KAILASA Library/பகவத்கீதை/தெய்வீகத் தன்மையின் தகுதிகள்.Sign in
பகவத்கீதை

தெய்வீகத் தன்மையின் தகுதிகள்.

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna with flute

16.1-3 பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்: ஓ பரதக்குலத் தோன்றலே, அஞ்சாமை, உணர்வுத்தூய்மை, ஆன்மிக ஞானத்தை வளப்படுத்திக்கொள்ளுதல், ஈகை, இருத்தலில் மையங்கொள்ளுதல், யாகம், அறிவைச் சேகரித்தல், தவம், எளிமை, அஹிம்ஸை, ஸத்யம், சினத்திலிருந்து விடுபடுதல், துறவுநிலை, அமைதி, குறை காண்பதிலிருந்து விடுபடுதல், அனைத்து உயிரினங்களின் மீது கருணை, பிறர்பொருள் விரும்பாமை, கனிவு, நாணம், உறுதியாக இருத்தல், தைரியம், மன்னிக்கும் மனப்பாங்கு, மன வலிமை, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை போன்ற குணங்கள் தெய்வீக ஸம்பத்துடன் பிறந்தவனின் இயல்புகளாகும்.

கிருஷ்ணர் இங்கு, நம்மை உயர் விழிப்புணர்வு நிலைக்கு உயர்த்தும் ஏராளமான பண்புகளை வரிசைப்படுத்தியுள்ளார். இந்தப் பண்புகள் நம்மை தெய்வீகத்தன்மை உடையவர்களாக ஆக்குகிறது.

‘நான்’ என்ற மனப்பாங்கு, நம்முடனேயே நம்மைச் சண்டைபோட வைக்கும்

இப்பொழுது இந்தப் பண்புகளை ‘நான்’ என்கிற தன்மையுடன் உள்வாங்கும்பொழுது, இயல்பாக நாம் என்ன செய்வோம்? அனைத்துப் பண்புகளையும் செயல்படுத்தத் துவங்கிவிடுவோம்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், அனைத்துப் பண்புகளையும் செயல்படுத்தத் துவங்கினால், ஒன்று மட்டும் நிச்சயம், நமக்குப் பைத்தியம் பிடித்துவிடும். நம்மால் எதையுமே செய்ய இயலாது, ஏனென்றால், நாம் நம்முடனேயேதான் சண்டைபோட்டுக் கொண்டிருப்போம். நம் அஹங்காரத்தை வலுப்படுத்துவதற்காக நாம் நம்முடைய புலன்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்போம்.

நாம் இந்த ஸத்யங்களை நமது அஹங்காரத்தைக்கொண்டும், ‘நான்’ என்ற மனப்பாங்கைக்கொண்டும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறபோது, ‘நான்’ என்கிற கருத்தை வலுப்படுத்துவதற்கும், நம்மை நாம் உயர்த்திக்கொண்டு, நல்லவர்களாக ஆவதற்கும் பயிற்சிசெய்கிறோம்.

ஞானிகள், தாங்கள் நல்லவர்கள் அல்ல, தாங்கள் முற்றிலும் உணர்வுமாற்றமடைந்த ஆன்மாக்கள் என்று மீண்டும், மீண்டும் நிரூபித்து இருக்கிறார்கள்.

நல்லவர்களுக்கும், உணர்வுமாற்றம் அடைந்த ஆன்மாக்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.

நல்லவர்களுக்கும், உணர்வுமாற்றம் அடைந்த ஆன்மாக்களுக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது.நான் உங்களுக்கு சுவாமி விவேகானந்தர் சொல்லிய சிங்கமும் செம்மறி ஆடும் என்ற கதையைப்பற்றி சொல்லியிருக்கிறேன்.
அது ஒரு அருமையான கதை, செம்மறி ஆட்டுக்கூட்டத்துடன் வளர நேர்ந்த ஒரு சிங்கக்குட்டி, தான் ஒரு சிங்கமென உணர மறுத்துவிட்டது. அது, ஒரு பலசாலி ஆடாக இருக்கவே விரும்பியது.
அது சிங்கத்தினிடம், தான் ஒரு பலசாலியான

ஆடாக மாறுவதற்கான சூத்திரத்தைக்
கற்றுக்கொடுக்கும்படிக் கேட்டதே தவி
ர, தன் உண்மையான இயல்பை அறிய
விரும்பவில்லை. 'நான் ஒரு ஆடு' என்கிற
கருத்தை வலுப்படுத்தவே அது முயன்றது.

அதேபோல், கிருஷ்ணர் வரிசைப்படுத்திய பண்புகளை நாம் செயல்படுத்தத் தொடங்கும்போது, அது நமக்குள் அஹங்காரத்தையே வளர்க்கிறது. அதனால்தான், உணர்ச்சிகளை வெளியே காட்டாது அடக்கிவைக்கும் தபஸ்விகள் என்றழைக்கப்படும் மனிதர்கள், வலிமையான அஹங்காரம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

தவம் செய்பவர்கள் அல்லது ஆசைகளை வெளிக்காட்டாது அடக்கி வைக்கும் மனிதர்கள், தங்கள் அஹங்காரத்தை வெளிப்படுத்துபவர்களாகவே இருப்பர். அவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்வதே, தங்களின் அஹங்காரத்தை வலிமைப்படுத்துவதற்காகத்தான் என்பதை நம்மால் கண்கூடாகப்பார்க்க முடியும்.

