KAILASA Library/பகவத்கீதை/பொன்னும் பெண்ணும்Sign in
பகவத்கீதை

பொன்னும் பெண்ணும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Krishna
Peacock feather

16.21 காமம், கோபம் மற்றும் பேராசை இம்மூன்றும் நரகத்திற்கு அழைத்துச்செல்லும் வாயில்கள். அவை ஜீவனைத் தாழ்ந்த நிலையில் ஆழ்த்திவிடும் தன்மையுடையனவாதலால், இந்த மூன்றையும் கைவிட வேண்டும்.

16.22 குந்தி மைந்தா, இந்த மூன்று நரக வாயில்களிலிருந்து தப்பியவன், தன் ஜீவனுக்கு பலன் தரும் விதத்தில் நடந்து, மிக உயர்ந்த நிலையை அடைகிறான்.

16.23 ஆனால், யாரொருவன் வேத சாரங்களை உள்வாங்க மறுத்து, தன்னுடைய இயல்புணர்ச்சிகளுக்கேற்றவாறு செயல்படுகிறானோ, அவன் பூர்ணத்வத்தையும் ஆனந்தத்தையும் உயர் நிலையையும் அடைவதில்லை.

16.24 ஒருவர், வேதங்களின் விதிமுறைப்படி எது கடமை, கடமையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதங்களின் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்புரிய வேண்டும்.

உணர்ச்சிகளைச் சரியானமுறையில் கையாள்வது நேர்மறையான சக்தியைத்தரும்

கிருஷ்ணர் இந்த அத்தியாயத்தை இந்த அறிவுறுத்தலோடு முடிக்கிறார்: 'கோபத்தையும் பேராசையையும் காமத்தையும் உதிர்த்துவிடு, நீ காக்கப்படுவாய்.'

இவற்றை அவர், 'நரகத்தின் வாயில்' என்கிறார். இவையே, 'அடைபட்ட மூலாதார சக்கரத்தின் பண்புகள். இந்தக் குணங்களே 'நான்', 'எனது' என்று நம்மைப் பந்தப்படுத்துகின்றன. இவையே இவ்வுலக வாழ்க்கைக்குத் தேவையான முக்கியமான பண்புகள் என்று தவறாகக் கருதுகிறோம். இதைவிடத் தவறான புரிதல் வேறொன்றும் இருக்க முடியாது.

'நரகத்தின் வாயில்கள்' என்று கிருஷ்ணர் குறிப்பிடும் கோபத்திலும் காமத்திலும் பேராசையிலும் கட்டுண்டிருக்கும்வரை, நாம் அடிமைத்தனத்திலும் துக்கத்திலும்தான் இருப்போம். நாம் இறந்த பிறகுதான் நரகத்திற்குச் செல்வோம் என்று இல்லை. நாம் ஒவ்வொரு நாளும் அதில்தான் வாழ்ந்து துன்பப்படுவோம்.

காம, க்ரோத மற்றும் லோப: - காமத்தையும் கோபத்தையும் பேராசையையும் கைவிடும்பொழுது, நாம் ஜீவன்முக்தராகிறோம்.

இராமகிருஷ்ணர், காஞ்சன மற்றும் காமினி - பொன்னாசையையும், பெண்ணாசையையும் விட்டுவிடுங்கள். பின்பு நீங்கள் சுதந்திரம் அடைவீர்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். பொன்னாசை, பெண்ணாசை - இந்த இரண்டு ஆசைகளே, மற்றெந்த ஆசைகளைக்காட்டிலும், நம்முடைய எல்லாத் துன்பங்களுக்கும் காரணங்களாக இருக்கின்றன.

குரோதம் எனப்படும் கோபம், நம்முடைய
துக்கத்திலிருந்து எழுகிறது. நாம்
ஏமாற்றப்பட்டதாக உணரும்போது துக்கம்
பொங்குகிறது. அந்தத் துக்கத்திலிருந்து

காமத்தையும் கோபத்தையும் பேராசையையும் கைவிடும்பொழுது, நாம் ஜீவன்முக்தராகிறோம்.

கோபம் உருவாகிறது. இந்தச் சுழற்சி
தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இம்மூன்றும் இணையும்போது மோஹத்தை -
தவறான நம்பிக்கையை உருவாக்குகின்றன.

காஞ்சன -பொன்னைப் பற்றிய நம்முடைய
உணர்ச்சிகளும், காமினி - பெண்ணைப்
பற்றிய உணர்ச்சிகளும் உண்மை அல்ல.
ஏனென்றால், இவை நிலையற்றவை;
ஆகையால் அவற்றால் நிலையான
சந்தோஷத்தை அளிக்க முடியாது.

நாம் சிறிது நேரம் இன்பமாக உணரலாம். அதன்பிறகு, அதை நாம் சாதாரணமாக, எடுத்துக்கொள்வோம். நான் முன் சொன்ன கதையில் வரும் அரசரைப்போலத்தான் நாமும் இருப்போம். அவரை மனச்சோர்விலிருந்து விடுவிக்க, அவருடைய பொக்கிஷங்கள் முழுவதையும் கொள்ளையடிக்க வேண்டியிருந்தது!

இந்த உணர்ச்சிகளை எப்படிக் கையாள வேண்டுமென்பதைப் பற்றிய தியான நுட்பங்கள் மிக விரிவாக நம்முடைய ஆனந்த ஸ்புரணதியான அனு பவ முகாமில் கற்றுத்தரப்படுகின்றன. இந்த உணர்ச்சிகள் எங்கிருந்து உருவாகின்றன, அவற்றை எவ்வாறு ஒழுங்குப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி விளக்குகிறோம். மேலும் இந்த உணர்ச்சிகளின் தீங்கு விளைவிக்கும் வெளிப்பாட்டிலிருந்து நம்மை விடுபடுத்தும் தியான நுட்பங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்.

ஒரு கட்டத்தில், இந்த உணர்ச்சிகளே நம்முடைய ஆசைகளாக இருக்கின்றன. கோபம், பேராசை மற்றும் காமம் இம்மூன்றும் ஆசைகளுடன் தொடர்புடைய உணர்ச்சி வெளிப்பாடுகளே.

ஆசைகளும் ஒரு சக்தியே!

கோபம், செயல்களை நடத்திமுடித்துக் கொள்வதற்கான உந்து சக்தி. அது, நேர்மறையான பலன்களையும் சாதிக்கக்கூடியது.

காமம், இதுவே இனப் பெருக்கத்திற்கு வழிகோலுகிறது. இது, உயிரினங்கள் தொடர்ந்து இப்பூவுலகில் நிலைத்திருக்க அவசியமாகிறது. நமக்கான அடிப்படைத் தேவைகளையும் மீறி அளவுக்கதிகமாக ஆசைப்படுவதே பேராசை எனப்படுகிறது.

எப்படியிருந்தபோதிலும், கிருஷ்ணர் இந்த
உணர்ச்சிகளின் வெளிப்பாடே, 'மனம்
நிறைவாக' இருக்கக் காரணம் என்று
குறிப்பிடுகிறார்.

அவர், 'அடிப்படை உணர்ச்சிகளின் திருப்தி'யைக் குறிப்பிடுகிறார். உணர்ச்சி கள், நோக்கங்களுடன் தொடர்புடையவை. 'நான்' என்ற நோக்கத்துடன், மனப்பாங்குடன் இந்த உணர்ச்சிகள் வெளிப்படுத்தப்படும்வரை, அவை அசு ரத் தன்மை கொண்ட உணர்ச்சிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. அங்கே ஜீவன்முக்தியை அளிக்கவல்ல பண்புகள் இருப்பதில்லை.

