KAILASA Library/பகவத்கீதை/துன்பங்களில் வார்க்கப்பட்டு உள்ளார்கள்Sign in
பகவத்கீதை

துன்பங்களில் வார்க்கப்பட்டு உள்ளார்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Lord Krishna playing flute

16.17 தற்பெருமையுடையார், பணிவிலார், செல்வத்தினால் மதி மயங்கியோர், தவறான அஹங்காரம் கொண்டோர்- இவர்கள் மேலோட்டமாக பெயருக்காக யாகங்களைச் செய்கிறார்கள். அவர்கள் வேத விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.

16.18 அசுரத் தன்மையுள்ள மனிதர்கள், அஹங்காரம், அதிகாரம், தற்பெருமை, காமம், மற்றும் கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, மேலான தெய்வத்தின் மேல் பொறாமைகொண்டு, தம் தேகத்திலும், பிறர் தேகத்திலுமுள்ள தெய்வத்தை நிந்தனை செய்கிறார்கள்.

16.19 கடவுளிடம் பொறாமை கொண்டவர்களையும், கருணையில்லாதவர்களையும், கீழான குணத்தவர்களையும் நான் இந்தப் பொருள்சார் உலகில் மீண்டும் மீண்டும் அசுரத் தன்மையுள்ள பிறவிகளாகப் பிறப்பெடுக்க வைக்கிறேன்.

இந்த மூடர்கள், மீண்டும் மீண்டும் அசுரர்களுக்கு இடையில்
பிறப்பெடுப்பார்கள். ஓ! குந்தி மைந்தா! என்னை அடையாமல்,
அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வாழ்க்கையில் மூழ்குகிறார்கள்.

உண்மையான சரணாகதி எது?

இதற்குமுன்கிருஷ்ணர்,அவர்எப்படிப்பட்டவர்களையும்கருணையோடு அரவணைத்து, அவர்களை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கிறார். ஆனால் இங்கே அவர், அசுர இயல்பு உடையவர்களை துன்பக் கடலில் தூக்கி எறிவேன் என்று சொல்கிறார். எப்படி நாம் இந்த இரண்டு அறிக்கைகளையும் ஒற்றுமைப்படுத்த முடியும்.

இரண்டு அறிக்கைகளுமே சாத்தியம்! ஒரு ஜ்ஞான குரு சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தையுமே ஸத்யம். நம்முடைய புரிதல்தன்மைதான் வளர வேண்டும்.

கிருஷ்ணர் கருணையின் அவதாரம். எவரொருவர் அவரைச் சரணடைகிறாரோ, அவர் முக்தி அடைகிறார். அதுவே முழுமையான ஸத்யம். பிரச்சினை என்னவென்றால், நாம் சரணடைந்ததுபோல் நடிக்கிறோம். நம்மிடம் இருப்பதெல்லாம் வெறும் வார்த்தைகளே. நம்முடைய எண்ணங்கள், நம் வார்த்தைகளோடு ஒத்துப்போவதில்லை. நம் வார்த்தைகள், நம் செயல்களோடு ஒத்துப்போவதில்லை.

மக்கள் என்னிடம் வந்து, "நாங்கள் உங்களிடம் சரணடைந்து விட்டோம், ஸ்வாமிஜி. தயவுசெய்து எங்களுக்கு உதவிசெய்யுங்கள். எங்களைத் துன்பங்களிலிருந்து விடுவியுங்கள்," என்று சொல்கிறார்கள்.

நம்முடைய எண்ணங்கள்,
நம் வார்த்தைகளோடு
ஒத்துப்போவதில்லை.
நம் வார்த்தைகள்,
நம் செயல்களோடு
ஒத்துப்போவதில்லை.

நான் அவர்களிடம், "வருகின்ற வாரம்
நடைபெறவுள்ள தியான அனுபவ
முகாமில் கலந்துகொள்ளுங்கள்,"
என்று சொல்லும்போது, தங்களுடைய
நாட்குறிப்பேட்டைப் (Diary) பார்க்க
வேண்டும், என்று சொல்வார்கள்.

இதுவா சரணாகதி? இதில் ஏதாவது
அர்த்தம் உள்ளதா? இது வெறும் கபட
நாடகம். குருவைத் தங்களுடைய சொந்த

விருப்பத்திற்குள் கொண்டுவருவதற்கான சதித்திட்டம்.

என்னுடைய எச்சரிக்கையை மீறி,
முட்டாள்தனமான, ஆபத்தான செயல்களைச்
செய்துவிட்டு, பிறகு, என்மீது நம்பிக்கை
வைத்திருப்பதாகவும், அதனால் எப்படியும்
அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும்
சொல்கின்ற சில மக்களும் இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன், எங்களுடைய
இமாலய யாத்திரையில், நடந்த ஒரு
சம்பவம்.