நாம் முழுமையான ஆனந்தத்துடனும் தளர்வுடனும் இருக்கும்போது, நம்முள் துறவறம் நிகழ்கிறது.

நான் பல ஸந்நியாஸிகளைப் பார்த்திருக்கிறேன், குறிப்பாக இந்தியாவில் இருக்கும் ஸந்நியாஸிகள், இல்லறவாசிகளைக் குற்றஞ்சாட்டுபவர்களாக இருக்கிறார்கள். இல்லறவாசிகள் தூய்மையற்றவர்களாகவும், பாவம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதே இவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

நம்மை நாமே வற்புறுத்தி, தவம் செய்தோமேயானால், நாம் தொடர்ந்து நமக்குள் ஒருவித எரிச்சலை உணர்ந்துகொண்டிருப்போம். விளைவு... நம்மீதும், நாம் செல்லுகின்ற பாதைமீதும் நமக்குச் சந்தேகங்கள் எழும்.

இந்தச் சந்தேகங்கள் நம்மைத் தொடர்ந்து ஏதோ ஒன்றைச் செய்யத் தூண்டும். விளைவு... மற்றவர்களுக்குள் அவர்கள் செல்கின்ற பாதையைக் குறித்த குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துவோம்.

மற்றவர்களைப் ‘பாவிகளே’ என்று அழைக்காதீர்கள்

‘நாம் செய்வதுதான் சரி’ என்று நாம் நினைக்கும்போது, மற்றவர்களுக்குள், அவர்கள் தவறான செயலைச் செய்கிறார்கள் என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்கிவிடுகிறோம். இது குறிப்பாக எப்பொழுது நிகழ்கிறது என்றால், மக்கள் தாங்களாகவே மனமுவந்து, நம்மிடம் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ளும்போது இது நிகழ்கிறது.

ஒருவர் தன்னுடைய குற்றங்களை ஒப்புக்கொள்வதைக் கேட்கும்போது, கேட்பவரின் அஹங்காரம் வலுவடையும். கேட்பவர், தம்மை வலிமைமிக்கவராக உணர்வார். குற்றங்களை ஒப்புக்கொள்ளும் மனிதன் தவறுசெய்துகொண்டிருப்பதாகவும், தாம் தூய்மையானவர் என்றும் நினைப்பார்.

‘ஒரு மனிதரைப் பாவி
என்று சொல்லுவதுதான்
ஒரே பாவம்’ என்று
சுவாமி விவேகானந்தர்
சொல்கிறார்.

நம் அஹங்காரத்தை வலுப்படுத்துவதற்காக நாம் தவம் செய்யும்போது, மற்றவர்கள் தங்களைக் குற்றமுள்ளவர்களாக உணர வேண்டுமென்றும், நம்மிடம் வந்து அவர்கள் பாவ மன்னிப்பு கோர வேண்டுமென்றும் விரும்புகிறோம். மற்றவர்களின் குற்றங்களைக் கேட்கும்பொழுது, நாம் நம்மை வலிமைமிக்கவராக உணர்கிறோம். மற்றவர்களைப் ‘பாவிகளே’ என்று அழைக்கும்பொழுதும், நாம் வலிமைமிக்கவராக உணர்கிறோம்.

‘ஒரு மனிதரைப் பாவி என்று சொல்லுவதுதான் ஒரே பாவம்’ என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

தவம் என்பது சந்தோஷத்திலிருந்தும் ஆனந்தத்திலிருந்தும் இயல்பாக நிகழ வேண்டும், ஒரு இயற்கை நிகழ்வுபோல்! கட்டாயத்தால் செய்யப்படும் எந்தவொரு செயலுமே நமக்கோ, சமுதாயத்திற்கோ எந்தவித பயனும் தரப்போவதில்லை.

‘நாம் பாவிகள்’ என்றே சமுதாயம் நமக்குக் கற்றுத்தருகிறது. முதலில், இது உண்மையல்ல. உள்ளுலகில் தெய்வத் தன்மையை உணர்ந்த எந்த ஒரு ஸத்குருவாலும், இதுபோன்ற கருத்துகளைச் சொல்ல முடியாது.

'தங்களைப் பாவிகள்' என்று மக்களை ஒரு ஆன்மிக நிறுவனம் நம்பச்செய்துவிட்டதென்றால், அதன்பிறகு அது, அந்த மக்களை எளிதில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். ஒரு நிறுவனம் மக்களைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் அந்த நிறுவனத்தால் தொடர்ந்து இயங்க முடியாது.

ஒரு நிறுவனம் தொடர்ந்து இயங்குவதற்கும், வளர்வதற்கும் அது இரண்டு வழிகளை மட்டுமே உபயோகப்படுத்த முடியும். ஒன்று பேராசை, மற்றொன்று பயம்.

ஒன்று, மக்களுக்குள் பேராசையை
வளர்த்து, தன் பக்கம் ஈர்ப்பது அல்லது
பயமூட்டி, அவர்களை அச்சுறுத்துவது.
மதங்கள், இந்த இரண்டு வழிகளிலுமே
முயற்சிசெய்கின்றன.

