KAILASA Library/பகவத்கீதை/ஸ்லோகங்கள்Sign in
பகவத்கீதை

ஸ்லோகங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அத ஷோடசோ'ऽத்யாய: பதினாறாவது அத்தியாயம்

தைவாஸுரஸம்பத்விபாக யோக: தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்

ஸ்ரீபகவாந் உவாச

அபயம் ஸத்த்வஸம்சு'த்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி: /
தாநம் தமச்'ச யஜ்ஞச்'ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம் // 16.1

அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: சா'ந்திரபைசு'நம் /
தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம் // 16.2

தேஜ: க்ஷமா த்ரு'தி: சௌ'சமத்ரோஹோ நாதிமாநிதா /
பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத // 16.3

ஸ்ரீபகவாந் உவாச - ஸ்ரீபகவான் சொன்னார்; அபயம் - அச்சமின்மை; ஸத்த்வஸம்சு'த்தி: - அந்தக்கரணம் முற்றிலும் தூய்மை பெற்றிருத்தல்; ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி: - ஞான யோகத்தில் உறுதியாக நிலைபெற்றிருத்தல்; தாநம் - தானம்; தம: - புலனடக்கம்; ச - மேலும்; யஜ்ஞ: - யாகங்களைச் செய்தல்; ச - மேலும்; ஸ்வாத்யாய: - சாஸ்த்ரங்களைக் கற்றல்; தப: - தவம்; ஆர்ஜவம் - நேர்மை; அஹிம்ஸா

  • தீங்கிழையாமை; ஸத்யம் - உண்மை; அக்ரோத: - கோபமின்மை; த்யாக: - துறவு; சா'ந்தி: - அமைதி; அபைசு'நம் - ஒருவரையும் குறைசொல்லாமை; பூதேஷு - உயிரினங்களிடத்தில்; தயா - பரிவு; அலோலுப்த்வம் - பிறர்பொருள் விரும்பாமை; மார்தவம் - மென்மை; ஹ்ரீ : - வெட்கம்; அசாபலம் - உறுதியாக இருத்தல்; தேஜ: - தைரியம்; க்ஷமா - மன்னிக்கும் மனப்பாங்கு; த்ரு'தி: - மன வலிமை; சௌ'சம்
  • தூய்மை; அத்ரோஹ: - வஞ்சகமின்மை; ந அதிமாநிதா - செருக்குக் கொள்ளாமை; பவந்தி - ஆகும்; ஸம்பதம் - சம்பத்துடன்; தைவீம் - தெய்விக; அபிஜாதஸ்ய - பிறந்தவர்களின்; பாரத - பரதக்குலத்தோன்றலே

ஸ்ரீபகவான் சொன்னது 16.1-3 ஓ பரதக்குலத் தோன்றலே, அஞ்சாமை, உணர்வுத்தூய்மை, ஆன்மிக ஞானத்தை வளப்படுத்திக்கொள்ளுதல், ஈகை, இருத்தலில் மையங்கொள்ளுதல், யாகம், அறிவைச் சேகரித்தல், தவம், எளிமை, அஹிம்ஸை, ஸத்யம், சினத்திலிருந்து விடுபடுதல், துறவுநிலை, அமைதி, குறை காண்பதிலிருந்து விடுபடுதல், அனைத்து உயிரினங்களின் மீது கருணை, பிறர்பொருள் விரும்பாமை, கனிவு, நாணம், உறுதியாக இருத்தல், தைரியம், மன்னிக்கும் மனப்பாங்கு, மன வலிமை, தூய்மை, வஞ்சகமின்மை, செருக்கின்மை போன்ற குணங்கள் தெய்விக சம்பத்துடன் பிறந்தவனின் இயல்புகளாகும்.

தம் போ தர்ப்போsபிமாநச்'ச க்ரோத: பாருஷ்யமேவ ச /
அஜ்ஞாநம் சாsபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம் // 16.4

பார்த - ப்ரிதாவின் மகனே; தம்ப: - டாம்பீகம்; தர்ப: - இறுமாப்பு; அபிமாந: ச - தற்பெருமை; க்ரோத: ச - கோபம்; பாருஷ்யம் ச - கடுமையும்; அஜ்ஞாநம் ச ஏவ - அஞ்ஞ்ஞானமே; அபிஜாதஸ்ய - பிறந்தவர்களுடைய; ஸம்பதம் - இயல்பாக; ஆஸுரீம்-அஸுர.

16.4 ஓ ப்ரிதாவின் மகனே, பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், இரக்கமற்ற தன்மை மற்றும் அறியாமை - இவை அசுரத் தன்மையோடு பிறந்திருப்பவர்களின் குணங்களாக இருக்கின்றன.

