காலம் நமக்குக் கற்றுக் கொடுக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தங்கள் பெற்றோர்களுடன் ஆசிரமத்திற்கு வரும் இளைஞர்கள் பலர், பெற்றோர்களின் கட்டாயத்திற்காக என் கால்களில் விழுந்து வணங்குவார்கள்.
இவ்வாறு கட்டாயத்தின்பேரில், என் கால்களில் விழுந்து வணங்குவதை நான் விரும்புவதில்லை. அந்த இளைஞர்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால், அவர்கள் அங்கிருந்து செல்லலாம். ஆனால், அவர்கள் அப்படியும் செல்ல மாட்டார்கள், அங்கேயே நின்றிருப்பார்கள். அதுமட்டுமல்ல, "எதற்காக நான் உங்கள் காலில் விழ வேண்டும்?" என்றும் என்னிடம் கேட்பார்கள்.
நான் அதற்கு, "அவ்வாறு செய்யுமாறு உங்களிடம் நான் கேட்கவில்லையே. அப்படியிருக்கையில், நீங்கள் எதற்காக இங்கு நின்று வாதம் செய்துகொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்பேன்.
இருந்தாலும், அவர்களுக்கிருக்கும் அளவுக்கு அதிகமான கர்வத்தின் காரணமாக, தொடர்ந்து வாதம் செய்வார்கள். அப்போது எனக்குள், "இவர்கள் கட்டாயமாகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்!" என்று நினைப்பேன்.
அதேபோல் திருமணமாகி, ஒரு வருடத்திற்குப்பின் என்னைப் பார்க்க வருவதுண்டு. அப்போது எதுவும் பேசாமல், சட்டென்று கால்களில் விழுந்து, சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வார்கள். ஏனென்றால், இந்த ஒரு வருடகாலத் திருமண வாழ்வு, அவர்களுக்குச் சரணாகதியை முழுமையாகக் கற்றுக் கொடுத்திருக்கும்.

நம்மால் பத்து வருடத்தில்
செய்யமுடியாததை, ஒரு வருட திருமண
வாழ்க்கை செய்துமுடித்துவிடும்! அவர்கள்
சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து
வணங்குவதோடு, எப்படி மற்றவர்கள்
சொல்வதைக் கவனமாகக் கேட்க வேண்டும்
என்பதையும் கற்றுக்கொள்வார்கள்.
பணிவுள்ளவராகி விடுவார்கள். "ஆமாம்
ஸ்வாமிஜி," என்று சொல்வார்கள்!
'ஆமாம்' என்ற மந்திரத்தின் சக்தியை அவர்கள் அறிந்திருப்பார்கள்.
அசுரத் தன்மையுள்ள மனிதர்களுக்கு
இதுதான் செய்ய வேண்டும்.
திருமணம் செய்துவைத்தாலே போதும்,
அவர்களுடைய அசுரத்தன்மை
மறைந்துவிடும். அதற்காகத்தான் கடவுள்,
'திருமணம்' என்று ஒரு அமைப்பை
உருவாக்கினார் போலிருக்கிறது!
> மற்றவர்களின்
> அனுபவத்தைப் படிப்பதும்
> கவனிப்பதும் மட்டும்
> நமக்குப் போதுமானதல்ல,
> நாமே அந்த உண்மையை
> அனுபவ பூர்வமாக
> உணர வேண்டும்
அசுரத் தன்மையுள்ள மனிதர்கள், இந்த உலகமே காமத்தாலும், உடல் சார்ந்த இன்பங்களாலும் உருவாக்கப்பட்டது என்றும், காமமே இந்த மொத்தப் பிரபஞ்சத்திற்குக் 'காரணம்' என்றும் சொல்கிறார்கள்.
ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள், காமம் காரணமாக இருக்க முடியாது. புத்திசாலித்தனமே, தெய்विक பிரபஞ்ச சக்தியே மொத்தப் பிரபஞ்சத்திற்குக் காரணமாகவும் விளைவாகவும் இருக்கிறது.
காரணமாகவும் காரியமாகவும் விளங்கும் தெய்விகமே இப்பிரபஞ்சத்திற்குப் பொறுப்பாகிறது. ஆனால், காமமே காரணம் என்று நினைக்கும்பொழுதும், நாமே அதற்குப் பொறுப்பு என்று நினைக்கும்பொழுதும், நாம், 'நான், நான், நான்' என்ற கருத்திலேயே வாழ்கிறோம்.
கிருஷ்ணர் உறுதியாகச் சொல்கிறார், நாம்தான் இந்த இருப்பு நிலைக்கும், பிரபஞ்சத்திற்கும் காரணம் என்று நினைக்கும்பொழுது, நாம், நம்முடைய சொந்த அடையாளத்தில் சிக்கிக்கொண்டு, இந்த உலகையும் நம்மையும் அழித்துக் கொள்கிறோம்.
நம்முடைய ரிஷிகள் முட்டாள்கள் அல்ல. அவர்களுக்குச் செல்ல வேறு இடமில்லாத காரணத்தினால், காட்டிற்குச் செல்லவில்லை. அதில் பலர் அரசர்களாகவும் இருந்தனர், தாங்கள் எங்கிருந்து வந்தோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக, அவர்கள் தங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் மனமுவந்து தாங்களாகவே துறந்தார்கள்!
மற்றவர்களின் அனுபவத்தைப்
படிப்பதும், கவனிப்பதும் மட்டும்
அவர்களுக்குப் போதவில்லை, தாங்களே
அந்த உண்மையை அனுபவ பூர்வமாக
உணர முடிவுசெய்தார்கள். இந்தச்
செயல்முறையின்மூலம், அவர்கள்தங்களை
உணர்ந்துகொண்டு, முக்தியும் பெற்றார்கள்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பலரும் கண்டறிந்த ஸத்யத்தை அவர்களும் கண்டறிந்துகொண்டார்கள். அவர்கள் உணர்ந்த அந்த ஸத்யம் மிகவும் எளிமையானது: தாங்களும் பிரபஞ்ச இருப்புத் தன்மையின் பாகம் என்பதையும், தாங்களும் கடவுளே என்பதையும், அவர்கள் உணர்வு பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உணர்ந்தார்கள்.
இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்தியே, தங்களுக்குள் இருந்து தங்களையும் இயக்குகிறது என்பதைக் கண்டறிந்தார்கள். இந்தப் பூமியில் வாழும் ஒவ்வொரு ஜீவனும், அந்த மூலத்தில் இருந்தே தோன்றியது, அதே மூலப்பொருளாகவே இருக்கிறது என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தார்கள்.
நாம் தொடக்கப் பள்ளியில், புவியியல் பாடத்தில், பூமியின் மத்தியப் பகுதியில் உருகிய நிலையில் ‘மாக்மா’ (Magma) இருப்பது பற்றியும், இது, மற்ற கோள்களின் மையத்தில் இருக்கும் ஒன்றைவிட அதிகம் வேறுபட்டது அல்ல என்பதையும் படித்திருப்போம். அந்த மையத்தைச் சுற்றி குளிர்ந்த அடுக்குகளும், இறுதியில் செடிகள், தாவரங்கள் வளர்வதற்கும் மற்றும் நாம் வாழ்வதற்குமான மண்பகுதியான பூமியும் இருக்கின்றன.
இப்போது, நமக்கு நீர் தேவைப்படும்போது, அருகில் எந்த ஆறும் இல்லாதபோது நாம் என்ன செய்வோம்? நாம் ஒரு கிணற்றை வெட்டுவோம். அதில் மாயஜாலமாக நீரும் தோன்றும். நம்முடைய அண்டை வீட்டாருக்கு நீர் தேவைப்பட்டால் அவர்களும் கிணறு வெட்டுவார்கள், அதிலும் நீர் வரும். நம் கிணறும், அவர் கிணறும் வெவ்வேறு வீட்டில் இருந்தாலும், இரு வேறு மனிதர்களுக்கு அவை சொந்தமாக இருந்தாலும், அந்தத் தண்ணீர்களில் வேறுபாடு இருக்குமா?
