனால், பொருள்சார்ந்த இவ்வுலகில் சிக்கிக்கொண்ட மக்கள், வாழ்ந்துகொண்டிருந்தாலும்கூட, ஒவ்வொரு நிமிடமும் இறந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தக் கடோபநிஷத், மரணத்தைப் பற்றிய அறிவியல்.
நசிகேதன் என்ற இளஞ்சிறுவனைப் பற்றிய ஒரு அழகான கதை.
அவன் மரணத்தின் கடவுளான யமனைச் சந்திக்க யமலோகத்திற்கே செல்கிறான். அச்சமயத்தில் யமன் அங்கு இல்லை. அவருடைய பணியாளர்கள் நசிகேதனை வரவேற்று, யமபுரிக்குள் வருமாறு கேட்டுக்கொள்கின்றனர். ஆனால், நசிகேதனோ, தான் யமனுடைய வருகைக்காகக் காத்திருக்கப்போவதாகச் சொல்லி, யமபுரியின் வாயிலிலேயே காத்திருக்கிறான். மூன்று நாட்களுக்குப் பிறகு தம் இருப்பிடம் திரும்பிய யமதர்மர், விஷயமறிந்து, நசிகேதனை வரவேற்றார்.
‘யமன் அவனை வரவேற்றார்' என்ற இந்த இடத்தில், நாம் ஒன்றைக் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும். யமனுடைய இருப்பிடத்திற்கு
யாரும் போக மாட்டார்கள். அவர்தான் நம்மைத் தேடிவருவார்! அவரிடமிருந்து நாம் தப்பிக்க முயற்சிசெய்யும்வரைதான், நாம் பொதுவாகத் தெரிந்துவைத்திருக்கும் ஒரு மரணதேவனாக அவர் இருப்பார்.
அவர், நம்முடைய ‘நான்’ மற்றும் ‘எனது’ எனப்படும் நம்முடைய எல்லா அடையாளங்களையும் உடைமைகளையும் எடுத்துக்கொண்டுவிடுவார். அதன்பிறகு, நம்மால் காசோலையில் கையெழுத்து இடமுடியாது, நம் வாகனத்தை நாம் ஓட்டிச்செல்ல முடியாது. நமக்கு மரணம் வரும்போது, நம்முடையது என்று நாம் நினைத்திருந்த செல்வம், சொந்தம், வங்கி இருப்பு என எல்லாமுமே நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும்.
‘நான்’ என்று நினைக்கப்படுகின்ற இந்த
உடல்கூட எடுத்துக்கொள்ளப்பட்டு விடும்.
ஆனால், நாம் நசிகேதனைப்போல்
மரணத்தை நோக்கி பயமின்றிச்
சென்றால், மரணம் நம்மை வரவேற்கும்.
யமன், நம்மை ஒரு விருந்தாளியாகக்
கவனித்துக்கொள்பவராகவும், நம்மை
மகிழ்விப்பவராகவும் இருப்பார்.
நாம் மரணத்தை நோக்கி
பயமின்றிச் சென்றால்,
மரணம் நம்மை
வரவேற்கும். யமன், நம்மை
ஒரு விருந்தாளியாகக்
கவனித்துக்
கொள்பவராகவும்,
நம்மை மகிழ்விப்பவராகவும்
இருப்பார்.
இந்தக் கதையில், யமன், நசிகேதனை அன்புடன் வரவேற்று கவனித்துக்கொள்கிறார். முதல் விஷயம், அவனை ஒரு அன்பான விருந்தாளியாகக் கவனித்துக்கொள்கிறார். அடுத்து, அவன் வேண்டும் மூன்று வரங்களை அளிக்கிறார்.
முதல் வரமாக நசிகேதன், “நான் மீண்டும் என் குடும்பத்திற்குத் திரும்பிச் செல்லும்போது, என் தந்தை என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும்,” என்று யமனிடம் நல்ல உறவுமுறையை வேண்டுகிறான். யமனும் நல்ல உறவுமுறை இருக்க ஆசீர்வதிக்கிறார்.
அடுத்து இரண்டாவது வரமாக நசிகேதன், வளமான வாழ்வை வேண்டுகிறான். யமன், அவனுக்கு பெருஞ்செல்வத்தை வழங்குகிறார். மேலும், செல்வம், மகிழ்ச்சி மற்றும் சுகங்களை எப்படி உருவாக்கிக்கொள்வது என்றும் வழிகாட்டுகிறார். இப்பொழுது யமன், கடவுளைப்போல் நடந்துகொள்கிறார். முதலில் யமன், நல்லதொரு விருந்தோம்புபவராக நடந்துகொண்டார். பிறகு ஒரு கடவுள்போல் நடந்துகொள்கிறார்.
மூன்றாவது வரமாக நசிகேதன், மரணத்தைப் பற்றிய இரகசியத்தை விளக்குமாறு வேண்டுகிறான். சிறுவனின் ச்ரத்தையும், துணிவும் யமனுக்கு பெருமகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. அதனால், இறுதியில் அவர், நசிகேதன் வேண்டிய ஆத்ம ஞானத்தை அளிக்கிறார். இப்போது யமதருமர், ஒரு ஞானகுருவைப்போல நடந்துகொள்கிறார்.
மரணம், நம்மை ஒரு அதிதியாக வரவேற்கும்
வாழ்க்கையின் முரண்பாட்டைப் பாருங்கள். நாம் மரணத்திலிருந்து தப்பித்து ஓடினால், யமன் நாம் எங்கிருந்தாலும் துரத்திப்பிடிக்கிறார். எதையெல்லாம் ‘நான்’, ‘எனது’ என்று நினைத்தோமோ அந்தச் சொந்தங்கள், செல்வம் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறார்.
ஆனால், இங்கே நசிகேதன் விஷயத்தில், முழுச் சூழ்நிலையும் அப்படியே மாறியிருக்கிறது! நாம் யமனிடம் சரணடைந்தால், நாம் அவரை நோக்கிப் போனால், நாம் அவருடைய அன்பான விருந்தாளி ஆகிவிடுவோம், நம்மை அவர் அன்பாக வரவேற்பார்.
நாம் அவரைப் பற்றிக் கற்பனைசெய்து வைத்திருப்பதுபோல், அவர் ஒன்றும் பயங்கரமானவர் அல்ல. நாம் யமனை, கருமை நிறங்கொண்ட பருத்த தேகம், பெரிய மீசை மற்றும் கையில் பாசக்கயிற்றுடன் எருமையின்மேல் அமர்ந்து, ஆடி அசைந்து வருபவராகவும், இரக்கமற்ற, அஹங்காரம் பிடித்த பயங்கரமான ஒரு அரக்கனைப்போலவும் உருவகப்படுத்தி வைத்திருக்கிறோம்.
இங்கு முழுக் காட்சியும் மாறிவிடுகிறது.
அவர் நசிகேதனை, "வருக, வருக! அக்னி
வடிவானவனே," என்று வரவேற்கிறார். ஒரு
விருந்தினர் என்பவர், நாம் வணங்குகின்ற
அக்னியின் வடிவமாகக் கருதப்படுகிறார்.
அதிதி தேவோ பவ - ‘விருந்தினர் கடவுள்’
என்று வேத பாரம்பரியம் பகர்கிறது! வேத
பாரம்பரியத்தில், விருந்தினரொருவர்
கடவுளைப்போன்று மதிக்கப்படுகிறார்.
அ + திதி என்றால், தாம் வரும் தேதி அல்லது நேரம் (திதி) பற்றி முன்கூட்டியே நம்மிடம் தெரிவிக்காமல், நம் இல்லத்திற்கு வருகை தரும் நபர் என்று பொருள்.
மின்னஞ்சலிலோ (Email), அலைபேசியிலோ, பேக்ஸிலோ (Fax) தகவலைச் சொல்லிவிட்டு வருபவரை, நாம் விமான நிலையத்திற்குச் சென்று, அவருக்காக எதிர்பார்த்துக் காத்திருந்து, அவரை நம் இல்லத்திற் கு அழைத்து வந்தால், அவர் அதிதி அல்ல, அவர் நம் உறவுக்காரர். நம்மால் கவனித்துக்கொள்ளப்பட வேண்டியவர். அவர் வரவேற்கப்பட வேண்டியவர். இது முற்றிலும் வணிகம் போன்றது. ஆனால், அதிதி என்பவர் வேறு.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், தற்போது நமது உறவுகள் எல்லாம் ஏறக்குறைய வணிகம்போலத்தான் இருக்கிறது. அதிதி என்பவர் நம் வாழ்க்கையில், நேரடியாக, திறந்த தன்மையோடு வருபவர். பெரிய பிரச்சினை என்னவென்றால், இன்று அதிதி என்ற கோட்பாடே செத்துவிட்டது.
இந்திய கிராமங்களில் பகல் நேரங்களில், எல்லா வீட்டுக் கதவுகளும் திறந்தே இருக்கும். நான் வளர்ந்த கிராமத்தில் எல்லாக் கதவுகளுமே திறந்தே இருந்தது. ஒரு குழந்தை எந்த வீட்டிற்குள் வேண்டுமானாலும் போய் சாப்பிடலாம். இன்றைய மக்களால் இதை நம்ப முடியாது.
மக்கள் இந்தியாவை ஏழை நாடு என்று சொல்லும்போது, நான் அவர்களிடம், “நீங்கள் நினைப்பதுபோல் இல்லை, உங்களுக்கு இந்திய கலாசாரத்தின் மதிப்பைப் பற்றித் தெரியவில்லை,” என்பேன்.
உதாரணத்திற்கு, வளர்ந்த நாடுகளில், வியாபார நிமித்தமாக ஒரு புதிய நகரத்திற்குச் செல்லும்போது, உணவு விடுதிகளிலும் தங்குமிடங்களிலும், நாம் அதிகப் பணம் செலவுசெய்ய வேண்டியுள்ளது.
> அதிதி தேவோ பவ -
> ‘விருந்தினர் கடவுள்’ என்று
> வேத பாரம்பரியம் பகர்கிறது!
ஆனால், இந்தியாவில் அப்படியல்ல, நாம் போகுமிடத்தில், நமக்கு ஒரு நண்பர் இருந்தால், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்புபோதும், அங்கு எல்லா ஏற்பாடுகளும் நமக்காகச் செய்யப்பட்டு இருக்கும்.
இப்போது இந்தியாவிலும்கூட, கலாச்சார ஊடுருவல்களால் விருந்தினரை உபசரிக்கும் பண்பு அழிந்துகொண்டு இருக்கிறது. குறைந்தபட்சம் கிராமங்களில், வேத பாரம்பரியம் உயிர்ப்போடு உள்ள இடங்களில், இந்தப் பண்பாடு இன்னும் உயிரோடு இருக்கிறது.
யார் விருந்தினராக இருந்தாலும், அவரைக் கடவுளாகவே மதிப்பதே, அதிதி தேவோ பவ!
| நாம் மரணத்தை நோக்கித் திரும்பினால், நாம் கற்பனைசெய்து வைத்திருப்பதைப் போன்ற ஒரு மரணத்தை நம்மால் பார்க்க முடியாது. | யமன் நசிகேதனிடம் சொல்கிறார், "நீ என் விருந்தினன், வைச்வாநராக்னி (வழிபடப்படும் அக்னி) ரூபத்தில் என் வீட்டிற்கு வந்திருக்கிறாய்!" ஸமயகுருமார்கள் தெய்விக அக்னியின் வடிவமாகக் கருதப்படுகிறார்கள். "தெய்விகத் தன்மையின் வடிவமாக நீ என் வீட்டிற்கு வந்திருக்கிறாய். நான் உனக்கு மரியாதை செலுத்துகிறேன். நீ இங்கு வரும்போது, உன்னை வரவேற்க, கடந்த மூன்று நாட்களாக, நான் இங்கு இல்லாதது குறித்து என்னை மன்னித்துவிடு," என்றார் யமதர்மர். |
மரணத்தை நாம் தேடிச்சென்றால், மரணம் அங்கு இருப்பதில்லை
பொதுவாக நாம், யமனைத் (மரணம்) தவிர்ப்போம். பொதுவாக, நாம் அவரிடம் இருந்து தப்பிக்கவே முயற்சிசெய்வோம். ஆனால், நாமே அவரைத் தேடிப்போனால், நாம் பயப்படுவதுபோல, அவர் அங்கு இருப்பது இல்லை. இதுதான் அந்தக் கதையின் மொத்த சாரம்.
பொதுவாக அவர்தான் நம்மைத் துரத்திக்கொண்டிருப்பார். நாம் அவரை விட்டு ஓடிக்கொண்டிருப்போம். அவர் நம் பின்னால்தான் இருக்கிறார்!
ஆனால், நாம் பின்னால் திரும்பி, அவரை நோக்கிச் சென்றால், நாம் ஒன்றைத் தெரிந்துகொள்ளலாம் அவர் அங்கு இல்லை என்பதை!
மூன்று நாட்களாக, நசிகேதனால் எமனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இதுதான் குறிப்பிடத்தக்க முக்கியமான அம்சம். இந்தக் கதை சிறப்பு மிக்கது.
இதில் மிகப்பெரும் ஒரு ஸத்யம் இருக்கிறது. நசிகேதன் மரணத்தை நோக்கிச் சென்றபோது, மரணம் அங்கு இல்லை. இதிலிருந்து வெளிப்படும் ஸத்யம் என்னவென்றால், நாம் மரணத்தை நோக்கித் திரும்பினால், நாம் கற்பனைசெய்து வைத்திருப்பதைப் போன்ற ஒரு மரணத்தை நம்மால் பார்க்க முடியாது.
நாம் அதனிடம் சரணடையும்போது,
நாம் மரணத்தைப் பற்றி என்னவெல்லாம்
கற்பனைசெய்து கொண்டிருக்கிறோமோ,
அப்படி அது இருப்பதில்லை.
இப்போது நம் பயத்தின் காரணமாக,
நாம் அவரிடமிருந்து தப்பிக்க
முயற்சிசெய்கிறோம். நாம் தப்பிக்க முயற்சி
செய்வதால், அவர் நம்மைத் துரத்துகிறார்.
இது ஒரு நச்சுச்சுழல் போன்றது.
நாம் இந்தக்
கடோபநிஷத் கதையைப்
புரிந்துகொண்டால்,
மரணத்தைப் பற்றிய
மொத்தக் கருத்தும்
உணர்வுமாற்றம்
பெற்றுவிடும்.
நாம் இதைப் புரிந்துகொண்டு சரணடைந்த விநாடியே, நாம் கற்பனைசெய்து வைத்திருப்பதைப் போன்றதொரு யமன் அங்கு இருப்பதில்லை. அதனால் நாம் அளப்பரிய தைரியம் பெறுவோம். அந்தத் தைரியம், அவரை மேலும் தெளிவாக எதிர்கொள்ள வைக்கும். அப்படி நாம் அவரைத் தெளிவாக எதிர்கொண்டால், நமக்குத் தைரியம் அதிகரிக்கும். இதைத்தான் தர்ம சக்ரம் என்கிறோம்.
நாம் இப்போது அனுபவித்துக்கொண்டு இருப்பது அதர்ம சக்ரம், அது ஒரு நச்சுச் சுழல். நாம், இந்தத் தவறான நச்சுச் சுழற்சியை சரியான, உயர்வான சுழற்சியாக மாற்றலாம். அதர்ம சக்ரத்தை, தர்ம சக்ரமாக மாற்றலாம்.
நாம் இந்தக் கடோபநிஷத் கதையைப் புரிந்துகொண்டால் மரணத்தைப் பற்றிய மொத்தக் கருத்தும் உணர்வுமாற்றம் பெற்றுவிடும். முதல் விஷயம், நாம் அவரைத் தேடும்போது, அவர் அங்கு இருப்பதில்லை.
இரண்டாவது விஷயம், அவர்
நம்முன் தோன்றும்போது, அவர், நாம்
கற்பனைசெய்து வைத்திருப்பதுபோல்,
பயங்கொடுப்பவராக, நமது உடை
மைகளையெல்லாம் எடுத்துச்செல்லக்
காத்திருப்பவராக அல்லாமல், விருந்தினரை
இனிமையாக உபசரிப்பவராகவும்,
நம்மைக் கருணையுடன்
வரவேற்பவராகவும் இருக்கிறார்.
தற்கொலை
என்பது மரணத்தை
எதிர்கொள்வதல்ல. அது
வாழ்க்கையில் இருந்து
தப்பித்து ஓடுவது.
மேலும் அவர், கடவுளைப்போல், நமக்கு இனிமையான உறவுமுறைகள், செல்வம் என அனைத்தையும் அளித்து, இறுதியில் ஆத்ம ஞானத்தையும் வழங்கி ஆசீர்வதிக்கிறார். உடனே நாம், ‘மரணத்தை நோக்கி எப்படிப் போவது' என்று கேட்கலாம். உதாரணத்திற்கு, நாம் தற்கொலை செய்துகொள்ளலாமா? என்று கேட்கலாம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், தற்கொலை செய்துகொள்வது என்பது மரணத்தை எதிர்கொள்வதாகாது. தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், தற்கொலை செய்துகொள்பவர்கள் பயமற்றவர்கள் அல்ல, அவர்கள் கோழைகள். அவர்களால் இந்த வாழ்க்கையை வாழ முடியாததால்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மரணத்தை எதிர்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் வாழ்க்கையிலிருந்தே தப்பித்து ஓடுகிறார்கள்.