மனிதன், விலங்கிலிருந்து பிறந்தவன் - ஆனால், விலங்கைப்போல வாழப் பிறந்தவன் அல்ல.

காமத்தை, கருணையாகவும் கனிவாகவும் உணர்வுமாற்றமடையச் செய்யலாம்!

காமத்தைச் சுயநலமில்லாமலும் பற்றில்லாமலும் வெளிப்படுத்தும் போது, அதை உணர்வுமாற்றம் அடையச்செய்ய முடியும். அதன்பின்பு, காமம் முழுமையாகக் காணாமல் போகும். கருணையும் கனிவும் அந்த இடத்தில் இருக்கும்.

அனைத்துப் பெண்மணிகளையும், தம்முடைய மனைவி உட்பட, தாயாகக் கருதினார், இராமகிருஷ்ண பரமஹம்ஸர். அந்தளவுக்கு அவருடைய தூய்மையும் பக்தியும் சிறந்திருந்தன. உண்மையிலேயே, அதுபோன்ற மக்கள் விதிவிலக்கானவர்கள்.

மக்கள் என்னிடம் கேட்பதுண்டு, "மனிதன் விலங்குகளிலிருந்து வெளிப்பட்டவன். விலங்குகள் இயற்கையாகவே, பல தாரச் சேர்க்கை தன்மை (Polygamous) (பலருடன் உடலுறவு கொள்வது) கொண்டவை. எவ்வாறு மனிதனை மட்டும் ஒரு தார (Monogamous) வாழ்க்கையில் இருக்க வேண்டுமென எதிர்பார்க்க முடியும்?

தயவுசெய்து நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். விலங்குகள், இனவிருத்திக்காக மட்டுமே துணையைத்தேடும்; பொழுதுபோக்கிற்காக அல்ல. ஆனால் மனிதர்கள், பொழுதுபோக்கிற்காகவே உறவுகொள்கிறார்கள். இதனால்தான் அளவுக்கதிகமான பாலியல் படங்கள் புழக்கத்தில் இருக்கின்றன.

விலங்குகள் இனப்பெருக்கத்திற்காகவும், தங்கள் இனத்தை வாழவைப்பதற்காகவும் மட்டுமே உறவுகொள்கின்றன. மனிதர்களைப் போலல்லாமல், அவை குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இணையும். அதனால் அவை ஒன்றுடன் மட்டும் சேர்வதோ, பலவற்றுடன் சேர்வதோ, எந்தவித வேறுபாட்டையும் ஏற்படுத்தப்போவதில்லை.

விலங்குகளின் காமம் தூய்மையானது. அதில் கற்பனைகள் கிடையாது. எந்த ஒரு விலங்கும் தன் துணையுடன் உறவுகொள்ளும்போது, மற்றொரு துணையைப் பற்றிய கற்பனையோடு இருப்பதில்லை.

மனித குலம்தான், காமத்தைப் பற்றிய கற்பனைகளுக்கு இடங்கொடுக்கிறது. அவர்களுடைய காமம் தூய்மையற்றது. அது சீரழிக்கப்பட்டது. ஏனென்றால், காமம் என்ன நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அதற்காகப் பயன்படுத்தப்படவில்லை. அது இனப்பெருக்கத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. எத்தனை தம்பதியர்கள், தங்களுடைய துணையுடன் வேறெந்தவிதமான கற்பனைகளும் இல்லாமல் உறவுகொள்கின்றனர்?

சிவசூத்திரத்தில், சிவன் தேவியிடம்,
“தம்பதியினர் தனிமையில் இருக்கும்போது,
அவர்கள் நான்கு பேராக இருக்கிறார்கள் -
கணவன், மனைவி, கணவனின் கற்பனை
மனைவி, மனைவியின் கற்பனைக்
கணவன் - என அங்கே நான்கு பேராக
இருக்கிறார்கள்! இது உறவுமுறையல்ல,
ஒரு போதை.

பலருடன் சேர்க்கை செய்யும்
தூண்டுதலிலிருந்து, ஒரு துணையுடன்
வாழும் புத்திசாலித்தனத்திற்குத்
தன்னை உயர்த்திக்கொள்வதற்கான

விலங்குகளைப்போல்
வாழ்வது, ஒரு மனிதர்,
விரும்பித் தேர்ந்தெடுப்பதற்கு
உரியதான ஒரு
வாழ்க்கைமுறை அல்ல.

விழிப்புணர்வை மனிதன் பெற்றிருக்கிறான். இதுவே சமுதாயத்தின் மொத்த விதிமுறைகளுக்கான அடிப்படையாக இருக்கிறது. இதை நாம் நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு நிர்பந்தமாகக்கூட நினைக்கலாம். ஆனால் இது, ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்குத் தீங்கிழைப்பதைத் தடுக்கும் ஒரு ஒழுங்கு முறை. பின்பு, 'திருமணம்' என்ற ஒரு அமைப்புக்கு என்ன அவசியம் இருக்கிறது? உங்களால் முடிந்தால், நீங்கள் விலங்குகளைப்போல் உங்களுக்கு விருப்பமானதைச் செய்து வாழலாம்.

நம்மால் அப்படி வாழ முடியாது. நம்முடைய அறிவு நம்மை அனுமதிக்காது. நம்முடைய மனம் ஆயிரக்கணக்கான கற்பனைகளை

தனிமை என்பது மனிதனின்
உண்மையான சுபாவம்.
அப்பொழுதுதான்
நாம், 'நான்' என்ற
மனப்பாங்கிலிருந்து
'நீங்கள்' என்ற
மனப்பாங்கிற்கு நகர்வோம்.

உண்டாக்கும். அது முதலில் ஆசையை
ஏற்படுத்தி, பின்பு குற்றவுணர்ச்சி
யை ஏற்படுத்தும். அதனால் நாம்
ஆசையில் இருந்து குற்றவுணர்ச்சிக்கும்,
குற்றவுணர்ச்சியிலிருந்து கோபத்திற்கும்,
கோபத்திலிருந்து மன இறுக்கத்திற்கும்
ஊசலாடுகிறோம். இது ஒரு ஆபத்தான
விஷச்சுழலாகிவிடும்.

விலங்குகளைப்போல் வாழ்வது, ஒரு மனிதர், விரும்பித் தேர்ந்தெடுப்பதற்கு ரியதான ஒரு வாழ்க்கைமுறை அல்ல. 'உயர்தல்' என்பதே இயற்கையின் நியதி, வீழ்தல் அல்ல. நாம் விழிப்புணர்ச்சியில் உயர வேண்டுமே தவிர, அறியாமையில் கீழே இறங்கிவிடக்கூடாது.

நாம் விழிப்புணர்வோடு இருந்தோமானால், 'பல தாரச் சேர்க்கை'த் தூண்டுதலில் இருந்து 'ஒரு தாரச் சேர்க்கை' என்ற புத்திசாலித்தனத்திற்கு நகருவோம்.

உண்மையில் நாம், நிஜமான புத்திசாலித்தனம் உடையவராக இருந்தால், நம்முடைய உள்ளுணர்வு, நம்மை 'ஒரு மணச் சேர்க்கை'யையும் தாண்டி, 'தனிமை'க்கு எடுத்துச் செல்லும்.