தைவீ ஸம்பத்விமோக்ஷாய நிபந்தாயாஸுரீ மதா /
மா சு'ச: ஸம்பதம் தைவீமபிஜாதோsஸி பாண்டவ // 16.5

தைவீ ஸம்பத் - தெய்விகப்பண்பு; விமோக்ஷாய - மோஷத்திற்கும்; ஆஸுரீ - அசுரப்பண்பு; நிபந்தாய - பந்தத்திற்கும்; மதா - கருதப்படுகிறது; மா சு'ச: - வருந்தாதே; ஸம்பதம் - பண்புடன்; தைவீம்

  • தெய்வ; அபிஜாத: அஸி - பிறந்திருக்கிறாய்; பாண்டவ - அர்ஜூனா!

16.5 தெய்விக இயல்புகளே ஜீவன்முக்திக்கு சாதகமாக அமையும்; அசுர இயல்புகள் பந்தத்திற்குத்தான் வழிவகுக்கும். பாண்டவா, கவலைப்படாதே, நீ தெய்விக குணங்களுடன்தான் பிறந்திருக்கிறாய்.

த்³வௌ பூ⁴தஸர்கௌ³ லோகேऽஸ்மின் தBooth³ ஆஸுர ஏவ ச /
தை³வோ விஸ்தரஶ: ப்ரோக்த ஆஸுரம் பார்த² மே ஶ்'ரு'ணு // 16.6

த்³வௌ - இருவகையாகவே உள்ள; பூ⁴தஸர்கௌ³ - உயிரினங்களின் படைப்பு; லோகே - உலகில்; அஸ்மின் - இந்த; தை³வ: - தெய்வப் பண்புடையது என்றும்; ஆஸுர: ஏவ ச - அசுரப்பண்புடையது என்றும்; தை³வ: - தெய்வப் பண்பு; விஸ்தரஶ' - விரிவாக; ப்ரோக்த:

  • விளக்கப்பட்டுவிட்டது; ஆஸுரம் - அசுர இயல்புடையவர்களைப் பற்றியும்; பார்த² - பார்த்தா; மே - என்னிடமிருந்து; ஶ்'ரு'ணு - கேட்டுக் கொள்.

16.6 பார்த்தா, இந்த உலகில் இரண்டு வகையான ஜீவன்கள் படைக்கப்பட்டுள்ளனர். ஒன்று தேவர்கள், மற்றொன்று அசுரர்கள். முன்பே உன்னிடம் தெய்விக குணங்களைப் பற்றி மிக விரிவாக விளக்கி இருக்கிறேன். இப்போது அசுர குணங்களைப் பற்றியும் சொல்லி விட்டேன். அதனால் இவற்றை நீ ஆழ்ந்து புரிந்துகொண்டு, உன் வாழ்க்கையை ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்வாயாக.

ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் ச ஜநா ந விது³ராஸுரா: /
ந ஶௌ'சம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்³யதே // 16.7

ப்ரவ்ருத்திம் ச - செய்யத்தக்கதில் ஈடுபடுவது பற்றியும்; நிவ்ரு'த்திம் ச

  • செய்யத்தகாததிலிருந்து விலகுவது பற்றியும்; ஜநா: - மக்கள்; ந விது³:
  • அறியார்கள்; ஆஸுரா: - அசுர இயல்புடைய; ந - இல்லை; ஶௌ'சம்
  • தூய்மை; ந - இல்லை; அபி - மேலும்; ஆசார: ச - நன்னடத்தையும்; ந - இல்லை; ஸத்யம் - உண்மை; தேஷு - அவர்களிடம்; ந வித்³யதே
  • இல்லை.

16.7 அசுர குணத்தோடு வாழ்பவர்களுக்கு அடிமைத்தனத்திற்கும், சு தந்திரத்தன்மைக்கும் வித்தியாசம் தெரியாது. மேலும் அவர்களுக்கு தூய்மையைப் பற்றியும் தெரியாது; நல்லொழுக்கமும் உண்மையும் அவர்களிடம் இருக்காது.

அஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஶ்'வரம் /
அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமன்யத்காமஹைதுகம் // 16.8

அஸத்யம் - பொய்யான; அப்ரதிஷ்ட²ம் - ஆதாரமற்றது; தே - அவர்கள்; ஜகத் - உலகம்; ஆஹு: - கூறுகிறார்கள்; அநீச்வரம் - ஈசுவரன் அற்றது; அபரஸ்பரஸம்பூ³தம் - தானாகவே, வெறும் ஆண் பெண் உறவினாலேயே உண்டானது; கிம் - என்ன; அந்யத் - இது தவிர வேறு; காமஹைதுகம் - காமத்தையே அடிப்படையாகக் கொண்டது.

16.8 அசுர குணம் உடைய மனிதர்கள், இந்த உலகம் பொய்யானது, இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டிருக்கிற சக்தி என்றோ அல்லது அறிவாற்றல் என்றோ ஒன்று இல்லை என்றும் இந்த முழுப் படைப்பும் சிற்றின்பத்தாலும் ஆசைகளினாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும் நினைக்கிறார்கள்.

