KAILASA Library/பகவத்கீதை/அன்பும் தியானமும் நம்மைக் கடவுளாக்கும்Sign in
பகவத்கீதை

அன்பும் தியானமும் நம்மைக் கடவுளாக்கும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

கேள்வி: ஸ்வாமிஜி, பல மதங்கள், உணர்வுகளில் உயர்வானதாக அன்பைக் குறிப்பிடுகின்றன. அன்பும், சரணாகதியும் ஒன்றா?

ஆம், அன்பு உண்மையிலேயே மிக உயர்ந்தது. இருந்தபோதிலும், நம்மில் பலருக்கு அன்பு என்றால் என்ன என்பது தெரிவதில்லை. நாம் அன்பு என்று நினைப்பது, ஒன்று காமமாகவோ அல்லது கவனத்தை ஈர்க்கும் ஒரு தந்திரமான கருவியாகவோ இருக்கும். பலருக்கு, அன்பு ஒரு வியாபாரமே!

அன்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கும்வரை, அது உயர்ந்ததாக இருக்க முடியாது. மனிதர்களுக்கு, நிபந்தனைகளற்ற அன்பு செய்தல் என்பது பெரும்பாலும் சாத்தியமில்லை. நிபந்தனைகளற்றதாக இருக்க வேண்டுமானால், நாம் காட்டும் அன்பில் எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது.

ஒரு தாய்கூட, எதிர்பார்ப்புகளின் அடிப்படையில்தான், தம் குழந்தையிடம் அன்பு காட்டுகிறார். ஒருவேளை கைக்குழந்தையாக இருக்கும்பொழுது வேண்டுமானால், அந்தக் குழந்தையிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருக்கலாம். அப்போது, குழந்தையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்ச்சி மட்டுமே இருக்கிறது. ஆனால், குழந்தை வளர வளர, அதன் வளர்ப்போடு ஒரு நிபந்தனையும் பிணைக்கப்பட்டே இருக்கிறது.

பல பெற்றோர்கள், தங்கள்
குழந்தைகள் தங்களுடைய பேச்சைக்
கேட்பதில்லை என்றும், அவர்கள் எதை
விரும்புகிறார்களோ, அதைத்தான்
செய்கிறார்கள் என்றும் புகார்
சொல்கிறார்கள்.

அவர்கள், தங்கள் குழந்தைகளை
நேசிப்பதாகவும், அவர்கள் தங்களுடைய
வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைப்
பார்க்கும்போது, அதைத் தங்களால்
தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றும்
சொல்கிறார்கள்.

> அன்பு நிபந்தனைகளுக்கு
> உட்பட்டு இருக்கும்வரை,
> அது உயர்ந்ததாக இருக்க
> முடியாது.

நான் அவர்களிடம், குழந்தைகள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்கிறார்கள் என்று கேட்டால், அவர்கள் இரண்டு விதமான பதில்களைச் சொல்வார்கள்.

ஒன்று, தங்களுடைய மகனோ அல்லது மகளோ, அவர்கள் நேசிக்கும் நபரையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அது தமக்கு ஏற்புடையதாக இல்லையென்றும் சொல்வார்கள். அல்லது அவர்கள் சிறிது காலம் வேலைசெய்துவிட்டு, பிறகு திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அது தமக்கு பயமளிப்பதாக இருக்கிறதென்றும் சொல்வார்கள்.

| அன்புதான் எல்லா உணர்ச்சிகளையும் ஆளவல்ல அரசன்! | யார் திருமணம் செய்துகொள்ளப் போவது? தாய், தந்தையரா? இல்லை பிள்ளைகளா? அவர்கள் முடிவெடுத்தபடி திருமணம் செய்து கொண்டாலோ அல்லது சிறிது காலம் வேலைக்குச் சென்றாலோ அவர்கள் வாழ்க்கையும் எதிர்காலமும் எப்படி, ஏன் சீரழிந்து போகும்? இவை எல்லாமே, பிள்ளைகள் தங்கள் விருப்பப்படிதான் நடந்துகொள்ள வேண்டுமென்ற பெற்றோர்களின் எதிர்பார்ப்புகளே. ஏன் அப்படி எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்? பிள்ளைகளை இந்தப் பூமிக்கு |