தனிமை என்றால் தியானம் செய்வதற்காகக் காட்டை நோக்கி ஓடிக்கொண்டிருப்பது அல்ல; இல்லறத்தின் இடையிலும், நாம் தனிமையாக இருக்கலாம். தனிமையில் இருத்தல் என்றால் நம்முடைய உள்மையத்தை நோக்கி நகர்தல். தனிமை என்பது மனிதனின் உண்மையான சுபாவம். அப்பொழுதுதான் நாம், ‘நான்’ என்ற மனப்பாங்கிலிருந்து ‘நீங்கள்’ என்ற மனப்பாங்கிற்கு நகர்வோம்.

ஆசை என்ற நரகத்தின் வாயிலைத் தொடாமல் இருப்போம்

ஆசை என்னும் பிரம்மாண்டமான வண்ணத் தொகுப்பில் ஒரு வண்ணமே, ஒரு அம்சமே காமம். முடிவில்லா ஆசையே பேராசை. ஆசை முழுமையாக நிறைவேறிடும்பொழுது, அது நம்மை விட்டு அகன்றுவிடும்.

கர்மா என்றால் நிறைவேறாத ஆசைகள்,
அவற்றைச் செயலாக்கும்படி நம்மைத்
தூண்டுவதே அதன் இயல்பு. நம்முடைய
அனைத்து ஆசைகளையும் நம்மால்
பூர்த்திசெய்ய முடியாது. ஏனென்றால்,
இந்த ஆசைகளுள் பல உண்மையாகவே
நம்முடையவை இல்லை. நாம் இந்த
ஆசைகளை மற்றவர்களிடமிருந்து கடன்
வாங்குகிறோம்.

பெரிய வீடு, நவீன கார், இளம் மனைவி போன்றவை நமக்குத் தேவைப்படுகின்றன. ஏனென்றால், அவை நம்முடைய நண்பரிடமோ, அண்டை வீட்டுக்காரரிடமோ, உறவினரிடமோ இருக்கிறது என்பதற்காகவே நமக்கும் தேவைப்படுகின்றன.

நாம் இவற்றையெல்லாம் அடைந்தாலும் கூட, அந்தத் திருப்தி தற்காலிகமானதே. ஏனென்றால், அதைவிட பெரிய வீடு, நல்ல கார், அழகான மனைவி கொண்ட வேறொரு நண்பரையோ, அண்டை வீட்டுக்காரரையோ அல்லது உறவினரையோ விரைவில் சந்திப்போம். அதனால் இந்த விளையாட்டு போய்க்கொண்டே இருக்கும்.

இதற்கு ஒரு முடிவே இல்லை. திருப்தி என்பதே ஒருபோதும் இருக்காது. ஒவ்வொரு ஆசையும் துன்பத்திற்கான விதை. அதனால்தான் கிருஷ்ணர் இதை, நரகத்தின் வாயில் என்று அழைக்கிறார். ஆனால், இந்த

ஆசைகளிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

இதைத்தான் நாங்கள், நித்யானந்த
ஸ்பூspaceரண தியான அனுபவ முகாமில்
கற்றுத்தருகிறோம். நாம் இந்த உலகில்
பிறக்கும்போது எடுத்து வந்த நம்முடைய
உண்மையான ஆசைகளை, ப்ராரப்த கர்மாவை
அடையாளம் காண உதவிசெய்கிறோம்.

இவை, கடன்வாங்கப்பட்ட ஆசைகள் அல்ல. நம்முடைய உண்மையான தேவைகள். நமக்கு அவற்றைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கும் சக்தி இருக்கிறது. நம்முடைய கர்மா கரைந்துவிடுகிறது.

இந்தத் தியான அனுபவ முகாம் நம்மை எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுவிக்கிறது. பங்கேற்பாளர்கள், தங்களால் யாரையும் வெறுக்க முடியவில்லை என்கிறார்கள். 'நான்' என்பது 'நீங்கள்' ஆக, எந்தவித முயற்சியும் இல்லாமல், தானே மலர்கிறது.

இந்த நிலையில், நாம் கோபத்தையும் விட்டுவிடுவோம். கோபமும் குற்றவுணர்ச்சியும் ஆசைகளின் உபவிளைவுகள். நம்மால் எதையாவது அடைய முடியாதபோது, அது நம்மைக் கோபப்படுத்துகிறது. கோபம் குற்றவுணர்ச்சியை உண்டாக்குகிறது. ஒருவரை நோக்கிக் கோபப்படுவது எந்தப் பலனையும் தராது.

மற்றவரை நோக்கி வெளிப்படுத்தப்படும் எதிர்மறைகள், நம்மிடமே திரும்ப வரும். அவை நம்முடைய சக்தியைக் குறைத்துவிடும். கோபமும் குற்றவுணர்ச்சியும்கூட நம்மால் ஏதோ ஒன்றைச் செய்ய இயலாதபோது ஏற்படும் ஒரு வெளிப்பாடே. இது, ஒருவருடைய பலவீனத்திலிருந்து பிறக்கும் ஒரு சுயநல உணர்ச்சி.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல் உதவாது. உண்மையில் அது புற்றுநோய் போன்ற தீராத நோய்களுக்கு வழிவகுக்கும். நம் கோப உணர்ச்சியை, அந்த மனிதரை நோக்கி அல்லாமல், பிரச்சினையை நோக்கித் திருப்பக் கற்றுக்கொண்டோமென்றால், அது இயலாமையாக மாறுவதற்குப் பதிலாக, நேர்மறை சக்தியாக மாறும். கோபம், நேர்மறை சக்தியின் செயலாக உருமாற்றம் அடைய வேண்டும். கிருஷ்ணர், நம்மை என்ன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறார் என்றால், எதிர்மறை உணர்ச்சிகளான காமம், பேராசை, கோபம் போன்றவற்றை நேர்மறை சக்திகளாக மாற்றச் சொல்கிறார்.

அவர் சொல்கிறார், நாம் இவற்றை 'நான்' என்ற மனப்பாங்கிலிருந்து பயன்படுத்தும்வரை, இவை நம்மை நரகத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவாயில்களாக இருக்கின்றன. நாம் இந்த உணர்ச்சிகளை, 'நீங்கள்' என்ற மனப்பாங்கிற்கு மாற்றும்போது, அவை சக்தியாக மாறி, நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்லும் நுழைவாயில்களாக மாறுகின்றன.

ஆனந்தம் அடையவேண்டிய பொருள் அல்ல, மலரவேண்டியது

கேள்வி: ஸ்வாமிஜி, துக்கத்தையே இறுதியில் தரும் தற்காலிக இன்பங்களிலேயே உழல்வதற்குப் பதிலாக, அதிலிருந்து விடுபட்டு ஆனந்தத்தை அடைய விரும்புகிறேன். அதற்கு நான் கோபம், காமம் மற்றும் பேராசையை மட்டும் துறந்தால் போதுமா?

முதலாவதாக, ஆனந்தம் என்பது நம் தரப்பில் இருந்து அடையப்படவேண்டிய ஒரு இலக்கு அல்ல. ஆனந்தத்தை அடைய நாம் செய்யும் செயல் எதுவாகயிருந்தாலும், அது தோல்வியில்தான் முடியும். நம்முடைய அனைத்து முயற்சிகளும் மனத்திலிருந்து வருகின்றன, அவை நம்முடைய அஹங்காரத்திலிருந்து, ஆழ்ந்த துக்கங்களிலிருந்து, கவலைகளிலிருந்து, ஆசைகளிலிருந்து, பேராசைகளிலிருந்து, குழப்பங்களிலிருந்து வெளிப்படுகின்றன.