'நாம் இன்னென்ன செயல்களைச் செய்தால்,
நமக்குப் புண்ணியம் கிடைக்குமென்றும்,
அதனால் நாம் சொர்க்கத்திற்குச்
செல்வோம் என்றும், சொர்க்கத்தில் நாம்
நன்கு கவனித்துக்கொள்ளப்படுவோம்
என்றும், அங்கு நமக்கு வேறெதுவும்
தேவைப்படாது' என்றும் சொல்கின்றன.

தவம் என்பது
சந்தோஷத்திலிருந்தும்
ஆனந்தத்திலிருந்தும்
இயல்பாக நிகழ வேண்டும்,
ஒரு இயற்கை நிகழ்வுபோல்!

சில மதங்கள் சொர்க்கத்தைப் பற்றி மிக அருமையாக வர்ணித்திருக்கின்றன. மதபோதகர்கள் சொல்வதுபோல் நாம் செய்தால், நமக்குச் சொர்க்கத்தில் விதவிதமான மதுபானங்கள், பெண்கள் மற்றும் நடனம், பாடல்கள் என்று எல்லா விதமான ஆடம்பரமான வசதிகளும் செய்துதரப்படும் என்று சொல்கின்றன.

சில மதப்பிரிவுகள், சொர்க்கத்திற்கான, முக்கிய பிரமுகர்களுக்கான அனுமதிச்சீட்டுக்களையும் (V.I.P.Passes) வழங்குகின்றன. மக்கள், இதற்கென நிறைய கட்டணத்தைச் செலுத்துகிறார்கள்.

இது எப்படி இருக்கிறதென்றால், மக்கள் அழகான இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடத்தை, தங்களின் இறுதி உறைவிடத்திற்காக முன்பதிவு செய்துகொள்வதுபோல் இருக்கிறது.

கடலோர இடங்கள், மலைவாச
ஸ்தலங்கள், நீச்சல் குளம் அருகாமையில்
என அழகான இடங்களில் கல்லறைகளைக்
கட்டுகிறார்கள். இந்தக் கல்லறைகளில்
நீங்கள் புதைக்கப்பட முடியும், இந்த
அனைத்துக் காட்சிகளையும் கண்டு
அனுபவிக்க முடியும்!

இதக்கேட்டு நீங்கள் சிரிக்கலாம், ஆனால், இது உண்மை. நம்மைச் சுற்றி தினந்தோறும் இது நடந்துகொண்டிருக்கிறது. நம்முடைய பேராசையைத் தூண்டிவிட்டு, நம்மைக் குரங்குகளைப்போல், அவர்களின் இசைக்கு ஏற்ப ஆட்டி வைக்கிறார்கள்.

‘மரணத்திற்குப் பிறகு நாம் வசிப்பதற்கென, இதுபோன்ற அற்புதமான இடம் கொடுக்கப்படுவது என்பது மிக மிக அரிதான ஒரு வாய்ப்பு’ என்ற கருத்து மிகவும் சக்திவாய்ந்தது.

ஏனென்றால், இறந்த பிறகு நாம் எங்குச் செல்வோம், அங்கு என்ன நடக்குமென்பது நமக்குத் தெரியாத விஷயமாக இருப்பதால், நம்மை அவர்கள் எளிதாக ஏமாற்றிவிடுகின்றனர். தெரியாத விஷயத்தைப் பற்றிய பயமே, நாம் இதுபோன்ற முட்டாள்தனமான கருத்துகளை நம்பவும், அதன்படி நடக்கவும் வைக்கிறது.

விழிப்புணர்வு பற்றாக்குறையே முதல் குற்றம்

மதங்கள், கண்டிப்பான விதிமுறைகளையும் கட்டளைகளையும் வகுத்துவைத்திருக்கின்றன. நாம் இந்தக் கட்டளைகளை மீறினால், கடவுள் நம்மை நரகத்தில் தள்ளிவிடுவார் என்று சொல்கின்றன.

ஆனால், கிருஷ்ணர் நம்மை, பேராசை வசப்படாமலும் பய வசப்படாமலும் இருக்கும்படி வலியுறுத்துகிறார். அவர் நம்மை, கோபமின்றி, உண்மையாக, எளிமையாக, பணிவாக, சாந்தமாக, வன்முறையற்றவராக, மேலும், எதிர்பார்ப்பு இல்லாமலும், துறவு நிலையிலும் இருக்கச் சொல்கிறார்.

இவை தெய்வீகப் பண்புகள். உங்களுக்காகச் சுயநலத்துடன் செயல்படாமல், மற்றவர்களுக்காகச் செயல்படும்பொழுது இந்தப் பண்புகளை வெளிப்படுத்துகிறீர்கள். இந்தப் பண்புகள் இதயத்திலிருந்து எழுபவை, மனத்திலிருந்து அல்ல. இவை அன்பிலிருந்து எழுபவை, ஆசையிலிருந்து அல்ல.

கடவுள்! ‘கடவுள்’ என்ற கருத்தே
அன்பை மலரச்செய்ய வேண்டும்,
பயத்தை அல்ல. எந்தவொரு
மதமாக இருந்தாலும் கடவுளைக்
கருணையுள்ளவராகத்தான்
காண்பிக்கிறது.

Illustration of Krishna with flute and peacock feather

அனைத்து ஞானிகளின் அனுபவமும் அப்படித்தான் இருந்திருக்கிறது, அவர்களுடைய வெளிப்பாடும் அதுவாகத்தான் இருந்தது.