ஏதாம் த்ரு'ஷ்டிமவஷ்டப்⁴ய நஷ்டாத்மாநோsல்பபு³த்³தய: /
ப்ரப⁴வந்த்யுக்ரகர்மாண: க்ஷயாய ஜக³தோsஹிதா: // 16.9

ஏதாம் - இந்த; த்ரு'ஷ்டிம் - கருத்துகளை; அவஷ்டப்⁴ய - பற்றிக்கொண்டு; நஷ்டாத்மாந: - எவர்களுடைய இயல்பு சீரழிந்துவிட்டதோ; அல்பபு³த்³தய: - எவர்களுடைய புத்தி மந்தமாகி விட்டதோ; ப்ரப⁴வந்தி

  • முனைகிறார்கள்; உக்ரகர்மாண: - கொடுமையான செயல்கள்; க்ஷயாய - நாசத்திற்காகவே; ஜக³த: - உலக; அஹிதா: - தீமையையே நினைப்பவர்கள்.

16.9 படைப்பைப் பற்றிய இவ்வுலகாயதக் கருத்தைக்கொண்ட, தங்களையே தொலைத்த, கொடூரமான செயல்களில் ஈடுபடும் குறைந்த பட்டறிவுடன் கூடிய தாழ்ந்த ஆன்மாக்கள், உலகத்தை அழிக்கும் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

காமமாச்'ரித்ய து³ஷ்பூரம் த³ம்ப⁴மாநமதா³ந்விதா: /
மோஹாத்த்ரு'ஹீத்வாஸத்³க்³ராஹாந் ப்ரவர்தந்தேsசு'சிவ்ரதா: //
16.10

காமம் - ஆசையே; ஆச்'ரித்ய - பற்றிக்கொண்டு; து³ஷ்பூரம் - பூர்த்திசெய்யமுடியாத; த³ம்ப⁴மாநமதா³ந்விதா - ஆடம்பரம், தற்பெருமை, திமிர் இவற்றுடன் கூடியவர்களாக; மோஹாத் - அஞ்ஞானத்தினால்; க்³ரு'ஹீத்வா - ஏற்றுக்கொண்டு; அஸத்க்³ராஹாந் - பொய்யான கருத்துகளை; ப்ரவர்தந்தே - நடந்துகொள்கிறார்கள்; அசு'சிவ்ரதா: - தூய்மையற்ற செயல்களையே மேற்கொண்டு.

16.10 திருப்தியடையாத பேராசை, கபடத்தன்மை, தற்பெருமை, அகந்தை ஆகிய குணங்களால் பீடிக்கப்பட்டு, மதிமயக்கத்தால் தவறான அபிப்ராயங்களைப் பிடிவாதமாய்ப் பிடித்துக்கொண்டு, நிலையற்ற பொருட்களுக்காக, தூய்மையற்ற நோக்கத்துடன் செயல்படுகிறார்கள்.

சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயான்தாமுபாச்'ரிதா: /
காமோபபோகபரமா ஏதாவதிதி நிச்'சிதா: // 16.11

ஆசா'பாச'ச்'தைர்பத்தா: காமக்ரோதபராயணா: /
ஈஹந்தே காமபோகார்தமந்யாயேநார்தஸfilterஞ்சயாந் // 16.12

சிந்தாம் - கவலைகளை; அபரிமேயாம் - எண்ணற்ற; ச - மேலும்; ப்ரலயான்தாம் - மரணகாலம்வரை தொடர்கின்ற; உபாச்'ரிதா:

  • பற்றிக்கொண்டு; காமோபபோக பரமா: - போகங்களை அனுபவிப்பதையே நாட்டமாகக்கொண்டவர்கள்; ஏதாவத் - சுகமெல்லாம் இவ்வளவுதான்; இதி நிச்'சிதா: - என்ற தீர்மானம் கொண்டவர்களாக; ஆசா' பாச' ச'தை: - ஆசைகளாகிற நூற்றுக்கணக்கான கயிறுகளால்; பத்தா: - பிணைக்கப்பட்டவர்களாக; காம க்ரோத பராயணா: - ஆசையையும் சினத்தையும் பற்றுக்கோடாகக்கொண்டு; ஈஹந்தே - முயற்சிசெய்கிறார்கள்; காமபோகார்தம் - சிற்றின்ப போகங்களை அனுபவிப்பதற்காக; அந்fairயாயேந - நீதிக்குப் புறம்பான முறைகளில்; அர்தஸஞ்சயாந் - செல்வம் முதலியவற்றைத் திரட்டுவதிலேயே.

16.11,12 நிறைவேறாத எதிர்பார்ப்புகளுடன் சாகும்வரை வருந்திக்கொண்டும், புலனின்பங்களையே உயர்ந்த இலக்காகக் கருதி, அவற்றைப் பூர்த்திசெய்வதைத்தவிர வேறொரு குறிக்கோளே இல்லையென்று தீர்மானித்துக்கொண்டும், நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் பிணைக்கப்பட்டும், ஆசை மற்றும் சினத்திற்கு ஆட்பட்டும் இருப்பவர்கள், புலன் இன்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நீதிக்குப் புறம்பாகச் செல்வத்தையடைய முயலுகின்றனர்.

