KAILASA Library/பகவத்கீதை/அளவிடமுடியாதSign in
பகவத்கீதை

அளவிடமுடியாத

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

பிரபஞ்சத்தின் விஸ்தாரணம்

தைத்த்ரேய உபநிஷத் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள சக்தி ஓட்டத்தின் வழித்தடத்தை, அதன் மூலத்திலிருந்து (Source) இறுதிப் பயன்பாடுவரை (End uses) விரிவாக ஆராய்கிறது.

அந்த மூல சக்தி, முதலில் ஆகாச' சக்தியாக வெளிப்படுகிறது என்று இந்த உபநிடதம் பகர்கிறது.

நீங்கள் அந்த மூல சக்தியை, பிரபஞ்சம், பரம்பொருள், கடவுள், பராசக்தி, சுய இருப்பு, ஜீவாத்மா அல்லது வேறெந்தப் பெயரிட்டு வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்.

பிரபஞ்ச சக்தியின் முதல் அடுக்கான இந்த ஆகாச' சக்திதான், வெளிப்பட்டிருக்கும் இப்பேரண்டம் முழுவதும் பரவியிருக்கிறது.

இதுவே 'பேரண்ட வெளி' சக்தி. ஆங்கிலத்தில் 'ஈதர் சக்தி' என்கிறோம். இந்தப் 'பேரண்ட வெளி' வெறுமனே ஒரு வெற்றிடம் என்று நினைக்காதீர்கள். நமக்கு வெளிப்படையாகத் தெரிவதுபோல, அதில் திடப்பொருள் ஏதும் இல்லை. இருப்பினும், அதில் முழுவதுமாக சக்தி நிரம்பியுள்ளது.

குவாண்டம் இயற்பியல் (Quantam Physics), ‘பருப்பொருளே சக்தி, சக்தியே பருப்பொருள்’ என்று நிரூபித்துள்ளது. பருப்பொருளும் சக்தியும், காலத்திலும் இடத்திலும் இணைந்தே நிலைகொண்டுள்ளன.

இந்தப் பிரபஞ்சத்தில், நமக்குக்
கிடைக்கக்கூடிய மிகப்பெரிய ஆதார
சக்தியாக இருப்பது ஆகாச' சக்தியே.

இந்தப் பிரபஞ்ச வரைபடத்தில்,
நமது சூரிய குடும்பத்தை நீங்கள்
வைத்துப்பார்த்தால், இந்தப் பூமிக்கிரகம்,
நமது சூரிய குடும்பத்தினுள்ளேயேகூட,
கிட்டத்தட்ட நமது பார்வைக்கே தெரியாமல்
மறைந்துவிடும்!

காலத்திலும் இடத்திலும்,
பருப்பொருளும்
சக்தியும் இணைந்தே
நிலைகொண்டுள்ளன.

பால்வெளியில் உள்ள ஒரு நடுத்தரமான
சூரிய குடும்பத்தோடு நமது சூரிய
குடும்பத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது,
நமது இந்தச் சூரிய குடும்பமும்
மறைந்துவிடும்.

அந்த நடுத்தர அளவுள்ள சூரிய குடும்பமும், அன்டாரஸ் (Antares) எனும் நட்சத்திரத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மறைந்துவிடும். இந்த அன்டாரஸ் நட்சத்திரம்கூட, முதல் பெரிய நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படும் பத்து நட்சத்திரங்களுள் ஒன்றல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்பீடு, இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பரப்பைப்பற்றிய கருத்தை ஒரு படமாக நம் கண்முன் விரித்துவிடுகிறது. நமது கோள் முக்கியமற்றதாகி விடுகிறது.

நான் 'முக்கியமற்றது' என்று சொல்லும்பொழுது, ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், இந்த மொத்தப் பிரபஞ்சத்தின் ஒரு மூலையை மட்டுமே எடுத்துக்கொண்டு, அந்தப் பரப்பளவோடு நம் பூமியை ஒப்பிட்டுப்பார்த்தால்கூட, நம் பூமிப்பந்து முக்கியமற்றதாகவும், கண்ணுக்குத் தெரியாத ஒரு புள்ளியாகவும் ஆகிவிடுவதைத்தான் குறிப்பிடுகிறேன்.

நமது இந்த அண்டம் வியாபித்திருக்கும் ஆகாசத்தின் விஸ்தாரணத்தை நம்மால் கற்பனைசெய்துகூடப் பார்க்க முடியாது. அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இந்தப் பூமி, ஒரு நுண்ணுயிரியை (Microbe) விட மிக மிகச்சிறியது.

இந்த வெளியில், இந்த அண்டத்தில், இந்தப் பிரபஞ்சத்தில், விண்வெளியில், எங்கும் நீக்கமற பரவி இருக்கும் சக்தி, ஆகாசம்தான்.

விண்மீன் மண்டலம்

இந்த அண்டமெங்கும்
நீக்கமற பரவியிருக்கும்
சக்தி, ஆகாசமே!