‘கடவுள் பழிவாங்குவார்’ என்கின்ற, கடவுளைப் பற்றிய அச்சமூட்டும் கருத்து, மனிதன் உருவாக்கிய ஒரு மூடநம்பிக்கையே. மனிதர்களுக்கு இடையே பகைமையையும் பிரிவினையையும் ஏற்படுத்தி, அவர்களைக் கட்டுப்படுத்தவும் வெற்றிகொள்ளவும் உருவாக்கப்பட்டது.

மேலும், மனிதன் சில வசதியான வழிமுறைகளையும் உருவாக்கி வைத்துள்ளான். அதன்படி பார்த்தால், நீங்கள் பாவங்கள் செய்தாலும், அதற்குரிய பிராயச்சித்தங்கள் செய்தால்போதும், பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்!

முதலில், அவனைப் ‘பாவம் இழைத்தவன்’
என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்; பிறகு,
குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு
நன்கொடை அளித்தால், அவன் செய்த
பாவத்திலிருந்து விடுபட்டுவிடலாம்
என்றும் சொல்கிறார்கள்.

இந்தச் சுழற்சி முடிவற்றது.
நாம் பாவங்கள் புரிகிறோம். நன்கொடை
அளிக்கிறோம், அதனால் அந்தப்
பாவங்களிலிருந்து மீள்கிறோம், பிறகு
மறுபடியும் நாம் அந்தப் பாவங்களைப்

சுயநலத்துடன்
செயல்படாமல்,
மற்றவர்களுக்காகச்
செயல்படும்பொழுது
தெய்வீகப் பண்புகளை
வெளிப்படுத்துகிறீர்கள்.

புரியலாம். அதற்கான தண்டனை, இந்த வாழ்க்கையிலோ அல்லது மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையிலோ பெற மாட்டோம் என்று நம்புகிறோம்.

இவை எல்லாமே அர்த்தமற்றவை. சொர்க்கமோ, நரகமோ வெளியில் இல்லை. அவை நம் மனத்தினுள்தான் உள்ளன. ஆனால், நாம் அனைவரும் அதை நம்புவதற்குக் கட்டுறுத்தப்பட்டுள்ளோம். ஏனென்றால், நம்மைக் கட்டுப்படுத்துவதற்கான எளிமையான கருவிகள் பயமும், பேராசையுமே.

எந்த ஒரு மதத்திற்கும் இருக்கின்ற மிகப்பெரும் பயம்

> நாம் சிந்திப்பதை
> நிறுத்திவிட்டு,
> மனத்தை விட்டுவிட்டு,
> ஜீவன்முக்தராகி
> விட்டோமென்றால்,
> பிறகு ஒருவராலும் நம்மைக்
> கட்டுப்படுத்த முடியாது

என்னவென்றால், நாம் சுயமாகச் சிந்திக்கத் துவங்கிவிடுவோமோ என்பதுதான். இதைவிடஇன்னுமொருமோசமான பயமும் இருக்கிறது, நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மனத்தை விட்டுவிடுவோமோ என்பதுதான் அது!

மதங்கள் இவ்வாறு பயப்படுவதற்குக் காரணம் என்னவென்றால், நாம் சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மனத்தை விட்டுவிட்டு, ஜீவன்முக்தராகி விட்டோமென்றால், பிறகு ஒருவராலும் நம்மைக் கட்டுப்படுத்த முடியாது, நமக்கு நாமே ஒரு குருவாகிவிடுவோம் என்பதுதான்.

இதைவிட துக்கமான ஒரு செய்தி என்னவென்றால், இந்த மதங்கள், ‘நாம் அனைவரும் பிறக்கும்போதே பாவிகளாகத்தான் பிறந்தோம்’ என்று சொல்வதுதான். வயதுவந்த ஒரு நபரை, பாவம் செய்தவர் என்று யாராவது சொன்னால், அதை என்னால் ஓரளவுக்குப் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், அவர் உயர் ஸத்யங்களைப் பற்றிய அறிவைப் பெற்றிருப்பார். ஆனாலும் அவற்றைப் பின்பற்றாமல் இருப்பார்.

என்னைப் பொறுத்தவரை, நாம் தெய்வத்தன்மை நிரம்பியவர்கள் என்ற விழிப்புணர்வு பற்றாக்குறையே, நம்மிடமுள்ள குற்றமாகும், அதுதான் முதல் குற்றம்.

குழந்தைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதியுங்கள்

நாம் சிந்திக்கத் தொடங்கியவுடன், எண்ணச்சங்கிலியில் சிக்கிக்கொண்டு, அறியாமையில் மூழ்கி விட்டோம்.

‘குற்றம்’ என்று ஒன்று இருக்குமானால், அது நாம் எண்ணங்களைக் கோர்த்துப் பார்ப்பதுதான். இந்தக் கட்டுறு மனப்பாங்கு, நம்மைத் தர்க்கவாதிகளாக மாற்றுகிறது; குற்றவாளிகளாகவும் மாற்றுகிறது. இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆனால், பிறந்த பச்சிளங்குழந்தைகள் என்ன செய்தார்கள்? குறிப்பாக மறுஜென்மத்தையே நம்பாத மதங்களாக இருக்கும்பட்சத்தில், அவை எந்த உரிமையில் பிறந்த குழந்தையைப் பாவம் செய்தது என்று சொல்ல முடியும்? அவை அப்படிச் சொல்வதனால், இந்தப் பாவம் என்பது இயற்கையிடமிருந்து, கடவுளிடமிருந்து அல்லது பிரபஞ்ச த்திலிருந்து வருகிறது என்று நாம் யூகித்துக் கொள்ளலாமா? கடவுள் பாவப்பட்ட ஜீவன்களைப் படைப்பவர் என்பதைக் குறிக்கிறதா? எப்படிப்பட்ட கடவுள் அவர்?