இதமத்ய மயா லப்தமிமம் ப்ராப்ஸ்யே மநோரதம் /
இதமஸ்தீதமபி மே பவிஷ்யதி புநர்தநம் // 16.13

இதம் - இது; அத்ய - இன்று; மயா - என்னால்; லப்தம் - அடையப்பட்டது; இமம் - இந்த; ப்ராப்ஸ்யே - பூர்த்திசெய்துகொள்வேன்; மநோரதம்

  • விருப்பத்தையும்; இதம் - இவ்வளவு; அஸ்தி - உள்ளது; இதம் - இவ்வளவு; அபி - மேலும்; மே - எனக்கு; பவிஷ்யதி - எதிர்காலத்தில் கிடைக்கப்போகிறது; புந: - மேலும்; தநம் - செல்வம்.

16.13 இன்று இது என்னால் பெறப்பட்டது. நான் இந்த ஆசையைப் பூர்த்திசெய்வேன். எனக்கு இவ்வளவு செல்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் அதிக செல்வம் அடைவேன் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அஸௌ மயா ஹத: சத்ருர்ஹநிஷ்யே சாபராநபி /
ஈச்வரோऽஹமஹம் போகீ ஸித்தோऽஹம் பலவாந்ஸுகீ //
16.14

அஸௌ - இந்த; மயா - என்னால்; ஹத: - கொல்லப்பட்டான்; ச'த்ரு: - பகைவன்; ஹநிஷ்யே - கொல்வேன்; ச - மேலும்; அபராந் அபி - மற்றவர்களையும்; ஈச்வர: - ஈசுவரன்; அஹம் - நான்; போகீ

  • செல்வத்தை அனுபவிப்பவன்; ஸித்த: - எல்லா ஸித்திகளையும் பெற்றவன்; அஹம் - நான்; பலவாந் - வலிமை மிக்கவன்; ஸுகீ - சுகமுடையவன்.

16.14 அந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான், நான் மற்றவர்களையும் கொல்வேன். நானே கடவுள். நான்தான் அனுபவிப்பவன். நான் வெற்றியாளன், சக்திமிக்கவன், சந்தோஷமாயிருக்கிறேன் என்று நினைக்கிறார்கள்.

ஆட்யோऽபிஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்ரு'சோ' மயா /
யக்ஷ்யே தாஸ்யாமி மோதிஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: //
16.15

ஆட்ய - செல்வந்தன்; அபிஜநவாந் - பெரியகுடும்பத்தை உடையவன்; அஸ்மி - இருக்கிறேன்; க: - எவன்; அந்ய: - எவன்; அஸ்தி - இருக்கிறான்; ஸத்ரு'ச': - நிகரானவன்; மயா - எனக்கு; யக்ஷ்யேயாகம் செய்யப் போகிறேன்; தாஸ்யாமி - தானம் அளிக்கப்போகிறேன்; மோதிஷ்யே - இன்பத்தில் திளைக்கப் போகிறேன்; இதி - இவ்விதம்; அஜ்ஞானவிமோஹிதா: - அஞ்ஞானத்தினால் மயக்கமுற்று.

அநேகசித்தவிப்ராந்தா மோஹஜாலஸமாவ்ரு'தா: /
ப்ரஸக்தா: காமபோகேஷு பதந்தி நரகேऽசு'சௌ // 16.16

அநேகசித்தவிப்ராந்தா - பலவிதமாகத் திரிகின்ற மனமுடையவர்களாக; மோஹ ஜால ஸமாவ்ரு'தா:- மோஹ வலையில் சிக்கியவர்களாக; ப்ரஸக்தா: - ஈடுபட்டவர்களாக; காமபோகேஷு - விஷய சுகங்களில்; பதந்தி - வீழ்கிறார்கள்; நரகே - நரகத்தில்; அசு'சௌ - தூய்மையற்ற.

16.15,16 நான் செல்வந்தன், நல்ல உயர் குடும்பத்தில் பிறந்தவன். எனக்குச் சமமானவர் யார்? நான் யாகங்கள் செய்வேன், தர்மம் செய்வேன், மகிழ்ச்சியாக இருப்பேன் என்ற இவ்வாறான அறியாமையினால் தடுமாற்றமடைந்தவர்களாய், பல எதிர்பார்ப்புகளால் குழப்பமடைந்து, மாயை எனும் வலையில் பிடிபட்டு, புலனின்பங்களில் ஆழமாக சிக்கி, நரகத்தில் வீழ்கின்றனர்.

ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா தநமாநமதாந்விதா: /
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே தம்பேநாவிதிபூர்வகம் // 16.17

ஆத்மஸம்பாவிதா: - தன்னைத்தானே உயர்ந்தவனாக நினைத்துக் கொள்வர்கள்; ஸ்தப்தா: - கர்வமுடையவர்கள்; தந மாந மத அந்விதா:

  • செல்வம், தற்பெருமை, செருக்கு உடையவர்கள்; யஜந்தே - யாகம் செய்கிறார்கள்; நாமயஜ்ஞை: - பெயரளவில் யாகம் என்ற செயல்களால்; தே - அவர்கள்; தம்பேந - ஆடம்பரமாக; விதிபூர்வகம் - சாஸ்திர விதிகளை மீறி.

16.17 தற்பெருமையுடையார், பணிவிலார், செல்வத்தினால் மதி மயங்கியோர், தவறான அஹங்காரம் கொண்டோர்- இவர்கள் மேலோட்டமாக பெயருக்காக யாகங்களைச் செய்கிறார்கள். அவர்கள் வேத விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை.

அஹங்காரம் பலம் தர்பம் காமம் க்ரோதம் ச ஸம்ச'ரிதா: /
மாமாத்மபரதேஹேஷு ப்ரத்விஷந்தோऽப்யஸூயகா: // 16.18

அஹங்காரம் - அஹங்காரம்; பலம் - உடல் வலிமை; தர்பம் - கர்வம்; காமம் - ஆசை; க்ரோதம் ச - கோபம் முதலியவற்றை; ஸம்ச'ரிதா - கைக்கொண்டு; மாம் - என்னை; ஆத்மபரதேஹேஷு - தன் உடலிலும் பிற உடல்களிலும் உள்ள; ப்ரத்விஷந்த: - வெறுப்பவர்களாக; அப்யஸுயெகா: - பிறரை இகழ்கின்றவர்களாக.

16.18 அசுரத் தன்மையுள்ள மனிதர், அஹங்காரம், அதிகாரம், தற்பெருமை, காமம், மற்றும் கோபத்தினால் ஆட்கொள்ளப்பட்டு, தன் தேகத்திலும், பிறர் தேகத்திலுமுள்ள மேலான தெய்வத்தின் மேல் பொறாமை கொண்டு, தெய்வத்தை நிந்தனை செய்கிறார்.

தாநஹம் த்விஷத: க்ரூராந்ஸம்ஸாரேஷு நராதமாந் /
க்ஷிபாம்யஜஸ்ரமச'பநாஸுரீஷ்வேவ யோநிஷு // 16.19

தாந் - அவர்களை; அஹம் - நான்; த்விஷத: - வெறுப்பவர்கள்; க்ரூராந்

  • கொடியவர்கள்; ஸம்ஸாரேஷு - உலகியல் சுழல்களில்; நராதமாந் - மனிதர்களில் கடையவர்கள்; க்ஷிபாமி - தள்ளிவிடுகிறேன்; அஜஸ்ரம்
  • மீண்டும் மீண்டும் தொடர்ந்து; அசு'பந் - பாவம் செய்வர்கள்; ஆஸுரீஷு - அசுர; யோநிஷு ஏவ - பிறவிகளிலிலேயே.

16.19 கடவுளிடம் பொறாமை கொண்டவர்களையும், கருணையில்லாதவர்களையும், கீழான குணத்தவர்களையும் நான் இந்தப் பொருள்சார் உலகில் மீண்டும் மீண்டும் அசுரத் தன்மையுள்ள பிறவிகளாகப் பிறப்பெடுக்க வைக்கிறேன்.

ஆஸுரீம் யோநிமாபந்நா மூடூ ஜந்மநி ஜந்மநி /
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யதமாம் கதிம் //
16.20

ஆஸுரீம் - அசுர இயல்புள்ள; யோநிம் - பிறவியை; ஆபந்நா:

  • அடைகிறார்கள்; மூடூ: - அந்த அறிவிலிகள்; ஜந்மநி ஜந்மநி
  • ஒவ்வொரு பிறவியிலும்; மாம் - என்னை; அப்ராப்ய ஏவ - அடையாமலேயே; கௌந்தேய - குந்தி மைந்தா; தத: - அதைக் காட்டிலும்; யாந்தி - எய்துகிறார்கள்; அதமாம் - மிகத்தாழ்ந்த; கதிம்
  • நிலையை

16.20. குந்தி மைந்தா! இந்த மூடர்கள், மீண்டும் மீண்டும் அசுரர்களுக்கு இடையில் பிறப்பெடுப்பார்கள். என்னை அடையாமல், அவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வாழ்க்கையில் மூழ்குகிறார்கள்.