இப்படிப்பட்ட நம்முடைய அனைத்து
முயற்சிகளும் நமக்கு ஆனந்தத்தைத் தராது.
அவை துக்கத்தை மட்டுமே தரும்.
ஆனந்தத்திற்காகப் போராடுவது, மற்றொரு
போராட்டமாக மாறிவிடுகிறது. காமினி
மற்றும் காஞ்சன - பெண்ணாசை மற்றும்
பொன்னாசை - காமம் மற்றும் பேராசை

  • இவற்றை அடைய மேற்கொள்ளும் ஒரு போராட்டத்தைப்போல, இதுவும் ஒரு போராட்டமாகிவிடும்.

அஹங்காரத்திலிருந்து
எழும் செயல்கள், நமக்கு
ஆனந்தத்தைத் தராது.

நீங்கள், ஒரு துக்கத்தில் இருந்து மற்றொரு துக்கத்திற்குத்தான் செல்வீர்கள். நீங்கள், அப்படி ஒரு துக்கத்திலிருந்து மற்றொரு துக்கத்திற்கு மாறும்போது, அதற்கு இடையில் இருக்கும் சில நிமிடங்களை, ஆனந்தமயமானது என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள், உங்கள் பாதைகளை மாற்றும்போது, அந்தச் சிறு சிறு இடைவெளிகளில், நீங்கள் சந்தோஷத்தை உணர்வீர்கள், அவ்வளவுதான்.

ஆனால், ஆனந்தம் அனைத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்றிலிருந்து வரும் ஒரு பரிசு. நாம் எதிர்ப்பில்லாமல் அதைப் பெற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அதை எதிர்த்துச் செயல்படாமல், ஒரு கர்ப்பப்பைபோல, அதை அப்படியே நாம் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆனந்தத்தை வரவேற்க நாம் பெண் தன்மையுடன் இருக்க வேண்டும். நாம் கடவுளுடைய கருவைத் தாங்க வேண்டும்.

அஹங்காரம் மறையும்பொழுது, கோபம், பேராசை, காமம்கூட மறைந்துவிடும். மீதமிருப்பது என்னவென்றால், ஆனந்தம் மட்டுமே.

ஆனந்தம், தன்னுடைய சொந்த ஒளியில் பிரகாசிக்கிறது. துக்கம் இருள்மயமானது, ஆனந்தம் ஒளிமயமானது. துக்கம் நிறைந்த ஒரு மனிதர், தம் துக்கத்தின் நிழலை மற்றவர்கள் மேலும் படரச்செய்கிறார். அவர் மற்றவர்களின் சக்தியை உறிஞ்சிக்கொள்ளும் கருந்துளையாக (Black hole) ஆகிறார். அவரது அருகாமை அழிவுபூர்வமாக இருக்கும்.

ஆனால், ஒரு ஆனந்தமயமான மனிதரின் இருப்பு, ஆக்க பூர்வமாகவும், சக்தியூட்டக்கூடியதாகவும் இருக்கும். இது மற்றவர்களின் மேல் ஒளியைப் பொழிகிறது.

ஆனந்தம், கடந்தகாலத்தில் இருப்பது அல்ல, எதிர்காலத்தில் இருப்பதும் அல்ல, நிகழ்காலத்தில் இருப்பது. ஆனந்தம் என்றால் நிகழ்காலத்தில் இருத்தல், இங்கேயே, இப்போதே முழுமையாக இருத்தல்.

அதன் பின்பு ஒருவருடைய இதயம் ஆடும்,
பாடும், அவருடைய இருப்புத் தன்மையில்
அளப்பரிய கொண்டாட்டம் மலரும்.
ஒவ்வொரு அணுவும் நடனமாடும்,
அவருடைய இருப்புத் தன்மையின்

ஒவ்வொரு இழையும் இசைபாடும்.

ஒரு தத்துவமேதை சொன்னது: “ஆனந்தம்,
நிகழ்காலத்திற்கு மட்டுமே உரியது
என்பதால், நான் சொர்க்கத்திற்குப் போக
விரும்பவில்லை. ஏனென்றால், அங்கே
ஆனந்தம் மட்டுமே இருக்கும். வேறொன்றும்
இருக்காது. அங்கே துக்கமும் இருக்காது.
இறுக்கமும் இருக்காது. ஆர்வமும்
இருக்காது; அதனால் எனக்கு ஆனந்தம்
சலித்துவிடும்!”

அவர் ஆனந்தம் என்றால் என்ன என்பதைச் சரியாக அறிந்து கொள்ளவில்லை அவர் வெறுமனே வார்த்தையோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ஆனந்தம், என்றும் இளமையாக இருக்கும். அதிகாலைச் சூரிய ஒளியில் பளபளக்கும் பனித் துளிப்போல, மடல் விரிக்கும் ரோஜாவைப்போல புத்தம்புதியதாகவே இருக்கும். அது என்றும் பழமை அடைவதில்லை. அது ஒருவருக்குச் சோர்வை உண்டாக்குவதில்லை. ஒருவரும் அதனால் சலிப்படைவதும் இல்லை.

உங்களுக்கு ஒருபோதும் சலிப்பேற்படுத்தாத ஒன்றுதான் ஆனந்தம்! ஏனென்றால், இது ஒருபோதும் பழமையடைவதில்லை. இது என்றென்றும் புதிது. இது மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி நிகழாது. ஒவ்வொரு கணமும் புத்தம்புதியதாக இருப்பது. பின்பு எவ்வாறு நீங்கள் சலிப்படைய முடியும்?

அதனால்தான் எல்லா மதங்களும், யாழை மீட்டி பாடிக்கொண்டு இருக்கும் தேவதைகள் பற்றிச் சொல்கின்றன. அவர்கள் செய்வதெல்லாம் பாடுதல், ஏனென்றால், பாடுதல் ஆனந்தத்தைக் குறிக் கிறது. அவர்கள் பாடிக்கொண்டாடுகிறார்கள். இந்த நிலை, உங்களுக்கு மேலே எங்கோ வானத்தில் இருக்கும் ஒரு நிலை அல்ல. இந்த நிலை உங்களுக்குள்ளேயே இருக்கிறது.

நீங்கள் நிகழ்காலத்தோடு தொடர்புகொண்டிருக்கும் பொழுதெல்லாம், நீங்கள் சொர்க்கத்தில் இருக்கிறீர்கள். ‘இப்பொழுது’ என்பது சொர்க்கத்தின் மறுபெயர்.

ஆனந்தத்திற்கான வழி, இதயம்!

நாம், இருப்புத் தன்மை அல்லது கடவுளின் மீது வைத்திருக்கும் முழுமையான நம்பிக்கையின் ஒரு உபவிளைவே ஆனந்தம். கடவுள் ஒரு மனிதரல்ல. ஆனால், மனிதரல்லாத ஒரு ஸாந்நித்யம். வாழ்க்கையே கடவுள்; இருப்புத் தன்மையே கடவுள், வாழும் சக்தியே கடவுள்.

