உங்களை ஆட்சிசெய்யும் அரசன் அஹங்காரமே
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அஹங்காரத்திற்கு இதனால் ஒரு பலனும் இல்லை என்றால், அது வளப்படுவதற்கான வழிவகையில்லையென்றால், அது இயல்பாகவே “இல்லை, நான் இங்கிருந்து போயாகவேண்டும்,” என்று சொல்லும். இதைப் பொறுத்துத்தான் நமது உடல் அங்கு உட்காரவோ அல்லது அங்கிருந்து நகரவோ செய்கிறது. இவ்வாறு, அஹங்காரத்தின் வழிகாட்டுதலின்படிதான் நாம் முடிவெடுக்கிறோம்.
இப்படித்தான் இந்தச் செயல் நடைபெறுகிறது. ‘இதிலிருந்து எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற கேள்வி நமது அஹங்காரப் பகுதியில்தான் எழுகிறது. இந்த இடத்தில்தான் நமது சுயநலம் நுழைந்து, அதன் வேலையைச் செய்ய ஆரம்பிக்கிறது.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், சில சமயங்களில் மொத்த செயல்முறையுமே, ‘ஆம், நான் இங்கு இருப்பேன்’ என்று சொன்னாலும், அஹங்காரம், ‘இதனால் என் சுய விருப்பங்கள் பாதிக்கப்படும், அதனால் நான் இங்கிருந்து போயாகவேண்டும்’ என்றுகூட முடிவெடுக்கலாம்.
இவ்வாறு அஹங்காரம் முடிவெடுத்துவிட்டால், அதன்பிறகு நாம் அங்கு அமரமாட்டோம். மனத்தின் மீதிப்பகுதி ஒப்புக்கொண்டாலும், அஹங்காரம் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லையென்றால், மொத்த முடிவுமே மாற்றப்பட்டுவிடும்.
‘இதிலிருந்து எனக்கு என்ன
கிடைக்கும்?’
என்ற கேள்வி
நமது அஹங்காரப்
பகுதியில்தான் எழுகிறது.
அதேபோல், மனத்தின் மீதிப்பகுதி ‘வேண்டாம்’ என்று சொன்னாலுங்கூட, அஹங்காரம் ‘ஆம்’ என்று சொன்னால், நாம் ‘ஆம்’ என்ற முடிவைத்தான் எடுப்போம். உதாரணத்திற்கு, சமூகத்தின் கண்ணோட்டத்திலோ அல்லது உங்களது புரிதலின் அடிப்படையிலோ, ஒழுக்கக் கேடான செயல்கள் என்று கருதப்படும் செயல்களில் ஈடுபடும்போது, உங்களது புத்தி ‘வேண்டாம்’ என்ற முடிவை எடுத்திருக்கும். ஆனால், உங்கள் அஹங்காரம், ‘இந்தச் செயலைச் செய்வதினால், நான்
வளப்படுவேன், அதனால் இதை நான்
செய்வேன்’ என்ற முடிவை எடுக்கும்.
உடனே நீங்களும் அந்தச் செயலைச்
செய்ய முடிவு எடுப்பீர்கள்.
இவ்வாறே நீங்கள், 'நீங்கள்' அல்லது
'நான்' என்ற முடிவை எடுக்கிறீர்கள்.
ஒரு சிறு வேறுபாடு இதுவே: ‘நீங்கள்’
என்று முடிவெடுக்கும்போது தெய்விக
குணங்களை வெளிப்படுத்துகிறீர்கள்;
‘நான்’ என்று முடிவெடுக்கும்போது
அசுரப்பண்புகளை வெளிப்படுத்துகிறீர்கள்.
> அஹங்காரத்தின்
> திருப்திக்காகச்
> செய்யப்படும் செயல்
> கள் நமது ‘இருப்பு’க்குப்
> பிரச்சினைகளைத்தான்
> உருவாக்கும்.