நீங்கள் இந்தியாவில் கிணறு வெட்டினாலும், அமெரிக்காவில் கிணறு வெட்டினாலும், தண்ணீர் ஒரே மூலத்தில் இருந்துதான் வருகிறது. இந்த இடங்கள், உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்தபோதிலும், அதன் ‘மூலம்’ ஒன்றே.
சுயநலமிக்க மனப்பாங்கு அழிவுக்கே வழிவகுக்கும்
‘மூலம்’ மட்டும் ஒன்றல்ல. அந்தத் தண்ணீரும் ஒன்றே. இருந்த போதிலும், நாமே அந்த இயற்கைச் செல்வங்களை உருவாக்கியதுபோன்றும், அதனால் அவை நமக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடியும் சண்டை போடுகிறோம்.
இதுபோன்ற சுயநலமிக்க மனப்பாங்கு, அழிவுக்கே வழிவகுக்கும்; சுற்றுச்சூழல், இந்த உலகம் மற்றும் பிற உயிர்கள் என அனைத்தையுமே அழித்துவிடும். உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே கொண்ட, முன்னேறிய நாடுகள் என்று அழைக்கப்படும் மேற்கத்திய நாடுகளே, உலகின் 50% -த்திற்கும் மேலான இயற்கை வளங்களை உபயோகிக்கின்றன. எந்த உரிமையில் அவர்கள் இதைச் செய்கிறார்கள்?
அவர்கள், பாதியளவுக்கும் மேற்பட்ட இயற்கை வளங்களை மட்டும் பயன்படுத்தவில்லை. பூமியே தடுமாறும் அளவுக்கு, சமநிலை குலையும் அளவுக்கு, அதை மாசுபடுத்தவும் செய்கின்றன. அவர்கள் செய்யும் இந்தச் செயல்களின் விளைவால் எல்லா இயற்கை வளங்களும் அழிவதோடு மட்டுமல்லாமல், பனிப்பிரதேசங்களிலும் உள்ள பனி உருகி, கடல்மட்டம் உயரும், உலகின் பெரும்பாலான பகுதி தண்ணீருக்குள் மூழ்கிவிடும்.
ஆனால், முன்னேறாத ஏழைநாடுகளே
இதனால் பாதிக்கப்படும். ஏனென்றால்,
இந்தப் பிரச்சினையில் இருந்து தங்களைக்
காத்துக்கொள்ள வசதி வாய்ப்புக்கள் ஏதும்
அவர்களிடத்தில் கிடையாது.
நாம் உண்மையாகவே தண்ணீரை மிகவும்
வீணடிக்கிறோம். நமக்கு கைகளும்,
விரல்களும் இருந்தும், எதற்காக
நாம் முள்கரண்டிகளையும், மேஜை
முன்னேறிய நாடுகள் என்று
அழைக்கப்படும்
மேற்கத்திய நாடுகள், பூமியே
தடுமாறும் அளவுக்கு,
சமநிலை குலையும்
அளவுக்கு, அதை
மாசுபடுத்துகின்றன.
கரண்டிகளையும், கத்திகளையும் உண்ணப் பயன்படுத்துகிறோம்? அவற்றைச் சுத்தப்படுத்த நிறைய நீரையும், சோப்புப் பொருள்களையும் உபயோகிக்கிறோம்.
அந்தச் சோப்புக் கழிவு, ஆற்றுநீரை மாசுபடுத்தகிறது. நாம், நமது கைகள் அழுக்காக இருக்கின்றன என்று நினைக்கிறோம். ஆனால், நாம் உண்ண உபயோகிக்கும் உபகரணங்கள் சுத்தமாக இருக்கின்றனவா என என்றாவது பார்த்திருப்போமா? அதை நுண்ணோக்கிக்கொண்டு பார்த்தோமானால், நம்மால் கற்பனைசெய்ய முடியாத அளவிற்கு பாக்டீரியாக்கள் அதில் இருப்பதைப் பார்க்கலாம்.
நமது கைகள் அழுக்காக
இருக்கின்றன என்று
நினைக்கிறோம்.
ஆனால், நாம் உண்ண
உபயோகிக்கும்
உபகரணங்கள் சுத்தமாக
இருக்கின்றனவா
என என்றாவது
பார்த்திருப்போமா?
நோய் பரப்பும் அந்தக் கிருமிகளை
ஒழிப்பதற்காக, அந்தப் பாத்திரங்களை
நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டிய
தேவை இருக்கிறது. நாம் அவ்வாறு சுத்தம்
செய்ய பல்வேறு விதமான இரசாயனப்
பொருட்களை உபயோகிக்கிறோம். அந்த
இரசாயனப் பொருட்கள், புற்றுநோய்
ஏற்படக் காரணமாகின்றன.
மேலை நாட்டு மருத்துவர்கள், உணவுப் பொருட்களைப் பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைத்து, மறுபடியும் நுண்ணலை அடுப்பில் (Microwave Oven) சூடுசெய்வது புற்றுநோயை விளைவிக்கும் என்று எச்சரிக்கிறார்கள். குளிர்சாதனப் பெட்டியில் உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவதும்கூட, பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் இனி விரைவில் கண்டுபிடிப்பார்கள்.
இதையே நம் கிழக்கத்திய மூதாதையர், நீண்ட காலங்களுக்கு முன்னரே, எந்தவொரு உணவுப் பொருளையும், சமைத்த நான்கு மணிநேரத்திற்குள் உண்டு முடித்துவிட வேண்டும். அதற்குமேல் நேரங்கழிந்த உணவைச் சாப்பிடக்கூடாது என்று சொல்லியுள்ளார்கள். அது ஸாத்விகத் தன்மையை இழந்துவிடுகிறது. அதனால் அது, நம் 'சக்தி நிலை'க்கு ஏற்றதாக இருப்பது இல்லை. அதனால்தான் நிறைய மக்கள் அசுரத் தன்மையுடன் உள்ளார்கள்.
இப்போதெல்லாம் யார் உணவைச் சமைத்து, நான்கு மணிநேரத்திற்குள் சாப்பிடுகிறார்கள்? அதைச் சமைப்பவர்கூட சாப்பிடுவதில்லை. அதனால்தான் நாம் தாமஸ குணத்தில் - அறியாமையில் வீழ்கிறோம். நாம் ஸாத்விகமற்ற உணவை, சக்தியற்ற உணவை உண்பதால், நாம் நம்மை அசுரர்களாக மாற்றிக்கொள்கிறோம்.
மேலும் மற்ற விஷயங்களும் சேர்ந்து கொள்கின்றன. ஹிட்லர் போன்றவர்கள் இந்த உலகில் உருவானது ஒரு விபத்து அல்ல, அவர்கள் சமுதாயத்தால் உருவாக்கப்பட்டனர்.
கிருஷ்ணர், அல்ப புத்தி என்று சொல்லும்போது, அவர் நம்முடைய புத்திக் கூர்மையைப் (Intelligent Quotient) பற்றிக் குறிப்பிடவில்லை. மாறாக, நம்முடைய உணர்ச்சிரீதியான (Emotional Quotient) மற்றும் ஆன்மிக ரீதியான (Spiritual Quotient) கூர்மையையே குறிப்பிடுகிறார். நம்மிடம், உயர்ந்த புத்திசாலித்தனமும் விழிப்புணர்ப்பும் இல்லாத நிலையையே குறிப்பிடுகிறார்.
நிகழ்காலத்தில் இருப்பதே
புத்திசாலித்தனத்தை வளர்க்கும்
ஒரு செயலிலிருந்து, அடுத்த செயலுக்குத் தாவும் அவசரத்தில் இருக்கும்பொழுது, நாம் எவ்வாறு விழிப்புணர்வோடு இருக்க முடியும்? ஏற்கெனவே நம்மால் பலவித வேலைகளைச் செய்ய முடியும் என்று சொல்லிச் சொல்லி, நமக்கு மூளைச்சலவை செய்து, நமக்குள் தவறான நம்பிக்கையை சமுதாயம் ஏற்படுத்தி வைத்திருக்கும்பொழுது, நம்முள் விழிப்புணர்வு எப்படி மலரும்?
நாம் என்ன வேலைசெய்கிறோம் என்பதில்
கவனம் செலுத்துவதைவிட, அதனால்
விளையும் பலனில் அதிக கவனம்
செலுத்துகிறோம்.