அதை 'நம்புதல்' என்றால், அதற்கெதிரான நம்முடைய எதிர்ப்பை நிறுத்துதல் என்று பொருள். அதை எதிர்த்துப் போராடுதல் துக்கத்தையே உருவாக்கும்; இது, நாம் எதிர்நீச்சலடிக்க முயற்சிசெய்வது போன்றதே.

நம்பிக்கை என்றால் சரணாகதி, அதாவது
ஆற்றுநீருடன், அதன் போக்கில்
செல்வது. ஆற்றின் போக்கில் செல்வதே
ஆனந்தம். எல்லாத் துக்கங்களுமே
அஹங்காரத்தினாலும், அதனுடைய
போராட்டத் தன்மையினாலும், எதிர்ப்புத்
தன்மையினாலுமே விளைகின்றன.

எதிர்த்துப்போராடுதலை விட்டுவிடும்போது நீங்கள், இந்த முழுமைத்துவத்திலிருந்து உங்களை வேறுபட்ட ஒருவராக, தனியாகப் பிரித்து நினைக்க மாட்டீர்கள்; நீங்கள், பிரபஞ்ச இருப்புத் தன்மையின் சிறப்புவாய்ந்த இணக்கத் தன்மையில், ஒருங்கிணைந்த ஒரு முக்கிய பாகமாக இருப்பீர்கள். இந்த மிகப்பெரிய இசைக் கச்சேரியில், ஒரு சிறு இசைக்குறிப்பாக இருப்பீர்கள். அதன்பின்பு ஆனந்தம் இயல்பாகிவிடும்.

இங்கே என்னுடைய முழு முயற்சியும், ஆனந்தத்தை நோக்கி நீங்கள் நகர, உங்களுக்கு உதவிசெய்வதே. ஆனந்தத்திற்கான வழி, இதயத்தின் மூலமாகவும் பக்தியின் மூலமாகவும் செல்வதே. அதனால்தான் நாம் தியானம் செய்வதோடு, பக்திப் பாடல்களைப் பாடுவதிலும், அதற்கேற்ப ஆடுவதிலும் ஈடுபடுகிறோம். இந்த வழிகளின் மூலமாகத்தான் உங்களை மீண்டும் இதயத்திற்குத் திரும்பவைக்க முடியும்.

ஒருமுறை நீங்கள் அவ்விடத்தை அடைந்துவிட்டால், ஒருமுறை நீங்கள் இதயத்தின் அமைதியை ருசிப்பீர்களானால், நீங்கள்

ஆச்சரியமடைவீர்கள். தலை (பகுத்தறிவு) மிகத் தூரப் போய்விடும். அதைப் பற்றிய கவனம் இருக்காது. அது இனிமேல் உங்களுக்குச் சொந்தமற்றது போன்றும், வேறொருவருக்குச் சொந்தமானது போன்றும் தோன்றும். அது மிகத் தொலைவில் இருப்பதால், அதன் சப்தத்தைக்கூட நீங்கள் கேட்பதில்லை.

இதயம், மிக மிக ஆழத்தில் இருப்பதால், தலை, முடிவற்ற தொலைவில் இருப்பதாக ஆகிவிடுகிறது. அந்தத் தருணங்களே நீங்கள் முதன்முதலில் ஆனந்தம் என்றால் என்ன என்பதை உணரும் நேரம்; அப்படியில்லையென்றால், அது வெறும் ஒரு வார்த்தையே.

மக்கள், ஆனந்தம் என்ற வார்த்தையை
உபயோகிக்கிறார்கள், தாங்கள் அதைப்
புரிந்துகொண்டதாகவும் நினைக்கிறார்கள்.
அவர்களால் அவ்வளவு எளிதில் அதைப்
புரிந்துகொள்ள முடியாது. அதைப்
புரிந்துகொள்ள, ஒருசில இருப்புத்
தன்மை அனுபவங்களைப் பெற்றிருக்க
வேண்டும். ஏனென்றால், ஆனந்தம் என்பது
கடவுளோடு தொடர்புடையது. ஆனந்தம்
என்பது வாழ்க்கையின் உச்ச அர்த்தம்.

ஆனந்தத்தைப்
புரிந்துகொள்ள, ஒருசில
இருப்புத் தன்மை
அனுபவங்களைப்
பெற்றிருக்க வேண்டும்.
ஏனென்றால், ஆனந்தம்
என்பது கடவுளோடு
தொடர்புடையது.

மக்கள், மிக அரிதாகவே உண்மையான ஆனந்தத்தின் சுவையை உணர்கிறார்கள். ஒருவர் தம்மை, ‘யாராகவும் இல்லை’ என்று உணர்வதும், தமக்கென்று எந்த ‘அடையாளமும் இல்லை’ என்று உணர்வதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; ஏனென்றால், இது அஹங்காரத்தின் வேரையே வெட்டிவிடுகிறது.

அஹங்காரம், உயர்வு என்னும் கருத்தின் (Idea of Superiority) மூல மாக வாழ்கிறது. சில நேரங்களில் அஹங்காரம் அதன் தலையில் ஏறி நின்றுகொண்டு, தாழ்வு என்னும் கருத்தின் மூலமாக வாழ்கிறது. ஆனால், ‘தான் யாரும் இல்லை’ என்று உணர்ந்த ஒருவர், தம்மை உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ கருதுவதில்லை. அவர் அங்கு இருப்பதில்லை! அந்த ‘இல்லாத’ தருணங்களில், ஆனந்தம் வெள்ளமெனப் பாய்கிறது.

அஹங்காரம் இல்லையேல், துக்கமும் இல்லை!

அஹங்காரம் இல்லையென்றால், உங்களால் துன்பமடைய முடியாது. முயற்சிசெய்து வேண்டுமானாலும் பாருங்கள்! இதுவரை இதில் யாருமே வெற்றி பெற்றதில்லை. இனி யாராவது வெற்றி பெறுவார்கள் என்றும் நான் நினைக்கவில்லை.

அஹங்காரம் இல்லாமல் துன்பப்படவே முடியாது. அதேபோல் அஹங்காரத்தைக் கொண்டிருந்தால் ஆனந்த மயமாக இருக்கவே முடியாது. அஹங்காரம் இல்லையென்றால், அங்கே ஆனந்தம் மட்டுமே இருக்கும்.

அஹங்காரம், "இதைச் செய், அதைச் செய், இது மாதிரி இரு, அது மாதிரி இரு," என்று தொடர்ந்து கட்டளையிட்டு, உங்களை அமைதியற்றவராகவும் பரபரப்புள்ளவராகவும் ஆக்கிவிடும்.

அஹங்காரம், உங்களுக்குப் புதுப்புதுத் திட்டங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அது உங்களைத் தனித்து இருக்கவிடாது. நீங்கள் யாரோ ஒருவராக மாற வேண்டும் - நீங்கள் நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் அல்லது முதலமைச்சராக வேண்டும் அல்லது நீங்கள் ஒரு பிரபலமானவராக வேண்டும் அல்லது நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் - என நீங்கள் பைத்தியமாகுமளவுக்கோ அல்லது தற்கொலை செய்துகொள்ளுமளவுக்கோ அல்லது ஒரு குருவைத் தேடி ஓடுமளவுக்கோ, அது உங்களைச் சாட்டைக்கொண்டு விரட்டிக்கொண்டே இருக்கும்.