பெரும்பாலான மக்கள் இங்கு அமர்ந்து இருப்பதே, ‘இந்தச் சொற்பொழிவின் முடிவில், மற்றவர்களைவிட நமக்கு மிக அதிகமான விஷயங்கள் தெரிந்திருக்கும், அதை மற்றவர்களுக்குச் சொல்லி, நம்மை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ளலாம் என்பதற்காகத்தான்! இது, அவர்களுடைய அஹங்காரத்தை வலுப்படுத்துகிறது.
பல சமயங்களில், நாம் நமது அஹங்காரத்தின் திருப்திக்காகவே அமர்ந்து கேட்கிறோம். ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த நோக்கத்திற்காக நாம் அமர்ந்து கேட்டால், அது கீதையாகவே இருந்தாலும்கூட, நமது ‘இருப்பு’க்குப் பிரச்சினைகளைத்தான் உருவாக்கும். அது நமக்கு எந்த விதத்திலும் உதவாது.
‘நீங்கள்’ அல்லது ‘நான்’ என்று முடிவெடுக்கும் இடம் எது?
‘நீங்கள்’ அல்லது ‘நான்’ என்ற முடிவு, ஆன்ம சரீரத்தில் எடுக்கப்படுகிறது.
‘நீங்கள்’ என்ற மனப்பான்மையில் நாம் முடிவெடுத்தால், அனைத்துமே தெய்விகமாக மாறுகிறது. ‘நான்’ என்ற மனப்பான்மையில் நாம் முடிவெடுத்தால், எல்லாமே அசுரத்தன்மையாக மாறுகிறது.
மனஸ், நேர்மறையானதோ அல்லது எதிர்மறையானதோ அல்ல; சித்தம், எதிர்மறையானதோ நேர்மறையானதோ அல்ல; குணங்கள்கூட, எதிர்மறையானவையோ நேர்மறையானவையோ அல்ல.
தாமஸ குணங்களான செயலற்றதன்மை, மந்தத்தன்மைகூட, எதிர்மறையானவையோ நேர்மறையானவையோ அல்ல. பல ஜ்ஞானகுருமார்கள் எந்தச் செயல்களையும் செய்யாமல், செயலற்ற தன்மையில் இருப்பதுபோல் இருக்கிறார்கள். அவர்களின் அந்தக் குணத்திற்கும் மந்தத்தன்மைக்கும் இடையே எந்தவொரு வேறுபாட்டையும் நம்மால் காண முடியாது.
உதாரணத்திற்கு, பகவான் ரமண மகரிஷி, திருவண்ணாமலை என்ற சிறு கிராமத்தில்தான், தம் ஆயுட்காலம் முழுவதும் வாழ்ந்தார். அவர் வேறு எங்குமே சென்றதில்லை. அவர் எப்பொழுதும் மௌனத்தில்தான் இருந்தார். இருப்பினும், அவர் தமஸில் இருந்தார் என்று நாம் சொல்ல முடியாது. ஏனென்றால், அவர், 'நான்' என்ற நிலையிலிருந்து ஒருபோதும் முடிவெடுத்ததில்லை.
அவரது மொத்த செயல்பாடும் ‘நீங்கள்’ என்ற வட்டத்தில் நடந்துகொண்டிருந்தது, ‘நான்’ என்பதிலிருந்து அல்ல.
நாம் சித்தத்தையோ, மனஸையோ அல்லது ஸம்ஸ்காரங்களையோ நல்லது கெட்டது என்று சொல்லமுடியாது. மிக உயர்ந்த உணர்வு நிலையில் அவை இரண்டுமே இல்லை.
இருப்பினும், ஆன்ம சரீரத்தில் நாம் எடுக்கும் முடிவுகள்தான், அவை நல்லவையா அல்லது கெட்டவையா என்பதைத் தீர்மானிக்கின்றன. உணர்ச்சிமிகு (Passion) நிலைக்குப் பின்னால் இருக்கும் சக்தியும், கருணை (Compassion) நிலைக்குப் பின்னால் இருக்கும் சக்தியும் ஒன்றே.
நாம், 'நான்' என்பதை அடிப்படையாகக்
கொண்டு முடிவெடுக்கும்போது, அது
உணர்ச்சிகள் மிக்க நிலை ஆகிறது.
