பிரபஞ்சம் நமக்கான பொறுப்பெடுத்துக் கொள்ளும்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஒருவர், தியான சிகிச்சையாளராக தீக்ஷை எடுப்பதற்கு முன், இந்த நித்யானந்த ஸ்புரணம் நிகழ்ச்சியில் பங்குபெறுவது மிக முக்கியம்.
நித்ய தியான சிகிச்சையாளர்கள் பலர், ஆசிரியர்களாகவும், நித்யானந்த தியானபீடத்தின் வேலைகளை எடுத்து செய்யும் அமைப்பாளர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள், தங்களுடைய மிகுந்த நேரத்தை தியானபீடத்திற்காகவே செலவிடுகிறார்கள், குறைந்த நேரத்தையே தங்கள் சொந்த வேலைகளுக்காகச் செலவிடுகிறார்கள்.
இதற்கு முன் தங்கள் உலகியல்
தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக
ஓடிக்கொண்டிருந்த நேரத்தை
விடக் குறைந்தளவு நேரத்தையே
செலவிட்ட போதிலும், அவர்களுக்குத்
தேவையான விஷயங்கள், அவர்களுக்கு
எந்தவிதத்தில் கிடைக்க வேண்டுமென்று
விரும்புகிறார்களோ, அப்படியே
கிடைக்கின்றன. குறைந்த முயற்சியில்,
தங்கள் வியாபாரங்களையும், வாழ்க்கைத்
தரத்தையும், தியானபீட வேலைகளையும்
சிறப்பான முறையில் மேம்படுத்துவதைப்
பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.
> பிரபஞ்ச இருப்புத் தன்மை,
> நமக்குத் தேவையானதை
> நம்மீது பொழியக்
> காத்துக்கொண்டிருக்கிறது.
பிரபஞ்ச பேரியக்கம் இயங்கும் விதம் பற்றி புரிந்துகொண்டவர்களுக்கு, இது ஒரு ஆச்சரியமே அல்ல. பிரபஞ்ச இருப்புத் தன்மை, நமக்குத் தேவையானதை நம்மீது பொழியக் காத்துக்கொண்டிருக்கிறது. நம்முடைய பிரச்சினையே, நம்முடைய தேவை என்ன என்பதைப்பற்றி புரிந்துகொள்ள நாம் நிற்பதேயில்லை.
எல்லா நேரங்களிலும், நாம், நம்முடைய புலன்கள் பின்னிடும் கற்பனை வலையில் சிக்கிக்கொண்டு, மற்றவர்களின் உடைமைகளை அடைவதற்காக ஓடிக்கொண்டிருக்கிறோம். நம்மை வழிநடத்துவதற்கு, நம் புலன்களுக்கு நாம் அனுமதியளித்து விடுகிறோம். தியான சிகிச்சையாளரான பிறகு இவர்கள், தியானத்திற்காக அதிக நேரத்தைச் செலவிட்டு, ‘தாங்கள் யார்’ என்பதில் விழிப்போடு இருக்கிறார்கள். தங்களுடைய உண்மையான ‘தேவை’யைப் பற்றிய புரிதலை வளர்த்துக்கொள்கிறார்கள்.
இனியும், எதற்கும் உபயோகமில்லாத
ஆசைகளின் பின்னால் ஓடுவது என்பது
அவசியமற்ற ஒன்று என்பதைப் புரிந்து
கொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன
தேவையோ, அது அவர்களிடம் வருகிறது,
அவர்களுடைய தேவைகள், அவர்களைப்
பின்தொடரும்.
> தியானபீடத்தின்
> சேவைகளில் தங்களை
> அர்ப்பணித்துக்
> கொள்பவர்கள்
> எங்கிருந்தாலும், நான்
> அவர்களுடன் இருப்பேன்.
> இது வெறும் தத்துவமோ,
> மாயையோ அல்ல!
