KAILASA Library/பகவத்கீதை/அஹங்காரத்திலிருந்து வெளிப்படும் அன்பும் சுயநலமேSign in
பகவத்கீதை

அஹங்காரத்திலிருந்து வெளிப்படும் அன்பும் சுயநலமே

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி : ஸ்வாமிஜி, அசுரர்கள்கூட, உதாரணத்திற்கு, இராவணன்கூட தனது இனத்தையும் தனது குடும்பத்தையும் அன்புடன் கவனித்துக்கொண்டான். இந்தப் பரிமாணத்தில் அவனுள்ளும் 'நீங்கள்' என்ற உணர்வு இருந்தது என்று சொல்வது சரியாகுமா? அப்படியென்றால் அவன் சற்றே குறைந்த அசுரத்தனம் கொண்டவனா?

இராவணன் அல்லது துரியோதனனைப் போன்ற குணம் கொண்டவர்கள் மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினாலும், நேர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தினாலும், அவர்களது உணர்வுகளும் நடத்தையும் அஹங்காரத்திலிருந்தே வெளிப்படுகின்றன.

அவர்களுடைய அடையாளமாகிய 'நான்' மற்றும் எதையும் தங்களது உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென விரும்பும் குணமாகிய 'எனது'

  • இவ்விரண்டும் அவர்களை இதுபோன்ற நடத்தைக்கே இட்டுச்செல்லும். மஹாபாரதக் கதாபாத்திரங்களிலேயே துரியோதனன் மட்டுமே மிகப்பெரிய சுயநலவாதியாக இருந்தார். அவரைப் பொறுத்தவரை அவருக்குப் பெயர், புகழ், அதிகாரம் மட்டுமே தேவைப்பட்டன. அவர் தமது குறிக்கோள்களை அடைவதற்கு, எவ்வளவு கீழ்த்தரமான செயல்களைச் செய்யவும், எத்தகைய குற்றத்தைப் புரியவும் தயங்காதவராக இருந்தார்.

அவர் கர்ணனை ஒரு மாவீரன் என்று
உணர்ந்தார். தமது முதல் எதிரியான
அர்ஜுனனை இவரால்தான் வீழ்த்த
முடியும் என்று நிச்சயமாக நம்பினார்.
அதனால் எந்தச் சூழலிலும் கர்ணன்
தமது பக்கமே இருக்க வேண்டுமென்று
நினைத்தார். ஆகையால் கர்ணனுக்குத்

பூரணத்துடன் போராடுவது
என்பது
நமக்கு எப்பொழுதுமே
வெற்றியைத் தராது.
ஒரு சிறு தனிப்பகுதி,
முழுமையுடன் போராடி
ஒருபோதும் வெற்றியடைய
முடியாது.

தமது ராஜ்ஜியத்தின் ஒரு பங்கைக் கொடுத்து, அதற்கு அரசனாக்கினார்.

துரியோதனனின் இந்தச் செயல், சுயநலமற்ற தன்மையிலிருந்தோ அல்லது காரணமற்ற அன்பிலிருந்தோ பிறந்ததல்ல. ஆரம்பத்தில் கர்ணனுடனான துரியோதனனின் உறவு, சுயநலத்தின் அடிப்படையில் உருவான ஒரு உறவாகவே இருந்தது. இருப்பினும் நாளடைவில் அது, அவரது அசுரப் பண்புகளிலிருந்து விதிவிலக்கான ஒன்றாகவே மாறியது.

பலரும் இதைப்போலத்தான் உள்ளனர். தங்களுடைய சுய-நலத்தின் அடிப்படையில்தான், மற்றவர்களிடம் அக்கறையும் அன்பும் இருப்பதாகக் காட்டிக்கொள்கின்றனர்.

Side note box

ஸத்யம் என்னவென்றால், ஜ்ஞானமடையும்வரை,
எல்லா மனிதர்களும் தெய்வ மற்றும் அசுர
குணங்களின் கலவையாக, 'நீங்கள்' மற்றும்
'நான்' என்ற இரு பண்புகளையும் கொண்ட
ஒரு கலவையாகவே இருப்பர்.

ஸாத்விக மனப்பாங்கை நோக்கிச் செல்லும்பொழுது, நம்முள் ‘நீங்கள்’ என்ற எண்ணம் எழுகிறது. ரஜஸ் மற்றும் தமஸ் மனப்பாங்கை நோக்கிச் செல்லும்பொழுது, நம்முள் 'நான்' என்ற எண்ணம் எழுகிறது.