நாம், 'நீங்கள்' என்பதை அடிப்படையாகக்
கொண்டு முடிவெடுக்கும்போது, அது
கருணை நிலை ஆகிறது.
நாம் முக்கியமாக ஒரு விஷயத்தைப்
புரிந்துகொள்ளவேண்டும். நமது இருப்பில்,
தீவிர உணர்ச்சிகள் ஆழமாகவும், கருணை
> ஆன்ம சரீரத்தில் நாம்
> எடுக்கும் முடிவுகள்தான்,
> நல்லது, கெட்டதைத்
> தீர்மானிக்கின்றன.
என்பது மேம்போக்கானதாகவும் இருக்கும்போது, நாம் காட்டும் கருணை என்பது ஒரு பொய்யான வெளிப்பாடாகத்தான் இருக்க முடியும். அது, வெறும் பேர் புகழுக்கான வெளிப்பாடே தவிர, உண்மையான கருணை நிலை அல்ல.
நம் கருணைத் தன்மை, உணர்ச்சித் தன்மையைப்போலவே தீவிரமாக இல்லையென்றால், நமது செயல்கள் அனைத்துமே, அஹங்காரத்தையே அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
இப்பொழுது, இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருக்கும் இந்த முடிவுகூட, 'நான்' என்பதன் அடிப்படையில் எடுக்கப்பட்டிருந்தால், இந்தக் கீதை சொற்பொழிவுகூட, உங்கள் அஹங்காரத்திற்கு நீங்கள் போடும் ஒரு தீனியாகவே இருக்கும்.
'நீங்கள்' என்ற அடிப்படையில் நாம் முடிவெடுக்கின்றபோது, கீதையின் சொற்பொழிவு மட்டுமின்றி, நாம் தினந்தோறும் செய்யும் சாதாரண செயல்கூட தெய்விகமாக மாறும்.
இருப்புத்தன்மையின் மேல் செயல்படுங்கள்
நாம், ‘செயலின்’ மேல் வேலைசெய்யத் தேவையில்லை, ‘இருப்புத்தன்மை’யின் மேல்தான் வேலைசெய்ய வேண்டும். ‘செயல்’, நம்மை எங்கும் அழைத்துச்செல்லாது. ‘செயல்’, நம்மை இறுதி நிலைக்கு அழைத்துச்செல்லும் என்று நாம் நினைக்கும்வரை, நம்மிடம் கர்மா உள்ளது.
‘நீங்கள்’ என்ற
அடிப்படையில் நாம்
முடிவெடுக்கின்றபோது,
நாம் தினந்தோறும் செய்யும்
சாதாரண செயல்கூட
தெய்விகமாக மாறும்.
அப்படி நினைப்பவர் பூர்வ மிமாம்ஸி.
(வேத சடங்குகளை மேலோட்டமாகப்
புரிந்துகொள்பவர்).
‘இருப்புத்தன்மைதான்’ நம்மை
இறுதி நிலைக்கு அழைத்துச்செல்லும்
என்பதைப் புரிந்துகொள்பவரை உத்தர
மிமாம்ஸி என்றழைக்கிறோம். (வேத
சடங்குகளை, வேதாந்தத்தின் அடிப்படையில்
புரிந்துகொள்பவர்).
வேதத்தின் கருத்துப்படி, மக்கள், இரு முக்கியப் பிரிவுகளாக இருக்கிறார்கள். ஒன்று, செயலின்மேல் நம்பிக்கை உள்ளவர்கள், மற்றொன்று, இருப்பின்மேல் நம்பிக்கை உள்ளவர்கள்.
'இருப்பை' உணர்வுமாற்றம் செய்வதில் நம்பிக்கையுடைய மக்கள் வேதாந்திகள் எனப்படுகிறார்கள்.
