புலனுணர்ச்சி என்னும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பொறி

16.13 இன்று இது என்னால் பெறப்பட்டது. நான் இந்த ஆசையைப் பூர்த்திசெய்வேன். எனக்கு இவ்வளவு செல்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிக செல்வம் அடைவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
16.14 அந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான், நான் மற்றவர்களையும் கொல்வேன். நானே கடவுள். நான்தான் அனுபவிப்பவன். நான் வெற்றியாளன், சக்திமிக்கவன், சந்தோஷமாயிருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.
16.15,16 நான் செல்வந்தன், நல்ல உயர் குடும்பத்தில் பிறந்தவன். எனக்குச் சமமானவர் யார்? நான் யாகங்கள் செய்வேன், தர்மம் செய்வேன், மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற இவ்வாறான அறியாமையினால் தடுமாற்றமடைந்தவர்களாய் பல எதிர்பார்ப்புகளால் குழப்பமடைந்து, மாயை எனும் வலையில் பிடிபட்டு, புலனின்பங்களில் சிக்கி நரகத்தில் வீழ்கின்றனர்.
கிருஷ்ணர், இப்படிப்பட்டவர்கள் எப்படியோ போகட்டும் என்று விட்டு விடவில்லை. அவர், அஹங்காரத்தினால் மனித மனம் எந்தளவிற்கு ஆழமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை, அர்ஜுனனுக்கும் மனிதகுலத்திற்கும் புரியவைக்கிறார்.
ஆஹாரம் என்றால், புலன்களால் நுகரப்படும் அனைத்தையுமே குறிக்கும் என்று சங்கரர் விளக்கமளிக்கிறார். ஆனால், பொதுவாக ஆஹார் என்றால் ‘உணவு’ என்றே மொழிபெயர்க்கப்படுகிறது. உணவு என்றாலே, வாய்வழியாக உட்கொள்வதுதான் என்று நாம் புரிந்து வைத்திருக்கிறோம். வாய்வழியாக உட்கொள்ளும் இந்த உணவின் அடிப்படையில்தான் ஸ்தூல உடல் வளர்கிறது.
புலன்கள் நெய்யும் ஆசைகளை ஒழுங்குபடுத்துங்கள்!
பலர், சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்கிறார்கள். ஆனால், விழிப்புணர்வு உள்ளவர்கள், உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவு மட்டும் சாப்பிட்டு, உயிர் வாழ்கிறார்கள்.
ஒவ்வொரு உணர்ச்சிப் புலனுமே, அதற்கான ஆஹாரத்தை உள்வாங்குகிறது, அவற்றின் அடிப்படையிலேயே, நம் கண், காது, நாக்கு, மூக்கு மற்றும் தோல் ஆகியவை தங்களுடைய ஆசைகளை வளர்க்கின்றன, அவற்றையே உடல் - மன அமைப்பிற்குத் தெரிவிக்கின்றன.
இந்தப் புலன்களையும், அவை நெய்யும் ஆசைகளையும் ஒழுங்குபடுத்துவதைப் பற்றி, பதஞ்சலி முனி, தம்முடைய அஷ்டாங்க யோகத்தின் ஒரு படியான ப்ரத்யாஹாராவில் விவரிக்கிறார்.
நாம் உயிர்வாழ உணவு சாப்பிட்டாக வேண்டியுள்ளதுபோலவே, புலன்கள் இயங்குவதற்கு உள்வாங்குதல் அவசியமாகிறது. ஆனாலும், உள்வாங்கும் விஷயங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.
ப்ரத்யாஹாரா என்றால் புலன்களை அடக்குவதோ அல்லது பட்டினிபோடுவதோ அல்ல. நாம் உயிர்வாழ உணவு சாப்பிட்டாக வேண்டியுள்ளதுபோலவே, புலன்கள் இயங்குவதற்கு உள்வாங்குதல் அவசியமாகிறது. ஆனாலும், உள்வாங்கும் விஷயங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும், அப்போதுதான், புலன்களால் பின்னப்படும் கற்பனைகள் கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஒரு சாதாரண மனிதர், தம் புலன்களால்
வழிநடத்தப்படுகிறார்; அவர், தம்
புலன்களை வழிநடத்துவதில்லை.
அவருடைய கர்மேந்த்ரியங்கள் செயல்பு
ரிவதற்கு, புலன்களின் உந்துதல்களே
போதுமானதாக இருக்கின்றன;
'விழிப்புறு' மனத்தின் வழிநடத்துதல்கள்
தேவைப்படுவதில்லை.
கர்மேந்த்ரியங்கள், விழிப்புறு மனத்திலிருந்து எந்தவிதமான செய்தியையும் உள்வாங்காமல், புலன்களால் உந்தப்பட்டு செயல்களைச் செய்கின்றன. உள்ளுணர்ச்சியின் தூண்டுதலால், அவை வலியைத் தவிர்த்து, சந்தோஷத்தை நாடுகின்றன.