அஹங்காரத்தை
விடுவதன்மூலம், மிகுந்த
அமைதி நிகழ்கிறது. பின்பு
எந்தவிதமான ஓய்வெடுக்கும்
(Relaxation) முறையையும்
முயற்சிசெய்யத்
தேவையில்லை.

அஹங்காரத்தை விடுவதன்மூலம், மிகுந்த
அமைதி நிகழ்கிறது. பின்பு எந்தவிதமான
ஓய்வெடுக்கும் (Relaxation) முறையையும்
முயற்சிசெய்யத் தேவையில்லை. அங்கே
இறுக்கத்தை ஏற்படுத்த எதுவும் இருக்காது.

தானாக நிகழ்கின்ற அந்த இயற்கையான
இடையீடற்ற ஓய்வே ஆனந்தத்தை
வெள்ளமாகக் கொண்டுவரும். ஒருவர்
அதில் மூழ்கடிக்கப்படுவார்.

ஆனந்தம்,
ஒருபோதும் சிறிய
அளவில் வருவதில்லை.
அது வரும்பொழுது
வெள்ளத்தைப்போல
வருகிறது;
அது வரும்பொழுது,
உங்களை முழுவதுமாக
மூழ்கடித்துவிடும்.

ஆனந்தம், ஒருபோதும் சிறிய அளவில்
வருவதல்ல. அது வரும்பொழுது
வெள்ளத்தைப்போல வருகிறது; அது
வரும்பொழுது, உங்களை முழுவதுமாக
மூழ்கடித்துவிடும்.

அஹங்காரத்தைத் தாண்டிச் செல்லுங்கள். இந்தக் கருத்தே மிகவும் அபாயகர மானது; அஹங்காரத்தைத் துறக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் உங்களை உயர்ந்தவர்களாக நினைக்கும் நேரங்களில், நீங்கள் மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாக நினைக்கிறீர்கள். இது ஒப்பிடுதலைச் சேர்ந்தது. உங்களை மற்ற எவரோடும் ஒப்பிடுதல் ஆபத்தானது. அது மற்றவர்களுக்கும் உங்களுக்கும் தீங்கையே விளைவிக்கும்.

சிறந்தவர் என்று ஒருவரும் இல்லை, சிறப்பு இல்லாதவர் என்று ஒருவரும் இல்லை. பெரியவர் என்று ஒருவரும் இல்லை, சிறியவர் என்று ஒருவரும் இல்லை. ஒப்பிட இயலாத அளவுக்கு, ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்களே. இதுவே ஆன்மிகப் புரிதல். ஒருவர் விழிப்புணர்வடைந்த பின்பு, அவர் மக்களைக் காணும் விதம் இவ்வாறாகவே இருக்கும்.

மக்கள் அனைவரும் ஒரேமாதிரி இருக்க மாட்டார்கள். அவர்கள், உள் மையத்தில் சமமானவர்கள்; ஆனால், வெளிவட்டங்களில் தனித்தன்மை வாய்ந்தவர்கள். ஒரு ரோஜா, ரோஜாவாகவும், தாமரை தாமரையாகவும்தான் இருக்கும். தாமரையும் உயர்ந்தது இல்லை. ரோஜாவும் உயர்ந்தது இல்லை. இரண்டுமே மலர்ந்து மணம் வீசுகின்றன, இரண்டுமே அதனதுக்குரிய வழிகளின் மூலமாகக் கடவுளை வெளிப்படுத்துகின்றன.

உங்களையும் கடவுளையும் இணைப்பது அன்பு என்ற பாலமே

உங்களையே நேசியுங்கள். அதுதான் ஆரம்பம், பிறகு உங்களுக்கு நெருக்கமானர்களை நேசியுங்கள், பிறகு இந்த உலகத்தை நேசியுங்கள். பிறகு இந்த முழுப் பிரபஞ்சத்தையே நேசியுங்கள்; அப்பொழுது

மட்டுமே உங்களால் கடவுளை நேசிக்க முடியும். இந்தப் பயணம் உங்களிடம் இருந்து ஆரம்பித்து கடவுளிடம் முடிவடைகிறது. இவையே ஆற்றின் இரு கரைகள். நீங்கள் ஒரு கரையில் இருக்கிறீர்கள், கடவுள் மற்றொரு கரையில் இருக்கிறார், இடையில் பாலமாக அன்பு இருக்கிறது. இந்தப் பாலம், முழு ஆற்றின் மேலும் போடப்பட்டு, இரு கரைகளையும் இணைக்கிறது,

படம்: ஆற்றின் மீது உள்ள தொங்கு பாலம்

ஆனால், மக்கள் அன்பைக் கண்டு பயப்படுகிறார்கள். அதனால்தான் அவர்கள் பிரார்த்தனை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களே புரிந்துகொள்வதில்லை. அவர்களுடைய 'பிரார்த்தனை' என்பது அறியாமையே; அன்பினால் நிறையாதவரை, அது உண்மையாக இருக்க முடியாது.

உங்களுக்குள் அன்பு மலராதவரை, உங்களால் எந்தக் கடவுளின் கோயிலுக்குள்ளும் நுழைய முடியாது. அன்பில் வாழ்பவர் கோயிலுக்குள் நுழையத் தேவையில்லை. அவர் ஏற்கெனவே அங்குதான் இருக்கிறார், இந்தச் சிறிய, எளிய செய்தியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதை வாழ முயற்சிசெய்யுங்கள். ஏனென்றால், அன்பு, நம்ப வேண்டிய ஒரு கோட்பாடு அல்ல. வாழ வேண்டிய ஒரு வாழ்க்கைமுறை.

அன்பில் மலருங்கள். அன்பின் நறுமணத்தை
வெளிப்படுத்துங்கள். அதுவே பிரார்த்தனை,
அன்பின் நறுமணமே கடவுளை அடையும்,
வேறெதுவும் அல்ல.

நீங்கள் அனைவரும், 'ஆனந்தத்தின் ஒரு
வாழும் செய்தி'யாக மாற வேண்டும்,
வெறும் வார்த்தைகளில் மட்டுமல்லாமல்
செயலிலும் மாற வேண்டும். உங்கள்
இருப்புத் தன்மை ஆனந்தத்தை வெளிப்படுத்த
வேண்டும். நீங்கள் ஆனந்தமாக இருக்க
வேண்டும், உங்களைச் சுற்றி ஆனந்தமயமான
சூழ்நிலையை உருவாக்கவும் வேண்டும்.

அன்பின் நறுமணமே
கடவுளை அடையும்,
வேறெதுவும் அல்ல.

அப்போதுதான் உங்களருகில் வரும் யாராயினும், உடனே ஆனந்த குளிர் தென்றலை உணர்வார்கள்.

உண்மையான செய்தியை வார்த்தைகளால் புரியவைக்க முடியாது. வார்த்தைகள் உதவ முடியும். ஆனால், அது இரண்டாம் நிலை. உண்மையான செய்தியை இருப்புத் தன்மையின் மூலமாக மட்டுமே உணர்த்த முடியும். அதுவே முதல் நிலை.

மகிழ்ச்சியாக இருங்கள், ஆனந்தமாக இருங்கள், பாடலாகவும், ஆடலாகவும் இருங்கள். நீங்கள் மொத்த வாழ்க்கையையும் தெய்விகக் கொண்டாட்டமாகவும், புனித விழாவாகவும் மாற்றுங்கள். இதுவே சரணாகதி.