> ‘குற்றம்’ என்று ஒன்று
> இருக்குமானால்,
> அது,
> நாம் எண்ணங்களைக்
> கோர்த்துப் பார்ப்பதுதான்.

நாம் எதைச் செய்யவேண்டும், எதைச் செய்யக்கூடாது என்ற விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதிப்பதைத் தவிர, வேறு எந்த வேலையும் கடவுளுக்கு இல்லை. மேலும், இதை எல்லாம் செய்தபிறகும், அவர் விதித்த விதிமுறைகளையெல்லாம் அனைவரும் சரியாகக் கடைப்பிடிக்கிறார்களா அல்லது மீறுகிறார்களா என்று கண்காணிப்பதற்கும், அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது என்று நாம் உண்மையாக நம்புகிறோமா?

கடவுள் உங்களுக்குள்ளும் இருக்கிறார். எனக்குள்ளும் இருக்கிறார். நாம் செய்கின்ற அனைத்துமே நமக்குத் தெரியும். நாம் தவறு செய்யும்பொழுது, அதுவும் நமக்குத் தெரியும். அதை யாரும் நமக்குச் சொல்லத் தேவையில்லை. தெரிந்தும் பாவம்செய்வதே நம்முடைய பாவம் ஆகிறது. இந்தக் குற்றவுணர்ச்சிதான் நம் வாழ்க்கையை நரகமாக்கிவிடுகிறது.

நாம் சுதந்திரமாகவும், எதற்கும்
கட்டுப்படாதவர்களாகவும் இருக்கின்ற
போது, நாம் ஆனந்தத்தில் இருக்கிறோம்.
சொர்க்கத்தில் இருக்கிறோம்.

ஒரு சின்னக் குழந்தையைக்
கவனியுங்கள். பெரியவர்கள்
துன்புறுத்தினால் தவிர, அக்குழந்தை
மனச்சோர்வுடனோ துக்கத்துடனோ
இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?

குழந்தைகளைச் சுதந்திரமாக இருக்க அனுமதித்தால், உண்மையிலேயே அவர்கள் சுதந்திரமாக இருப்பார்கள். குழந்தைகள் கட்டுக்கடங்காதவர்களாய் இருப்பார்கள். அவர்களை அப்படியே அவர்கள் இயல்பிலேயே இருக்க அனுமதிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் எந்தத் தடையும் இல்லாமல் எதையும் கூர்ந்து ஆராய்ந்து உணர்வார்கள்.

அவர்கள் கடவுளைப் போன்றவர்கள், எப்போதும் சொர்க்கத்தில் இருப்பார்கள், குழந்தைகளை, 'பாவிகள்' என்று சொல்பவர்களே பெரிய பாவிகள்.

நாம் வளரும்பொழுது, மற்றவர்களால் கட்டுறுத்தப்படுகிறோம். மற்றவர்களுடைய நடைமுறைகளையும், சமுதாயத்தின் நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் கிரஹித்துக் கொள்கிறோம். நாம் நம் சொந்த உள் இருப்புத்தன்மையை நம்புவதை நிறுத்திவிடுகிறோம். நாம் வளர, வளர உள்-உணர்வில் உள்ள அந்தக் குழந்தையை, வியக்கத்தகு, விந்தைமிகு செயல்களைச் செய்யும் அந்தக் குழந்தையை இழந்து, பெரியவர்களாக ஆகிவிடுகிறோம்.

பிறகு நாம், நம் புலன்கள், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், பாவத்தைப் பற்றிய கருத்துகளாலும், 'நான்' என்ற உணர்ச்சியாலும் வழிநடத்தப்படுகிறோம். இதற்கு மாறாக, மற்றவர்களின்மேல் நம் கவனத்தைச் செலுத்தினால், 'நீங்கள்' மேல் கவனம் செலுத்தினால், நாம் விரிவடைவோம்.

விழிப்புணர்வு மட்டுமே நம்மைக் கடவுளாக மாற்றும்

உண்மையில், நாம் எந்த அளவுக்கு அதிகமாக நம் உள் விழிப்புணர்வைக் கூர்ந்து கவனிக்கிறோமோ, அந்த அளவுக்கு அதிகமாக நாம் மற்றவர்களிடம் திறந்த தன்மையோடு இருப்போம். நாம் ‘நான்’ என்ற நிலையில் இருந்து ‘நீங்கள்’ என்ற நிலைக்கு நகர்வோம். நாம் உள்நோக்கிப் போகும்போது, நம் உயர்ந்த புத்திசாலித்தனம் விழித்துக் கொள்ளும்.

நமது உயர்ந்த புத்திசாலித்தனம் என்பது வேறொன்றுமில்லை, தெய்விகத் தன்மையே. அந்த விழிப்புணர்வு மட்டுமே நம்மைக் கடவுளாக மாற்றுகிறது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் நினைப்பதுபோல் கடவுள் ஒன்றும் மேகங்களின் மீது அமர்ந்து, யாழ் வாசித்துக்கொண்டு இருக்கும் தாடிவைத்த ஒரு முதியவர் அல்ல. கடவுள் என்பது நம்முள் இருக்கும் தூய்மையான சக்தியும், உயர்ந்த புத்திசாலித்தனமுமே. நம்முள் இருக்கும் அதே புத்திசாலித்தனம் மிக்க சக்தியே இந்த மொத்தப் பிரபஞ்சத்தையும் இயக்குகிறது.

