ஏற்றுக்கொள்வது, நம்பிக்கை ஆகிவிடாது!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"நான் கிருஷ்ணர் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்," என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருப்பதால், எந்த அர்த்தமும் இல்லை. நம்பிக்கை என்பது வேறு. ஏற்றுக்கொள்கிறேன் என்பது வேறு. இது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவாதது. ஏற்றுக்கொள்வது, நம்பிக்கை ஆகிவிடாது.
ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஒரு போலியான நம்பிக்கையே. இது, வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது. பயத்தினால் உருவாக்கப்பட்டது. இது, நம்முள்ளிருந்து வளர்ந்த ஒன்று அல்ல; சமுதாயத்தால், மதத்தால், இனத்தால் மற்றும் இதுபோன்ற மற்றவற்றால் ஊன்றப்பட்ட ஒன்று.
அவர்கள், மக்களுக்குள் போலி நம்பிக்கைகளை உருவாக்குவதில் விருப்பமுடையவர்களாக இருக்கிறார்கள். ‘ஆம்’ என்ற சொல்பவர்கள் பணிவுடையவர்கள்; அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல. அவர்கள் முட்டாள்களாக இருப்பார்கள். அவர்களுடைய புத்திசாலித்தனம் ஒருபோதும் வளர்வதில்லை. இந்தச் சமுதாயமும், மக்கள் புத்திசாலிகளாக இருப்பதை விரும்புவதில்லை.
சமுதாயத்தால், பட்டறிவாளர்களைப் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால், உண்மையான புத்திசாலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாது. அது பேராசிரியர்களையும், பட்டதாரிகளையும், படித்த மக்களையும், அறிவுள்ளவர்களையும் தாங்கிக்கொள்ள முடியும்.
ஏற்றுக்கொள்ளுதல்
என்பது ஒரு போலியான
நம்பிக்கையே. இது,
வலுக்கட்டாயமாகத்
திணிக்கப்பட்டது.
பயத்தினால்
உருவாக்கப்பட்டது.
அவர்கள், பட்டறிவுள்ளவர்களே தவிர,
நுண்ணிய அறிவுபடைத்தவர்கள் அல்ல,
புத்திசாலிகள் அல்ல. ஏனென்றால்,
அவர்கள் புத்திசாலிகளாக இருந்தால்,
மதத்தின் பெயராலும், கலாசாரத்தின்
பெயராலும், நாகரிகத்தின் பெயராலும்,
பாரம்பரியத்தின் பெயராலும் நிகழும்
போலித்தனமான செயல்களுக்கு உடன்பட
மாட்டார்கள். அவர்கள் அவற்றுக்கெதிராகப்
புரட்சி செய்வார்கள்.
சமுதாயம், நம்பிக்கைகளை வளர்ப்பதில் சுயநல நோக்குடன் இருக்கிறது. இது
விஷச்சூழல் நிறைந்த ஒரு நிகழ்வு. இது நமது
புத்திசாலித்தனத்தையும் சுதந்திரத்தையும்
புரட்சித் தன்மையையும் அழிக்கிறது.
இது போலியானவர்களை, வெளி வேடம்
போடுபவர்களை உருவாக்குகிறது.
'இல்லை' என்று சொல்ல முடியாததால்,
'ஆம்' என்று சொல்லும் மனிதனின்
வார்த்தைகள் வலிமையற்றவை. ஒரு
மனிதன், முதலில் கற்றுக்கொள்ள
வேண்டியதே 'இல்லை' என்று
சொல்வதற்குத்தான். அப்படியென்றால்
மட்டுமே, அவன் சொல்லும் 'ஆம்'
என்பதற்கு அர்த்தம் இருக்கும்.
நம்பிக்கை என்பது ஏற்றுக்கொள்வதிலிருந்து வேறுபட்டது. நம்பிக்கை, இது முழுவதும் வேறுபட்ட ஒரு தோற்றம் அல்லது ஒரு நிகழ்வு. அது சமுதாயத்தைச் சார்ந்தது அல்ல; அது தனி மனிதனைச் சார்ந்தது. மற்றவர்களால் அதை நமக்குத் தர முடியாது. அது நம்முடைய சொந்த தேடல். அது, நாம் பிரபஞ்சத்தை நம்ப ஆரம்பிக்கும்போது, நம்முள் வளரும். அது பயத்தால் எழுவதல்ல, அது, அனுபவத்தாலும் அன்பாலும் மகிழ்ச்சியினாலும் எழுவது. நம்பிக்கை என்பது எல்லையில்லா சுதந்திரம், முடிவில்லா ஆனந்தம்.