த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாச'நமாத்மந: /
காம: க்ரோதஸ்ததா லோப⁴ஸ்-தஸ்மாதேதத்த்ரயம் த்யஜேத் //
16.21

த்ரிவிதம் - மூன்று வகையான; நரகஸ்ய - நரகத்தின்; இதம் - இந்த; த்வாரம் - நுழைவாயில்; நாச'நம்- இழிந்த நிலையில் தள்ளக்கூடியது; ஆத்மந: - ஆத்மாவை; காம: - காமம்; க்ரோத: - கோபம்; ததா - அவ்வாறே; லோப⁴: - பேராசை; தஸ்மாத் - ஆகவே; ஏதத் த்ரயம் - இம்மூன்றையும்; த்யேஜத் - விட்டு விட வேண்டும்.

16.21 காமம், கோபம் மற்றும் பேராசை இம்மூன்றும் நரகத்திற்கு அழைத்துச்செல்லும் வாயில்கள். அவை ஜீவனைத் தாழ்ந்த நிலையில் ஆழ்த்திவிடும் தன்மையுடையனவாதலால், இந்த மூன்றையும் கைவிட வேண்டும்.

ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்வாரைஸ்த்ரிபி⁴ர்நர: /
ஆசரத்யாத்மந: ச்'ரேயஸ்ததோ யாதி பராம் கதிம் // 16.22

ஏதை: - இந்த; விமுக்த: - விடுபட்ட; கௌந்தேய - குந்தி மைந்தா; தமோத்வாரை: - நரக வாயில்களிலிருந்தும்; த்ரிபி⁴: - மூன்று; நர: - மனிதன்; ஆசரதி - புரிகின்றான்; ஆத்மந: - தன்னுடைய; ச்'ரேய: - மேன்மைக்குரிய; தத: - அதன் மூலமாக; யாதி - அடைகிறான்; பராம் கதிம் - பெரும் பேற்றை.

16.22 குந்தியின் மைந்தனே, இந்த மூன்று நரக வாசல்களிலிருந்து தப்பியவன், தன் ஜீவனுக்கு பலன் தரும் விதத்தில் நடந்து, மிக உயர்ந்த நிலையையடைகிறான்.

ய: சா'ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ரு'ஜ்ய வர்ததே காமகாரத: /
ந ஸ ஸித்தி⁴மவாப்நோதி ந ஸுக²ம் ந பராம் கதிம் // 16.23

ய: - எவன்; சா'ஸ்த்ரவிதி⁴ம் - சாஸ்திரமுறையை; உத்ஸ்ரு'ஜ்ய - துறந்து; வர்ததே - நடந்துகொள்கிறானோ; காமகாரத: - தன் மனம் போனபடி; ந - இல்லை; ஸ: - அவன்; ஸித்திம் - வெற்றியை; ந அவாப்நோதி

  • அடைவதில்லை; ஸுகம் - ஸுகம்; ந - இல்லை; பராம் கதிம் - பெரும்பேற்றை.

16.23 ஆனால், யாரொருவன் வேதசாரங்களை உள்வாங்க மறுத்து, தன்னுடைய இயல்பான உணர்ச்சிகளுக்கேற்றவாறு செயல்படுகிறானோ, அவன் பூர்ணத்துவத்தையும் ஆனந்தத்தையும் உயர்ந்த நிலையையும் அடைவதில்லை.

தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ராமணம் தே
கார்யாகார்யவ்யவஸ்திதௌ /
ஜ்ஞாத்வா சா'ஸ்த்ரவிதாநோக்தம்
கர்ம கர்துமிஹார்ஹஸி // 16.24

தஸ்மாத் - ஆகவே; சா'ஸ்த்ரம் - சாஸ்திரம்தான்; ப்ரமாணம் - சான்றாகும்; தே - உன்னுடைய; கார்ய அகார்ய வ்யவஸ்திதௌ - செய்யத்தக்கது, செய்யத்தகாதது என்று நிர்ணயிப்பதில்; ஜ்ஞாத்வா

  • தெரிந்துகொண்டு; சா'ஸ்த்ரவிதந உக்தம் - சாஸ்த்ர முறைகளில் சொல்லப்பட்டிருக்கும்; கர்ம - கர்மங்களை; இஹ - இவ்வுலகில்; கர்தும் அர்ஹஸி - ஆற்றக் கடவாய்.

16.24 ஒருவர், வேதங்களின் விதிமுறைப்படி எது கடமை, கடமையில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேதங்களின் கட்டளைகளை நன்றாக உள்வாங்கிய பிறகு, அதன்படி செயல்புரிய வேண்டும்.

ஓம் தத்ஸதிதி ஸ்ரீமத்பகவத்கீதாஸூபநிஷத்ஸு
ப்ரஹ்மவித்யாயாம் யோகசா'ஸ்த்ரே ஸ்ரீக்ருஷ்ணார்ஜுநஸம்வாதே
தைவாஸுரஸம்பத்விபாக யோகோ நாம ஷோடசோ'ऽத்யாய //

ஓம் தத் ஸத், ஸ்ரீமத் பகவத்கீதை என்னும் உபநிஷத்தில் அமைத்துள்ள கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த உரையாடல் வடிவிலான மேலான பிரஹ்மத்தைப் பற்றிய அறிவைப் புகட்டுவதும் யோக விஞ்ஞானமுமாகிய 'தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்' எனப் பெயர் படைத்த பதினாறாவது அத்தியாயம்.