ஒருவர் தன்னைத் தேட ஆரம்பிக்கும்
நேரம், தன்னை ஆராய்ந்து கொள்ளத்
துவங்கும் நேரம், அவர் ஆசீர்வதிக்கப்
பட்டவராக ஆகிறார். அந்தத் தேடுதலே
உணர்வுமாற்றத்திற்கான ஆரம்பம். தேடல்
எந்தளவு ஆழமாக இருக்கின்றதோ,
அந்தளவு விரைவில் உணர்வுமாற்றம்
ஏற்படும். அதைத் தீவிரமாக, முழுமையாகச்
செய்யுங்கள்.

சரணாகதி, ஒரு ஆழமான பொறுப்பெடுத்தலாக இருக்க வேண்டும். சரணாகதி வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும்விட மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக இருக்க வேண்டும். வாழ்க்கையைவிட, விலைமதிப்பற்றதாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயாராகுமளவுக்கு, அதாவது ‘இதற்காக என் வாழ்க்கையையே தியாகம் செய்யத் தயார்’ என்று சொல்லுமளவுக்கு, ஏதோ ஒன்று இருந்தால் மட்டுமே நீங்கள் வாழ்வீர்கள், இதுவே வாழ்க்கையின், இருப்புத் தன்மையின் அடிப்படை இரகசியம்.

உங்கள் வாழ்க்கையைவிட மிக உயர்ந்ததாக, பெரியதாக, புனிதமானதாக ஏதோ ஒன்றை நீங்கள் பெற்றிருக்கும்போது மட்டுமே உங்கள் வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு உயர்வான நிலையை, உச்சமான இறுதியை அடைவதற்கு உதவும் ஒரு சாதனமாக உங்கள் வாழ்க்கை மாறும்போது மட்டுமே, உங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கான ஸாரம் ஆரம்பிக்கிறது. அப்போது மட்டுமே, வாழ்க்கைக்கு அர்த்தமும் முக்கியத்துவமும் ஆனந்தமும் இருக்கும்.

செயலில் கரைவதே தியானம்

தியானம், ஆனந்தத்திற்கு அழைத்துச்செல்லும், அது ஆனந்தத்தை நிகழச் செய்யும், அது உங்களுக்குள் உங்களை அழைத்துச் சென்று, இறுதியில் கடவுள் இருக்குமிடத்திற்கு அழைத்துச்செல்லும்.

எப்படிக் கரைவதென்று கற்றுக்கொள்ளுங்கள். எந்தவொரு செயலிலும் கரைந்து விடுங்கள். பிறகு அந்தச் செயலே ஆனந்தமாக மாறிவிடும்.

அப்படிக் கரைந்துவிடும்போது, நீங்கள், உடல் நலப் பயிற்சிக்காக ஓடும்போது, ஓடுவதில் மறைந்துவிடுகிறீர்கள். அப்போது அங்கே ஓடுபவர் இருக்க மாட்டார், ஓட்டம் மட்டுமே மீதமிருக்கும். நீங்கள் அதிகாலையில் தியானம் செய்வதாக இருந்தால், அங்கே தியானம் செய்பவர் இருக்க மாட்டார். ஆனால், தியானம் மட்டுமே இருக்கும். நீங்கள் அந்தளவுக்கு செயலாலே ஆட்கொள்ளப்பட்டுச் செயலாகவே ஆவீர்கள், அங்கே செயல் மட்டுமே இருக்கும், செயல்செய்பவர் இருக்கமாட்டார். அதுதான் ஆனந்தம், அதுதான் ஆனந்தமயமான நடனம்.

தியானமே ஆனந்தத்திற்கான சாவி. சிலர் தியானம் என்பது ஒரு விதமான சிந்தனை என்றும், உயர்ந்த விஷயங்களை எண்ணுவது என்றும் நினைக்கிறார்கள். நீங்கள் கடவுளைப் பற்றி நினைத்தால், அன்பைப் பற்றி நினைத்தால், அது தியானம் என்று அழைக்கப்படுகிறது. இல்லை,

எண்ணங்களைக் கடந்து செல்வதே தியானம்.

அது ஒரு சிந்தனையே, தியானம் ஆகாது.
ஆனால், உபயோகமில்லா ஒன்றை
நினைப்பதைக் காட்டிலும், கடவுளைப்
பற்றிய நினைவு நல்லதே. ஆனாலும் அது
தியானம் அல்ல.

‘நினைத்தல்’ தியானம் அல்ல. நீங்கள்
கடவுளைப் பற்றி நினைக்கிறீர்களா
அல்லது பணத்தைப் பற்றி நினைக்கிறீர்களா
என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
எண்ணங்களைக் கடந்து செல்வதே
தியானம்.

தியானத்தில், எதைப் பற்றி எந்த விதத்தில்
நினைத்தாலும், அது ஒரு தடங்கலே! கீழை
நாடுகளில், தியானம் என்றால் எண்ணம்
கடந்த நிலை என்று அர்த்தம். அது புனிதமான
இருப்புத்தன்மை. வெறுமனே நீங்கள்
இருப்பதே, வாழ்க்கையில் மிகச்சிறந்த
அனுபவம். எந்த எண்ணங்களும் உங்கள்
இருப்பைக் கடந்து செல்லாது. மொத்தப்
போக்குவரத்தும் நின்றுவிடுவதோடு,
மனமே காணாமல் மறைந்துவிடும்.
மீதமிருப்பது விழிப்புணர்வு மட்டுமே.

> இதயம், அமைதியில்
> நிறைந்திருக்கிறது.
> ஆனாலும் நாம் அங்கு
> வாழ்வதில்லை;
> நாம் தலையில்தான்
> வாழ்கிறோம்.

எண்ணங்களுக்குப் பின்பு மறைத்து வைக்கப்பட்டிருந்த எதுவுமே, இனியும் மறைந்திருக்காது. உங்கள் எண்ணங்களோடு தொடர்புகொண்டிருந்த அனைத்தும் இனியும் தொடர்பில் இருக்காது. அனைத்து சக்தியும் வெளிப்படுத்தப்படும். அப்போது ஒருவர், ஒரு சிறு அலைகூட எழாத, அமைதியான ஒரு சக்திக் குளமாக இருக்கிறார்.

‘இதயத்தில் அமைதியாக மையங்கொள்ள வேண்டுமென்ற’ ஒரு நிபந்தனையை நாம் நிறைவேற்றும்போது மட்டுமே, ஆனந்தம் நிகழும். அதை நிறைவேற்றுவது கடினம் அல்ல. இதயம், அமைதியில் நிறைந்திருக்கிறது. ஆனாலும் நாம் அங்கு வாழ்வதில்லை; நாம் தலையில்தான் வாழ்கிறோம்.

தலையானது எண்ணங்களாலும் ஆசைகளாலும் கற்பனைகளாலும் நினைவுகளாலும் நிறைந்திருக்கிறது. இவை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துகின்றன. ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும், நெருக்கடி நேரமாகவே இருக்கிறது, ஒவ்வொரு நாளும் ஆசைகள் கூட்டம் கூட்டமாக உள்ளே வந்துகொண்டும், வெளியே சென்றுகொண்டும் இருக்கின்றன.

