KAILASA Library/பகவத்கீதை/நீங்கள் மற்றும் நான்Sign in
பகவத்கீதை

நீங்கள் மற்றும் நான்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தெய்வ, அசுரத் தன்மைகளை விளக்குகின்ற தெய்வாஸுர ஸம்பத் விபாக யோக: என்னும் இந்தப் பதினாறாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர், ஸம்ஸ்காரங்களைப் பற்றி மேலும் ஒரு ஆழமான நிலையிலிருந்து விளக்குகிறார்.

பதினான்காவது அத்தியாயமான குணத்ரய விபாக யோகத்தில், அனைத்து உயிரினங்களுக்குள் இருக்கின்ற ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கின்ற இயற்கையின் முக்குணங்களைப் பற்றி விளக்கினார். இவை முறையே நற்பண்புகள், ஆக்கிரமித்தல், மற்றும் அறியாமை என்ற நிலைகளைக் குறிக்கின்றன. மேலும் அவர், உடல் - மன அமைப்பில் அமைந்துள்ள மூன்று அடுக்குகளான ப்ராண சரீரம், மன சரீரம் மற்றும் ஸூக்ஷ்ம சரீரம் அதாவது உடல் சார்ந்த, மனம் சார்ந்த மற்றும் அதைவிட நுட்பமான உடல்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்.

புருஷோத்தம யோக: என்னும் பதினைந்தாவது அத்தியாயத்தில், காரண சரீரத்தைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார். முதல் ஸ்லோகத்திலேயே அவர்,

உடல் - மன அமைப்பு எப்படி மையப்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ளார். அது ஒரு தனித்துவம் வாய்ந்த மரம் போன்றது. அதன் வேர்கள் ஸ்தூல உலகிலும், கிளைகள் காரண உலகிலும் இருக்கின்றன.

கிருஷ்ணர் சொல்கிறார்: இந்த மரத்தின் வேர்கள், வெளியே வெளிப்படையாகத் தெரியும் ‘வெளி’யில், அதாவது விழிப்புணர்வு தளத்தில் தொங்கிக்கொண்டு இருக்கின்றன. மேலும் இந்த வேர்கள், தெரியாத ‘வெளி’யிலும் அதாவது காரண சரீரத்திலும் பரவிப் படர்ந்திருக்கின்றன. கிளைகளைப் போன்றே இந்த வேர்களும் கீழ்நோக் கிச் செல்கின்றன. அந்த மரம், மேலுங்கீழுமாக, பல பாகங்களாகப் பரவி வளர்ந்து, மீண்டும் அது தெரியாத வெளிக்குள் நுழைகிறது.

இந்த மரத்தின் இலைகளே வேதங்கள் - ஜ்ஞானம் என்று கிருஷ்ணர் விளக்குகிறார்.

நாம் உணர்வளவில், நம் விழிப்புணர்வற்ற
வெளிக்குள் இருக்கின்ற வார்த்தைகளையே
தொடர்ந்து பயன்படுத்துகிறோம். இந்த
விழிப்புணர்வற்ற வெளிதான், உடல் மன
அமைப்பில் உள்ள காரண சரீரம்.

பிறகு அவர், காரண சரீரத்தில் உள்ள ஸம்ஸ்காரங்களை நீக்குவது எப்படி என்பது பற்றியும், ஆனந்த நிலையை நோக்கி, நிலையான விழிப்புணர்வு நிலையை நோக்கிச் செல்லும்படி காரண சரீரத்தை வடிவமைப்பது எப்படி என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார். இதுவே சென்ற அத்தியாயத்தில் சொல்லப்பட்டதன் சாரம்.

இந்தப் பதினாறாவது அத்தியாயத்தில், உடல்-மன அமைப்பில் உள்ள ஆழமான சக்தி அடுக்கான ஆன்ம சரீரத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார்.

முதலில் நான் தைத்த்ரேய உபநிஷத்தில் பாரம்பரியமாக விளக்கியுள்ளபடி, உடல்-மன அமைப்பில் உள்ள சரீரங்களைப் பற்றி விளக்கிவிடுகிறேன்.