அன்பர்களிடம் நான் மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது இதுவே: “என்னுடைய உருவத்திலேயே தடைபட்டு நின்றுவிடாதீர்கள், என் பின்னாலேயே ஓடி வராதீர்கள், என்னையே விடாது பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்காதீர்கள். பிரபஞ்ச நன்மைக்காகவே செய்யப்படும் தியானபீடத்தின் சேவைகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள், தியானபீடத்தின் சேவையையே நோக்கமாகக் கொள்ளுங்கள். பிறகு, நான் உங்கள் பின்பு ஓடி வருவேன். நான் உங்களோடு இருப்பதற்காக, உங்களைப் பின்தொடர்வேன்!”
பலர் சீக்கிரமாக இதைப் புரிந்துகொள்கிறார்கள். உடலளவில் நான் எங்கு இருக்கிறேன், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதெல்லாம் எந்தவொரு வித்தியாசத்தையும் அவர்களுக்குள் உருவாக்குவதில்லை. அவர்கள் எங்கிருந்தாலும், நான் அவர்களுடன் இருப்பேன். இது வெறும் தத்துவமோ, மாயையோ இல்லை, அவர்களையே கேளுங்கள், இதுவே உண்மை.
ஒருமுறை நாம், ‘நான்’ என்னும் அசுரத் தன்மையிலிருந்து, ‘நீங்கள்’ என்ற தெய்வ நிலைக்கு மாறிவிட்டால், பிறகு நாம், செல்வம் சேர்ப்பது பற்றியோ, நமக்கென்று ஒரு அந்தஸ்தை உருவாக்குவது பற்றியோ, உறவுமுறைகளை விரிவுபடுத்துவதைப் பற்றியோ அல்லது நம் வாழ்க்கையில் எதற்கெல்லாம் கவனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கிறோமோ, அவற்றைப் பற்றியோ கவலைப்பட வேண்டியதில்லை. பிரபஞ்சம் அவை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும். பிரபஞ்சம் நமக்கான பொறுப்பெடுத்துக் கொள்ளும்.
அப்படி இல்லாமல், ‘நான்’ என்று நம்முடைய சுயநலத்தில் மட்டுமே கவனமாக இருந்தோமானால், தெரிந்துகொள்ளுங்கள், நாம் கீழ்நோக்கி இறங்கும் சுருள் வளையத்திற்குள் பயணம் செய்துகொண்டிருக்கிறோம். இது நம்மை நரகத்திற்கு எடுத்துச் சென்றுவிடும் என்று கிருஷ்ணர் எச்சரிக்கிறார்.
பிரபஞ்சத்தின் கருணை - உணர்ந்து அனுபவிக்கக் கூடியது. தர்க்கத்திற்குரியது அல்ல!
நன்றி நவிலல்: நாங்கள், எங்களுக்கு அளிக்கப்பட்ட கல்வியின் அடிப்படையில், அறிவியலில் எல்லாவற்றுக்குமே பதில் உண்டு என்று நம்பியிருந்தோம். வேத நூல்களில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு அறிவியலால் பதில் அளிக்க முடியாதபோது, அறிவியலின் எல்லை அவ்வளவுதான் என்று அந்த அறிவியலை நிராகரிப்பதற்குப் பதிலாக, நாங்கள் வேத நூல்கள் சொன்னதை மறுத்தோம். நம் வேதங்களில் சொல்லப்பட்டுள்ள ஸத்யங்களைப் பற்றி எடுத்துச் சொல்லி எங்களுக்குப் புரிதலை ஏற்படுத்திய உங்களுக்கு நன்றி. இப்போது எங்களால் வேத நூல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.
உண்மைக்கும் (Fact) ஸத்யத்திற்கும் (Truth) இடையில் பெரிய வேறுபாடு உண்டு. அறிவியல், வரலாறு, மற்றும் தர்க்க அறிவைச் சார்ந்து உருவாக்கப்பட்டவை எல்லாம் உண்மைக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பவை. உண்மை என்பது ஒருவரின் 'புரிதலின்' எல்லைக்குட்பட்டது. மனத்தின் 'உணரும் தன்மைக்கு' உட்பட்டது. உண்மை - அளவு, இடம் மற்றும் காலம் என்னும் மூன்று பரிமாணங்களுக்கு உட்பட்டது.