நம்பிக்கை இருந்தால், நாம் உயர்நிலைகளுக்கு வளர்வோம். நாம் குருவின் மீதான அன்பிலும், கடவுளின் மீதான அன்பிலும் வளர்வோம்.
நம்மில் பலரும், நாம் பிரார்த்தனை செய்வதற்கும் வழிபடுவதற்கும் மட்டுமே இருப்பவராகக் கடவுளைப் பார்க்கிறோம். பிரார்த்தனையும் வழிபாடும் கடவுளை அடைவதற்கு முக்கியமான பாதைகளாக மாறிவிட்டன. கடவுளை ஒரு மூன்றாவது மனிதராகவே நினைக்கிறோம். அவரை 'நாமாக' உணர்வதில்லை. அவர் மனிதர் என்ற கருத்தை, நாம் கைவிடும் அக்கணமே, பிரார்த்தனை மறைகிறது, அதற்குப் பதிலாக தியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிறது.
பிரார்த்தனையில், நாம் கடவுளை வழிபடுகிறோம். தியானத்தில் நாம் கடவுளாக ஆகிறோம். வழிபாடு செய்வது எளிது. ஏனென்றால், அது வெளிமுகமானது. நாம் வெளிமுகமாக கவனம் செலுத்துவதற்கே பழக்கப்பட்டிருக்கிறோம்.
தியானம், உள்முகமாகச் செல்வது.
அதனால் பகுத்தறிவுக் கருத்துக்களைக்
கற்றவர்களுக்குத் தியானம் என்பது
மிகவும் கடினமானது. அதனால்தான்
மேலை நாடுகளில், தியானம் மதத்தின்
மையக் கருத்தாக இருக்கவில்லை.
கீழை நாட்டு குருமார்கள், தியானங்களை
அஸ்திவாரமாகக்கொண்டே தங்களுடைய
உபதேசங்களை நிறுவினார்கள்.
அவர்களுடைய உபதேசங்களுக்கு தியானங்களே அடிப்படை ஆதாரமாக விளங்கின. அவர்கள், தங்கள் சீடர்களுக்கு ‘உள்முகமாகத் திரும்பக்’ கற்பித்தார்கள். அவர்கள் சீடர்களுக்குக் ‘கடவுளாக இருக்க’க் கற்றுக்கொடுத்தார்கள்; வழிபாடு செய்வதற்குக் கற்றுத்தரவில்லை.
> கீழை நாட்டு குருமார்கள்,
> தங்கள் சீடர்களுக்கு
> ‘கடவுளாக இருக்க’
> கற்றுக்கொடுத்தார்கள்;
> வழிபாடு செய்வதற்குக்
> கற்றுத்தரவில்லை.
தியானம், நம்மைச் சரணாகதிக்கு அழைத்துச்செல்லும். தியானம் என்பது விழிப்புணர்வை உருவாக்குதலே. விழிப்புணர்வு என்பது நாம் பிரபஞ்ச த்தோடு இணைந்தவர்கள் என்ற அறிவு!
இது, ‘நான்’ என்பதற்குப் பதிலாக ‘நீங்கள்’ என்பதைப் பற்றியது. ‘நான்’ என்ற உணர்வு மறைந்து, ‘நீங்கள்’ என்ற உணர்வு மலரும்போது, நமது அடையாளமாக நாம் கருதிக்கொண்டிருக்கும் ‘நான்’ என்பதை அது கரைத்துவிடும். இதுவே சரணாகதியின் அஸ்திவாரம்.
இதைத்தான் கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தில் பேசுகிறார். ‘நான்’ என்பதிலிருந்து ‘நீங்கள்’ என்பதற்குச் செல்லும் துணிவே, ஸத்யத்தை நம்புவதற்கும், அன்பு செய்வதற்கும், சரணாகதி செய்வதற்குமான துணிவு எனப்படுகிறது.
எப்போது அந்தத் துணிவு நிகழ்கின்றதோ, அப்போது அவரைத் தவிர வேறொன்றும் அங்கு இருக்காது. நாம் கிருஷ்ணராகிவிடுவோம்.
நீங்கள் பிரபஞ்சத்தோடு ஒன்றிவிடும்போது, கிருஷ்ணருடன் ஒன்றாகும்போது, நாம் வேறு எதையும் பார்க்கத் தேவையில்லை. நாம் நித்யானந்தத்தை அடைந்துவிடுவோம்.