KAILASA Library/பகவத்கீதை/எவ்வாறு நமது உலகத்தைக் காப்பாற்றுவதுSign in
பகவத்கீதை

எவ்வாறு நமது உலகத்தைக் காப்பாற்றுவது

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

16.8 அசுர குணம் உடைய மனிதர்கள், இந்த உலகம் பொய்யானது, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கிற சக்தி என்றோ அல்லது அறிவாற்றல் என்றோ ஒன்று இல்லை என்றும், இந்த முழுப் படைப்புமே, சிற்றின்பத்தாலும் ஆசைகளினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும் நினைக்கிறார்கள்.

16.9 படைப்பைப் பற்றிய இவ்வுலகாயதக் கருத்தைக்கொண்ட, தங்களையே தொலைத்த, கொடூரமான செயல்களில் ஈடுபடும் குறைந்த பட்டறிவுடன் கூடிய தாழ்ந்த ஆன்மாக்கள், உலகத்தை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், நமக்குள் இருக்கும் சக்தியே, நம்மை இயக்கும் சக்தியே, இந்தப் பிரபஞ்சத்தையும், சூரிய குடும்பத்தையும் (நவகcolumnsளையும்), பூமியையும் இயக்குகிறது. இந்தச் சக்தியே புத்திசாலித்தனம், உயர்ந்த புத்திசாலித்தனம்!

கிருஷ்ணர் சொல்கிறார், நம்மால்
இந்தச் சக்தியை உணர முடியாதபோது,
நாம் அசுரத் தன்மை உடையவர்களாக
இருக்கிறோம். அனைத்துமே இந்தச்
சக்தியினால்தான் இயக்கப்படுகின்றன
என்பதை நாம் நம்புவதில்லை;
நம்முடைய பேராசையினாலும்,
காமத்தினாலும், ஆசையினாலும் மட்டுமே
எல்லாச் செயல்களும் நிகழ்வதாக நாம்
நம்புகிறோம்.

‘நான் கடவுள்’
என்ற நம்பிக்கையும்,
‘கடவுள் நம்முள் வாழ்கிறார்’
என்ற நம்பிக்கையும்
அறியாமையால்
ஏற்படுவதல்ல,
ஆழ்ந்த விழிப்புணர்வினால்
ஏற்படுவது.

இவ்வுலகையேநாம்தான், நம்முடைய அற்ப பட்டறிவைக்கொண்டு இயக்குகிறோம் என்று நம்புகிறோம். இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த அற்பப் பட்டறிவை, அதிபுத்திசாலித்தனம் என்று கருதிக்கொள்கிறோம்.

பல சமய நிறுவனங்கள், இந்தப் பூமி கிரகமே பிரபஞ்சத்தின் மையம் என்று பல வருடங்களாக நம்பிக்கொண்டிருந்தன. அதை நம்பாத லட்சக் கணக்கானவர்களை அவை கொல்லவும் தயங்கவில்லை.

கடவுள்தான் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கினார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தாலும்கூட, அந்தக் கடவுள் இந்தப் பூமி கிரகத்தில் மட்டுமே இருக்கிறார் என்று நினைத்தார்கள் போலும். அவர்கள், தாங்களே இந்தப் பூமியை ஆளுவதாகவும், அவர்களைத் தாண்டி வேறொன்றுமில்லை என்றும் நினைத்தார்கள். அதனால்தான் அவர்களால், தங்கள் மத நம்பிக்கையை நம்ப மறுக்கும் மக்களைக் கொலை செய்யவும் முடிந்தது.

நாம் அசுரத் தன்மையிலிருக்க, நாம், மத நம்பிக்கை அற்றவராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ‘கடவுள்கூட நம்முடைய தேவைக்குப் பயன்படுபவர்தான்’ என்ற கருத்தில் மையங் கொண்டிருந்தாலே போதும், நாம் அசுர குணம் கொண்டவர்கள்தான். இது போன்ற நம்பிக்கை, ‘நான் கடவுள்’ என்று நம்புவதிலிருந்தும், ‘கடவுள் நம்முள் வாழ்கிறார்’ என்ற நம்பிக்கையிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டது.