பொதுவாக மனிதர்கள், முக்குணங்களின் கலவையாக இருப்பது போலவே, 'நீங்கள்' மற்றும் 'நான்' எனும் கலவையாகவே இருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால், நாம், 'நான்' என்பதிலிருந்து 'நீங்கள்' என்பதற்கு எப்படி முன்னேறிச்செல்வது என்பதே. அதாவது அசுரத் தன்மையிலிருந்து, தெய்வத்தன்மைக்கு எப்படி மாறுவது என்பதே.

இதுதான் வாழ்க்கையின் லட்சியம் என்று சொல்வதைவிட, வாழ்க்கையின் ஒரே இலட்சியம் என்று சொல்லலாம். நாம் நமது எல்லைகளை விட்டுவிட்டு, விரிவடையும்பொழுதுதான் இந்த மாற்றம் நிகழ்கிறது.

'எனது' என்பதே 'நான்' என்பதின் மூலம்

இந்த விரிவடைதல் வெளி உலகம் சம்பந்தப்பட்டது அல்ல. இது முழுக்க முழுக்க ஒரு உள்ளுலகச் செயல்முறை. இந்த அனுபவம் உள்ளுக்குள் நிகழ்கிறது. அதன் வெளிப்பாடு வெளியில் நிகழ்வதில்லை.

'நான்' மற்றும் 'எனது' என்பவை எங்கிருந்து வருகின்றன என்பதை நாம் முதலில் புரிந்துகொண்டாக வேண்டும். 'எனது' என்னும் உரிமை கொண்டாடும் தன்மையிலிருந்துதான், 'நான்' என்னும் அடையாளம் எழுகிறது என்று நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை இதற்கு நேர்மாறானது. 'எனது' என்னும் உடைமை உணர்ச்சியிலிருந்துதான், 'நான்' என்னும் அடையாளம் எழுகிறது.

நாம் பலவிதமான ஆசைகளோடு
பிறக்கிறோம். இதுவே நம்முடைய
மூலசக்திக்கான அடித்தளத்தை
உருவாக்குகிறது.

இந்த ஆசைகளே, எல்லாவற்றையும் நம்முடைய உடைமையாக்கிக்கொள்ள வேண்டுமென்ற எண்ணத்தின் மூலமாக, அவற்றை அடைவதற்கும் சேகரிப்பதற்கும் நம்மை உந்துகின்றன. இந்த ஆசைகள், பொருள் சார்ந்ததாகவோ, உடல் சார்ந்ததாகவோ அல்லது உளவியல் சார்ந்ததாகவோ இருக்கலாம்.

வாழ்க்கையின் ஒரே
இலட்சியம்:
அசுரத்தன்மையிலிருந்து,
தெய்வத்தன்மைக்கு
மாறுவதே!

பிறந்த பச்சிளங்குழந்தைகூட, தான் தொடர்ந்து உயிர்வாழ வேண்டும் என்கிற அடிப்படை ஆசையிலிருந்துதான் இயங்குகிறது. அது அழுவதும், மற்ற செயல்களைச் செய்வதும்கூட, தன்னுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான்.

அக்குழந்தைக்குப் பேணுதலும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன. அது வளர வளர, அதன் ஆசைகளும் விரிவடைகின்றன. அதற்கு வகைவகையாக உணவு, உடை, உறைவிடம், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் பல்வேறு வகையான வேறுவிதத் தேவைகளும் தேவைப்படுகின்றன.

ஒரு ஆசை நிறைவேறியவுடன், அடுத்த ஆசை எழுகிறது. ஆனால், உண்மையில் எந்த ஒரு ஆசையும் நிறைவடைவதில்லை. நம்முடைய ஆசைகளும், ஆசைகளுடைய நிறைவு போன்ற தோற்றமும்தான் 'எனது' என்ற உடைமை எண்ணத்தை உருவாக்குகின்றன.

நமது அடிப்படையான ஆசைகள் ப்ராரப்த கர்மாவிலிருந்து வருகின்றன. நமது முந்தைய சரீரத்திலிருந்து எடுத்து வரப்பட்ட மனப்பாங்கிலிருந்து வருகின்றன. இதை வாஸனா என்றும் அழைக்கிறோம்.

நமது முந்தைய பிறப்பிலிருந்து கொண்டுவரப்பட்ட மனப்பாங்கே, நாம் எப்படி, எங்கு, எதுவாகப் பிறக்க வேண்டுமென்று முடிவெடுக்கிறது.

நமது முந்தைய
பிறப்பிலிருந்து
கொண்டுவரப்பட்ட
மனப்பாங்கே, நாம்
எப்படி, எங்கு, எதுவாகப்
பிறக்க வேண்டுமென்று
முடிவெடுக்கிறது.