தற்கொலை என்பது மரணத்தை எதிர்கொள்வதல்ல. அது வாழ்க்கையில் இருந்து தப்பித்து ஓடுவது. வாழ்க்கையில் இருந்து தப்பித்துக்கொண்டு ஓடுவது வேறு, மரணத்தை எதிர்கொள்வது என்பது வேறு. இவையிரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டது.
பயத்தைப் பயமில்லாமல் எதிர்கொள்ளுங்கள்
நமக்குள் பயம் உருவாகும்போது அல்லது பயம் என்பது நிகழும்போது அதை எதிர்கொள்வதற்கான ஒரேவழி, அதை முழுமையாக, ஆழமாக அனுபவித்துக் கடப்பதுதான். உங்களைப் பயமுறுத்துவதற்குப் பயத்திற்கு அனுமதி அளிக்காதீர்கள். சிலர் என்னிடம், ‘தங்களுடைய பயங்களைக்குறித்து தங்களுக்குப் பயமாக இருக்கிறது' என்று சொல்வதுண்டு. பயமே தொந்தரவு கொடுப்பதுதான். பிறகு ஏன் பயங்களைக்குறித்து பயந்து, மேலும் தொந்தரவுக்குள்ளாகிறீர்கள். உங்கள்மீது பயத்தின் நிழல் படிய அனுமதிக்காதீர்கள்.
உங்களுடன் அமருங்கள், உங்களுடன் இருங்கள். உங்களுக்குள் இருக்கும் பயத்தை மேலே வருவதற்கு அனுமதியுங்கள். எத்தனை நாட்களுக்கு உங்கள் பயங்களைத் தள்ளிப்போடுவீர்கள். எத்தனை நாட்களுக்கு உங்கள் பயங்களைக் கட்டுப்படுத்திவைப்பீர்கள்? எத்தனை நாட்களுக்கு பயங்களிடம் இருந்து தப்பித்து ஓடுவீர்கள்? அதை மேலே வர அனுமதியுங்கள்.
உங்கள் மொத்த இருப்புத் தன்மையே அதனால் ஆட்டம் காணலாம். கண்களில் கண்ணீர் வழியலாம், உங்களுக்குள் ஆழமான மன அழுத்தம் வரலாம். இவை எல்லாமே நடக்கட்டும். நீங்கள், அந்தப் பயத்தை நிகழ அனுமதித்தாலும் அனுமதிக்காவிட்டாலும், பயம் நிறைந்த நிகழ்ச்சிகள் நடந்தே தீரும். அதனால் அதைத் தெளிவோடும், தைரியத்தோடும், விழிப்புணர்வோடும் எதிர்கொள்வதே சாலச்சிறந்தது.
நமது பயங்களை ஐந்து முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
முதலாவது, நமது செல்வங்களையும், சுகங்களையும் இழந்து விடுவோமோ என்ற பயம். இரண்டாவது, நமது உடலின் ஒரு பாகத்தை விபத்தினாலோ அல்லது வியாதியினாலோ இழந்து விடுவோமோ என்ற பயம். மூன்றாவது, நம் அன்பிற்குரியவர்களை, நமக்கு நெருக்கமானவர்களை இழந்துவிடுவோமோ என்ற பயம். நான்காவது நமது மனநிலை பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம். ஐந்தாவது, தெரியாத ஒன்றைப் பற்றிய பயம் - அதாவது மரணம், பேய்கள், கடவுள், நரகம், சொர்க்கம் போன்ற விஷயங்களைப் பற்றிய பயம்.
இவையே நாம் நம் வாழ்க்கையில்
எதிர்கொள்ளும் ஐந்து வகையான,
பொதுவான பயங்கள். நமது மற்ற எல்லாப்
பயங்களுமே இந்த ஐந்து பிரிவிற்குள்
அடங்கும்.

எல்லாப் பயங்களையும் மேலே வர அனுமதியுங்கள். உங்கள் மனம் அந்தப் பயங்களை நேரிடையாக எதிர்கொள்ளட்டும். உங்கள் மனம் எல்லாவற்றையும் பேசட்டும். எல்லாம் வெளியே வரட்டும். அதற்கு அரைமணி நேரம் கொடுங்கள். அது தானாகவே நிகழட்டும். நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகலாம். கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடலாம். உங்கள் முழு உடலும் அதிரலாம்.
எல்லாமே மேலே வரட்டும். உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஏதாவது செய்ய முடியும் என்றால், அதை நீங்கள் செய்திருப்பீர்கள். உங்களால் ஏதும் செய்ய முடியாது என்பதை, உங்கள் சுய-இருப்புத்தன்மை மிகத் தெளிவாக நிரூபிக்கும். அதனால்தான் நீங்கள் எதுவும் செய்யாமல் இருக்கிறீர்கள். பயத்தை நிகழ அனுமதியுங்கள். அது உங்கள் உணர்வுக்குள் வரட்டும்.

பயம் அடக்கப்படாமல், உங்களுடைய
விழிப்புணர்வு நிலைக்கு வரட்டும்.
எல்லாப் பயங்களும் உண்மையாகவதற்கு
சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்பதை,
முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்.
உங்கள் செல்வம் திருடப்படலாம். உங்களுக்கு விபத்து நடக்கலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் இறக்கலாம். அல்லது நீங்களேகூட இறக்கலாம். எல்லாச் சாத்தியக்கூறுகளும் உண்மைதான். ஆம், நீங்கள் என்ன செய்ய முடியும்? இதுதான் வாழ்க்கை. இதைத்தான் ‘உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்வது’ என்று சொல்கிறோம்.
சிறு குழந்தைகளுக்குத்தான், உண்மையை ‘உள்ளபடியே’ எதிர்கொள்ள, கனவுகளும் கற்பனைகளும் தேவை. ஆனால், நமக்குப் ‘புரிதலே’ தேவை.
நாம் ஸத்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது. எந்தளவுக்கு நாம் அதிகமாகத் தப்பிக்க முயற்சிக்கிறோமோ, அந்தளவுக்கு அதிகமாக அது, நம்மைத் துரத்தி வேட்டையாடும்.
ஆனால், நமது பயங்களை வெளியே வர அனுமதித்தால், சட்டென அவை நம்மைவிட்டு விலகுவதைப் பார்க்கலாம். அதன்பிறகு நாம் மேலும் பொறுப்புமிக்கவர்களாகவும், மேலும் உத்வேகமுடையவர்களாகவும் மாறிவிடுவோம்.
வாழ்க்கையைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள்
நமது இரண்டாவது நிலை தியான நிகழ்ச்சியான, நித்யானந்த ஸ்புரண தியான அனுபவ முகாமில், மரண அனுபவத்தை பாவனை செய்கின்ற ஒரு தியானம் செய்யப்படுகிறது.
இது, என் தனிப்பட்ட மரண அனுபவத்தை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு தியானம். மக்கள் இந்தத் தியானத்திற்குள் நுழைய முதலில் பயப்படுவார்கள். ஆனால், இந்த அனுபவத்தில் இருந்து வெளியே வரும்போது, தாங்கள் முற்றிலும் புதிதாகப் பிறந்ததையும், தெளிவாக இருப்பதையும் உணர்வார்கள்.
"நான் இதுவரை நிறைய விஷயங்களைத் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்துள்ளேன். இப்போது, நான் வீட்டிற்குத் திரும்பியவுடன், முதல் வேலையாக, அவை அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்று முடிவுசெய்து விட்டேன்," என்று சொல்லுவார்கள். இந்த மரண தியானத்தில் இருந்து வெளியே வந்தவுடன், இயற்கையாகவே அவர்கள் உத்வேகம் மிக்கவர்களாக மாறியிருப்பார்கள்; உறவுகளின் மதிப்பைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.
இந்தத் தியானத்திற்குப் பிறகு பலர் என்னிடம் வந்து, தங்கள் வாழ்க்கைத் துணைவருக்கு மரியாதை கொடுக்கத் தொடங்கி விட்டதாகவும், அவர்களை இனி ஒருபோதும் அலட்சியமாக நடத்தப்போவதில்லை என்றும் சொல்வார்கள்.
நாம், மரணத்தின் சாத்தியக்கூறுகளைப் பற்றி நினைக்கத் தொடங்கினால், வாழ்க்கையையோ வாழ்க்கைத் துணைவரையோ சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். உண்மையிலேயே நாம் அதற்குப்பின்தான் வாழவே தொடங்குவோம்.
அதேபோல், நமது உடல்நலம் நம்மிடம்
இருந்து எடுத்துக்கொள்ளப்படும்
சாத்தியக்கூறுகளைப்பற்றி நினைக்கத்
தொடங்கினால், நம் உடல்நலத்தைச்
சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.
நாம் வாழ்க்கையை உத்வேகத்துடன் வாழ
ஆரம்பிப்போம்.
மரணத்திற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன, இந்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் நம்மிடமிருந்து பறித்துக் கொள்ளப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்ற ஸத்யம் நம் இருப்புத் தன்மைக்குள் நுழைந்தால், எந்த விஷயத்தையுமே நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம். நாம், நமது பொறுப்புகளையும், இந்தப் பிரபஞ்ச இருப்புத்தன்மை நம்மீது பொழிந்த வாழ்க்கை என்னும் பரிசையும் உணர்ந்து போற்றுவோம்.
நன்றி உணர்வுடன் இல்லாவிட்டால், வெளியுலக சுகங்கள் அனைத்தும் நமக்குள் வெறுமையையே ஏற்படுத்தும்.
எப்படி நாம் விஷயங்களை நன்றியுணர்வு இல்லாமல் எடுத்துக் கொள்கிறோம் என்பதைக் காட்டுவதற்குச் சின்ன கதை ஒன்றைச் சொல்கிறேன்.
எல்லாம் இருந்துவிட்டால் மட்டும் மகிழ்ச்சி கிடைத்துவிடுவதில்லை
ஓர் ஊரில் ஒரு அரசர் இருந்தார். செல்வம், ஆடம்பர வசதிகள் மற்றும் சுகபோகங்கள் என அவர் என்ன கேட்டாலும், அவை அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. அனைத்து சந்தோஷங்களையும் அனுபவிப்பதற்கு என்னவெல்லாம் வேண்டுமோ, அவை அனைத்தும் அவரிடம் இருந்தன. இனிமுயற்சிசெய்து பெற வேண்டும் என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை.
இப்படி நாற்பத்தைந்து வருட காலங்கள், ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்த பிறகு, அவருக்கு வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது, எல்லா உற்சாகமும் இனிமையும் குறைந்து போனது..
இங்கு, நான் ஒன்று சொல்கிறேன், உங்களுக்கு எல்லா உலகியல் சுகங்களும் கிடைத்துவிடும்போது, விரும்பிய அனைத்துமே உங்களுக்குக் கிடைத்துவிடும்போது, உங்களுக்குள் ஒரு மிகப்பெரிய வெறுமையும் சலிப்பும் ஏற்படும்.
நீங்கள் விரும்பியதெல்லாம் உங்களுக்குக் கிடைக்காதிருந்தாலாவது, அவற்றை அடைய வேண்டும் என்ற ஆர்வமாவது மிச்சம் இருக்கும். நீங்கள் அடைய வேண்டிய குறிக்கோள்கள் என சில இருக்கும். அதை அடைவதற்காக வேலைசெய்வீர்கள். வாழ்க்கையைத் தொடர்வதற்கான தேவையும் அவசியமும் இருக்கும்.
ஆனால், அனைத்துமே உங்களிடம் இருந்தால், நீங்கள் அடைய வேண்டியதென்று ஒன்றுமில்லை, பிறகு எதற்காக நீங்கள் வாழவேண்டும்? எதற்காகவும் இல்லை! அதனால் உங்களிடம் அனைத்தும் இருந்துவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள் என்று கற்பனைசெய்து கொள்ளாதீர்கள்.
இந்த அரசர், மிகச் சுலபமாக நரகத்திற்குள் நுழைந்துவிட்டார். ஏனென்றால், அவரிடம் அனைத்தும் இருந்தன. அவர் முழுமையாக மன அழுத்தத்திற்கும் சலிப்பிற்கும் ஆளானார். அவர், தம் அறையை விட்டுக்கூட வெளியேவர விரும்பவில்லை.
ஒரு வருடமாக ஒரே அறைக்குள்ளேயே முடங்கிப்போயிருந்த அவரை அறையிலிருந்து வெளியே அழைத்து வரவும், அவரை உத்வேகப்படுத்துவதற்கும் அவருடைய மந்திரிகள் தங்களால் இயன்ற அளவுக்கு முயற்சிசெய்து பார்த்தார்கள்.
நாடுமுழுவதிலுமிருந்து சொகுசுப்
பொருட்களையும், சாத்தியமான
எல்லா சந்தோஷங்களையும் அவர்கள்
கொண்டுவந்தார்கள். ஆனால், அவை
எதுவுமே அரசருக்குள் எந்தவொரு
தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
"எனக்கு எந்தப் பொருளின் மீதும்

கொஞ்சம்கூட ஆர்வமில்லை,” என்று சொல்லிவிட்டார்.
கடைசியாக அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். “அரசே, ஒரு ஜ்ஞானகுரு காட்டில் இருக்கிறார். அவரால் உங்களுக்கு உதவ முடியும் என்று நினைக்கிறோம். நீங்கள் அவரை நேரில்சென்று பார்த்துப்பேசி தெளிவுபெற ஏன் முயலக்கூடாது? உங்களை மனச்சோர்வில் இருந்து அவர் மீட்டுவிடுவார். பலரும் அவரால் நன்மையடைந்து இருக்கிறார்கள்,” என்று சொன்னார்கள்.
அதற்கும் அரசர், “எனக்கு எங்கும் போக விருப்பமில்லை,” என்று சொல்லிவிட்டார்.
ஒருவர்
ஞானமடைந்தவர்தானா
என்பதை உங்கள்
பட்டறிவைக்கொண்டு
கண்டுபிடிக்க முடியாது.
மந்திரிகளும் விடாமல் தொடர்ந்து,
“ஒருமுறை அவரைக் கண்டு
பேசிப்பாருங்கள்,” என்று மீண்டும்மீண்டும்
வேண்டினார்கள்.
அரசரும், “நீங்கள் அனைவரும் அவரைப்
பற்றி இந்தளவுக்கு எடுத்துச்சொல்வதால்,
ஒருமுறை அவரை நேரில்சென்று
பார்க்கிறேன்,” என்று காட்டிற்குச் சென்று
ஜ்ஞானகுருவைக் காண ஒப்புக்கொண்டார்.
குருவைப் பரீட்சித்துப் பார்க்கவே விரும்புகிறீர்கள்
அதேபோல் அவர் காட்டுக்குச் சென்று ஜ்ஞானகுருவைச் சந்தித்தார். அரசருக்குள் நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தன. குருவை நம்ப விருப்பமில்லாமல் இருந்தார். ‘இவர் ஞானமடைந்தவர்தானா, இல்லையா என்று யாருக்குத் தெரியும்?’ என்று நினைத்தார்.
இருப்பினும், அவர் நேரடியாக குருவைப் பார்த்து, “என்னுடைய மனச்சோர்வில் இருந்து நான் விடுபட, உங்களால் எனக்கு உதவிசெய்ய முடியுமா?” என்று கேட்டார்.
குருவைப் பரீட்சித்துப் பார்க்க மக்கள் இது போன்ற கேள்விகளைத்தான்

கேட்பார்கள். அவர்கள் கற்றுக்கொள்ள
வருவதில்லை. அவர்கள்
பரிசோதிக்கவே, எடைபோடவே
வருகிறார்கள்.
பெரும்பாலான மக்கள் என்னிடம் கேட்கும் கேள்வி இதுவே: "கடவுளை அடைவதற்கான சில வழிகளை எங்களுக்குக் காட்ட முடியுமா?" இதை யும் அவர்கள் ஒருவித பரபரப்புடன்தான் கேட்பார்கள்.
அப்போது அவர்களிடம் நான் கேட்பதெல்லாம் இதுவே: "நான் முயற்சி செய்கிறேன். நீங்கள் ஏன் சிறிது நேரமாவது தளர்வாக அமரக்கூடாது?"
என்னைச் சோதித்து பார்ப்பதற்கு வந்ததுபோலவே, அவர்களுடைய கேள்விகள் இருக்கும்.
அதேபோல் அந்த அரசரும் குருவைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினார். அதனால் அவர் நேரடியாகவே குருவைப் பார்த்துக் கேட்டார், "இந்த மனச்சோர்வில் இருந்து நான் விடுபட, நீங்கள் ஏதாவது உதவிசெய்ய முடியுமா?"
"உன்னுடைய செல்வம் அனைத்தையும் ஒரு பையில் போட்டு எடுத்துவந்தால், உனக்கு நான் உபதேசிக்க முடியும்," என்று குரு சொன்னார்.
ஒருவர் உண்மையில்
ஞானமடைந்தவராக
இருந்தால்,
அவருடைய உருவம்,
இருப்புத் தன்மை
உங்களை அவரிடம்
ஈர்க்கும்.