ஸத்யம் நிலையானது. அதை அளவினாலோ,
இடத்தினாலோ அல்லது காலத்தினாலோ
கட்டுப்படுத்த முடியாது. குருமார்கள் ஒரு
விஷயத்தைச் சொல்லும்போது, அவ்வி
ஷயம் அந்த நேரத்தில் எது இருக்கிறதோ
அதனோடு சம்பந்தமில்லாததாகக்கூட
இருக்கும். ஆனால், அது பிரபஞ்ச
அனுபவத்திலிருந்து வரும் ஒரு பகுதி.
அது காலத்தையும் இடத்தையும் தாண்டிச்
செல்லக் கூடியது.

உண்மைக்கும் (Fact) ஸத்யத்திற்கும் (Truth) இடையில் பெரிய வேறுபாடு உண்டு.
மீண்டும் மீண்டும் சீடர்கள் என்னிடம் சொல்வது இதுதான்: “ஸ்வாமிஜி, நீங்கள் ஓரிரு வருடங்களுக்கு முன் சொல்லியவற்றை, அப்போது எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால், எங்களால் ‘உண்மை’ என்று பார்க்க முடிந்ததற்கும், நீங்கள் சொன்னதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருந்தது. ஆனால், நீங்கள் முன்பு சொன்னதெல்லாம் இப்போது அப்படியே நடப்பதைப் பார்க்கிறோம்!”
பல விஷயங்கள் மனத்திற்கு அப்பாற்பட்டவை, அவற்றைத் தர்க்கத்தாலும் பரிசோதனைகளாலும் நிரூபிக்க முடியாது. அவற்றை விழிப்புணர்வாலும், அனுபவத்தினாலும் மட்டுமே அறிந்துகொள்ள முடியும் என்பதை அவர்களால் இப்போது புரிந்துகொள்ள முடிகிறது.
“நான் ஒவ்வொரு இரவும் என் உடலை விட்டுவிடுகிறேன்,” என்று நான் சொன்னால், அது நம்பிக்கையற்றவர்க்கு, பைத்தியக்காரனின் கதைபோலத் தோன்றும். ஆனால், நெருங்கிய சீடர்கள் இந்த ஸத்யத்தை அறிவார்கள்.
வாழ்க்கை என்பது ஒரு கணக்கு என்பதை விட, அது ஒரு மாயாஜால வித்தையைப் போன்றது, அது ஒரு இரகசியம், எளிதில் புரிந்துகொள்ள முடியாதது, முடிவில்லாதது. அது நம்மால் புரிந்துகொள்ளப்பட முடியாத ஒரு அதிசயம். அறிவியல் அதை விளக்க முயற்சிசெய்கிறது.
இப்போது, அறிவியலின் சக்தி அதிகமாகியுள்ளதால், மக்கள் மத நம்பிக்கை இல்லாதவர்களாகி விட்டார்கள். தங்களுக்கு எல்லாவற்றைப் பற்றியும் தெரியும் என்று அவர்கள் நினைக்கின்ற காரணத்தினால், அவர்கள் இவ்வாறு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மிகக் குறைந்த அளவே அறிந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் அறிவதில்லை.
வாழ்க்கை என்பது ஒரு
கணக்கு என்பதை விட,
அது ஒரு மாயாஜால
வித்தையைப் போன்றது,
அது ஒரு இரகசியம்
அறிவியல் உண்மையைத் தருகின்றதே
தவிர, ஸத்யத்தை அல்ல. அது
ஜடப்பொருட்களைப் பற்றித்தான்
பேசுகிறது. ஆனால் ஸத்யம், நம்முடைய
ஆன்மாவைப்பற்றியது, நம்முடைய
விழிப்புணர்வைப் பற்றியது. அறிவியல்,
இவற்றைப் பற்றி அறிந்திருக்கவில்லை.
அறிவியலுக்கு இவற்றைப் பற்றிய
விளக்கத்தைத் தர முடியவில்லை. ஆனாலும்
இந்தத் தோல்வியை ஏற்றுக்கொள்ள
முடியாததால், அறிவியல் இதைத்
தொடர்ந்து மறுத்துக்கொண்டே இருக்கிறது.