'செயல்' மூலம் இறுதிநிலைக்கு உணர்வுமாற்றம்பெற முடியும் என்று நம்புபவர்கள் கர்மகாண்டிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
உண்மையில், இருப்புத்தன்மையின்மேல் வேலைசெய்யும்போது மட்டுமே இறுதிநிலையை அடைய முடியுமே தவிர, செயலின்மேல் வேலைசெய்யும்போது அல்ல.

நாம் செயலின்மேல்
வேலைசெய்யும் பொழுது, ஒன்று,
நாம் நம் உணர்ச்சிகளை நமக்குள்
கட்டுப்படுத்துகிறோம் அல்லது வெளியே
கொட்டுகிறோம். நாம் நம்முடனேயே
தொடர்ந்து சண்டையிட்டுக்கொள்கிறோம்.
வேறு எதையும் அடைவதில்லை. தம்முடைய
இருப்பை உருமாற்றம் செய்கின்ற ஒருவரே
இறுதிநிலையை அடைய முடியும்.
நாம் அசுரத் தன்மை உடையவராக இருப்பதா அல்லது தெய்விகத் தன்மை உடையவராக இருப்பதா என்பதை நாம் அந்த ஒரு கணத்தில்தான் முடிவுசெய்கிறோம்.
நாம் ஒரு தகவலைப் பெற்று, அதைச் செயல்முறைக்குட்படுத்தி, நமது உத்தரவையோ அல்லது முடிவையோ வெளியிடும்பொழுது, அந்த உத்தரவு எப்படி எடுக்கப்படுகிறது, எந்த மையத்திலிருந்து அது வெளிவருகிறது? என்பதை விழிப்புடன் கவனித்தாக வேண்டும்.
"எனக்கு இதிலிருந்து என்ன கிடைக்கும்? எனக்கு இதனால் என்ன லாபம்?" என்ற எண்ணத்துடன், அந்த உத்தரவு வெளிவந்தால், நாம் எதைச் செய்தாலும், தியானம் உட்பட, அது நமது அஹங்காரத்தை மட்டுமே திருப்தி செய்யக்கூடியதாக இருக்கும்.
பல பேர் என்னிடம், "ஸ்வாமிஜி, ஒரு சமயம், நான் தியானத்தின்போது பரவசத்தை உணர்ந்தேன். அது எத்தகைய அற்புதமான ஆனந்த அனுபவம். ஆனால், இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அது சட்டென மறைந்து விட்டது, மீண்டும் அந்த உணர்வு வரவேயில்லை! ஏன் அப்படி? நான் அதை மீண்டும் பெறுவது எப்படி?" என்று கேட்பார்கள்.
தேர்ந்தெடுப்பதைத் தவிர்ப்போம்
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், ஆனந்தம், தேர்ந்தெடுத்தல் அற்றது. 'நான்' இல்லாதிருக்கும்போது, நம்முடைய அடையாளம் மறையும்போது, நாம் ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.
நாம், இழந்த ஆனந்தத்தைத் திரும்பப் பெற விரும்புகின்ற அந்த வினாடியே, நாம் ஆனந்தத்தை அடைய பேராசைகொண்டுவிட்டோம். நாம் ஏற்கனவே தேர்ந்தெடுத்து விட்டோம், நாம் வாய்ப்பை உருவாக்கிக்கொள்கிறோம்!
நாம் தேர்ந்தெடுத்த அந்த வினாடியே, நாம் துக்கத்தையே தேர்ந்தெடுக்கிறோம். எல்லா வாய்ப்புக்களும் துக்கங்களே! ஏனென்றால், வாய்ப்பு என்பது மனத்தை அடிப்படையாகக் கொண்டது.
அது 'இருமைத் தன்மை'யை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆனந்தம் இருமைத் தன்மைக்கு அப்பாற்பட்டது. அங்கே இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் என்ற விருப்பத் தேர்வு இல்லை. அது தேர்ந்தெடுக்க முடியாத தன்மை கொண்டதாக இருக்கிறது.
> எல்லா வாய்ப்புக்களும் > துக்கங்களே!