‘நான் கடவுள்’ என்ற நம்பிக்கையும், ‘கடவுள் நம்முள் வாழ்கிறார்’ என்ற நம்பிக்கையும் அறியாமையால் ஏற்படுவதல்ல, ஆழ்ந்த விழிப்புணர்வினால் ஏற்படுவது. முழுமையான தன்னலமற்றது. நீங்கள் கடவுளான பிறகு, இந்த உலகமே உங்களின் ஒரு பாகமாகிவிடும். நீங்கள், உலகத்தின் ஒரு பாகமாக மாறிவிடுகிறீர்கள். அப்போது அங்கே 'நான், நீங்கள்' என்கின்ற பேதமில்லாமல் போகும். இந்த இரண்டுமே ஒன்றாக இணைந்துவிடும். 'நான்' அல்லது 'நீங்கள்' என்பது அதற்குப்பிறகு ஒரு பொருட்டல்ல.

அறிவியலும் - ஆன்மிகமும்

இந்தப் பிரபஞ்ச படைப்பைப் பற்றிய எந்தவிதமான தர்க்க ரீதியான விளக்கத்தையும், இன்றுவரை அறிவியலால் தர முடியவில்லை. அதைக்குறித்து பல கோட்பாடுகள் சொல்லப்படுகின்றன. ஆனால், அவை எல்லாமே 'கோட்பாடுகள்' என்றளவில் மட்டுமே நிற்கின்றன.

ஒரு பெரும் பிரபஞ்ச வெடிப்பால்தான் இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று 'பெருவெடிப்புக் கோட்பாடு' (Big Bang Theory) சொல்கிறது.

ஆனால், எப்படி இந்தப் பேரண்டப் பெருவெடிப்பு நடந்தது? யார் அதை வெடிக்கச் செய்தது? அதற்கு முன் அங்கே என்ன இருந்தது? எது அந்த வெடிப்பை ஏற்படுத்தியது? - என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இந்தத் தத்துவத்தில் சொல்லப்படவில்லை. அந்தப் பேரண்ட வெடிப்பை ஏற்படுத்தியது எது என்பது இன்னமும் தெரியவில்லை. ஏதோ ஒன்றுதான் அந்தப் பெருவெடிப்பை ஏற்படுத்தியதற்குக் காரணம் என்றால், எப்படி அந்தப் பெருவெடிப்பு, பிரபஞ்ச படைப்புக்குக் காரணமாகும்?

புத்திசாலித்தனமும் விழிப்புணர்வும்
கொண்ட விஞ்ஞானிகள், இதைப்
புரிந்துகொண்டு, புதிய கருத்துக்களை
ஏற்படுத்திக்கொண்டார்கள். அவர்களும்
கூட, நம் ரிஷிகள் சொல்வதுபோல், பிரபஞ்ச
சக்தியே இந்தப் பூமியை இயக்குகிறது
என்கிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம், ஒரு இறந்த பொருள்
அல்ல; அது, வெறும் ஒரு திடப்பொருள்
அல்ல; அது, வெறும் இயற்பியலும்
வேதியியலும் மட்டுமல்ல என்கிறார்கள்.

நீங்கள் கடவுளான பிறகு,
இந்த உலகமே உங்களின்
ஒரு பாகமாகிவிடும். நீங்கள்,
உலகத்தின் ஒரு பாகமாக
மாறிவிடுகிறீர்கள்.

இந்த உலகம் வெறும் வேதியியலால் உருவானது என்று நினைப்பவர்கள் அசுரர்கள். இந்த உலகம், இயல்பாகவே, வெறும் பொருள்களால் ஆனது என்று நினைத்தால், நமக்கு வேண்டியதை அடைய, நாம் நல்வழியிலோ அல்லது தீய வழியிலோ, சரியான முறையிலோ அல்லது தவறான முறையிலோ முயற்சிசெய்வோம். நாம் விரும்பியவண்ணம் மனம்போனபோக்கில் வாழ்ந்துகொண்டிருப்போம்.

இந்தப் பிரபஞ்சம் புத்திசாலித்தனம் மிக்கது என்றும், அது நம்முடைய எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் பதிலளிக்கிறது என்றும் புரிந்துகொள்ளும்போது மட்டுமே, நம் வாழ்க்கையை, சரியான முறையில் வாழ ஆரம்பிக்கிறோம்; உண்மையிலேயே, அப்போதுதான் வாழவே ஆரம்பிக்கிறோம்

ஒரு சின்ன கதை

பிரபஞ்ச புத்திசாலித்தனம், இந்த மொத்தப் பிரம்மாண்டத்தையும் நடத்துகிறது.