நீங்கள் மனத்தை அமைதியாக்க முயற்சிசெய்தால், நீங்கள் மேலும் அதிக பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வீர்கள், ஏமாற்றத்திற்குள்ளாவீர்கள் சரியான தியானத்தைப் பற்றி அறியாத மக்களுக்கு இது நிகழும். பின்பு அவர்கள், தங்களைத் தாங்களே ‘வசியம்’ செய்துகொள்வதற்கான தந்திரங்களைக் கற்கிறார்கள்.

சில குறிப்பிட்ட மந்திரங்களைத் தொடர்ந்து
ஜெபிப்பது, குறிப்பிட்ட பெயர்களைத்
தொடர்ந்து உச்சரிப்பது என்பது போன்ற
பல தந்திரங்கள் இருக்கின்றன. எந்த
வார்த்தையானாலும் வேலைசெய்யும்
புனிதமான வார்த்தைகள் என்று எதுவும்
இல்லை, அனைத்து வார்த்தைகளும்
ஒன்றே.

இவை தியானம் அல்ல. தொடர்ந்து ஒரு பெயரை விடாமல் உச்சரிப்பது, நம் தலையில் ஒரு ஆழமான தூக்க நிலையை உருவாக்குகிறது. இது நல்லதே, நல்ல தூக்கம் என்பதில் எந்தவிதத் தவறும் இல்லை. ஆனால், இது தியானம் அல்ல. இது உங்களை உணர்வுமாற்றம் அடையச் செய்யாது.

உண்மையான உணர்வுமாற்றம், உங்களுடைய சக்தியானது தலையிலிருந்து இதயத்திற்கு நகரும்போது நடைபெறுகிறது. நீங்கள் இதயத்தை அடையும்போது, நீங்கள் விழிப்புணர்வின் மையத்தை அடைகிறீர்கள்.

கடவுள் எங்கும் தொலைந்து விடவில்லை

இந்த விழிப்புணர்வு நிறைந்த அமைதிக் குளத்தில், சக்திக் குளத்தில், இருப்புத்தன்மை பிரதிபலிக்கிறது. அது எது என்று அப்போதுதான் நமக்குத் தெரியவரும். கடவுள் என்பதுதான் அதன் மறுபெயர்.

வாழ்க்கையில் மிக முக்கியமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம், கடவுள் நம்மை நேசிக்கிறார்: அவர் நம்மைக் கைவிடவில்லை, அவர் நம்மிடம் மாறுபாடு கொண்டவர் அல்ல, அவர் தொடர்ந்து நம் மீது அக்கறைகொண்டிருக்கிறார். அவர் நம்மைப் பாதுகாக்கிறார்.

இந்தக் கருத்து உங்கள் இதயத்திற்குள் ஆழமாக நுழைவது நல்லது. கடவுளால் நீங்கள் அதிகம் நேசிக்கப்படுவதாக உணர்ந்தால், நீங்களும் மற்றவர்களை நேசிக்க முடியும். அப்படித்தான் நம்மால் பிறரை நேசிக்க முடிகிறது. நாம் நேசிக்கப்பட்டால்தான், நாமும் பிறரை நேசிப்போம்.

நாம் நேசிக்கப்படவில்லை என்றால், நமக்கு எவ்வாறு நேசிக்கவேண்டும் என்பது தெரியாது. நமக்கு அன்பு என்றால் என்ன என்று தெரியாது.

கடவுளே நம் மூலப்பொருள், நம்முடைய இருப்புத்தன்மை, அவர் நமக்கு வெளியில் இருப்பவர் அல்ல, அவரே நம் உள் மையம். நாம் அவரைத் தேடவும், கண்டுபிடிக்கவும் அலைய வேண்டாம்.

நாம் நினைவில் கொள்ள வேண்டியது இதுவே: கடவுள் எங்கும் தொலைந்து விடவில்லை; நாம்தான், நம்மைத் தொலைத்துவிட்டோம், நாம் யார் என்பதை மறந்து விட்டோம்.

சரீரத்தோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதீர்கள். மனத்தையோ, நாட்டையோ, இனத்தையோ, மதத்தையோ உங்கள் அடையாளமாகக் கொள்ளாதீர்கள். 'இதுவே நான்' அல்லது 'அதுவே நான்' என்று நினைக்காதீர்கள். நீங்கள் இதுவும் அல்ல, அதுவும் அல்ல என்பதை நினைவில்கொள்ளுங்கள்.

இதுவே ஞானிகளால் கற்பிக்கப்படும் இரகசிய உபதேசம்: நேதி, நேதி - இதுவும் அல்ல, அதுவும் அல்ல. 'இது' என்பதை விட்டுவிடுங்கள், 'அது' என்பதையும் விட்டுவிடுங்கள்!

உங்களால், இரவு-பகல், பிறப்பு-இறப்பு, உடல்-மனம் என்ற இரு துருவங்களை, எதிரெதிர்கொள்கைகள் உள்ள நிலையை விட்டுவிட முடியுமானால், பின்பு மெதுவாக உங்களுக்குள் மூன்றாவது சக்தி உருவாகும். மூன்றாவது ஆற்றல் உங்களுக்குள் எழும். அதுவே விழிப்புணர்வு. அதுவே உங்கள் உண்மையான தன்மை.

அதுவே விடுதலை: பயம், எதிர்பார்ப்பு,
துக்கம் போன்றவற்றிலிருந்து விடுதலை.
உலகத்திலிருந்து விடுதலை, வாழ்க்கை,
மரணம் என்ற சக்கரத்திலிருந்து விடுதலை.

இது, அது என்பவற்றோடு உங்களை
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்,
ஒரு பார்வையாளராக, ஒரு சாட்சியாகக்
கவனித்துக்கொண்டிருப்பீர்கள். ஒரு
கண்ணாடிபோல், எந்தப் பிரதிபலிப்பிலும்

'இதுவே நான்' அல்லது
'அதுவே நான்' என்று
நினைக்காதீர்கள்.
நீங்கள் இதுவும் அல்ல,
அதுவும் அல்ல என்பதை
நினைவில்கொள்ளுங்கள்.

சிக்கிக்கொள்ளாமல் இருப்பீர்கள்.

நீங்கள் சாட்சியாக இருக்கும்போது, 'நான்', 'எனது' என்பது உதிர்ந்துவிடும். மீதமிருப்பது உங்கள் சக்தியுடனான அடையாளமே, உங்கள் 'நிலை'யுடனான (State) அடையாளமே! உங்கள் 'அந்தஸ்து'டனான (Status) அடையாளம் உதிர்ந்துவிடும். அந்நிலையில் நீங்கள் எல்லாவற்றுடனும் ஒன்றாகி விடுவீர்கள். 'நான்' என்பதற்கு அங்கு இடமில்லை, 'நீங்கள்' என்பதில் நிலைபெறுவீர்கள். நீங்கள் தெய்விகமாவீர்கள்.

நாம், அந்த மகோன்னதமான சக்தியை, பரப்ரஹ்ம கிருஷ்ணரை, அந்த தெய்விக விழிப்புணர்வை நம் அனைவரையும் தெய்வ சம்பத்துடனும், நித்யானந்தத்தில் நிலைபெறவும் ஆசீர்வதிக்குமாறு பிரார்த்தனை செய்வோம்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசா³ஸ்த்ரே ஸ்ரீக்ருʼஷ்ணார்ஜுநஸம்வாதே³
தைவாஸுரஸம்பத்விபாகயோகோ நாம ஷோடசோ'ऽத்யாய: //

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினாறாவது அத்தியாயம்.

Hands playing flute