நம்மில் எத்தனை பேர் ஒரு வேலையில்
ஈடுபடும்போது, அந்த வேலையில் மட்டும்
கவனத்தைச் செலுத்தி செயல்படுகிறோம்?
நாம், வாகனம் ஓட்டும்போதுகூட,
செய்திகளோ அல்லது பாடல்களோ கேட்டுக்
கொண்டிருக்கிறோம். நாம் கணினியில்
நாம் ஸாத்விகமற்ற
உணவை, சக்தியற்ற
உணவை உண்பதால்,
நாம் நம்மை அசுரர்களாக
மாற்றிக்கொள்கிறோம்.
வேலை பார்த்துக்கொண்டே, உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே, மற்றவரிடம் பேசி க்கொண்டிருக்கிறோம்.
உண்மையைச் சொல்லப்போனால், தனியாகக் குளிக்கும்போதுகூட, நம்முடன் நாமே வாதம் செய்துகொண்டிருக்கிறோம். நாம் எந்த வேலையை முழுமையாக நிகழ்காலத்தில் மையங்கொண்டு செய்கிறோம்? நம்மால் நன்றாகத்தூங்கமுடியவில்லை என்று சொன்னால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால், அன்றைய பொழுதின் எல்லா அசுரத் தன்மையும் நம்மை இரவில் துரத்துகின்றன.
நாம் நிகழ்காலத்தில்
இல்லாதபோது,
நாம் தாழ்நிலை
புத்திசாலித்தனத்தில்தான்
இருப்போம்; அதனால்
அசுரர்கள் ஆகிறோம்.
நாம் நிகழ்காலத்தில் இல்லாதபோது,
நாம் தாழ்நிலை புத்திசாலித்தனத்தில்தான்
இருப்போம்; அதனால் அசுரர்கள்
ஆகிறோம். நாம் ஹிட்லராகவும், அதை
விட மோசமானவராகவும் ஆகிறோம்.
நவீன உலகம் அறிந்த பல அரக்கர்களுள்,
ஹிட்லர் மிகக் கொடூரமானவராக இருந்தார்.
ஒருவருக்குள் பாதுகாப்பற்ற தன்மை
வேரூன்றிவிட்டால், அவர் எவ்வளவு
கொடூரமானவராக மாற முடியும் என்பதற்கு
ஹிட்லரே எடுத்துக்காட்டு.
பயம் மற்றும் வெறுப்புணர்ச்சியை மட்டுமே சமுதாயம் அவருக்குக் கற்றுக்கொடுத்தது. அவருடைய பயங்கள் பூதாகாரமாக இருந்ததால், மொத்த உலகத்தையும் பெரிதாக பயமுறுத்தினார்.
கீழான புத்திசாலித்தனம் மிருகத்தனமான செயல்களைச் செய்ய வைக்கும். ‘நாம் யார்’ என்ற விழிப்புணர்வு இல்லாதபோது, நாம் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. நம் பெற்றோரைக்கூட பொருட்படுத்துவதில்லை. நாம் சுயநலம்கொண்டவராகி விடுகிறோம். நம் தாய், நம்முடைய ஆசைக்குத் தடையாக நம்முடைய பாதையில் குறுக்கே நிற்கிறார் என்று நினைத்தால், அவருக்கேகூட தீங்குசெய்பவராகி விடுகிறோம்.
இவை அனைத்தும் மாறக் கூடியதே, மாற்றப்படக்கூடியதே. இதற்குத் தேவையானது எல்லாம் ஒன்றேதான். அது, அசுரத்தன்மையிலிருந்து தெய்வத்தன்மைக்கு, ‘நான்’ என்ற உணர்விலிருந்து ‘நீங்கள்’ என்ற உணர்விற்கு மாறும் உணர்வுமாற்றமே.
‘இந்தப் பூமி ஒரு பொதுச் சொத்து, இதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது; சீரழிக்க முடியாது; ஒருவரையொருவர் அழித்துக்கொள்ள பயன்படுத்த முடியாது’ என்ற ஒரு புரிதல், நம் குழந்தைப்பருவம் முதலே இருக்க வேண்டும். இந்தப் பூமி, நாம் ஒற்றுமையுடன் இருப்பதற்கும், பகிர்ந்து கொள்வதற்குமே படைக்கப்பட்டது.
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு விஷயமும், பூமியில் இருக்கும் ஒவ்வொருவரையுமே பாதிக்கும் என்ற புரிதலை ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்படுத்த வேண்டும். அமெரிக்காவில் நடக்கும் ஒரு செயல், சைனா, இந்தியா என இந்த உலகெங்கும் உள்ள மக்களைப் பாதிக்கிறது. அதேபோல் சைனாவிலும், இந்தியாவிலும் நடக்கும் ஒன்று, அமெரிக்கா உட்பட உலகெங்கும் உள்ள மக்களைப் பாதிக்கிறது. பாதிப்புக்களிலிருந்து யாரும் தப்பித்துவிட முடியாது.
நாம் பேசிக்கொண்டிருப்பது, ஒரே ஒரு
பொத்தானை அழுத்துவதன் மூலம், மொத்த
மனிதக் கூட்டத்தையும் அழிக்கும் ஒரு
ஆற்றல் மிக்க ஆயுதத்தைப்பற்றி அல்ல!
> ‘இந்தப் பூமி ஒரு பொதுச்
> சொத்து, இதை யாரும்
> சொந்தம் கொண்டாட
> முடியாது; சீரழிக்க முடியாது’
> என்ற ஒரு புரிதல், நம்
> குழந்தைப்பருவம் முதலே
> இருக்க வேண்டும்.
மனிதன் உருவாக்கிய அணுகுண்டு போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆபத்தானவை என்று நினைத்துவிடாதீர்கள். நான் அவற்றைப்பற்றி பேசவில்லை, நான் பேசுவது, நம் அன்றாட நடவடிக்கைகளான உண்பது, உடை உடுத்தும் விதம் மற்றும் நம் வாழ்க்கை முறை, இவற்றைப் பற்றியே. இவை அனைத்தும், நாம் வாழும் சுற்றுச்சூழலைப் பாதிப்பதால், நம் ஒவ்வொருவரையுமே பாதிக்கிறது.
நாம் வாழும் சுற்றுச்சூழல், சுவாசிக்கும் ஆக்ஸிஜன், நாம் குடிக்கும் நீர், நம் உணவு விளையும் மண், இவை அனைத்தும் சக்தியே. இந்தச் சக்தியை ஸம்ஸ்க்ருதத்தில் பஞ்சபூதம் என்று அழைக்கிறோம். இந்த ஐந்தும்தான் நாம் உயிர்வாழ்வதற்குத் தேவையான சக்தியைக் கொடுத்து, நம்மைக் காக்கின்றன. நம்முடைய தாழ்ந்த புத்திசாலித்தனத்தின் காரணமாக, இவற்றை நம் சுயநலத்திற்காக அழிப்பதால், நம்மைச் சுற்றியுள்ள மொத்த உலகமுமே பாதிக்கப்படுகிறது.
உருவாக்கப்படாத ஒலியைக் கேளுங்கள்!
கேள்வி : ஸ்வாமிஜி, ஓம் என்ற மந்திரத்தின் பொருள் என்ன?
மனம் எழுப்பும் சத்தங்கள் நின்றவுடன், ஒவ்வொருவரின் சொந்த இருப்பினுள்ளும் கேட்கும் ஒலியே ஓம். அது, மனத்தில் எண்ண ஓட்டங்கள் எழாதபோது, தொந்தரவு செய்வதற்கென்று அங்கு எதுவுமில்லாதபொழுது, ஒருவர் தம் இருப்பினுள் உணரும் ஓர் ஆழமான அதிர்வே ஓம்.
நாம் இந்த ஒலியை உருவாக்குவதில்லை. நம்மால் இந்த ஒலியை உருவாக்கவும் முடியாது. இது உச்சரிக்க வேண்டிய மந்த்ரம் அல்ல, தானாகவே நிகழ வேண்டிய நிகழ்வு.
நாம் ஆழ்ந்த அமைதியுடனும், உள்வாங்கத் தயாராகவும் இருக்க வேண்டும். நாம் அதைக் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும். காதுகளால் மட்டும் அல்ல, நம் மொத்த இருப்புத் தன்மையினாலும் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நமக்குள் ஏதோ ஒன்று நிகழும். பிறகு நாம் அதைக் கேட்போம்.