எந்தச் சக்தி நமக்கு வலிமையைத் தருகின்றதோ, அதே சக்திதான் சூரியனுக்கும் வலிமையைத் தருகிறது. இதில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை.

மனிதராய் இருப்பதனால் இந்தச் சக்திக்குள்,
இந்த உயர்ந்த புத்திசாலித்தனத்திற்குள்
விரிவடைய நமக்கு வாய்ப்பு இருக்கிறது.

துரதிருஷ்டவசமாக, விலங்குகளுக்கு இந்த
ஆற்றல், இந்த விழிப்புணர்வு கிடையாது,
மனிதர்களுக்கு மட்டுமே உண்டு.
இந்தப் பரிசை, இந்த வாய்ப்பை, இந்த
விழிப்புணர்வை அலட்சியம்செய்வதே
நம்முடைய முதல் குற்றம்.

நம் வாழ்க்கையின் முழு அர்த்தமே இந்த

> நமது உயர்ந்த
> புத்திசாலித்தனம் என்பது
> வேறொன்றுமில்லை,
> தெய்விகத் தன்மையே.

ஸத்யத்தைக் கண்டறிந்து, நாம் கடவுளாக ஆவதே! அதனால்தான், இந்த ஸத்யத்தை உணராமல் இறந்துவிட்டால், நாம் மீண்டும் பிறப்பெடுக்கிறோம்.

நாம் யார் என்பதை உணராமல் இருப்பதால்தான், இந்த பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறோம்.

புத்தர் சொல்லியதுபோல், இதுவே நம் துக்கத்திற்கான காரணம். நாம் நம் ஆன்மாவை, நம் உண்மையான தெய்விக ஆற்றலை, நம் வாழ்வின் அர்த்தத்தை உணரும்பொழுது, நாம் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய அவசியமில்லை. நாம் முக்தராகிறோம்.

ஆன்மிகம், அறிந்துகொள்ள முடியாத ஒரு கோட்பாடு அல்ல

கேள்வி : மிகச்சிறந்த குருமார்களே, மதங்களை உருவாக்கியுள்ளார்கள். இருந்தாலும், சில மதங்கள், மக்களை அன்பாலும் கருணையாலும் வழிநடத்துவதற்குப் பதிலாக, நீங்கள் சொன்னதுபோல், பயம் மற்றும் ஆசையைக் கொண்டு கட்டுப்படுத்துகின்றன. எங்களில் பல பேருக்கு, கடவுளை நாடிச் செல்வதற்கு, மதத்தைத் தவிர, வேறெந்த வழியும் தெரியாது. நாங்கள் என்ன செய்வது?

இது, சிந்திக்கத் தூண்டும் கேள்வி. நீங்கள் அனைவரும் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். முக்கியமான மதங்களை உருவாக்கிய குருமார்கள் அனைவருமே

| நாம் யார் என்பதை உணராமல் இருப்பதால்தான், இந்தப் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்கிக்கொள்கிறோம். | ஞானமடைந்தவர்களே. அவர்கள் தெய்விகத் தன்மையை அனுபவித்து, பின்பு அதையே வெளிப்படுத்தியவர்கள். அவர்களுடைய காலத்திற்குப் பிறகு, அவர்களைப் பின்பற்றியவர்கள்தான் அரக்க குணம் படைத்தவர்களாக மாறிவிட்டார்கள். இதுதான் உண்மை. ஆன்மிகம் என்பது ஞானகுருமார்களின் படைப்பு. ஆன்மிகம் என்பது நம் நலவாழ்வைப் பற்றியதே. அது, நம் ஆரோக்கியமான நல் வாழ்க்கையின் ஆணி |

வேர். இதில் பொருள் சார்ந்த நல்வாழ்க்கை,
உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்ச்சி
சார்ந்த, உறவு சார்ந்த மற்றும் ஆன்மிகம்
சார்ந்த எல்லா நலன்களும் அடங்கும்.

ஆன்மிகம் என்பது ஏதோ அறிந்துகொள்ள முடியாத ஒரு கோட்பாடு அல்ல.

சிறந்த குருமார்கள் அனைவரும், தங்களின்
நலவாழ்வைப் பற்றி ஒருபோதும்
பொருட்படுத்தியதில்லை. உங்களின்
நலவாழ்விற்காக மட்டுமே பாடுபட்டார்கள்.

> சிறந்த குருமார்கள்
> அனைவரும், தங்களின்
> நலவாழ்வைப் பற்றி
> ஒருபோதும்
> பொருட்படுத்தியதில்லை.
> உங்களின்
> நலவாழ்விற்காக மட்டுமே
> பாடுபட்டார்கள்.

புத்தர் இறந்து பல வருடங்களுக்கு பிறகுகூட, அவரின் உத்தரவுப்படி, புத்தரைப் பிரதிபலிக்கும் வகையில் சிலைகளோ அல்லது படங்களோ உருவாக்கப்படவில்லை. ஒரு போதி மரம் மட்டுமே அவரை பிரதிபலித்துக்கொண்டு இருந்தது. இருப்பினும், அவர் உடலை விட்ட சுமார் 500 வருடங்களுக்குப் பிறகு அவருடைய சீடர்கள், அவரின் படங்களையும் சிலைகளையும் உருவாக்கத் துவங்கினார்கள்.