உடனே அந்த அரசர், 'இந்த குரு
ஞானமடையவில்லை' என்று முடிவே
செய்துவிட்டார். 'இவர் என்னுடைய
செல்வத்தை எல்லாம் கேட்கிறார், இவர்
ஒரு ஏமாற்றுக்காரர், ஒரு மோசடி பேர்வழி'
என்று சிந்திக்கத் தொடங்கி விட்டார்.
அவர் பதில் ஏதும் சொல்லாமல்
அரண்மனைக்குத் திரும்பிவிட்டார்.
ஆனாலும் இரவெல்லாம், 'இந்த குரு என்
செல்வத்தை எல்லாம் ஏன் கேட்கிறார்'
என்று யோசித்துக்கொண்டு இருந்தார். 'நான்
அவரைச் சந்தேகப்பட்டும்கூட, அவரைப்
பற்றிய ஏதோ ஒன்று, அவரிடம் இருக்கும்
கருணை என்னுள் வேலைசெய்கிறது’
என்று நினைத்தார்.
“ஒருவர் ஞானமடைந்தவர்தானா
என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?”
என்று மக்கள் என்னிடம் கேட்பதுண்டு.
அதை உங்கள் பட்டறிவைக்கொண்டு
கண்டுபிடிக்க முடியாது. அதற்கான ஒரே
வழி உங்களால் முடிந்த அளவிற்கு
அவரைச் சந்தேகப்படுங்கள்.
அவர் உண்மையில் ஞானமடைந்தவராக இருந்தால், அவருடைய உருவம், இருப்புத்தன்மை உங்களை அவரிடம் ஈர்க்கும். உங்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். உங்களால் அவரை மறக்கவே முடியாது. ஒருவர் ஞானமடைந்திருக்கிறாரா, இல்லையா? என்பதற்கு இதுவே அளவுகோல்.
மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி இதுவே: “ஸ்வாமிஜி, நாங்கள் எல்லா நேரமும் உங்களையே நினைத்துக்கொண்டிருக்க வேண்டுமா?”
நான் அவர்களுக்குச் சொல்லும் பதில் இதுவே: “இல்லை, உங்களால் முடிந்த அளவுக்கு என்னை மறக்க முயற்சிசெய்து பாருங்கள். உண்மையில், உங்கள் உணர்வை எட்டியிருந்தால், உங்களால் என்னை மறக்க முடியாது. உங்களால் முடிந்த அளவுக்கு என்னைச் சந்தேகப்படுங்கள். என் ஸாந்நித்யமே உங்கள் பட்டறிவைத் தாண்டி வேலைசெய்யும். நீங்கள் என்னால் உதவிபெறப்போகிறீர்களென்றால், என்னோடு எளிதாகவும், இயல்பாகவும் ஒன்றிவிடுவீர்கள்!”
நான் இந்த நிலையைத் தெளிவாக்கி விடுகிறேன்: நீங்கள் எளிதாக என்னோடு இயைந்துபோய் விடுவீர்கள்.
நீங்கள் முடிந்த அளவுக்கு முயற்சிசெய்து உங்களுடைய பட்டறிவைக்கொண்டு, ‘முடியாது’, ‘இல்லை’ என்று சொல்லிப் பாருங்கள். அதைப் பட்டறிவின்மூலமாக ஆராயவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது.
எப்போதுமே, நீங்கள், ‘முடியாது’, ‘இல்லை’ என்று சொன்னீர்களானால், நீங்கள் ஒருபோதும் ஏமாற்றப்பட மாட்டீர்கள். அதனால், அதுதான் நீங்கள் செய்ய வேண்டிய மிகச் சிறந்த விஷயம்.
உங்கள் குரு, உங்களை விட்டகல மாட்டார்
ஒருவர் ஞானமடைந்தவராக இருந்தால், உங்கள் பட்டறிவையும் தாண்டி, அவரால் உங்களுக்குள் ஊடுருவ முடியும்.
உங்கள் இருப்புநிலையில், உணர்வில் அவர் எப்போதும் இருப்பார். பகலில் உங்களுடைய மனத்திலும், இரவில் உங்களுடைய கனவிலும் இருப்பார். அவர் உங்கள் மனத்தைவிட்டு அகலாது இருப்பார். அவரைப் பற்றிய நினைவிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது.
அந்த அரசரும், குருவின் நினைவால் பாதிக்கப்பட்டார், குரு, தம் மனத்தை விட்டகலாது இருப்பதை உணர்ந்தார். அரசருக்குத் தூக்கமே வரவில்லை. படுக்கையில் புரண்டு, புரண்டு படுத்துக்கொண்டு இருந்தார்.
‘குரு சொல்வதுபோல் என்னுடைய மொத்த செல்வத்தையும் அவருக்குக் கொடுத்துவிட்டால்தான் என்ன? அவரால் என்னை என்ன செய்து விட முடியும்? எப்படியிருந்தாலும், இது என்னுடைய இராஜ்ஜியம்தானே? அவர் ஒரு ஏமாற்றுக்காரராக இருந்தால், அவரை என்னால் சுலபமாகப் பிடித்துவிட முடியும். எப்படி இருந்தாலும், நான் இந்தச் செல்வத்துடன் சந்தோஷமாக இல்லை. ஆகையால் அவர் இவற்றை எடுத்துக்கொண்டாலும், இழப்பதற்கு இதில் என்ன இருக்கிறது? இது எனக்கு உபயோகமாக இல்லை. அவர்தான் வைத்துக் கொள்ளட்டுமே’ என்று குரு சொன்னதன் மீதே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
இப்படி அரசர் எல்லாக் கணக்குகளையும்
போட்டுப்பார்த்துவிட்டு, இந்த அபாயத்தை
துணிந்து எதிர்கொள்ள முடிவுசெய்தார்.
> ஒருவர் ஞானமடைந்தவராக இருந்தால், உங்கள் பட்டறிவையும் தாண்டி, அவரால் உங்களுக்குள் ஊடுருவ முடியும்.
அடுத்த நாள், அவர் தம்முடைய செல்வத்தையெல்லாம் வைரங்களாக மாற்றி, ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, குருவின் முன் போய் நின்றார்.
குரு ஒரு வார்த்தைகூட பேசாமல், திடீரென அரசரிடமிருந்து அந்தப் பையைப் பறித்துக் கொண்டு ஓட ஆரம்பித்து விட்டார். அந்த அரசர், குரு உண்மையிலேயே ஒரு ஏமாற்றுக்காரர் என புரிந்துகொண்டார். உடனே அவர் குருவைத் துரத்த ஆரம்பித்தார்.
காட்டிலேயே வாழ்ந்து, காட்டின் இரகசியங்களை நன்கறிந்த ஒருவரை வெற்றிகரமாகத் துரத்திப் பிடிக்க முடியாது. அதனால்தான் மக்களால் தொழில் ரீதியான வழிப்பறிக் கொள்ளையர்களைப் பிடிக்க முடிவதில்லை. இந்த நாட்டில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும், காவலர்களால் கொள்ளையர்களை எளிதில் பிடிக்க முடிவதில்லை. நில அமைப்பின் இரகசியங்களை அவர்கள் நன்கறிவார்கள்.
காட்டின் அமைப்பை நன்கு அறிந்திருந்த குரு, காட்டிற்குள் இங்கேயும் அங்கேயும் ஓடினார். அரசர் காட்டிற்குப் புதிது என்பதால், தம்மால் இயன்றளவு அவரைப் பின்தொடர்ந்து ஓடினார். இந்தத் துரத்தல் விளையாட்டு போய்க்கொண்டே இருந்தது. அந்த அரசருக்குள், அவர் ஏன் இப்படிப்பட்ட சிரமமான தீர்மானத்தை மேற்கொண்டார் என்ற ஆச்சரியம் மேலோங்கியது. அவர் தம்மையே நொந்துகொண்டார்.
‘நான் மீண்டும் நாட்டிற்குத் திரும்பிப்போனாலும், எனக்கென்று அங்கு எதுவும் இல்லை. நான் ஒரு பிச்சைக்காரனாகத்தான் இருப்பேன்.
சாப்பிடுவதற்கேகூட பிச்சைதான் எடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
காட்டிலேயே வாழ்ந்து,
காட்டின் இரகசியங்களை
நன்கறிந்த ஒருவரை
நம்மால் காட்டிற்குள்
வெற்றிகரமாகத் துரத்திப்
பிடிக்க முடியாது.
அவர், தம் ஏழைமையை மனக்
காட்சியாக்கிப் பார்த்தார். அவருக்குள்
துக்கம் பொங்கியது. அவர், அனைத்து
செல்வங்களும் நிறைந்த ஒரு அரசராக
விளங்கியபோதும் துக்கப்பட்டார்.
இப்போது ஏழைமையில் வாழப்போவதை
நினைத்ததுமே துக்கமேபடுகிறார். ஏழைமை
அவர் மனத்திற்குள் முன்கூட்டியே
புகுந்துவிட்டது. இதுதான் செல்வத்தின்
முரண்பாடு.
செல்வம், அது இல்லாவிட்டாலும்
துக்கத்தைத் தரும், இருந்தாலும்
துக்கத்தையே தரும்.
மாலைநேரமும் ஆனது, அரசர் முற்றிலும்
மனமொடிந்த நிலைக்கு வந்துவிட்டார்.
அவரது நம்பிக்கை தளர்ந்தது. அவரது
மனத்திற்குள், 'இப்போது என்னால்
ஒன்றும் செய்ய முடியாது. இந்த குருவுக்கு,
இந்தக் காட்டைப் பற்றி நன்றாகத் தெரிந்து
இருக்கிறது' என்று நினைத்தார்.
நாம், பாதுகாப்பற்ற
விழிப்புணர்வை நமக்குள்
நிகழ அனுமதித்தால்,
நாம், நம் வாழ்க்கையை
அலட்சியபடுத்த மாட்டோம்.
அவர் அப்படி நினைத்த அந்தக் கணத்தில், குரு ஓடுவதை நிறுத்திக்கொண்டார். குரு நின்றதைப் பார்த்த அரசர், வேகவேகமாக ஓடிச்சென்று, அவரிடமிருந்த தம்முடைய பையைப் பிடுங்கிக்கொண்டார்.
குரு சிரித்தார். அதைப் பார்த்த அரசருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. குரு சொன்னார், “முட்டாளே, இப்போது இதை எடுத்துச் சென்று, ஆனந்தமாக அனுபவி!”
உடனே அந்த அரசர் தாம் மீண்டும் செல்வந்தராகி விட்டதாக உணர்ந்தார்! ஒரே ஒருநாள் அவர் செல்வத்தை இழந்ததனாலேயே, அவர் மீண்டும் செல்வந்தராகி விட்டதாக உணர்ந்தார்.
குரு சொன்னார், “முட்டாளே, உனக்குக் கொடுக்கப்பட்ட அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டாய். அவற்றை நன்றியுணர்வுடன் ஏற்றுக்கொள்ளாததனால்தான் நீ மன அழுத்தத்திற்கு ஆளானாய். இப்போது அதே செல்வத்தை ஒரே ஒருநாள் இழந்து பிறகு திரும்பப்பெற்றுக் கொண்டாய். போ.. போய் இதை அனுபவி,” என்றார்.
அந்த குரு, ஒரே ஒருநாள் அந்த அரசருடைய செல்வத்தை இழக்கச்செய்து, அவரை மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரச்செய்துவிட்டார்!
பாதுகாப்பற்ற தன்மையே வாழ்க்கையின் மதிப்பைப் புரியவைக்கும்
நாம், பாதுகாப்பற்ற விழிப்புணர்வை நமக்குள் நிகழ அனுமதித்தால், நாம், நம் வாழ்க்கையை அலட்சியப்படுத்த மாட்டோம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நான் 'விழிப்புணர்வு' என்ற வார்த்தையை உபயோகப்படுத்தியிருக்கிறேன். பாதுகாப்பற்றதன்மையை உணர்வது கூட ஒரு 'விழிப்புணர்வு'தான். இது ஸத்யம்.
நாம் இந்தப் பாதுகாப்பற்ற விழிப்புணர்வை நமக்குள் நிகழ அனுமதித்தால், நாம் வாழ்க்கையை உத்வேகத்துடன் வாழ்ந்து, அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடத் தொடங்கிவிடுவோம். ஒரே ஒருநாள் நாம் வைத்திருக்கும் அனைத்தையும் இழந்துவிட்டதாக ஆழமாக பாவனைசெய்து பார்த்தால், அதன்பிறகு மீண்டும் நம்மால் இந்த வாழ்க்கையை, சாதாரணமாக எடுத்துக்கொள்ளவே முடியாது.
உதாரணத்திற்கு, கண்களைத் திறக்காமல் மூடியவாறே ஒரு பன்னிரண்டு மணி நேரம் வாழ முயற்சிசெய்யுங்கள். கண்களை ஒரு பன்னிரண்டு மணி நேரத்திற்குத் திறக்க வேண்டாம். அதன்பிறகு உங்கள் கண்களை நன்றியுணர்வு அற்று அலட்சியப்படுத்த மாட்டீர்கள்!
இந்த வாழ்க்கை, நம்மிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் பறிக்கப்பட்டுவிடலாம் என்பதை நாம் அறிந்துகொண்டால், நாம் நம் வாழ்க்கையை மனம்போனபோக்கில் விழிப்புணர்வற்று வாழமாட்டோம்.
இந்த வாழ்க்கை, ஒருநாள் நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு விடும் என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதுதான் பிரச்சினை. நாம் வாழ்க்கையை இழந்துவிடுவோம் என்ற 'பாதுகாப்பற்ற உணர்வை', அந்த 'பயத்தை' அடக்கிவிடுகிறோம். அதனால்தான்
நாம் வாழ்க்கையைக் கொண்டாடுவதில்லை. மேலும் நன்றியுணர்வு இல்லாமல் நம் விருப்பம்போல் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம்.
நாம் பாதுகாப்பற்ற தன்மையை அனுபவிக்கும் அந்தத் தருணத்தில், எந்த நேரத்திலும் இந்த வாழ்க்கை நம்மிடம் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டு விடும் என்பதைப் புரிந்துகொண்டால், நாம் வாழ்க்கையை உத்வேகத்துடன் வாழ ஆரம்பிப்போம்.
நாம் வாழ்க்கையில் சோர்வோ, சலிப்போ, மன அழுத்தமோ அடைந்தால், ஒரு பன்னிரண்டு மணி நேரத்திற்காகவாவது நம் மொத்த செல்வத்தையும் இழந்துவிட்டால், நாம் உடனடியாக இந்த உண்மையைப் புரிந்துகொள்வோம். அதன்பிறகு எப்போதும் வாழ்க்கையை மனம்போனபோக்கில் விழிப்புணர்வற்று வாழமாட்டோம்.
அந்த அரசர் தம் வாழ்க்கையைச்
சாதாரணமாகஎடுத்துக்கொண்டதனால்தான்,
வாழ்வில் அவருக்குச் சலிப்பு ஏற்பட்டது.
நாம் மரணத்தை எதிர்கொள்ளும்போது, பாதுகாப்பற்ற தன்மையை எதிர்கொள்ளும்போது, நம் வாழ்க்கையை, இதுநாள்வரை அதன் மதிப்பு தெரியாமல் சாதாரணமாக எடுத்துக்கொண்டிருந்தோம் என்பது உடனடியாகப் புரியும். இதுவே இக்கதை உணர்த்தும் ஸத்யம்.
முதலில் உறவுகள், பிறகு செல்வம், இறுதியாக ஜ்ஞானம் என இம்மூன்றையும் யமன் நசிகேதனுக்கு வழங்கினார். நித்யானந்த ஸ்பூரண நிகழ்ச்சியில், மரண தியானத்தைச் செய்து முடித்தபிறகு, பங்கேற்பாளர்கள், தங்கள் உறவுகளின் உண்மையான அர்த்தங்களைப் பற்றிப் புரிந்துகொண்டதாக என்னிடம் வந்து சொல்வார்கள். அப்படியென்றால் யமன் அவர்களை ஆசீர்வதித்து இருக்கிறார் என்று பொருள்!
இப்போது அவர்கள், தங்களின் செல்வத்தின் மதிப்பையும், வாழ்க்கை என்பது உச்சபட்ச ஆசீர்வாதம் என்பதையும் உணர்ந்திருப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்க்கையை உத்வேகத்துடன் வாழத் தொடங்குவார்கள். இதன் அர்த்தம், யமன் அவர்களுக்குச் செல்வத்தையும் ஆசீர்வதித்து இருக்கிறார் என்பதுதான்,
இந்த உடல் வேண்டுமானால் இறக்கலாம், ஆனால், இந்த உடல்
- மனத்தைத் தாண்டி அவர்களுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று எப்பொழுதும் இருக்கும் என்பதையும் புரிந்திருப்பார்கள். இதன் பொருள், யமன், அவர்கள் மீது ஜ்ஞானத்திற்கான ஆசீர்வாதங்களையும் பொழிந்திருக்கிறார் என்பதுதான். அதைத்தான் நான் ஆத்மஜ்ஞானம் என்று சொல்கிறேன்.