வாஸனாக்கள், என்பது நமது முந்தைய
பிறவியிலிருந்து எடுத்துவரப்பட்ட நமது
உடல்-மன அமைப்பின் கூட்டு மற்றும்
தொகுக்கப்பட்ட மனப்பாங்கு. முந்தைய
பிறவியில் நாம் நம் வாழ்க்கையை எப்படி
வாழ்ந்தோம் என்ற அடிப்படையில்தான்
இவை அமையும்.

முந்தைய பிறவியில் நம்மால்
நிறைவேற்றப்படாத ஆசைகள், நாம்
உடலை விட்டு நீங்கிய பிறகும் நம்மைப்
பின்தொடர்கின்றன. இந்த ஆசைகள்
நம்மைவிட்டு நீங்குவதில்லை. அவை
நம்மைப் பின்தொடர்கின்றன.

அப்படி அவை நம்மைப் பின்தொடருவது மட்டுமல்லாமல், அடுத்த பிறவியில் ‘நாம் யார்’ என்பதையும் நிச்சயிக்கின்றன. அந்த நிறைவேறாத ஆசைகள் மூலாதாரச் சக்ரத்திலிருந்து எழுகின்றன. அவையே ‘எனது’ என்பதைக் கட்டமைக்கின்றன. இந்த ஆசைகளும் உடைமை மன-அமைப்புமே, ‘நான்’ என்ற அடையாளத்தை நிர்ணயிக்கின்றன.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ‘நான்’ என்ற அடையாளம் - ஆசைகளையும், ‘எனது’ என்ற உடைமை மனப்பான்மையையும் உருவாக்கவில்லை. இந்த ஆசைகளும், ‘எனது’ என்ற உடைமை மனப்பான்மையும்தான் ‘நான்’ என்ற அடையாளத்தை வளர்க்கின்றன.

உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்தும், நீங்கள் யார் என்பதும், உங்களைச் சுற்றி உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. உங்கள் வாழ்க்கையின் எந்தவொரு பகுதியிலும், உங்களுக்கு நீங்களே கொடுத்துக்கொள்ளும் முத்திரையானது, அந்தச் சமயத்தில் நீங்கள் எதை அடைந்திருக்கிறீர்களோ அல்லது எது உங்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதோ, அதன் அடிப்படையில்தான் அமைந்திருக்கிறது.

ஸ்வாதிஷ்டாந சக்ரத்தில்தான் இந்த ‘நான்’ என்கிற அடையாளம் உறைகிறது. இந்த அடையாளம், உங்களின் வெளிப்பாடு. ஆசைகள், உங்களின் அனுபவம்.

அனைத்தும் உங்கள் தேர்வே

இராவணனோ, துரியோதனனோ அல்லது ஹிட்லரோ தங்களின் அடையாளமாக அசுர அடையாளங்களை, குணங்களைத் தற்செயலாகப் பெற்றுவிடவில்லை.

தங்களின் முந்தைய பிறவியில் வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையில்தான், இந்தப் பிறவியிலும் அவர்கள் அதே மனப்பாங்குடன் பிறந்தார்கள். அவர்கள் என்னவாகப் பிறந்தார்களோ, அதை அடைவதற்கான மனப்பாங்கையே முற்பிறவியில் பெற்றிருந்தார்கள்.

அவர்கள் இந்த வாழ்க்கைக்குள் நுழையும்போதே முந்தைய பிறவியின் மனஅமைப்புடனும், ஆசைகளுடனும்தான் பிறக்கிறார்கள். அவர்கள் என்னவாக ஆகவேண்டும் என்று நினைத்தார்களோ, அதற்கு உதவும் சூழ்நிலையிலேயே பிறந்தார்கள்.

ஆனாலும், இது, முன்பே நிர்ணயிக்கப்பட்ட
முடிவும் அல்ல. இது, மாற்றியமைக்க
முடியாததும் அல்ல. ஒருவர்
சக்திமிக்கவராகவோ, பணக்காரராகவோ
வாழ ஆசைப்படுவதென்பது அவர்
அசுரத்தனமான வாழ்க்கையைத்தான்
வாழவேண்டும் என்பதைக் குறிக்கவில்லை.

> ‘நீங்கள் யார்’ என்பது,
> உங்களைச் சுற்றி
> உள்ளவற்றை
> அடிப்படையாகக் கொண்டே
> அமைகிறது.

அது, தனிநபர் ஒருவர் தேர்ந்தெடுக்கின்ற ஒரு முடிவுதான்.

இந்த மொத்தப்
பிரபஞ்சமுமே கடவுளின்
விருப்பம்தான், அதனால்
நாமும் அவரது
விருப்பம்தான்!

