வினாக்களின் வாசலில்...
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஸ்வாமிஜி, அசுரர்கள்கூட, உதாரணத்திற்கு இராமாயண காவியத்தில் இராவணன்கூட தனது இனத்தையும் தனது குடும்பத்தையும் அன்புடன் கவனித்துக்கொண்டான். இந்தப் பரிமாணத்தில் அவனுள்ளும் 'நீங்கள்' என்ற உணர்வு இருந்தது என்று சொல்வது சரியாகுமா? அப்படியென்றால் அவன் சற்றே குறைந்த அசுரத்தனம் கொண்டவன் ஆவானா?
மிகச்சிறந்த குருமார்களே பல்வேறு மதங்களை உருவாக்கியுள்ளார்கள். இருந்தாலும் நீங்கள் சொன்னதுபோல், சில மதங்கள், மக்களை அன்பாலும் கருணையாலும் வழிநடத்துவதற்குப் பதிலாக, பயம் மற்றும் ஆசையைக் கொண்டு கட்டுப்படுத்துகின்றன. எங்களில் பல பேருக்கு, கடவுளைத் தேடி நாடிச் செல்வதற்கு மதத்தைத் தவிர வேறெந்த வழியும் தெரியாது. நாங்கள் என்ன செய்வது, ஸ்வாமிஜி?
ஸ்வாமிஜி, நான் கேட்டவரை, நம் இயல்பான நிலை என்பது தெய்விகநிலைதான், அதிலிருந்துதான் நாம் அசுர நிலைக்குள் விழுந்துவிட்டோம். நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் நம்முடைய தெய்விக நிலையிலேயே இருக்க முடியுமா?
ஸ்வாமிஜி, ஓம் என்ற மந்திரத்திற்கான அர்த்தம் என்ன?
ஸ்வாமிஜி, இந்து மதத்தில், பசு புனிதமானதாகவும், தெய்விகத் தன்மையுடையதாகவும் கருதப்படுகிறது. அஹிம்சையின் அடிப்படையில் இது சொல்லப்படுவதாக இருந்தால், பிறகு எந்த ஒரு மிருகத்தையும் கொல்லக்கூடாது. ஆனால், பசுவை மட்டும் கொல்லக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்? மற்ற மிருகங்களை ஏன் சொல்லவில்லை?
✍ நன்றி நவிலல்: ஸ்வாமிஜி, நாங்கள், எங்களுக்குக் கற்பிக்கப்பட்ட கல்வியின் அடிப்படையில், அறிவியலில் எல்லாவற்றுக்குமே பதில் உண்டு என்று நம்பியிருந்தோம். அதனால் நாங்கள், வேத நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு அறிவியலால் பதில் அளிக்க முடியாதபோது, ‘அறிவியலின் எல்லை அவ்வளவுதான்’ என்று அந்த அறிவியலை நிராகரிப்பதற்குப் பதிலாக, வேத நூல்கள் சொன்னதை நிராகரித்தோம். ஆனால், இப்போது உங்கள் ஸத்ஸங்கங்களைக் கேட்டபிறகு எங்களால் வேத நூல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு நன்றி ஸ்வாமிஜி.
✍ ஸ்வாமிஜி, துக்கத்தையே இறுதியில் தரும் தற்காலிக இன்பங்களிலேயே உழல்வதற்குப் பதிலாக, அதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தை அடைய விரும்புகிறேன். அதற்கு நான் கோபம், காமம் மற்றும் பேராசையை மட்டும் துறந்தால் போதுமா?