ஸ்லோகங்களின் தொடக்க வார்த்தைகள்

  1. அநேகசித்தவிப்ரStatesா 16.16
  1. அபயம் ஸத்த்வஸம்சு'த்திர் 16.1
  1. அஸத்யமப்ரதிஷ்டம் தே 16.8
  1. அஸௌ மயா ஹத: 16.14
  1. அஹங்காரம் பலம் தர்பம் காமம் 16.18
  1. அஹிம்ஸா ஸத்யமக்ரோத 16.2
  1. ஆட்யோ௨பிஜநவாநஸ்மி 16.15
  1. ஆத்மஸம்பாவிதா: ஸ்தப்தா 16.17
  1. ஆசா'பாச'தைர்பத்தா: 16.12
  1. ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா 16.20
  1. இதமத்ய மயா லப்தமிமம் 16.13
  1. ஏதாம் த்ரு'ஷ்டிமவஷ்டப்ய 16.9
  1. ஏதைர்விமுக்த: கௌந்தேய 16.22
  1. காமமாச்'ரித்ய துஷ்பூரம் 16.10
  1. சிந்தாமபரிமேயாம் ச 16.11
  1. தஸ்மாச்சாஸ்த்ரம் ப்ராமணம் தே 16.24
  1. தாநஹம் த்விஷத: க்ரூராந் 16.19
  1. தேஜ: க்ஷமா த்ரு'தி: சௌ'ச 16.3
  1. த்ரிவிதம் நரகஸ்யேதம் 16.21
  1. தம்போ தர்போ௨பிமாநச்'ச க்ரோத: 16.4
  1. தைவீ ஸம்பத்விமோக்ஷாய 16.5
  1. த்வௌ பூதஸர்கௌ லோகே௨ஸ்மிந் 16.6
  1. ப்ரவ்ரு'த்திம் ச நிவ்ரு'த்திம் 16.7
  1. ய: சா'ஸ்த்ரவிதிமுத்ஸ்ரு'ஜ்ய 16.23
Hands playing a flute

பகவத்கீதையின் முக்கிய கதாபாத்திரங்கள்

பாண்டவர் சேனை: -

க்ரு'ஷ்ணர்: கடவுள் அவதாரம், கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு உறவினர் போரில் அர்ஜுனனின் ஸாரதி (தேரோட்டி), உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்
த்ருபதன்: திரௌபதியின் தந்தை, சிறந்த போர்வீரர்
த்ரு'ஷ்டத்யும்னன்: அரசர் துருபதனின் மகன்
சி'கண்டி: சிறந்த வில்வீரர், திருநங்கை, பீஷ்மரைப் பழிவாங்குவதற்காகவே தோன்றியவர்.
விராடன்: அபிமன்யுவின் மாமனார், அண்டை நாட்டரசர்
யுயுதானன்: கிருஷ்ணரின் ஸாரதி, சிறந்த போர்வீரர்
காசி'ராஜன்: அண்டை நாடான காசியின் அரசர்
சேகிதானன்: சிறந்த போர்வீரர்
குந்தி போஜன்: முதல் மூன்று பாண்டவ இளவரசர்களின் தாயான குந்தியின் வளர்ப்புத் தந்தை
புருஜித்: குந்தி போஜனின் சகோதரர்
சை'ப்யா: சிபி பழங்குடியினரின் தலைவர்
த்ரு'ஷ்டகேது: சேதி நாட்டின் அரசர்
உத்தமௌஜன்: சிறந்த போர்வீரர்
பஞ்ச பாண்டவர்கள்:யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன் - குந்தியின் மகன்கள். நகுலன், ஸஹதேவன் - மாத்ரியின் மகன்கள்
யுதிஷ்டிரர்: தர்மத்தின் சொரூபம், ஈட்டி எறிவதில் வல்லவர்
பீமன்: கதாயுத சண்டையில் வல்லவர்
அர்ஜுனன்: வில் வித்தையில் ஒப்பற்றவர்
நகுலன்: குதிரைகளைப் பயிற்றுவிப்பதிலும் அவற்றின் தன்மைகளை அறிவதிலும் வல்லவர்

ஸஹதேவன் : ஜோதிடக் கலையில் வல்லவர்.

கௌரவர் சேனை: -

ஸஞ்ஜயன் : அமைச்சர், திருதராஷ்டிரருக்கு குருக்ஷேத்ர போர் நிகழ்வுகளைச் சொன்னவர்

பீஷ்மர் : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்குப் பாட்டனார், சிறந்த போர்வீரர்

த்ரோணர் : கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு ஆச்சாரியார், சிறந்த வில்வீரர். இவரின் சிறந்த சீடர் அர்ஜுனன்.