> தொண்ணூறு
> சதவீகித நேரங்களில்,
> நமக்கு முன்கூட்டியே
> பின்விளைவுகளைப்
> பற்றித் தெரிந்துவிடும்.
> தெரிந்தும்கூட, தவறான
> செயல்களைத்தான்
> தேர்ந்தெடுப்போம்

கடல்மட்டத்திலிருந்து 12000 அடி உயரத்திலிருக்கும் கங்கோத்ரியில் நாங்கள் தங்கியிருந்தோம். அடுத்த நாள், அங்கிருந்து மேலும் 3000 அடி உயரத்திலிருக்கும் கங்கையின் பிறப்பிடமான கோமுக் செல்லலாம் எனத் திட்டம் போட்டிருந்தோம்.

ஆனால், இரவு சத்சங்கத்தில், "நாளை கோமுக்கில் நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமிருப்பதாக நான் உணர்வதால், நாளை நாம் கோமுக் செல்ல வேண்டாம் என்று முடிவுசெய்திருக்கிறேன்," என்று அறிவித்தேன்.

மக்கள், தாங்களே முடிவெடுப்பதற்கும் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு தருவேன். அவர்கள், தங்கள் சுய விருப்பத்தையும் செயல்படுத்த வேண்டும். அதனால் அவர்களிடம், "நான் அங்கே போவதாயில்லை. ஏனென்றால், கால நிலை அங்கே நன்றாக இருக்காது. அப்போது அந்தப் பாதை ஏறுவதற்கு மிகவும் கடினமானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். ஆனாலும் யாராவது போக விரும்பினால், அவர்கள் போகலாம். அது அவர்களுடைய சொந்த விருப்பம்," என்று சொல்லிவிட்டேன்.

நாங்கள், ஒரு பேருந்தில் 30 நபர்கள் வீதம் 8 பேருந்துகளில் சென்றிருந்தோம். ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு தலைவர் இருப்பார். இந்த 8 தலைவர்களுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரும் நியமிக்கப்பட்டார். அப்பேருந்தில் பயணம்செய்வோர், தாங்கள் செல்லும் இடத்தைப் பற்றிய தகவலைத் தங்கள் தலைவர்களிடம் தெரிவித்த பின்னரே,

பயணம் மேற்கொள்ள வேண்டும்.
அது மலைப்பிரதேசமாகையால், அதன்
தட்பவெப்பம் கணிப்பிற்கு அப்பாற்பட்ட
ஒன்றாகவும் பாதுகாப்பற்றதாகவும்
இருக்கும்.

அடுத்த நாள் காலை நான், தற்செயலாக
ஒருவரை அழைத்து, "யாராவது கோமுக்குச்
சென்றிருக்கிறார்களா?" என்று கேட்டேன்.
அவருக்கு அதுபற்றித் தெரியவில்லை.
நான் ஒருங்கிணைப்பாளரை அழைத்தேன்.
கோமுக்குப் போகப் போவதாகத் தம்மிடம்
யாருமே தெரிவிக்கவில்லை என்றார்.

> நாம் எதைச் செய்தாலும்
> அதற்கான பின்விளைவு
> என்று ஒன்று உண்டு
> என்பதை நம் அனுபவ
> அறிவே நமக்கு
> உணர்த்திவிடும்.

ஆனால், பத்துபேர் கொண்ட குழு ஒன்று, அவர்களுடைய குழுத் தலைவர்களிடம்கூடச் சொல்லாமல் கோமுக்கிற்குச் சென்றிருந்தது. அங்கே வழி முழுவதும், நிலச்சரிவுகளும் பனிச்சரிவுகளுமாக இருந்திருக்கின்றன. எப்படியோ அவர்கள் பாதுகாப்பாக வந்து சேர்ந்தார்கள்.

அவர்களிடம் ஏன் இப்படி நடந்து கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, அவர்கள் சொன்ன பதில் எனக்கு வியப்பளித்தது. அவர்கள் சொன்ன பதில் இதுதான்: "நாங்கள் உங்களிடம் சரணடைந்து விட்டோம், ஸ்வாமிஜி. அதனால் நீங்கள் எங்களைப் பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்கள்.

இந்த மக்கள் உண்மையாகவே சரணடைந்திருந்தால், என்னுடைய எச்சரிக்கையை மீறி அங்குப் போயிருக்க மாட்டார்கள். சரணாகதியைத் தவறாகப் புரிந்துகொண்டு, என்னுடைய எச்சரிக்கையையும் மீறிச் சென்றதோடு மட்டுமல்லாமல், நான் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேறு சொல்கிறார்களே, இது எந்த வகையான சரணாகதி!