நாம், மரணத்தையும் பயத்தையும் மனத்தெளிவுடன் எதிர்கொள்ளும்போது, உறவுகள், செல்வம் மற்றும் ஜ்ஞானத்திற்கான ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம்.
இங்கே கிருஷ்ணர், பயமின்மையைப் பற்றிப் பேசுகிறார். அவர் 'பயமின்மை' என்று சொல்வதன் பொருள், 'பயத்தை எதிர்கொள், அப்படியென்றால் மட்டுமே பயமின்மை என்பது நிகழும்' என்பதே!
உயிர் வாழ்ந்தாக வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியையும், பொருட்களை உடைமையாக்கிக் கொள்ள வேண்டுமென்ற உள்ளுணர்ச்சியையும் நாம் எதிர்கொள்ளும்போதுதான், 'பயமின்மை தள'த்திற்குள் நாம் நுழைய முடியும். அதுவரை, பயமற்றதன்மை நிகழாது.
அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து பாருங்கள்
நீங்கள், 'நீங்கள்' என்பதன் அடிப்படையில்
முடிவுகளை எடுக்கும்போது மட்டுமே,
வாழ்ந்தாக வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி
யையும், உடைமைகளைச் சேர்க்க
வேண்டும் என்ற உள்ளுணர்ச்சியையும்
உங்களால் எதிர்கொள்ள முடியும்,
அதைக் கடந்துசெல்ல முடியும். 'நான்'
என்னும் அடிப்படையில் முடிவுகளை
எடுக்கும்போது அல்ல!
எதுவரை, உங்களுடைய வேலை, செயல், பேச்சு மற்றும் எண்ணம்
கிருஷ்ணர்,
'பயமின்மை' என்று
சொல்வதன் பொருள்,
'பயத்தை எதிர்கொள்,
அப்படியென்றால் மட்டுமே
பயமின்மை என்பது நிகழும்'
என்பதே!
எல்லாமுமே 'நான், நான், நான்' என்பதை மையமாகக்கொண்டு இருக்கின்றதோ, அதுவரை நீங்கள் ஒரு அரக்கனாகத்தான் இருப்பீர்கள். வாழ்க்கையின்மீதும், உடைமைகளின்மீதும் கொண்ட பற்றுடனேயே, நீங்கள் வேலைசெய்துகொண்டு இருப்பீர்கள். 'நான்' என்று மையங்கொள்ளும்பொழுது, உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதில்லை.
எப்பொழுது நீங்கள், 'நீங்கள், நீங்கள், நீங்கள்' என்ற கருத்தின் அடிப்படையில் வேலைசெய்கிறீர்களோ, அப்பொழுது நீங்கள், ஒரு புதிய சக்தியை வெளிப்படுத்துவீர்கள்.
இந்தச் சிறிய பரிசோதனையை முயற்சிசெய்து பாருங்கள். ஒரே ஒரு வாரத்திற்கு, அடுத்தவர்களுக்காகவே வாழ்ந்து பாருங்கள். நான் உங்களை, உங்கள் சொத்துகளையோ அல்லது வேறு உடைமைகளையோ மற்றவர்களுக்குக் கொடுத்துவிடுமாறு கேட்டுக் கொள்ளவில்லை.
பொதுவாக நாம், ‘இதனால் எனக்கு என்ன
இலாபம்? என்றுதான் சிந்திப்போம்.
உதாரணத்திற்கு, உங்கள் மனைவி
உங்களைத்திரைப்படம்பார்க்க அழைத்தால்,
நீங்கள், “இல்லை, நான் கடற்கரைக்குச்
செல்ல விரும்புகிறேன்,'' என்பீர்கள்.
உங்களுடைய விருப்பங்களுக்கே
முன்னுரிமை கொடுப்பீர்கள்.
ஏன் நீங்கள், 'நீங்கள்'
என்பதில் மையங்கொள்ள,
உங்களுக்கு நீங்களே
ஒரு சந்தர்ப்பம் கொடுத்துக்
கொள்ளக் கூடாது?
ஒரே ஒரு வாரத்திற்கு, உங்கள் அலுவலகம், உங்கள் வீடு மற்றும் நீங்கள் எங்குச் சென்றாலும், 'நான்' என்ற மனநிலையில் இல்லாமல், ‘நீங்கள்' என்ற மனநிலையில் இருக்கப்போவதாக முடிவுசெய்து, அதேபோல் வாழுங்கள். இதை உங்கள் அன்றாட நடவடிக்கைகளில், செயல்களில் செய்து பாருங்கள், உங்கள் செல்வம், உடைமைகள் விஷயத்தில் அல்ல.
உடனே உங்கள் மனம், 'நான், ‘நீங்கள்' என்ற அடிப்படையில் சிந்திக்கத் தொடங்கினால், அதற்குப் பிறகு மக்கள் என்னை மதிக்கமாட்டார்கள். என்னைத் தங்கள் சுயநலனுக்காக உபயோகித்துக்கொள்வார்கள். என்னை ஏமாற்றிவிடுவார்கள்' என்று நினைக்கத் தொடங்கிவிடும்.
சரி, நல்லது. இப்போது நீங்கள், 'நான்' என்ற கருத்தில் மையங்கொண்டுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். உங்களை யாரும் ஏமாற்றவில்லை. ஆனாலும் நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? சொல்லுங்கள். வெளிப்படையாகச் சொல்லுங்கள், சந்தோஷமாக இருக்கிறீர்களா? இல்லை அல்லவா!
அதனால், ஏன் நீங்கள், 'நீங்கள்' என்பதில் மையங்கொள்ள, உங்களுக்கு நீங்களே ஒரு சந்தர்ப்பம் கொடுத்துக்கொள்ளக் கூடாது?
ஆஸுரிஸம்பத் - அசுர சுபாவம் என்று கிருஷ்ணர் குறிப்பிடும், 'நான், நான், நான்' என்னும் மனஅமைப்புடன்தான், நம் வாழ்க்கை முழுவதும் வாழ்கிறோம்.
ஒரே ஒரு வாரத்திற்கு மட்டும், இதை ஏன்
நீங்கள் பயிற்சிசெய்ய முயற்சிசெய்யக்
கூடாது. இதுபோன்ற பயிலரங்குகள்
மற்றும் ஆச்ரமத்தில் இருக்கும் உங்களின்
நேரங்கள்தான், இதைப் பயிற்சி
செய்வதற்கான சரியான சந்தர்ப்பங்கள்.
நல்லது. இப்போது அடுத்த பகுதி வகுப்பிற்காக, இந்த அரங்கிற்குள் வரும்போது, நீங்கள் முதலில் என்ன செய்வீர்கள் தெரியுமா? நீங்கள் ஒரு கைக்குட்டையைப் போட்டு பிடித்து வைத்திருந்த இடத்தில் வேறு யாராவது அமர்ந்திருந்தால், உடனே அவரை அந்த இடத்திலிருந்து எழுப்பி, உங்கள் இடத்தைப் பிடுங்கிக்கொள்வீர்கள்.
அடுத்து பிரசாதம் தரும்பொழுது, நீங்கள் உங்களுடைய தட்டை வேகவேகமாக எடுத்துக்கொள்வீர்கள். ஆனால், இனி ஒரு வாரத்திற்கு இப்படியெல்லாம் செய்யாமல், மற்றவர்கள் உணவைப் பெற்றுக்கொண்ட பிறகு, நீங்கள் உணவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
உங்களருகில் இருக்கும் நபர் சௌகரியமாகவும் நிம்மதியாகவும் உணர்கிறாரா என்று பாருங்கள்.
காலையில் எழுந்த உடன், உங்களுடன் அறையில் இருக்கும் நபரிடம்,
"நன்றாக உறங்கினீர்களா? நீங்கள் முதலில்
குளியுங்கள், பிறகு நான் குளிக்கிறேன்,"
என்று சொல்லுங்கள். ஆனால், இதற்குமுன்,
"எனக்கு சில அவசர வேலைகள் உள்ளன,
நீங்கள் சிறிதுநேரம் காத்திருங்கள்,
நான் முதலில் குளிக்கிறேன்," என்று
சொல்வதுதான் நமது வழக்கமாக
இருந்திருக்கும்.
இந்த மனப்பான்மைக்குப் பதிலாக, சிறிய எளிய விஷயங்களில் மற்றவர்கள் பேச வும், உபயோகப்படுத்தவும் முதலில் அனுமதியுங்கள். 'முதலில் நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். நான் பிறகு உபயோகப்படுத்திக் கொள்கிறேன்', 'நீங்கள் தொடர்ந்து வேலைசெய்துகொண்டு இருக்கிறீர்கள். நான் உங்களுடைய வேலைகளில் ஏதாவது உதவிசெய்ய விரும்புகிறேன்' என்று சொல்லுங்கள். இந்தப் பரிசோதனையை முயற்சி செய்து பாருங்கள்.
ஒரு வாரத்திற்கு 'நீங்கள்' என்பதை உங்கள் இருப்புத் தன்மையில் வைத்திருங்கள். திடீரென்று உங்களுள் ஆனந்தம்பொங்கும், உங்களுக்கே தெரியாது, எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்று! உடனே உங்கள் முழு இருப்புத்தன்மையும் தளர்வாக இருப்பதை உணர்வீர்கள்.
'நான்' என்பதில் கவனம் செலுத்தாதபோது, நீங்கள் மன இறுக்கத்திற்கு ஆளாக மாட்டீர்கள். எதுவரையில் நீங்கள், 'நான்' என்ற மனப்பான்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ, அதுவரை தொடர்ந்து இறுக்கத்தில்தான் இருப்பீர்கள்.
'நான்' என்பதை 'நீங்கள்' என்று மாற்றும்பொழுது, ஒரு ஆழமான மன அமைதி உங்களுக்குள் ஏற்படும்.
நீங்கள், ஒரு சாளரப் பார்வையாளர் அல்ல!
நான் இப்போது பேசிக்கொண்டு இருப்பது நீதிநெறியைப் பற்றி அல்ல. நான், 'வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ்வது எப்படி' என்பதைப்பற்றி போதித்துக்கொண்டு இருப்பதாகத் தயவுசெய்து நினைக்க வேண்டாம்.
'கவலைப்படுவதை நிறுத்திவிட்டு
வாழத் தொடங்குவது எப்படி?' என்பது
போன்ற புத்தகங்களை நிறையபேர் எழுதி
இருக்கிறார்கள்.
எப்படித் திணிப்பது என்பது பற்றிக்
கற்றுக்கொடுக்கும் மனிதன் நான் அல்ல.
நான் இதை உங்களுக்கு, வெறும் ஒரு
நீதிநெறியாகக் கொடுக்கவில்லை, ஒரு
ஆன்மிகப் பயிற்சியாகக் கொடுக்கிறேன்.
நீங்கள், ஆன்மிக வளர்ச்சியில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், நீங்கள் தொழில்ரீதியான தேடல் உடையவராக இருந்தால், (Professional Seek-er), தயவுசெய்து இதை மட்டும் ஒருமுறை பயிற்சிசெய்து பாருங்கள். இங்கு நான், 'தொழில்முறை தேடல் உள்ளவர்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கிறேன். ஏனென்றால், மக்களில் ஒரு குழுவினர், 'தேடுதலை', ஒரு தொழிலாகவே கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
யாராவது ஒரு ஸ்வாமி வந்துவிட்டால் போதும், அவருடைய நிகழ்ச்சி களில் தவறாது கலந்துகொள்வார்கள். எந்தவொரு ஸ்வாமி வந்தாலும், எந்தவொரு புத்தக வெளியீட்டு விழாவானாலும், எந்தவொரு ஆன்மிக நிகழ்ச்சியானாலும் இவர்கள் அங்கு நிச்சயம் இருப்பார்கள்.
பெரும்பாலான மக்கள் என்னிடம், "ஸ்வாமிஜி கடந்த 30 ஆண்டுகளாக நான் ஆன்மிகத் தேடுதலுடன் இருக்கிறேன்!" என்று சொல்வதுண்டு. தயவுசெய்து, அதைப்பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டாம்.
தெளிவாக இருங்கள், நீங்கள், தொழில்முறை தேடல் உள்ளவர் என்று பெருமைப்பட்டுக்கொண்டு இருந்தாலோ அல்லது யாரோ ஒரு ஸ்வாமியைத் தெரியும் என்று சொல்லிக்கொண்டிருந்தாலோ அல்லது ஏதாவது ஒரு சொற்பொழிவில் கலந்துகொள்வதாலோ அல்லது சில தியான அனுபவ முகாம்களில் கலந்துகொள்வதாலோ, நீங்கள் ஆன்மிகப் பாதையில் இருப்பதாக நினைத்துக்கொள்ள வேண்டாம்.
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் ஆன்மிகப் பாதையில் இல்லை. நீங்கள், ஒரு சாளரப் பார்வையாளராக (Windows Shopping) மட்டுமே இருக்கிறீர்கள்.
அதாவது, கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வாங்கும் நோக்கமின்றி, கண்ணாடித் தடுப்புகளின் வழியாக, வெறுமனே பொருட்களை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு சாளரப் பார்வையாளர்போல, ஆன்மிகச் சாதனைகள் எதுவும் செய்யும் நோக்கமின்றி, வெறுமனே அவற்றைப் பற்றிக் கேட்டுக்கொண்டு மட்டும் இருக்கும் ஒரு சாளரப் பார்வையாளராகவே இருக்கிறீர்கள்.
நீங்கள் உண்மையான தேடல் உள்ளவராக இருந்தால், நீங்கள் ஆன்மிகத்தைத்தான் தேடிக்கொண்டு இருப்பதாக நினைத்தால், ஏழு நாட்களுக்கு மட்டும், இந்த ஒரு ஆன்மிகப் பயிற்சியைச் செய்யுங்கள்.
நான் உங்களுக்கு, எந்த வழியிலாவது
உதவிசெய்ய முடியும் என்று
நீங்கள் நினைத்தால், இந்த ஒரே
ஒரு வாக்கியத்தை மட்டும்
எடுத்துக் கொண்டு, அதை அடிப்படையாக
வைத்து வேலைசெய்யுங்கள். மற்ற
எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.
'நான், நான், நான்' என்ற அடிப்படையில்
முடிவுசெய்வதற்கு பதிலாக, 'நீங்கள்,
நீங்கள், நீங்கள்' என்பதை அடிப்படையாக
வைத்து முடிவெடுங்கள். உங்களுடைய
செயல்களுக்கு, 'நீங்கள்' என்பதை
அடிப்படையாக வைக்க முடிவுசெய்யுங்கள்.

நான் உங்களை, எதையும் தானமாகக் கொடுத்துவிடவோ அல்லது துறந்துவிடவோ சொல்லவில்லை. சாதாரணமாக உங்கள் தினசரி வாழ்க்கையில் எடுக்கும் தீர்மானங்களில் இதைப் பயிற்சிசெய்து பாருங்கள்.
உங்கள் இருப்புத் தன்மையில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்வதை நீங்களே உணரலாம். உங்களுக்குள் இருக்கும் அந்த இறுக்கம், அந்தக் கனம் கரைந்துவிடும். நீங்கள், உங்களுக்குள் குணமடைதல் நிகழ்வதையும், குளிர்ந்த, அளப்பரிய தெய்வீக ஆனந்தத் தென்றல் வீசுவதையும் உண ரலாம்.
இந்த ஆனந்த மனநிலையின் கணநேர அனுபவம் போதும், நீங்கள் இயற்கையாகவே உங்கள் தினசரி வாழ்க்கையில், ஒவ்வொரு கணமும் இந்த மனப்பான்மையை நடைமுறைப்படுத்தத் தொடங்குவீர்கள்.
உங்களுக்கும் அடுத்தவர்களுக்கும் ஒரே அளவுகோலைப் பயன்படுத்துங்கள்
இப்போது நாம், ஒவ்வொரு விநாடியும், ‘நான்’ என்ற அடிப்படையில்தான் நமது வார்த்தைகளையும் செயல்களையும் தேர்வுசெய்கிறோம்.
உதாரணத்திற்கு, நாம் யாரிடமாவது கோபமாகப் பேசிவிட்டோமானால், “நான் அவருடைய நன்மைக்காகத்தான் கோபப்பட்டேன்,” என்று சொல்வோம். ஆனால், அதுவே வேறு யாராவது கோபப்பட்டால், “பார், அரக்கன் மாதிரி கத்திக்கொண்டு இருக்கிறான். பைத்தியம்போல் நடந்துகொள்கிறான்,” என்று சொல்வோம்.
யாராவது கோபப்பட்டால், நாம்
அவர்களை ‘அரக்கன்’ என்று சொல்வோம்.
அதுவே நாம் கோபப்படும்போது,
“அந்த நபரின் நன்மைக்காகத்தான்
நான் இப்படி நடந்துகொள்கிறேன். நான்
கற்றுக்கொடுக்காவிட்டால், வேறு யார்
அவனுக்குக் கற்றுக்கொடுப்பார்கள்?”