ஒரு சின்ன கதை ஒருமுறை இரண்டு நண்பர்கள் கடைவீதி ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். அதில் ஒருவர் மிகவும் கவலையுடன், கிட்டத்தட்ட அழுதுவிடுவதுபோல் காணப்பட்டார். மற்றொருவர், "என்ன நடந்தது? ஏன் இப்படி சோகமாக இருக்கிறாய்?" என்று கேட்டார்.
நண்பர் 1: மூன்று வாரங்களுக்கு முன் என்னுடைய மாமா இறந்துபோய்விட்டார். அவர் எனக்காக ஐம்பதாயிரம் டாலர்களை விட்டுச் சென்றார்.
நண்பர் 2: நீ அழுகின்ற அளவுக்கு, இது ஒன்றும் மோசமான விஷயம் அல்லவே!
நண்பர் 1: இரண்டு வாரங்களுக்கு முன் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் இறந்துவிட்டார். அவர் எனக்காக தொண்ணூறாயிரம் டாலர்களை விட்டுச் சென்றார்.
நண்பர் 2: ஆஹா அருமை! நண்பர் 1: கடந்த வாரம் என்னுடைய தாத்தா இறந்துவிட்டார். அவர் எனக்காக ஒரு மில்லியன் டாலர்களை விட்டுச் சென்றிருக்கிறார்.
நண்பர் 2: பின் எதற்காக நீ இப்போது கவலையாக இருக்கிறாய்?
நண்பர் 1: இந்த வாரம் யாருமே இறக்கவில்லையே!
நண்பர் 2: !!!
புரிந்துகொள்ளுங்கள்: ஒருமுறை நாம் மனத்தை புலன்களின் வசம் விட்டுவிட்டால், அதற்கு முடிவே கிடையாது. அதை நிறுத்துவதற்கான வழிமுறையும் நமக்குத் தெரியாது. அதனால் தொடர்ந்து கற்பனைகளிலேயே உழன்றுகொண்டிருப்போம்.
நாம் செல்வம் சேர்ப்பது குறித்து கனவு காண்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, நாம் செல்வம் சேர்ப்பதன் நோக்கமே, அதை 'எப்போதாவது' செலவழித்து மகிழத்தான் என்று ஆகிவிட்டது. 'எப்போதாவது' செலவழித்து மகிழ்வதுதான் நோக்கம் என்றால், நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், கொஞ்சம் செல்வத்தைச் சேர்த்தபிறகு, அதைச் செலவழித்து அனுபவித்துவிட வேண்டும்.
ஒப்பீடு -
அழிக்கப்பட வேண்டிய ஒரு ஸம்ஸ்காரம்
பெரும்பாலான சமயத்தில், சேர்த்த பணத்தை மகிழ்ச்சிக்காக உபயோகிப்பதைவிட, பணத்தை மேலும் மேலும் சேர்ப்பதால் ஏற்படும் மகிழ்ச்சியே, மனிதனுக்கு ஒரு உந்து சக்தியாகிவிடுகிறது. ஒருவர், அவர் ஈட்டிய செல்வத்தை வைத்து என்ன செய்கிறார் என்பது இங்கு முக்கியத்துவம் பெறுவதில்லை; அவருக்குத் தெரிந்த மற்ற மனிதர்களைவிட, அவர் எவ்வளவு அதிகமாக வைத்திருக்கிறார் என்பதே முக்கியமானதாக இருக்கிறது.
நம்முடைய பக்கத்து வீட்டுக்காரர், ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்கிவிட்டால், நம் வீட்டின் வெப்பநிலை ஏறிவிடும். அண்டை வீட்டுக்கு ஒரு புதுக் கார் வந்துவிட்டால், இதுநாள்வரை நன்றாக ஓடிய நம்முடைய கார் ஓடாமல் நின்றுவிடும். இன்னொரு பெண், புது மாதிரி
செருப்பு போட்டிருந்தால், அதைப் பார்த்த உடனேயே, அதுவரை அழகாகவும், பொருத்தமாகவும் இருந்த நம்முடைய செருப்பு, காலைக் கடிக்க ஆரம்பித்துவிடும். ஒப்பிட்டுப் பார்த்தலும், பொறாமையும்தான் நம்மை இயக்குகின்றன. உண்மையில்

நாம், நம்முடைய ஆசைகளைக்கூட பூர்த்திசெய்து கொள்வதில்லை, மற்றவர்களின் ஆசைகளைத்தான் பூர்த்திசெய்கிறோம்.