தெய்வீகம் மற்றும் அசுரப்பண்பு- இரண்டுமே ஒரு தாயின் பிள்ளைகளே

கிருஷ்ணர், தெய்வீக மற்றும் அசுரப்பண்புகளைப் பற்றிச் சொல்கிறார். இதன் சிறப்பு என்னவென்றால், இந்த இரண்டு வார்த்தைகளுமே ஒரே மூலத்தைத்தான் அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இரண்டு பண்புகளும் ஒரே சக்தியில்தான் நிலைபெற்றிருக்கின்றன. இது தற்செயலானதல்ல, இது வெறுமனே ஒரு தீர்மானம் மட்டுமே. நீங்கள் எப்போது 'நீங்கள்' என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, அப்பொழுது நீங்கள் தெய்வீகமடைகிறீர்கள்.

நீங்கள் எப்பொழுது 'நான்' என்ற
வார்த்தையைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ,
அப்பொழுது நீங்கள் அசுரர்கள் ஆகிறீர்கள்.
அவ்வளவுதான்.

நாம், 'நீங்கள்' மற்றும் 'நான்' என்னும் இந்த இரண்டையும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. 'நான்' என்றால் அஹங்காரத்தையும், 'நீங்கள்' என்றால் அந்தப் பிரபஞ்ச இருப்புத் தன்மையையும் குறிக்கிறது.

> உங்கள் காதலை,
> அன்பை அழிக்க முடியாது.
> அதை உருமாற்றம்
> மட்டுமே செய்ய முடியும்.

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர், இந்தச் ச க்தியைப் பற்றி மிக அழகாகச் சொல்கிறார்: எந்தச் சக்தியையும் அழிக்க முடியாது. அதை உருமாற்றம் மட்டுமே செய்ய முடியும். உங்கள் காதலை, அன்பை அழிக்க முடியாது. அதை உருமாற்றம் மட்டுமே செய்ய முடியும்.

அவர் சொல்கிறார், கன்றுக்குட்டி, அஹம், அஹம், (நான், நான்) என்று கத்தும்வரை, அது வேலைசெய்யவேண்டும், துன்பப்பட வேண்டும், அடிவாங்க வேண்டும், சித்ரவதைப்பட வேண்டும். அது இறந்தபிறகு, அதன் தோலால் இசைக்கருவிகள் செய்யப்படுகின்றன. பிறகு அந்த இசைக்கருவியை அடிக்கும்போது, அது, துமி துமி, தும் தும் (நீ, நீ) என்று சொல்லும். அது, அஹம், அஹம் என்று சொல்லும்வரை துன்பப்படுகிறது. தும், தும் என்று சொல்ல ஆரம்பித்தபின் அது, தெய்விகத்தின் புகழைப் பாடுவது போன்ற அருமையான காரணங்களுக்கு உபயோகப்படுகிறது!

இது வங்காள மொழியில் பேச்சு வழக்கில் உள்ள ஒரு அழகான உருவகமாகும். இராமகிருஷ்ணர் சொல்கிறார், நாம், அமி அமி என்ற கருத்தைக் கொண்டிருக்கும்வரை, நாம், நமக்கும் அடுத்தவர்களுக்கும் அசுரர்களாகவே இருக்கிறோம்.

நమ్ముள் துமி, துமி (நீ, நீ) என்ற
உணர்வுமாற்றம் நிகழ்ந்த
அக்கணமே, நமக்கும்
அடுத்தவர்களுக்கும்
நாம் ஓர் ஆசீர்வாதமாக
ஆகிவிடுகிறோம்.

நమ్ముள் துமி, துமி (நீ, நீ) என்ற உணர்வுமாற்றம் நிகழ்ந்த அக்கணமே, நாம், நமக்கும் அடுத்தவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக, ஆசீர்வாதமாக ஆகிவிடுகிறோம்.

நமது ஸம்ஸ்காரங்கள் அனைத்துமே நமது காரண சரீரத்தில் சேமித்துவைக்கப்பட்டுள்ளன. அவை நமது கட்டுப்பாடு இல்லாமலேயே இயங்குகின்றன. நமது கவனத்திற்குக் கொண்டுவரப்படாமலேயே முடிவுகள் அங்கேயே எடுக்கப்படுகின்றன.

ஆனால், ஆழமான நிலையான ஆன்ம சரீரத்தில், நாம், ‘நீங்கள்’ அல்லது ‘நான்’, தெய்விகம் அல்லது அசுரத்தனம் என்ற முடிவை விழிப்புணர்வோடுதான் எடுக்கிறோம்.

கண், மனம் மற்றும் புத்தியின் செயல்பாடுகள்

கண், மனம் மற்றும் புத்தியின் செயல்பாடுகள் வரைபடம்

நாம் எப்படி முடிவெடுக்கிறோம், நம் மனம் எப்படிக் கருத்துகளை உள்வாங்கி, செயல்படுகிறது என்பதையும், நமது இருப்பில் உணர்வு மாற்றம் எப்படி நிகழ்கிறது என்பதையும் இந்தப் படம் விளக்குகிறது.

இதையே கிருஷ்ணர், ஆழமான நிலையில் விளக்குகிறார்.