என்று சொல்வோம்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், வார்த்தைகளோடு விளையாடாதீர்கள், நேரடியாக இருங்கள். அடுத்த ஒரே ஒரு வாரத்திற்கு மட்டும் இந்தச் சோதனையைச் செய்துபாருங்கள். அதிகம் வேண்டாம். அதன்பிறகு நீங்கள் உங்களுடைய பழைய தன்மைக்கே மாறிக்கொள்ளலாம். நீங்கள் அவ்வாறு மாற முடியாது, அது வேறு விஷயம்!
இதைச் சின்ன சின்ன விஷயங்களில் முயற்சிசெய்து பாருங்கள். ‘நான்’ என்ற அடிப்படையில் முடிவுசெய்வதற்குப் பதிலாக, ‘நீங்கள்’ என்ற அடிப்படையில் முடிவுசெய்யுங்கள். அப்பொழுது, நீங்கள் உங்களுக்குள் தொடர்ந்து சுமந்துகொண்டிருக்கும் எரிச்சல் காணாமல் போய்விடும். வாழ்க்கையை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும், உடைமையாக்கிக்கொள்ள வேண்டும் என்ற உணர்ச்சித் தூண்டுதல்களும் பற்றுதல்களும் காணாமல் போய்விடும். நீங்கள் ஒரு உள்ளீடற்ற இருப்புத் தன்மையாக மாறிவிடுவீர்கள். நீங்கள் காலியான மூங்கில்போல் மாறிவிடுகிறீர்கள்.

காலியான மூங்கிலாக நீங்கள் மாறும்போது,
நீங்கள் தெய்விகத்தின் கைகளில்
ஒரு புல்லாங்குழல் ஆகிவிடுவீர்கள்.
உங்கள் மூலம் என்ன நடந்தாலும், அது
தெய்விகமாகவே இருக்கும். நீங்கள் தெய்விக
இயல்புகளை உள்வாங்கிக்கொண்டவராக
இருப்பீர்கள்.
கிருஷ்ணர் மேலும், தெய்விகத்தை உள்வாங்கிக்கொள்வது எப்படி என்பதைப் படிப்படியாக விளக்குகிறார்: உணர்வுமாற்றத்தை மிக ஆழமான சூட்சும நிலையில் ஏற்படுத்துவது எப்படி என்பதை விளக்குகிறார்.
எஜமானனை மாற்றுங்கள் பணியாளர்களை அல்ல!
தயவுசெய்து ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஸத்வம் (மன அமைதி), ரஜஸ் (கோப உணர்வு), தமஸ் (சோம்பேறித்தனம்) என்ற மனப்பாங்குகளிலிருந்து இந்த வேலையைச் செய்வது கடினம். இது எஜமானனை மாற்றுவதற்குப் பதிலாக, அனைத்துப் பணியாளர்களையும் மாற்றுவதற்கு ஒப்பானது. இது மிகக் கடினமான செயல். நாம் ஒருபோதும் இதைச் செய்ய முடியாது.
எஜமானனை மட்டும் மாற்றுங்கள்,
இயல்பாகவே, எல்லாப் பணியாளர்களும்
உணர்வுமாற்றம் அடைந்துவிடுவார்கள்.
இங்கே, கிருஷ்ணர் அந்த எஜமானனை
மாற்றுவதற்கான, உணர்வுமாற்றம்
நிகழ்வதற்கான நேரடி நுட்பத்தைக்
கொடுக்கிறார். தீர்மானங்களை எடுக்கும்
நம்முடைய அஹங்காரம்தான் அந்த
எஜமானன்.
எஜமானனை மட்டும்
மாற்றுங்கள், இயல்பாகவே,
எல்லாப் பணியாளர்களும்
உணர்வுமாற்றம்
அடைந்துவிடுவார்கள்.
இப்பொழுது, 'நான்' என்பதை மையமாக
வைத்துத்தான் நம்முடைய புலனுணர்வு
புரிதல்கள் நிகழ்கின்றன. அவர், 'நான்'
என்பதற்கு பதிலாக, 'நீங்கள்' என்று
மாற்றிக் கொள்ளும் ஒரு எளிய நுட்பத்தைக்
கொடுக்கிறார். அப்படியென்றால்
மட்டுமே உணர்வுமாற்றம் நிகழும். இதே
முறைதான் தெய்விகத் தன்மைக்கும்
உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
ஸ்ரீஇராமர், இராவணன் - இருவருமே சக்தி நிறைந்தவர்கள்தான், இருவருமே ப்ரஹ்மாஸ்த்ரம் வைத்திருந்தார்கள். ஒரேயொரு வித்தியாசம் என்னவென்றால், ஒருவர் 'நான்' என்பதை மையமாகவும், மற்றொருவர் 'நீங்கள்' என்பதை மையமாகவும் கொண்டு இருந்தார்கள். அது ஒன்றுதான், ஒருவரை தெய்வமாகவும், மற்றொருவரை அசுரனாகவும் ஆக்கியது. இராமர், தெய்வம். இராவணன், அசுரன்.
இந்த உணர்வுமாற்றத்தின் மூலம் - 'நீங்கள்' என்ற விழிப்புணர்வை, உச்ச விழிப்புணர்வை, பரிபூரணத்தன்மையைப் பற்றிய விழிப்புணர்வை, தெய்விக ஸம்பத்தை - உங்கள் அனுபூதி ஆக்கிக் கொள்ள முடியும் என்கிறார், கிருஷ்ணர். அவர் படிப்படியாக, இந்த எல்லாச் சிறப்புப் பண்புகளையும் விளக்குகிறார்.
நான் முதலில் குறிப்பிட்டபடி, தயவுசெய்து இந்தப் பண்புகளை, ஒரு தனி முயற்சியெடுத்துப் பயிற்சிசெய்ய வேண்டாம். நீங்கள் இதற்கென தனி முயற்சியெடுத்துப் பயிற்சிசெய்தால், அது உங்கள் எண்ணத்திற்கும் செயலுக்கும் முரண்பட்ட நிலையை உருவாக்கிவிடும். மனக்குழப்பத்தை ஏற்படுத்தும். உங்களுடன் நீங்களே சண்டையிட்டுக் க்கொள்வீர்கள்.
இந்தப் பண்புகளை உங்கள் வாழ்க்கையில் இயல்பாக வெளிப்படுத்தச் செய்யக்கூடிய ஏதோ ஒன்றைச் செய்யுங்கள். இயல்பாகவே நீங்கள் ஆனந்தமயமாவீர்கள், கோபத்தில் இருந்து விடுபடுவீர்கள், தார்மிகப் பண்புகளுடையவராக மாறிவிடுவீர்கள்.
நாம், தான தர்மங்கள் உட்பட எது செய்தாலும், அவற்றை நிர்பந்தத்தாலும், சமூகக் கட்டுப்பாடுகளாலும்தான் செய்கிறோம். ஏனென்றால், 'புண்ணியங்கள் செய்து நாம் சொர்க்கத்திற்குச் சென்றேயாக வேண்டும், அவ்வாறு செய்யவில்லை யென்றால், நாம் நரகத்திற்குச் செல்வோம், அங்கு நமக்குப் பிரச்சினைகள் காத்திருக்கின்றன' என்று சொல்லப்பட்டே வளர்க்கப்படுகிறோம்.
தானம் = பகிர்தல்!
தானம் கொடுப்பதால் உங்களிடமிருந்து ஏதோவொன்று பறிபோவதாக நீங்கள் நினைத்தால், அப்படிப்பட்ட மனநிலையோடு நீங்கள்தானம் செய்ய வேண்டாம்.
தானம் என்ற ஸம்ஸ்க்ரு'த வார்த்தைக்கு,
தமிழில், 'நன்கொடை' அல்லது
'கொடுத்தல்' என்று அர்த்தப்படுத்துவது
தவறு. 'பகிர்தல்' என்ற வார்த்தையே
பொருத்தமானது! ஏனென்றால், நம்மிடம்
போதுமான அளவிற்கு இருக்கிறது என்று
நினைப்பதால் மட்டுமே, மற்றவர்களுடன்
பகிர்ந்து கொள்கிறோம்.
'நன்கொடை' என்ற வார்த்தையில்
அஹங்காரம் இருக்கிறது, 'நான் உயர்ந்தவன்,
கொடுப்பவன்', 'நீ தாழ்ந்தவன்,
வாங்குபவன்' என்ற எண்ணம் அதில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.
'பகிர்ந்துகொள்வோம்'
என்பதுதான் சரியான
மனப்பாங்கு.
ஆனால், 'பகிர்தல்' என்பதில் 'நான் உயர்ந்தவன், கொடுப்பவன்' என்ற கருத்தே எழவில்லை. 'நாம் பெற்றிருக்கிறோம், பகிர்ந்து கொள்வோம்' என்பது மட்டுமே இருக்கும். 'பகிர்ந்துகொள்வோம்' என்பதே சரியான மனப்பாங்கு.
'நான்' என்ற மனப்பாங்குடன் செய்தோமானால், பிறகு, 'நம் பெயர் நன்கொடையாளர் பெயர்ப்பலகையில் இடம்பெற்றிருக்கிறதா, அப்படியே இடம்பெற்றிருந்தாலும், அது எழுத்துப் பிழையில்லாமல் சரியாகப் பொறிக்கப்பட்டுள்ளதா, படிக்கும் வகையில் எழுத்து பெரியளவில் இருக்கிறதா, மற்றவர்களின் பெயரைவிட நம்முடைய பெயர் சிறியதாகப் பொறிக்கப்பட்டுவிட்டதா?' என்றெல்லாம் சோதித்துப் பார்த்துக்கொண்டிருப்போம்
குறிப்பாக இந்தியாவில், கோயிலுக்கு ஒரு மின்விளக்கை அன்பளிப்பாகக் கொடுத்தாலுங்கூட, அதில், 'நன்கொடையாளர்: இராமநாதன், சோமநாதனின் மகனான இவர், 20.5.2003 அன்று சிவலோகப் பதவியடைந்த தம் தாய் சௌந்தர்ய லட்சுமியின் நினைவாக, 20.5.2004 அன்று இக்கோயிலுக்கு அன்பளிப்பாக அளித்தது' என்ற வாசகங்கள், அந்த மின்விளக்கின் மேல் எழுதப்பட்டு இருக்கும். அதுவும் கருப்பு வர்ணத்தால் எழுதப்பட்டு இருக்கும். நாம் மின்விளக்கைப் போட்டால், வெறுமனே ஒரு கறுப்புக்கோடு மட்டுமே சுவற்றில் விழும். வெளிச்சம் இருக்காது!
இரமண மகரிஷி அழகாகச் சொல்கிறார்: "நீங்கள் கேட்காமல் இருந்தால், உங்களுக்குக் கொடுக்கப்படும்."
நான் மக்களிடம் சொல்வதுண்டு, "நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களைப்பற்றி, நீங்களே சொல்லிக் கொண்டிருக்காதபோதுதான், அதைப்பற்றி நானே சொல்லிக்கொண்டிருப்பேன். சிலர், தாங்கள் ஆஸ்ரமத்திற்காக என்ன செய்தாலும், அதைப்பற்றி அவர்கள் யாரிடமும் சொல்வதில்லை. நான் உலகம் முழுவதும் அவர்களைப் பற்றிச் சொல்வேன். ஆனால், அவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டால், நான் அமைதியாகிவிடுவேன்."
நீங்கள், 'நான்' என்ற மனப்பாங்கிலிருந்து செயல்களைச் செய்யவில்லை என்றால், உங்களிடமிருந்து ஏதோ ஒன்று எடுத்துக்கொள்ளப்படுவதாக நினைக்க மாட்டீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, உங்களுக்குள் ஒரு அளப்பரிய நிறைவை உணர்வீர்கள். 'நீங்கள்' என்ற மனப்பாங்கிலிருந்து
'நீங்கள்' என்ற
மனப்பாங்கிலிருந்து
நீங்கள் எதைச்செய்தாலும்,
உங்களுள் ஒரு அளப்பரிய
நிறைவை உணர்வீர்கள்.
நீங்கள் எதைச் செய்தாலும், அது உங்களை,
கிருஷ்ணர் கூறும் தெய்விகப் பண்புகளை
வெளிப்படுத்துபவராக ஆக்கும்.
யசோதைகூட, 'நான்' என்ற கருத்தில்தான் இருந்தார்.
பக்தியில் சிறந்தவர் யார்?
நான் உங்களுக்கு ஒரு அருமையான
கதையைச் சொல்கிறேன். இது,
தரங்கிணி என்ற ஒரு சிறந்த பக்தையைப்
பற்றியது. இதில் அன்பின் அருமையான வெளிப்பாட்டைக் காணலாம்.
'நான்' மற்றும் 'நீங்கள்' என்ற இரண்டு
மனப்பாங்குகளும் இங்கு உண்மையாக
வெளிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
பிறந்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள்
யசோதையிடம் ஒப்படைக்கப்பட்டார்
கிருஷ்ணர், என்பதிலிருந்துதான் இந்தக்
கதை ஆரம்பிக்கிறது. அவர் நடு நிசியில்
பிறந்தார், சூரிய உதயத்துக்கு முன்
யசோதையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கிருஷ்ணர் பிருந்தாவனத்தை விட்டுச் செல்லும்வரை, யசோதை தாய்தான் அவரை வளர்த்தார். அவரை வளர்த்தவராக இருந்தும்கூட, யசோதை கிருஷ்ணரைப் புல்லாங்குழல் வாசிக்குமாறு கேட் டுக்கொண்டால், அவர் வாசிக்கமாட்டார்.
ஆனால், கிருஷ்ணரின் பக்தையான தரங்கிணி, பிற்படுத்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கிருஷ்ணரை புல்லாங்குழல் வாசிக்குமாறு கேட்டுக்கொண்டால், உடனே அவருக்காக வாசிப்பார்.
தரங்கிணி, கிருஷ்ணர் முன்கூட வராமல் ஒரு ஓரத்தில் நின்றுகொள்வார். அமைதியாக, அவருடைய இருப்பையும் இசையையும் தூரத்தில் இருந்தே இரசிப்பார். கிருஷ்ணர் போனபிறகு, அவர் நின்று வாசித்த இடத்திலிருந்து, அவர் பாதம் பட்ட மண்ணைத் (பாதத் தூளி) தொட்டு ஒற்றிக்கொள்வார்.
ஒருநாள் கிருஷ்ணர் மறதியாக, புல்லாங்குழலை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்! கண்டிப்பாக, அவர் மறந்திருக்க மாட்டார், மறந்துவிட்டதுபோல நடித்தார். கிருஷ்ணர் மறப்பாரா? அவர் மற்றவர்களைத்தான் மறக்கச்செய்வார்! அவர் ஒருபோதும் மறப்பதில்லை.
அவர் புல்லாங்குழலை மறந்துவிட்டதுபோல் நடித்தார். வழக்கம்போல், கிருஷ்ணருடைய பாதத் தூளியை வணங்கப்போன தரங்கிணியின் கண்களில் அந்தப் புல்லாங்குழல் தென்பட்டது. அதை மறுதினம்

கிருஷ்ணரிடம் கொடுத்துவிடலாம் என்றெண்ணி, தம் வீட்டிற்கு எடுத்துச்சென்றார்.
அடுத்த நாள் கிருஷ்ணர், “யாரோ என் புல்லாங்குழலை எடுத்துச் சென்று விட்டார்கள்,” என்று சொல்லி, அதைத் தேடுவதுபோல் நடித்தார். தரங்கிணிதான் அதை எடுத்துச்சென்று, தம் வீட்டில் வைத்திருப்பதாக அதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். கிருஷ்ணர் உயர் ஜாதியினராதலால், பிற்படுத்தப்பட்ட குலத்தோர் வாழும் பகுதிக்குச் செல்ல அவருக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. யசோதை, ஏன் அங்குச் சென்றாய் என்று கேட்கக்கூடும். அவர், கிருஷ்ணரைத் தண்டிக்கவும் கூடும்.
தரங்கிணிக்காக,
கிருஷ்ணர் வாசித்த ராகம்
புன்னாகவராளி –
‘உடைந்த ராகம்’ என்று
அறியப்படுகிறது.
ஏனென்றால், உயர்ஜாதி மக்கள் அங்குச்
செல்லக்கூடாது. ஆனாலும் சேறும்
சகதியுமான தெருவில் கிருஷ்ணர்
நடந்துசென்றார். அந்தக் குடிசையில்
ஆயிரம் சூரியன்கள் மின்னிக்கொண்டு
இருந்தன. இதற்கு என்ன அர்த்தம்
என்றால், குடிசையில் ஆயிரம் ஓட்டைகள்
இருந்தன. அந்தக் குடிசைக்குள் கிருஷ்ணர்
நுழைந்து தரங்கிணியிடம் தம்முடைய
புல்லாங்குழலைக் கேட்டார்.
கிருஷ்ணரைத் தம் வீட்டினுள் பார்த்த தரங்கிணி இன்ப அதிர்ச்சியடைந்தார். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் அவரால் பேசக்கூட முடியவில்லை. அவர் ஓடிச்சென்று புல்லாங்குழலைக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தார். கிருஷ்ணர் தம் நடிப்பைத் தொடர்ந்தார், “நான் புல்லாங்குழல் வாசிக்க வேண்டுமா,” என்று கேட்டார். கிருஷ்ணர் கேட்டு யாராவது மறுப்பார்களா?