ஆனந்தம், மனத்தின் நிலையையும்,
தேர்ந்தெடுக்கும் தன்மையையும் தாண்டி
நிகழ்வது. ஆனால், நாம் ஆனந்தத்தைக்
கெட்டியாகப் பிடித்துக்கொள்ள
முயல்கின்ற அந்த வினாடியே, நாம்
துக்கத்திற்குள்ளாகிறோம். ஏனென்றால்,
நாம் மன அளவுக்குக் கீழிறங்கி
விடுகிறோம், ஒப்பிட்டுப்பார்த்தலிலும்
இருமைத்தன்மையிலும்
சிக்கிக்கொள்கிறோம். ஆனந்தத்தை இந்த
வழிகளில் அனுபவிக்க முடியாது.
நாம் ஆனந்தமயமான நிலையில்
இருக்கும்பொழுதுதான், ஆனந்தம்
நம்மை உடைமையாக்கிக்கொள்ள நாம்
அனுமதிக்கிறோம்.
மாறாக நாம், ஆனந்தத்தை நம்
உடைமையாக்கிக்கொள்ள நினைக்கின்ற
அந்த வினாடியே, நாம் அதைத் துக்க
மயமாக மாற்றிக்கொள்கிறோம்.
நமது அஹங்காரத்தை வலுப்படுத்த வேண்டுமென்பதற்காக, ஆனந்தத்தை உடைமையாக்கிக்கொள்ள விரும்புகிறோம், அந்த முடிவு ‘எனது’ என்ற மனப்பான்மையிலிருந்தே வருகிறது. ‘நான்’ அல்லது ‘எனது’ என்ற மனப்பான்மை தோன்றி, அது முடிவுகளைத் தீர்மானிக்கின்றபோது, அது ஆனந்தத்தை அழித்துவிடுகிறது. அதன்பிறகு நம்மால் தெய்விகமானவராக நீடிக்க முடியாது.
நாம் ஆனந்தமாக இருக்கும்போது, நமக்குள் ‘நான்’ என்ற எண்ணம் எழுந் தால், உடனே நாம், ‘உனக்கு இங்கு இடம் இல்லை’ என்று சொல்லி அதை நிராகரித்துவிடுகிறோம். ‘நீங்கள்’ என்கிற கருத்தில் தளர்வாகவும், அமைதியாகவும் இருக்கிறோம்.
ஆனந்தத்தை நம் உடைமையாக்கிக்கொள்ள நினைக்கும் அந்த வினாடியே நாம், ‘நான்’ என்பதற்கு, ‘ஆம்’ என்று சொல்லி, அதை வரவேற்பளித்து விடுகிறோம்.
நமது அடையாளம் மறைந்துவிடுகின்றபோது, அஹங்காரம் கரைந்து விடுகின்றபோது, மீதி இருப்பது எதுவோ, அதுவே பிரபஞ்ச இருப்புத்தன்மை, அது தெய்விகமானது.
‘நான்’ என்கிற கருத்தைக்கொண்டு வருவதன்மூலம், நாம் அசுர குணங்களை உருவாக்குகிறோம். ‘நான்’ எனும் கருத்தைக்கொண்டுவரும் அந்த நொடியில், அங்கு எது இருந்தாலும் சரி, அது அசுரகுணமுடையதுதான்.
‘நான்’ எனும் கருத்தை நீக்கும் அந்த நொடியில், அங்கு எது இருந்தாலும், அது தெய்விகமானதுதான்.
‘நான்’ என்ற எண்ணத்தோடு நீங்கள் எது செய்தாலும் - தியானம், சடங்குகள், கற்றுக்கொள்ளுதல் - என்று எதுவாக இருந்தாலும், அது அஹங்காரத்தையே வலுப்படுத்தும். ‘நான்’ எனும் எண்ணத்தில் எதைச் செய்தாலும், அல்லது ‘நான்’ எனும் கருத்தை வலுப்படுத்துவதற்கு எதைச் செய்தாலும், இயல்பாகவே அது அறியாமைக்கும் துக்கத்திற்குமே வழிகோலும்.