இதைத்தான் ரிஷிகள், நமக்குள் கேட்கும் ‘ஆழ்ந்த அமைதியான மெல்லிய குரல்’ என்கிறார்கள். ஜென் குருமார்கள் இதை ‘ஒரு கை ஓசை’
| ஓம், இது உச்சரிக்க வேண்டிய மந்த்ரம் அல்ல, தானாகவே நிகழ வேண்டிய நிகழ்வு. | என்றழைக்கிறார்கள். வேத பாரம்பரியம் இதை ப்ரணவ மந்த்ரம் என்கிறது. ஓம் என்பது நாதமில்லா நாதம்! இதுதான் அனாஹத த்வனி, அனாஹதம் என்றால் ‘உருவாக்கப்படாத ஒன்று’ என்று பொருள். நாம் முதல் படியான ஆனந்த ஸ்புரண தியான அனுபவ முகாமில் மஹா மந்திர தியானத்தைக் கற்றுத் தருவோம். இந்தத் தியானம் இதய மத்தியில் அமைந்திருக்கும் அனாஹத சக்ரத்தைச் சக்தியூட்டுகிறது. |
ஓம் என்ற ஒலியே படைப்பாக விளங்குகிறது! அது படைக்கப்பட்டதல்ல.
அனாஹத சக்கரத்தைச் சக்தியூட்டும் தியானத்தைச் செய்யும்பொழுது, ஓம் என்ற ஒலியை உங்களுக்குள் எழுப்புகிறீர்கள். அதனால்தான் இந்தத் தியானத்தை மஹா மந்த்ர த்யானம் என்கிறோம். இது நம்மை நாமே குணப்படுத்த உதவும் மிகச் சக்திவாய்ந்த தியானம்.
வழிபாட்டு மந்திரங்கள் அனைத்துமே - கடவுளைப் பற்றியும், கடவுளின் பண்புகளைப் பற்றியும் விவரிக்கும் அஷ்டோத்தரங்கள் (108 பெயர்கள்), ஸஹஸ்ரநாமங்கள் (1008 பெயர்கள்) என அனைத்து பிரார்த்தனை மந்த்ரங்களின் தொடக்கத்திலும், ஓம் என்ற சொல் சேர்க்கப்படும், மந்த்ரத்தின் இறுதியில் நம: என்ற வார்த்தை சேர்க்கப்படும்.
நம: என்றால் 'நான் இல்லை' என்று பொருள், அந்தக் கடவுளிடம் நம்மை சரணாகதி செய்வதைக் குறிக்கும்.
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின், முதல் வரி, ஓம் அச்சுதாய நம: என்பதாகும். இதன் பொருள் 'கிருஷ்ணர் விஷ்ணுவின் அவதாரமே' என்பதாகும். பீஷ்மர், குருக்ஷேத்ரப் போர்க்களத்தில், மரணப் படுக்கையில் இருக்கும்போது கிருஷ்ணரை நோக்கிச் செய்த பிரார்த்தனையே விஷ்ணு ஸஹஸ்ர நாமம், இது மஹாபாரதத்தில் வரும் ஒரு பகுதி.


எப்படி நம்மை நாமே காப்பாற்றிக் கொள்வது
திருப்தியடையாத பேராசை, கபடத்தன்மை, தற்பெருமை,
அகந்தை ஆகிய குணங்களால் பீடிக்கப்பட்டு, மதிமயக்கத்தால்
தவறான அபிப்ராயங்களைப் பிடிவாதமாய்ப் பிடித்துக்கொண்டு,
நிலையற்ற பொருட்களுக்காக, தூய்மையற்ற நோக்கத்துடன்
செயல்படுகிறார்கள்.
நிறைவேறாத எதிர்பார்ப்புகளுடன் சாகும்வரை
வருந்திக்கொண்டும், புலனின்பங்களையே உயர்ந்த இலக்காகக்
கருதி, அவற்றைப் பூர்த்திசெய்வதைத்தவிர வேறொரு
குறிக்கோளே இல்லையென்று தீர்மானித்துக்கொண்டும்,
நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் பிணைக்கப்பட்டும்,
ஆசை மற்றும் சினத்திற்கு ஆட்பட்டும் இருப்பவர்கள், புலன்
இன்பங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, நீதிக்குப்
புறம்பாகச் செல்வத்தையடைய முயலுகின்றனர்.
கிருஷ்ணர் சொல்லும் இந்தக் கருத்து,
இன்றைய காலகட்டத்திலுள்ள,
பெரும்பாலான மக்களுக்குப் பொருந்தும்.
சிறுவயது முதலே நம்மை, 'சுய
விழிப்புணர்வை' நோக்கி அழைத்துச்
செல்லும் வேதகாலக் கல்விமுறை
இப்போது இல்லை. காலம் மாறிவிட்டது.
நவீனகால கல்வி, தர்க்கத்தையும்
அறிவியலையும் மற்ற விதிகளையும்
சார்ந்துள்ளதால், சுய விழிப்புணர்வும்
தர்மமும் மங்கிவிட்டன.
நாம், பொருள் சார்ந்த உலகில் சிக்கிக்கொள்ளும்போது, 'நான், எனது' என்பதிலேயே மையங்கொள்ளும்போது, மூலாதாரத்திலும் ஸ்வாதிஷ்டாநத்திலும் சிக்கிக்கொள்கிறோம்.
பேராசையும் பயமும்தான் நம்மை ஆள்கின்றன. அதனால் நாம் விருப்பு, வெறுப்பு எனும் பந்தத்திலேயே உழல்கிறோம். எதைச் செய்தாலும் நாம் சுயநலத்துடனும் தூய்மையற்ற நோக்கத்தோடும் செய்கிறோம். அவற்றின் பலன்களும் விளைவுகளும் போலியானவையாகவே இருக்கின்றன.
இதற்கு முந்தைய சுலோகங்களில் கிருஷ்ணர், ஒரு மனிதர் அசுரத் தன்மையில் இருந்தால், அவர் எப்படி இந்த உலகையே அழிக்கிறார் என்பதை விளக்கினார். இங்கே கிருஷ்ணர், அந்த மனிதர் எவ்வாறு தன்னையே அழித்துக்கொள்கிறார் என்பதை விளக்குகிறார்.

தற்பெருமையிலும் செருக்கிலும்
கபடத்தன்மையிலும் சிக்கிக்கொண்ட
மனிதர், சுயநலத்தாலும் உலகியல்
ஆசைகளாலும் வழிநடத்தப்படும்
பாதையிலேயே செல்கிறார். அதனால்
அவர், துக்கங்களை விளைவிக்கக்
கூடிய பலன்களையே பெறுகிறார்
என்றும் சொல்கிறார்.
பார்வைகள் பலவிதம். காரணம் - கட்டுறு மனப்பாங்கு
நாம் ‘பொருளில்’ கவனம் செலுத்தும்போது, அதன் உள்ளார்ந்த சக்தியைப் பார்க்கத் தவறிவிடுகிறோம்; நாம் ‘உருவத்தில்’ கவனம் செலுத்தும்போது, நம்மால் அந்த உருவத்தைச் சாத்தியமாக்கிய ‘உருவமற்ற’தைப் பார்க்க முடிவதில்லை. பொருளினுள்ளும், உருவத்தினுள்ளும் நிலையானதாக இருக்கும் ‘உருவமற்ற சக்தியே’ அந்தப் பொருளையும், உருவத்தையும் இயக்குகிறது.
அறிவியல் இப்போது, நியூட்டனின் பொருள் - உருவம் சார்ந்த கோட்பாட்டிலிருந்து மிக நீண்ட தூரம் சென்றுவிட்டது. அந்த முன்னுதாரணம், இந்தக் காலத்திற்குப் பொருத்தமற்றதாகிவிட்டது. ‘பொருளையும், சக்தியையும் ஒன்றைவிட்டு ஒன்றைத் தனியாகப் பிரிக்க முடியாது’ என்ற ஐன்ஸ்டீனின் காலகட்டத்திலிருந்த கருத்து மாறிவிட்டது.