இப்படித்தான் நம்மில் பலர் நடந்துகொள்கிறோம். நாம் மற்றவர்களுக்குத் துன்பங்கொடுப்போம், தீங்கிழைப்போம். எல்லாவிதமான முட்டாள்தனங்களையும், அவற்றைச் செய்யக்கூடாது என்று தெரிந்தும் செய்துவிட்டு, பின்பு கோயிலுக்குச் சென்று அவை எல்லாம் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். எப்படி அது சரியாகும்? ஏன் அது சரியாக வேண்டும்?

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்ச்செயல் உண்டு. அந்த எதிர்ச்செயலைத்தான் நாம் கர்மா என்று அழைக்கிறோம். கர்மாவைப் பற்றிய எல்லாத் தத்துவங்களையும், உருவகப்படுத்தப் பட்ட கருத்துகளையும், ஆன்மிகக் கருத்துகளையும் மறந்துவிடுங்கள்; நாம் எதைச் செய்தாலும் அதற்கான பின்விளைவு என்று ஒன்று உண்டு என்பதை நம் அனுபவ அறிவே நமக்கு உணர்த்திவிடும்.

பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நமக்குக் கடவுள் அளித்திருக்கிறார்!

தொண்ணூறு சதவிகித நேரங்களில், நமக்கு முன்கூட்டியே பின்விளைவுகளைப் பற்றித் தெரிந்துவிடும். தெரிந்தும்கூட, தவறான செயல்களைத்தான் தேர்ந்தெடுப்போம்; பிறகு, நன்கு சிந்தித்தே தீர்மானித்ததாகவும், ஆனாலும் தவறு நடந்துவிட்டது என்றும் கூறிக்கொள்வோம். பிறகு ஏன் கடவுளையும் குருவையும் நம்முடைய பகுத்தறிவு ரீதியான தீர்மானங்களுக்குப் பொறுப்பாளிகளாக்குகிறோம்?

என்மீது நம்பிக்கை இருக்கிறது என்றால், ஏன் என் சொற்படி அவர்கள் நடந்துகொள்ளவில்லை? என் அறிவுரைக்கு எதிரான செயல்களைச் செய்துவிட்டு, என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை அவர்களைக் காக்கும் என்று ஏன் சொல்கிறார்கள்? என்னைச் சோதிப்பதற்காகவா? அவர்களுடைய முட்டாள்தனமான செயல்களுக்கு என்னைப் பொறுப்பாக்குவதற்காகவா?

முக்கியமான விஷயம் என்னவென்றால்,
மனிதர்கள் என்ற வகையில் நமக்கென்று
சுதந்திரமான (freewill) விருப்பத்தைக்
கொண்டிருக்கிறோம். பிரச்சினை
என்னவென்றால், நாம் நம்முடைய
சுதந்திரத்தை உணர்ந்தாலும், நம்முடைய
விருப்பத்தை முயற்சிசெய்து பார்க்க நாம்
தயாராக இல்லை.
மக்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும்
கேள்வி: அவர்களைக் கட்டுப்படுத்துவது
விதியா அல்லது சுய-விருப்பமா
என்பதுதான்.

> முக்கியமான விஷயம்
என்னவென்றால்,
மனிதர்கள் என்ற
வகையில் நமக்கென்று
சுதந்திரமான விருப்பத்தைக்
கொண்டிருக்கிறோம்.

நான் அவர்களுக்குச் சொல்லும் பதில்: “எந்த விதியும் உங்களைக் கட்டுப்படுத்தாது. உங்களுடைய விருப்பங்களைப் பூர்த்திசெய்து கொள்வதற்கான முழுச் சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது!” என்பதுதான்.

ப்ருஹதாரண்யக உபநிஷத், இதை அழகாக எடுத்துரைக்கிறது. உங்களுடைய எண்ணங்களைப்போல் விருப்பங்கள் அமைகின்றன. உங்களுடைய விருப்பங்களைப்போல் செயல்கள் நடைபெறுகின்றன. உங்களுடைய செயல்களைப் பொறுத்தே விதி அமைகிறது.

விதி என்பது வேறொன்றுமில்லை, நம்முடைய சுய-விருப்பங்களை நாம் எவ்வாறு செயல்படுத்துகிறோமோ அதன் இறுதி விளைவே.

விதி என்பது
வேறொன்றுமில்லை,
நம்முடைய
சுய-விருப்பங்களை
நாம் எவ்வாறு
செயல்படுத்துகிறோமோ
அதன் இறுதி விளைவே.