கோயில் என்ற கருத்தை மறுத்த அந்த குருவுக்கு, இன்று ஆயிரக்கணக்கான கோயில்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன! உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மற்ற மதங்களைக் காட்டிலும் புத்த மதம், தனது குருநாதரின் போதனைகளைப் பெரும்பாலும் அப்படியே பின்பற்றுகிறது.

எப்போது மதங்கள் நிறுவனங்களாக மாறுகின்றனவோ, அப்போதே அவை, வர்த்தகநோக்கில் செயல்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு உட்படுகின்றன. தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்கு அவற்றுக்கு, சில வழிமுறைகள் தேவைப்படுகின்றன. பயம் மற்றும் பேராசை மூலமாகக் கட்டுப்படுத்துதல்தான், அதற்கான அடிப்படை கருவியாக இருக்கிறது.

நாம் மத நிறுவனங்களைப் புறக்கணித்துவிட்டு, நாமாகவே கடவுளைத் தேடலாம். நாம் கோயிலுக்குச் சென்று, ஒரு பூசாரியின் துணையில்லாமல் கடவுளைத் தரிசிக்கலாம் அல்லது நாம் விரும்பினால் வீட்டில் இருந்தவாறேகூட கடவுளுடன் தொடர்பு கொள்ளலாம் அல்லது வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் கடவுளை அடையலாம். நாம் எந்தவொரு சங்கத்தின் நிர்பந்தத்திற்கும் அடிபணியத் தேவையில்லை.

நம் கண்கள், நம்முடைய ஜன்னல்

கடவுள், எப்போதும் நமக்கு உதவுவதற்காகவே இருக்கிறார். ஆனால், நாம்தான் அவரிடம் கேட்பதில்லை.

ஏசுநாதர் சொல்கிறார், ‘தட்டுங்கள், திறக்கப்படும்; கேளுங்கள், கொடுக்கப்படும்.’

ஆனால், நாம்தான் கதவைத் தட்டுவதும் இல்லை, கேட்பதும் இல்லை. வெறுமனே கேட்பதன் மூலமே நமக்குக் கிடைக்கக்கூடிய மேலான நல்லவற்றையெல்லாம், நாம் தொடர்ந்து இழந்துகொண்டே இருக்கிறோம்.

> வெறுமனே கேட்பதன்
> மூலமே
> நமக்குக் கிடைக்கக்கூடிய
> மேலான
> நல்லவற்றையெல்லாம்,
> நாம் தொடர்ந்து
> இழந்துகொண்டே
> இருக்கிறோம்.

நான் சொல்கிறேன், கதவைத் தட்டக்கூடத்
தேவையில்லை. அவருடைய கதவு
எப்போதும் திறந்தே இருக்கிறது. நாம்
செய்ய வேண்டியதெல்லாம் உள்ளே
நுழைவதற்காக ஓர் அடி எடுத்து
வைப்பதுதான், அவ்வளவுதான்.

நமது நிழலைப்போல, எப்போதும்
கடவுளும் நம்கூடவேதான் இருக்கிறார்.
ஆனால், நாமோ பணம், பதவி, அந்தஸ்து
என்று பிறவற்றைத் தேடி ஓடிக்கொண்டு
இருக்கிறோம்.

நம்மைச் சுற்றி இருக்கின்ற வாழ்வின் நுட்பமான ஸாந்நித்யத்தை, நாம் பார்ப்பதே இல்லை. நாம் உள்முகமாகப் பார்ப்பதே இல்லை. அங்கே அது தீச்சுடரைப்போல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

அதனால்தான் நாம் மற்றவரின் கண்களைப் பார்ப்பதே இல்லை, நாம் மற்றவர்களைத் தவிர்க்கிறோம். ‘மூன்று விநாடிகளுக்கு மேல் ஒருவருக்கொருவர் கண்களைப் பார்த்துக்கொள்ளக் கூடாது’ என்ற ஒரு மறைமுகமான, எழுதப்படாத ஒப்பந்தம் உலகம் முழுவதும் இருக்கிறது. இதில் வினோதம் என்னவென்றால், இது எல்லாக் கலாச்சாரங்களிலும் இருக்கிறது.

ஒருசில விநாடிகளுக்கு மேல் ஒருவரின் கண்களைத் தொடர்ந்து

பார்த்தால், அதற்கு 'வெறித்துப் பார்த்தல்' என்று பெயர் சூட்டப்படுகிறது. அது ஒரு மரியாதையற்ற செயலாகக் கருதப்படுகிறது. நீங்கள் அந்த மனிதருக்கு மிகவும் நெருங்கியவராகவோ அல்லது அவரைக் காதலிக்கின்ற நபராகவோ இல்லாத பட்சத்தில், அது கலாச்சாரமற்றது என்றும், முரட்டுத்தனமான செய்கை என்றும் கருதப்படுகிறது.

இருப்பினும் காதலர்கள்கூட, ஒருவர் மற்றவர் கண்களைத் தெய்விகத்தின் ஜன்னலாகப் பார்ப்பதில்லை. அவர்கள் உடல் ரீதியான காம உணர்ச்சியால் மட்டுமே, ஒருவருக்கொருவர் கண்களைப் பார்த்துக்கொள்கின்றனர்.