‘நீங்கள்’ என்ற உணர்வில் எதைச் செய்தாலும் சரி, அது எதுவாக இருந்தாலும், இயற்கையாகவே அது தெய்விகம் ஆகிறது. அது நம்மை ஆனந்தத்திற்கு அழைத்துச்செல்கிறது.
பந்தமும் விடுதலையும்
ஸம்ஸ்க்ரு’தத்தில், நிவ்ரு’த்தி மற்றும் ப்ரவ்ரு’த்தி என்று இரண்டு வார்த்தைகள் உள்ளன.

நிவ்ரு’த்தி -உள்நோக்கிப் பார்ப்பது அல்லது விடுபடுவது; ‘நீங்கள்’ எனும் கருத்தில் மையங்கொண்டிருப்பது. ப்ரவ்ரு’த்தி - வெளிநோக்கிப்பார்ப்பது அல்லது பந்தத்தில் கட்டுறுவது; ‘நான்’ எனும் கருத்தில் மையங்கொண்டிருப்பது.
‘நீங்கள்’ என்பதிலிருந்து எது செய்தாலும், அது விடுதலைக்கு வழிவகுக்கும், ‘நான்’ என்பதிலிருந்து எது செய்தாலும் அது பந்தத்திற்கு வழிவகுக்கும்.
அஷ்டவக்ரர், மஹாராஜா ஜனகருடன்
உரையாடிக்கொண்டிருந்தபோது சொன்ன
அழகான ஒரு வாசகம்:
யதா நாஹம் ததா மோக்ஷோ யதாஹம் பந்தனம் ததா / மத்வேதி ஹேலயா கிஞ்சிந்மா க்ரஹான விமுஞ்ச மா //
‘நான்’ எனும் கருத்தை
நீக்கும் அந்த நொடியில்,
அங்கு எது இருந்தாலும்,
அது தெய்விகமானதுதான்.
எங்கு ‘நான்’ என்பது இல்லையோ, அங்கு
முக்தி உள்ளது. எங்கு ‘நான்’ என்பது
உள்ளதோ, அங்கு பந்தம் உள்ளது. இதைக்
கவனமாகக் கருத்திற்கொண்டு, நாம்
எதையும் பற்றிக் கொள்ளவும் வேண்டாம்,
எதையும் மறுக்கவும் வேண்டாம்.
நாம் நம்மில் மையங்கொண்டிருக்கும்வரை, விருப்பு வெறுப்பு மற்றும் ஆசை அச்சம் இவற்றில் நாம் சிக்கிக்கொள்கிறோம். பெரும்பாலான மக்கள், மூலாதார சக்ரத்திலோ அல்லது ஸ்வாதிஷ்டான சக்ரத்திலோ மையங்கொண்டிருப்பார்கள்.
மூலாதார சக்ரம், முழுக்க முழுக்க, 'எனது' என்பதைப் பற்றியதுதான். இதனால் எனக்கு என்ன பலன் கிடைக்கும்? இதன்பிறகு நான் என்ன ஆவேன்? என்பதைப் பற்றியதுதான்.
ஸ்வாதிஷ்டான சக்ரம், முழுக்க முழுக்க, 'நான்' என்பதைப் பற்றியதுதான். நமது உடல் மன அமைப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையிலிருந்து எழும் அடையாளம், பாதுகாப்பின்மை மற்றும் பயத்தைப் பற்றியதுதான்.
இவை இரண்டும் நம்மைப் பந்தப்படுத்தி
விடுகின்றன, நம்மைத் தடுத்துநிறுத்தி
விடுகின்றன, இந்தப் பொருள்ரீதியான
உலகில் நம்மை வலுவாகக் கட்டிப்போட்டு
விடுகின்றன.
நம் உடலிலுள்ள உயர் சக்தி மையங்கள் சக்தியூட்டப்பட்டுத் திறக்கப்படும்பொழுது, நம்முடைய சக்தி, மூலாதாரம் மற்றும் ஸ்வாதிஷ்டானத்தில் இருந்து அநாஹதத்திற்கும், அதற்கும் மேலுள்ள சக்தி மையங்களுக்கும் உயர்கிறது. அப்பொழுது நாம், நம்மைத் தாண்டியும் பார்க்கத் தொடங்குகிறோம். அதனால் 'எனது' என்பது வீழத்தொடங்குகிறது.