சில விஞ்ஞானிகள், தங்களால் எதையுமே செய்ய முடியும் என்று நினைத்தார்கள். அவர்கள் கடவுளிடம் சென்று, "இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை. என்னவெல்லாம் நீங்கள் செய்கிறீர்களோ, அதை எங்களாலும் செய்யமுடியும். க்ளோனிங் (Cloneing) மூலம் மனிதர்களைக்கூட எங்களால் உருவாக்க முடியும். இப்பொழுது நீங்கள் பூமியில் உருவாக்கி வைத்திருக்கும் அனைத்தையும், இனி எங்களாலும் உருவாக்க முடியும். எங்கள் அறிவியல் துறை அனைத்துவகையிலும் முன்னேறியுள்ளது," என்றார்கள்.

கடவுள், அவர்கள் உருவாக்கிய பழவகைகளின் அளவுகளையும், அதுபோன்றே அவர்கள் உருவாக்கிய பிறவற்றையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்.

அந்த விஞ்ஞானிகள் அதன்பிறகு, கடவுளைப் போட்டிக்கு அழைத்தார்கள். "எங்கள் சவாலை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் அனைத்தையும் எங்களால் செய்ய முடியும். உங்களைவிட நாங்கள் மேலானவர்கள். இனி நீங்கள் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இனி நீங்கள் எங்களுக்குத் தேவையில்லை," என்றார்கள்.

கடவுளும், விஞ்ஞானிகளின் சவாலை ஏற்றுக்கொண்டார்.

கடவுள் ஒரு செடியை உருவாக்கினார். உடனே விஞ்ஞானிகளும் அதே மாதிரி செடியை, அதைவிட சிறப்பாக உருவாக்கினார்கள். கடவுள் எதையெல்லாம் உருவாக்குகிறாரோ, அதேபோல அவர்களும் உருவாக்கினார்கள். கடவுள் ஒரு சின்ன தூசியை எடுத்து, ஒரு மனிதனை உருவாக்கினார்.

அந்த விஞ்ஞானிகள், "இது ஒன்றும் எங்களுக்கு பெரிய விஷயமில்லை, இப்போது எங்களால் க்ளோனிங் செய்ய முடியும்," என்று சொல்லிவிட்டு, அவர்களும் ஒரு சிறிய தூசியை எடுத்து மனிதனை உருவாக்க ஆரம்பித்தார்கள்.

கடவுள் சொன்னார், "நிறுத்துங்கள்!
உங்களுடைய சொந்த தூசியை எடுத்து வந்து
மனிதனை உருவாக்குங்கள். என்னுடைய
தூசியை உபயோகப்படுத்தாதீர்கள்!"

நாம் எதைவேண்டுமானாலும் சாதிக்கலாம், அறிவியல் எவ்வளவு வேண்டுமானாலும் முன்னேறியிருக்கலாம். தெய்விகம் உயிரோடு இருக்கிறது, கடவுள் இருக்கிறார். பிரபஞ்ச புத்திசாலித்தனம், இந்த மொத்தப் பிரம்மாண்டத்தையும் நடத்துகிறது.

> ஒரு மனிதர்,
> 'நான்' என்ற
> எல்லைக்குட்பட்டு
> வாழும்பொழுது,
> அவரால் பூர்ணத்துவத்தை
> அனுபவமாக
> உணரமுடியாது.

நம்மால் தூசியிலிருந்து மனிதனை உருவாக்க முடியும். ஆனால், எங்கிருந்து அந்தத் தூசியைப் பெறுவோம்? நம்மால் தூசியை உருவாக்க முடியாது! அது கடவுளுடையதாகவே இருக்க முடியும்!

இங்கு ஒரு தூய்மையான சக்தியும் புத்திசாலித்தனமும் இருக்கிறது என்பதையும், அதுவே இந்த மொத்தப் பிரபஞ்சத்திற்கும் ஆதாரமாகவும், அடிப்படை மூலப்பொருளுமாகவும் இருக்கிறது என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு மனிதர் பட்டறிவின் எல்லைக்குட்பட்டும், 'நான்' என்ற எல்லைக்குட்பட்டும் வாழும்பொழுது, அவரால் பூர்ணத்துவத்தை அனுபவமாக உணரமுடியாது.