நம் கண்கள் நம்மைப் பற்றிய
அனைத்தையும் - நம் உடலமைப்பு,
மனநிலை மற்றும் நமது ஆன்மிகம் - என
அனைத்தையும் வெளிப்படுத்திவிடும்.
நம் கண்கள் நம்முடைய ஜன்னல்கள்.
இதன்மூலம் மக்களால், நமது ஆழமான
மையத்தைப் பார்க்க முடியும்.

நமது பூக்தி ஸ்பூரண த்யான அனுபவ முகாமில் (BSP), இருவர் நேருக்குநேர் அமர்ந்து, ஒருவருக்கொருவர் கண்களை, முப்பது நிமிடங்கள் பார்த்துக்கொள்ளும் ஒரு தியானம் இருக்கிறது. இந்தச் செயல்முறை மூலம் அவர்கள் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்,

அவர்கள் ஆழ்ந்து உள் மையத்தை நோக்கி நகர்கிறார்கள், தங்களைத் தாங்களே அறிந்துகொள்கிறார்கள். அவர்கள், அடுத்தவரைப் பற்றிக் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், தங்களைப் பற்றியும் கற்றுக்கொள்கிறார்கள்.

அவர்களுக்குள் இருக்கும் ‘நான்’ என்பது மெதுவாகக் கரைந்து, ‘நீங்கள்’ ஆக உணர்வுமாற்றம் அடைகிறது.

ASP மற்றும் NSP போன்ற சில முதல்நிலை தியான அனுபவ முகாம்களில் கலந்துகொண்டவர்களுக்குத்தான் இந்த BSP முகாம். பூக்தி ஸ்பூரண த்யான அனுபவ முகாம், ஸத்குருவை அறிமுகப்படுத்துகிறது.

ஸத்குருவைப் புரிந்துகொள்வதற்கு வழிகாட்டுவதுடன், ஸத்குருவுடனான உறவு முறைகளைப் பற்றிய வாய்ப்புக்களையும் இது விவரிக்கிறது. இதில் உள்ள அனைத்து தியானங்களுமே, உங்களுடைய மனத்தையும், உங்களுடைய அஹங்காரத்தையும் துறப்பதற்கு உதவும்.

மனத்தைத் துறப்பதால், நீங்கள் உங்களுக்குள்ளேயே ஸத்குருவையும், தெய்விகத் தன்மையையும் காண முடிகிறது. ஒரு பூவை ஆழ்ந்து பாருங்கள், அதில் நீங்கள் கடவுளைக் காணலாம். நீங்கள் எதை வேண்டுமானாலும் ஆழமாகப் பார்த்தீர்களென்றால், அதில் நீங்கள் கடவுளைக் காணலாம்.

கடவுள் என்றால் என்னவென்று எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், அது பொருட்களின் ஆழமே.

எப்பொழுதெல்லாம் நாம் ஒரு பொருளின் ஆழத்தைத் தொடுகிறோமோ, அப்போது நமக்கு அளவற்ற சக்தி கிடைக்கிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடவுள் நம்மைத் தேட ஆரம்பித்த பிறகுதான், நாம் கடவுளைத் தேடுகிறோம். கடவுள் நம் இருப்பின் ஆழமான மையத்தைக் கலக்கிவிட்ட பிறகுதான், நாம் கடவுளை நோக்கிச் செல்கிறோம்.

இந்த உண்மையை அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு, நாம் அறியாமையில் மூழ்கியிருப்பதனால்தான், 'நாம் கடவுளை விரும்புவதனாலும், ஸத்யத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற தேடுதல் நம்மிடம் இருப்பதனாலும், நாம்தான் கடவுளைத் தேடுகிறோம்' என்று நினைத்துக் கொள்கிறோம். நாம் மிகவும் சிறியவர்கள், அந்தளவுக்கு பெரிய ஆசையெல்லாம் நமக்கு இருக்க முடியாது.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நாம் சிறியவர்களாக இருக்கும்போது, நம்முடைய ஆசைகளும் சிறியதாகத்தான் இருக்க முடியும்.

கடவுள், அவர்களைத் தேடத்தொடங்கிய பிறகுதான், மனிதர்கள் கடவுளைத் தேடத்தொடங்குகிறார்கள். ஆனாலும் அவர்கள்தான்

கடவுளைத் தேடுவதாக மனிதர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். இறுதியாக, தியானத்தின் உச்ச நிலையில்தான், தங்களின் மொத்தப் புரிதலும் முட்டாள்தனமானது என்று உணர்ந்துகொள்கிறார்கள்.

கடவுள், மனிதர்களைத் தேடிக்கொண்டிருந்தார், அதனால்தான் மனிதர்கள் கடவுளைத் தேடத் தொடங்கினார்கள். எப்போதும், கடவுள் ஒருவரே முதற்முயற்சி எடுப்பவராக இருக்கிறார்.

ஞானகுருமார்களின் விஷயத்திலும் இதுவேதான் நடக்கிறது. இவர்கள்தான் சீடர்களைத் தேடுகிறார்கள். சீடர்கள் குருவைத் தேடுவதில்லை. குருமார்கள்தான் சீடர்களைத் தேடுகிறார்கள்.

Krishna's hands playing flute
Lord Krishna