நீங்கள், உங்கள் கண்களின் மூலமாகத் தகவலைப் பெறுகிறீர்கள். உதாரணத்திற்கு, இப்போது நீங்கள், நான் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உடனே அந்தக் காட்சி, சக்ஷுவிற்குச் (பார்க்கும் இந்திரிய சக்தி) - செல்கிறது. அங்கு அது பயோ சிக்னலாக (Bio Signal) அல்லது டிஜிட்டல் சிக்னலாக (Digital Signal) மாற்றப்படுகிறது. அப்படி மாற்றப்பட்டால் மட்டுமே, தகவலைச் செயல்படுத்த முடியும்.

கண்ணுக்குப் பின்புலத்திலுள்ள சக்தி, ஒரு டிஜிட்டல் சிக்னல் பிராஸசர் (Digital Signal Processor) போன்று செயல்பட்டு, பார்க்கும் காட்சியைச் செய்தித் துகள்களாக (Digital File) மாற்றுகிறது.

பிறகு அந்தக் கோப்பு சித்தத்திற்குச் செல்கிறது. அங்கு ‘நீக்குதல்’ (இது அல்ல, இது அல்ல) செயல்முறை நடைபெறுகிறது. நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு மரமல்ல, ஒரு செடியல்ல, ஒரு மிருகம் அல்ல என்பதை அங்குப் புரிந்துகொள்கிறீர்கள். மனத்தின் ஒரு பகுதியான சித்தம் ஒரு வடிகட்டிபோல் இயங்குகிறது.

சித்தம், தனக்கு வந்திருக்கும் தகவலை ஏற்கெனவே தான் வைத்திருக்கும் எல்லாத் தகவல்களோடும் ஒப்பிட்டுப் பார்த்து, அது எதுவாக இருக்கக்கூடும் என்னும் சாத்தியக்கூறுகளில் இருந்து பிரித்துப்பார்க்கிறது.

அதற்கு அடுத்து அந்தக் கோப்பு, மனத்தின்
மற்றொரு பகுதியான மனஸிற்குச் செல்கிறது.
மனத்தின் இந்தப் பாகம்தான், ‘இதுதான்
இதுதான்’ என்று அடையாளம் காண்கிறது.

உதாரணத்திற்கு, ‘இவர் ஒரு மனிதர். அவர்
காவி உடை அணிந்திருக்கிறார். அவர்
தியான வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார்’

மனத்தின் ஒரு பகுதியான சித்தம், ஒரு வடிகட்டிபோல் இயங்குகிறது.

என்று அடையாளம் காண்கிறது. இந்த முறையில்தான் ஒரு 'கருத்து' என்பது உருவாகிறது.

அதற்கு அடுத்து அந்தக் கோப்பு புத்திப் பகுதிக்குச் செல்கிறது. அது, அந்தக் கோப்பை, இதே போன்ற சூழ்நிலையோடு அல்லது இதே மனிதரோடு உங்களுக்கு நிகழ்ந்த கடந்தகால அனுபவங்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்.

உதாரணத்திற்கு, இப்போது நீங்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதால், அந்தக் கோப்பு என்னைப் பற்றிய செய்திகளைக் கொண்டிருக்கும்.

‘கருத்து’ என்று ஒன்று உருவாவது மனத்தின் ஒரு பகுதியான மனஸ் பகுதியில்தான்.

என்னுடனான உங்கள் கடந்தகால அனுபவம் நன்றாக இருந்தால் அல்லது என்னைப் பற்றி நீங்கள் நல்லதாகக் கேள்விப்பட்டிருந்தால், நீங்கள் சந்தோஷப்படுகிறீர்கள், உடனே உங்கள் புத்தி, 'சரி' என்று அதில் எழுதிவிடும்.

அப்படி இல்லாமல், நீங்கள் இங்கிருக்கும்
இந்த நேரத்தை வீண் என்று உணர்ந்தாலோ
அல்லது நான் சொல்லும் கருத்துகளோடு
ஒத்துப்போக விருப்பமில்லையென்றாலோ
அல்லது என்னுடனான உங்கள் கடந்தகால
அனுபவம் கசப்பானதாக இருந்திருந்தாலோ,
உங்கள் புத்தி, 'வேண்டாம்' என்று அதில்
எழுதிவிடும்.

'இதில் எனக்கென்ன இருக்கிறது? இந்தக் காட்சியுடன் நான் எந்தவிதத்தில் சம்பந்தப்பட்டுள்ளேன்? இதிலிருந்து எனக்கென்ன இலாபம் கிட்டும்?' என்ற கேள்விகளின் அடிப்படையில் புத்தி பொருத்தமான முடிவு எடுக்கிறது.

இந்தக் கோப்பு, இப்படி எல்லாவித குறிப்புகளுடன், கூடுதல் செய்திகளுடன் அஹங்காரத்திற்குச் செல்கிறது. அஹங்காரத்திற்கு இதில் ஏதாவது லாபம் இருந்தால், உடனே அது, "சரி, இங்கு அமர்ந்து, இவர் பேசுவதைக் கவனிக்கலாம்," என்று சொல்லும்.