இன்றைய அறிவியல், பொருளும் சக்தியும் இணைந்திருந்தாலும், ஒரு பொருளை அல்லது ஒரு நிகழ்வை, சக்தியாக மட்டுமோ அல்லது பொருளாக மட்டுமோ அல்லது இரண்டும் இணைந்ததாகவோகூட, ஒருவர் உணர்ந்தனுபவிக்க முடியும் என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
அதனால் நாம், நம் இந்திய குருவான ஆதி சங்கராச்சாரியரின் கருத்திற்கே
- ‘ஒரு பார்வையாளர்தான், தாம் எதை உணரவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்’ - என்கிற கருத்திற்கே திரும்பியிருக்கிறோம். நாம், இதைக் கற்பனை என்றுகூட நினைக்கலாம். இருந்தபோதிலும், இதுவே, முன்னேற்றம் அடைந்த இயற்பியலில் (Quantum Physics) ஏற்றக்கொள்ளப்பட்ட தத்துவம்.
அடிப்படை அணுத்துகள்களை, ஒரே
மாதிரியான சூழ்நிலையில் வைத்து, ஒரே
மாதிரியான கருவிகள்கொண்டு ஆராய்ந்து
பார்த்தபோது, அவை ஒவ்வொரு
ஆய்வாளருக்கும் வேறு வேறு விதமாகத்
தோன்றியது என்பது கண்டறியப்பட்டது.
ஆனாலும், ஏன் இவ்வாறு வெவ்வேறாகத்
> பொருளினுள்ளும்,
> உருவத்தினுள்ளும்
> நிலையானதாக இருக்கும்
> ‘உருவமற்ற சக்தியே’
> அந்தப் பொருளையும்,
> உருவத்தையும்
> இயக்குகிறது.
தோன்றுகிறது என்பதற்கான விளக்கங்கள் ஏதும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
நம் பழங்கால ரிஷிகள், இவை நம்மில் ஆழமாக வேரூன்றிய கட்டுறு மனப்பாங்கினால்தான் நடக்கிறது என்றும், அவையே நம்முடைய புலனுணர்வுகளுக்கு வர்ணம் பூசுகின்றன என்றும் விளக்குகிறார்கள். அறிவியல், இன்னும் போதுமான அளவுக்கு முன்னேறும்போது, இந்த உண்மையை அது ஏற்றுக்கொள்ளும்.
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளையும், நம்மைச் சுற்றியுள்ள பொருள்களையும் பல்வேறு விதங்களில் பார்க்க முடியும்! எல்லாமே நம்முடைய கட்டுறு மனப்பாங்குகளையே, நம்முடைய ஸம்ஸ்காரங்களையே சார்ந்துள்ளன!
| நம்முடைய அனுபவ வங்கியைப் பொறுத்தே, நாம் ஒரு பொருளைப் புரிந்துகொள்ளும் விதமும் வேறுபடும். | கோடைக்காலம் அது. மாலைநேரத்தில் ஒரு தம்பதியினர், தங்கள் குழந்தையுடன் கடற்கரை ஓரமாக வண்டியில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை முந்திச்சென்ற, மேற்கூரை இல்லாத காரொன்றில் அமர்ந்திருந்த இளம்பெண் ஒருவர், எழுந்து நின்று கைகளை அசைத்தார். அவர் மேல்உடை ஏதும் அணியாமல் இருந்தார். |
அதைப் பார்த்த அந்தப் பெற்றோர்கள், எதையுமே பார்க்காததுபோல் வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
அப்போது, "அம்மா, அப்பா பாருங்கள்! அந்தப் பெண் அவர்களுடைய சீட் பெல்ட்டைப் போடவில்லை,” என்று அவர்களது பின்இருக்கையில் அமர்ந்திருந்த குழந்தை அதிசயப்பட்டுக் கத்தியது!
நம்முடைய அனுபவ வங்கியைப் பொறுத்தே, நாம் ஒரு பொருளைப் புரிந்துகொள்ளும் விதமும் வேறுபடும். ஒரு குழந்தையின் புரிதல், எந்தக் கள்ளங்கபடமும் எதிர்மறைகளும் இல்லாதது. அது, முழுமையாகப் புறப்பொருளை மட்டுமே சார்ந்தது. காலப்போக்கில் நாம், குற்றவுணர்ச்சி, வெட்கம், பயம், செருக்கு, கபடம், பேராசை, வெறுப்பு போன்ற உணர்ச்சிகளைச் சேர்த்துக் கொள்கிறோம். அதற்குப் பிறகு நாம் எதிர்கொள்ளும் நிகழ்வுகளுக்கு, இந்த எதிர்மறை உணர்ச்சி களினால் ஆன சாயத்தைப் பூசிவிடுகிறோம்.
நான் முதலில் விளக்கியதுபோல, பெரும்பாலான மனிதர்கள், அடிப்படைத் தேவைகளைத் தாண்டிய ஒரு வாழ்க்கைத்தரத்திற்குத் தங்களுடைய வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள முடியாமல், அவர்களுடைய மூலாதார சக்ரத்தில் சிக்கிக்கொண்டுள்ளார்கள்.
அவர்களுடைய முழு கவனமும் வாழ்க்கையை வாழ்வதிலேயே இருக்கும். கோபம், பொறாமை மற்றும் காமம் போன்ற தாழ்நிலை உணர்ச்சிகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்களுடைய அனைத்துச் செயல்களுமே, உடல் சார்ந்ததாகவும், பொருள் சார்ந்ததாகவும், சுயநலம் சார்ந்ததாகவுமே இருக்கும். வாழ்க்கையே அவர்களுக்கு ஒரு வியாபாரம்தான்.
இன்னும் சிலர், ஸ்வாதிஷ்டான சக்ரத்தில் சிக்கி, பாதுகாப்பற்ற தன்மையிலே கட்டுண்டு, அங்கேயே தேங்கி நின்றுவிடுகிறார்கள். பலவகையான பயங்கள் அவர்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும். ஆண்கள் பெரும்பாலும் மூலாதார சக்ரத்திலும், பெண்கள் ஸ்வாதிஷ்டான சக்ரத்திலும் மாட்டிக்கொள்கிறார்கள். இருவருமே முழுமையடைவதில்லை. இரண்டுமே, ஆன்மிகத்தின் பார்வையில் உண்மையற்றவை.
கற்பனைகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்
மூலாதார சக்ரத்தில் இருக்கும்போது, நாம் கற்பனைகளில் சிக்கிக் கொள்கிறோம். வாழ்க்கையை, 'உள்ளது உள்ளபடியே' ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பதிலாக, 'என் வாழ்க்கை இப்படி அமைந்திருக்கக் கூடாது, அப்படி அமைந்திருக்க வேண்டும்' என்ற நம்முடைய விருப்பங்களை அடிப்படையாகக்கொண்ட கற்பனைகளிலேயே, நம் மொத்த வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இந்த மனப்பாங்கு துக்கங்களுக்கே வழிவகுக்கும்.
> பயத்தை வெற்றிகொள்ள
> நாம் செய்ய
> வேண்டியதெல்லாம்
> ஒன்றுதான், அது,
> பயத்தை எதிர்கொள்வதே!
> அதை நேருக்குநேர்
> எதிர்கொள்ளும்போது,
> அது காணாமல்
> மறைந்துவிடுகிறது.
ஒருபடி மேலேசென்று, ஸ்வாதிஷ்டாந சக்ரத்தை எடுத்துக்கொண்டால், அதுவும் உண்மையல்லாததே! ஏனென்றால், எந்தப் பயமும் உண்மையானது அல்ல. எல்லாப் பயங்களுமே நம்முடைய மனத்தால் உருவாக்கப்பட்டவையே.
பயத்தை வெற்றிகொள்ள நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான், அது, பயத்தை எதிர்கொள்வதே! அதை நேருக்குநேர் எதிர்கொள்ளும்போது, அது காணாமல் மறைந்துவிடுகிறது.