அவர்கள்தான் கொண்டுவந்தார்கள் என்பதற்காக, பிள்ளைகள்மேல் பெற்றோர்கள் உரிமை கொண்டாடக் கூடாது. இந்த பந்தமும் எதிர்பார்ப்புகளும், நிபந்தனையற்ற அன்பை வெளிப்படுத்த நம்மை அனுமதிப்பதில்லை.

அன்புதான் எல்லா உணர்ச்சிகளையும் ஆளவல்ல அரசன்!

இரண்டு விஷயங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்: தியானம் மற்றும் அன்பு. சிலருக்கு, அன்பே முக்கியமான பிரதான பாதை; தியானம், ஒரு உறுதுணைப்பாதை. மற்றவர்களுக்கு, தியானமே முக்கியத்து வமிக்க நுட்பம்; அன்பு, ஒரு உறுதுணை நுட்பம். இரண்டுமே தேவையானதுதான். கேள்வி, முக்கியத்துவத்தைப் பற்றியது.

உள்முகப் பயணம், உங்களை அன்பானவராக்கும்

நீங்கள் அன்பிற்கு முக்கியத்துவம் அளிக்க நினைத்தால், எல்லாவற்றையும் அன்பு செய்யுங்கள், மொத்த உலகத்தையும் நேசியுங்கள். உங்கள் அன்பு, பிளவற்றதாகவும் வேறுபாட்டுணர்ச்சி அற்றதாகவும் இருக்கட்டும். சாதுக்கள், பாவிகள் என வேறுபடுத்தாமல் யாராகயிருந்தாலும், ஒரேமாதிரி கதகதப்பைக் கொடுக்கும் சூரியனைப்போல் அது இருக்கட்டும்.

அன்பு, ஒளிரும் ஒரு நிகழ்வு. ஆனால், அதைத் தெரிந்துகொள்வதற்கு, காண்பதற்கு, உணர்வதற்கு முற்றிலும் வித்தியாசமான கண்கள் வேண்டும். சாதாரணக் கண்களால் அதைக் காண இயலாது.

நம் கண்களால் பொருளைக் காணமுடியுமே
தவிர, அதன் சக்தியை அல்ல. அவை,
வெளி எல்லைக்கோடுகளையும்
மேலோட்டமானவற்றையும் மட்டுமே
பார்க்கக்கூடியவை. அவற்றிற்கு
மையத்தையும் ஆழத்தையும் பார்க்கும்
சக்தி கிடையாது.

அன்பு,
ஒளிரும் ஒரு நிகழ்வு.
ஆனால், அதைக்
காண்பதற்கு
முற்றிலும் வித்தியாசமான
கண்கள் வேண்டும்.

அன்பு என்பது உங்கள் மையத்திலிருந்து உருவாகும் ஒரு உணர்வு. நீங்கள், உள்முகமாகப் பயணம் செய்யும்போது, மிகவும் அன்பானவராக ஆகி விடுகிறீர்கள். உண்மையில், அதுவே ஒருவர் உள்முகமாகச் செல்கிறாரா, இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கான அளவுகோல்.

ஒருவர் மற்றவர்களிடமும், தம்மிடமும் மிகுந்த அன்பானவராக மாற,மாற, அவர் இன்னும் ஆழமாக உள் செல்கிறார். அவர் ஸத்யத்தை நெருங்குகிறார், பிரபஞ்ச பேரியக்கத்தின் தெய்விக சக்தியால் வண்ணம் தீட்டப்படுகிறார்.

அன்பு, அதன் உச்சத்திலும், தூய்மையிலும் இருக்கும்போது, அது கருணையாக வெளிப்படும். கருணை மனிதனின் வெளிப்பாடு அல்ல. அது தெய்விகத்தின் வெளிப்பாடு.