விகர்ணன் : கௌரவ சகோதரர்களில் மூன்றாமவர்

கர்ணன் : பாண்டவர்களின் மூத்த சகோதரர், குந்திக்கு திருமணத்திற்கு முன்பே பிறந்தவர். துரியோதனின் நண்பர், கொடை வள்ளல்

அச்’வத்தாமன் : துரோணரின் மகன், வலுaccessகுறைந்த குதிகாலை உடையவர், எப்போதும் உண்மையையே பேச வேண்டும் என்று விரும்புவர்

க்’ருபர் : கௌரவர், பாண்டவர்களுக்குப்
போர்க்கலைகளைக் கற்றுக் கொடுக்கும்
ஆச்சாரியார்

ச’ல்லியன் : அண்டை நாட்டு அரசர், நகுல சகாதேவர்களின் தாய் மாமா. (நகுல சகாதேவர்களின் தாய் மாத்ரியின் சகோதரர்.)

ஸௌமாதத்தி : பகிகர்களின் அரசர்

துச்’சா’தனன் : கௌரவ சகோதரர்களில் இரண்டாமவர், திரௌபதியைத் துகிலுரித்தவர்

துரியோதனன் : கௌரவ சகோதரர்களில் மூத்தவர், கதாயுத சண்டையில் வல்லவர்.

கிருஷ்ணர் மற்றும் அர்ஜுனனின்

  • வேறு சில பெயர்கள்

கிருஷ்ணருடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அச்யுதன் : தம்முடைய நிலையில் உறுதியாக இருப்பவர்

அரிஸூதனன் : பகைவர்களை அழிப்பவர்

க்ரு'ஷ்ணன் : கருப்பு நிறமுடையவர், மன அழுக்குகளை நீக்குபவர், ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று கடவுள்களின் சொரூபமானவர், பிரஹ்ம சொரூபமானவர், பக்தர்களின் துக்கங்களைப் போக்குபவர்

கேச'வன் : அழகான முடியை உடையவர், ப்ரஹ்மா,
விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களையும்
தம் வசத்தில் வைத்திருப்பவர்

கேசி' நிஷூதனன்: கேசின் என்ற அரக்கனைக் கொன்றவர்

கோவிந்தன் : எல்லா உயிர்களைப் பற்றியும் அறிந்திருப்பவர்

_ப_கவான் : ஆறுவித குணங்களை உடையவர். அவை

  1. பரிபூரண ஞானம்.
  1. பரிபூரண வைராக்கியம்.
  1. பரிபூரண பலம்
  1. பரிபூரண கீர்த்தி
  1. பரிபூரண தேஜஸ்
  1. பரிபூரண ஐஸ்வர்யம் (ஸ்ரீ)

புருஷோத்தமன் : மேலான புருஷன்

ம_து_ஸூதனன் : மது என்ற அரக்கனை அழித்தவர்

மாதவன் : லக்ஷ்மிக்குத் தலைவர்

யாதவன் : ‘யது’ குலத்தில், யாதவ குலத்தில் பிறந்தவர்

யோகேச'வரன் : யோகத்திற்குத் தலைவர்

வாஸுதேவன் : வசுதேவருடைய மகன், எல்லா உயிர்களிடத்திலும் வாசம் செய்பவர்

வார்ஷ்ணேயன் : விருஷ்ணி குலத்தில் பிறந்தவர் விஷ்ணு : எங்கும் வியாபகமாய் நிறைந்து இருப்பவர்

ஜகந்நிவாஸன் : ஜகத்திற்கு இருப்பிடமாகயிருப்பவர்

ஜநார்தன் : ஜனங்களால் (மக்களால்) போற்றப்படுபவர்

ஹ்ரு'ஷீகேச'ன் : இந்திரியங்களுக்குத் தலைவர்

அனகன் : பாபம் அற்றவர்

அர்ஜுனனுடைய பெயர்களும் அதற்குரிய பொருளும்:

அர்ஜுனன் : நல்ல, தூய்மையான தன்மை உடையவர்

கபித்வஜன் : கொடியில் குரங்குச் சின்னத்தை உடையவர்

கிரீடி : கிரீடம் தரித்தவர்

குடாகேஸன் : தூக்கத்தை வென்றவர்

குருநந்தனன் : 'குரு' வம்சத்தில் பிறந்தவர்

கௌந்தேயன் : குந்தியின் மகன்

தனஞ்ஜயன் : செலவழிக்கப்படாமல் சேர்த்து
வைக்கப்பட்டிருக்கும் செல்வங்களை ஒன்று
திரட்டுபவர்.

பரந்தபன் : எதிரிகளை வாட்டுபவர்

பாண்டவன் : பாண்டுவுக்கு மகன்

பார்தன் : பிருதையின் (ப்ரீத்தாவின்) மகன்

பாரதன் : பரத குலத்தில் பிறந்தவர்

ஸவ்யஸாசின் : இடது கையால் அம்பு எய்பவர்