நமக்கு இருக்கும் பயங்களிலேயே மிகவும் முக்கியமான பயம், நம் மரணம் பற்றியதே. வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தெரியாதபோது, இந்தப் பயம் ஏற்படுகிறது. இந்தப் பயம், அடைபட்ட மூலாதார சக்ரத்துடன் தொடர்புடையது. ஏனென்றால், மூலாதார சக்ரம் அடைபடும்போது, நாம் வாழ்க்கையை வாழ்வதில்லை, வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகளை மட்டுமே வைத்துக்கொண்டிருப்போம்.
வாழ்க்கையைப் பற்றிய கற்பனைகள், பேராசையை அடிப்படையாகக் கொண்டதாகவும், மரணத்தைப் பற்றிய கற்பனைகள், பயத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கின்றன.
கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமல் வாழ்க்கையை வாழ்வது எப் படி என்பதை அறிந்துகொண்டால் போதும், பயம் மறைந்துவிடும். நம்முடைய கவலைகளும் துக்கங்களும் தானாகவே கரைந்துவிடும். அதற்குப்பிறகு நாம், அசுரத் தன்மையின் பிடியிலிருந்து விலகி, தெய்விக இராஜ்யத்திற்குள் நுழைகிறோம்.
எந்தப் பயமும்
உண்மையானது அல்ல.
எல்லாப் பயங்களுமே
நம்முடைய மனத்தால்
உருவாக்கப்பட்டவையே.
இங்கே பகவான் கிருஷ்ணர், இதே
கருத்தை, இன்னும் ஆழமாக விளக்குகிறார்.
பெரும்பாலானவர்கள், துக்கம் மற்றும்
மகிழ்ச்சி போன்ற உணர்ச்சிகளிலேயே தஞ்சம்
புகுந்துகொள்கின்றனர். இந்த மனப்பாங்கு,
மரணத்தில்தான் முடிவடைகிறது.
சிலருக்கு, மரணத்தின்பொழுதும் அவை
முடிவடைவதில்லை.
தாங்கள் கட்டிய ஆயுள் காப்பீட்டுப்
பணம், தங்கள் பொக்கிஷப் பெட்டிகள்,
தங்கள் கல்லறையில் வைக்க வேண்டிய
பளிங்குக் கல் மற்றும் பலவற்றைக் குறித்தும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் ஒரே நோக்கமே, தங்களின் ஆசைகளைத் திருப்திப்படுத்துவதுதான் என்று கருதுகிறார்கள்.
பலர் என்னிடம் கேட்பதுண்டு, “கீதையில்
கிருஷ்ணர், நம்முடைய மரணத்தின்போது
கடைசியாக வரும் எண்ணமே, நமது
அடுத்த பிறவியை நிர்ணயிப்பதாகச்
சொல்கிறார், மரணத்தின்போது, நாம் நல்ல
எண்ணங்களைப் பெற வழி இருக்கிறதா?’’
மூலாதார சக்ரம்
அடைபடும்போது,
நாம் வாழ்க்கையை
வாழ்வதில்லை,
வாழ்க்கையைப் பற்றிய
கற்பனைகளை மட்டுமே
கொண்டிருப்போம்.
இது, ஒரு யதார்த்தமான கேள்விதான் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், துரதிருஷ்டவசமாக, இதற்கு நடைமுறை ரீதியாக எந்தப் பதிலும் இல்லை.
புலன்கள் நம்மைப் புண்ணாக்குவதைத் தவிர்க்கும் வழி
வாஸனா என்கிற ஸம்ஸ்க்ரு’த வார்த்தை, நம்முடைய மனப்பாங்கைக் குறிக்கிறது. வாஸனாக்கள் நாம் வாழ்நாள் முழுவதும் செய்த செயல்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன. பல வாஸனாக்கள், நம்முடைய முந்தைய ஜென்மச் செயல்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன.
இவை, நம் மனத்தால் சேகரித்து வைக்கப்பட்ட ஒரு மென்பொருள் (Software); இவையே இப்போது நம்மை இயக்குகின்றன. இதுவே, நாம் இயங்கும் முறை. நம் மன மென்பொருளில் இருக்கின்ற இந்த இயங்கும்முறை, மைக்ரோஸாப்ட் விஸ்டாவிற்கு (Microsoft Vista) இணையானது.
நம்முடைய பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளின் தொகுப்பே வாஸனாக்கள். இவையே நம் மனப்பாங்கை நிர்ணயிக்கின்றன. இந்த மனப்பாங்கு, நமது செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.
துரதிர்ஷ்டவசமாக, இந்த வாஸனாக்கள், தங்கள் நேர் கூட்டாளிகளான ஸம்ஸ்காரங்களுடன் இணைந்து, நம் ‘விழிப்பறு’ மனத்தின் ஒரு பாகமாகவே ஆகிவிடுகின்றன. அதை அறிந்துகொள்வதற்கான அல்லது அடைவதற்கான சுலபமான வழி எதுவும் நம்மிடம் இல்லை. அதனால்தான், நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. நாம் நினைப்பதுபோல் செயல்களை நிகழ்த்த முடிவதில்லை.
இது எதைப் போன்றதென்றால், நம் வாழ்க்கையின் மூலமாக, நம்மை இயக்கிக்கொண்டிருக்கும் வாஸனாக்கள் மற்றும் ஸம்ஸ்காரங்களுடன் இணைந்த பயணத்திற்கு, நாம் இறக்கும்வரை, நாம் ஒரு தானியங்கி ஓட்டுநராக இருப்பது போன்றதுதான்.
புலன்களுக்கு அடிபணிவதே விழிப்புணர்வproperty மனத்தின் இயல்பு. நாம் அவற்றுக்கு விழிப்புணர்வுடன்தான் பதில்செயல் புரிகின்றோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், நம்முடைய எதிர்செயல்களோ, விழிப்புணர்வுடன் நம் பகுத்தறிவைப் பயன்படுத்தி முடிவுசெய்யப்படுவதைவிட, நம் உள்ளுணர்ச்சியின் அடிப்படையிலும், வாஸனாக்கள் மற்றும் ஸம்ஸ்காரங்களாலுமே நிர்ணயிக்கப்படுகின்றன.
இதைத்தான், கிருஷ்ணர் அசுரத் தன்மையுடைய மனிதர்களின் இயல்பு என்று சொல்கிறார். உள்ளுணர்ச்சி என்பது மிருகங்களுக்குரிய இயல்பு; அதுதான் அவற்றினுடைய இயல்பு என்பதால், அது அவற்றுக்குச் சரியானதே; அவை இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன.
ஆனால், உள்ளுணர்ச்சி மனிதனின் இயல்பு அல்ல; மனிதனின் விழிப்புணர்வு, உள்ளுணர்வு நிலைக்கு உயர முடியும், இந்த ‘உள்ளுணர்வு விழிப்பு நிலை’, மேலான செயல்களுக்கு வழிவகுக்கும். நம்மெல்லோருக்குள்ளும் பொதிந்திருக்கும் தெய்விகத்தின் ஆற்றல் இதுவே.
இவ்வாறு நுண்ணறிவு நிலைக்கு, உள்ளுணர்வு நிலைக்கு, உயர்வதை விட்டு, பெரும்பாலான மக்கள் உள்ளுணர்ச்சி நிலைக்கு அல்லது விழிப்பற்ற நிலைக்கு இறங்குவதை எளிதாக உணர்கிறார்கள்.
ஆசைகளுக்கு முடிவில்லை...
ஆதிசங்கராச்சாரியார், 'பஜகோவிந்தத்தில்' மிக அழகாகச் சொல்கிறார்:
அங்கம் கலிதம் முண்டம் தசனாலிஹீனம் ஜாத துண்டம் |
வ்ரு'த்தோ யாதி க்ரு'ஹீத்வ தண்டம் ததாபி ந முஞ்சதி ஆசா' பிண்டம் ||
"இந்த உடல் நைந்துவிட்டது, முடி நரைத்துவிட்டது, வாய் பற்களை இழந்து விட்டது, ஊன்றுகோல் தேவைப்படும் அளவுக்கு வயதாகி விட்டது. ஆனாலும், மனிதன் இன்னும் ஆசைகளால் நிறைந்துள்ளான். உண்மையில், ஆசைகளுக்கு ஒரு முடிவே இல்லை."