அன்பு, அதன் இறுதி உச்சத்தில்,
இறுதி ஆழத்தில், அணுச்சிதறல்போல்
வெடிக்கிறது. அவர், ஆதி அந்தமற்ற
தூய்மையான ஒளியாகிறார். இந்த இறுதி
கணத்தைத்தான் ஞானமடைதல் என்கிறோம்.

அதுவே இயல்புமாற்றம் (Transmutation), தோற்றமாற்றம் (Transfiguration), உணர்வுமாற்றம் (Transformation). முழுமையாகத் தோற்றம், இயல்பு, பண்பு ஆகியவற்றில் மாற்றம் அடைவது. அப்போது ஒரு புதிய ஆன்மா பிறக்கிறது : அது 'காலத்தைச்' சார்ந்தது அல்ல; அது, என்றும் 'நிலைத்த தன்மை'யைச் சார்ந்தது. மனம், காலம் மற்றும் இடத்தைப் பற்றி விழிப்புணர்வு உடையது. இதயத்திற்கு, காலம் மற்றும் இடத்தைப் பற்றிய விழிப்பு கிடையாது. அன்பு, இதயத்தில் மையங்கொண்டுள்ளது.

இதயத்தைத் தேடுங்கள், அதற்குள் ஆழமாகச் செல்லுங்கள், அதற்காக எதையும் எந்த ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். ஏனென்றால், அதைவிட விலையுயர்ந்தது எதுவும் இல்லை.

அதற்காக, உங்கள் வாழ்க்கையையே இழந்தாலும்கூட, நீங்கள் அன்பின் மகத்துவம் மிக்க தருணங்களை அடைந்திருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை, முழுமைத்துவத்தை அறிந்திருக்கிறது. நீங்கள் வாழ்க்கையை வீணடிக்கவில்லை. நீங்கள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறீர்கள். அன்பான தருணம், அன்பற்ற ஆயிரக்கணக்கான ஜென்மங்களை விட மிகவும் மதிப்புவாய்ந்தது.

அன்பின் சேவகனாகுங்கள். பின்பு நீங்கள் மனிதகுலத்திற்குத் தலைவராக மாறுவீர்கள். அவர், ஒரு சேவகனாகத் தொடங்குகிறார். அப்படியிருந்தாலும், அது முடிவில் அவரைத் தலைவனாக ஆக்குகிறது.

ஆனால், வெளியுலக வாழ்க்கையில், நீங்கள் எப்பொழுதும் ஒரு தலைவனாக ஆரம்பித்து, ஒரு சேவகனாகவே முடிவடைகிறீர்கள். இதுவே வெளியுலக வாழ்க்கையின் நியதி. உள்ளுலக வாழ்க்கையில், இந்த நியதி முற்றிலும் மாறுபட்டது. நீங்கள் சேவகர்களாகத் தொடங்கி, தலைவர்களாக முடிவடைய முடியும். நீங்கள் அன்பிற்குச் சரணடைகிறீர்கள். உங்கள் சரணாகதியும் அன்பும், நிச்சயமாக, உங்களை உலகையே வெல்லச் செய்யும்.

சரணாகதி, உங்கள் தோல்வியைக் கேட்கிறது!

புத்தர் சொல்கிறார்: வெளியுலகைப் பொறுத்தமட்டில், அனைத்துமே இனிமையாகத் தொடங்கி, கசப்பில் முடிவடைகின்றன; ஆனால், உள்ளுலகில், அனைத்துமே ஆரம்பத்தில் கசப்பானதாகவும், இறுதியில் இனிமையானதாகவும் இருக்கின்றன. 'இறுதி' மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்தது; 'ஆரம்பம்' உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.

உங்களைச் சுற்றி இருப்பவர்களை நேசிக்கக் கற்றுக்கொண்டால் மட்டுமே, நீங்கள் கடவுளை நேசிக்க முடியும். உங்கள் வாழ்க்கைத்துணைவரையும், உங்கள் சகோதரரையும், உங்கள் அண்டை வீட்டாரையும் வெறுத்துவிட்டு, கடவுளிடம் மட்டும் உங்களால் அன்பு செலுத்த முடியாது. இது சாத்தியமில்லை.