அவர், “என் பிரபுவே, கடவுள்களும் ரிஷிகளும்கூட தங்கள் இசையைக் கேட்க கீழிறங்கி வருகிறார்கள். நான் மாட்டேன் என்று சொல்வேனா?” என்று பதிலளித்தார்.
கிருஷ்ணர், தரங்கிணி வீட்டுப் படியிலேயே அமர்ந்து வாசிக்கத் தொடங்கினார். தரங்கிணி ஓர் ஓரத்தில் அமர்ந்து பேரின்பத்தில் மூழ்கி இருந்தார். அந்த நேரத்தில், யசோதை அங்கு வந்துவிட்டார்.
அந்தக் காட்சியைப் பார்த்த அவர் மிகவும் மனங்குலைந்து போனார். ஏனென்றால், கிருஷ்ணர் அவருக்காக ஒருமுறைகூட புல்லாங்குழல் வாசித்ததில்லை.
யசோதை, "நான் உனக்கு உணவு கொடுத்து, உன்னைச் சீராட்டி பாராட்டி கண்ணுங்கருத்துமாகக் கவனித்துக் கொள்கிறேன். நீ எனக்காக வாசித்ததே இல்லை. ஆனால், நீ இங்கு வந்து இந்தப் பெண்ணுக்காக வாசிக்கிறாய்," என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டார்.
யசோதை குறுக்கிட்டதால் கிருஷ்ணர் வாசிப்பதை நிறுத்திவிட்டார். தரங்கிணிக்காக, கிருஷ்ணர் வாசித்த அந்த ராகம் புன்னாகவராளி - 'உடைந்த ராகம்' என்று அறியப்படுகிறது.
கிருஷ்ணர் யசோதையிடம் சொல்கிறார்,
"நீங்கள் எனக்கு சேவை செய்கிறீர்கள்,
சந்தேகமில்லை. ஆனால், 'நான்' என்ற
மனப்பாங்குடன் செய்கிறீர்கள்.
> நம் தேடல் தீவிரமானதாக
> இருந்தால்,
> வாழும் குருவுடன்
> ஒரு ஆழமான இணைப்பை
> நாம் உணர்வோம்.
தரங்கிணி, என்னிடம் பக்திகொண்டிருக்கிறாள். நீங்கள், உங்கள் மேல் பக்திகொண்டு இருக்கிறீர்கள். நான் உங்களுடைய கிருஷ்ணராக இருக்கும்வரை, நீங்கள் என்னைக் கவனித்துக் கொள்வீர்கள். இதன் பொருள், நீங்கள் உங்கள் மேல் பக்திகொண்டு இருக்கிறீர்கள். நீங்கள், உங்களையே மையப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள், என்னிடம் மையங்கொண்டிருக்கவில்லை. அதனால்தான் இந்த ஐந்து நிமிட பிரிவைக்கூட, உங்களால் ஜீரணிக்க முடியவில்லை."
உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற உணர்ச்சித்தூண்டுதல் என்பது இதுவே.
கிருஷ்ணர் தொடர்ந்தார், "நீங்கள் ஒரு ஐந்து நிமிடம்கூட, என் நேரத்தை அவளுக்குக் கொடுக்க இடந்தரவில்லை. என்னைத் தேடி இங்கேயே வந்துவிட்டீர்கள். தரங்கிணி, தன் வீட்டுக்கு வரச்சொல்லி என்னை ஒருபோதும் கேட்டுக்கொண்டதில்லை. அவளுக்காக நான் வாசிக்க வேண்டுமென்றும் அவள் எதிர்பார்த்ததில்லை. அவள், 'நீங்கள்' என்ற மனப்பாங்குடன், முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவள்."
பிறகு கிருஷ்ணர் தரங்கிணியைப் பார்த்துச் சொல்கிறார், 'நீ ஸாமீப்ய முக்தி அடைவாய். நீ செண்பக மலராக மாறி என் மாலையை அலங்கரிப்பாய். நீ என்றும் என்னுடனே இருப்பாய்,'' என்று ஆசீர்வதித்தார்.
ஸாலோக்ய முக்தி, ஸாரூப்ய முக்தி, ஸாமீப்ய முக்தி, ஸாயுஜ்ய முக்தி என நான்கு வகையான முக்திகள் இருக்கின்றன.
சர்க்கரையைச் சுவைப்பவராகவே இருங்கள், சர்க்கரையாகவே மாறிவிடாதீர்கள்
ஸாலோக்யம் என்றால் அதே இடம் என்று பொருள். நாம் விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்திலேயே வசிக்க அனுமதிக்கப்படுவோம்.
ஸாரூப்யம் என்றால் இறைவனின் வடிவத்தையேகொண்டு இருப்பது. உதாரணத்திற்கு, துவார பாலகர்களான ஜெயன், விஜயன் இருவரும் அதே சங்கு, சக்ரம், கதை, பத்மம் (தாமரை) போன்ற எல்லா கருவிகளையும் வைத்துக்கொண்டு விஷ்ணுவின் அதே ஸ்வரூபத்தில் (வடிவத்தில்) இருப்பார்கள்.
ஸாமீப்யம் என்பது அவருடனேயே வாழ்வது. விஷ்ணு வைத்துக்கொண்டு இருக்கும் சக்ரம், ஸாமீப்ய முக்தி அடைந்து இருக்கிறது.
ஸாயுஜ்ய முக்தி என்றால் அத்வைத ஜ்ஞான நிலையை அடைவது.
ஸாமீப்ய முக்தி அடைவதுதான் சி
றந்த ஞானநிலை. ஏனென்றால், ஒரு
எறும்பு எப்போதும் இனிப்பைச்
சுவைத்துக்கொண்டிருப்பது போன்று,
அவருடைய ஸாந்நித்யத்தை எப்போதும்
ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு
இருக்கலாம்.
பக்தர்களுக்கு,
உச்ச ஞானநிலை என்பது
ஸாமீப்ய முக்தியே!
ஸாயுஜ்ய முக்தி என்பது இனிப்பாகவே
மாறிவிடுவது. இது எல்லா ரிஷிகளும்
அடைந்த நிலை.
பக்தர்களுக்கு, உச்ச ஞானநிலை என்பது
ஸாமீப்ய முக்தியே! அதனால் தரங்கிணிக்கு
கிருஷ்ணர் ஸாமீப்ய முக்தியளித்து
ஆசீர்வதிக்கிறார்.
கிருஷ்ணர் தரங்கிணியிடம், “நீ என்
மாலையில் ஒரு மலராக மாறி, என் மீதே
இருப்பாய்,” என்றார். பிறகு யசோதையின்
பக்கம் திரும்பி, “நீங்கள், 'நான், நான்,
நான்' என்ற மனப்பாங்குடன் சேவை
செய்ததால், பூலோகத்தில் உங்களுக்கு ஒரு
கோயில்கூட இருக்காது,” என்றார்.
> ‘நீங்கள்’ என்ற
> மனப்பாங்குடன்
> வாழும்பொழுது,
> ஆயிரம் ஓட்டைகளை
> உடைய குடிசையில்
> வசித்தாலுங்கூட, கிருஷ்ணர்
> நமக்காக வாசற்படியில்
> காத்திருப்பார்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், தரங்கிணி, ‘நீங்கள்’ என்ற மனப்பாங்குடனும், யசோதை, ‘நான்’ என்ற மனப்பாங்குடனும் இருந்தார்கள். அதனால்தான் யசோதையின் அனைத்து சேவைகளும் நேர்மறையான விளைவைத் தரவில்லை.
யசோதை, கிருஷ்ணருக்கு நிறைய சேவைகள் செய்திருக்கிறார். ஆனால், யசோதைக்கு ஒரு கோயில்கூட இல்லை! யசோதைக்கான கோயிலை நீ ங்கள் எங்காவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை, எல்லா இடங்களிலும் இராதையின் கோயில்களைப் பார்க்கலாம். பிருந்தாவனத்தில், கிருஷ்ணரைவிட இராதைதான் அதிகமாக வழிபடப்படுகிறாள். அங்குப் பால்காரர்கூட ‘ராதே, ராதே’ என்று கூவித்தான் பால் விற்பார், ‘கிருஷ்ணா’ என்று கூவுவதில்லை.
யசோதை, கிருஷ்ணருக்கு எல்லா சேவைகளும் செய்திருந்தபோதும்கூட, ‘நான்’ என்ற மனப்பான்மையில் மையங்கொண்டதால், யசோதையால் ஜ்ஞாந நிலையை அடைய முடியவில்லை.
ஆனால், இன்னொரு பக்கம், தரங்கிணி பிற்படுத்தப்பட்ட குலத்தில் பிறந்ததனால், கிருஷ்ணரை நெருங்கக்கூட முடியாமல் இருந்தார். அவர், கிருஷ்ணருக்கு சேவை செய்யவும் அனுமதிக்கப்படவில்லை ஆனாலும் அவர், ‘நீங்கள், நீங்கள், நீங்கள்’ என்ற மனப்பாங்குடன் வாழ்ந்ததால், கிருஷ்ணர் அவள் வீட்டிற்கே சென்றார். தம் அருகிலேயே என்றென்றும் இருக்க ஆசீர்வதித்து, முக்தியையும் கொடுத்தார்.
‘நான்’ என்ற மனப்பாங்குடன் தெய்வத்தின் பின்பு நீங்கள் ஓடினாலுங்கூட, தெய்விகத்தை அடைய முடியாது. ஏனென்றால், தெய்விகம் உங்களைக் கண்டு ஓடிவிடும்.
'நீங்கள்' என்ற மனப்பாங்குடன் வாழும்பொழுது, ஆயிரம் ஓட்டைகளை உடைய குடிசையில் வசித்தாலுங்கூட, கிருஷ்ணர் நமக்காக வாசற்படியில் காத்திருப்பார்.
'நான்' என்பது நம்மிடமிருந்து எப்படி தெய்வத்தை விலக்கி வைக்கிறது என்பதையும், 'நீங்கள்' என்பது தெய்விகத்தை எப்படி ஈர்க்கிறது என்பதையும் பல கதைகள் விவரிக்கின்றன. 'நீங்கள்' என்பதே தெய்விகத்தை ஈர்க்கும். ஒரு சிறிய மனமாற்றம், மிகப்பெரிய உணர்வுமாற்றத்திற்கு வழிவகுக்கும்.
தெய்விகம் பாரபட்சமற்றது
'நீங்கள்' என்பதே
தெய்விகத்தை ஈர்க்கும்.
ஒரு சிறிய மனமாற்றம்,
மிகப்பெரிய
உணர்வுமாற்றத்திற்கு
வழிவகுக்கும்.
நான் உங்களுக்கு இன்னொரு சின்ன கதை
சொல்கிறேன். இது விஷ்ணு பகவானுடைய
சங்கு, சக்கரம், பாதுகை மூன்றிற்கும்
இடையே நடந்த சண்டையைப் பற்றியது.
விஷ்ணு, ஒருநாள் வெளியே சென்றுவிட்டு வைகுண்டம் திரும்பியிருந்தார். விஷ்ணு என்பவர் பிரபஞ்சத்தை சுற்றி வந்து மகிழ விரும்பும் ஆனந்த சக்தி!
விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டம், சிவனுடைய வசிப்பிடத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும். அது வேடிக்கையும், மகிழ்ச்சி ஆரவாரங்களும் நிறைந்த ஒரு இடம். தொடர்ந்து நாட்டியங்கள் நடந்துகொண்டிருக்கும். அத்துடன் பல்வேறு விதமான உணவுகளும் பரிமாறப்படும்!
நாம் கதைக்குத் திரும்புவோம். வெளியில் சென்றுவிட்டு வைகுண்டம் திரும்பிய விஷ்ணு, தம் பாதுகைகளை தம் படுக்கை அறைக்கு வெளியே விட்டுவிட்டு, தம் அழகான பாம்புப் படுக்கையான ஆதிசேஷன் மீது படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது சங்கும் சக்கரமும் பாதுகையைப் பார்த்துச் சிரித்தன. "பார், நீ விஷ்ணுவை நாள் முழுவதும் சுமக்கலாம், ஆனால், அவர் அறைக்குள் வரும்போது நீ வெளியேதான் இருக்கிறாய். நாங்கள் மட்டும்தான் அவருடன் உள்ளே வருகிறோம். நீ உண்மையில் ஸாமீப்ய முக்தி அடையவில்லை. நாங்கள் இருபத்து நான்கு மணி நேரமும் அவருடனேயே இருக்கிறோம். நாங்கள் முழு ஸாமீப்ய முக்தி அடைந்து இருக்கிறோம். நீ பன்னிரண்டு மணி நேரம் வெளியில்தான் இருக்கிறாய். அதனால் நீ பாதி ஸாமீப்ய முக்திதான் அடைந்திருக்கிறாய்,” என்றன.
பாதுகையும், "அது சரியே, நான் என்ன செய்ய முடியும்? விஷ்ணு என்ன விரும்புகிறாரோ, அதுவே நடக்கட்டும்!” என்றது.
மறுநாள் காலையில் விஷ்ணு வெளியே வந்தபோது, பாதுகை அவரிடம், “பிரபு, சங்கும் சக்கரமும் என்னைக் கேலி செய்கின்றன. என்னுடைய சேவை உங்களுக்கு நிறைவளிக்கவில்லையா? என்னுடைய சேவையில் நீங்கள் சந்தோஷப்படவில்லை என்பது உண்மையா? நான் பாதி ஸாமீப்ய முக்திதான் அடைந்து இருக்கிறேனா? நான் என்ன தவறு செய்தேன்?” என்று கேட்டது.
விஷ்ணு சிரித்துக் கொண்டே பாதுகையிடம் சொன்னார்: "ஒருவர் செய்கின்ற வேலையும், அவர் என்னுடன் இருக்கின்ற நேரத்தின் அளவும், அவரின் முக்கியத்துவத்தை நிர்ணயிப்பதில்லை. சங்கு, சக்கரமே எனக்கு முக்கியமானவர்கள், நீ எனக்கு முக்கியமற்றவன் என்பதெல்லாம் ஒருபோதும் கிடையாது. உங்கள் மூவருக்குமே, உங்களுக்கென்று தனித்தனி வேலைகளும் இடங்களும் இருக்கின்றன. எனக்கு யாரிடத்தும் எந்தப் பாரபட்சமும் கிடையாது.”
அவர் மேலும் சொன்னார்: "சக்கரம், துஷ்டர்களைக் கொல்லும்; சங்கு, வெற்றியைப் பறைசாற்றும்; நீ என்னைச் சுமப்பாய்; இவை நீங்கள் ஏற்றிருக்கின்ற பாத்திரங்கள் (பொறுப்பு). உங்களுடைய கடமைகள் வெவ்வேறானவை. உங்கள் இடமும் வெவ்வேறு.
சங்கு, சக்கரத்தை வழிபடுவதால் மக்கள் விடுதலை (ஞானம்) அடைய மாட்டார்கள். அவர்களால் மக்களுக்கு விடுதலையை அளிக்க முடியாது. ஆனால், உன்னை வழிபடுபவர்கள் விடுதலை அடைகிறார் கள்! (பாதுகை வழிபடப்படும்போது ஞானத்தை அளிக்கிறது.)
> பாதுகையைப் பற்றினால் மட்டுமே, மக்கள் ஞானமடைய முடியும்.
உன்னைப் பற்றிக்கொள்வதால் மட்டுமே,
மக்கள் ஞானமடைய முடியும். அவர்கள்
உன்னைக் கேலி செய்த காரணத்தால்,
அவர்கள் பூமியில் பிறந்து, உன்னைப்
பதினைந்து ஆண்டுகள் வழிபடட்டும்.
நீதான் அவர்களுக்கு முக்தி கொடுக்க
முடியும் என்பதைப் புரிந்துகொள்ளட்டும்,"
என்றார்.
இதனால் சங்கும் சக்கரமும், பூமியில்
பரதனாகவும் சத்ருக்கனாகவும் பிறந்து,
இராமர் காட்டிற்குச் சென்ற பிறகு,
இராமரின் பாதுகையைப் பதினான்கு
ஆண்டுகள் வழிபட்டார்கள்.
பாதுகை,
'நீங்கள், நீங்கள்' என்ற
நினைவுடன் இருந்ததால்
வழிபடப்பட்டது.
குருவைச் சுற்றி வாழும் மக்களுக்கு வெவ்வேறு விதமான பொறுப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பதை, நாம் கண்டிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் சிலரை முக்கியமானவர்கள் என்றும், சிலரை முக்கியமற்றவர்கள் என்றும் நினைத்தால், நாம் துன்பங்களைத்தான் சந்திக்க நேரிடும்.
யார் ஒருவர், தம்மை 'முக்கியமானவர்' என்று நினைக்கிறாரோ, அவர், 'முக்கியமற்றவர்' என்று தாம் நினைத்தவரின் முன் மண்டியிட வேண்டியதிருக்கும்.
சங்கும் சக்கரமும், 'நான், நான், நான்' என்று நினைக்கத் தொடங்கியதால், இயல்பாகவே துக்கங்களைச் சந்தித்தன. பாதுகை 'நீங்கள், நீங்கள், நீங்கள்' என்ற நினைவுடன் இருந்ததால் வழிபடப்பட்டது.