நான் இதற்கு முன் அடிக்கடி உங்களுக்குச்
சொல்லி இருக்கிறேன், உங்களைப்
பொறுத்தவரை தலையெழுத்து என்றோ
அல்லது விதி என்றோ ஒன்று இல்லை.
இவை அனைத்தும் சூழ்நிலையிலிருந்து
தப்பித்துக்கொள்வதற்கு நீங்கள்
உபயோகிக்கும் கற்பனை கருத்துகளே.
இது எப்படி இருக்கிறது என்றால், சிலர்
என்னிடம் சரணாகதி அடைந்துவிட்டதாகச்
சொல்லுவார்கள். ஆனால், நான் எதைச்
சொன்னாலும், அதை அவர்கள் கேட்பது இல்லை.

விதியும் ஊழ்வினையும், நாம் செய்யும் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, நாம் கற்பிக்கின்ற காரணங்களே. அப்போதுதான் நாம் குற்றமற்றவர்களாகத் தப்பித்துக்கொள்ள முடியும். 'என்னால் என்ன செய்ய முடியும்? எல்லாமே விதிப்படிதான் நடக்கிறது, இது கடவுளின் விருப்பம்' என்றெல்லாம் சொல்வதே நமது வழக்கமாக இருக்கிறது.

ஆம், அது கடவுளின் விருப்பம்தான். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே கடவுளின் விருப்பம்தான், அதனால் நாமும் அவரது விருப்பம்தான்!

இருப்பினும், நாம் நமது 'சுதந்திரத்தை' (Free Will) உபயோகப் படுத்தவேண்டும் என்று கடவுள் விரும்பினார். அதனால்தான் நாம் என்ன செய்கிறோம் என்பதில் கவனத்துடன் இருப்பதற்கு, நமக்கு விழிப்புணர்வைக் கொடுத்துள்ளார்.

உண்மையில் நாம் 'கடவுளின் விருப்பம்' என்பதில் நம்பிக்கை கொண் டோமானால், நாம் எதைச் செய்தாலும், எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்ய முடியுமோ, அந்த அளவுக்குச் செய்துவிட்டு, பலனைக் கடவுளிடமே விட்டுவிடுவோம்.

இதைத்தான் முன்பே கிருஷ்ணர், கர்மண்யே வாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந - 'பலனைப் பற்றிக் கவலைப்படாமல் நீ செய்ய வேண்டியதைச் செய்துவிடு!' என்று சொல்லியிருக்கிறார்.

'நீங்கள்' என்கின்ற 'வெளி'யில் நாம் பயணிக்கும்பொழுது, கிருஷ்ணர் சொல்கின்ற இந்த மனப்பாங்குக்குள் செல்கிறோம்.

நாம் நம்மைப் பற்றிக் கவலைப்படாமல் மற்றவர்களின் தேவைகளை நமது தேவைகளைப் போல் நினைக்கும்போது, அங்கு, பலன்கள் என்ற வார்த்தையே அதன் அர்த்தத்தை இழந்துவிடுகிறது. அங்கு, சுயநலம்மிக்க வற்புறுத்தல்களும் இருப்பதில்லை; 'வெற்றி' என்று நாம் கற்பனைசெய்து வைத்திருக்கும் 'வெற்றி'யை நோக்கி மட்டுமே செலுத்தும் நம்முடைய 'நான்' என்ற அடையாளமும் இருப்பதில்லை.

அங்கு, வெற்றியும் தோல்வியும் அவற்றின் அர்த்தத்தை இழந்து விடுகின்றன. அவை இரண்டும் ஒன்றாகி விடுகின்றன.

நமது செயல்கள் அசுரத்தன்மை கொண்டதாகவோ அல்லது தெய்வீகத்தன்மை கொண்டவையாகவோ இருக்கலாம். ஆனால், நம் எல்லோருடைய உள்தளமும் தெய்வீகத்தன்மை உடையதே!

நம்முடைய உள்தளம் தூய்மையானது, மாசற்றது. நாம் உள்முகமாகத் திரும்பி அந்தத் தூய்மைத் தன்மையுடன் இணைந்து இருக்க வேண்டுமா அல்லது வெளி உலக ஈர்ப்பை நோக்கி ஓடி, அதனோடு இணைந்து இருக்க வேண்டுமா என்பதை நமது சுதந்திரத்தைக்கொண்டே நாம் தேர்ந்தெடுக்கிறோம்.

இராவணனுக்கு இராமனாக மாறக்கூடிய வாய்ப்பும், துரியோதனனுக்கு அர்ஜுனனாக மாறக்கூடிய வாய்ப்பும் இருந்தது. ஆனால், அவர்களின் சுய விருப்பத்தாலேயே அவர்கள் அந்த நிலையைத் தேர்ந்தெடுக்கவில்லை.

Krishna's hands playing flute