நீங்கள், உங்களைச் சுற்றியிருப்பவர்களை நேசிக்க ஆரம்பிக்கும்போது, உங்களையே நீங்கள் அதிகமாக நேசிக்க ஆரம்பிப்பீர்கள். புதுமையாக, உங்களைப் பற்றி நீங்கள் குறைவான நேரமே நினைக்கத் தொடங்குவீர்கள். உங்களின் தோல்வியில், மற்றவர்களை வெற்றிகொள்வீர்கள்.

இதைத்தான் சரணாகதி கேட்கிறது; அது உங்கள் தோல்வியைக் கேட்கிறது. நான் மீண்டும் சொல்கிறேன்: சரணாகதி செய்யுங்கள். தன்னைத் துறத்தல் அல்லது ஸந்நியாஸம் என்பது ஒரு தோல்வி, அது அஹங்காரத்தின் தோல்வி. அஹங்காரம் கரைந்த, அந்தக் கணமே கடவுள் உணரப்படுவார்.

> அன்பான
> தருணம், அன்பற்ற
> ஆயிரக்கணக்கான
> ஜென்மங்களை விட மிகவும்
> மதிப்புவாய்ந்தது.

சரணாகதி என்பது தெய்Victoryகத்தின்
கொள்கையைத் தேடும் ஒரு தேடல்.
அதைக் கடவுள், ஸத்யம், விடுதலை அல்லது
நிர்வாண் என்று எப்படி அழைத்தாலும்,
அவை எல்லாமும் ஒரே பொருளைத்தான்
குறிக்கின்றன. இந்தத் தேடல், நாம்
வாழ்க்கையில் இழந்த ஏதோ ஒன்றிற்கானது!

நாம் உயிருடன் இருக்கிறோம். ஆனால், வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணராமல் இருக்கிறோம். நாம் வாழ்கிறோம், ஆனால், நாம் யார் என்ற உண்மையை முழுதும் மறந்திருக்கிறோம். இங்கு இருப்புத்தன்மை இருக்கிறது, ஆனால், விழிப்புணர்வு இல்லை.

இருப்புத்தன்மை தன்னைத்தானே அறிந்துகொள்ளாதவரை, வாழ்க்கை வெறுமையாகவும், முழுமையடையாமலும் இருக்கும். இந்தத் தேடல் விழிப்புணர்விற்கானது. விழிப்புணர்வு என்பது ஒரு தெய்விகக் கொள்கை, அது உங்கள் வாழ்க்கையை ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து, விழிப்புணர்வுள்ள ஆனந்த வாழ்விற்கு உணர்வுமாற்றமடையச் செய்ய முடியும்.

இந்தத் தேடல், வெளி உலகில் நடத்தப்படுவது அல்ல. இது உள் உலகில் நடத்தப்படுவது. இந்த ஸத்யம் கண்களை மூடி, ஒருவர் தனக்குள்ளேயே காண வேண்டிய ஒன்று. அது ஏற்கெனவே இங்குதான் இருக்கிறது நாம் நமக்குள்ளேயே குதிக்க வேண்டும்.

தியானம் என்பது நமக்குள் நாமே குதிக்கும் ஒரு கலை! சரணாகதி என்பது நமக்குள் மூழ்குவதற்கான துணிவு!

ஒருவர் புரிந்துகொள்ள முடியாத ஒன்றிற்குள் போகும்போது, ஆரம்பத்தில் அது பயத்தைத் தருவதாக இருக்கும். ஆனால், அது ஆரம்பத்தில் மட்டுமே இருக்கும். நீங்கள் ஆழமூழ்குவதில் மேலும் மேலும் திறமைசாலியாகும்பொழுது, வாழ்க்கை, பேரழகும் பேரானந்தமும் மிக்க துணிவுமிக்க சாகசமாக மாறிவிடுகிறது.

Hands playing a flute