விஷ்ணு பாதுகையை ஆசீர்வதித்து, "சங்கும் சக்கரமும் உன்னை வழிபட்டு விடுதலை அடையட்டும். அதன்பிறகு உன்னைப் பற்றி இதுபோல் பேச மாட்டார்கள்," என்று சொன்னார்.
நாம் எதில் மையங்கொண்டு இருக்கிறோம். நம் கவனம் எதில் குவிக்கப்பட்டு இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் நம் வாழ்க்கை தெய்விகமா அல்லது அசுரத்தனமா என்பது முடிவுசெய்யப்படுகிறது. தெய்விகம் அல்லது அசுரத்தனம், ‘நீங்கள்’ அல்லது ‘நான்’ என்ற ஒரே கோட்பாட்டினால்தான் நிர்ணயிக்கப்படுகிறது.
தடுமாற்றம், நம்மை நாமே திரும்பிப் பார்க்க உதவிசெய்யும்
இப்பொழுது மற்றொரு முக்கியமான விஷயம். ‘நீங்கள்’ மற்றும் ‘நான்’ என்பதைக் கேட்ட பிறகு, அடுத்து உங்கள் மனத்திற்குள் வரும் எண்ணம், ‘ஸ்வாமிஜி, நான், ‘நீங்கள்’ என்ற அடிப்படையில் வேலைசெய்கிறேனா அல்லது ‘நான்’ என்ற அடிப்படையில் வேலைசெய்கிறேனா என்று தெரியவில்லை. நான் அசுரத் தன்மையில் இருக்கிறேனா அல்லது தெய்விகத்தன்மையில் இருக்கிறேனா என்பது பற்றி எனக்குக் கவலையாக இருக்கிறது. தயவுசெய்து வழிகாட்டுங்கள், நான் எந்தத் தன்மையில் வேலைசெய்கிறேன், எனக்குச் சொல்லுங்கள்’ என்பதாகத்தான் இருக்கும்.
நான் உறுதியாகச் சொல்கிறேன். எப்பொழுது இந்தப் பயம் உங்களுக்குள் வந்ததோ, அதுவே நீங்கள் தெய்விகத் தன்மையில் இருக்கிறீர்கள் என்பதற்கான அத்தாட்சி. எவர், தம் மனத்தைப் பார்க்கத் தயாராக இருக்கிறாரோ, எவர், தாம் செய்வது சரியா? தவறா? என்று பயப்படுகிறாரோ, அவர் எப்போதும் சரியாகவே வாழ்வார்.
யார் ஒருவர், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்களோ, அவர்கள்தான் அசுரத்தன்மையில் இருப்பவர்கள். அசுரத் தன்மையில் இருப்பவர், தாம் செய்வது சரியா, தவறா என்பது பற்றியெல்லாம் நினைக் கக்கூட மாட்டார். ‘தாம் செய்வதே சரி’ என்ற மனப்பான்மையில்தான் இருப்பார்.
அர்ஜுனனுக்கும் அந்தப் பயம் இருந்தது,
‘பகவானே, நான் தெய்விகத்தன்மையில்
வாழ்கிறேனா அல்லது அசுரத்தன்மையில்
வாழ்கிறேனா?’ என்பதை அவர்
வெளிப்படையாகக் கேட்கவில்லை,
என்றாலும் அவர் முகம் அதை
வெளிக்காட்டியது.
‘நீங்கள்’ என்ற
மனப்பான்மையில்
வாழ்வது, ஒருவரை
முக்தியடையச் செய்கிறது.
இப்போது பகவான் கிருஷ்ணர் விளக்குகிறார். 'நீங்கள்' என்ற மனப்பான்மையில் வாழ்வது, ஒருவரை முக்தியடையச் செய்கிறது. அது, நிவ்ரு’த்தி மார்க்கம் என்றழைக்கப்படுகிறது. அசுரத்தன்மை பந்தங்களைத்தான் உருவாக்கும். அது, ப்ரவ்ரு’த்தி மார்க்கம் என்றழைக்கப்படுகிறது.
அர்ஜுனன் தெய்விகப் பண்புகளுடன்தான் பிறந்திருக்கிறார் என்று, பகவான் கிருஷ்ணர் உறுதிப்படுத்துகிறார்.
நாம் என்றாவது சிரத்தையோடு அமர்ந்து, நான், 'நான்' என்ற மனப்பாங்கில் வாழ்கிறேனா? அல்லது 'நீங்கள்' என்ற மனப்பாங்கில் வாழ்கிறேனா? என்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்திருந்தால், அதைக் குறித்து நமக்கு பயமோ, குற்றவுணர்ச்சியோ ஏற்பட்டால், தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம் தெய்விகத் தன்மையில்தான் பிறந்து இருக்கிறோம்.
ஆனால், அப்படியில்லாமல் அதற்குப் பதிலாக, 'நாம் சரியாகத்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், வேறுபொழுதுபோக்கு ஏதும் இல்லாததால் இங்கு வந்திருக்கிறோம்' என்று நினைத்தால், 'இந்தக் குரு என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே' என்ற எண்ணத்துடன் இருந்தால், இதிலிருந்தே தெளிவாக நம் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம்!
நாம் ஒருமுறை, நம் இருப்புத்தன்மையை ஆழ்ந்து பார்த்து, அதைப் பரிசீலித்து, 'நான் தெய்விக இயல்புடன் வாழ்கிறேனா? அல்லது
நேர்மையாக வாழும் ஒரு
மனிதர்,
தெய்விகப் பண்புகளைப்
பற்றிக் கேட்கும்பொழுது,
அவற்றுடன் தம்முடைய
இயல்பைச் சரிபார்க்க
முயற்சிப்பார்.
அசுரத் தன்மையுடன் வாழ்கிறேனா? எது
என் இயல்பு?' என்ற இந்த அளவுகோலால்
நம்மையே அளந்து பார்க்க முயற்சி
த்தால், நாம் அர்ஜுனனின் நிலையில்
இருக்கிறோம்.
தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள், நாம்கூட, அர்ஜுனனைப்போல தெய்விகப் பண்புகளுடன்தான் பிறந்து இருக்கிறோம். அதனால் இந்தப் பண்புகளைக் கேட்டவுடன் கவலைப்படுகிறீர்களென்றாலே, கண்டிப்பாக நீங்கள் தெய்விகப் பண்புகளுடன்தான் பிறந்து இருக்கின்றீர்கள். இனியும் இதைப்பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
நேர்மையாக வாழும் ஒரு மனிதர்,
இது போன்ற வார்த்தைகளைக்
கேட்கும்பொழுது, அவற்றுடன் தம்முடைய
இயல்பைச் சரிபார்க்க முயற்சிப்பார். அவர்
தர்மத்தை மையமாகக்கொண்டு இருப்பார்.
நம்மை நாமே
செதுக்கிக் கொள்ளும்போது,
நாம் கடவுளாகிறோம்.
நேர்மையற்ற முறையில் அதர்மத்தில் வாழும் மக்கள், இந்த உரைகளைக் கேட்கும்பொழுது, 'இந்த ஸ்வாமிஜி இவற்றையெல்லாம் அப்படியே வாழ்வதுபோலப் பேசுகிறார், உண்மையிலேயே இந்தக் கருத்துகளுடன் இவர் இயைந்து செல்கிறாரா? எப்படி வாழ்கிறார் என்று பார்ப்போமே' என்று நினைப்பார்கள்.
தெய்விகத் தன்மையைக் கொண்டுள்ள மனிதர், தம்மைத்தாமே செதுக்கிக்கொள்ள அல்லது திருத்திக் கொள்ளத்தான் முயற்சிப்பார். அசுரத் தன்மை உள்ளவர், மற்றவர்களைச் சரிசெய்ய முயற்சிப்பார்.
அசுர இயல்போடு இருப்பவர், சுத்தியலையும் உளியையும் மற்றவர்களை நோக்கிப் பிடித்துக்கொண்டு இருப்பார். தெய்விக இயல்போடு இருப்பவர், சுத்தியலையும் உளியையும் தம்மை நோக்கியே பிடித்துக்கொண்டு இருப்பார்.
உங்கள் அடையாளங்களை விட்டுவிடுங்கள்!
நம்மை நாமே செதுக்கிக் கொள்ளும்போது, நாம் கடவுளாகிறோம். நமக்குள் பார்த்துக் கொள்பவராக நாம் இருந்தோமேயானால், நாம் தெய்விக இயல்புடன்தான் பிறந்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அர்ஜுனன் இப்பொழுது முதிர்ச்சி அடைந்தவராய் இருந்ததால், இந்த ஸத்யங்களைக் கேட்ட மாத்திரத்தில், அவர், தம் இருப்புத் தன்மையைத் திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். அவ்வாறு, தம் இருப்புத்தன்மையை திரும்பிப் பார்க்க ஆரம்பித்துவிட்டதால், அர்ஜுனன் தெய்விகப் பண்புடன்தான் பிறந்திருக்கிறார் என்று
சொல்கிறார், கிருஷ்ணர்.
கிருஷ்ணர், 'நான், நான், நான்' என்று வாழும் மனிதரின் இயல்புகளை விவரிக்கிறார். நாம், இந்தப் பண்புகளைப் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இந்தப் பண்புகளுடன்தான் நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதனால்தான், இன்னமும் நாம் துக்கப்பட்டுக்கொண்டு இருப்பதாக உணர்கிறோம்.
இந்தப் பண்புகள் பற்றி நாம் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், நமக்குப்போதுமான அளவு இந்தப் பண்புகளைப் பற்றித் தெரியும். நமக்குத் தெரியவேண்டியது எல்லாம், ‘நீங்கள், நீங்கள், நீங்கள்’ என்ற மனப்பாங்குடன் வாழ்வது எப்படி என்பதுதான்.
தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்,
‘நீங்கள், நீங்கள், நீங்கள்' என்ற
மனப்பாங்குடன் வாழ ஆரம்பித்தால், நாம்
நம்மை முழுமையாக மறந்துவிடுவோம்.
நாம் பிரபஞ்ச இருப்புத்தன்மைக்குள்
மறைந்துவிடுவோம். நாம் பேரானந்தத்தில்
இருப்போம்.
பகவான் கிருஷ்ணர் பேசிய முக்கியமான ஒரு நுட்பத்தை நான் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். ஒரு மூன்று நாட்களுக்கு, உங்களை வேறு யாரோ என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கருத்து, கேட்பதற்கு வேடிக்கையானதாக இருக்கும்.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு மருத்துவராக இருந்தால், ஒரு மூன்று நாட்களுக்கு, உங்களை, கடற்கரையில் உலாவும் ஒரு பைத்தியமாக நினைத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவராக அல்லாமல், வேறு ஒருவராக உங்களைத் தெளிவாக உருவகப்படுத்திப் பாருங்கள். உங்களைப் பற்றிய கருத்து மாறிய அந்த வினாடியே, ஒரு மிகப் பெரிய சுதந்திரம் உங்களுக்குள் நிகழும். உங்கள் மன இறுக்கம் காணாமல் போகும்.
ஸந்நியாஸம் எடுப்பதற்கு முன் ஒருவர், பூத சரீரவாஸம் என்ற ஒரு தியானத்தை மேற்கொள்ள வேண்டும். இதன் பொருள், தம் கடந்தகாலம் முழுவதையும் விட்டுவிடுவது என்பதாகும். அவர், தம் பெற்றோர் உயிருடன் இருந்தாலும்கூட, அவர்களுக்கு ச்'ராத்தா சடங்குகளைச் செய்ய வேண்டும்.
இது எதற்காக என்றால், அவர் ஸந்நியாஸம் எடுத்த பிறகு, அவருடைய பெற்றோர் இறந்தால், யார் அவர்களுக்கு ச்'ராத்தா சடங்குகளைச் செய்வார்கள்? அதற்காக அவர் முன்கூட்டியே செய்துவிடுகிறார்.
அவர் தமக்கும் ச்'ராத்தா சடங்குகளைச் செய்துகொள்ள வேண்டும். அவருக்குக் குழந்தைகள் இருக்க வாய்ப்பில்லாததால், அவருக்காகச் செய்ய யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால், அவரே செய்துகொள்கிறார்!
ச்'ராார்த்தா செய்த பிறகு, அவர், தம்
அடையாளத்தை விட்டுவிட வேண்டும்.
மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர்
- என்னவாக இருந்தாலும், அவர் அந்த அடையாளங்களை விட்டுவிட வேண்டும். இதைச் செய்வதற்கு அவர், ஒரு பூத கணத்தைப்போல உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, ருத்திராட்சம் அணிந்துகொண்டு, ஆனந்தக்கூத்தாட வேண்டும்.
> பூத ச'ரீரவாஸ த்யானம்
> என்றால், நம்முடைய
> கடந்தகால
> அடையாளங்களை
> உடைத்து, அதிலிருந்து
> விடுபடுவது என்று பொருள்.
அவர், தம் அடையாளத்தை முழுவதுமாகத் துறந்த பிறகு, தம் உணவுக்காக, பிட்சை எடுக்க வேண்டும். அவர், தம்முடைய முந்தைய அடையாளத்துடன் தம்மைச் சம்பந்தபடுத்திக்கொள்ளக் கூடாது. மூன்று நாட்களுக்கு, தம்மை வேறுயாரோபோல் நினைத்து தியானிக்க வேண்டும். இந்தத் தியானத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே, மூன்று நாட்களுக்கு, தம் அடையாளத்தை உடைத்தால் மட்டுமே, அவருக்கு ஸந்நியாஸம் வழங்கப்படும்.
இதுவே பூத ச'ரீரவாஸ த்யானம், எனப்படுகிறது. நம்முடைய கடந்தகால அடையாளங்களை உடைத்து, அதிலிருந்து விடுபடுவது என்று பொருள்.
மூன்று நாட்களுக்கு, இந்தத் தியானத்தை முயற்சிசெய்து பாருங்கள். மூன்று நாட்களுக்கு, உங்களை வேறு யாரோபோல் நினைத்துக் கொள்ளுங்கள். எதையெல்லாம் உங்கள் செல்வம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அதை எல்லாம் மறந்து விடுங்கள். எதையெல்லாம் உங்கள் பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அவற்றைத் தூக்கி வெளியே போடுங்கள். உங்கள் தொழில் என்று எதை நினைக்கிறீர்களோ, அதை விட்டு விடுங்கள். நீங்கள், மூன்று நாட்களுக்குப் பிறகு இதையெல்லாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், மூன்று நாட்களுக்கு எல்லாவற்றையும் தூக்கிப் போடுங்கள்.
ஒரு புதிய விழிப்புணர்வு உங்களுக்குள் உதிப்பதை நீங்கள் காணலாம். நீங்கள் ‘நான்’ என்பதைத் தூக்கி எறிந்தால் போதும், அது மட்டுமே உங்களை ஜீவன்முக்தராக்கி விடும். மேலும் நீங்கள், ‘நீங்கள்’ என்ற அடிப்படையில் வேலைசெய்யத் தொடங்கி விட்டால், நீங்கள் அளப்பரிய ஆனந்தத்தை அனுபவமாகப் பெறலாம்.
நீங்கள், ‘நான்’ என்பதைக் கைவிட்டவுடன், அமைதியை உணர்வீர்கள்; ‘நீங்கள்’ என்ற அடிப்படையில் நீங்கள் வேலைசெய்ய ஆரம்பிக்கும்போது, நீங்கள் அமைதியையும் ஆனந்தத்தையும் உணர்வீர்கள். இதுதான் அமைதிக்கும் ஆனந்தத்திற்குமான நேரடியான வழி.
மனிதர்களை மன்னிக்க முடியாது
அசுரன் என்பவன் தலையில் கொம்புகள், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பற்கள், ஆறு கரங்கள், பயமுறுத்தும் பார்வை என, பார்க்க பயங்கரமாக இருக்க மாட்டான்.
ஒருவர், பந்தம் என்றால் என்ன, விடுதலை என்றால் என்ன என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதே அசுரகுணம் என்கிறார், கிருஷ்ணர். இந்தத் குணம் கொண்டவர்கள், விருப்பு வெறுப்புகளில் ஆழமாக மூழ்கிவிடுவார்கள். இக்குணங்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்பதை ஒருபோதும் அவர்கள் உணர மாட்டார்கள். அவர்கள் பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதைக்கூட அறியாத அளவுக்கு, அவர்கள் பந்தத்தில் சிக்குண்டு இருப்பார்கள்.
பைத்தியக்கார காப்பகத்தில் இருக்கும் ஒரு பைத்தியக்கார மனிதருக்கு தம்மைத்தவிர, உலகத்திலுள்ள மற்ற அனைவருமே பைத்தியங்கள் என்று தோன்றும். தாம் மட்டுமே விவேகம் உள்ள மனிதர் என்றும், மொத்த உலகமுமே விவேகமற்றதாகவும் தோன்றும்.
ஒருமுறை, புகழ்பெற்ற நடிகரொருவர், பொது மக்களுடனான தொடர்பை மேம்படுத்தும் நல்லெண்ணப் பயணமாக, மனநலம் குன்றியவர்களுக்கான காப்பகம் ஒன்றிற்குச் சென்றிருந்தார். அவர், ஒரு பிரபலமான மனிதராதலால், அவரைப் பார்த்தவுடனேயே அங்குள்ள அனைவரும் அவரை அடையாளம் கண்டுகொண்டனர்.