பிரச்சினை என்னவென்றால், ஆசைகளைப் பூர்த்திசெய்வது எப்படி என்ற சூட்சுமம் நமக்குத் தெரிவதில்லை. ஆசைகள் என்னும் தாற்றுக்கோலால் விரட்டப்பட்டு, உணர்ச்சிகளின் உச்சிக்குச் செல்கிறோம். பிறகு மனச்சோர்வு மற்றும் குற்றவுணர்ச்சி என்னும் பள்ளத்தாக்குகளில் நழுவி விழுந்து விடுகிறோம்.
நம்முடைய உணர்ச்சிகள் உண்மையானவை இல்லை. ஏனென்றால், அவை நம்முடைய உள்மையத்தைத் தொடுவதில்லை.
ஆசைகளிலிருந்து விளையும் செயல்கள் மற்றும் நம் புலன்களால் உணரப்படும் நிகழ்வுகள், இவை இரண்டையும் ஆழ்ந்து அனுபவித்தால், எந்த உச்சங்களும் நம்மைக் கிளர்ச்சியுறச் செய்யாது; எந்தத் துன்பப் பள்ளத்தாக்குகளும் நம்மைத் துக்கப்படுத்தாது என்பதைக் கண்டுணர்ந்து கொள்வோம்.
நம்முடைய
உணர்ச்சிகள்
உண்மையானவை
அல்ல. ஏனென்றால்,
அவை நம்முடைய
உள்மையத்தைத்
தொடுவதில்லை.
நாம் இந்த உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்தவோ அல்லது தவிர்க்கவோ
தேவையில்லை; எந்த வேறுபாடும்
காட்டாமல், அவற்றை நாம் ஆழ்ந்து
முழுமையாக அனுபவித்துவிட்டு,
அவற்றிலிருந்து விடுபட்டு முன்னேற
முடியும்.
நாம் எத்தனை முறை, நாம் பார்ப்பனவற்றையும் கேட்பனவற்றையும், நாம் எப்படி புரிந்துகொள்ளவேண்டுமோ அப்படிப் புரிந்துகொண்டுள்ளோம்?
நம்முடைய புலன்கள், வாசனாக்கள் மற்றும் ஸம்ஸ்காரங்கள் மூலமாக அவற்றை எப்படி உணர்கின்றதோ, அப்படியே நமக்கு உணர்த்துகின்றன. ஆகவே, நாம் பார்க்கும் மற்றும் கேட்கும் விஷயங்களைப் பற்றிய நம்முடைய புரிதல் எல்லாம் உண்மை என்று சொல்லிவிட முடியாது.
ஒரே பொருளையோ அல்லது ஒரே நிகழ்ச்சியையோ பார்க்கும் வெவ்வேறு மனிதர்கள், அவரவர்களுடைய கட்டுறு மனப்பாங்கின் அடிப்படையில், வெவ்வேறு விளக்கங்களைக் கண்டறிந்து கொள்கிறார்கள். ஒரு மனிதரை சந்தோஷப்பட வைக்கும் ஒரு நிகழ்வு, மற்றவருக்கு துக்கத்தைக் கொடுக்கிறது. ஒருவருக்கு மகிழ்ச்சியளிப்பது, மற்றவருக்கு வேதனையைத் தருகிறது.
நாம் மகிழ்ச்சியை ‘நோக்கி’ விரைந்து ஓடுகிறோம். துக்கத்தைக்கண் டு ‘விலகி’ ஓடுகிறோம். நாம் நம்முடைய ஆசைகளைப் பூர்த்திசெய்து கொள்ளும் ஆர்வத்தில், மிகுந்த பொருளீட்ட வேண்டுமென்பதற்காக, எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து, அது எப்படிப்பட்ட கேள்விக்குரிய செயலாக இருந்தாலும், அதைச் செய்கிறோம். கிருஷ்ணர் சொல்வதைப்போல், இது, நாம் இறக்கும்வரை தொடர்ந்துகொண்டே இருக்கும்.
நாம் வாழ்க்கை முழுதும் நம் சந்தோஷத்திற்காகவே ஓடியிருந்தாலும், நாம் இறக்கும் நேரத்தில் மட்டும் திடீரென்று தெய்விகமான எண்ணங்களால் நிரம்பியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, இன்னொரு முட்டாள்தனமான கற்பனையே.
ஒரு மனிதரை சந்தோஷப்பட
வைக்கும் ஒரு நிகழ்வு,
மற்றவருக்கு துக்கத்தைக்
கொடுக்கிறது. ஒருவருக்கு
மகிழ்ச்சியளிப்பது,
மற்றவருக்கு
வேதனையைத் தருகிறது.
நம் வாழ்க்கை முழுவதும் பணத்தை
நோக்கியே ஓடிக்கொண்டிருந்திருந்தால்,
மரணத்தின்போதும், நம் மனம், பணத்தைப்
பற்றிய எண்ணத்தாலேயே நிறைந்திருக்கும்.
எப்படியானாலும் நம்முடன் அந்தப்
பணத்தை எடுத்துச்செல்ல முடியாது என்று
தெரிந்தாலும்கூட, நம் மனம் பணத்தைப்
பற்றியே எண்ணும்.
நம்முடைய வாழ்க்கை முழுதும் காமத்தினால் நிரம்பியிருந்தால், நாம் காம எண்ணத்தோடுதான் இறப்போம். நாம் அசுரர்களாக 'நான், நான்' என்று சுயநலமாக வாழ்ந்துவிட்டு, இறக்கும்போது மட்டும் திடீரென்று 'நீங்கள்' என்ற தன்மைக்குத் தாவ முடியாது. அது நிகழ்வது சாத்தியமில்லை.
அஹிம்ஸை, செயலில் மட்டுமல்ல,
எண்ணத்திலும் இருக்க வேண்டும்!
கேள்வி: ஸ்வாமிஜி, பசுவை இந்து மதத்தில் புனிதமாகக் கருதுகிறார்கள். இது அஹிம்ஸையை மையமாக வைத்துதான் என்றால், நாம் மற்ற மிருகங்களையும்கூடக் கொல்லக்கூடாது. ஆனால், பசுவை மட்டும் கொல்லக்கூடாது என்று ஏன் சொல்கிறோம்? மற்ற மிருகங்களை கொல்லக்கூடாது என்று ஏன் சொல்லவில்லை?
மனிதன், மிருகம், தாவரம் அல்லது மற்ற எதுவாக இருந்தாலும், அனைத்து உயிர்களுமே புனிதமானவைதான். வேதகாலத்தில், பசு வளர்த்தல் என்பது வாழ்க்கையின் அடிப்படை ஜீவனமாக இருந்தது. தினசரி வாழ்க்கையில் பசுவே முக்கியப் பங்கு வகித்தது. அதுவே செல்வத்தின் அளவை மதிப்பீடு செய்யும் அளவுகோலாகவும் இருந்தது.
பசு, தன்னையே தந்து, 'நீங்கள்' என்பதை மையமாகக்கொண்டு இயங்கும், ஒரு தன்னலமில்லா இருப்பாக இருக்கிறது.
பசு, தன்னையே தந்து, ‘நீங்கள்’ என்பதை மையமாகக்கொண்டு இயங்கும், ஒரு தன்னலமில்லா இருப்பாக இருக்கிறது.
இந்தக் காரணங்களினால், பசுவிற்கு மதிப்பிற்குரிய ஸ்தானம் அளிக்கப்பட்டது; புனிதமாகக் கருதப்பட்டது. பசுவிற்குச் சிறந்த பாதுகாப்பான இடம் வழங்கப்பட்டது. இந்தப் பாதுகாப்பு மற்ற விலங்குகளுக்குக் கிடைக்கவில்லை. நாம் இந்த மாதிரியான பாதுகாப்பை மற்ற விலங்குகளுக்கும் நீட்டித்தாலும்கூட, மற்ற
ஜீவராசிகளான, தாவரங்கள், மீன்கள்
மற்றும் அதுபோன்ற பலவற்றின்
பாதுகாப்புக்கு என்ன செய்வது?