சுயநல நோக்குடன் பொருட்களைக் கையகப்படுத்திக் கொள்வது எப்படி என்பது, நம்முடைய சிறு வயதில் இருந்தே, நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட பாடமாக இருக்கிறது. நம்மிடம் இருப்பது நமக்குப் போதுமானதாகஇருப்பதில்லை. எதுவும் நம்மைத் திருப்திசெய்வதில்லை. சாகும்வரை நாம், நம் பேராசையாலேயே வழிநடத்தப்படுகிறோம்.
நித்யானந்த ஸ்புரண த்யான அனுபவ முகாமில், ஆசைகளை முறைப்படுத்தும் ஒரு தியான நுட்பம் கற்றுத்தரப்படும். பங்கேற்பாளர்கள், முதலில் தங்களுடைய ஆசைகளை எல்லாம் பட்டியலிடுவார்கள். சில சமயங்களில், இப்பட்டியல் பக்கம் பக்கமாக நீளும். இறுதியில், இவற்றையெல்லாம் ஒருமுறை மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளச் சொல்வோம்.
பிறகு அவர்களைத் தியானத்திற்குள் வழிநடத்திச் செல்வோம். தியானத்தின் முடிவில், அவர்கள் எழுதிய எல்லா ஆசைகளையும் மீண்டும் நினைவுபடுத்திப் பார்க்குமாறு சொல்வோம்.
அப்போது அவர்களே ஆச்சரியப்
படுவார்கள், பெரிய பட்டியலாக நீண்ட
அவர்களுடைய ஆசைகளுள் சிலவற்றையே
அவர்களால் மீண்டும் நினைத்துப் பார்க்க
முடியும். அந்த ஆசைகள்கூட, அவர்களுக்கு
மட்டும் பலனளிப்பதாக இல்லாமல்,
மற்றவர்களுக்கும் பலனளிப்பதாக
இருக்கும்.
> நம்முடைய
> உடல் - மன அமைப்பு,
> தன்னுடனேயே, நம்முடைய
> ப்ராரப்த கர்மாவைப்
> பூர்த்திசெய்வதற்கான
> சக்தியையும்
> எடுத்து வந்திருக்கிறது.
இந்தத் தியான செயல்முறை ஸம்ஸ்காரங்களையும், சேர்த்து வைக்கப்பட்ட நிறைவேறாத ஆசைகளையும் அழிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தியானத்தின் முடிவில் மிச்சமிருக்கும் ஆசைகளே, அவர்கள் பிறக்கும்போது எடுத்து வந்த, அவர்களுடைய சொந்த ஆசைகள்! இவற்றைத்தான் ப்ராரப்த கர்மா, என்கிறோம். அதாவது இந்த உடலை நாம் எடுப்பதற்குக் காரணமாக இருந்த ஆசைகள்.
நம்முடைய உடல் - மன அமைப்பு, தன்னுடனேயே, நம்முடைய ப்ராரப்த கர்மாவைப் பூர்த்திசெய்வதற்கான சக்தியையும் எடுத்து வந்திருக்கிறது.

மஹாவீரரும், மற்ற சிறந்த குருமார்களும்
சொல்வதைப்போல், நம்முடைய தேவைகள்
அனைத்துமே நிறைவேற்றப்படும் என்பதை
உறுதிசெய்தே, இயற்கை நம்மை இந்தப்
பூமிக்கு அழைத்து வருகிறது.
அவ்வாறு இருந்தபோதிலும், நாம்
பூமிக்கு வந்த பிறகு, மற்றவர்களுடைய
ஆசைகளைக் கடன் வாங்கி, அவற்றை
நம்முடைய தேவைகளாகவும்,
ஆசைகளாகவும் பெருக்கிக் கொள்கிறோம்.
அவை உண்மையிலேயே, நம்முடைய
'தேவைகள்' இல்லை.
தியானத்தினால் ஏற்பட்ட உணர்வு மாற்றத்திற்குப் பிறகு, காலப்போக்கில், அவர்களுக்கே ஆச்சரியமளிக்கும் விதமாக, மேலும் மேலும் பொருட்களைச் சேர்க்க வேண்டுமென்று அவர்களுக்கிருந்த விருப்பம் குறையத் துவங்குகிறது. அந்த ஆசைகள் அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன. அவர்கள் பற்றற்ற தன்மையை வளர்த்துக் கொள்கிறார்கள். அதே சமயம், அவர்களுக்கு உண்மையாக எது தேவையோ, அது, அவர்களுடைய முயற்சியின்றியே, தானாகவே நிகழ்வதைப் பார்க்கின்றனர்.
அவர்கள் இப்போது மிகக் குறைந்த ஆசையுடையவர்களாகவும், மற்றவர்களை எடைபோடாதவர்களாகவும், மிகக் குறைந்த எதிர்மறை எண்ணங்களுடையவர்களாகவும், மற்றவர்கள்மீது அக்கறை கொண்டவர்களாகவும் மாறிவிடுகின்றனர்.