அவர், அந்தக் காப்பகத்தைச் சுற்றிப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, அங்கிருந்த ஒரே ஒருவர் மட்டும், இவரைப் பார்த்தவுடன் ஆர்வமாக, "நீங்கள் யார்?" என்று கேட்டார்.
அந்த நடிகருக்குத் தாள முடியாத ஆச்சரியம், ஏனென்றால், தம்மை அனைவரும் அறிந்திருப்பர் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர் கொஞ்சம் பகட்டாகவே, தம்முடைய பெயரைக்கூறி, தாம் ஒரு புகழ்பெற்ற நடிகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதைக்கேட்டு அந்தக் காப்பகவாசி, நடிகரைத் தம்முடன் வரு மாறு சைகைகாட்டி, ஒரு ஓரமாக அழைத்துச்சென்று, "உங்களுக்கு ஒன்று தெரியுமா, வந்த புதிதில் நானும் இதைத்தான் சொல்லிக்கொண்டு இருந்தேன். என்னை ஆறு மாதத்தில் குணமாக்கிவிட்டார்கள். நீங்களும் இங்கு ஆறு மாதம் தங்கியிருந்தால், நீங்களும் சரியாகிவிடுவீர்கள்!" என்று கிசுகிசுத்தார்.
நம்மில் பலரும் இப்படித்தான்
இருக்கிறோம்! நம்மைச் சுற்றியிருக்கும்
சிறைச்சுவரை நாம் அறியவில்லை,
அவ்வளவுதான். நாம் ஆசை,
அச்சத்தின் வழியாகவும் விருப்பு
வெறுப்புகளின் மூலமாகவும்தான்
> நாம்,
> ஆசை அச்சத்தின்
> வழியாகவும்,
> விருப்பு வெறுப்புகளின்
> மூலமாகவும்தான்
> சென்றுகொண்டிருக்கிறோம்.
சென்றுகொண்டிருக்கிறோம்.

சிக்கலான பாதையில் இருந்து
வெளியேற வழிதெரியாமல்,
அங்குமிங்குமாக
ஓடிக்கொண்டிருக்கும் ஒரு எலியை
மன்னித்துவிடலாம்.
ஆனால், ஆழமாக அறிந்துணரும் ஆற்றலும், எதையும் பகுத்து, நன்மை தீமைகளை அறிந்து கொள்ளும் ஆற்றலும் பரிசாகக் கொடுக்கப்பட்ட இந்த மனிதர்களை எப்படி மன்னிப்பது?
நமக்குக் கொடுக்கப்பட்ட உயர்ந்த அறிவை, குறைந்தபட்சம் நாம் எங்கே தவறு செய்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளவாவது நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது?
ஒரு சின்ன கதை
ஒரு மதபோதகர் மக்களிடம், "நீங்கள் இறந்தபிறகு, உங்களைச் சொர்க்கத்துக்கு அழைத்துச்செல்கிறேன்," என்று உறுதிமொழி அளித்து, நிறைய சீடர்களை வசீகரித்து வைத்திருந்தார்.
ஒருநாள் அந்த மதபோதகர் இறந்து போனார். உடனே இரண்டு சீடர்கள், அவரைப் பின்தொடர்ந்து செல்வதற்காகத் தற்கொலை செய்துகொண்டார்கள். ஏனென்றால், மதபோதகர் ஒருவேளை அவர் அளித்த உறுதிமொழியை மறந்துவிட்டால், தாங்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பை இழந்துவிட நேரிடலாம் என நினைத்தார்கள். அதனால் அவர்கள், அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட விரும்பவில்லை.
நமக்குக் கொடுக்கப்பட்ட
உயர்ந்த அறிவை,
குறைந்தபட்சம்,
நாம் எங்கே தவறு
செய்கிறோம் என்பதைத்
தெரிந்துகொள்ளவாவது,
நாம் ஏன்
பயன்படுத்தக்கூடாது?
அந்த மதபோதகருக்கும், தம் மரணத்திற்குப் பிறகும், இரண்டு சீடர்கள் தம்மைப் பின்தொடர்ந்து வருவது சந்தோஷமாக இருந்தது.
மூவரும் ஒரு அழகான அரண்மனையின் வாசலை அடைந்தார்கள். காவலர்கள் அவர்களை வரவேற்று, உள்ளே அனுப்பி வைத்தார்கள்.
உடனே அந்த மதபோதகர், தம் சீடர்களைத் திரும்பிப் பார்த்து, "பாருங்கள் நான் சொன்னதெல்லாம் உண்மையாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்னைப் பின்தொடர்ந்து வந்ததுபோல் வராமல், அங்கேயே தங்கிவிட்ட முட்டாள்கள் எல்லாம் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிட்டார்கள்," என்று பெருமையுடன் சொன்னார்.
அவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் போதே, அங்கு மூன்று அழகான பெண்கள் வந்தார்கள். அவர்களை வரவேற்று சுவையான உணவுகள் மற்றும் மது வகைகள் எல்லாம் கொடுத்து உபசரித்தனர். "நீங்கள், உங்களுக்கு விருப்பமானதை நினைத்தால் போதும், உடனே அவை அனைத்தும் உங்களுக்குக் கிடைக்கும்," என்று சொன்னார்கள்.
ஜாக்கிரதை...
சொர்க்கம்கூட
சலித்துப்போகும்!
அதுபோலவே, அவர்கள் எதைப்
பற்றியாவது நினைத்தால்போதும், அடுத்த
கணம் அது அவர்கள் கண்முன் இருந்தது.
அவர்கள் அந்த அரண்மனையின்
சுக போகங்கள் அனைத்தையும்
அனுபவித்தார்கள்.
ஒரு வாரத்திற்குள்ளாகவே, அதில் அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டது. அந்தப் போதகர் சொன்னார், "இது மிக அற்புதமான இடம்தான், இருந்தும் எனக்கு நம் ஆசிரம ஞாபகமாக இருக்கிறது," என்றார்.
அந்தச் சீடர்களும், "ஆம் குருவே, எங்களுக்கும் நம் ஆசிரம ஞாபகமாகவே இருக்கிறது. இங்கு இனி எந்த வேடிக்கையும் இல்லை. நாம், கற்பனைகூட செய்ய முடியவில்லை. நாம் கற்பனைசெய்து முடிப்பதற்கு முன், அது நம்முன் இருக்கிறது. சொர்க்கம் இப்படிச் சலிப்படைய வைக்கும் என்று நாம் நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால், இப்போது அதுதான் நிகழ்ந்திருக்கிறது," என்றார்கள்.
சலிப்படைந்த அவர்கள், சுற்றும் முற்றும் பார்த்தபோது, அந்த அறையில் சில ஜன்னல்கள் இருப்பதைப் பார்த்தார்கள். ஆனால், அந்த ஜன்னல்கள்
பூட்டப்பட்டு இருந்தன. அவர்களால்
வெளியே பார்க்க முடியவில்லை. இந்த
ஜன்னல்கள் திறக்கப்பட வேண்டுமென்று
விரும்பினார்கள். ஆனால்,
அதற்குப்பதிலாக, காவலர்கள் உள்ளே
வந்தனர்.
"ஐயா, உங்கள் விருப்பங்கள் இந்த நான்கு
சுவற்றுக்குள் மட்டும்தான் கிடைக்கும்.
உங்களால் அந்த ஜன்னல்களைத் திறக்க
முடியாது," என்றனர்.
> நாமே உருவாக்கிக்கொண்ட நம்முடைய நரகத்தில், நமது அசுரப் பண்புகளோடு சௌகரியமாக இருப்பதாக நாம் உணர்கிறோம்.
அந்தப் போதகர் காவலர்களிடம், "பாருங்கள், நாங்கள் மிகவும் சலிப்படைந்து விட்டோம். எங்களுக்கு ஆசிரம ஞாபகமாக இருக்கிறது. நாங்கள் எங்கிருந்து வந்தோமோ அந்தப் பூமியைப் பார்க்க விருப்பமாக இருக்கிறது. நாங்கள் அங்குப் போக முடியாவிட்டால்கூட, குறைந்தபட்சம், அதைப் பார்க்கவாவது முடியுமா?" என்று கேட்டார்.
ஒரு காவலாளி சொன்னார், "ஐயா இல்லை, அது முடியாது!"
உடனே அந்தப் போதகர் எரிச்சலடைந்து, "அப்படியானால் நாங்கள் நரகத்துக்காவது போக முடியுமா?" என்று கேட்டார்.
அந்தக் காவலாளி அவரைத் திரும்பிப் பார்த்து, ஆச்சரியமாய், "நீங்கள் இப்போது மட்டும் எங்கே இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்!" என்று பதிலுக்குக் கேட்டார்.
நாமே உருவாக்கிக்கொண்ட நம்முடைய நரகத்தில், நமது அசுரப் பண்புகளோடு சௌகரியமாக இருப்பதாக நாம் உணர்கிறோம். சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறோம்!
அசுர இயல்புகளையும், தெய்விக இயல்புகளையும் பிரித்துப்பார்க்கத் தெரியாமல் இருக்கிறோம். பந்தத்திற்கும் விடுதலைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் நமக்குத் தெரிவதில்லை.
நாம் ஆனந்தமயமாய் இருந்தால் கடவுள் நம் அருகில் இருப்பார்
கேள்வி: ஸ்வாமிஜி, நான் கேட்டவரை, நம் இயல்பான நிலை என்பது தெய்விகநிலைதான், அதிலிருந்துதான் நாம் அசுர நிலைக்குள் விழுந்துவிட்டோம். நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் இந்தத் தெய்விக நிலையிலேயே இருக்க முடியுமா?
நீங்கள் சொல்வது சரி. நான் சொன்னதுபோல, நீங்கள், 'ஒருவேளை நான் தெய்விகப் பண்புகளுடன் இல்லையோ' என, உங்களைப் பற்றிச் சந்தேகப்படத் தொடங்கினாலே போதும், நீங்கள் உங்கள் இயல்பான தெய்விக குணத்தை நோக்கிச் செல்லத் தொடங்குவீர்கள்.
மற்றவர்களை அக்கறையுடன் அன்பாக கவனித்துக்கொள்வது, 'நான்' என்பதற்குப் பதிலாக, 'நீங்கள்' என்பதில் கவனம் செலுத்துவது - இவை இயல்பாகவே உங்களைத் தெய்விகத்தை நோக்கி எடுத்துச் செல்லும்.
பெரும்பாலானோரிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், அவர்களுடைய கவனிப்பு, அன்பு என்பதெல்லாம் ஒரு வியாபார நடவடிக்கையாய் இருப்பதுதான்.
மக்கள், தங்களுக்கு அதில் ஏதாவது ஆதாயம் இருந்தால் மட்டுமே தங்களுடைய அன்பைக் கொடுக்கிறார்கள். தாய், தந்தை, வாழ்க்கைத் துணை, மகன், மகள், உறவினர்கள், நண்பர்கள் என்று யாருடன் பழகுவதாக இருந்தாலுமே, அதில் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்ற மனப்பாங்கில்தான் அவர்களுடன் பழகுகிறார்கள்.
| கவனிப்பு என்பது உண்மையான அன்பிலிருந்து வராமல், விருப்பிலிருந்தோ வெறுப்பிலிருந்தோ வருகிறது.
நாம் மற்றவர்களைக் கவனிப்பது எதற்காகவென்றால், நாம் அவ்வாறு அவர்களைக் கவனிக்காவிட்டால் நமக்கு ஏதாவது கெடுதல் நடந்துவிடும் என்ற பயத்தின் காரணமாக இருக்கும் அல்லது | எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் அன்பையும் கவனிப்பையும் கொடுத்தோமானால், நாம் ஆனந்தம் என்ற நிலைக்குள் நழுவி விழுந்துவிடுவோம். |
அவ்வாறு அவரைக் கவனித்துக் கொண்டால், நமக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற ஆசையின் காரணமாக இருக்கும். இது, மற்ற சேவைகளைச் செய்வதுபோலத்தான். இது, ஒரு ஒப்பந்த ரீதியாக மாறிவிடுகிறது.
‘நீங்கள்’ என்பதில் நாம் கவனத்தைக் குவித்தோமானால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், நம் அன்பையும் கவனிப்பையும் கொடுத்தோமானால், நாம் ஆனந்தம் என்ற நிலைக்குள் நழுவி விழுந்துவிடுவோம். இந்த ஆனந்த நிலைதான் நம் இயல்பான நிலை.
‘நான்’ என்பதில் கவனம் செலுத்தினால், நாம், துக்கத்தையும் வேதனையையுமே வரவேற்கிறோம்.
நாம் ஆனந்தமாக
இருக்கும்போது, நாம்
கிசுகிசுக்கக்கூடத்
தேவையில்லை,
நம் பிரார்த்தனை
புரிந்துகொள்ளப்படும்.
அங்கு நமது மௌனமேகூட
சொல்வன்மை மிக்க
பேச்சாகிவிடுகிறது.
ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்,
நாம் ஆனந்தமயமாய் இருந்தால், கடவுள்
நம் அருகில் இருப்பார். நாம் துக்கத்தில்
இருந்தால், நாம் இறுதிநிலையை விட்டுத்
தூர விலகிவிடுகிறோம். ஆனால், இதில்
தர்ம சங்கடமான நிலை என்னவென்றால்,
நம்மில் பலர், துன்பம் வரும்போது மட்டுமே
கடவுளை நினைக்கிறோம். அதனால் அந்த
வினாடியே, நாம் கடவுளை விட்டுத் தூர
விலகிவிடுகிறோம்.
நாம் துக்கம் நிறைந்த இடத்தில் இருந்துகொண்டு, பலமாகக் கத்தினால்கூட, நம் குரல் அவரைச் சென்றடைவதில்லை. நாம் ஆனந்தமாக இருக்கும்போது, நாம் கிசுகிசு க்கக்கூடத் தேவையில்லை, ஒரு வார்த்தைகூட பேசத் தேவையில்லை, நம் பிரார்த்தனை புரிந்துகொள்ளப்படும். அங்கு நமது மௌனமேகூட, சொல்வன்மை மிக்க பேச்சாகிவிடுகிறது.
இது, நெடுங்காலமாகவே இருக்கும் ஒரு பிரச்சினை. மனிதர்கள், தங்களுக்குத் துக்கம் வரும்போது மட்டும் கடவுளை நினைக்கிறார்கள். அது, அவரை நினைப்பதற்கான தவறான நேரம்.
நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது மட்டும் அவரை நினைத்தால், நீங்கள் அவரை உபயோகப்படுத்திக்கொள்ள மட்டுமே நினைக்கிறீர்கள் என்று அர்த்தம். ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவியாக மட்டும் அவரை உபயோகப்படுத்த முடியாது. இது, புனிதத்தைக் குறைக்கும் செயல். மற்ற மனிதர்களை இவ்வாறு உபயோகப்படுத்துவதே நீதியற்றது எனும் பொழுது, கடவுளைக் கருவியாக உபயோகப்படுத்திக் கொள்வதைப் பற்றி என்ன சொல்வது?
நாம் ஆனந்தமாக இருக்கும் பொழுது, நாம் பிரபஞ்ச இருப்புத் தன்மையால் ஆசீர்வதிக்கப்படுவதாக உணரும்போது, நாம் அந்த நிமிடத்தின் சுவையை ரசிப்போமாக.
அந்த நேரத்தில்தான் நாம் கடவுளின் அருகில் இருக்கிறோம். அந்த நேரங்கள் நன்றியுடையதாக, பிரார்த்தனையாக, தியானமாக இருக்கட்டும். அந்த நேரத்தில், கடவுளை இருப்புத்தன்மையில் உணருங்கள், வார்த்தைகளாக அல்ல!
நமது முழு இருப்புத் தன்மையும் இந்த அதிர்வை உணர அனுமதியுங்கள். எல்லாம் கடந்த நிலையில் ஒன்றிவிடுங்கள், அதனுள் மூழ்குங்கள். அந்த நேரத்தை இழந்துவிடாதீர்கள். அது விலைமதிக்க முடியாதது.
ஒவ்வொருவரும் தெய்வத்தன்மையை அடைவதற்குத்தான் பிறந்திருக்கிறோம். அதைத் தவறவிட்டோமானால், அது நம்முடைய பொறுப்பு.
நாம், நமக்குள் பார்க்கத் தவறுவதால், அதைத் தவறவிடுகிறோம். வாழ்க்கை கொடுக்கும் சந்தர்ப்பங்களை உபயோகிக்கத் தவறுவதால், நாம் அதைத் தவற விடுகிறோம். நாம், நம் சோம்பேறித்தனத்தால் அதைத் தவறவிட்டு விடுகிறோம். நாம், நம்முடைய விழிப்புணர்வு அற்ற நிலையாலும், மந்தத் தன்மையாலும் அதைத்தவற விடுகிறோம்.
வாழ்க்கை என்பது மிகப் பெரிய ஆசீர்வாதம் என்பது புரியாததனால், நாம் அதைத் தவறவிட்டு விடுகிறோம்.