விழிப்புணர்வுள்ள மனிதன் மட்டுமே அஹிம்சையை, நடைமுறைப்படுத்த முடியும். அதேபோல விழிப்புணர்வுள்ள ஒரு மனிதரால் மட்டுமே ஸத்யத்தைக் கடைபிடிக்க முடியும். அஹிம்சையும் ஸத்யமும் செயலில் மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை; அது எண்ணங்களிலும் வார்த்தைகளிலும்கூட இருக்க வேண்டும். அஹிம்சையிலும் ஸத்யத்திலும் நிலைபெற வேண்டுமானால், தூய்மையான எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்கள் தேவைப்படுகின்றன. இதை நாம் உயர் விழிப்புணர்வு நிலையில் இருக்கும்பொழுதுதான் செயல்படுத்த முடியும்.
விலங்குகளை உணவிற்காகக் கொல்லலாமா? தாவரங்களை உணவாகப் பயன்படுத்தலாமா என்னும் நீதி நியாயத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கவில்லை. நாம் இயற்கையோடு இயைந்து செயல்படும்பொழுது, நமக்கு இருக்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு நிலையைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.
கொடிய காட்டு விலங்குகளான சிங்கம், புலி போன்றவை அதனதனுடைய இயல்பின்படி, மற்ற மிருகங்களை வேட்டையாடித் தின்னும். அதில் எந்த அநீதியும் கிடையாது. அது பிரபஞ்சத்தின் விதி. புலி மற்றும் சிங்கம் போன்ற விலங்குகள் தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்காக மற்ற விலங்குகளைக் கொல்கின்றன.
மனிதர்களின் நிலை அப்படியல்ல. மனிதர் முழு உள்ளுணர்வு மற்றும் விழிப்புணர்வு நிலையிலிருக்கும்போது, மாமிசம் உண்ண வேண்டும் என்ற ஆசைகூட அவரிடம் இருக்காது. அந்த மனிதருக்குள் அஹிம்ஸை குடிகொண்டிருக்கும்.
இந்தத் தர்க்கத்தை தாவரங்களுக்கும் நாம் நீட்டிக்கும்போது, பழங்காலத்தில், தாவரப் பொருட்களை அவை முதிர்ந்து கீழே விழும் நேரத்தில்தான் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது, அதேபோல் நாமும் செய்வோம்.
பழங்காலத்தில்,
அஹிம்ஸை கருத்தை
தாவரங்களுக்கும்
கடைபிடித்தார்கள்.
பழங்காலத்தில், அஹிம்ஸைகருத்தை தாவரங்களுக்கும் கடைபிடித்தார்கள்.
இன்றைய கால வாழ்க்கை முறையில், இது சாத்தியமில்லாமல் இருக்கலாம். நாம் மரங்களுக்கு அருகாமையில் வாழ்வதில்லை. இன்னும் சில தலைமுறைகள் கழித்து, குழந்தைகள், ‘மரம் என்றால் என்ன?’ என்று கேட்கலாம். இன்றைய நகரங்களில் இருக்கும் குழந்தைகள் பசுவைப் பற்றிக் கேட்பதுபோல! அவர்கள் பசுவை ஒருமுறைகூட பார்த்திருக்க மாட்டார்கள்!
அபரிகிரஹ - அடிப்படை தேவைகளுக்குள் வாழ்வது என்னும் கோட்பாட்டை நம்மாலும் வாழ முடியும். நாம் நம்முடைய தேவைகளை, உண்மையான தேவைகள் மற்றும் குறைந்தபட்ச தேவைகள் என்ற எல்லையோடு நிறுத்திக்கொண்டால், நாம் இயற்கையால் ‘பொறுத்துக் கொள்ளப்படும் எல்லைக்குள்’ வாழ்பவர்களாகிறோம்.
ஆனால், நியதிப்படி, மனிதன் பேராசைகொண்டவனாக இருக்கிறான். அவனை, அடிப்படைத் தேவைகள் ஆளவில்லை; ஆசைகளே ஆள்கின்றன.
இயற்கையால், எல்லாஉயிரினங்களுடைய ‘தேவைகளையும்’ எளிதாகப் பூர்த்திசெய்ய முடியும். ஆனால் இயற்கையால், ஒரே ஒரு மனிதனுடைய ‘ஆசைகளைக்கூட’ பூர்த்திசெய்ய முடியாது! நாம் இயற்கையை மதித்துச் செயல்படும் உயர் விழிப்புணர்வு நிலையில் வாழ வேண்டும்.
சைவ உணவே சாலச் சிறந்தது
"நித்ய தியான சிகிச்சையாளர்கள் சைவ உணவையே சாப்பிட வேண்டும், மது அருந்தக்கூடாது, மற்றும் இதுபோன்ற பலவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எதற்காக வற்புறுத்துகிறீர்கள்,” என்று மக்கள் எங்களைக் கேட்பதுண்டு. நாங்கள் இதை அவர்களுடைய நன்மைக்காகத்தான் வலியுறுத்துகிறோம்.
நித்ய தியான சிகிச்சை செய்யும்போது செய்யப்படும் தியானம், மாமிசம்,
> எல்லா
> உயிரினங்களுடைய
> ‘தேவைகளையும்’
> இயற்கையால் எளிதாகப்
> பூர்த்திசெய்ய முடியும்.
> ஆனால், இயற்கையால்
> ஒரே ஒரு மனிதனுடைய
> ‘ஆசைகளை’க்கூட
> பூர்த்திசெய்ய முடியாது!
மது, புகையிலை மற்றும் இதுபோன்ற எதிர்மறைப் பொருட்களின் சக்திகளைப் பொறுத்துக் கொள்ளாது. அவை நம்முடைய சக்தி அமைப்பின் மீது எதிர்மறையாகச் செயல்படும்.
இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் நன்னடத்தைக்காகக் கடைப்பிடிக்கச் சொல்லவில்லை. என்னுடைய பரிந்துரைகள், முழுக்க முழுக்க சக்தியைக் கருத்தில்கொண்டு சொல்லப்படுபவை. முட்டை, மாமிசம், மது, புகையிலை மற்றும் மற்ற நச்சுப் பொருட்கள் நம்முடைய சக்தி ஓட்டத்தின் மீது எதிர்மறையாக வேலைசெய்கின்றன.
தியானம் செய்து, நம் விழிப்புணர்வு நிலை உயரும்போது, நம்முடைய இந்த மாதிரியான தேவைகள் தானாகவே உதிர்ந்துவிடும். ஒருவருக்கு, தியான சிகிச்சையாளராக ஆவதற்குரிய தியானங்களைக் கற்க ஆசையிருக்கலாம், ஆனால், மது மாமிசம் போன்றவற்றை விட்டுவிட விருப்பமில்லாதிருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்காவில் நடத்தினோம்.
அந்தத் தியானப் பயிற்சிகளைச் செய்த பின், பலர், தங்களுக்கு இந்தப் பொருட்களைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமே எழவில்லை என்பதை உணர்ந்தார்கள். மது மாமிசம் போன்றவற்றைத் தொடுவதில்லை என்ற விதிமுறைகளுக்குத் தங்களைத் தயார் செய்துகொண்டு, அடுத்தகட்ட தியான சிகிச்சை முகாமில் கலந்துகொண்டு, மது மாமிசம் போன்றவற்றைத் தொடுவதில்லை என்ற உறுதிமொழியையும் எடுத்துக்கொண்டார்கள்.
அவர்களுக்குள் இதுதான் நடந்தது: தியானத்தினால், உடலைப் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்தது. அவர்கள் தங்கள் உடலைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். நம் உடலானது, நச்சுத் தன்மையுள்ள பொருட்களை உட்கொண்டு, அதைத் துஷ்பிரயோகம் செய்வதை நிறுத்தும்படி தொடர்ந்து அழுகிறது. உடலின் அந்த வேண்டுகோளை நாம் கேட்காதபோதுதான், பிரச்சினைகளே ஆரம்பமாகின்றன. இப்போது அந்தத் தியான சிகிச்சையாளர்கள், அதன் வேண்டுகோளைக் கவனித்து, நச்சுத் தன்மை நிறைந்த பொருட்களைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டார்கள். அவர்களுடைய விழிப்புணர்வு மலர்ந்துவிட்டது.
ஒரு மனிதர், தம்முடைய உணர்வில் மலர்ந்துவிட்டால், அவர் கடவுளே; அவர் ஆனந்தமயமாகிறார்; அவர், நித்யானந்தத்தில் இருக்கிறார்.