ஆஜ்ஞா சக்ரம் சக்தியூட்டப்படும்பொழுது, அஹங்காரம், அடையாளம், நான் மற்றும் எனது - இவையனைத்தும் கரைந்து, நம்மை 'நீங்கள்' ஆக்ரமித்துக்கொள்ளும். அப்போது நம்முள் இருக்கும் அசுரன் தெய்வமாகிறான். நம் அஹங்காரத்தைத் துறக்கும்பொழுது, நாம் எல்லையற்றவர்களாகி விடுகிறோம்.
அதன்பிறகு நாம், நான் மற்றும் எனது என்னும் மனப்பாங்கினாலும், நமது உற்றார், உறவினர்கள் என்ற சுயநல சிந்தனைகளாலும் கட்டுப்படுத்தப்படமாட்டோம். இந்த மொத்தப் பிரபஞ்சமுமே, நாம்
பொறுப்பெடுத்துக் கவனிக்க வேண்டிய
நமது உடைமையாகி விடுகிறது. கிருஷ்ணர்
இதைத்தான் வஸுதைவ குடும்பகம் - இந்தப்
பிரபஞ்சமே ஒரே குடும்பம் என்று
சொல்கிறார்.
‘நம்முடைய இந்த உடலும் மனமுமே, நம்முடைய எல்லை, நாம் இந்தப் பிரபஞ்ச த்திலிருக்கும் மற்றவர்களிடமிருந்து தனியானவர்கள்’ என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்வரை, நாம் தொடர்ந்து பிரபஞ்ச இருப்பினிடம் ச ண்டையிட்டுக் கொண்டிருப்போம். நாம் தொடர்ந்து இயற்கையுடன், முழுமையுடன், பூரணத்துடன் போராடிக் கொண்டேயிருப்போம்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், பூரணத்துடன் போராடுவது என்பது நமக்கு எப்பொழுதுமே வெற்றியைத் தராது. ஒரு சிறு தனிப்பகுதி, முழுமையுடன் போராடி ஒருபோதும் வெற்றியடைய முடியாது.
‘நான்’ என்ற உணர்வில் எதை நினைத்தாலும், பேசினாலும், செய்தாலும் அது, மேலும் மேலும் சிக்கல்களுக்கும் துக்கங்களுக்குமே வழிவகுக்கும்.
இங்கே கிருஷ்ணர், அசுர மற்றும் தெய்விகப் பண்புகளைப் பற்றி மிக அழகாக விளக்குகிறார்.
முந்தைய அத்தியாயங்களில், அர்ஜுனன் பேசினார், தமது அஹங்காரத்தை வெளிப்படுத்தினார். அவருள் தீவிர உணர்ச்சிக் கொந்தளிப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. மேலும் அவர் குழப்பமான நிலையில் பைத்தியமாகியிருந்தார். அவருக்குத் தெரிந்த விஷயங்களையெல்லாம் மேற்கோள்காட்டிப் பேசிக்கொண்டிருந்தார். பிறகு மெதுவாக அவர் அடுத்த நிலைக்கு வந்தார். கிருஷ்ணரைப் பேச அனுமதித்தார். உரையாடல் நிகழத் துவங்கியது.
இப்பொழுது இந்த பதினைந்தாவது மற்றும் பதினாறாவது அத்தியாயங்களில், அர்ஜுனன் முழுவதுமாக மௌனமானார்; கிருஷ்ணர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். இப்பொழுது அவருக்குள் கேள்விகள் இல்லை, சந்தேகங்கள் மட்டுமே. அனைத்துக் கேள்விகளும் மறைந்துவிட்டன. சின்ன சின்ன சந்தேகங்கள் மட்டுமே மீதம் இருந்தன. அவர், தம்முடைய குருவிடமிருந்து மேலும் சில புரிதல்களையும் விளக்கங்களையும் மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.