இப்போது பிரச்சினை என்னவென்றால்,
‘விருப்பம்’ என்ற ஒன்றே நமக்கு இல்லை.
காலையில், ஒரு விஷயத்தைச் செய்ய
வேண்டுமென்று விரும்புகிறோம், மதியம்,
அந்த விருப்பம் வேறொரு விஷயத்திற்கு
மாறிவிடும், இரவிற்குள் அது முற்றிலும்
வேறொன்றாக இருக்கும். அதனால்
இவ்வாறு நம்முடைய விருப்பம்
மாறிக்கொண்டே இருந்தால், எவ்வாறு
அதைச் செயலாக மாற்ற முடியும்?

“ஸ்வாமிஜி, மனத்தின்கண் உருவகப்படுத்திப் பார்த்தல் (Visualization), எங்களுடைய விருப்பங்களைச் சாத்தியப்படுத்த உதவும் என்று நீங்கள் சொன்னீர்கள். நாங்களும் அதை முயற்சிசெய்து பார்த்தோம்; ஒன்றும் பயனளிக்கவில்லை,” என்று சொல்வதுண்டு.

எதுவும் நடக்காது, ஏனென்றால், நீங்கள் உங்கள் சுய-முரண்பாட்டு எண்ணங்களால் நிறைந்துள்ளீர்கள். முதுகுவலியிலிருந்து விடுபட விரும்பினால், “இந்த முதுகுவலி போக வேண்டும்,” என்று தொடர்ந்து சொல்கிறோம், ஆனால், அப்படிச் சொல்வதால், அது ஒருபோதும் போகாது. நாம் ‘முதுகு வலி’ என்ற வார்த்தையைச் சொல்லும் ஒவ்வொரு முறையும், நம்முடைய மனம் ‘வலி’ என்ற கருத்தை இன்னும் ஆழமாகப் பதித்துக்கொள்கிறது.

நாம், வலியிலிருந்து விடுபட விரும்பினால், நாம் உடல் ஆரோக்கியத்தைப் பாவனை செய்ய வேண்டுமே தவிர, வலியைப் பற்றியோ, வலியிலிருந்து விடுபட வேண்டும் என்பதைப் பற்றியோ அல்ல! நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதாக பாவனை செய்ய வேண்டும்.

நாம் கிருஷ்ணரிடம் சரணாகதி அடையும்பொழுது, நம்முடைய சரணாகதி முழுமையானதாக இருக்க வேண்டும். அங்கு நமக்கும் அவருக்கும் இடையில் எதுவும் இருக்க முடியாது. பின்பு, அவர் நிச்சயமாக நமக்கு ஜீவன்முக்தி அளிப்பார். ஏனென்றால், நாம் கிருஷ்ணருடைய விழிப்புணர்வு நிலையில் இருப்பதால், நாம் ஏற்கெனவே ஜீவன்முக்தி அடைந்துவிட்டோம்.

இங்கே, 'தாங்கள் கிருஷ்ணரிடம்
சரணடையத் தேவையில்லை' என்று
நினைக்கும் மக்களைப் பற்றிக் கிருஷ்ணர்
பேசுகிறார். கிருஷ்ணரை அவர்களுக்குப்
போட்டியாக நினைக்கின்ற அளவுக்கு,
அவர்கள் முழுவதும் அஹங்காரத்தினால்
நிறைந்துள்ளார்கள். கிருஷ்ணர்,
'அவர்களைப் பொருள் சார்ந்த உலகில்
விழச் செய்கிறேன்' என்கிறார்.

> 'நீங்கள்' அல்லது
> 'நான்' - இந்த இரண்டில்
> எதைத் தேர்ந்தெடுப்பது
> என்பதை முடிவுசெய்யும்
> சுதந்திரத்தை நம்மிடம்
> ஒப்படைத்திருக்கிறார்
> கிருஷ்ணர்.

இந்தப் பொருள் சார்ந்த உலகத்தில், அவர்கள் தங்களுடைய புலன்களையும், புலனுகர் பொருள்களையும், தாங்கள் புலனின்பங்கள் என்று கருதுபவற்றையும் பின்தொடர்ந்து செல்லலாம், மரணம்வரை!

நாம் முன்பே சொன்னதுபோல், இது நம்முடைய முடிவுதான். இந்த விஷயத்தில் அவர் நமக்கு உதவிசெய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். ஏனென்றால், அவர், முடிவெடுக்கும் உரிமையை நம்மிடமே கொடுத்துள்ளார். 'நீங்கள்' அல்லது 'நான்' அதாவது தெய்விகம் அல்லது அசுரகுணம் - இந்த இரண்டில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவுசெய்யும் சுதந்திரத்தை நம்மிடம் ஒப்படைத்திருக்கிறார்.