அறிவியல் விளக்குகிறது;
ஆன்மிகம், வாழ்க்கையின்
அதிசயிக்கத்தக்க புனிதமான
பாகங்களை நமக்குத்
திருப்பித் தருகிறது.
இருப்பினும், இனியும் அறிவியலால் இதைத் தொடர்ந்து மறுத்துக்கொண்டிருக்க முடியாது. ஏனெனில், அறிவியல் மேதைக்குக்கூட, ‘அவர்’ ஒரு பொருள் அல்ல, ‘அவர் இருக்கிறார்’ என்பது நன்றாகத் தெரியும். உண்மையில், ‘அவர்’ இல்லையென்றால், அங்கு அறிவியல் என்ற ஒன்றே இல்லை. கவனிப்பவர் இல்லையென்றால், கவனிக்கப்படுதற்கும் எதுவும் இருக்கப் போவதில்லை. பொருள் இருப்பதே, அங்குக் ‘கவனிப்பவர்’ என்று ஒருவர் இருப்பதால்தான்.
ஆத்மா என்ற கருத்து ஒரு ஆச்சரியத்திற்குரிய கருத்தாகவே இருக்கிறது. அது நம்பமுடியாததாக இருக்கிறது. ஒருவர் அதை அனுபவ பூர்வமாக உணரலாம் மற்றும் அதைக் கண்டு அளவற்ற பயபக்தி கொள்ளலாம். இந்தப் பக்தி உணர்வே ஆன்மிகம், அந்த அதிசய உணர்வே தெய்விகம்.

ஆன்மிகம், நம் வாழ்க்கையை, மறைபொருள்களால், புனித ஸத்யங்களால் நிரப்புகிறது. இதற்கு முன் ஆச்சரியத்தைத் தராதவைகூட, இப்போது ஆச்சரியப்படும்படியாகத் தோன்றும். ஒரு ரோஜாப் பூ, கடற்கரையிலிருக்கும் கூழாங்கல், வானத்தில் பறக்கும் பறவை, இவை எல்லாம் நமக்கு ஆச்சரியமாகத் தோன்றும். அறிவியல் விளக்குகிறது; ஆன்மிகம், வாழ்க்கையின் அதிசயிக்கத்தக்க புனிதமான பாகங்களை நமக்குத் திருப்பித் தருகிறது.
நாம் வெளியில் இருந்து காணும்போது, மனிதன் மற்றொரு மிருகமாகத் தோன்றுவான். ஆனால், இது, நம் புலன்கள் உணரும் ஒரு காட்சியே, ஏனென்றால், நாம் அனைத்தையும் வெளியில் இருந்தே காண்பதற்குப் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம்.
மனிதனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்றால், நாம் நமக்குள்ளே இருந்து பார்க்க வேண்டும். மனிதனுக்கு விழிப்புணர்வு உண்டு. மனிதனின் இயல்பு உள் தளத்தில் மையங்கொள்வதுதான்.
ஆனால், நம்முடைய புலன்கள் நம்மை, தொடர்ந்து இருப்புத்தன்மையின் வெளி விளிம்பிற்கே இழுக்கின்றன. நம்முடைய இயற்கையான சுபாவமோ, நம்மை மீண்டும் நம்முடைய உள்மையத்திற்கு இழுக்கிறது. இதனால், மனிதன் வினோதமான இயல்புடையவனாக மாறிவிடுகிறான்.
நாம் தொடர்ந்து, விளிம்பிற்கும் நம்முடைய மையத்திற்கும் இடையில் ஒரு ஊசற்குண்டுபோல் (Pendulam) ஊசலாடுகிறோம்.
தியானமே, நம் வெளி விளிம்பிற்கும் உள்மையத்திற்கும் இடையே உள்ள பாலம்.
நம்முடைய உள்ளுலக இயல்பைக் கண்டுபிடிக்க வேண்டியதும், நம் வாழ்வின் மைய நோக்கமான 'தன்னை அறிதலை' சாத்தியப்படுத்துவதும் நம்முடைய பொறுப்பே ஆகும். இதில் நாம் தீர்மானமாக இருந்தால், அந்தத் தீர்மானமே நம்முடைய உருமாற்றத்தைச் செயல்படுத்தத் துவங்கும்.
